ரயில் பெட்டி -1

Friday, June 24, 2011 Anisha Yunus 17 Comments

#டவுட்டு

கலவை பதிவுக்கு ‘டிரங்குப் பெட்டி’ன்னெல்லாம் பேரு வெக்கிறப்ப, நாம ரயில் பெட்டின்னு பேர் வெச்சுக்கலாமேன்னு தோணிச்சு. கரெக்ட்தானே??? ஹெ ஹெ ஹே...


---------------------------- ~~ ---------------------------- 

 #ஹைக்கூ
அன்று
யார் வைத்த முற்றுப் புள்ளியோ 
இன்று
இவள் நெற்றியில்
பொட்டில்லை...
மலரும் நினைவுகள். 1997ல தினத்தந்தியின் ஞாயிறு மலரில் என்னுடைய இந்த கவிதைக்கு 10 ரூபாய் பரிசா அனுப்பினாங்க. (ஆனா அதுக்கு 300 ரூபாய் பார்ட்டிக்கு அழுதது வேற விஷயம்...!!)

---------------------------- ~~ ----------------------------

 #டைம் பாஸ்
இவ்வளவு நாளும் பொறுப்பா கழியணுமேன்னு தினம் ஒரு கதை ரமணிச்சந்திரனுடையது படித்தேன். அந்த கதைகளில் வருவது போல் இந்த காலத்திலும் இளவயதில் லட்ச லட்சமாய் சம்பாதிக்ககூடிய சக்தி, பெரிய பெரிய நிறுவனங்களை ஆளக்கூடிய சக்தி, எல்லா அழகிய கதாநாயகிகளுக்கும் தகுதிக்கேற்ற வேலை தரக்கூடிய சக்தி, பின் அவர்களின் வாழ்வில் மெர்க்குரி லேம்ப் ஏற்றும் சக்தியும் அரசியல்வியாதிகளின் (ஹீரோ)செல்வங்களுக்கு மட்டுமே என்பது என் தாழ்மையான கருத்து. என்ன நான் சொல்றது?

---------------------------- ~~ ----------------------------
  
#விதி
 அலபாமா, டெனெஸ்ஸீ, கெண்டக்கி மாநிலங்களைக் கடந்து நெப்ரஸ்கா மாநிலத்திலும் வெள்ளம் எல்லை தாண்டி பாய்ந்தது பல ஊர்களில். ஒமஹாவிலும்தான். ஆனால் அதிகமான பாதிப்பு இல்லாமல் இருந்தது மட்டுமே ஆறுதல். கடலருகில் இருக்கும் மாநிலம்தான் பாதுகாப்பற்றது என இனி கூற முடியாதே? உள் தங்கியிருக்கும் இந்த மாநிலங்களின் கதியைப் பார்த்தால் யாருக்குமே இனி எங்கே வசிப்பது என்றுதான் தோன்றும். 

---------------------------- ~~ ---------------------------- 

#என்ன கொடுமை இது?
சட்டீஸ்கர் மாநிலத்தில் ஜிண்டால் குழுமம், நிலக்கரியை பயன்படுத்தி மின்னாலை வைப்பதை எதிர்த்து நின்ற இரு சாமானியர்களை பொய் காரணங்களை காட்டி கைது செய்து வைத்து பாரபட்சமில்லாமல் துவைத்து எடுத்திருக்கிறார்கள். அதில் ஒருவர் டாக்டர். அவரை ஹாஸ்பிடல் கட்டிலிலேயே சங்கிலியால் பின்னியிருக்கிறார்கள். ஆமைகளை நாசமாக்கிடும் தம்ரா(ஒரிஸ்ஸா) துறைமுகத்திற்கு எதிராய் டாடா குழுமத்தை எதிர்த்தபோதும் இதே நிலை. நம்மூரு போலீஸெல்லாம் CIAக்கு அண்ணன்மார் போலவே??

---------------------------- ~~ ---------------------------- 

#ஆ...
உப்பு சத்தியாக்கிரக போராட்டத்தில் (அட அப்படித்தானே தாத்தா நினச்சுகிட்டிருக்காரு???) சிறை சென்ற தன் மகள் மனிதத்தன்மையற்ற இடத்தில் அடைக்கப்பட்டிருப்பதாகவும் அதனால் உடலில் கொப்புளங்கள் ஏற்பட்டு வாடுவதாகவும் கண்ணீர் உதிர்க்கும் தலைவருக்கு..!!

---------------------------- ~~ ---------------------------- 

#ஆஹா...
பத்து வயதே ஆனாலும் தெளிவாக சிந்தித்து, இறைவனின் மீதான நம்பிக்கை மட்டுமே காக்கும் என்றறிந்து தன்னைத் தானே காமாந்தகனிடமிருந்து காத்துக் கொண்ட அந்த சின்னஞ்சிறு மொட்டிற்கு.

---------------------------- ~~ ---------------------------- #ஆனந்தக் கண்ணீர்???
(ஊடல் நிமித்தம் ஒரு சின்ன மௌன யுத்தத்திற்கு பின், இரண்டு நாள் கழித்து மாலை ஆஃபீஸ் முடிந்து வந்தவர் சொன்னது)
ஒரியா: என்ன இது, பொருளெல்லாம் இரைஞ்சு கிடக்கு. மௌன யுத்தம் நடந்தப்ப கூட வீடு நீட்டா இருந்ததே??
நான்: (கண்ணை கசக்கிக் கொண்டே) நீங்க வேற, அந்த அழகான நாட்களை ஏன் நியாபகப்படுத்தறீங்க..!!
ஒரியா. GRRRRRRRRRRrrrrrrrrrrrrrrr....

---------------------------- ~~ ----------------------------


ஓக்கே... தொடராமல் பெண்டிங்கில் இருக்கும் தொடர்களோடு மீண்டும் சந்திப்போம் இன்ஷா அல்லாஹ் :))


.

17 comments:

 1. ஆஹா.. ரயில் பெட்டி கிளம்பிடுச்சா :-))))

  ரயில் பயணத்தின் சுவாரஸ்யம் இதிலும்..

  ReplyDelete
 2. டிரங்குப் பெட்டிக்கு என்ன குறைச்சலாம்? இப்பல்லாம் antique சாமான்களுக்குத்தான் மதிப்பு தெரியுமா?

  ரயில் பெட்டி - எப்பவும் வித்தியாசமா யோசிக்கிறீங்கன்னு நிரூபிக்கிறீங்க!! ஆனா,
  பத்தியின் தலைப்புகளை, ஏஸி கோச், ஃபர்ஸ்ட் க்ளாஸ், அன்ரிஸர்வ்ட் - இப்படியே வச்சிருக்கலாம்னு தோணுது.

  //அந்த சின்னஞ்சிறு மொட்டிற்கு.//

  அப்படியொரு சிறந்த ஈமானை ஊட்டிய பெற்றோர்கள் பாராட்டுக்குரியவர்கள்.

  //ஆமைகள்//

  யாரு.. டாட்டாவா செஞ்சாங்க.. அவுங்க நல்லவங்களாச்சே..

  //அந்த அழகான நாட்களை//
  நெசமாச் சொன்னா, அந்த நாட்கள் ரொம்ப நிம்மதியா, ரிலாக்ஸா இருக்கும். ஏன்னா, நான் முழு வேலை நிறுத்தம் செஞ்சிடுவேன்ல!! ;-))))))

  ReplyDelete
 3. ரயில் பெட்டியில் hand kerchief போட்டு first place பிடிச்சிட்டேன் .
  welcome !!!!

  ReplyDelete
 4. அந்த சின்ன மொட்டு வைர மொட்டு .

  ReplyDelete
 5. @ அமைதிச்சாரலக்கா,
  வாங்க. வாங்க. சுவாரஸ்யம் இல்லாத பயணமா...அதுவும் ரயில் பயணம்ன்னா அதன் மதிப்பே தனிதானே.. பார்க்கலாம், அந்த மதிப்பை இந்த பதிவும் ஏற்குமான்னு. :)
  வருகைக்கு நன்றி :)

  @ஹுஸைனம்மா அக்கா,
  பார்த்துக்கா, ரொம்பப் பழசாயிடுச்சுன்னு பேரீத்தம்பழத்திற்கு போட்டுறப்போறாங்க. ஹெ ஹெ ஹே...
  உண்மைலயே அந்த சிறுமியின் இடத்தில் நாமிருந்தால் என்ன செய்வோம் என்றே யோசிக்கறேன், நம்முடைய பலத்தை, அறிவை மட்டுமே சக்தியுள்ளது என எண்ணுவோம், தற்காத்துக்கொள்ள ஓடுவோம், ஒளிவோம், ஆனால் இரவு முழுவதும் ஆயத்துக்களை ஓதியே தன்னை காத்த பெண், சுப்ஹானல்லாஹ்...சல்யூட் அடிக்க நேரில் இல்லை. :)
  GreenPeace.org போய் பார்த்தீங்கன்னா டாட்டாவின் அட்டூழியங்களை எண்ணி எண்ணி வியக்கவே செய்யலாம்..!!
  ஆஹா முழு வேலை நிறுத்தமா? இது நல்ல டெக்னிக்கா இருக்கே. தங்கமணி சங்கம் ஆரம்பிச்சு, தானைத்தலைவியா உங்க பேரை போட்டுரலாம். :))
  நன்றி :)

  ReplyDelete
 6. @ஏஞ்சலின்,

  ஏனுங்கம்மணி, கர்ச்சீஃப் போட்டு பிடிச்சதுதான் பிடிச்சீங்க, ஃபர்ஸ்ட் க்ளாஸ் பிடிச்சிருக்கக்கூடாது? அன்ரிசர்வுடா போயிடுச்சு. சரி ஃப்ரீ விடுங்க. அடுத்த முறை பார்க்கலாம். அந்த சின்ன மொட்டு, வைர மொட்டுதான் சந்தேகமே இல்லை.
  நன்றி :)

  ReplyDelete
 7. அட ரெயில் பெட்டி… நல்லா இருக்குது சகோ உங்கள் பகிர்வு. சுட்டிகளையும் பொறுமையா படிக்கோணும்…. ம்ம்ம்..

  ReplyDelete
 8. ரெயில் பெட்டி பயணம் எப்பவுமே சூப்பர்தான். அதுவும்
  ஏ,சி. கோச்செல்லாம் சரிப்படாது. எல்லா ஜன்னலையும் அடைச்சு வச்சிடுவாங்க. வண்டி ஓடுதா நிக்குதான்னே தெரியாது. சாதா ரிசர்வேஷ பெட்டிதான்
  சுகம். இயற்கையான வெளிக்காத்து, ரயிலின் தாலாட்டும் டக், டக சப்தம் எல்லாம் தாலாட்டும்
  போதுதான் ரயில் பயணம் சுகானுபவம்

  ReplyDelete
 9. ரயில்பெட்டி நல்லாயிருந்தது. நல்ல பயணமாகவும் இருக்கட்டும். கவிதைக்கு பாராட்டுக்கள். ”அந்த அழகான நாட்கள்” கரெக்ட்டு தான்.

  ReplyDelete
 10. ஆஹா... 1997லேவா? அப்போ நீங்க போன நூற்றாண்டின் தளக்கியவாதி...அதே இலக்கியவாதினு சொல்லுங்க...:) ஆனா கவிதை சூப்பர்..

  தினம் ஒரு ரமணிச்சந்திரன் கதையா? அடப்பாவி...எனக்கு? அவ்வ்வவ்வ்வ்... என்கிட்ட இருக்கற எல்லா புக்கும் நாலு வாட்டி படிச்சாச்சு... இனி ஊருக்கு போனா தான் வாங்க முடியும்....:(((

  ஆமாங்க flooding நியூஸ் கேள்விப்பட்டேன்... உங்களுக்கு அதிகம் பாதிப்பில்லைங்கறது சந்தோஷம்... டேக் கேர்

  அடக்கொடுமையே... இப்படி கூடவா நடக்குது...:((

  உப்பு சத்தியாகிரகமா? அப்போ அவிகளா இவிக? சரி உடுங்க... நமக்கேன் பொல்லாப்பு...

  Hats off to her.................

  //நீங்க வேற, அந்த அழகான நாட்களை ஏன் நியாபகப்படுத்தறீங்க/// எனக்கென்னமோ டைலாக் ரிவர்ஸ்ல போட்டுட்டீங்கன்னு தோணுது...:)))))))

  ReplyDelete
 11. அன்னு , ஒரு விஷயம், இந்த கிரீன்பீஸ் சொல்றது எல்லாத்தையும் இன்னிக்கு வளரும் நாடுகளால் பின்பற்ற முடியாது. அப்புறம் வேலையும் இல்லை, சம்பளமும் இல்லை. இதன்பின் வளர்ந்த நாடுகளின் சதி நெறைய இருக்கு. அதை பத்தியெல்லாம் எழுதினா நேராய் சண்டை வரும் அதான் கையை கட்டிபோட்டு வெச்சிருக்கேன்.

  அப்புறம் ஒரியாகாரர் எப்படி இருக்கார். கேட்டதா சொல்லவும்

  ReplyDelete
 12. http://blogintamil.blogspot.com/

  தங்களை வலைச்சரத்தில் குறிப்பிடுள்ளேன். கருத்துக்களை தெரிவிக்கவும். நன்றி.

  ReplyDelete
 13. ரயில் பெட்டில ஏறியாச்சு......

  ReplyDelete
 14. @வெங்கட் நாக்ராஜண்ணா,
  சுட்டிகளை பொறுமையாகவே படிங்க. :)
  வருகைக்கும், கருத்துக்கும் நன்றி. :)

  @லக்‌ஷ்மிம்மா,
  ரயில் பயணத்தை தவிர் வேறெந்த பயணமும் சுகானுபவத்தை தர முடியாதே... :)
  வருகைக்கும், கருத்துக்கும் நன்றி. :)

  @ஆதி சகோ,
  எல்லாருமே ‘அந்த’ நாட்களை அப்படித்தான் நினைக்கறோம் போல.. ஹ ஹ ஹா...
  வருகைக்கும், கருத்துக்கும் நன்றி. :)

  @அப்பாவி..,
  பின்ன, யாரும் பட்டமளிப்பு விழா நடத்தாததுதேன் பாக்கி. :)
  தினம் ஒரு கதை இல்லம்மா.. ஒரு மாசமாத்தான். ஆனா அதைப்பத்தியும் ஒரு பதிவு போடனும். இன்ஷா அல்லாஹ் போடலாம். :) லின்க் கிடைச்சதா?? இனி உங்க கதைகளும் தூள் பறக்குமே ...
  டயலாக் ரிவர்ஸ்லயா... இருங்க இருங்க... நேரம் கிடைக்கும்போது நாங்களும் வாருவோமில்ல... ஹெ ஹெ ஹே
  வருகைக்கும், கருத்துக்கும் நன்றி. :)

  @கார்த்திண்ணா,
  நினச்சேன், எங்கேடா இன்னும் ஒரியாக்காரர் சப்போர் சங்க தலைவரி காணமேன்னு :))
  கிரீன்பீஸ் பற்றி ஒரு தடவை விவாதிப்போம்ண்ணா... இப்ப இல்ல :)
  வருகைக்கும், கருத்துக்கும் நன்றி. :)

  @இராஜராஜேஸ்வரி அம்மா,
  மிக மிக நன்றி :) கண்டிப்பாக பார்த்து கருத்தை எழுதுகிறேன். :)
  வருகைக்கும், கருத்துக்கும் நன்றி. :)

  @பிரபு,
  ஃபுட்போர்டுல நிக்காம இருந்தா போதும் :))
  வருகைக்கும், கருத்துக்கும் நன்றி. :)

  ReplyDelete
 15. நல்லாத்தேன் இருக்கு!

  ReplyDelete
 16. @கோபிண்ணா...

  :))) மிக சந்தோஷம், உங்க வருகைக்கும், பின்னூட்டத்திற்கும். :)

  ReplyDelete
 17. அஸ்ஸலாமு அலைக்கும்

  ரயில் பெட்டி வழக்கம்போல் நேரத்திற்கு கரெக்டாக இயங்க வாழ்த்துக்கள்.

  ஆரம்பமே அமர்க்களமாக இருக்கிறது சகோ. வாழ்த்துக்கள்.

  மனதை பாதித்த வெள்ளம் செய்தி மற்றும் புகைப்படங்கள்.

  ஊடல் மேட்டர், நீங்க இங்க எழுதினது ரங்கமணிக்கு தெரியுமா?

  ReplyDelete

உங்கள் கருத்துக்கள்...