ரயில் பெட்டி - 002 (007 மாதிரி ஒரு ரேஞ்சுக்கு போகும்னுதேன் :)
தினம் தினம் சமைக்க ஒன்னு இந்தியாவுக்கு அரை மணி நேரம் ஃபோன் போட்டு குறிப்பு எழுதறது இல்லைன்னா எல்லார் ப்லாகையும் தோண்டி துருவி சமைக்கிறதுன்னு முக்காவாசிப்பேர் (சரிப்பா... நானும்தேன்.... அதுக்கு ஏன் கோவிச்சுக்கிறீங்???) இருக்கிற காலத்துல, வேலைக்கும் போயிட்டு, கிட்டத்தட்ட 4 ப்லாக் எழுதி, ஃபோட்டொ புடிச்சு போட்டு, அதுக்கு அலங்கரிக்க, பரபரப்பான நேரத்திலும் குறிப்பு எழுதி வைக்கன்னு மெனக்கெட்ட, மெனக்கெடும் எல்லோருக்கும் என் வயிறார்ந்த (ஹி ஹி ஹி அனுபவம்!!) வாழ்த்துக்கள். அதிலும், ஆல் இந்தியா லெவலில் ஒரிஜினலாய் குறிப்பு குடுத்து முதல் இரண்டு பரிசையும் பெற்றிருக்கும் என் அன்பார்ந்த ஜலீலாக்காவுக்கு வாழ்த்தோ வாழ்த்து.... அண்மையில் அதிகம் சந்தோஷப்பட்ட விஷயம் இதுதான்க்கா.... பக்கத்தில இருந்திருந்தால் அதற்கும் ஒரு பார்ட்டி குடுங்கன்னு கதவை தட்டியிருக்கலாம்... ஹ்ம்ம்... கொடுப்பினை இல்லை :(
அதே நேரம் நீண்ண்ண்ண்ண்ட நெடுங்காலமாக இல்லாவிட்டாலும் சிறிது காலமாகவே நட்பில் ஒரு தனியிடத்தை ஏற்படுத்திக்கொண்டிருக்கும் ஹுஸைனம்மா அக்காவை.................யக்க்க்க்க்க்க்க்காஆஆஆஆ.... இவ்ளோ நாள் பழகியும் ஒரு சமையல் குறிப்பு கூட குடுக்காமல் ஏமாற்றியதால் மிக மிக வன்மையாக கண்டிக்கிறேன்.
(ஏனுங்.... ஷார்ஜாவிலிருந்து கரண்டி வீசுனா அமெரிக்கா வரை வருமோ???)
--------------------------------------
காலைல 5 மணிக்கு (ஹி ஹி, அதோட ஒன்றரை மணி நேரம் சேர்த்துக்குங்க...) எழுந்து வேலை செய்ய ஆரம்பிச்சாலும், இரவு 11 மணிக்குள் தூங்க முடிவதில்லை.... கார்ப்பரேட் வேலை பளு, வீட்டு வேலை பளு, என்னை தூக்கிக்கோ என மாலை வந்ததும் கால்கள் பின்னேயே சுற்றும் இரண்டு சுட்டிகளின் பளு என எல்லாம் சேர்ந்து பதிவுலகம் பக்கம் வர விடாமலெ செய்கின்றன. இப்பவும். மதிய லஞ்சில் உட்கார்ந்து வேஃபில் இரண்டு சாப்பிட்டுக் கொண்டே எழுதுகின்றேன். அதுவுமன்றி அண்மைக்காலமாக புதிது புதிதாய் உடல்நலனில் குறைகளின் பேரை சொல்லி கிட்டத்தட்ட தினம் தினம் ஊசி போட வேண்டிய நிலைக்கு போய் இப்பொழுதுதான் மீண்டு வந்து கொண்டுள்ளேன் அதுவும் தாமத பதிவுக்கு காரணம். (ஸ்ஸ்ஸ்ஸ்.... சோடா எங்கப்பா???)
---------------------------------------------
உடல் சோர்வு, அதிக தூக்கம், எதிலும் பிடிப்பில்லாமை (இப்படி ஒரு வார்த்தை இருக்கா??) அடிக்கடி காய்ச்சல், உடல் தளர்வு எல்லாம் இருந்தால், உங்கள் வீட்டு பெண்ணை முதலில் தைராய்டு / விடமின் டெஸ்ட் செய்து கொள்ளுங்கள். தைராய்டு குறையை கண்டுக்காம விட்டா குழந்தைப்பேறின்மை முதற்கொண்டு, கோமா ஸ்டேஜில் போட்டுத் தள்ளும் நிலை வரை வரலாம். நோய் நாடி, நோய் முதல் நாடி, அது தணிக்க Google நாடாம டாக்டரை நாடுங்க சகோக்களே...
#காலம் கடந்த ஞானம் (அமெரிக்காவுல எங்கயுமே போதி மரம் ஒன்னு காணமே....)
------------------------------
இந்தியர்களின் வீட்டை குறி வைத்து, திருடுவதைப் பற்றி ஹுஸைனம்மாக்கா எழுதியிருந்தாங்க. உண்மைதான். இங்கே எஃப்.பி.ஐ யிலிருந்து கசிந்த ஒரு உண்மை என்னவெனில், இந்த அலங்காரங்கள் எதுவுமில்லாவிட்டாலும், 22 கேரட் இருப்பதை கண்டுபிடிக்கும் கையடக்க ரேடார்கள் இங்கு கிடைப்பதும் ஒரு காரணம். என்ன செய்ய, தொழில்நுட்பத்தை சரியாக உபயோகிக்க ஒரு க்ரூப்பாவது இருக்கோணுமில்லை. (இது நான் இதுவரை விசாரிக்காத விஷயமே.... யாருக்காவது விஷயம் தெரிஞ்சா சொல்லுங்க....)
---------------------------------------
அங்கங்க கரண்ட் கட் பத்தி தீவிரமா புயல் பறக்க பதிவுகள் இருந்தாலும், அப்பிடி எழுதறவங்க வீட்டுல கரண்ட் இருந்தா இரவு 11 மணிக்கு உட்கார்ந்து முகப்புத்தகத்துல (மரண மொக்கை!!!) கவித எழுதறாங்கப்பா.... அப்ப என்ன அர்த்தம்???
#ஆமி, சரிதானே??? ...........ஹி ஹி ..... :))
--------------------------------
ஜுஜ்ஜூ சில சமயம் கூப்பிட்டால் கூட திரும்பாம ஏதேனும் விளையாண்டு கொண்டிருந்தால், அவனிடம் கோபமாய் ஏன்டா திரும்பலை என்பேன். அவனும், சாரி அம்மீ.... எதுக்கு கூப்பிட்டீங்க என்பான், எனக்கிருக்கும் கோபத்தில், ம்ம்ம்ம்.... பருப்பில உப்பிலைன்னு சொன்னேன் என்பேன்..... அதன் எஃபெக்ட்டாக இப்பவெல்லாம் அவன் நான் கூப்பிடும்போதெல்லாம் பருப்புக்கு உப்பில்லையா என கேட்கிறான்......
#That doesn't mean I am an Angry Bird................!!!!!!!!!!!!!
--------------------------------------------------
அண்மையில் வாழ்வின் இரண்டாவது தடவையாய் பாலகுமாரனின் நாவல் ஒன்று படித்தேன். அதில் மனிதர் அப்பட்டமாய் (ஆண்/பெண் பற்றிய) உண்மைகளை போட்டுடைக்கிறார். சில சமயம் சர்கஸ்டிக்காக தோன்றினாலும், பல சமயம் ஆமாம் போட வைக்கிறது. அதில் ஒன்று.
//பெண்ணொருத்திக்கு...தன் துக்கம் பற்றி, முகவாயில் கை வைத்து வாசல் பக்கம் நின்று பக்கத்து வீட்டுப் பெண் விசாரிப்புக்கு நொந்து கொண்டு பதில் சொல்வதே பெரிய விடுதலை. அப்படி யாரும் கேட்கவில்லையெனில் இதைக் கேட்கக்கூட நாதியத்துப் போயிட்டேனே என தானே புலம்பிக்கொள்வது சிறிய விடுதலை.//
ஹி ஹி ஹி.... எப்படி சார்??????
------------------------------------------------
அடுத்த பதிவு எப்ப்போன்னு எல்லாரும் அழுவக்கூடாது.... ஆமா.... அதெல்லாம் தானா வர்ற விஷயம்... என்ன நான் சொல்றது :))
:))
.
சலாம் சகோதரி!
ReplyDeleteரொம்ப நாளாக பிளாக் பக்கமே காணோமே! வேலைப் பளு, உடல் நிலையையும் காரணமாக சொல்லியிருந்தீர்கள். இறைவன் அனைத்தையும் சரியாக்கி வைப்பானாக! உடல் நிலை சரியானவுடன் பதிவுலக பக்கமும் அவ்வப்போது வாருங்கள்.
வ அலைக்கும் அஸ் ஸலாம் பாய்,
ReplyDeleteஇன்ஷா அல்லாஹ் முடியும்போது கண்டிப்பாய் வருகிறேன். வருகைக்கும், து'ஆ விற்கும் மிக்க மகிழ்ச்சி, மிக்க நன்றி பாய். :)
//இவ்ளோ நாள் பழகியும் ஒரு சமையல் குறிப்பு கூட குடுக்காமல் ஏமாற்றியதால்//
ReplyDeleteஇவ்ளோ நம்பிக்கையா என் மேல? ஆஆ.. ஆஆ.. கண்ணீர் பெருகுதே...
//ஷார்ஜாவிலிருந்து கரண்டி வீசுனா அமெரிக்கா வரை வருமோ//
இந்தா இப்பவே ஒரு ரெஸிப்பியை எழுதி, ராக்கட்டுல வச்சு அனுப்புறேன்!! (ஹா.. ஹா.. எதிரி அழிந்தாள்... ஹா.. ஹா... )
//22 கேரட் இருப்பதை கண்டுபிடிக்கும் கையடக்க ரேடார்கள்//
அவ்வ்வ்.. ஏன் இப்பிடி புளியைக் கரைக்கிறீங்க..
//மதிய லஞ்சில் உட்கார்ந்து வேஃபில் இரண்டு சாப்பிட்டுக் கொண்டே//
ஏன் இம்புட்டுக் கஷ்டப்பட்டு வேஃபில் சாப்பிடணும்? அதுக்குஞ்சேத்து ரெண்டு ஊசி போட்டுக்கிறது? :-(
//பருப்புக்கு உப்பில்லையா என கேட்கிறான்......//
பாத்து.. ஒருநா பருப்புல ஒரு டப்பா உப்பையும் கொட்டி வைக்கப் போறான்... #அனுபவம்!!
உங்க உடல்நலனை முதலில் கவனித்துக் கொள்ளுங்கள். பதிவு அருமையா இருக்கு....
ReplyDelete//இந்தா இப்பவே ஒரு ரெஸிப்பியை எழுதி, ராக்கட்டுல வச்சு அனுப்புறேன்!! (ஹா.. ஹா.. எதிரி அழிந்தாள்... ஹா.. ஹா... )//
ReplyDeleteஆத்தா..... நான் இந்த வெளாட்டுக்கே வரலே.... விட்டுடுங்க :) (உண்மையிலேயே அப்படி ஒரு குறிப்புக்கு வேஃபில் பரவாயில்லே.... ஹி ஹி ஹி )
//ஏன் இம்புட்டுக் கஷ்டப்பட்டு வேஃபில் சாப்பிடணும்? அதுக்குஞ்சேத்து ரெண்டு ஊசி போட்டுக்கிறது? :-(//
ஹி ஹி ஹி..... நம்ம லெவலுக்கு எது ஈஸியா செய்ய முடியுமோ அதுதானேக்கா முடியும்?? :) ஹ்ம்ம்... நீங்க சொன்னதும் கவனத்துல வெக்கிறேன்... :)
//பாத்து.. ஒருநா பருப்புல ஒரு டப்பா உப்பையும் கொட்டி வைக்கப் போறான்... #அனுபவம்!!//
நல்லவேளை நீங்க என் பக்கத்து வீட்டில இல்லை :)))) கிச்சன்ல நான் இல்லாதப்பதான் என்ன வேணா செய்ங்கன்னு மூணு ஆண்களுக்கும் அனுமதி. நான் இருக்கறப்ப கிடையாது. :) நான் இல்லாதப்ப எல்லா பொருளையும் சேஃப்ட்டி லாக்கர்ல வெச்சுட்டுதான் வர்றது...... ## குடும்ப இஸ்திரி!!!!!
ஆதி,
ReplyDeleteவருகைக்கும் கரிசனத்திற்கும் மிக மிக நன்றி. மாத்திரைகளையும், மருந்துகளையும் பார்த்து பார்த்து போரடிச்சு போயிதான் இப்ப கொஞ்சம் வலைப்பக்கம் வரலாம்னு வந்தேன்ப்பா.... :)) கண்டிப்பா உங்க பக்கமும் வந்துட்டு போறேன்.... அண்ணன், குழந்தை எல்லாம் நலமா??? :)
மொதல்ல, ஜலீலா அக்காவுக்கு வாழ்த்துக்கள்...:)
ReplyDelete//இவ்ளோ நாள் பழகியும் ஒரு சமையல் குறிப்பு கூட குடுக்காமல் ஏமாற்றியதால்//
யார பாத்து என்ன கேள்வி... பிச்சு புடுவேன் பிச்சு... அப்படின்னு அக்கா சொல்ல சொன்னாங்'க்கா...:))
//ஏனுங்.... ஷார்ஜாவிலிருந்து கரண்டி வீசுனா அமெரிக்கா வரை வருமோ???)//
அது தெரியாதுங்... ஆனா அவங்களுக்கு எல்லா ஊர்லயும் ரசிகர் மன்றம் இருக்குதுன்னு கேள்விங்... சும்மா சொன்னனுங்... மெரட்டல் எல்லாம் இல்லீங்'க்கா...;))
//தினம் ஊசி போட வேண்டிய நிலைக்கு போய்//
டேக் கேர் அன்னு...ஹெல்த் இஸ் வெல்த்...
//நோய் நாடி, நோய் முதல் நாடி, அது தணிக்க Google நாடாம டாக்டரை நாடுங்க சகோக்களே//
ஹா ஹா ஹா...இதுக்கு தான் ஒரியாகார அண்ணா சொன்னா கேக்கனுங்கரதுங்...;)
//அதன் எஃபெக்ட்டாக இப்பவெல்லாம் அவன் நான் கூப்பிடும்போதெல்லாம் பருப்புக்கு உப்பில்லையா என கேட்கிறான்//
அண்ணன்கிட்ட வாங்கற பல்ப் பத்தலீங்கலாங்... ஹி ஹி ஹி... சூப்பர் ஜூனியர்...:)
//இதைக் கேட்கக்கூட நாதியத்துப் போயிட்டேனே என தானே புலம்பிக்கொள்வது சிறிய விடுதலை//
நமக்கெல்லாம் ப்ளாக் மாதிரி சொல்ல வரீங்கலாங்'க்கா...:)))