சாட்சிகள் எல்லாம் பேசும்...

Thursday, February 24, 2011 Anisha Yunus 31 Comments

பட்டப்பகலிலும் வெளிச்சத்தை
உமிழும் Tube light,

அவ்வப்போது முழுதாய்
நனைந்து போயிருக்கும்
Toilet Roll,

நிசப்த வேளைகளிலும்
மௌனமாய் கசிந்து கொண்டிருக்கும்
Tap Water,

வெகு நாட்களாய் சீண்டுவார்
யாருமில்லாமல் போன
Diaper Genie,

ஆங்காங்கே தரையெங்கும்
சிதறிக் கிடக்கும்
Hand Soap,

அவசரமாய் உள்நுழைகையில்
அமர்க்களமாய் வீற்றிருக்கும்
Potty Seat,

எல்லாம் பறைசாற்றுகின்றன
ஜுஜ்ஜூ தேறிவிட்டதை
Potty Trainingஇல்...


ஹி ஹி ஹி... யாருப்பா அது இதுக்கெல்லாம் கவிதையான்னு கேக்கறது. எல்லாம் அமெரிக்க / வளைகுடா வாழ் தாய்மார்களின் சார்பாக பொறுத்துக்கொள்ளுங்களேன்.. ஹெ ஹெ ...

31 comments:

 1. hi hi, enakkuthan vadai inniku... slurp...slurp..:)

  ReplyDelete
 2. உங்களுக்கு பூங்கொத்து கொடுக்கிறேன். எப்படிப்பா பழக்கி விட்டீங்க? நான் இன்னும் என் மகன் கூட சண்டை விட்டு கிட்டு இருக்கேன்....

  ReplyDelete
 3. ஹெ ஹெ ஹெ ...சித்ராக்கா... தொழில ரகசியத்தை வெளில சொல்லக்கூடாது. நான் ஃபோன் செஞ்சு சொல்றேன்.. ஹெ ஹெ :))

  ReplyDelete
 4. ஆஹா காதல் கவிதையை விட இந்தக் குழந்தை கவிதை சூப்பாராக இருக்கே.தொடருங்க,பிள்ளைங்க கவிதை எழுத வச்சிட்டாஙக,அப்ப நம்ம அன்னுவும் தேறிட்டாங்க..

  ReplyDelete
 5. @asiyakkaa,ennathai theruvathu, polambalthen kavithaiyaa maaruthu hi hi hi...

  ReplyDelete
 6. ஹை, முதல் படிக்கு வாழ்த்துகள்!! எம்புட்டு சந்தோஷமாருந்தா கவிதையே வடிச்சிருப்பீங்க ”இதுக்கு”!!

  ஆனாலும், ரொம்ப ஜந்தோஜப் பட்டுக்காதீங்க. இனிதான் மெயின் பிக்சரே இருக்கு!! ’எல்லாம்’ தானே செய்ய ஆரம்பிக்கும்போது, மாச தண்ணீர் பில் தொகையப் பாத்து வரும்பாருங்க டெஞ்ஜன், அப்புறம் “பழைய பாதை”க்கே திரும்பிப் போலாமான்னு யோசிக்க வைக்கும்!! இப்பவும் என் சின்னவன் குளிச்சான்னா, பாத்ரூமே குளிச்ச மாதிரி!! ;-)))))

  ReplyDelete
 7. @hussainamma,
  //ஹை, முதல் படிக்கு வாழ்த்துகள்!! எம்புட்டு சந்தோஷமாருந்தா கவிதையே வடிச்சிருப்பீங்க ”இதுக்கு”!!//
  varalaaru mukkiyam aache!! :))

  innum sariyaana temperaturela thanni kondu vara theriyaathathaala naanga pi1achukittu irukkoom.neenga solra nilai varrathukku munnaadi maarru erpaadu senjiranum.... he he he... ippadithaan irukkanum seniors :))

  ReplyDelete
 8. 'அப்பாடா'ன்னு இருக்குமே :-)))))))

  ReplyDelete
 9. annu super kavithai ,இன்னும் கொஞ்ச நாளில் டூத் பேஸ்ட் , ஷாம்பூ அப்புறம் ஷேவிங் கிரீம் இதெல்லாம் சீக்கிரமே தீர்ந்துடும் அப்ப இதை விட பெரிய கவிதை எழுதுவீங்க .(எங்க வீட்ல பாய் விரிச்ச மாதிரி toilet roll living room வரைக்கும் வந்துச்சி )

  ReplyDelete
 10. @அமைதிச்சாரலக்கா,
  நீங்க வேற ஹுஸைனம்மா சொன்ன மாதிரி தினம் தினம் பாத்ரூம்ல எல்லாம் சரியா இருக்கான்னு கவனிக்கவே நேரம் பத்தலை.. :)

  ReplyDelete
 11. சூப்பர்....என்னென்ன முன்னேற்றங்கள்...இப்பவே பழக்க ஆரம்பிச்சுட்டீங்க...

  ReplyDelete
 12. கவிஞர் அனுக்கா, சூப்பரா கவிதை பாடி, ஒரே அசத்தலா இருக்கு.

  ReplyDelete
 13. @வெங்கட் நாகராஜண்ணா,
  :))))))
  ஹி ஹி ஹி

  @ஏஞ்சலின்,
  அப்பாடா தமிழ்ல எழுத ஆரம்பிச்சிட்டீங்களா... நல்லது :) ஒரியாக்காரர்ட்ட உங்க பின்னூட்டத்தை சொன்னேன்... எல்லா வீட்டுலயும் இப்படித்தானான்னு ஜுஜ்ஜூவை கேட்டுகிட்டு இருக்கார்.. :))

  @ஸ்ரீராம்ண்ணா..,
  ஜுஜ்ஜூக்கு வயசு மூணாயிடும் மே வந்தால். ஹி ஹி.. இந்தியாவில இருந்திருந்தா இந்த கஷ்டமே இல்லை..!! :)

  @வானதிக்கா,
  ஹெ ஹெ.. ரசிகர் மன்றம் வெக்கிறாப்புல ஏதும் ஐடியா இருந்த சொல்லுங்க... திறப்பு விழாக்கு தனி சலுகை... ஹெ ஹெ ஹெ... :)

  அனைவரின் வருகைக்கும், கருத்துக்கும், ஓட்டுக்களுக்கும் மிக நன்றி. :)

  ReplyDelete
 14. பெரும்பாடு தான் பழக்கம் ஆகும் வரை! :)

  ReplyDelete
 15. அழகிய குட்டி கவிதை! வாழ்த்துக்கள்!!

  ReplyDelete
 16. ஆஹா, குழந்தைகள் கவிதை எழுதவைத்தார்களா?
  சூப்பர்.

  ReplyDelete
 17. @கோவை2தில்லி,
  ஆமாங்க்கா, கஷ்டம்தேன்... ஆனா ஜாலியும் கூட... ஹெ ஹெ

  @மனோ அக்கா,
  நன்றி, வருகைக்கும், வாழ்த்துக்கும். :)

  @லக்‌ஷ்மிம்மா,
  குழந்தைங்க கவித என்னம்மா, சில சமயம் அடிக்கற லூட்டில காவியமே எழுதலாம்... ஹெ ஹெ ..

  அனைவரின் வருகைக்கும், மறுமொழிகளுக்கும் நன்றி.

  ReplyDelete
 18. அழகிய அந்த (இங்கிலீஷ்) குட்டி கவிதை நல்ல அழகு அனீஸ்! வாழ்த்துகள்!!

  ReplyDelete
 19. @அப்துல் காதர் பாய்,
  ஹி ஹி ஹி
  நன்றிங் பாய். :)

  ReplyDelete
 20. :)
  மகனோட வளர்ச்சியை ரசிச்சு எழுதியிருக்கீங்க.இன்னும் ஏகப்பட்ட விஷயம் பாக்கியிருக்குது தயாராயிருங்க :)

  ReplyDelete
 21. ஆண்டவா எங்களை அன்னுகிட்ட இருந்து காப்பாத்து

  ReplyDelete
 22. @சுந்தராக்கா,
  ஆஹா... இது எச்சரிக்கையா, வாழ்த்தா?? ஹி ஹி :)
  நன்றிக்கா.

  @கார்த்திண்ணா..,
  என்னண்ணா, எவ்வளவோ தாங்கிட்டீங்க, இதெல்லாம் ஒரு விஷயமா...ஹி ஹி... இந்த உற்சாக மறுமொழியை பார்த்துதான் இன்னொரு கவித கூட எழுதலாம்னு தோணுது.. ஹி ஹி
  நன்றிங்ண்ணா... :)

  ReplyDelete
 23. http://lksthoughts.blogspot.com/2011/02/blog-post_28.html


  உங்களைத் தொடர்பதிவுக்கு அழைத்துள்ளேன்

  ReplyDelete
 24. எல்லாம் ரெண்டாவது மருமகன் வந்த நேரம். கதை, கவிதை, தூள் கிளப்புங்க:-)

  ReplyDelete
 25. அன்னு, உண்மையிலயேயே சற்று வித்தியாசமான கவி வடித்திருக்கிறீங்க.

  என்னை “அடிக்கடி.... “ வாங்க அப்பிடீன்னு சொல்லிட்டீங்க... அடிக்க..டி க்க எப்பூடி வாறது?:).

  ReplyDelete
 26. ha ha ha...what a thought? what a thought? He is going to sue you for posting about his privacy matters when he grow up...avan vittaalum naan solli tharuven...:))))

  ReplyDelete
 27. சாட்சிகள் எல்லாம் பேசும்.//
  nallaththaan peesukinRana.

  ReplyDelete
 28. அருமையாக உள்ளது வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 29. தொடர்ப்பதிவிட அழைத்துள்ளேன்

  http://ramamoorthygopi.blogspot.com/2011/03/blog-post_06.html

  ReplyDelete
 30. குட்டி கவிதை சூப்பர். வாழ்த்துக்கள்.

  ReplyDelete

உங்கள் கருத்துக்கள்...