புதுசு கண்ணா புதுசு...... :)

Monday, April 16, 2012 Anisha Yunus 8 Comments

ஓக்கே.... யதேச்சையா ஒரு சண்டே லீவில் (ஐ மீன், வீட்டு வேலையும் கம்மியாய் / இல்லாமல்) கிடைத்த ஒரு மணி நேரத்தை உருப்படியா செலவழித்து (ஓக்கே... ஓக்கே.... ஒரியாக்காரர் பாக்கட்டையும் கொஞ்சம் செலவு செய்துதான்... :)) செய்த ஒரு சிறிய ப்ராஜெக்ட்டை உங்களுக்கும் சொல்லி தர்றேன்... :))
இதுதான் ப்ராஜெக்ட். ரொம்ப நாளா அந்த கருப்பு சேர் என்னை டென்ஷன் செய்து கொண்டிருந்தது. சிகாகோவில் மொத்த செட்டையும் வித்த பின் ஒரே ஒரு சேர் மட்டும் விடாது கருப்பு மாதிரி என் பின்னாடியே இருந்தது. அதை ஒப்புக்கு சப்பாணி போல அப்பப்ப உபயோகப்படுத்திக் கொண்டாலும் ஒரு டென்ஷன் பொருளாகவேதான் எனக்கு படும். சரி, அந்த எபிசோடு அப்படியே ஒடிகிட்டு இருந்தது. இன்னொரு எபிசோடு, ஜுஜ்ஜுவிற்கு ஒரு சேரும் டேபிளும் வாங்கிப் போடவேண்டும் என்பது. காலையிலும் மாலையிலும் குர்’ஆன் ஓதிப்பார்க்கும்போதும், மற்ற பாடங்களை படிக்கையிலும் நன்றாக இருக்குமே என்று. குழந்தைகளுக்கு என்று விற்கப்படும் டேபிள் சேர் நம்ம பட்ஜெட்டுக்கு கட்டுப்படியாவதில்லை.

இன்னொரு எபிசோடும் இருக்கு இதில... ஹி ஹி ஹி..கொஞ்சம் அட்ஜஸ்ட் செய்து படிங்க.


பக்கத்துல இருக்கும் குட் வில் கடையில் (ஒருவர் வேண்டாமென்று நினைக்கும் பொருளை அங்கே டொனேட் செய்யலாம். அந்த பொருளை இன்னொருவர் தேவைப்பட்டால் வாங்கிக் கொள்ளலாம். விற்ற பணத்தைக் கொண்டு ஏழை மக்களுக்கு உதவி செய்வார்கள்.) அந்த கடையில் ஒரு நல்ல டேபிள் 10 டாலருக்கு கிடைத்தது. உடனே வாங்கிக் கொண்டு வந்து வெச்சுட்டேன். அதன் பின் டேபிள் சேருக்கான ஐடியாவும் கிடைச்சிருச்சு. அதை செயல் படுத்தியதில், முதல் பாகம் இப்ப.... அடுத்த பாகம் கொஞ்சம் கழிச்சு.... :))

ஓக்கே... இப்ப எப்படி இதுல வேலை செய்வதுன்னு பார்க்கலாம்.

தேவைப்படுவது:
  • நேரம் : 30 நிமிடங்கள் - 1 மணி நேரம் வரை.
  • பிடித்தமான துணி,தேவைப்படும் அளவு.(ஹி ஹி ஹி)
  • துணி வெட்டும் கத்திரிக்கோல்
  • ஸ்டேப்ளர் கன் (பலமான ஸ்டேப்ளர் பின்னடிக்க உதவும் கருவி)
  • ஸ்க்ரூ டிரைவர்

செய்முறை:


முதல்ல உங்களுக்கு பிடிச்ச துணி ஒரு யார்டு வாங்கிக்குங்க. கனமான துணியாக இருப்பது நல்லது. வெல்வெட் மாதிரி துணி அல்லது சில்க், கம்பளி வித துணி எல்லாம் கொஞ்சம் அனுபவம் வந்த பின் வாங்கலாம். இப்ப காட்டன் துணி, தடிமனா வாங்கிக்குங்க. நான் வாங்கிய துணி மெலிதாக இருப்பது போலிருந்ததால், உள்ளே வைக்க அதே அளவு வெள்ளைத்துணியும் வாங்கிக் கொண்டேன்.
 ஸ்க்ரூ டிரைவர் வெச்சு சேரின் உட்காரும் பாகத்தின் பின்னால் உள்ள ஸ்க்ரூ எல்லாம் கழற்றி பத்திரமா ஒரு பேக்கட்டில் போட்டு வைங்க.

அதன் பின் முன் பக்கம் உள்ள உட்காரும் பேட் தனியாக வந்து விடும். அதில் ஒரு சமயம் ஸ்டேப்ளரோ அல்லது பசையோ போட்டு ஒட்டப்பட்டிருக்கும். ஸ்டேப்ளர் மட்டும் என்றால் வேலை கம்மி. அழகாக எல்லா ஸ்டேப்ளரும் எடுத்துவிடலாம்.
சேரின் கீழ் பகுதி.
ஸ்டேப்ளர் கன்
ஒவ்வொரு ஸ்டேப்ளராக பார்த்து அகற்றவும். அகற்றியவற்றை பத்திரமாக குப்பையில் போடவும்.
வளைவாய் உள்ள பகுதிகளில் கவனமாக பார்த்தெடுக்கவும்.
ஸ்டேப்ளர் இல்லாம பசையா இருந்தால் கஷ்டம்தான். கிழிச்சோ/ பிரிச்சோ எடுக்க வேண்டி வரும். உள்ளிருக்கும் கார்டு போர்டுக்கு பிரச்சினை வராம கழட்டணும்.
எல்லா ஸ்டேப்ளரும் கழட்டிய பின், பேடிங், மேற்துணி, கார்டு போர்ட்
எல்லா ஸ்டேப்ளரும் கழட்டிய பின் மெதுவாக கார்டு போர்டை நகரத்திப்பாருங்க. அதன் மேலிருக்கும் பேடிங் / ஃபோம் பஞ்சு நல்லா இருந்ததுன்னா பிரச்சினை இல்லை. இல்லை, கிழிஞ்சு போய், இத்துப் போயிருந்தால் அதையும் புதிதாக வாங்க வேண்டி இருக்கும். என்னுடையதில் அது போதுமென்று பட்டதால் அதையே உபயோகிச்சாச்சு. 
உட்காரும் பகுதியையும், புதிய துணியையும் வைத்து அளவு பாருங்கள்.
புது கத்திரிக்கோலை பேக்கெஜிங்கில் இருந்து பிரிப்பது எப்படின்னு இன்னொரு பதிவுல சொல்றேன் :)

அளவு சரி பார்த்து வெட்டுங்க.
வெட்டி எடுத்த துணியை சரியாக பொருந்தி வருவது போல் வைத்து, இறுக்கமாக இழுத்து ஸ்டேப்ளர் போட ஆரம்பிக்கவும். 
ஏற்கனவே சேரின் மீதிருந்த துணி தேவைப்பட்டால் வைங்க. இல்லையென்றால், ஃபோம் பஞ்சு, கார்டுபோர்டு மட்டும் போதும்.
வளைவுகளில் நன்றாக இழுத்து ஸ்டேப்ளர் அடிக்கவும். குண்டூசி அல்லது டேப் கொண்டு துணியை நகர விடாமல் செய்து விட்டும் ஸ்டேப்ளர் அடிக்கலாம்.

துணி வழுக்குவது போல இருந்தாலோ, ஸ்டேப்ளர் கன் இல்லையென்றாலோ, எந்த பொருளிலும் ஒட்டும் நல்ல பசை அல்லது டக்ட் டேப் உபயோகியுங்கள்.
தேவைப்படும் அகலம் போதும். இது சாம்பிள் இமேஜ்.

கவனமாக ஸ்டேப்ளர் எல்லாம் அடங்கியுள்ளதா மேல் பக்கம் நீட்டிக்கொண்டுள்ளதா எனப்பார்க்கவும். சுத்தியல் கொண்டு நன்கு மழுங்கச் செய்யவும்.
கீழ்ப் பாகம் ரெடி :)
இனி சேரின் மேல் பாகத்தில், தலை வைக்கும் இடத்தை கொஞ்சம் கவனிப்போம்.
இந்த பாகத்துல பிரச்சினை என்னன்னா கொஞ்சம் வளைஞ்சு இருப்பது. ஸ்டேப்ளரும் சுத்தியலும் அடிச்சா பிஞ்சு வந்துடும் போல லேசான கார்டுபோர்டு. அதனால இதை அதிகம் சதாய்க்க வேண்டாம் என்று முடிவு. :)
இதையும் தலைகீழாய் வைத்து, தேவையான அளவு துணி வெட்டி எடுக்கவும். பின், டக்ட் டேப் போட்டு இறுக்கி வைக்கவும்.
வளைவுகளில் மட்டுமே ஸ்டேப்ளர் அடித்தேன். மற்ற இடங்களில் டக்ட் டேப் போட்டு துணியை நகர்  விடாமல் செய்ததும், மீண்டும் நீள வாக்கில் டேப் போட்டே ஒட்டியாயிற்று.
இதோ மேல் பாகமும் ரெடி.
 கீழ் பாகத்திலும் மேல் பாகத்திலும் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், ஸ்டேப்ளர் அடிக்கும்போதோ, பசை ஒட்டும்போதோ, ஒட்டப்படும் துணி, ஏற்கனவே இருக்கும் ஸ்க்ரூவின் ஓட்டைகளை மறைக்காதவாறு பார்த்துக் கொள்ளவேண்டும். துணியில் ஓட்டை போட்டு மேலே ஸ்க்ரூ வருமாறு செய்வது துணிக்கு நல்லதல்ல. எனவே ஓட்டைகளை மறைத்து விடாமல் கவனம் தேவை.
இனி, மொட்டையாய் இருக்கும் சேரை சிறிது துடைத்து சுத்தம் செய்து, கீழ்/மேல் பாகங்களை செட் செய்ய வேண்டியாதுதான்.
நேரம் அதிகம் இருந்தால், அல்லது சேரின் கலரே உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் ஸ்ப்ரே பெயிண்டிங் செய்து அதையும் மாற்றலாம். எனக்கு கருப்பே பிடித்திருந்ததாலும், அதில் கீறல் எதுவும் இல்லாமல் இருந்ததாலும் அதை மாற்றவில்லை. அப்படியே விட்டுவிட்டேன்.  கீழ் பாகத்தையும் மேல் பாகத்தையும் கவனமாக ஸ்க்ரூ போட்டு இறுக்கி வைக்கவும். ஸ்டேப்ளர் எதுவும் குத்துகிறதா என்று கை வைத்து பார்க்கவும். தேவைப்பட்டால் சுத்தியில் இன்னும் கொஞம் அழுத்தி விடவும்.
புது சேர் ரெடி :)
என்ன அழகு.... எத்தனை அழகு.... நானே பாடிக்கிறேன்... :)
ஜுஜ்ஜூவிற்கு சந்தோஷம் தாங்க முடியவில்லை... சிரிக்கும் வாயை மறைத்து ஒரு போஸ் :)
இனி இந்த டேபிளில் வேலை உள்ளது. அது இரண்டாவது பாகம். :)
யெஸ்...!! பத்தே டாலர்தான். இதையும் விலையுயர்ந்ததாய் மாற்றுவோம்... காத்திருங்கள். :)



.

8 comments:

  1. அன்னு நேரம் இல்ல இல்ல்லனு
    இவ்ளோ பெரிய கை வேலைய முடிச்சி இருக்கீங்க

    ம்ம் அடுத்து எத்தனை ஆர்டர் வரப்போகுதோ தெரியல

    ReplyDelete
  2. அஸ் ஸலாமு அலைக்கும் ஜலீலாக்கா....

    ஹ ஹ ஹா... அப்படி இல்லை அக்கா. சனிக்கிழமை பாட்லக், கெட் டுகெதர் அப்படின்னு நிறைய சாப்பிட்டும் ஆச்சு, ஞாயிற்றுக்கிழமைக்கும் சேர்த்து ஷாப்பிங்கும் ஆயிடுச்சு. அதான் இன்னிக்கு முடிச்சே ஆகணும்னு முடிச்சுட்டேன்... டேபிளையும் முடிச்சிருக்கலாம். அதுக்குள்ள தூங்கிட்டிருந்த சின்னவர் எழுந்துட்டார்....

    ஆர்டர்தானே... செய்து தந்துட்டா போச்சு.... கைவசம் ஒரு தொழில் இருக்கணுமில்ல... :))

    தேன்க்ஸ்க்கா... முதல் கமெண்ட்டுக்கும் வாழ்த்துக்கும் :))

    ReplyDelete
  3. ஸ்டேப்ளர் கன், துணி, கத்தரி, etc. etc. - இதுக்கெல்லாம் ஆன செலவுல புது சேரே வாங்கிருக்கலாமோ? சரி, சரி, இதெல்லாம் முதலீடு; அதுக்கெல்லாம் கணக்கு பாக்கக் கூடாது, இல்லியா? :-))))))))

    ReplyDelete
  4. சலாம் அன்னு. அசத்திட்டீங்க போங்க!! பழைய சேரா இருந்தாலும் பரவாயில்ல, அப்படியே மடக்கி இங்கே பார்சல் பண்ணிடுங்க. உங்க ஞாபகமா வச்சுக்குறேன் ;))

    ReplyDelete
  5. அழகான சேரா மாத்திட்டீங்களே..... அருமையான கைவேலைப்பாடு.

    ReplyDelete
  6. அருமையான வேலை...

    புது கத்திரிக்கோலை பேக்கெஜிங்கில் இருந்து பிரிப்பது எப்படின்னு இன்னொரு பதிவுல சொல்றேன் :)
    //

    இதுக்கு வெயிட் பண்றேன். :P

    ReplyDelete
  7. அழகான கைவேலையில் ஒரு உருப்படியான பொருளை செய்ததுடன் கத்துக்கொடுக்கவும் செய்துட்டீங்க. நன்றி

    ReplyDelete
  8. //ஸ்டேப்ளர் கன், துணி, கத்தரி, etc. etc. - இதுக்கெல்லாம் ஆன செலவுல புது சேரே வாங்கிருக்கலாமோ? சரி, சரி, இதெல்லாம் முதலீடு; அதுக்கெல்லாம் கணக்கு பாக்கக் கூடாது, இல்லியா? :-))))))))//
    @ஹுஸைனம்மா அக்கா,
    இதுக்கு ஒரியாகாரரே தேவலை போல (எல்லா வேலையும் முடிந்த பின், ஒரு 5 டாலருக்கு போகுமான்னு கேட்கிறார்....அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.....) முதலீடுக்கெல்லாம் கணக்கு பார்த்தா சரியா வருமாக்கா?? அப்படியே அதையெல்லாம் சேர்த்தாலும் முப்பது டாலரில் வாங்கியாகிவிட்டது. ஆனால் 30 டாலரில் கண்டிப்பாக ஒரு தீம் கொண்ட டேபிள் சேர் கிடைக்காது :))


    @அஸ்மாக்கா,
    பார்சல்தானே? COD போட்டு அனுப்பிடவா???? ஹி ஹி ஹி :)
    நீங்க ஒரு க்ரிஸ்டல் செட் அனுப்புங்க.... நான் ஒரு சேர், போனஸா ஒரு டேபிள் அனுப்பிடறேன்....சரியாக்கா?? :))

    @ஆதி,
    வாழ்த்துக்களுக்கு மிக மிக நன்றி :)

    @பிரபு,
    கண்டிப்பா.... முக்கியமான பார்ட்டே அதான்.... :))

    @லக்‌ஷ்மிம்மா,
    நமக்கு தெரிஞ்ச விஷயத்தை சொல்றப்ப அதுல ஒரு சதவிகிதமாவது யாருக்கேனும் உபயோகப்படும் இல்லியா? அதான் :)) நன்றி :)

    ReplyDelete

உங்கள் கருத்துக்கள்...