உண்மையை நோக்கி ஒரு பயணம்...
குறிப்பு:
மன்னிக்கவும். இந்த பதிவை நிறைய நாட்களுக்கு பிறகு பப்லிஷ் செய்யும் அவசரத்தில் சில தகவல்களை சொல்ல இயலாமல் போய் விட்டது. இந்த தொடரை இஸ்லாமிய அழைப்புப் பணியை செய்யும் ஒரு குழுவிற்காகவே செய்கிறேன். இந்த தொடரும், ஆங்கில மூலத்தில் இருந்து தமிழில் மாற்றம் செய்யப்படும் ஒரு தொடரே. இந்த குழுவானது, குறிப்பாக அழைப்புப் பணியை செய்பவர்களுக்காகவும், மற்றும் அனைத்து முஸ்லிம் / முஸ்லிமல்லாத சகோதர சகோதரிகளுக்காகவும் ஒரு வலைதளத்தை அமைத்துள்ளது. அதில் எண்ணற்ற கேள்வி பதில்களும், இறைவனை / இஸ்லாத்தை பற்றிய தகவல்களை மிக அழகாகவும் ஃப்ளாஷ் வீடியோ வடிவில் தருகின்றது. மேலும் விவரங்களுக்கு இந்த லின்க்கில் பார்க்கவும். --- www.dawah.invitetogod.com
மன்னிக்கவும். இந்த பதிவை நிறைய நாட்களுக்கு பிறகு பப்லிஷ் செய்யும் அவசரத்தில் சில தகவல்களை சொல்ல இயலாமல் போய் விட்டது. இந்த தொடரை இஸ்லாமிய அழைப்புப் பணியை செய்யும் ஒரு குழுவிற்காகவே செய்கிறேன். இந்த தொடரும், ஆங்கில மூலத்தில் இருந்து தமிழில் மாற்றம் செய்யப்படும் ஒரு தொடரே. இந்த குழுவானது, குறிப்பாக அழைப்புப் பணியை செய்பவர்களுக்காகவும், மற்றும் அனைத்து முஸ்லிம் / முஸ்லிமல்லாத சகோதர சகோதரிகளுக்காகவும் ஒரு வலைதளத்தை அமைத்துள்ளது. அதில் எண்ணற்ற கேள்வி பதில்களும், இறைவனை / இஸ்லாத்தை பற்றிய தகவல்களை மிக அழகாகவும் ஃப்ளாஷ் வீடியோ வடிவில் தருகின்றது. மேலும் விவரங்களுக்கு இந்த லின்க்கில் பார்க்கவும். --- www.dawah.invit
"யாருப்பா இன்னும் டிக்கட் வாங்கலை? வாங்காதவங்க எல்லாம் சீக்கிரம் வாங்குங்க பார்க்கலாம். பாட்டிம்மா... கூடைய அப்படி கொஞ்சம் தள்ளி வைங்களேன்..."
"ஒரு
ஜி.பி குடுங்க..."
"கணபதி
ரெண்டு"
"அங்கிள்
சி.எம்.ஸ் ஸ்கூல்
ரெண்டு"
"இந்தா
புடிங்க எல்லாம்... இன்னும் யாரு வாங்கல..டிக்கட் டிக்கட்..."
"எனக்கு
ஒரு டிக்கட்"
"எங்கே
சார் போகணும்?"
"தெ...தெ...தெரியாது"
"என்னது??,
எங்கே போகணும்ன்னாவது தெரியாதா? போக வேண்டிய அட்ரஸ்
எதுனாச்சும் வெச்சிருக்கீங்களா??"
"இ...இ...இல்லை. எங்கே
போகணும்...?"
"நாசமா
போச்சு... ஏன் சார், எங்கே
போகணும்னு என்னை கேட்டா? எங்கே
போகணும்னு தெரியாம பஸ்ல ஏறிட்டு
ஏன் சார் எங்க உயிரை
வாங்கறீங்க???
- - -
- - -
- - -
பஸ்ஸில்
உள்ள அத்தனை தலையும் ஒரே
தலையை பார்த்தபடி. ஒரு தலைக்கு பல
கதைகளை யோசித்தபடி....
என்ன?
இப்படி
ஒரு பயணத்தை நீங்கள் முன்ன
பின்ன பார்த்திருக்கீங்களா??
போகுமிடம்
தெரியாத அந்த நபரின் இடத்தில்
நீங்க இருந்திருக்கீங்களா??
அதெப்படி, போகற இடம் எதுன்னு
தெரியாம போகும்னு கேக்கறீங்களா??
இல்லை...அந்த நபர் எந்த நோயால்
தாக்குண்டு இருப்பார்னு நினைக்கறீங்களா? எந்த நோயுமே இல்லாவிட்டால்..............??
ஒரு சிறிய பஸ் பயணத்தில்
கூட நாம் போகுமிடம் தெரிந்து
கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது.
எதற்காக இந்தப் பயணம், எங்கே
போகிறோம், எப்படி, எவருடன், எதைக்கொண்டு
போகிறோம் என்பதை திட்டமிடுதல் அவசியமாகிறது.
ஆனால் அதை விட பன்மடங்கு
பெரிதான வாழ்க்கைப்பயணத்தை இப்படி திட்டமிடுகிறோமா?? எதற்காக
இந்த வாழ்க்கை, எங்கே போகிறது இந்தப்
பயணம், எந்த இலக்கை நோக்கி?
அதற்கான திட்டங்கள் எங்கே?? இதற்கெல்லாம் உங்களின்
பதில் "இல்லை / தெரியாது /யோசிக்கவில்லை"
என்றால் பஸ் பயணத்தில் நாம்
சந்தித்த அதே நபர் போல்தான்
உங்களின் நிலையும்.... இல்லையா??
நீங்கள்
மட்டுமல்ல. இந்த உலகில் எதற்காக
பிறந்தீர்கள், உங்கள் வாழ்க்கையின் தேவை
என்ன, உங்களை படைத்தது யார்?
எதற்காக? உங்களின் மரணத்திற்கு பின் என்ன நடக்கப்போகிறது?"--
என்ற இவ்வாறான கேள்விகளுக்கெல்லாம் பதிலில்லாத அனைவருமே அந்த நபரைப் போல்தான். பின்
அவருக்கும் நமக்கும் என்ன வித்தியாசம் இருக்கப்போகிறது??
உண்மைக்கு திரையிட்டு இன்னும் எவ்வளவு
நாட்கள்தான் நாம் அறியாமையிலேயே இருக்க போகிறோம்??
சகோ, காரணமில்லாமல் நீங்களோ, நானோ, நாம் நடமாடிக்கொண்டிருக்கும்
இந்த உலகமோ படைக்கப்படவில்லை. அதன் காரணம் என்ன, அவசியம் என்ன என்பதை நம் அனைவரைக்கும்
உணர்த்துவதே இந்த ஆக்கத்தின் நோக்கம். சமூகத்தில்
வாழும் அனைத்து மக்களின் நடுவிலும் அமைதியையும் நல்லிணக்கத்தையும் மெருகேற்ற இந்த கட்டுரை
உதவும் என்றே நம்புகின்றோம்.
(தொடரும்)
.
அருமையான பயணம் (தொடர்).... தொடரட்டும் இன்ஷா அல்லாஹ் :-)
ReplyDeleteசலாம் சகோ,
ReplyDeleteஅற்ப்புதமான தொடக்கம். மண்டையில் அடிக்கும் கேள்வியுடன் தொடங்கி உள்ளீர்கள். பகிர்விற்கு நன்றி.
@ஜெய்லானி பாய்,
ReplyDeleteமுதல் கமெண்டுக்கு மிக நன்றி, து'ஆ செய்ங்க. :)
//சார்வாகன் said:
1.இப்பதிவின் ஓட்டுப் பட்டை எங்கே?நான் மைனஸ் ஓட்டு போட வேண்டும்!
2.ஓட்டுப் பட்டை இல்லாமல் எப்படி இந்த பதிவுக்கு இவர்கள் ஓட்டு அளிக்க முடிந்தது?
Total =8 + votes how ????????????
3.முதலில் தமிழ்மணம் எதற்கு ஓட்டுப் பட்டை அளித்து உள்ளதோ,அதனை உண்மையாக் பின்பற்ற வழி தேடுங்கள்.பிறகு மதம் பின் பற்றலாம்.
comedy !!!!!!!!
//
@சார்வாகன்,
சில காரணங்களுக்காக உங்க கமெண்ட்டை எடிட் செய்ய வேண்டியதாயிடுச்சு. சாரி. என்னங்ண்ணா.... இதெல்லாம் ஒரு மேட்டரா... அடுத்த பதிவுல தமிழ்மணம் ஓட்டுப்பட்டை இல்லாம எப்படி ஓட்டு போடறதுன்னு சொல்லிடறேன். ஹி ஹி... ஆனா காமெடிய பத்தி நீங்க பேசாதீங்க பாஸ், பல பெயரில் ஒரே ஆள் இருப்பதும், பல விதங்களில் ஒரே பிடிவாதத்தை காட்டுவதும்தான், ஆனா ஒரு விதத்திலும் கூட இஸ்லாத்தை தோல்வியடைய வெக்காமல் போவதும்தான் காமெடி.... keep it up..... (not the fake - count)...ha ha haa....நீங் நடத்துங்கண்ண.... that's the spirit you see...
@சிராஜ் பாய்,
வ அலைக்கும் அஸ் ஸலாம் வ ரஹ்மத்துல்லாஹ்... உங்களின் வருகைக்கும் ஆதரவுக்கும் மிக மிக நன்றி பாய். :)
Assalamu alikum!
ReplyDeleteSago arumaiyana article! Sago neengal covai'yai sarthavara? :)
அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்
ReplyDeleteஇறையை நோக்கி ஒரு பயணம்..ஆக்கபூர்வமான அருமையான ஒரு தொடர்..இன்ஷா அல்லாஹ் தொடருங்கள் சகோ..:-))
அஸ்ஸலாமு அலைக்கும்,
ReplyDeleteஅதிரடியாக ஆரம்பித்து இருக்கின்றீர்கள். மாஷா அல்லாஹ் மிக்க சந்தோசம்..தொடருங்கள், இறைவன் துணை நிற்பான்..
வஸ்ஸலாம்,
ஸலாம்
ReplyDeleteஎதேச்சையான நிகழ்வுகளின் பின்புலத்தில் நடக்கும் சம்பவங்களை மேற்கோள்காட்டி அருமையா தொடங்கி இருக்கீங்க ....
இம்ம்
பார்க்கலாம்
மைனஸ் வோட் குத்த ஒரு கூட்டம் வெறியா அலையுது போல ஹாஹாஹாஹாஹாஹா
சகோதரர் சார்வாகன்,
ReplyDeleteஉங்கள் மீது அமைதி நிலவுவதாக...
1. //இப்பதிவின் ஓட்டுப் பட்டை எங்கே?//
முஸ்லிம் பதிவர்கள் அனைவரின் தளங்களிலும் வோட் பட்டை இருக்கின்றது என்றே நினைக்கின்றேன். இங்கு இல்லாததற்கான காரணத்தை நேற்று அவரே கூறியதை பார்த்தால் தெரியும் <>
2. //நான் மைனஸ் ஓட்டு போட வேண்டும்!//
மைனஸ் வோட்டிற்கான லிங்க்: http://tamilmanam.net/rpostrating.php?s=N&i=1154152
3. //ஓட்டுப் பட்டை இல்லாமல் எப்படி இந்த பதிவுக்கு இவர்கள் ஓட்டு அளிக்க முடிந்தது?//
பெரிய சூட்சமம் இல்லை. தமிழ்மனம் ஒவ்வொரு பதிவிற்கும் ஒரு எண் கொடுக்கும். அதை வைத்து போட்டு விடலாம்.
4. //முதலில் தமிழ்மணம் எதற்கு ஓட்டுப் பட்டை அளித்து உள்ளதோ,அதனை உண்மையாக் பின்பற்ற வழி தேடுங்கள்.பிறகு மதம் பின் பற்றலாம்//
முதலில் நீங்கள் முன்முடிவுகளை எடுப்பதை தவிர்த்து விட்டு, சற்றே யோசியுங்கள். பலமுறை சொல்லிவிட்டேன். இப்படியே தான் இருப்பேன் என்றால் ஒன்றும் சொல்லுவதற்கு இல்லை..
நன்றி,
உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அ
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
ReplyDeleteசகோ அன்னு
மாஷா அல்லாஹ்
எளிய உதாரணத்துடன் தெளிவான பதிவு.
சகோ@ @சார்வாகன்,
அதெப்படி., பெரும்பாலான முஸ்லிம் பதிவுகளில் சில பின்னூட்டத்தை போட்டு விட்டு.. அப்படியே நகர்ந்து என்று விடுகிறீர்கள்...அதுவும் சில நேரங்களில் வெவ்வேறு பெயர்களில்
முதலில் இந்நிலையே மாற்ற முயலுங்கள் சகோ..
பின்பு தெளிவாய் எதையும் விமர்சிக்கலாம்..
அஸ்ஸலாமு அலைக்கும்
ReplyDeleteசகோ உங்களின் தளத்திற்கு முதன்முதலில் இன்றுதான் வருகை தருகின்றேன்.திட்டமிடாத பயணம் அர்த்தமற்றது என்பதை அழகாக சொல்லியிருக்கின்றீர்கள்.மாஷா அல்லாஹ்.
எவன் தன்னைப்பற்றி சிந்திக்கிறானோ அவனுக்கு இறைவனின் மகிமை புரியும்.
உங்களில் எவர் செயல்களால் மிகவும் அழகானவர் என்பதைச் சோதிப்பதற்காக அவன், மரணத்தையும் வாழ்வையும் படைத்தான்
ReplyDeleteSurat Al-Baqarah (The Cow) - سورة البقرة
2:56
நல்ல சிந்தனைகளுடன் பயணம் செல்கிறது. நாமும் பயணிப்போம். நல்ல தொடர் அன்னு.. தொடரட்டும்.. வாழ்த்துகள்.
ReplyDeleteசகோதரி அன்னு!
ReplyDeleteஅருமையான தொடக்கம். நேரம் கிடைக்கும் போது இது போன்ற பதிவுகளை எழுதி வாருங்கள்.
மிக சுவாரஸ்யமான அதே நேரம் அருமையான பகிர்வு.தொடருங்கள்.
ReplyDelete//ஆனா ஒரு விதத்திலும் கூட இஸ்லாத்தை தோல்வியடைய வெக்காமல் போவதும்தான் காமெடி.... keep it up..... (not the fake - count)...ha ha haa....நீங் நடத்துங்கண்ண.... that's the spirit you see...// சரியான வரிகள்... புரிந்துகொள்ள வேண்டியங்க புரிந்துகொண்டு, இனியாவது திருந்தி தெளிந்து வாழப் பழகிக்கொள்ளட்டும்..! தங்களுடைய பதிவிற்கும், அரைவேக்காடுகளின் விமர்சனங்களுக்கு, அசராமல் பின்னூட்டமிடுவதற்கும் மிக்க நன்றி சகோகதரரே!
ReplyDeleteஓர் இனிய பயணத்தின் ஆரம்பத்தில் தங்களை சந்திக்க நேர்ந்ததில் மகிழ்கிறேன் . தொடர காத்திருக்கிறேன் .
ReplyDeleteஇலக்கை நோக்கிய எவருக்கும் சுற்றியுள்ளது கண்ணுக்கு தெரியாது....வாழ்கை என்பது ஒவ்வுறு நொடியும் நமக்கு தரும்
ReplyDeleteஆச்சர்யங்களையும், அதிசயங்களையும்,பாடங்களையும் anubavippatharkke....இலக்கை நோக்கியே ஓடிக்கொண்டிருந்தால் வாழ்தல் நின்று விடும்...
கூழன்கல்லை தேடியவர் வைரத்தை இழந்தது போல...
அனா உங்க பஸ் எடுத்துகாட்டு ரொம்ப மொக்கைய இருக்கு...sorry no offense meant
அஸ்ஸலாம் அலைக்கும்... சகோஸ்..
ReplyDeleteஇத் தொடர்பதிவின் அறிமுகம் நல்லாத்தான் இருக்கிறது ,
ஆக்கத்தின் நோக்கம் நாளைய பதிவுகளில் " நச்" என்று தெரியும் போல...
Intro Super.......
சலாம் அன்னு. நாம் பயணிக்கும் பாதை எந்த இலக்குமின்றி சென்றுக் கொண்டிருந்தால் நம் வாழ்வுக்கும் ஆறறிவில்லாத மற்ற உயிரினங்களின் வாழ்வுக்கும் வித்தியாசமின்றிதான் போகும். நல்ல தொடர், இன்ஷா அல்லாஹ் தொடருங்க அனிஷா!
ReplyDeleteசகோ ஆஸிக் நன்றி
ReplyDeleteஇத்னை சகோ அன்னுவே சொல்லி ரிஉக்கலாமே!.
எனினும் பதிவில் இணைக்கப்ப்டாத பட்சத்தில் ஓட்டளிக்க விரும்பவில்லை.
இது பஸ்ஸில் டிக்கட் எடுக்காமல் செல்வது போலெ ந கூறலாமா.அல்லது ஏற்கெனெவே பஸ் பாஸ் வைத்து இருப்பதாக் கூறலாம சும்மா தமாஷ் ஹா ஹா ஹா!!!!!பதிவுக்கு தொடர்பில் ஏதாவது கூறவேண்டும் அல்லவா!!!!!!
ஓட்டுப் பட்டை மறைப்பது என்பது சரியா தவறா என்பது அவரவர் சிந்தனைக்கே விட்டு விடுகிறேன்.நாம் மறைப்பது இல்லை!
&&&&&
சகோ குலாம்
உங்கள் ஒரு பதிவில் ஓரிறைக் கொள்கை வரலாற்று ரீதியாக முதன்மையானது என இரு வரலாற்று அறிஞ்ர்கள் கூறுவதாக் குறிப்பிட்டிர்கள்.அவர்கள் இருவருமே யூத இஅனவாதிகள் என சொல்லி அவர்கள் குறிப்பிட்டது எங்கே என கேட்டென்.என் கருத்தையே வெளியிடவில்லை.அப்புறம் எங்கே விவாதிப்பது.
வரலாறு,அறிவியல்ரீதியாக ஆதாரம் மீது மட்டுமே விவாதிப்போம்.ஆன்மீகம் என்பது உங்களின் தனிப்பட்ட உரிமை என்பது நம் கருத்து.விடை தெரியா கேள்விகளுக்கு வித்தக்னே காரணம் என்று நீங்கள் நம்புவதில் நம்க்கு ஆட்சேபனை ஒன்றும் இல்லை!!!!!!!.பிற மதம் சார்ந்தவர்களுக்கு உள்ள அனைத்து உரிமைகளும் இந்தியாவில் இஸ்லாமியர்களுக்கும் உண்டு!
கேள்விகளுக்கு விடை அளிக்க நாம் என்றுமே தயங்கியது இல்லை!.நன்றி!!
சகோதரர் சார்வாகன்,
ReplyDeleteஉங்கள் மீது அமைதி நிலவுவதாக...
1. //இத்னை சகோ அன்னுவே சொல்லி ரிஉக்கலாமே!.//
சகோ, விளக்கம் யார் சொன்னால் என்ன? உங்களுக்கு வேண்டியது விளக்கம் தானே. ஆதாரம் இணைத்திருந்தேன். அது ஏன் வரவில்லை என்று புரியவில்லை. மறுபடியும் தருகின்றேன். இது நேற்று அன்னு சிஸ்டர் கூறியது,**i was having trouble to add that tamilmanam vote wideget**
2. //எனினும் பதிவில் இணைக்கப்ப்டாத பட்சத்தில் ஓட்டளிக்க விரும்பவில்லை.//
உங்க விருப்பம் தான்.
3. //ஓட்டுப் பட்டை மறைப்பது என்பது சரியா தவறா என்பது அவரவர் சிந்தனைக்கே விட்டு விடுகிறேன்.நாம் மறைப்பது இல்லை!//
சகோ, என்ன இது. இதுக்கு தானே இவ்ளோ தூரம் சொல்லிக்கிட்டு இருக்கேன். இவங்க தளத்துல ரொம்ப நாளாவே வோட் பட்டை கிடையாது. இதுல மறைக்குரதுக்கு ஒண்ணுமில்ல. நீங்க சொல்லுரத பார்த்த இந்த பதிவுக்கு மட்டும் வோட் பட்டைய தூக்கி இருக்குற மாதிரி இருக்குது. எங்க எல்லாருடைய தளத்துளையும் வோட் பட்டை இருக்கின்றது. இவங்க தளத்துல இல்லாததுக்கு காரணம், அதனை இணைப்பதில் இவங்களுக்கு தொழில்நுட்ப ரீதியாக குழப்பம் இருக்கின்றது. அவ்ளோதான்.
முதல்ல, அடுத்தவங்க மேலே குற்றம் சுமத்துரதுக்கு முன்னாடி அவங்க கிட்ட விளக்கம் கேளுங்க. நீங்களா ஒரு முன்முடிவு எடுக்காதிங்க. இத தான் முன்பும் சொன்னேன். இப்பவும் சொல்றேன்.
4. //கேள்விகளுக்கு விடை அளிக்க நாம் என்றுமே தயங்கியது இல்லை!.நன்றி!!//
நல்ல தமாஷ்....சிரிக்குரத தவிர சொல்றதுக்கு வேறு ஒன்னும் இல்ல.
நன்றி....
comment எதுவாக இருந்தால் என்ன? பண்பாடு பிறழாமல் எழுதப்பட்டிருந்தால் வெளியிட்டு, மறுப்புரை எழுதலாமே?
ReplyDeleteஅது வெளியிடத் தகுதியற்றதென்றால், முற்றிலுமாய் அகற்றிவிடலாம். அதை விடுத்து.........
this comment has been removed என்ற குறிப்பை மட்டும் வெளியிடுவது நாகரிகமல்ல என்பது என் கருத்து. இது கருத்து வழங்கியவரை அவமானப் படுத்தவும் செய்யும்.
தங்களை மட்டும் முன்னிலைப் படுத்தி இதை நான் சொல்லவில்லை. அனைத்துப் பதிவர்களும் அறிய வேண்டும் என்பது என் விருப்பம்.
மிக ஆழமான, அழுத்தமான ஆய்வுக்குரிய தலைப்பில் பதிவிடத் தொடங்கியிருக்கிறீகள். நடுநிலை உணர்வுடன் சிந்தித்து எழுதுவீர்கள் என்று நம்புகிறேன்.
தொடர், பலரின் பாராட்டுக்கு உரியதாக அமைய என் மனப்பூர்வமான வாழ்த்துகள்.
நன்றி.
ஆஹா...
ReplyDeleteஅன்னு
கலக்குங்க...
பஸ் உதாரணம் செம! இலக்கில்லாத பயணம் அர்த்தமற்றது என்பதன் மூலமே மொத்த விடையும் கிடைத்துவிடுகிறது
தொடருங்க
அஸ்ஸலாமு அலைக்கும் அன்னு.
ReplyDeleteதங்களின் அழகிய நோக்கத்துடன் ஆரம்பத்திருக்கும் பதிவிற்க்காக என் வாழ்த்துக்களையும்,பாரட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.அதிலும் நீங்கள் ஆரம்பித்திருக்கும் விதம் மிகவும் அருமை.
இன்னும் உங்கள் எழுத்துக்கள் எல்லோரையும் சென்றடைய வாழ்த்துக்கள் சகோதரி.
அன்புடன்,
அப்சரா.
சகோ குலாம்'
ReplyDeleteநாம் நம் பெயரில் மட்டுமே பின்னூட்டம் இடுகிறோம்.வேறு பெயரில் இட வேண்டிய அவசியம் நம்க்கு இல்லை.நீங்க மத பிரச்சாரக் கம்பெணி நடத்திறீங்க நாம் மதம் எதிர் பிரசாரக் கம்பெனி நடத்துகிறோம்.இரண்டு பேரும் சேர்ந்து வித்தை காட்டினால்தான இருவருக்கும் பிசிநெஸ் நடக்கும்.
சகோ ஆஷிக்,
இங்கே கொஞ்சம் வித்தியாசம்
நீங்க பரிணாம் எதிர்ப்பு பிரசாரக் கம்பெனி,நான் பரிணாம் ஆதரவு பிரச்சாரக் கம்பெனி.கம்பெனியில் உயர்வு தாழ்வு கிடையாது.எப்பாடு பட்டாவது கம்பெனியை காத்து வளர்ப்பதுதான் முக்கியம்.
சகோ ஆஸிக் உங்களை புரிந்து கொள்ள முடிகிறது இவன் ஏன் நம் பதிவில் வந்து விவாதிக்காமல் சகோதரி பதிவில் வந்து விவாதிக்கிறான் என்ற கோபம்தானே.
நீங்கள் வேறு
நான் வேறு அல்ல
நானே நீங்கள்!
நீங்களே நான்
ஆகவே அமைதி உண்டாகட்டும்!
ப்ளஸ்ஸ்சும் மைனஸ்சும் இணைந்ததுதானெ வாழ்க்கை! ஏன் ப்ளஸ் மட்டுமே வேண்டுமென்கிறீர்கள்?.
உங்களுக்கு மட்டும் எப்போதும் எதிர்பதிவு மட்டுமே என அன்புடன் அழகிய வழியில் கூறுகிறோம்.
விவாதிக்க ஆசைப்பட்டால் ஆயிரம் கேள்விக்கும் அதிரடியாக் பதில் அளிக்கும் அண்ணன் சுவன்ப்பிரியனை விட்டு உங்களிடம் யார் வருவார்?
மற்றபடி சகோ அன்னு பதிவுக்கு நாம் வருவது இதுவே முதல் தடவை எ
ன்பதால் இப்பதிவுக்கு மட்டும் என கருதிவிட்டோம்!நான் கருதியது த்வறக்வும் இருக்க்லாம்.
ஆகவே அழகிய தம்ழில் ஐ ஏம் வெரி சாரி!!!!!!!
(சரியான)கேள்வி கேட்டால் நிச்சயம் பதில் உண்டு
அன்னைத் தமிழில்
ஸ்டார்ட் தி ஜர்னி! ஆல் தி பெஸ்ட்.அடுத்த பதிவில் சந்திப்போம்!
நன்றி
@s.jaffer khan bhai,
ReplyDeleteவ அலைக்கும் அஸ் ஸலாம் வ ரஹ்மத்துல்லாஹ்.
ஆம். நான் கோவையை சார்ந்தவள். வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் மிக நன்றி. :)
@ஆயிஷா சகோ,
வ அலைக்கும் அஸ் ஸலாம் வ ரஹ்மத்துல்லாஹ்.
வாழ்த்துக்களுக்கும் ஊக்கத்திற்கும் மிக நன்றி சகோ. தொடர்கிறேன் இன்ஷா அல்லாஹ். :)
@சகோ ஆஷிக்,
வ அலைக்கும் அஸ் ஸலாம் வ ரஹ்மத்துல்லாஹ்.
து'ஆவிற்கு மிக மிக நன்றி. :)
@ரப்பானி பாய்,
வ அலைக்கும் அஸ் ஸலாம் வ ரஹ்மத்துல்லாஹ்.
இது ஒன்றுதான் என் கவலை. நம் நோக்கம் ப்ளஸ் ஓட்டிலோ மைனஸ் ஓட்டிலோ இல்லை. திரட்டினாலும், திரட்டாவிட்டாலும், தேவைப்படுபவர்களுக்கு செய்தி போய் சேர வேண்டும் என்பதே என் நோக்கம். இன்ஷா அல்லாஹ், இதையே அனைவரும் நினைப்போம், பாதை மாறுவதை விட்டும் நோக்கத்தை காப்போம். வருகைக்கும் ஊக்கத்திற்கும் மிக மிக நன்றி.
@குலாம் தம்பீ,
வ அலைக்கும் அஸ் ஸலாம் வ ரஹ்மத்துல்லாஹ்.
பல வேலைகளின் நடுவிலும், நேரம் ஒதுக்கி படித்ததற்கும், பின்னூட்டத்திற்கும் மிக மிக நன்றி. :)
@முஹம்மது ஷஃபீ பாய்,
வ அலைக்கும் அஸ் ஸலாம் வ ரஹ்மத்துல்லாஹ்.
அடிக்கடி வாங்க. :) நானும் என் தளத்திற்கு அடிக்கடி வர து'ஆ செய்ங்க :)
நன்றி. :)
@நீடூர் அலி பாய்,
ReplyDeleteஅஸ் ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹ்,
சரியான ஆயத்து, பொருத்தமான நேரத்தில். இன்ஷா அல்லாஹ், அல்லாஹ் நம் எல்லோரின் செயல்களையும் அழகாக்கி வைப்பானாக. ஆமீன். நன்றி. :)
@ஸ்டார்ஜன் பாய்,
இன்ஷா அல்லாஹ் நானும் இந்த பயணத்தின் நல்-முடிவை எதிர்நோக்கிதான் உள்ளேன். வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி. :)
@சுவனப்பிரியன் பாய்,
கண்டிப்பாக இன்ஷா அல்லாஹ். நேரமின்மையால் உங்கள் பதிவுகளையும் முன்பு போல் பார்க்க இயலவில்லை. இன்ஷா அல்லாஹ் பொறுத்துக் கொள்ளவும். வருகைக்கும் ஊக்கத்திற்கும் மிக நன்றி. :)
@ஸாதிகாக்கா,
இன்ஷா அல்லாஹ் தொடர்கிறேன். உங்களின் ஆதரவுக்கு மிக மிக நன்றி. :)
@செவத்தப்பா சகோ,
தங்களின் பதில் சரியானது. மக்கள் தங்கள் முகமூடிகளை அகற்றி விட்டு புரிதலை தொடர்ந்தாலே போதும் இன்ஷா அல்லாஹ். வருகைக்கும், ஊக்கத்திற்கும் மிக நன்றி. :)
@சசிகலா சகோ,
இனியும் பயணியுங்கள். இறைவன் அனைவரும் நேர்வழி பெற நல்லருள் புரிவானாக. நன்றி. :)
@ராஜா சகோ,
ReplyDeleteஉங்களின் விமர்சனம் என்னை எள்ளளவும் தாக்கவில்லை. புரிதல் இல்லாமல் பேசுகிறீர்களோ என்றுதான் எண்ணுகிறேன்.
உங்களின் வலைப்பூவை பார்த்தபோது, I came to know that you are ready to share some info on a technical front... am I right? If so, what is the goal of your sharing? why do you want it to be passed on? If you are earning salary based on your technical knowledge, what is the earning upto? Are you spending as you wish or saving for the future of yourself or your near and dear ones? If so, why? As per your case, we need not worry about it right?
Brother, From since the age of school we are disciplined to get part in this life's race. But what Islam says is to be prepared from birth till death.
சொல்லப்போனால் மகிழ்ச்சியில்லாமல் குறிக்கோள் ஒன்றை மட்டுமே நோக்கி துறவறம் பூணவும் இஸ்லாம் சொல்லவில்லை. இந்த வாழ்க்கையை நலமுடன் வாழவும், அதேநேரம் மரணத்திற்கு பின்னான வாழ்க்கைக்கும் தயாராகவுமே சொல்கிறது. இஸ்லாத்தில் பண்டிகைகள் உள்ளது, பரிசுகள் தருவதற்கும், பிள்ளைகளுக்கு முத்தங்கள் இட்டு கொஞ்சுவதற்கும், அழகிய தூய ஆடைகள் அணிவதற்கும் கூட நற்கூலி இருக்கிறது.
நம் குழந்தைகளிடம் நாம் சொல்வதில்லையா? time to play, time to study என்று? அதே போல்தான் இறைவனும் மக்கள் சவாழ்வதற்கு தகுந்த ஒழுக்கங்களை விதித்துள்ளான். அதனுடன் பயணிக்கையில் வாழ்க்கையில் இன்னும் இன்னும் மகிழ்ச்சிதான் கூடும் சகோ. யோசியுங்கள்.
---- தேடிச் சோறு நிதம் தின்று - பல
சின்னஞ்சிறு கதைகள் பேசி
வாடித் துன்பமிக உழன்று - பிறர்
வாடப் பல செயல்கள் செய்து - நரை
கூடிக் கிழப்பருவம் யெய்தி - கொடுங்
கூற்றுக்கிரை எனப் பின் மாயும் - பல
வேடிக்கை மனிதரைப் போல நானும் - இங்கு
வீழ்வேன் என்று நினைத்தாயோ?
--- இதை நான் சொல்லவில்லை, மகாகவி பாரதியே பாடியது. நீங்கள் இன்பம் என நினைக்கும் வாழ்க்கையை துச்சமாக எண்ணி இதைப் பாடியுள்ளார். நிதானமாக யோசியுங்கள். இறைவன் நேர்வழியை அருள் புரிவானாக.
கருத்துக்கும், வருகைக்கும் நன்றி. இந்த தொடரை முழுதும் படித்து மீண்டும் உங்கள் கருத்தை பரிசீலனை செய்யவும். நன்றி :)
@நாஸர் பாய்,
ReplyDeleteவ அலைக்கும் அஸ் ஸலாம் வ ரஹ்மத்துல்லாஹ்,
ஊக்கத்திற்கு மிக நன்றி. ஆக்கத்தின் நோக்கத்தை ஏற்கனவே பதிவில் தெரிவித்துவிட்டேன் சகொ. இதைத் தாண்டி இந்த பதிவை வைத்து தொடர் பதிவுகள் யாரேனும் எழுதிக் கொண்டிருந்தால், அவற்றிற்கெல்லாம் பதில் சொல்ல, நேரம் உண்மையிலேயே இல்லை. :( இன்ஷா அல்லாஹ் இந்த ஒரு பதிவை நல்லபடியாக முடிப்பதையே யோசிப்பொம் :)
நன்றி. :)
@அஸ்மா,
வ அலைக்கும் அஸ் ஸலாம் வ ரஹ்மத்துல்லாஹ்,
என்னை மறந்தே விட்டீர்களோ என்றுதான் கேட்க வேண்டும் உங்களிடம். மெதுவாக கேட்டுக்கொள்கிறேன். :)
வருகைக்கும் ஊக்கத்திற்கும் மிக நன்றி :)
@முனைவர் பரமசிவம் சார்,
கமெண்ட் நீக்கியபின் வரும் வாசகம் கூகுள் தானியங்கி முறையில் தரும் வாசகம். அதை எப்படி அகற்றுவது என்று இதுவரை எனக்கு தெரியாது. விஷயம் தெரிந்தவர்களிடம் இதைப் பற்றி ஒரு பதிவே போட சொல்கிறேன். :)
வருகைக்கும், ஊக்கம் நிறைந்த கருத்துக்கும் மிக நன்றி சார். :)
@ஆமினா சகோ,
வ அலைக்கும் அஸ் ஸலாம் வ ரஹ்மத்துல்லாஹ்,
இப்படி ஒரே வரில என்னுடைய இம்மாம்பெரிய பதிவை தூக்கி சாப்பிட்டா என்ன அர்த்தம்?? :)) வாழ்த்துக்கும் வருகைக்கும் மிக நன்றி சகோ. :)
@அப்சரா சகோ,
வ அலைக்கும் அஸ் ஸலாம் வ ரஹ்மத்துல்லாஹ்,
உங்கள் கமெண்ட் என்னை இந்த நொடி வரை மலர்ச்சியுடன் வைத்துள்ளது. :) மிக மிக நன்றி. :)
நன்றி :)@சார்வாகன்,
ReplyDeleteஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.... உங்களுக்குன்னு தனி நேரம் ஒதுக்க வேண்டியிருக்கு. சரி விடுங்க. உங்க கிட்ட காரணத்தை சொல்லாமல் இல்லை, அதை அடுத்த பதிவா போடறேன்னுதான் சொன்னேன். நடுவில் ஆஷிக் சகோ chat ல கேட்டதால அங்கயே பதிலும் தந்துட்டேன். ஓட்டுப்பட்டைய மறைக்கவோ இல்லை தமிழில் உள்ள அத்தனை எழுத்திலும் ஒவ்வொரு பெயரை கண்டுபிடித்து ஒரு ஐடி ஓப்பன் செய்யவோ எல்லாம் எனக்கு நேரம் இருப்பதில்லை. இந்த டெம்பிளேட்டை அமைக்கும்போது தமிழ்மண ஓட்டுப்பட்டை சில பிரச்சினைகளை உண்டு பண்ணியது. அதனால அப்போதைக்கு அது வேண்டாமென்று விட்டு விட்டேன். சொல்லப்போனால் அதன் பின்பும் என்னுடைய பதிவுகள் அங்கே வருவது சில மாதங்களுக்கு முன்னர்தான் எனக்கே தெரியும். அதனால் ஓட்டுப்பட்டை இல்லைன்னா இணைக்க மாட்டோம், திரட்ட மாட்டோம்னு அவங்கதான் சொல்லனும். அப்படி அதை இணைத்தே ஆக வேண்டிய அவசியம் இருந்தால் கண்டிப்பா இணைத்துக்கொள்வேன், நீங்க ஈசியா மைனஸ் ஓட்டு போடறதுக்கு வசதியாகவெ வைப்பேன். சரியா??
அதெல்லாம் விடுங்க. பதிவுக்கும், யாருடைய கமெண்ட்டுக்கும் சம்பந்தமில்லாத ஒரு வாசகம், //பிற மதம் சார்ந்தவர்களுக்கு உள்ள அனைத்து உரிமைகளும் இந்தியாவில் இஸ்லாமியர்களுக்கும் உண்டு!// -- இது எதுக்கு?? இதைப் பற்றி யாராவது எழுதினாங்களா இங்கே அல்லது என் பதிவில் இருக்கா... எனக்கு தெரியலை. கொஞ்சம் தெளிவு செய்தால் நன்றாக இருக்கும். அங்கே எழுதியிருந்தாங்க, இங்கே எழுதியிருந்தாங்கன்னு மட்டும் பதில் தராதீங்க. இது forum இல்லை. comments section. ஒகேவா??
அடுத்து, உங்களுக்கு வேண்டுமானா இது பிஸினஸ் ஆக இருக்கலாம் சகோ. எங்களுக்கு இல்லை. நம்மூர் ஸ்கூல்ல எல்லாம் ஆண்டு விழா அல்லது ஸ்போர்ட்ஸ் டேக்கு ஒரு ரசீது புத்தகம் தருவாங்க. கட்டாயமா டொனேஷன் செய்யனும்னு. அந்த ரசீது புக்கை வைத்திருக்கும் பசங்களுக்கும் அது சுமைதான், பெற்றோர்களுக்கும் சுமைதான், அது யார் முன்னாடி நீட்டப்படுதோ அவங்களுக்கும் சுமைதான். அதுதான் பிஸினஸ். இறைவனை நெருங்க, நேர்வழி பெற அழைப்பவர்களின் பணி அப்படிப்பட்டதல்ல. எந்த நிலையிலும் கட்டாயப்படுத்தப்பட்டதல்ல. எல்லா நபியின் வாழ்க்கையிலும் அவர்களுக்கு மிகவும் நெருங்கியா யாராவது ஒருத்தர் இறைவனை மறுக்க தான் செய்திருக்காங்க. அதை வலுக்கட்டாயமாக மாற்றிட யாருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை. நபி இப்றாஹீமின் தந்தை, நபி முஹம்மதுவின் சிற்றப்பா(காலஞ்சென்ற பெற்றோர்களுமே!!), நபி நூஹ்-இன் மகன், நபி லூத்-இன் மனைவி... இப்படி எவ்வளவோ உதாரணம் உண்டு. பிசினசாக இருந்திருந்தால் அடிமை பிலாலை பணம் கொடுத்து மீட்கும்போது அபூ பக்கர் சித்தீக் என்னும் நபித்தோழர் என்ன சொன்னாரோ அதுவேதான் இங்கேயும் மறுமொழியாகும்.
என்னால் முடியும் என்று நினைத்து இரும்பை வளைத்தால் கூட சணல் போல வளையும் காட்சிகளை கண்டிருப்பீர்கள். அதேதான் இங்கும். (தெளிவான) மனமிருந்தால் (தூமையான இஸ்லாம்) மார்க்கம் உண்டு.
இல்லே.... நான் நம்பவே மாட்டேன். என் வழிதான் சரியானது என்று சொன்னால், உண்மைக்கும் பிரமைக்கும் நடுவில் உள்ள திரை விலகும் வரை பொறுத்திருங்கள் என்றுதான் சொல்ல முடியும்.
அது வரை வாழ்த்துக்கள்.
நன்றி :)
அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரி அன்னு
ReplyDeleteசாதாரண பயணத்திற்காக, அற்ப காரியங்களுக்காக நாம் படைக்கப்பட்டிருக்கின்றோம் என நம்பினால் வாழ்க்கையில் நம்மால் எதையும் சாதிக்க முடியாது. அதே நேரம் ஒரு இலக்கு கொண்ட சாதனை கொண்ட பயணத்திற்காக நாம் படைக்கப்பட்டவர்கள் என்ற நம்பிக்கை நம்மிடம் இருந்தால் தடைகளையும் எல்லைகளையும் கடந்து பயணித்து பெரிதாக சாதிக்க வேண்டும் என்ற உணர்வு ஏற்படும். குறுகிய வட்டத்திலிருந்து வெளியேறி பரந்த எல்லைகளையும், உயர்ந்த குறிக்கோள்களையும் நோக்கி நாம் பயணம் புறப்படுவோம்.
மனதை சிந்திக்க வைத்த பதிவு வாழ்த்துகள்
அஸ்ஸலாமு அலைக்கும் அன்னு
ReplyDeleteமிக அருமையான பயணம் தொடருங்கள்
அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்
ReplyDelete//"எனக்கு ஒரு டிக்கட்"
"எங்கே சார் போகணும்?"
"தெ...தெ...தெரியாது"
"என்னது??, எங்கே போகணும்ன்னாவது தெரியாதா? போக வேண்டிய அட்ரஸ் எதுனாச்சும் வெச்சிருக்கீங்களா??"
"இ...இ...இல்லை. எங்கே போகணும்...?"
"நாசமா போச்சு... ஏன் சார், எங்கே போகணும்னு என்னை கேட்டா? எங்கே போகணும்னு தெரியாம பஸ்ல ஏறிட்டு ஏன் சார் எங்க உயிரை வாங்கறீங்க???
- - -
- - -
- - -
பஸ்ஸில் உள்ள அத்தனை தலையும் ஒரே தலையை பார்த்தபடி. ஒரு தலைக்கு பல கதைகளை யோசித்தபடி....
என்ன?
இப்படி ஒரு பயணத்தை நீங்கள் முன்ன பின்ன பார்த்திருக்கீங்களா??
போகுமிடம் தெரியாத அந்த நபரின் இடத்தில் நீங்க இருந்திருக்கீங்களா??
அதெப்படி, போகற இடம் எதுன்னு தெரியாம போகும்னு கேக்கறீங்களா??
இல்லை...அந்த நபர் எந்த நோயால் தாக்குண்டு இருப்பார்னு நினைக்கறீங்களா? எந்த நோயுமே இல்லாவிட்டால்..............??
ஒரு சிறிய பஸ் பயணத்தில் கூட நாம் போகுமிடம் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது. எதற்காக இந்தப் பயணம், எங்கே போகிறோம், எப்படி, எவருடன், எதைக்கொண்டு போகிறோம் என்பதை திட்டமிடுதல் அவசியமாகிறது. ஆனால் அதை விட பன்மடங்கு பெரிதான வாழ்க்கைப்பயணத்தை இப்படி திட்டமிடுகிறோமா?? எதற்காக இந்த வாழ்க்கை, எங்கே போகிறது இந்தப் பயணம், எந்த இலக்கை நோக்கி? அதற்கான திட்டங்கள் எங்கே?? இதற்கெல்லாம் உங்களின் பதில் "இல்லை / தெரியாது /யோசிக்கவில்லை" என்றால் பஸ் பயணத்தில் நாம் சந்தித்த அதே நபர் போல்தான் உங்களின் நிலையும்.... இல்லையா??//
நெத்தியடி .......... :)