ஒரு காதல், ஒரு (தற்)கொலை...

Thursday, February 17, 2011 Umm Omar 34 Comments

பிப்ரவரி 14, இரவு 8:00 மணி

”செல்லம்...காலைல கண்டிப்பா வருவேல்ல?”

”ஏன், எம்மேல நம்பிக்கை இல்லையா?”

”அப்படி சொல்லலைடா, கடைசி நிமிஷத்துல குழந்தைங்க வேணும்னு நீ நினைச்சிட்டா?”

”இப்ப எதுக்கு அதெல்லாம்? நமக்குன்னு பொறக்காமலா போகும்?”

”சரி மா, ஆனா மறக்காம அந்த நகைகளையும்.... உனக்கே தெரியும்.. நம்ம நிலைமை எப்படின்னு... நான் கண்டிப்பா சம்பாதிச்சு உனக்கு அதைவிட பல மடங்காக்கி தருவேன்...ப்ச்..”

”ஏண்டா இப்படி பேசறே.. நானாகத்தானே தர்றேன்னு சொன்னேன். நீ ஏன் கவலைப்படறே... அப்ப நானும் நீயும் வேற வேறயா?”

”சாரிடா செல்லம், நான் இனிமே இப்படி பேச மாட்டேன்... அப்ப நாளைக்கு நாம மீட் செய்யலாம். லவ் யூ டால்.”

’டொக்’


பிப்ரவரி 15, காலை 7:00 மணி
..."ஆசை நூறு வகை வாழ்வில் நூறு சுவை வா...போதும் போதுமென போதை தீரும் வரை வா”..

 ”சொல்லு மச்சி”

”டேய்.. எத்தன் நாள்தான் இந்த பாட்டே வச்சிருப்ப? ரிங் டோனை மாத்தேண்டா...”

“ஹெ நம்ம தொழிலுக்கு இதுதான் சரியா வர்கவுட் ஆகுது..ஹி ஹி”

“ஹ ஹ..சரிதான். சரி, மத்த விசயமெல்லாம் அப்புறம் பேசலாம், நான் சொல்றதை கொஞ்சம் கவனமா கேளு”

”ஆஹா.. சீரியசா பேசறதை பாத்தா புது பட்சியா.. டேய் எப்படா விருந்து?”

“உனக்கில்லாமலா... நம்ம க்ரூப்புக்கெல்லாம் சொல்லிடு. ஒரு வாரம் கழிச்சு வந்தா போதும். செம பார்ட்டி, இன்னும் 6 மாசத்துக்கு வாழ்வுதாண்டா..”

”டேய் ஃபோட்டாவாவது அனுப்புடா மாப்ள..”

”பொறுடா... ஃபர்ஸ்ட் நைட்ல எடுத்தே அனுப்பறேன்...ஹ ஹ ஹா”

“உய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்...”

’டொக்’


பிப்ரவரி 15, காலை 10:00 மணி

"தீபு...தீபு...”

”ஏன்க்கா... யன்னா வேணூம்??”

“வா இங்கே... அம்மா இன்னும் கால் செண்டெர்ல இருந்து ஏன் வரலை??? அதும் நல்லதுதான், அம்மா வர்றதுக்கு முன்னாடி இந்த கலரிங் பேப்பர்ல கலர் செஞ்சு கிஃப்ட்டா தரலாம், என்ன?”

“நானுக்கு கிஃப்ட்டூ??”

“ஒனக்கும் தான். இந்தா இந்த பேப்பர்ல கலர் பண்ணு.”

“முமு வாணும்..”

”பால் வேணுமா.. இரு அப்பாட்ட சொல்லி தர சொல்றேன்.., அப்பா... அப்பா... அப்பா தீபுக்கு பால் வேணுமாம்...அப்பா...அப்பா”

...
...
...

”தீபூ...தீபூ அப்பாவை வந்து பாரேன். அழகா ஃபேன்ல ஊஞ்சலாடறார்...ஹேய்...”

”நானுக்கு...???”பி.கு:
ஹுஸைனம்மாவின் இந்த பதிவை பார்த்ததில் தோன்றிய எண்ணம். எழுததான் நாள் கடந்து விட்டது. என் முதல் கதை ’கேரக்டர் காமினி’, அதன் பின் இதுதான் இரண்டாவது கதை. சொல்ல வந்ததை தெளிவா சொல்லியிருக்கேன்னான்னும் தெரியலை. நிறை குறை நீங்கதேன் சொல்லணும். .

34 comments:

 1. அவங்க பதிவை வாசித்து விட்டு, அதன் தாக்கம் தீரவே எனக்கு ரெண்டு நாளாச்சு... இப்போ இந்த கதையையும், சும்மா கதையாக நினைத்து ஒதுக்க முடியல.... :-(

  ReplyDelete
 2. அன்னு ஒன்னும் புரியலை

  ReplyDelete
 3. @chitra akka,
  same feeling i had when i read that post. that's why i wrote this story to make an impression. tnx.

  @lk nna,
  nijamave onnum priyalaiya? aahaa...naan ilakkiyavaathi aayitteeno??

  ReplyDelete
 4. என்னத்த சொல்றது!!.. எதுவானாலும் கடைசியில பிள்ளைங்க தலையிலதான் விடியுது :-(

  ReplyDelete
 5. தனியா படிக்கும் போது பாதி புரியல ..இப்போ :-(

  ReplyDelete
 6. கதை ஓகே அன்னு. கொஞ்சம் பாஸிடிவா முடிக்கலாமே.

  ஆனா இந்த மாதிரி எழுதினால்தான் சில சமயம் சில பேருக்கு உரைக்கும். அந்த வகையில் இது சரிதான்.

  ReplyDelete
 7. ம்ம்...அன்னு..நெஞ்சு கனத்தது...

  ReplyDelete
 8. கதை High standard ஆக இருக்கு.அருமை.

  ReplyDelete
 9. பரிதாப உதாரணங்கள்...இப்படியும் நடக்கிறதுதான். சமீபத்தில் ஒரு குழந்தையையே கொல்லவில்லையா...

  ReplyDelete
 10. குழந்தைங்க தான் பாவம். :(

  ReplyDelete
 11. என்னத்த சொல்றது..? தீபுவின் அம்மாவுக்கும் சப்போர்ட் பண்ண நிறைய பேர் இருக்காங்க அன்னு :(

  ReplyDelete
 12. அன்னு, முதல் முறை படித்த பொழுது புரியவில்லை. மறுமுறை புரிந்துவிட்டது..

  ReplyDelete
 13. சிறந்த இலக்கியவாதியாகிட்டீங்க!

  //எழுதிரணும்னு முடிவு பண்ணிட்டீங்க. அப்படியே ஒரு ஓட்டும்தேன் போட்டுட்டு போங்களேன்..//

  அது சரி! :))

  ReplyDelete
 14. இந்த டெம்ப்ளேட்ட கொஞ்சம் சிம்பிளா மாத்தக்கூடாதா சிஸ்டர்?

  ReplyDelete
 15. நல்ல இருக்குங்க.. வாழ்த்துக்கள்

  ReplyDelete
 16. அன்னு ஒன்னும் புரியலை

  ReplyDelete
 17. நான் ஏற்கனவே அக்காவின் (ஹுஸைனம்மா) போஸ்ட் படிச்சதால படிச்சதுமே புரிஞ்சது... நல்லா எழுதி இருக்கீங்க அன்னு... சோகம் தான்...என்ன செய்ய? தெரிந்தே குழியில் விழரவங்களை திருத்தவே முடியாது... ச்சே...

  ReplyDelete
 18. உங்களது பதிவுகள் அனைத்தும் படிக்க சுவராஷ்யமாய் இருக்கின்றன... என் பக்கம் பார்க்க .... http://www.padugai.com ... நீங்களும் படித்திட்டு சொல்லுங்கள் www.padugai.com ... உங்கள் பதிவுகளுக்காக காத்திருக்கிறேன் ... :)
  நன்றி

  ReplyDelete
 19. கதை இரண்டாவது தடவை படிச்ச போது விளங்கிருச்சு. ஆனா, ஏன் அநியாயமா அப்பாவை தூக்கில் தொங்க விட்டீங்க??? இப்படி சோக முடிவு கதைகள் படிச்சாலே கவலையா இருக்குப்பா.

  ReplyDelete
 20. நல்லா இருக்கு.

  சரி, ஓட்டுப்பெட்டி எங்கன இருக்கு!?...........

  ReplyDelete
 21. @அனாமிகா,
  எப்படியோ புரிஞ்சுதே.. :)
  நன்றிப்பா... :)

  @அமைதிச்சாரலக்கா,
  அதுதான் பல சம்பவங்களில் உண்மை. :(
  வருகைக்கும், கருத்துக்கும் நன்றிக்கா. :)

  @ஜெய்;லானி பாய்,
  எப்படி எழுதியிருந்தால் சட்டுனு புரிஞ்சிருக்கும்? எதனால புரியலைன்னு கொஞ்சம் விளக்கமா சொல்லுங்களேன், சரி பண்ணிக்குவேனே... :)
  நன்றி பாய்... :)

  @கோபிண்ணா,
  பாஸிடிவ்வா நடக்க இதுல ஒன்னுமே இல்லியே? அப்படி வரம்பு தாண்டி ஆசைப்பட்டாலே நெகடிவ்தானே??
  புரிந்து கொண்டமைக்கு மிக நன்றிங்ண்ணா... :)

  @ஆனந்திக்கா,
  அதே...!
  வருகைக்கு நன்றி.. :)

  @வெங்கட் நாகராஜ்ண்ணா,
  மௌனமே பல சமயங்களில் உணர்வை வெளிக்காட்டுது.
  வருகைக்கு நன்றிங்ண்ணா... :)

  @ஆஸியாக்கா,
  உண்மையிஉலேயே கதை நல்லா இருக்கா? நன்றிங்க்கா.. :))

  @ஸ்ரீராம்ண்ணா,
  ஆமாண்ணா, கடசிலே அந்த பிஞ்சுகள்தானே பாதிக்கப்படறாங்க?
  நன்றிங்ண்ணா... :)

  @கோவை2தில்லி அக்கா,
  ஆமாம், இப்படிப்பட்டவர்களுக்கு பிள்ளையாய் பிறந்ததே அவர்கள் செய்த மிகப்பெரிய பாவம்!! :(
  வருகைக்கும், கருத்ஹ்டுக்கும் நன்றிங்க்கா... :)

  @அஸ்மா,
  ஆமாம் அஸ்மா. அதுதான் இந்த காலகட்டத்தின் முரண். என்ன செய்ய, மனிதம் ஒழிந்து ‘வஹ்ன்’ எல்லோர் நெஞ்சிலும் ஜாஸ்தியாயிடுச்சே??
  வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் நன்றிம்மா.

  @கார்த்திண்ணா...,
  என்ன பிரச்சினை, அல்லது எப்படி எழுதியிருக்கலாம்னு சொல்லுங்களேன்??

  @ஏஞ்சலின்,
  ஆமாம்பா. அவங்களை விட பாவப்பட்டவங்க இந்த உலகில யாரு சொல்லுங்க?
  வருகைக்கும், மறுமொழிக்கும் நன்றிங்... :)

  @ஷங்கரண்ணா...
  ஆஹா.. எவ்ளோ நாளாச்சு, எப்ப மறுபடியும் வலைப்பிரவேசம்? எப்படி இருக்கீங்க? உங்களை மாதிரி பெரியவங்க ஆசிர்வாதம் முதல் பதிவிலேயே கிடைச்சதுக்கப்புறம் இலக்கியவாதி ஆகாம இருக்க முடியுமாங்ண்ணா? :))டெம்ப்ளேட் மாத்திட்டேன்.. இப்ப பரவா இல்லையா??
  அடிக்கடி வாங்க. கிராமத்து ஃபோட்டோக்களும் போடுங்க. :))
  நன்றி, நன்றி :)

  @சரவணன்ண்ணா,
  நன்றிங்ண்ணா.. :)

  @ஆயிஷாக்கா,
  சிம்பிளா சொன்னா ஒரு தாய் தன் கணவர், குழ்ந்தையை விட்டுட்டு ஓடிப்போயாச்சு. துக்கத்துல கணவர் தூக்கு மாட்டியாச்சு, விவரமறியா குழந்தைங்க பாடுதேன் பாவம். மறுபடியும் படிச்சு பாருங்கக்கா. அப்புறம் சொல்லுங்க. ... அடிக்கடி வாங்கக்கா.. நன்றி :))

  @புவனா,
  ஆமாம்பா, தெரிஞ்சே சாக்கடைல விழறவங்களை ஒன்னும் செய்ய முடியாது. ஆனா குழந்தைங்கதான் மகா பாவம். :(
  வருகைக்கும் நன்றிப்பா. :)

  @காயத்ரி,
  நன்றி. பார்ட் டைம் வேலை செய்யும் அளவிற்கு டைம் இல்லை. :) நன்றி.

  @வானதிக்கா,
  நான் எங்கக்கா தூக்கில போட்டேன்? உண்மைலயே நிறைய இடத்துல நடக்குது. பெண்களாவது தலை முழுகிட்டு அடுத்த வேலைய பார்க்க ஆரம்பிச்சிருவாங்க. ஆணகளுக்கு போராடும் குணம் கம்மி, தாங்க மாட்டாங்க.
  வருகைக்கு மிக நன்றிக்கா.. :)

  @கந்தஸ்வாமி சார்,
  வருகைக்கும், தேடி ஓட்டு போட்டதற்கும் மிக நன்றிங் சார். :)

  கமெண்ட் எழுதாமல், ஓட்டு மட்டுமே போடும் அன்புள்ளங்களுக்கும் நன்றி. :)

  ReplyDelete
 22. ”இப்ப எதுக்கு அதெல்லாம்? நமக்குன்னு பொறக்காமலா போகும்?”//


  கதை மிகைப்படுத்தப்பட்டிருக்கு.. இருப்பினும் இப்படி சம்பவங்கள் நடக்கலாம் எங்கோ ஒரு மூலையில்..


  இதை பிராதானப்படுத்தி எழுதும்போது தகவல் தவறாக ரீச் ஆக வாய்ப்பிருக்கு என்பதையும் கவனத்தில் கொள்ளணும்..


  அடுத்து அந்த கணவனும் தற்கொலை செய்வதாக காண்பித்தீர்கள்.. அவருக்கும் பொறுப்பில்லையா?.. குழந்தைகளைவிட தன் மானம்தான் பெரிதா?..


  கரு நன்று இன்னும் சிறப்பாக சொல்லியுருக்கலாமோன்னு தோணியது...

  மேலும் கதையை நீட்டாமல் சுருங்க கூறிய வித்தை அருமை..

  ReplyDelete
 23. நெஜமாவே ஒன்னும் புரியல முதல,
  பிறகு தான், 3 தடவை படித்தேன்.
  சே என்னா உலகம் இது,,,,

  ReplyDelete
 24. இது ஒரு மாறுபட்ட கதை . பார்த்தேன் பகிற்கிறேன்.. தவறாக எண்ணவேண்டாம்..

  ---------
  மியாவ் மனுசி_விகடன் கதை ....முகநூல் தோழமைகளுக்காக
  by Thamira Kadermohideen on Monday, February 21, 2011 at 6:26am

  மியாவ்...மனுசி…

  என் பலகீனங்களின் காட்டில் சுள்ளி பொறுக்காதே..

  -கவிஞர்அறிவுமதி

  ReplyDelete
 25. @ஜலீலாக்கா,
  இப்படி ஒரு கதையை இத்தனை முறை படிச்ச வைரஸ் வராம பின்ன என்ன வரும் உங்க கம்ப்யூட்டர்ல... ஹி ஹி... வாணாம்... கோவப்பட்டுராதீங்க அழுதுருவேன்... ஹ ஹ ஹா... உங்க nature, கிட்டத்தட்ட எங்கம்மா மாதிரியேக்கா... I like you for the sake of Allah. May He grant all goods of both worlds to you and your near and dear ones ... Aameen. :)

  @சாந்திக்கா,
  அந்த கதையை படித்தேன். இதே போன்றதொரு கதையை சில வருடம் முன் பால குமாரன் குமுதத்தில் தொடராக எழுதிய ‘இதுதான் காதலா’ என்னும் கட்டுரையில் படித்த ஞாபகம். எல்லோரும் அந்த ஆண் போல் இருந்து விட முடியாது. It's practically impractical for them... indeed. :)

  நன்றிகள், வருகைக்கும், கருத்துக்கும். :)

  ReplyDelete
 26. கதை நமக்குப் புரிவதை விட சம்பந்தப்பட்டவர்களுக்கு புரிந்தால் சரி.
  சொல்லாமல் சொல்லி கதையின் தாக்கத்திற்கு அருமையாய் அடித்தளம் போட்டிருக்கிறீர்கள்.

  ReplyDelete
 27. @ரிஷபனண்ணா,
  உங்ககிட்டயிருந்து பாராட்டு கிடைச்சதுல மிக சந்தோஷம். :) ரொம்ப ரொம்ப தேன்க்ஸ் :)

  ReplyDelete
 28. அன்னு, எத்தனை பூக்கள் வைத்திருக்கிறீங்க? எப்பூடி சமாளிக்கிறீங்க? ஒன்றுடனேயே நான் படும்பாடு:).

  வித்தியாசமாக கதை எழுதியிருக்கிறீங்க, நல்லா இருக்கு, ஆனா முடிவைப் படிக்க துக்கம் தொண்டையை அடைத்துவிட்டது, மரணம் என்பதைக்கூட அறியமுடியாத பாலகர்கள்... அவர்கள் தாயா இப்படி?. எதுவும் சொல்ல முடியவில்லை. இன்னும் கொஞ்சம் கூட எழுதியிருக்கலாமோ எனத் தோணுது, டக்கு பக்கென முடிச்சிட்டீங்க.

  இது என் முதல் வருகை.

  ReplyDelete
 29. @அதிராக்கா,
  எப்ப முடியுதோ அப்பத்தேன் மத்ததுல எழுதறேன். :)
  நீங்க ஒரு வலைப்பூவிலேயே பின்றீங்களே??? :))

  இன்னும் கொஞ்சம் எழுதியிருந்தால் உப்பு, உறைப்பு கம்மியாயிடும். ஏதோ, இந்த மாதிரி செய்யணும்னு நினைக்கிறவங்க கொஞ்சம் யோசிப்பாங்களேன்னுதான். இன்ஷா அல்லாஹ்.

  இது உங்க முதல் வருகையா? எனக்கென்னமோ நீங்க ஏற்கனவே வந்திருக்கீங்கன்னு தோணுது. எதுக்கும் செக் பண்ணிக்கறேன், வரலாறு முக்கியமில்லையா? ஹி ஹி ஹி :)

  [ஆனா, இதன் பின் அடிக்கடி வாங்க :)]

  ReplyDelete
 30. பூ...தீபூ அப்பாவை வந்து பாரேன். அழகா ஃபேன்ல ஊஞ்சலாடறார்...ஹேய்..//
  kootumaiyaa irrukku.

  ReplyDelete

உங்கள் கருத்துக்கள்...