ஒரு ரெசிபி....பல காம்பினேஷன் :)) Yummy Yummy :)
சகோஸ்....
எப்படி இருக்கீங்க.... இங்கே விண்டர் ஆரம்பித்து விட்டதால் ஹைபெர்னேட்டிங் அப்பப்ப ஆகிடுது.... இருந்தாலும் எங்க விடறாங்க என்னை.... :))
விஷயத்துக்கு வருவோம்.... எந்த விதமான காய்கறியா இருந்தாலும் உங்க வீட்டு வாண்டுக எனக்கு எனக்குன்னு கேட்டு கேட்டு சாப்பிட்டா???? விக்கிற காய் விலையில தினம் தினம் காய்கறியான்னு நீங்களே கவலைப்படற நிலைக்கு போனா.... இதெல்லாம் எந்த படத்துலன்னு கேக்கப்படாது. கடந்த இரண்டு வாரமா ஆரய்ச்சி செய்து சுடச் சுட சூடாக உங்ககிட்ட இதை ஷேர் செய்துக்கறேன்....
ஒரு வேளை சாப்பாடானாலும் புரோட்டீன், பச்சைக்காய்கறி, தானியம் என மூன்றுமே கலந்து தரும் சமையல்தான் என் சாய்ஸ். அதிலும் காய்கறிகளை சாகடிக்காத ரெசிபியாக தேடுவதே பகுதி நேர வேலை. :))
இந்த தடவை, இரண்டு வாரத்துல நானும் இரண்டு வாண்டுகளும் சேர்ந்து பாதி ஃப்ரீஜரை (வெறும் காய்கறிகள் மட்டும்) காலி செய்திருக்கிறோம்.... இதற்கு ஒரே ஒரு ரெசிபிதான் உபயோகப்படுத்தப்பட்டுள்ளது. அது மட்டுமல்ல.... போனஸ்ஸான விஷயம் என்னவெனில், அளவான எண்ணை, உப்பு, பெப்பர், எலுமிச்சை மட்டுமே காரசாரத்திற்கு.... நம்பினால் நம்புங்க.... பீன்ஸ் கூட உங்க பசங்க கேட்டு கேட்டு சாப்பிட வச்சிடும்...
பேச்சிலர் சகோஸ்.... இந்த ஒரே ரெசிபியை வாரம் முழுதும் (என்னைப் போல :)) ) பல காய்கறிகளுடன் சேர்த்து வெரைட்டி பார்க்கலாம். முதல்ல ரெசிபி சொல்லுங்கறீங்களா.... ஹெ ஹெ ஹே..... இதோ.... உங்களுக்காக. (ஃபோட்டோ எல்லாம் அவசரத்துல மொபைல் வழியாவே எடுத்தது.... அதனால நோ கம்ப்ளைண்ட்ஸ் :)) )
தேவை:
1. ஒரு கன்வெக்ஷன் அல்லது ட்ரெடிஷனல் ஓவன். (மைக்ரோவேவ் / டோஸ்டர் அல்ல..) 450 டிகிரி ஃபாரன்ஹீட்டில் முற்சூடு.
2. புராக்கோலி - 2 lb அல்லது முக்கால் கிலோ (இதை புறாக்கோழின்னு சொல்லப்படாதா????? )
Yummy Yummy Costco Frozen Organic florets :) |
3. சின்ன / பெரிய வெங்காயம் அரை கப் நீளவாக்கில் நறுக்கியது.
I used Onion infused Salt.... laziiiiiiiiiiiii :)), minced Garlic and Pepper |
4. பூண்டு 3 அல்லது 4 பல். தோல் நீக்கப்பட்டது, நசுக்கியது. (தோலோட இருப்பதை அப்படியே சப்பாத்திக்கட்டையால் தட்டுங்க..... நசுங்கிய பின் தோல் தனியாக கழண்டு விடும்... பின் தோல் நீக்குவது எளிது... ## என் ஷார்ட்கட் )
5. (வெங்காயம் / பூண்டு விரும்பினால் உலர்ந்த பவுடரையும் உபயோகிக்கலாம். அரை அல்லது முக்கால் தேக்கரண்டி போதும்.)
6. உப்பு தேவைக்கும் கொஞ்சம் குறைவாய் ( 1 தேக்கரண்டிக்கும் குறைவாய்)
7. பொடித்த குறுமிளகுப்பொடி 1 தேக்கரண்டி.
8. இத்தாலிய சீசனிங் (உப்பில்லாதது) அல்லது ஒரிகானோ / மற்ற ஹெர்ப்ஸ் கலவை (தேவைப்பட்டால் மட்டுமே) - 1 தேக்கரண்டி
9. பாதி எலுமிச்சையின் சுரண்டிய தோல் (மேற்தோல் மட்டும்.... zest)
தேங்காய் துருவியிலேயே சன்னமா எலுமிச்சை தோலையும் துருவிக்குங்க. |
10. எலுமிச்சை சாறு 1 தேக்கரண்டி.
11. 1 மேஜைக்கரண்டி ஆலிவ் ஆயில் (இல்லாதவர்கள், நல்லெண்ணையும் உபயோகிக்கலாம்... அதிலும் சுவை நன்றாக இருக்கிறது)
இதயம் நல்லெண்ணெய்... இதயத்திற்கு கீழுள்ள வயிற்றுக்கும் ரொம்ப நல்லது :)) |
செய்முறை:
- ஓவனை 450 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கு முற்சூடு செய்யவும்.
- புராக்கோலியை நன்கு கழுவி நீளவாக்கில் சற்று மெல்லியதாக வெட்டிக்கொள்ளவும்.
- நீள வாக்கில் சன்னமாக வெட்டிய வெங்காயத்தையும், தட்டிய பூண்டையும், புராக்கோலியுடன் கலந்து வைக்கவும்.
- ஆலிவ் / நல் எண்ணெய், உப்பு, குறுமிளகுப்பொடி, தேவைப்பட்டால் ஹெர்ப்ஸ் எல்லாம் நன்கு கலந்து விடவும்.
- ஒரு பேக்கிங் டிரேயில் இந்த காய்கறிக்கலவையை ஒரே சீராக பரத்தி முற்சூடு செய்த அவனில் 20 நிமிடத்திற்கு பேக் செய்யவும்.
- 20 நிமிடம் முடிந்ததும் எடுத்து வேறொரு பாத்திரத்தில் இட்டு துருவிய எலுமிச்சை தோல், எலுமிச்சை சாறு எல்லாம் விரவி பரிமாறவும்.
- அவ்ளோதான்... அவ்வளவேதான்.... ஆனால் நம்புங்க... இதே ரெசிபில கிட்டத்தட்ட எல்லா காய்கறியும் செய்யலாம்.... வித்தியாசமான சுவை, வெளிப்புறத்தில் லைட்டாக க்றிஸ்பியாகவும், உள்ளே மெத்தெனவும் சுவையோடிருக்கும்... தேவைக்கும் குறைவான உப்பே போடுவதால் ஒரு வகையான இனிப்புமிருக்கும்.
Sorry for the photo.... Mini Cheese omelet and Baked Broccoli.... Meal in itself :) |
இதே ரெசிபியைக் கொண்டு நான் செய்து பரிசீலித்த மற்ற காம்போக்கள்... ( Toddlers Approved :)) )
1. புரோக்கோலி மட்டும்.
2. புராக்கோலியும் மக்காச்சோளமும் சம அளவில் கலந்தது. (ஒரு நாள் இது மட்டும்தான் மதிய உணவு... வேறு எதுவுமே தொடாமல் இதை மட்டுமே சப்புக்கொட்டி மூன்று பேரும் சாப்பிட்டு முடித்தோம்....ஹி ஹி )
3. காளான் மட்டும் (சன்னமாக நறுக்கியது) (1 தேக்கரண்டி சோயா சாஸும் சேர்த்தேன்)
4. புராக்கோலியும் காளானும் சம அளவில் கலந்தது. (1 தேக்கரண்டி சோயாசாஸும், 1 தேக்கரண்டி சோம்பு தூளும் எக்ஸ்ட்ரா....வாவ்.... அபார சுவை :) )
5. க்ரீன் பீன்ஸ் (2 இன்ச் நீளமாக நறுக்கியது...ஒரு மேஜைக்கரண்டி வால்நட்ஸும் கலந்து பேக் செய்யுங்கள்.... சான்ஸே இல்லே :)) ) (வால்நட்ஸ் இல்லாவிட்டாலும் செம டேஸ்ட்... நம்ம ஊருல பொரியல்ல செய்யும் பீன்ஸான்னு நீங்களே ஆச்சரியப்படுவீங்க..... எலுமிச்சை மேற்தோல் ரொம்ப முக்கியம் இதில்!!!!!)
6. வெண்டைக்காய் மட்டும்(1/2 இன்ச் நீளத்தில் கட் செய்தது. [உண்மையில் இதை விட எளிதாய் பிள்ளைகளை வெண்டைக்காய் சாப்பிட வைக்க முடியாது.... சிம்ப்லி கிரேட் டேஸ்ட்]...கொஞ்சம் கூட வழவழப்பே தெரியலை...)
7. வெண்டைக்காயும் தோலுடன் உருளைக்கிழங்கும் ( சம அளவில் கலந்தது.... ஆர்கேனிக் / இயற்கையாய் விளைவித்த உருளையே வாங்குங்கள்.... இல்லாவிட்டால் தோல் நீக்கி விடுங்கள்)
8. உருளைக்கிழங்கு மட்டும். (அகல வாக்கில் 1/2 இன்ச் அகலத்தில் கட் செய்யவும்.)
9. மீன் ஃபில்லெட்ஸ் (திலெபியாவும், ஃப்ளோண்டரும் மிக சுவையாய் இருந்தன. )
10. கேரட் ( 2 இன்ச் நீளத்தில், 1/2 இன்ச் அகலமாக)
11. சர்க்கரை வள்ளிக்கிழங்கு {sweet potato} ( 2 இன்ச் நீளத்தில், 1/2 இன்ச் அகலமாக) (ஃபிரெஞ்சு ஃப்ரைஸில் உள்ளது போல்)
இப்ப சொல்லுங்க.... ஒரே ரெசிபியை வைத்து எத்தனை காய் செய்ய முடிகிறது.... எண்ணெய், மசாலாப்பொருட்களும் அதிகமில்லை.... உடலுக்கும் சேதாரமில்லை.... நாக்கிற்கும் சுவையில் குறைவில்லை.... பிள்ளைகள் விரும்பும் உணவாகிவிடும்.... செய்து பாருங்கள்..... கமெண்ட்டுங்கள் :)))
இது கண்டிப்பா எனக்கு உதவும்..ஏன்னா தனியா காய்கறி சாப்பிடுற ஆள் நான் தான் பெரிசா சமைச்சு சாப்பிட பிடிக்கலை இது சிம்பிளா இருக்கு.அதும் அருமையா இருக்கும்னு தெரியுது..நீங்க எழுதின விதம் இப்பவே செய்து சாப்பிடனும் போல இருக்கு..
ReplyDeleteவாவ்! அசத்திட்டீங்க. தொடர்ந்து அசத்துங்க..
ReplyDeleteநீங்க பெரியயீஈஈஈஈஈ ய கிச்சன் கில்லாடி தான்
ReplyDeleteஒரு தட்ட இங்க அனுப்பினா நானும் மதியம் சாப்பாட்டுக்கு பதில் முடிச்சிடுவேன்.
எல்லா காம்பினேஷனும் மிக அருமை. காளன் மட்டும் எனக்கு பிடிக்காது.. என் பெரிய பையன் வந்தால் தான் செய்வேன்..
இப்படி எழுதினா அப்றம் என்ன செய்வது..வெண்டக்காய் வாங்கி உடனே செய்து பார்த்து ப்லேட்டை கழுவியாச்சு..இப்படி சுலபமா ஒரே குறிப்புல சொன்னது வசதியா போச்சு..பொரியலெல்லாம் இவ்வளவு சுவை தராது, அருமையா இருந்தது இனி அடிக்கடி இது தான் செய்ய போறேன்
ReplyDeleteஇப்படி பேக் பண்றதுல என்ன பெரிய்ய சுவை இருக்கப்போவுதுன்னுதான் நினைச்சேன். ஆனா, தளிகா சர்டிஃபை பண்ணியிருக்கிறதப் பாத்தா, நிஜமாவ்வே டேஸ்டாத்தான் இருக்கும் போலருக்கு!!
ReplyDeleteஆனா, ஒண்ணு சொல்லுவேன்... கோச்சுக்கப்படாது. நீங்க எம்புட்டு பெரிய சோம்பேறின்னு தெரிஞ்சுகிட்டேன். என்னைவிட கில்லாடி!! :-)))))
@தளிகா சிஸ்... :)
ReplyDeleteசெய்துட்டு சர்ட்டிஃபிகேட் தந்ததுக்கு ரொம்ப ரொம்ப தேன்க்ஸ்... ஒரு குறிப்பு செய்து, எனக்கும் குழந்தைகளுக்கும் பிடித்தால் ஒழிய நான் ஷேர் செய்வதில்லை.... அதனால எல்லா காம்போவையும் டெஸ்ட் செய்துடுங்க :))
@ஆஸியாக்கா,
ஆஹா... நீங்களே பாராட்டும் அளவிற்கா எழுதியிருக்கேன்.... மிக்க சந்தோஷம் :))
@ஜலீலாக்கா....
அனுப்பக்கூடிய தொலைவில் இருந்தால் அனுப்பி இருப்பேனே.... இன்ஷா அல்லாஹ், அல்லாஹ் நாடும்போது அதையும் செய்கிறேன்... :))
ஆனால்.... என் ஃப்ரெண்டா இருந்துட்டு காளான் பிடிக்காதுன்னு சொல்லிட்டீங்களே.. இந்த ரெசிபியை ஒரு தடவை காளானில் செய்து பாருங்க.... அதன் பின் டெய்லியுமே காளான் செய்ய ஆரம்பித்து விடுவீர்கள். :))
@ஹுஸைனம்மாக்கா,
ஏன் இப்படி..... :))
இப்படி எல்லாத்துலயும் உண்மைய கண்டுபிடிச்சுட்டா நான் மான நஷ்ட வழக்குதான் போடணும்.... :))))
ஆனால் உண்மையிலேயே செய்து பாருங்க.... உங்க பசங்களே உங்களை மெச்சினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை....:))))))
மாஷா அல்லாஹ் அருமை சகோதரி, Very Simple Method இன்ஷா அல்லாஹ் செய்துபார்த்தர வேண்டியது தான். பகிர்வுக்கு ஜெஸக்கல்லாஹ் ஹைர் சகோதரி
ReplyDeleteஇதே போல்தான் செய்வோம்.இலகுவான சமையல்.
ReplyDeleteகாளான் அதென்னவொ எஅன்க்கும் சின்ன பையனுக்கும் பிடிககது.
ReplyDeleteகாளான் பிரியர் பெரியவர் தான் அவர் வந்தால் மட்டும் தான் செய்து கொடுப்பேன்.
வணக்கம்...
ReplyDeleteஉங்களின் இந்தப் பகிர்வு வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...
மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/06/blog-post_23.html) சென்று பார்க்கவும்... நன்றி...
if there is no oven how to do this recipe?
ReplyDelete