குழந்தைகள் பத்திரம்!! (பகுதி ஒன்று)
முந்தைய பதிவில் குழந்தைகளை வதை செய்யும் ஓர் செய்தியின் மேல் கருத்துக்களை கேட்டிருந்தேன். பலர் அனுதாபங்களையும், ஆத்திரத்தையும், இன்னும் யோசனைகளையும் கூறியிருந்தீர்கள். அதன் மேல் என்னுடைய எண்ணங்கள்.- ஒன்று மட்டும் நிச்சயமானது, சட்டத்தை மாற்றுவது என்பது சாமானியர்களால் இயலாது. இத்தகைய அவலங்களை வரலாறாக்க ஆட்சியாளர்கள் முடிவெடுத்தால் மட்டுமே. ஆனால், ஆந்திர கவர்னர், துறவி வேடம் தரித்த நரிகள், காப்பக காவலர்கள் எனும் பெயரில் குறுக்கு வழியில் சம்பாதிக்கும் நாய்கள் போன்றவை இன்னும் சர்வ சாதாரணமாய் ஜனங்களிடையே புழங்குவதை பார்த்தால் ஆட்சியாளர்கள் மேல் நம்பிக்கை என்ன, ஒரு சிந்தனை கூட எழுவதில்லை.
- இரண்டு, தண்டனை தருவதும் தூக்கிலிடுவதும் பெரிதல்ல, பாதிக்கப்பட்ட குழந்தைக்கு வாழ்வில் முன்னேற சொல்லித்தருவது எப்படி என்பது ஒரு பெரிய கேள்வி.
- மூன்று, நமக்கான பாடம், எப்படி நாம் குழந்தைகளுக்கு சொல்லித் தர போகிறோம், எப்படி அவர்களை, அவர்களின் பால்யப்பருவத்தை காப்பாற்ற போகிறோம் என்பது.
இன்ஷா அல்லாஹ், இதனடிப்படையில் ஒரு தொடரை என்னுடைய இன்னுமொரு வலைப்பூவில் எழுத நினைத்திருந்தாலும் தேவையை கருதி இங்கே எழுத முடிவு செய்துள்ளேன். நல்ல கட்டுரைகளை தமிழாக்கப்படுத்தி தரவே நினைத்துள்ளேன். எனவே ஏதேனும் கேள்வி இருந்தால், தங்களுக்கு தெரிந்த நல்லதொரு மனநல மருத்துவரிடம் கேளுங்கள். நான் மருத்துவரல்ல. தமிழில் ஏற்கனவே யாரேனும் இதைப்பற்றி கட்டுரை இட்டிருந்தால் தெரிவிக்கவும். அதையும் இணைக்க முயற்சி செய்யலாம்.
கட்டுரை விதிகள்
இந்த கட்டுரையை ஆன்லைனிலோ அல்லது பிரதியெடுத்தோ தங்களின் குடும்பத்தோடு படிக்க எண்ணினால், முதலில் தாங்கள் படியுங்கள். அதன்பின் அதை தங்களின் குடும்பத்தில் உள்ளவர்களோடு எப்படி அலசுவது என்பதை முடிவு செய்து பின் செயல்படுத்துங்கள். டீனேஜ் பருவ வயதினர் இருந்தால் இன்னும் கவனம் தேவை. எல்லோரிடமும் அதன் விளைவுகளை கண்காணிக்கவும் முயற்சித்து பாருங்கள். ஏனெனில் பல சமயங்களில் இத்தகையவர்கள், தங்கள் வீட்டிலுள்ளவர்களை பலியாடாக்குவதே உண்மை. ஒரு பயன் என்னவென்றால், இத்தகைய கட்டுரையை படிக்கும் சிறுவனோ / சிறுமியோ தாங்கள் அப்படி ஒரு சம்பவத்திற்கு ஆளாகியிருந்தால் மௌனம் கலைத்து உண்மையை சொல்ல வாய்ப்பிருக்கிறது. அப்பொழுது, அவர்களுக்கு நம்பிக்கையூட்டுங்கள்.
வாசகர்களுக்கான எச்சரிக்கை:
சில இடங்களில் தேவைக்கு அதிகமாக விளக்கப்படுவது போலிருக்கும், சில இடங்களில் தேவைப்படும்பொழுது நிழற்படங்களை உபயோகப்படுத்த யோசித்துள்ளேன். எனவே தாங்கள் எந்த இடத்திலிருந்து இந்த கட்டுரையை படிப்பீர்கள் என்றும் முடிவு செய்து கொள்ளுங்கள்.
கமெண்ட்ஸ்:
தயவு செய்து தங்களிடம் இந்த நோயோ / அதன் அறிகுறியோ இருந்தால் என்னிடத்தில் உதவி தேட முயலாதீர். நான் மருத்துவரல்ல. நீங்கள் கேட்க நினைக்கும் கேள்விக்கு கட்டுரையில் அடுத்த பாகங்களில் முடிவு உள்ளதென்றால், அந்த கேள்வி / கமெண்ட் மட்டுறுத்தப்படும். எனவே கேள்வி பப்லிஷ் ஆகாத பட்சத்தில் கோபம் / ஏமாற்றம் அடையாதீர்கள். தயவு செய்து புண்படுத்தும் நோக்கத்துடன் எந்த கமெண்ட்டும் போடாதீர்கள். நானும் ஓர் தாய், என்னைப்போல இருக்கும் மற்ற தாய்/தந்தைமார்களுக்கு உதவவே இந்த கட்டுரை. எனவே உற்சாகப்படுத்த இயலாவிட்டாலும் கீழ்த்தரப்படுத்திவிடாதீர்கள்.
மீண்டும் அவன் அவள் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தான். நிஷாவின் இதயம் ஒரு நிமிடம் நின்று விட்டு துடித்தது போலிருந்தது. அவளின் கால்கள் உறைய ஆரம்பித்தன. அவள் அவளை சுற்றியுள்ளவர்களை பார்த்தாள். அனைவரும் அவரவர் வேலையில் மூழ்கியிருந்தார்கள், யாரும் அவளை சட்டை செய்யவில்லை. தன்னை காப்பாற்ற வேறேதேனும் வழியிருக்கிறதா என்றெண்ணினாள். நிஷா எங்கேயேனும் ஒளிந்து கொள்ள விரும்பினாள். மறைந்துவிட நினைத்தாள். ஓடிப் போய்விடவும் எண்ணினாள். அவளுக்கு தெரியும் அவனின் வருகை எதற்கென. காமக்கண்ணோடு அவன் வீசும் அந்த பார்வையும் முகமும், அவள் மட்டுமே அறிவாள், மற்றெல்லாருக்கும் அது 'உறவினனின் அன்பாகவே' தெரிந்தது.
குடும்பத்தில் எல்லோரும் தத்தம் வேலைகளில் இருக்கும்போது அவன் நிஷாவை அறைக்குள் கொண்டு சென்று, நிஷா இதுவரை வாழ்வில் செய்ய அறியாத வேலைகளை செய்யச் சொல்வான். சில சமயம் அவனின் கைகள் அவளின் உடைகளுக்குள் அவளின் 'பிரைவேட்' பகுதிகளை தொடும். யாரும் அவளுக்கு இன்னும் 'பிரைவேட்' என்றால் என்னவென்று சொல்லவில்லை. ஆனால் அவளுக்கு தெரிந்தது, "இது தவறு; இச்செய்கை சரியில்லை" என்று. மற்ற சில வேளைகளில் அவளின் நடுங்கும் கைகளை அவனின் பேண்டுக்குள் விடுவான். அவளுக்கு அவ்விடத்தை விட்டு அகல தோன்றும், அவனிடம் போராட தோன்றும், ஆனால் 5 அல்லது 6 வயதேயான நிஷாவிற்கு மற்றவர்கள் என்ன சொல்வார்களோ என்ற பயமே மிஞ்சும். நிஷாவிற்கு தெரிந்தது ஒன்றே ஒன்றுதான், அவன் இவளிடம் செய்யும் எதுவும் சரியில்லை, தவறானவை. தப்பிக்க நினைக்கும் வேளைகளிலும், கத்த நினைக்கும் வேளைகளிலும் அவனிடம் பேண்டேஜும் பிளேடும் தயாராகவே இருந்தன, நிஷா ஏதேனும் ஒன்றை யாரிடமாவது சொன்னால் பிளேடால் கீறிவிடுவதாக அவன் பயமுறுத்தியிருந்தான்.
இது ஒரு தடவையுடன் முடியவில்லை. அவனின் தைரியம் நாளுக்கு நாள் கூடிக்கொண்டே போனதுதான் மிச்சம். அதனால் இத்தகைய சந்திப்புகளை அவன் அதிகமாக்கினான். சில சமயம் நிஷாவின் கைகள் கட்டப்படும், இல்லையென்றால் வாயில் பேண்டேஜ் அடைக்கப்படும்..ஒவ்வொரு தடவையும் புதிய விதத்தில் அவள் கையாளப்பட்டாள். வெறும் முத்தங்களிலிருந்து அணைப்பது வரை உயர்ந்தது, சில சமயங்களில் உடையுடனும், சில சமயங்களில் உடையில்லாமலும். அவனின் தேவைக்கு இணங்க வைத்தான், இன்னும் அவளையும் அவளே எப்படி 'வித்தியாசமாய்' உணர முடியும்(masturbate) என சொல்லிக்கொடுத்தான். 'கற்பழிப்பு' ஒன்று மட்டுமே அவளிடம் அவன் செய்யாதது. இன்னும் என்னேரமும் அவளை அவனால் அடைய முடிந்தது.
ஏன் அவனால் முடியாது? அவன் நிஷாவின் அம்மாவுடைய தங்கை மகன், அவளின் ஒன்று விட்ட சகோதரன்!!
இது தொடர்ச்சியான் ஒரு நாளில், நிஷா தன் தாயிடம் தஞ்சம் புக நினைத்தாள். எல்லாவற்றையும் கூறிவிட விழைந்தாள். தன்னை காக்க அவளைத் தவிர யாராலும் முடியாது என்று நம்பினாள்.
நடுங்கும் உடலுடனும் கண்களில் பயத்துடனும் கிச்சனில் நுழைந்தாள். வேலையில் மூழ்கியிருந்த தாயை கண்டாள், தாய்...தன்னை காப்பாற்றும் நபர், தன்னை பரிபாலிக்கும் உறவு...அவளின் நெஞ்சில் சாய்ந்து அழ தோன்றியது நிஷாவிற்கு. "அம்மா...", நிஷா கூற ஆரம்பித்தாள், கண்களில் நீர் வழிய, நெஞ்சும் உதடுகளும் விசும்ப, உடல் நடுங்க, தாயின் அரவணைப்பை நினைத்து ஏங்கி, ஆறுதலுக்காக ஏங்கி அனைத்தும் கூறி முடித்தாள், அவளுக்கு தெரிந்த மொழியில்.
அனைத்தும் ஒரே நொடியில் வீழ்ந்தது, தாயின் ,"பொய் சொல்லாதே" என்ற ஒற்றை வரியில். அவளின் நம்பிக்கையற்ற தொனியில், நிஷா வெயிலில் கருகிய சருகாய் உதிர்ந்தாள். அவள் தாயே அவளை கண்டதும் கற்பனை செய்பவளாக எண்ணும்பொழுது அவளுக்கு புகலிடம் ஏது? கற்பனை செய்யும் அளவிற்கு அவள் அதைப்பற்றி கற்கவில்லை என தாய்க்கு புரிய வைப்பதெப்படி?
இது கற்பனைக்குதிரையை ஓட விட்டதால் வந்த கதையல்ல. பாகிஸ்தானிலிருந்து வந்து இப்பொழுது அமெரிக்காவில் வாழும் ஒரு பெண்ணின் சுயம். இது அந்தப் பெண்ணோடு முடிந்த கதையல்ல....இன்னும் இன்னும் நடந்தேறிக் கொண்டிருக்கும் ஓர் அவலம். இங்கே சென்றீர்களானால் குழந்தைகளுக்கெதிராக உலகில் மூலை முடுக்கெல்லாம் நடந்து கொண்டிருக்கும் வதை புரியும். இனி அடுத்த பாகத்தில்,
1. யாரெல்லாம் குழந்தைவதை செய்பவர்கள்?
என்பதைப் பற்றி புரிந்து கொள்வோம், இன்ஷா அல்லாஹ்.
இந்த கட்டுரைகளின் மூலம்: அமெரிக்காவில், தன் மூன்று குழந்தைகளுடன் வசிக்கும் ஓர் முஸ்லிம் தாய். திருமண, தாய் மற்றும் குழந்தைகள் மன நல கவுன்சிலிங் செய்பவர். இது போன்ற கட்டுரைகளை பத்திரிக்கைகளிலும் எழுதி வருபவர்.
அனு வாழ்த்துக்கள். நல்லத் துவக்கம்...விழிப்புணர்வை பரப்புவோம்
ReplyDelete@கார்த்திண்ணா,
ReplyDeleteவருகைக்கும் ஊக்க மொழிகளுக்கும் மிக மிக நன்றிங்ணா. :)
நிறைய கேள்விபட்டிருக்கேன்,படிக்கும் பொழுது குலையே நடுங்குது.
ReplyDeleteஆமாம் ஆஸியாக்கா. தமிழாக்கப்படுத்தும்போது originalலில் உள்ள வலிய சொல்ல இயலாவிட்டாலும், சில நிமிடங்கள் மரத்துப் போய் உட்கார்ந்து விடுகிறேன்...என்ன படித்துக் கொண்டிருக்கிறேன், இதுவும் உண்மையாக இருக்குமா என்று!!....கண்ணீர் வற்றுவதே மிச்சம், இந்த பிஞ்சுகளுக்காக!!
ReplyDeleteநல்ல விழிப்புணர்வு ஊட்டும் பதிவு.வாழ்த்துக்கள் அன்னு!
ReplyDeleteமனதை படபடக்க வைக்கும் பதிவு.
ReplyDeleteஎந்த பெண்ணாலும் இதனை புரிந்துகொள்ள முடியும்.
குறிப்பாக ஒரு தாயால்.
அதை விட இது போல பாதிக்கப்பட்ட பெண்ணாக இருப்பின் சொல்லவே தேவையில்லை.
எனக்கு மிக நெருங்கிய தோழி இவ்வாறு பாதிக்கப்பட்டிருக்கிறாள்.
அந்த சம்பவத்தை மறக்க முடியாமல்
அவள் படும் மன வேதனை ஆறுதலுக்கடங்காதது.
இப்படி மனிதப் போர்வையில் திரியும் வெறி பிடித்த மிருகங்களை எவ்வளவு சித்திரவதை செய்து கொன்றாலும் தகும்.
நல்ல முயற்ச்சி சகோ... உங்களின் பணி தொடரட்டும்.. இந்த சைக்கோகளிடம் இருந்து குழந்தைகள் காக்க பட வேண்டும்..
ReplyDeleteநல்ல சமூக விழிப்புணர்வுக் கட்டுரை... நன்றி பகிர்ந்தமைக்கு...
ReplyDeletesuper post. keep going.
ReplyDeleteபல நல்ல பயனுள்ள படைப்புகள் மாற்று மொழியில் இருப்பதால் பலருக்கும் தெரியாமலேயே போய்விடுகிறது. அந்த வகையில் இப்படி ஒரு விழிப்புணர்வு விஷயத்தை அனைவருக்கும் சென்றடையும் வண்ணத்தில் தமிழ்ப்படுத்தி எழுதியிருப்பது, அரும்பணி..! தொடருங்கள் அன்னு...
ReplyDelete-
DREAMER
உங்களின் விழிப்புணர்வு தூண்டும், இந்த பதிவிற்கு நன்றி.
ReplyDeleteஇந்த மாதிரி விஷயம் எல்லாம், கேட்பதற்கே சங்கடமா இருக்குப்பா.
என்ன ஜென்மங்களோ?? ஹ்ம்ம்..
நல்ல விழிப்புணர்வு பதிவு.... விளக்கமாக பல விஷயங்களை குறித்து எழுதப்பட்டு இருக்கிறது. பகிர்வுக்கு நன்றி.
ReplyDeleteகட்டுரையின் மூலத்தை எழுதியவருக்கும் பாராட்டுக்கள்!
Thank you for visiting my blog. You have a nice blog. (Followed)
ReplyDeleteBest wishes!
அவசியமான இடுகை அன்னு...
ReplyDeleteபெத்தவங்க கவனமெடுத்துக்கவேண்டியது ரொம்பரொம்ப அவசியம்.
அருமையான , மிக, மிக தேவையான பதிவு , இந்த விசயத்தில் ரொம்ப விழிப்புணர்வு தேவை , முதலில் பெற்றோருக்குத்தான் வேண்டும் , குழந்தைகளின் மேல் எவ்வளவு எந்தந்த இடத்தில் கவனத்தை அதிகமாக செலுத்த வேண்டும் என்று ,.
ReplyDeleteநல்ல பதிவு
ReplyDelete@@@மங்குனி அமைசர் said...
ReplyDeleteஅருமையான , மிக, மிக தேவையான பதிவு , இந்த விசயத்தில் ரொம்ப விழிப்புணர்வு தேவை , முதலில் பெற்றோருக்குத்தான் வேண்டும் , குழந்தைகளின் மேல் எவ்வளவு எந்தந்த இடத்தில் கவனத்தை அதிகமாக செலுத்த வேண்டும் என்று ,.//
ரிப்பீட்
Dear sister,
ReplyDeleteAssalamu alaikum wrb,
Jazakallahu khair for the wonderful article.
unga thodarpadhivu azhaippukku nandri. insha Allah koodiya seekiram padhividuren.. :)
சிறந்தப்பதிவு அவசியமானதும்கூட மொழிப்பெயர்தவிதமும் நலம் சிறுகுழந்தைகளை(ஆண் அல்லது பெண்)தாயின் கவனத்தில் தான் இருக்கவேண்டும்.
ReplyDeleteபெற்றோர்களுக்கு தான் விழிப்புணர்வு அவசியம்.
குழந்தைகள் எந்த விசயத்தைப்பற்றி சொன்னாலும் அதை தட்டிக்கழிக்ககூடிய என்னம் பெற்றோர்களுக்கு வரக்கூடாது.
தீங்கிலிருந்து நமது குழந்தை செல்வங்களை காத்தருள்வானாக ஆமீன்.
@ஸாதிகாக்கா,
ReplyDeleteதங்களின், வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி.
@இந்திராக்கா,
ஆம். எல்லா பெண்ணும் தன் வாழ்வில் ஒரு தடவையாவது இப்படி ஒரு சம்பவத்திற்கு ஆளாகியிருப்பாள் என்றே தோணுகிறது, அதன் வீரியம் குறைந்தோ கூடியோ இருக்கலாம். ஆனால் மனத்தில்லிருந்து மரணம் வரையில் அதன் சுவடு அகலாது என்பதே உண்மை. நன்றி, தங்களின் வருகைக்கும், மறுமொழிக்கும்.
@ஸ்டீபன்ண்ணா,
தங்களின் வாழ்த்துக்கும், ஊக்குவிப்புக்கும் மிக்க நன்றி.
@சந்துருண்ணா,
நன்றி தங்களின் வருகைக்கும், மறுமொழிக்கும்.
@வானதி,
தேங்க்ஸ் பா. மீண்டும் வருக.
@ஹரீஷ்ண்ண,
ஆமாங்ணா, சில பல நல்ல கட்டுரைகள் நம் தமிழில் இல்லாதது ஒரு பெரிய இழப்பே. ஆனாலும் நம் தமிழில் இருக்கும் பல பழைய பழைய புத்தகங்கள் விகிபீடியாவை விட அற்புதமானவை என்று உங்களின் கதையிலும் தெரிந்து கொண்டுள்ளேன். நன்றி, வருகைக்கும், மறுமொழிக்கும்.
@ஆனந்திக்கா,
இதெல்லாம் தலைமுறை தலைமுறையாய் நாசுக்காய் நம் முன்னோர்கள் வைத்திருந்த கோட்பாடுகளை தளர்த்தி புதிய உலகம் புதிய உலகம் என்று கூவி, தன்னையும் தன்னை சார்ந்தவர்களையும் கேட்டின் பால் அழைத்துச் செல்லும் ஜென்மங்கள். எரிச்சலே மிஞ்சுகிறது.
@சித்ராக்கா,
தங்களின் வலையும் நல்ல எழுத்துக்களையும், கருத்துக்களையும் கொண்டது. என் வாலிக்கு முதல் த்டவை வந்ததற்காகவும், மறுமொழிக்கும் மிக்க நன்றி.
@சுந்தராக்கா,
முதல் தடவையாக வந்ததற்கும், பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றிப்பா.
@அமைச்சரே,
தங்களின் வாதம் உண்மையானது. பெற்றோரை நம்பியே ஒரு குழந்தை தன் காலடியை இந்த பூமியில் வைக்கிறது, அதன் வாழ்நாளை காக்க வேண்டியதே நம் கடமை. வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி.
@மனசாட்சியே நண்பன்,
தங்களின் முதல் வருகைக்கும், மறுமொழிக்கும் மிக்க நன்றி.
@ஜெய்லானி பாய்,
ரிப்பீட் நன்றிகள். :)
@நாஸியாக்கா,
வ அலைக்கும் அஸ் ஸலாம் (வரஹ்). எங்கே காணாம போயிட்டீங்க? சீக்கிரமே எழுதிருங்க.னீண்ட நாள் கழித்து வருகைக்கும், மறுமொழிக்கும் நன்றி.
@ராஜவம்சம் அண்ணா,
ஆமீன், ஆமீன், சும்ம ஆமீன், தங்களின் து'ஆவிற்கு. ஆம், குழந்தைகள் சொல்லும் எல்லா விஷயத்தையும் நம்ப வேண்டும். அதற்கு முதலில் நம்மேல் நம்பிக்கை ஏற்படுத்த வேண்டு,அதன்பின், அது பொய் சொல்கிறதா உண்மையா என்று ஆராய வேண்டியதும் நம் கையிலே. இரண்டிலும் எல்லை வேண்டும். தங்களின், வருகைக்கும், பதிலுக்கும், நன்றிங்ணா.
அன்பு தோழமைக்கு,
ReplyDeleteஇந்த பயனுள்ள அத்தியாவசியமான பதிவு உலகெங்கும் உள்ள தமிழர்களிடத்தில் கொண்டு செல்ல விரும்புகிறேன்.இந்த பதிவை சவூதி அரேபிய ரியாத்தில் உள்ள தஃபர்ரஜ் குழுமத்தில் வெளியிட விரும்புகிறேன். இதன் மூல வடிவத்தை நீங்கள் tafareg@yahoogroups.com அல்லது luckyshajahan@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க அன்புடன் கேட்டுக் கோள்கிறேன்.இந்த பதிவும் இதன் தொடர்ச்சியும் அவசியம் எல்லோருக்கும் போய்ச்சேர வேண்டும் என்பது என் விருப்பம்.
ஜஸாக்கல்லாஹ் ஹைரன்
தோழமையுடன்
லக்கி ஷாஜஹான்.
ரியாத் - சவூதி அரேபியா
தங்களுக்கு மெயில் அனுப்பியுள்ளேன் பாய். வருகைக்கும் ஊக்கத்திற்கும் மிக்க நன்றி :)
ReplyDeletewa iyyakum,
Annu
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..
ReplyDeleteஉண்மையில் அனைவரும் அறிய வேண்டிய விழிப்புணர்வு ஊட்ட கூடிய பதிவு..
எப்படித்தான் இது போல செய்ய மனம் வருதோ தெரியல..
இப்படி செய்பவர்கள் நிச்சயம் நல்ல மன நிலை உள்ளவர்களாக இருக்க முடியாது..
பிள்ளைகளின் ஒவ்வொரு சிறு மாற்றதையும் பெற்றோர் கவனிக்க வேண்டும்..
எந்த ஒரு விசயத்தையும் தயங்காமல் நம்மிடம் நம் பிள்ளைகள் சொல்லும் படி நாம் நடந்து கொள்ள வேண்டும்..
பகிர்ந்தமைக்கு நன்றி..