மூளையை பயிற்றுவிக்கும் விளையாட்டுக்கள் -1
உங்களுக்கு மூளை இருக்கா??
ஹ ஹ ஹா... என்னடா திடுதிப்புன்னு இப்படி ஒரு கேள்வியான்னு யோசிக்க வேண்டாம். நமக்கு இல்லாததை எப்படி ஒமஹா வரைக்கும் தெரிஞ்சு போச்சுன்னும் நினைக்க வேண்டாம். ஹெ ஹெ ஹே... பாம்பின் கால் பாம்பறியும் :))
ஹ ஹ ஹா... என்னடா திடுதிப்புன்னு இப்படி ஒரு கேள்வியான்னு யோசிக்க வேண்டாம். நமக்கு இல்லாததை எப்படி ஒமஹா வரைக்கும் தெரிஞ்சு போச்சுன்னும் நினைக்க வேண்டாம். ஹெ ஹெ ஹே... பாம்பின் கால் பாம்பறியும் :))
சரி, விஷயத்துக்கு வருவோம். நம்மில் நிறைய பேர் பல்லாங்குழில பிச்சு உதறுவோம் (பழங்காலமா தோணுதோ??) சரி, செஸ் விளையாண்டாலும் சூரரா இருப்போம், கேரம்போர்டு, அந்தாக்ஷரி (அப்படின்னா தமிழ்ல என்ன??) இதுல எல்லாம் புலியாக / சிங்கமாக இருப்போம். ஒரு வகைல இதெல்லாம் மூளை சம்பந்தப்பட்ட விளையாட்டுக்கள். கணக்கு செஞ்சு விளையாட தெரியலைன்னா என்னை மாதிரி இது போங்காட்டம் அப்படின்னு போர்டைஅப்படியே கவுத்திட்டு ஓடறதிலயும் சூரரா இருக்கணும். இதெல்லாம் எதுக்குன்னு கேட்டீங்கன்னா, இப்பல்லாம் நாம் யாரும் இந்த வகை விளையாட்டுக்கள்ல ஈடுபடறதில்லை. எனக்கு தூரத்து சித்தப்பா ஒருத்தர் இருக்கார். ஆட்டோ ஓட்டியும், ரியல் எஸ்டேட்டிலும் வாழ்க்கையை நகர்த்திக் கொண்டு, ஆனால் அவருடன் பல்லாங்குழியும் செஸ்ஸும் விளையாண்டு ஜெயிக்கவே முடியாது. ஒவ்வொரு தடவை அவரைப் பாக்கறப்ப, அடுத்த தடவை கண்டிப்பா தோக்கடிக்கணும்ன்னே தோணும். ஆனால் அதெல்லாம் சின்ன பிள்ளைங்க விளையாட்டுன்னு அப்புறமா நானே பெரிய மனசு செஞ்சு விட்டுட்டேன். ஹெ ஹெ ஹெ... சமாளிப்ஸ்..!!
இப்பல்லாம் வீரர்களை அடுக்கி வெக்கிறதும், அடுத்தவன் வயலுக்கு தண்ணீர் பாய்ச்சிவிட்டுட்டு வர்றதும், வெனீஸ் நகரின் தண்ணீர் வழியும் வீதிகளில் படகில் போய் சண்டை போடறதும், பூட்டி வெச்ச ரூமிலிருந்து தப்பிக்கிறதுமா நம் விளையாட்டுக்கள் மூளையை பதம் பார்க்கிறதை விட்டுட்டு வேற எல்லாம் செய்யுது. ஆஹா... மூளை வெளில வர்றதுக்குள்ள என்ன மேட்டர்ன்னு சொல்லுன்னு நீங்க சொல்றது சத்தியமா என் காதுல விழலையே... ஹெ ஹெ
மூளை விளையாட்டுக்கள் குறைஞ்சு இந்த மாதிரி, ரேஸிங், ரெஸ்ட்லிங், ஷூட்டிங்னு, மனிதனிடம் ஒளிந்திருக்கிற மிருக குணத்தை மட்டும் உசுப்பி விடற விளையாட்டுக்களைத்தான் விளையாடுகிறோம், பார்க்கிறோம். ஆனால் ஆன்லைன்ல ஒரு தளம் இந்த மாதிரி மூளைக்கு பயிற்சி தரும் விளையாட்டுக்களை தருதுன்னு சொன்னா?? சந்தோஷமா இருக்கா?? இருங்க, முதல்ல என்ன பயனெல்லாம் இருக்குன்னு பார்க்கலாம்.
நம்ம நினைவுத்திறன் / ஞாபகசக்தில ’சேமிக்கும் இடம்’னு ஒன்னும், ‘உழைக்கும் இடம்’ன்னும் ரெண்டு விதமான பிரிவுகள் உண்டு. இதுல நாம் எதை சேமிக்கிறோமோ இல்லையோ, சேமித்ததை மறுபடியும் தேடி எடுக்கும் வழியை சேமிக்க மறந்துர்றோம். உதாரணத்துக்கு, நம்ம குழந்தைகளுக்கு ‘அ’ , ‘ஆ’ எழுத பழக்கும்போதும், சைக்கிள் கத்து தர்றப்பவும் நம் பால்யத்தில் இதெல்லாம் கத்துகிட்டதும், ஸ்லேட்டில் எழுதறதை விட்டுட்டு ஸ்லேட்டு குச்சியை சாப்பிட்டதும் கண்டிப்பா ஒரு நொடியாவது நம் கண் முன் வந்து போகும். ஆனால், முந்தா நாள் என்ன சாப்பிட்டோம்னு டைனிங் டேபிள்ல உக்கார்ந்து பிளேடை வச்சி யோசிச்சாலும் வருவதில்லை. அந்த ஆஃபீசருக்கு மெயில் அனுப்பினமா இல்லையா? கேஸுக்கு முதல்லயே ஃபோன் செஞ்சுட்டமா? எப்ப? இந்த மாதிரி கேள்விகள் நம்ம முன்னாடி இப்ப அடிக்கடி எட்டிப் பார்க்குது. காரணம்? ‘உழைக்கும் இடம்’னு இருக்கற மூளையையும் ‘ சேமிக்கும் இடம்’ இருக்கிற இடத்திற்கும் நாம் தர வேண்டிய லண்டன் பிரிட்ஜெல்லாம் நூலாம்படை அளவில் இருப்பதால்தான். ஆனால் இந்த ‘உழைக்கும் இடத்தை’ இன்னும் சார்ஜ் செஞ்சா நம்ம சுறுசுறுப்பு, மனதை நிலைப்படுத்தறது, சேமிக்கிற இடத்தில் இருந்து சும்மா தூசி தட்டி எடுக்கற மாதிரி, அட, முந்தா நேத்திக்கு வச்ச பொங்கலுக்கு இன்னிக்கு செஞ்ச கத்திரிக்காய் கொத்சுதான் சரி பொருத்தம். இனிமே இப்படியே செய்யின்னு சொல்லி, தங்கமணிகளை வாய் பிளக்க வைக்கலாம்(யாருங்க அது, காம்பினேஷனை பார்த்து ஜொள்ளு விடறது??)
எந்த ஒரு பொருளும் அதோட வாழ்க்கை நல்லா இருக்கணுன்னா அதற்கு தகுந்த மாதிரி பார்த்துக்கணும். நம்ம உடம்பை எப்படி ஜிம்முக்கு போயி அல்லது வாக்கிங் போயி பார்த்துக்குறோமோ, அதே போல மூளையையும் பயிற்சி கொடுத்து நல்லபடியா கவனிச்சுகிட்டா எக்ஸாம்ல நல்ல ஸ்கோர் எடுப்பதில் இருந்து, அடுத்த அப்ப்ரைஸல்ல நம்ம பேரை நாம் சொல்லாமலே மத்தவங்க சொல்ற மாதிரி கொண்டு வரலாம். அந்த நினைப்பே இப்பதான் எல்லா தரப்பு மக்களுக்கும் வர ஆரம்பிச்சிருக்கு. அப்படி ‘ஸ்டேஃப்ஃபோர்டு’ பல்கலைக்கழகத்துல மூளை சம்பந்தமான அறிவியல் மாணவராய் இருந்த மைக்கேல் ஸ்கேன்லனுக்கும் தோணியது. விளைவு, கொஞ்ச நாளைக்கு நான் அப்பீட்டுன்னு சொல்லிட்டு, குணால் சர்க்கார், டேவிட் ட்ரெஸ்ஷெர் இவர்களுடன் சேர்ந்து வலை மூலமாக மூளையை வளர்க்கும் பயிற்சிகள் தரலாமான்னு யோசிச்சப்ப வந்த ஐடியாதான் லுமோசிட்டி. 2007ல ஆரம்பிக்கப்பட்டு இன்றைய தேதியில் மூன்று மில்லியனையும் தாண்டி ஸ்டாக்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. அறுபதுக்கும் மேலான ஆராய்ச்சிகள் மூளையை பயிற்றுவித்தால் என்னவெல்லாம் முன்னேற்றம் காணலாம்னு இன்னொரு தளத்துல இருக்கு. லுமோசிட்டியின் விளையாட்டுக்களினால் அவர்களுக்கு பணம் மட்டும் இல்லாமல், மக்களின் தகவல்களும் கிடைக்குது, எந்த வயசுல எபப்டி சிந்திக்கிறாங்க, என்ன மாதிரி விடை தேடறாங்க, எப்படி இதுல முன்னேற்றம் தர முடியும்னு அவங்களுக்கு தீனியும் நாம் தான் போடறோம்.
பயன்கள்:
- செய்யும் வேலையில் ஒழுங்கு, மனமொத்த நிலை, முன்னேற்றம்.
- கலைத்திறனை அதிகப்படுத்தும் (ஓவியமும் ஆடல் பாடலும் மட்டுமல்ல. UML, Flow chart விஷயங்களும் அடங்கும்!!)
- ஞாபக சக்தியை அதிகரிக்கும்
- மூளையின் நியூட்ரான்களை வளர்க்கும் (இந்த வீரர்கள்தான் நம்மையும், நம் நினைவையும் காப்பாற்றி வைப்பது)
- சுறுசுறுப்பாக, துரிதமாக முடிவெடுக்க வைக்கும்.
- எந்த பிரச்சனையையும் சமாளிக்கும் திறனை அதிகப்படுத்தும்.
- எச்சரிக்கை உணர்வையும், முனைப்புடனும் செயல்பட வைக்கும்.
- ஃபோன் நம்பர், பெயர், சுவை போன்ற விஷயங்களை அதிகமாக நினைவில் வைக்க உதவும், அதை மீண்டும் நினைவுக்கு கொண்டு வரவும் உதவும்.
- உங்களின் வயதோ, பாலோ, மற்ற சம்பிரதாயங்களோ உங்கள் மூளையை பயிற்றுவிப்பதில் இருந்து உங்களை தடை செய்யாது.
- தினம் அரை மணி நேரம் விளையாடுவது பொழுதன்றைக்கும் உற்சாகமாக, புன்னகை முகமாக இருக்க வைக்கும். (அனுபவ பூர்வமான உண்மை!!)
போதுமா பில்டப்பு??? ஏற்கனவே எழுதிய பல தொடர் கட்டுரை போலவே இதுவும் தொடர்தான். ஏன்னா ஏகப்பட்ட விஷயம் இருக்கு. இந்த கட்டுரை வாசிக்கவெல்லாம் எனக்கு நேரமில்லை, நேரடியா தளத்தை காட்டுங்க, நானே போயி பார்த்துக்கறேன்னு சொல்றவங்க இங்கே சொடுக்கி, மூளையை முடுக்கி விடுங்கள். இன்னும் தெரிஞ்சுகிட்டு ஸ்டெப் எடுக்கறோம்னு சொல்றவங்க, வெயிட்டீஸ்.....!!
.
.
ஸலாம் உண்டாகட்டும் சகோ.அன்னு..!
ReplyDeleteநல்லதொரு தள அறிமுகம் தந்தீர்கள்.
இதுபோன்ற விளையாட்டுக்களால் நம் நுண்மான் நுழைபுலன்(Perspicacity)அதிகரிக்கும் என்பது உண்மையே.
அருமை நல்ல தகவல்கள்
ReplyDeleteசகோ, செம இன்ட்ரஸ்டிங் பதிவு.
ReplyDelete//அடுத்த அப்ரைஸல்ல நம்ம பேரை நாம் சொல்லாமலே மத்தவங்க சொல்ற மாதிரி கொண்டு வரலாம் //
ஆனா ஆபிஸ்ல இத விளையாடினா உள்ளதும் கிடைக்காதே! ஹி ஹி.. :)
// முந்தா நேத்திக்கு வச்ச பொங்கலுக்கு இன்னிக்கு செஞ்ச கத்திரிக்காய் கொத்சுதான் சரி பொருத்தம்//
ReplyDeleteசொல்லிட்டு யாரு திட்டு வாங்கறது ?
உங்க மூளை எல்லாம் இப்படிதான் துருப் பிடிச்சு போயிருக்குனு சொல்ற..
Wow!!! super info!!
ReplyDeleteநல்ல தகவல்கள்.
ReplyDeleteஉபயோகமா இருக்குனு புரியுது. ஆனா, இதுக்காக மூளையை ரொம்ப க்ளீன் பண்ணனும் போல இருக்கே. (துருப்பிடிச்சிருக்கே?)
ReplyDeletesuperb annu நல்ல தகவல்கள்
ReplyDeletethanks for sharing .
//சுவை போன்ற விஷயங்களை அதிகமாக நினைவில் வைக்க உதவும், அதை மீண்டும் நினைவுக்கு கொண்டு வரவும் உதவும்//.
இதுதான் கவலைய தருது .என் கணவருக்கு இதெல்லாம் தெரிஞ்ச டேஞ்சர் .
வெளியில எங்காவது நல்லா சாப்பிட்டா அப்புறம் என் சமையல் வித்தியாசம் தெரிஞ்சுருமே .
ரொம்ப நல்ல பதிவு..சீக்கிரம் அடுத்த பதிவுக்கு waiting...
ReplyDeleteஉங்களை பற்றி வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன்... நேரம் உள்ள போது பாருங்கள்... நன்றி... சுட்டி இதோ... http://blogintamil.blogspot.com/2011/05/blog-post_06.html
ReplyDeleteவணக்கம் அன்னு,
ReplyDeleteநீண்ட நாட்களுக்கு பிறகு உங்கள் பதிவினை படிக்கிறேன். வழக்கம் போல் மிக அருமை..! நல்ல தகவல்கள்.
-
DREAMER
நல்ல தகவல்கள், ஆனால் நானும் மூலைய நல்ல கிளின் பண்ணனும் ...
ReplyDeleteஹ ஹ ஹா... ஜலீலாக்கா,
ReplyDeleteசீக்கிரமே க்ளீன் பண்ணுங்க. பாருங்க, க்ளீன் பண்ணாம விட்டதுல ’மூளையின்’ ‘ள’ மெலிஞ்சு ‘ல’ ஆயிடுச்சு.... ஹ ஹ ஹா... :))
//உங்களுக்கு மூளை இருக்கா??//
ReplyDeleteஅப்படின்ன என்ன அன்னு. அதெல்லாம் எனக்கு இல்லவேயில்லைப்பா..
ஏற்கனவே மூளையிலிருந்து ரத்தம் சொட்டுது. இதையும் ஏத்திபார்ப்போம் என்ன ஆவுதுன்னு ஹி ஹி.[இது எந்த மூளையின்னு கேட்கப்புடாது]
நல்ல தகவல்கள் அன்னு..