தாய்மை எனப்படுவது யாதெனில்... (4)

Wednesday, February 09, 2011 Anisha Yunus 20 Comments


ஹ்ம்ம்.. ப்ரீச் பேபின்னு தெரிஞ்சப்புறம் என்ன செய்ய, சில வலைப்பக்கங்களை பார்த்த பொறவுதேன் கொஞ்சம் விளக்கமா தெரிஞ்சது. இதுல மூணு வகை இருக்கே, இதுல முதல், மற்றும் ரெண்டாவது பொசிஷன் பரவாயில்லை(Complete and Frank position), செய்யற சில டாக்டர் இதை நார்மலா ஆப்ரேஷன் இல்லாமலே பிரசவத்தை இயற்கை முறைல அனுமதிப்பாங்க. (எல்லாரும் இப்படிப்பட்ட பிள்ளைகளை இயற்கைல பிரசவிக்க அனுமதிக்கறதில்லை. கண்டிப்பா உங்க டாக்டரிடம் முதலிலேயே கேட்டுக்கணும், இப்படி இருந்தால் அவங்க என்ன செய்வாங்கன்னு!!) அதாவது குழந்தையோட இடுப்பு பகுதியும் தலைப்பகுதியும் ஒரே சைஸா இருக்கறதால‌ (கொஞ்சம் முன்ன பின்ன இருந்தாலும் பரவாயில்லை) வலி எடுத்து பிரசவத்துக்கு தயாரானா குழந்தையை அதே பொஸிஷன்ல வெளி வர விடுவாங்க. கொஞ்சமா தலை பெரிதா இருந்து மாட்டிகிட்டா அந்த வாசல்லே இடுக்கி- forceps போட்டு எடுப்பாங்க. ஆனா மூன்றாவது பொஸிஷன்ல (Incomplete Breach) 100க்கு 99 டாக்டர் ஆப்ரேஷந்தான் சொல்வாங்க. வெகு சிலர் அந்த நேரத்திலும் இயற்கையா செய்ய முன் வரலாம். இந்தியாவில் இதுக்கு எல்லாம் எவ்வளவு சான்ஸ்னு தெரியாது..!!

காலைல 8:30க்கே அப்பாயிண்ட்மென்ட்டுங்கிறதால சீக்கிரமே வீட்டுக்கு திரும்பியாச்சு. ஜுஜ்ஜூ வண்டியிலேயே தூங்கிட்டதால அவனை அப்படியே கொண்டு வந்து பெட்டுல போட்டாச்சு. இவரும் லொஹர் தொழுகை தொழறதுக்கு கிளம்பி போயிட்டார். எல்லா குழப்பங்களையும் இன்னும் குழப்பிட்டே நான் நெட்டுல இயற்கை வழிமுறைகள் என்னன்னு பாக்கறேன்.
நம்ம ஊர்ல எல்லாம் வருசங்களுக்கு முன்னாடி தாதின்னு ஒரு பழக்கம் இருந்தது. அந்த தாதிதேன் வந்து கர்ப்ப காலத்துல தாயை எல்லாம் நல்லா இருக்கான்னு பாப்பாங்க, பின்ன பிரசவமும் முடிச்சு வப்பாங்க, வீட்டுலயே. பொறவு ஹாஸ்பிடல் எல்லாம் வரப்போயி இந்த நிலமை மாறிடுச்சு. ஆனா அந்த வழக்கம் இன்னும் அமெரிக்காவுல இருக்கு. நானும் நிறைய கேள்விப்பட்டிருக்கேன். ஆனா ஒரு பயம் என்னன்னா, பிரவத்துலயோ, பிரசவம் முடிஞ்சோ சிக்கலாயிட்டா என்ன பண்ணறதுன்னு. அதனாலேயே, வெறுப்பா இருந்தாலும் டாக்டரம்மாக்களை பார்ப்பது. அந்த மாதிரி தாதிக்களை அப்படின்னு கூப்பிடுவாங்க. நான் இந்த குழந்தைய பத்தி internetல தேடறப்ப ஒரு எடத்துல ஒரு அம்மா, இப்படி ஒரு குழந்தை இருந்து அதை தாதி இயற்கையா பிரசவம் பார்த்ததை படிச்சேன். ஒடனே ஒரு நப்பாசை, அப்படி யார்கிட்டயாவது போயி பிரசவம் பாத்துக்கலாமான்னு. சரின்னு ஒமஹாவில் இருக்கற எல்லாரையும் நெட்டுல தேடி அவங்க பேரை போட்டு reviewsஉம் எப்படி இருக்குன்னு படிச்சு வச்சேன். ரெண்டு மூணு பேர் ரெம்ப நல்லவங்களா தெரிஞ்சாங்க. அவங்களுக்கு எல்லாம் மெயிலனுப்பி, ஃபோனும் செஞ்சேன்...என் சோக கதைய கேளு தாய்க்குலமேன்னு. அதுல ஒருத்தர் மட்டும் பதில் எழுதினாங்க. கேரி லாஃபிங் (Carrie Laughlin) அப்படின்னு பேர். அவங்க சொன்னாங்க, இதுல‌ ரொம்ப காலம் கழிஞ்சிருச்சு, இருந்தாலும் நான் என்னால முடிஞ்ச உதவிய செய்யறேன். கொஞ்சம் பொறுங்க, ஒரு வேலையை முடிச்சிட்டு செய்யறேன்னு. இன்னொருத்தங்க ஊர்ல இல்ல. சரின்னு அந்த மெயிலுக்கு பதில் சொல்லிட்டு மத்த டாக்டருங்களுக்கு ஃபோன் செய்யறேன், யாராவது என் கேஸை எடுத்துகிட்டு நார்மல் டெலிவரி செஞ்சு குடுங்கன்னு. ஜுஜ்ஜூவின் போது என்ன பிரச்சனையோ அதேதான் இப்பவும். டெலிவரி டேட் தாண்டியதால யாரும் எடுத்துக்கலை. நேரம் போயிட்டே இருக்கு, சாயங்காலம் 5 மணிக்குள்ள எதுவும் முடிவு தெரியலைன்னா பொறவு வேற வழியில்லை, அடுத்த நாள் ஆப்ரேஷந்தேன்.

3 மணி போல கேரி பதிலெழுதினாங்க. ஒமஹாவில 4 டாக்டர் மட்டும்தேன் இந்த மாதிரி பிள்ளைங்களை நார்மலா டெலிவர் செய்யறதாகவும், அவங்க நாலு பேருக்கு ஃபோன் செய்ங்கன்னும். கேரியோட ஃப்ரெண்டு ஒரு பொண்ணு கைரோப்ராக்டர், அது மூலமாகவும் சில சமயம் குழந்தை கீழே திரும்பும்னு அவங்க அட்ரஸும், இன்னொரு நபரின் பேரும் சொன்னாங்க. அது, ஹெதர் ராம்சே(Heather Ramsay). அவங்களும் ஒரு தாதிதேன். தனியா பக்கத்து ஊர்ல ஒரு கிளினிக்கே வச்சிருக்காங்க. (தாதிகள் கிளினிக் வைப்பது வழக்கம் கிடையாது. இவங்க ரெம்ப பிரசித்தம்!!) அவங்களுக்கு ஃபோன் செஞ்சு கேளுங்கன்னு சொன்னாங்க. அவங்களுக்கு ஃபோன் செஞ்சா அவங்களோட பி.ஏ எல்லாம் கேட்டுட்டு, நான் அவங்ககிட்ட சொல்றேன், அவங்க இந்த கேஸை எடுத்துப்பாங்களான்னு தெரியலை, எடுத்துகிட்டா உங்களுக்கு சொல்றோம்னு. சரின்னு சொல்லிட்டு நானும் ஒரியாக்காரர் வந்த ஒடனே அவர்கிட்ட இதையெல்லாம் விளக்கமா சொல்லிட்டு, சாப்டுட்டு கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கறேன். மணி 4:45க்கு ஒரு ஃபோன். இவர்தான் எடுத்தார். இங்க அலுவலக ரீதியா யார்கிட்டயாவது பேசணும்னா அவங்க கணவர், மனைவிகிட்ட கூட அதை பேச மாட்டாங்க. சம்பந்தப்பட்ட ஆள்கிட்டதான் சொல்வாங்க. ஜுஜ்ஜூவின் போது எனக்கு கர்ப்பமா இருக்கறதை கன்ஃபர்ம் செஞ்ச அந்த நர்ஸம்மாவும் என்னை மட்டும் தனியா ஒரு ரூமுக்கு கூட்டிட்டு போயி ஒரு கவர்ல ரிசல்ட் எழுதி அதை சொன்னது இப்பவும் ஞாபகம் இருக்கு. நானும் பயந்திட்டே போறேன்...ஒரு வேளை இல்லைன்னு சொல்லிடுவாங்களோ..இல்லைன்னா ஏதும் பிரச்சினை இருக்குன்னு சொல்வாங்களோன்னு...அவங்க இதெல்லாம் எதுவும் இல்லாம நீங்க தாயாகப் போறீங்கன்னு சொன்ன மறு நிமிஷம் அழுதிட்டேன். இப்ப மாதிரி வலைப்பூவில எழுதிட்டிருந்திருந்தா, அடங்கொய்யால... இதுக்குதேன் இந்த பில்டப்பான்னு வந்திருப்பேன்... அப்ப சந்தோஷம் மட்டும்தேன் இருந்தது...!! :))

அது மாதிரி, இவர் ஃபோன் எடுத்தவர், என்னிடம் ஃபோன் குடுத்தார், உன்கிட்டதான் பேசணுமாமான்னு. நான் ஃபோனை வாங்கினால், பேசறது ஹெதர் ராம்சே, என்கிட்ட அவங்களுக்கு தந்த தகவல் எல்லாம் சரியான்னு கேட்டுட்டு, என்னை பொறுமையா கேக்க சொல்லி இந்த மாதிரி பிரசவங்களை பத்தி சொன்னாங்க. அதுல கேரி சொன்ன நாலு டாக்டர்ல ரெண்டு பேர்ஊர்ல இல்லைன்னும், இன்னொருத்தர் ஆப்ரேஷந்தேன் செய்யறாதாகவும், இன்னுமொருத்தர் நார்மலா பாப்பார்ன்னும். அவர்கிட்ட நான் போகலாம், அவர் எந்த நிலையிலும் கேஸை எடுத்துப்பான்னு. இதை அவங்க சொல்றப்பவே மணி 5 ஆயிடுச்சு. இங்கே எல்லாம் 9 மணியில இருந்து 5 மணி வரைதேன் கிளினிக்கும். அதன் பின் உங்களுக்கு என்ன ஆனாலும் ஹாஸ்பிடல்ல எமெர்ஜென்சிக்குதேன் போகணும். உங்களால முடிஞ்சா அடுத்த நாள் வரை உயிரையும் வலியையும் தாங்கலாம். நானும் மணி 5 ஆயிடுச்சே எப்படி அடுத்த நாள் அப்பயிண்ட்மெண்ட் போடறது, நாம போகறதுன்னு நினைக்கற‌ப்ப அந்தம்மா எனக்காக அந்த டாக்டர்கிட்ட பேசிட்டதாகவும், அடுத்த நாள் 11 மணிக்கு அப்பயிண்ட்மெண்ட் தந்திட்டதாகவும் சொன்னாங்க. எனக்கு கூரையை பிச்சிட்டு மழை கொட்டாத கொறைதான். ஏன்னா, நார்மல் டாக்டருக்கே ஒரு வாரத்தில அப்பாயிண்ட்மெண்ட் கிடைக்காது. இதுல ஹை ப்ரொஃபைல் டாக்டரை எப்படி அதே நாள்ல பாக்க முடியும் சொல்லுங்க. எனக்கு ரெம்ப சந்தோஷமா போச்சு. ஒரு பத்து நிமிஷம் நன்றி மட்டுமே சொல்லிகிட்டிருந்தேன், அவங்களுக்கும், அவங்களையும் நம்மையும் படைச்ச இறைவனுக்கும். அல்ஹம்துலில்லாஹி றப்பில் ஆலமீன். (மனித குலத்தையெல்லாம் படைத்த இறைவனுக்கே புகழனைத்தும்!!)

dr. marvin stancil
ஃபோன்ல பேசின பிறகு 7 மணிக்கு கேரி சொன்ன அந்த கைரோப்ராக்டரை போய் பாத்தோம். ஓமக்குச்சியாட்டம் இருந்துட்டு அந்த பொண்ணு நம்மளை அன்னேரத்துல இப்படி எக்ஸர்ஸைச் செய்யி, அப்படி செய்யின்னு. அதையும் செஞ்சேன். பொறவு வீட்டுக்கு போயி படியில(staircase) கையால எறங்கவும், எக்ஸர்ஸைஸ் பால்'ல உக்காந்து ஜம்ப் செய்யவும் சொல்லுச்சு. கைரோப்ராக்டர் கிட்டத்தட்ட நம்ம ஊரு கை வைத்தியம் மாதிரி, அக்கு பன்சர் மாதிரின்னு வச்சிக்குங்களேன். சரின்னு அது சொன்னதெல்லாமும் செஞ்சேன். அந்த இரவு அம்மாகிட்ட விஷயம் சொல்லியாச்சு. மாமிகிட்ட சொல்லலை. அந்தளவு செய்திகளை அவங்களால தாங்க முடியாது. அடுத்த நாள் காலைல எந்திரிச்சி, முன்னமே சொல்லி வச்சிருந்த ஃப்ரெண்டு ஹன்னாக்கு ஃபோன் செஞ்சு ஜுஜ்ஜூவை 10 மணிக்கு கொண்டு வந்து விடுவார்ன்னு சொல்லிட்டு, அவனுக்கு 2, 3 நாள் போடற ட்ரெஸ், தேவையானெ எல்லாம் பேக் செஞ்சாச்சு. டாக்டர்கிட்ட போன பொறவு எதுவும் ஆகலைன்னா திரும்பி வரலாம்ன்னு. இல்லைன்னா, அங்கயே தங்கும்படி ஆனா ஜுஜ்ஜூ ஹன்னாகிட்ட இருக்கட்டும்னு. கிளம்பவே லேட் ஆனதால் ஜுஜ்ஜூவையும் கூட்டிட்டே டாக்டரிடம் போயாச்சு. அவர் பெயர், மார்வின் ஸ்டான்சில் (Marvin Stancil).

போயி பத்து நிமிஷத்துல உள்ள கூப்பிட்டாங்க. டாக்டரை பாத்தவுடனே ஒரு நம்பிக்கை மனசுல, கண்டிப்பா அல்லாஹ் நமக்கு இவர் மூலமா ராஹத்தாக்கி குடுப்பான்னு. அவரும் வந்து பேசி, சகஜ நிலமைக்கு கொண்டு வந்த பின்ன மேல முதல் பாராவில் எழுதியிருக்கற சேதிய சொன்னாரு. அதுவரை இந்த பொசிஷன் பத்தியும் எதுவும் தெரியாது, கவலையும் இல்ல. இப்ப கவலை ஆரம்பிக்குது, எந்த பொசிஷன்ல இருப்பான்? ஸ்டான்சில் டாக்டர் என்னிடம் பொசிஷன் பத்தி கேட்டப்ப எனக்கு தெரியாதுன்னு சொன்னேன். ஒடனே அவரு அல்ட்ராசவுண்டு கொண்டு வந்து அதே ரூம்ல வச்சு பாத்திட்டு குழந்தை மொத பொஸிஷன்ல இருக்கறதா சொன்னாரு. அப்புறம் பிரசவம் எப்படியெல்லாம் இயற்கையா கொண்டு வரலாம்னு சொல்லிட்டு, ஒரு வழிமுறைல இப்ப‌வும் குழந்தைய கீழ திருப்ப முடியும்ன்னாரு. அதுக்கு பேர் சுருக்கமா வெர்ஷன் ப்ரொசீஜர் (external version procedure). அதுல தாயோட வயிறு மேல கைய வச்சு குழந்தைய கீழ திருப்பி விடுவாங்க. அப்படி அந்த குழந்தைய திருப்ப முடிஞ்சா வெற்றி. ஆனால், பல சமயம் குழந்தை மறுபடியும் அதே பொசிஷனுக்கு வர சான்ஸ் இருக்கு. அதனால அவங்களுக்கு சான்ஸ் தராம நாம நினைச்ச மாதிரி நார்மலாக்கணும்னா அந்த ப்ரொசீஜருக்கு அப்புறம் எபிடோசின் போட்டு வலிய செயற்கையா ஆரம்பிச்சிடுவாங்க. அதே போல, இந்த ப்ரொசீஜராலயோ அல்லது ப்ரொசீஜர் இல்லாம குழந்தை அப்படியே பிறந்தாலோ, பிரச்சினை குழந்தைக்கு வர வாய்ப்பில்ல, எந்த சேதம் வந்தாலும் அது  தாய்க்குதான். இதையெல்லாம் நல்லா புரிஞ்சு சம்மதம்ன்னா நாம் மதியம் ரெண்டு மணிக்கு அந்த ப்ரொசீஜரை செய்யலாம்ன்னார். என்ன என்ன விளைவுகள்,

1. பனிக்குடம் ஒடையலாம். உடனே பிரசவ வலி ஏற்படலாம்.
2. கர்ப்பபைலயோ, அல்லது அதை சுத்தியிருக்கும் நாளங்களிலோ சிராய்ப்பு, வீக்கம் ஏற்படலாம்.
3. வேறேதும் உள்ளுறுப்பில் அடி பட்டோ/ குழந்தை இடி பட்டோ சாவு நிகழலாம் (மிக மிக மிக கம்மியான சான்ஸ்தேன். பயம் வேண்டாம்!!)

இதெல்லாம் யோசிச்சு, சரின்னு சொல்லி, மதியம் ரெண்டு மணிக்கு சரின்னு சொல்லிட்டு வெளில வர்றப்ப மணி 12. ஃபோன் செஞ்சு யார்கிட்ட சொன்னாலும் அதெல்லாம் வேண்டாம், பேசாம ஆப்ரேஷன் செஞ்சுக்கன்னு சொல்றாங்க. இன்னொரு தெரிஞ்ச டாக்டர், அந்த ப்ரொசீஜர் எல்லாம் உன்னால தாங்க முடியாது, அதுக்கு ஆபரேஷன் வலியே பொறுத்துக்கலாம்னு.எல்லாத்தையும் கேக்கறேனே ஒழிய மனசுல முடிவெடுத்தது எடுத்ததுதேன். ஒரியாக்காரர், ஜுஜ்ஜூவை ஹன்னாகிட்ட விட்டுட்டு வர போயிட்டார். (டாக்டரிடம் பேசி முடிக்கறதுக்குள்ள ரூமெல்லாம் தண்ணி ஊத்தி, ஜாலியா எஞ்சாய் பண்ணார். என் நிலமைய விட டாக்டருக்கு ஜுஜ்ஜூவை அந்த நேரத்துல ஹாஸ்பிடல் விட்டு வேறெங்கிலும் வெப்பீங்களானுதேன் கவலை!! :)

ப்ரொசீஜர் செய்யறதுக்கு முன்னாடி சாப்பிடக் கூடாதுன்னு சொன்னதால சாப்பிடற பிரச்சினையில்ல. ஒரியாக்காரரை மட்டும் வீட்டுல ஏதாவது சாப்பிட்டு வாங்கன்னு விட்டாச்சு. இங்கே ஃபோனை வாங்கி அப்பாவிடம் பேசறப்ப கட்டுப்படுத்த முடியாம அழுகறேன். காய்ச்சல் என்றாலும் என்னை விட்டு எங்கம்மாவோ அப்பாவோ நகரவே மாட்டாங்க. அப்படி இருந்தவ, இங்க தனியா இப்படிப்பட்ட சோதனை எல்லாம் பாக்க வேண்டி இருக்கேன்னு அழுகை. அப்பாவும் ஆறு
ல் சொல்லி, அங்கே இருந்தே து'ஆ செஞ்சு ஃபோன் மூலமாகவே ஊதினாங்க. இதெல்லாம் இன்னொரு சமயமா இருந்திருந்தா நானே கமெண்ட் செஞ்சிருப்பேன். நானிருந்த நிலைல, இன்னொரு முறை ஃபோன் பேசுவேனான்னே மனசுல தோணிடிச்சு. அம்மி அப்பாவும் அழுக, நானும் இங்கே அதே நிலைமை. சரி, ரெம்ப பேசினா நமக்குதானே கஷ்டம்னு வெச்சிட்டேன். பின்ன டாக்டர் சொன்ன 4வது மாடிக்கு லிஃப்ட்டுக்கு போறேன்.....

20 comments:

 1. நீங்க காமெடி tone கலந்து எழுதினாலும், இறுதி பத்தியில் நெகிழ வைத்து விட்டீங்க... அந்த வேதனையும் மன நிலையும் எனக்கு நல்லா புரியுது.... இங்கேயும் "தனி ராஜாங்கம்" தான் நடந்துச்சு.... ரெண்டு தடவையும்!

  ReplyDelete
 2. அன்னு இந்தியாவில் கேள்வியே இல்லை இவ்ளோ விளக்கமும் தரமாட்டாங்க ..குழந்தை பொசிசன் சரியில்லை ஆபரேசன் பண்ணனும்னு மட்டும்தான் சொல்லுவாங்க

  ReplyDelete
 3. அன்னு, இவ்வளவு விஷயம் இருக்கா breechல. அந்த நேரத்துல அம்மா அப்பாவ ரொம்பவே தேடும்.எனக்கும் அப்படித்தான்.

  ReplyDelete
 4. தாய்மை எனப்படுவது யாதெனில்... (4)

  * பகுதி 1
  * பகுதி 2
  * பகுதி३ மிகவும் நல்ல தொடர் .அருமையாக உள்ளது .தொடருங்கள் .

  ReplyDelete
 5. தாய்மையை உணர வைக்கும் பதிவு..
  புரியாத தகவல்களை புரியும்படி தந்ததற்கு நன்றி.

  ReplyDelete
 6. ஒருபக்கம், நட்சத்திரம், நல்லநேரம்னு நார்மலா ஆகக்கூடியதை சிஸேரியன் ஆக்கிடுறாங்க. இன்னொரு பக்கம், நிறைய பேர், இப்படித்தான் (உங்களை மாதிரி) சிஸேரியன்னா ஒரேயடியா பயப்படுறாங்க அல்லது வெறுக்கிறாங்க. பிரசவ சமயத்துல இவ்வளவு டென்ஷன்/ரிஸ்க் எடுக்கிறதைவிட, ஆபரேஷனே மேல்ங்கிறது என் கருத்து. சரி, எல்லாம் நல்லபடியா நடந்துதே, ஆண்டவன் கிருபை.

  ReplyDelete
 7. அன்னு ட்தனியாக் வெளியூரில் எல்லோருக்கு இது போல உள்ல கழ்டத்த, உஙகள் பதிவு மூலம் , ட்தெரியுது, பிள்ளை பெத்தெடுப்பது என்ன லேசான விஷியமா.

  ReplyDelete
 8. தொடர்ந்து வந்துக்கிட்டே இருக்கேன்.. அந்த நேரத்து உங்க மனநிலையை புரிஞ்சுக்க முடியுது.

  ReplyDelete
 9. அடுத்த பகுதிக்கு மனத்துடிப்புடன் காத்திருக்கிறேன்...

  இந்தியாவில் டாக்டர் தான் பேசுவார், நம்ம கேட்டுக்கணும், நம்ம எதாவது நெட்ல படிச்சு சொன்னா, கன்னா பின்னான்னு திட்ட ஆரம்பிச்சுடுவாங்க!

  ReplyDelete
 10. ஹ்ம்ம்ம்...

  \காய்ச்சல் என்றாலும் என்னை விட்டு எங்கம்மாவோ அப்பாவோ நகரவே மாட்டாங்க. அப்படி இருந்தவ, இங்க தனியா இப்படிப்பட்ட சோதனை எல்லாம் பாக்க வேண்டி இருக்கேன்னு அழுகை\

  :(

  எப்படியோ அல்லாஹ் லேசாக்கி தந்தான்... அல்ஹம்துலில்லாஹ்! அப்புறம் என்ன தான் ஆச்சு!?

  ReplyDelete
 11. அன்னுக்கா, நல்லா இருக்கு. நிறைய கொசுவத்தி சுத்தி, ஒரே ஃபீல்ங்ஸா போச்சு.

  ReplyDelete
 12. படிக்கும்போதே வயறு வலிக்கிறா மாதிரி ஒரு ஃபீலிங்கு..:))

  விளக்கமா எழுதியிருக்கீங்க..

  தனைமை இன்னும் அதிக பயத்தை தந்திருக்கும்.

  எனக்கு இரண்டாவது டெலிவரிக்கு ஏதோ நட்சத்திர விடுதிக்கு தங்க செல்வது போல ஜாலியா சென்றோம்.. ஏன்னா அந்த மருத்துவர் எம்மை விட அதிகம் பொறுப்பு எடுத்துக்கொண்டார்.. இத்தனைக்கும் 3 மிகப்பெரிய ரிஸ்க் இருந்தது என்னிடம்..

  பாராட்டுகள்..

  ReplyDelete
 13. சிஸ்டர். உண்மையிலேயே கஷ்டம்தான் இது. இவ்ளோ பொறுமை ஆண்களுக்கு இருக்காது. இது தெரிஞ்சுதான் தாய்மையைப் பெண்களுக்குக் கடவுள் கொடுத்திருக்கிறார் என்று நினைக்கறேன்.

  ReplyDelete
 14. ரொம்ப நெகிழ்வா அதே சமயம் பதற்றமாவும் எழுதியிருக்கீங்க சகோ! என் கையெல்லாம் சில்லுன்னு இருக்கு இப்போ!

  ReplyDelete
 15. ஒவ்வொரு வரியையும் படிக்கும் போது அப்போது நீங்கள் பட்ட வேதனைகள் புரிகிறது. அப்போது சொல்லப் பட்ட வார்த்தைகளை இப்போதும் நினைவில் நிறுத்தி எழுதுவது பாராட்டுக்குரியது.விளக்கமாக எழுதுகிறீர்கள். நெகிழ வைக்கிறீர்கள் சகோதரி...(கிட்டத் தட்ட ஆனால் சற்றே வேறு விதமாக என் உறவுகளில் இப்படி ஒரு கேஸ் இப்போது. இன்றோ நாளையோ சுகப் பிரசவம் ஆகி விடும் என்று ஆண்டவனை வேண்டிக் கொண்டு இருக்கிறோம்.) எந்த சோதனைக்கும் தயார்..வேதனைக்கும் தயார் என்னும் அந்த சகிப்புத் தன்மையிலும் பொறுமையிலும்தான் தாய்மை இருக்கிறது என்று தோன்றுகிறது.

  ReplyDelete
 16. அட நீங்க திரும்ப எழுத ஆரம்பிச்சாச்சா...!!!!! பிளாக் பக்கம் வராததால தெரியாமலேயே போயிடுச்சி ...இப்பதான் நாலு பார்டையும் தொடர்ந்து படிச்சேன் .
  ”” அல்லாஹ் எந்த ஓர் ஆத்மாவிற்கும் அதன் சக்திக்கு மேல் கஷ்டம் குடுப்பதில்லை”” இதான் தோனுது .

  இதில் விடா முயற்சியும் , உங்க தன்னம்பிக்கையும் தெரியுது . :-)

  //இதெல்லாம் இன்னொரு சமயமா இருந்திருந்தா நானே கமெண்ட் செஞ்சிருப்பேன். நானிருந்த நிலைல, இன்னொரு முறை ஃபோன் பேசுவேனான்னே மனசுல தோணிடிச்சு. அம்மி அப்பாவும் அழுக, நானும் இங்கே அதே நிலைமை//

  எனக்கு பிறந்த இரெண்டும் ஆப்பரேஷந்தான் .அவள் அங்கே ஆபரேஷன் தியேட்டர்க்கு போகும் கடைசி நிமிடம் போனில் பேச எனக்கு அடுத்த அரை மணி நேரம் கையும் ஓடாமல் காலும் ஓடாமல் இருந்தது வாழ்வில் மறக்க முடியாதது .

  குழந்தை பிறந்து விட்டதுங்கிற செய்தியை கேட்கும் வரை நெருப்பில் நின்ற நிலைதான்.
  இரெண்டாவது குழந்தைக்கு 2 மணிநேரம் அதிகமாக ஒவ்வொரு 10 நிமிடத்திற்கும் போன் போட்டு என்ன ஆச்சின்னு இன்னும் தியேட்டரை விட்டு வெளியே வரலையான்னு தொடர்ந்து விசாரிக்க என்னை விட அவங்களுக்கு டென்ஷன் . இனி நீ போன் செய்யாதே நானே செய்யுரேன்னு சொல்லியும் நான் கேக்கல . (இப்போதும் அதை சொல்லி என்னை கிண்டலடிப்பார்கள்))

  சில விஷயங்கள் சொல்லி தெரிவதில்லை அதை உணரும்போதுதான் அதன் வீரியம் அதிகம் 100 சதம் உண்மை :-)

  இப்போது அப்துல்லாஹ் எப்படி இருக்கார் :-))

  ReplyDelete
 17. உங்க அனுபவம் ரொம்ப த்ரில்லின்ன்கா இருக்கு அக்கா

  ReplyDelete
 18. @சித்ராக்கா,
  நீங்கள்லாம் மனதளவில் பலசாலிதாங்கக்கா. இதுவே ஜுஜ்ஜூவின்போது இவ்வளவு நடந்திருந்தா நான் இந்தளவு தைரியமா இருந்திருப்பேனா எனக்கு தெரியாது.
  நன்றி .. :)

  @கார்த்திண்ணா,
  ஆமாண்ணா. ஆனா எல்லா டாக்டரும் அப்படி இல்லைன்னு கேள்விப்பட்டிருக்கிறேன். இப்ப எல்லா இடத்திலும் இந்தியாவுல பணம் மட்டும்தேன் பிரதானமா பார்க்கப்படுது, இது மாறுச்சுன்னா நம்ம கிட்ட பேசவும் விளக்கவும் அவங்களுக்கு நேரம் கிட்டலாம்.
  நன்றி .. :)

  @சுகந்திக்கா,
  ஆயிரம் பேர் கூடி நின்னு நம்மளை கைல வச்சு தாங்கிகிட்டாலும் அம்மா மாதிரி வராதுக்கா. கல்யாணத்துக்கு பொறவுதேன் அம்மி மேல என் மரியாதையும், அன்பும் கூடியிருக்கு.
  நன்றி .. :)

  @நீடுர் அலி பாய்,
  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி .. :)

  @இந்திராக்கா,
  ஏதோ என்னால முடிஞ்சதை எழுதறேன். நம்மளை மாதிரி தனியா வாழும் பெண்கள்கிட்ட அவர்களின் கணவன்மார் இன்னும் கொஞ்சம் பரிவா நடந்துகிடட்டும்னுதேன் இந்த பதிவே.
  நன்றி .. :)

  @ஹுஸைனம்மா,
  ஹ ஹா... பயம் எல்லாம் இல்லப்பா. நான் ஏன் ஆப்ரேஷன் வேண்டாம்னு இருந்தேங்கிறதுக்கு பல காரணம் இருக்கு.
  1. ரிகவரி, கஷ்டம். ஏன்னா அம்மி அப்பா இந்த பனி முடியறவரை வரமாட்டாங்கன்னு தெரியும்.
  2. இங்கெ இந்தியன் ஃபேமிலிஸ் கம்மிதான். உதவிக்குன்னு யாரையும் எளிதில் கேட்க முடியாது.
  3. ஜுஜ்ஜூவை டே கேரில் விடவும் இவருக்கு இஷ்டமில்லை. அவனுக்கு possessivenessஉம் ஜாஸ்தி. அதனால குழந்தைய கவனிக்கறப்ப பிரச்சினை வரும்.
  4. அவருக்கு சமைக்கவே தெரியாது. செய்வதும் விருப்பமில்லாத வேலை. ரெண்டு மாசத்துல பத்து நாள் கூட நான் பகல்ல தூங்கியது இல்லை. என்ன செய்ய, எவ்வளவோ யோசிச்சாலும், கடைசில அப்படித்தேன் முடிந்தது!!
  நன்றி .. :)

  @ஜலீலாக்கா,
  அதே..அதே...அந்த கஷ்ட்த்தை ஆண்கள் புரிந்து கொண்டு இன்னும் பதவிசா பெண்களை கவனிச்சுப்பாங்கன்ற ஒரு நப்பாசைதேன்.
  நன்றி .. :)

  @அமைதிச்சாரல் க்கா,
  வாங்க, வாங்க. புரியாமலா... வீட்டுக்கு வீடு வாசப்படிதானே?
  நன்றி .. :)

  ReplyDelete
 19. @வெங்கட் நாகராஜ்ண்ணா,
  உண்மைதாங்ண்ணா. இந்தியாவில இருக்கற சில டாக்டர்ஸ் அப்படித்தான் ஈகோ பாக்கறாங்க. ஆனாலுமே நாம் படிச்சு, என்ன மருந்து தர்றாங்க, என்ன பிரச்சினைன்னு தெரிஞ்சுக்கறது, பல வகையிலும் நல்ல விஷயம்.
  நன்றி.. !! :)

  @நாஸியா,
  அல்லாஹ் லேசாக்கித்தான் தந்தான். எத்தனையோ பிரசவம் இதை விட கஷ்டமா, இதை விட complexஆ நடந்திருக்கு. நம்மால சமாளிக்கக்கூடியதைத்தான் அல்லாஹ் தருவான். தெம்பா இருங்க :)
  நன்றி.. !! :)

  @வானதிக்கா,
  என்னது அன்னுக்காவா? என்ன சிஸ்டர், நாமெல்லாம் அப்படியா பழகினோம், நீங்க அக்கா, நான் தங்கச்சியாத்தானே பழகினோம்?? யாராவது சொல்லுங்கப்பா... :))
  நன்றி.. !! :)

  @பயணமும் எண்ணங்களும் அக்கா,
  பயம்னு இல்லை, ஆனா எதிர்பாராததை சமாளிக்கக்கூடிய வலிமையும், மனதிடமும் இருக்கான்னு தெரியாத சூழ்னிலை. அதான். உங்க கதையவும் எழுதுங்க, தெரிஞ்சுக்கலாம் இன்ஷா அல்லாஹ். பாராட்டுக்களுக்கு மிக நன்றி.
  நன்றி.. !! :)

  @கோபிண்ணா,
  100% உண்மை. அதிலும் ஒரியாக்காரருக்கு சுத்தமா பொறுமை கிடையாது. அவரோட impatience பார்த்தா நமக்கே பிபி எகிறிடும்,. ஹெ ஹெ... இப்படித்தான் எங்க வண்டி ஓடுது. :)
  நன்றி.. !! :)

  @பாலாஜி சரவணண்ணா,
  ஹ ஹா... ரெம்ப உணர்ச்சிபூர்வமா இந்த தொடரை படிச்சிட்டீங்கன்னு நினைக்கறேன். இந்த பதிவெல்லாம் பார்த்து தங்கமணிகளை இன்னும் தங்கமா வச்சுகிட்டா போதும், இன்ஷா அல்லாஹ். :)
  நன்றி.. !! :)

  @ஸ்ரீராம் அண்ணா,
  அவங்க கதை என்னாச்சு, இறைவன் நாடியபடி நலமாக நடந்ததா? தெரியப்படுத்தவும். அந்த நேரத்துல பொறுமையும், தெளிவும்தான் ரெம்ப தேவை. ஆனால் அதன் பின்பும் தேவைதான், பெண்களுக்கு.
  நன்றி.. !! :)

  @ஜெய்லானி பாய்,
  நீங்க எங்கே என் பிளாக் பக்கமே வராம போயிடுவீங்களோன்னு நினச்சேன்... :))
  //குழந்தை பிறந்து விட்டதுங்கிற செய்தியை கேட்கும் வரை நெருப்பில் நின்ற நிலைதான்.//
  பெற்ருக்கொடுக்கும் எங்களுக்கே அந்த நிமிஷம் வரை இதே டென்ஷந்தான். பின்ன அவ்வளவு தூரத்தில இருக்கற உங்க நிலைய ...ஹ்ம்ம் வார்த்தைகளால கண்டிப்பா விளக்க முடியாது.

  அப்துல்லாஹ்வும், அப்துர் ரஹீமும் என்னை ராப்பகலா கவனித்து கொள்வதில் பிசியாக இருக்கிறார்கள். :))
  நன்றி.. !! :)

  @ஃபாத்திமாக்கா,,
  வாங்க.. வாங்க... எனக்கேஎ த்ரில்லிங்கா அமைஞ்சது வேற விஷயம். ஹெ ஹெ...
  நன்றி.. !! :)

  ReplyDelete
 20. இந்த பகுதி மட்டும் முதலே படித்தது தான்

  //வெர்ஷன் ப்ரொசீஜர் (external version procedure). அதுல தாயோட வயிறு மேல கைய வச்சு குழந்தைய கீழ திருப்பி விடுவாங்க. அப்படி அந்த குழந்தைய திருப்ப முடிஞ்சா வெற்றி. ஆனால், பல சமயம் குழந்தை மறுபடியும் அதே பொசிஷனுக்கு வர சான்ஸ் இருக்கு.//எம்மாடி நினைச்சாலே பயமா இருக்கு
  ,

  ReplyDelete

உங்கள் கருத்துக்கள்...