புதுசு கண்ணா புதுசு (பாகம் 2)

Thursday, May 10, 2012 Anisha Yunus 8 Comments

ஒகே. ஒரு வழியா அடுத்த பதிவு போட நேரம் கிடைச்சுது :)

நாம் போன பதிவுல சேர் எப்படி புதுசா மாத்தறதுன்னு பார்த்தோம் இல்லியா? இன்னிக்கு அதற்கான ஒரு டேபிளை செட் செய்யலாம். சீக்கிரம் செய்து எனக்கு ஒரு ஃபோட்டோ அனுப்புங்க :)

தேவையானவை:
1. பழைய டேபிள் (ஹி ஹி ஹி)
2. உப்புக் காகிதம் (இது எல்லா டேபிளுக்கும் தேவைப்படாது. ஆனால் ஒரு இடத்தில் வழவழப்பாகவும் இன்னொரு இடத்தில் சொரசொரப்புடனும் இருந்தால் கண்டிப்பாக தேவைப்படும். மேடு பள்ளங்களை சரி செய்யவும், தூசிகளை அகற்றி தூய்மைப்படுத்தவும் தேவை.)
3. டேபிளின் நீளத்துக்கேற்ற துணி
4. மாட் பாட்ஜ் (இது கிட்டத்தட்ட நம்ம ஊரு ஃபெவிகால்தான். சந்தேகமே இல்லை. :)
5. அக்ரிலிக் ஸ்ப்ரே (அதுல இருக்கும் வார்னிங் எல்லாம் நல்லா படிச்சு பார்த்து உபயோகிக்கணும்.)
6. ஸ்க்ரூ டிரைவர் (ஆமா இதுக்கு தமிழ்ல பெயர் என்ன???)
7. ப்ளையர் (இதுக்கும்  தமிழ் பெயர் யாராவது சொல்லுங்கப்பா ப்ளீஸ்)
8. டக்ட் டேப்
9.ஃபோம் பிரஷ் (மாட் பாட்ஜை பரப்பி விட)
10. ஈரத்துணி

செய்முறை:
முதலில் டேபிளை நல்லா வழவழப்பு, தூசி துகள் இல்லாம உப்புக்காகிதம் வைத்து நல்லா துடைச்சு எடுங்க. அவ்வளவா கீறல் தூசி இல்லாத, வழவழப்பும் இல்லாத டேபிள் என்றால் உப்புக்காகிதம் வேண்டாம்.


அதன் பின் ஈரத்துணி வச்சு மறுபடியும் நல்லா சுத்தம் செய்து காய விடுங்க.
ஈரம் காய்ந்த பின் அந்த டேபிள் மேல துணி வச்சு அளவு பார்த்து வெட்டுங்க. என்னுடைய டேபிள் நிறமும் துணி நிறமும் மங்கலாக இருந்ததால் வெள்ளைத்துணியும் ஒன்று சேர்த்து வெட்டி உபயோகப்படுத்த வேண்டியதாயிற்று.


அதன் பின் ஃபோம் பிரஷ் கொண்டு ஒரே மாதிரி, மேலும் கீழும் இல்லாமல், அதிகம் கம்மி என்றும் இல்லாமல் ஒரே அளவில் சீராக மாட் பாட்ஜை / ஃபெவிகாலை தடவுங்கள். சீக்கிரம் செய்யணும்.


வெயிலில்லாத அதிக காற்றில்லாத இல்லாத இடத்தில் வைத்து செய்ங்க. அப்போதான் முழு டேபிளும் பசை தடவும் வரை காயாமல் இருக்கும்.

சீராக பசையை தடவியபின் வெள்ளைத்துணியை வைத்து ஒட்டவும். ஒரே துணிதான் நீங்கள் உபயோகிக்கப்போகிறீர்கள் என்றால் இந்த பாயிண்ட்டை விட்டு விடுங்கள்.அந்த துணி காய சிறிது நேரம் கொடுங்கள். அந்த துணி காய்ந்ததும் மீண்டும் அதன் மேல் பசை தடவி மேல் துணி / வேறு கலர் துணி ஒட்டுங்கள்.
இரண்டாவது துணி போட்ட பின் பசை நன்கு ஒட்டுவதற்காக டேபிளை தலைகீழாக்கி விட்டுள்ளேன். கனமான எதாவது பொருளும் வைக்கலாம்.
 
ஒரு துணியானாலும், இரு துணியானாலும் கவனமாக காற்றில்லாதவாறு நன்கு அழுத்தி விட வேண்டும்.  மேல் துணியும் நன்கு காயும் வரை விடுங்கள்.

அக்ரிலிக் சீலர்
காய்ந்த பின் அதன் மேல் இன்னொரு தடவை மாட் பாட்ஜை தடவவும். இது எதற்கு என்றால், அந்த துணியை, துணி போலில்லாமல் மடமடப்பாக ப்ளாஸ்டிக் போல மாற்ற. ஒரு முறை நன்கு காய்ந்ததும் மறுமுறையும் பசை தடவி காய விடுங்கள். அதன் பின் அக்ரிலிக் சீலர் கொண்டு நன்கு ஒரே சீராக ஸ்ப்ரே செய்யுங்கள். கிட்டத்தட்ட வார்னிஷ் செய்தது போலாகி விடும்.


எனக்கு பார்டர் வேண்டுமாக இருந்ததால் துணியை நன்கு திசையிலும் கீழே ஒட்டிவிட்டு, கருப்பு பார்டர் போல கருப்பு டக்ட் டேப்பை ஒட்டியுள்ளேன். உங்களுக்கு பார்டர் வேண்டாம் என்றால் ஓரத்தில் வைத்து துணியை கத்தரித்து விட்டு பிசிறில்லாமல் பார்த்துக்கொள்ளவும். ஓரங்களில் இரண்டு முறையாவது மாட் பாட்ஜை தடவி விடவும்.தண்ணீர் மற்றும் சூடான பொருட்களிடம் இருந்து காப்பாற்றினால் போதும். இதோ டேபிளும் சேரும் ரெடி :))

8 comments:

 1. //தண்ணீர் மற்றும் சூடான பொருட்களிடம் இருந்து காப்பாற்றினால் போதும்//

  இந்த வரிதான் இடிக்குது!!

  //எங்கள் கம்பெனியை மூட வேண்டியததான்//
  அதனால்தான் அமேரிக்காவில உங்களுக்குக் கிளைகள் இல்லையோ?? :-)))))

  ReplyDelete
 2. சலாம் சகோ!

  இத்தனை வேலைகளுக்கு மத்தியிலும் சோர்வடையாமல் நமது வீட்டு வேலைகளை நாமே பார்த்து விடுவோம் என்று செயல்படும் உங்களின் ஆர்வம் பாராட்டுக்குரியது.

  வாழ்த்துக்கள் சகோதரி.

  ReplyDelete
 3. //தண்ணீர் மற்றும் சூடான பொருட்களிடம் இருந்து காப்பாற்றினால் போதும்//
  @ஹுஸைனம்மா அக்கா,
  மாட் பாட்ஜ் உபயோகித்தால் சூடான பொருட்களையும் அது தாங்கும் என்றுதான் படித்தேன். இருந்தாலும் ஃபெவிகாலின் குணங்கள் பற்றி தெரியுமாதலால் அந்த எச்சரிக்கையும் இணைந்து விட்டது. அக்ரிலிக் சீலரும் அதற்கெனத்தான் உபயோகிப்பது இருந்தாலும் ஒரு முன்னேற்பாடு அதான் :))

  @சுவனப்பிரியன் பாய்,
  கரெக்ட் பாய். நம் வீட்டு வேலைகளை நாமே பார்த்துக்கொள்வது போலும் ஆகி விடும், அதை விட நிம்மதி நமக்கு பிடித்த வண்ணங்களில், டிசைன்களில் நாம் செய்து கொள்ளலாம். அமெரிக்க மக்களின் உயிரில் கலந்தது இந்த ‘தன் கையே தனக்குதவி’ பாலிசி. வீட்டு கேரேஜிலேயே வைத்து ஒரு காரை உருவாக்கி விடுவார்கள். பெண்கள் சமையலறையில் வைத்தே interiro decoratioon, upholstery, gardening என சகலத்தையும் செய்வார்கள். அவர்களின் காற்றை நாமும் கொஞ்சம் சுவாசிக்கிறோம்தானே.... அதுதான் :)) வாழ்த்துக்களுக்கு நன்றி :)

  @ரிஷபன் சார்,
  Thanks for your compliments. :))

  ReplyDelete
 4. நல்ல ஐடியா! அருமையான உருவம் பெற்று புதிய[!] மேஜையின் அழகு மிளிர்கிறது அன்னு!

  ReplyDelete
 5. வ அலைக்கும் சலாம்,

  என்னவோ செய்திருக்கீங்கன்னு தெரிது. பட் இத புரிந்துக்குற அளவுக்கு எனக்கு ஞானம் பத்தாது. பட் மாஷா அல்லாஹ், மருமக பசங்க செம க்யூட் அவங்க மாமா மாதிரியே :) :) அத சொல்லலாம்னு தான் வந்தேன்...

  ReplyDelete
 6. @மனோ அக்கா,
  வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி. மிகுந்த சந்தோசம், நீண்ட இடைவெளிக்கு பிறகு உங்கள் வருகையை கண்டு :)

  @ஆஷிக் தம்பீ,
  இதெல்லாம் கொஞ்சம் ஓவரா தெரிலே? பிள்ளைங்க அறிவிலும் அழகிலும் அப்படியே அவங்க அம்மா மாதிரி... Universal Truth :))

  ReplyDelete
 7. ஸ்குரூ டிரைவர் - திருப்புளி
  கட்டிங் பிளையர் - குறடு

  ReplyDelete

உங்கள் கருத்துக்கள்...