புதிய வானம்...... புதிய பூமி.... ①

Tuesday, September 11, 2012 Anisha Yunus 8 Comments


ராக்கி(ஸாரி நீங்க நினைக்கிற ராக்கிக் கயிறு இல்லை!!) மவுண்டெயின் நேஷனல் பார்க், அல்லது செந்தமிழில் ( லெட் மீ ட்ரை:)) ) கூறினால், ‘பாறைகள் நிறைந்ததொரு மலையின் (மீதுள்ள) தேசிய பூங்கா’ அல்லது ‘வட அமெரிக்க மலைத்தொடர் - தேசிய பூங்கா’ எப்படி வேணுமின்னாலும் சொல்லிக்குங்க..... 



“அழகோ அழகு....” அப்படின்னு பாடத் தோணும் ஒவ்வொரு அடியிலும்.... அந்தளவுக்கு மலைகளின் அரசியோ இல்லையோ.... அழகின் அரசி....“சும்மா அதிருதில்ல” டைப் அழகு. 

சும்மா அதிருதில்ல :)))

எப்பவும் போல ஜுஜ்ஜூ Vs அஜ்ஜூ வுடன் கொஞ்சிக் குலாவும் ஒரு வெள்ளிக்கிழமை காலைல ஒரியாக்காரர் என்னிடம் கேட்கிறார், "ஹனீஃபா பாய் குடும்பம் கொலராடோ போகுதாமே, நாம போலியா???” (என்னவோ வெத்தல பாக்கு வெச்சு அவங்க அழைக்காததுதாங் குறைங்கிறமாதிரி... ஹி ஹி ஹி..). நானும் பதில் சொல்லறேன், ”ஏங்க ஜீ, அவங்கதான் அவங்க சச்சா வூடு டென்வர்ல இருக்குன்னு போறாங்க.... நாம எப்படி அவங்க உறவுக்காரங்க வீட்டுக்கு போறது???” என்னுடைய பதில் முடியறதுக்கு முன்னாடி ஒரியாக்காரர், அந்த பாய்க்கு ஃபோன் போட்டு கன்ஃபேர்மே செஞ்சாசு!! கூடவே... “நீயும் அவங்க வீட்டுல சொல்லிடு, நாமளும் வாறோமின்னு”...???????

அதுக்கப்புறம் என்ன.... யாதும் ஊரே யாவரும் கேளிர்னு அவங்க உறவுக்காரங்க வீட்டுக்கு அவங்க புறப்பட, நாங்களும் தொத்திகிட்டோம்.... எங்களோட கூட்டு சேர இன்னொரு ஃபேமிலியையும் கூப்பிட்டு ”வாங்கப்பா போலாம்... அதான் எண்டெர்பிரைஸ்ல வண்டி போட்டாச்சில்ல, ஒரு டைலெனால் போட்டுட்டு ரெடியாகுங்க”ன்னு தலைவலின்னு முடியாம இருந்த அவங்களையும் இணைச்சுகிட்டோம்... (யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்..... வாழ்க வாழ்க :)) ).


“ஏன்ப்பா... லாங் டிஸ்டன்ஸு, ஷார்ட் ட்ரிப்பு, பச்சைக்குழந்தைங்களை வெச்சுட்டு... யோசிச்சுப்பாருங்க”ன்னு ரிப்பீட்டிங்கா சொல்லி சொல்லியே இன்னொரு ஃபேமிலி எங்க பயணத்தை கேன்சல் செய்ய பார்த்துச்சு.... ஹஹ்.... கோயமுத்தூரா கொக்கான்னு சொல்லி, அதை அப்படியே காத்தாட விட்டுட்டு போயிட்டோம்.... ஹி ஹி ஹி....

புதிய வானம்...... புதிய பூமி....


8 மணி நேரம் பயணம் செய்தால் வரும் நகரம், வெள்ளி காலைல போயி ஞாயிறு மாலை திரும்பணும்னு முடிவு, மூணு குடும்பத்திலயுமே ரெண்டு வயசுக்கு குறைஞ்ச குழந்தைங்க உண்டு, அம்மாக்கள் அனைவருமே சிசேரியன் செய்து இன்னும் ரெண்டு வருஷம் கூட நிரம்பாதவர்கள். (சாதனைப் பெண்மணிகள் :)) )

ஹெ ஹெ... எது எப்படியோ...அரை மணி நேரத்துல முடிவு செஞ்சு மதியத்துக்கு ரெடி ஆயாச்சு. எல்லாரும் புறப்படலாம்னு எங்களுக்காக வெயிட்டிங். உங்ககிட்டதான் முன்னாடியே சொல்லியிருக்கேனே... நாங்க லேட் லதீஃப் ஃபேமிலின்னு.... அதை காப்பாத்த வேண்டி ஒரியாக்காரர் எல்லாரும் இங்க வெயிட்டிங்ல இருக்க... அவர் இன்னொரு ஃபேர்வெல் பார்ட்டிக்கு போயிட்டு 4 மணிக்கு புறப்படலாம்னு சொன்னவர் 7 மணிக்குதான் வர்றார். குலப்பெருமையை காத்தவரை நொந்துக்கலாமான்னு நானே மனசை தேத்திகிட்டு கார்சீட்டோட குழந்தைகளையும் ஏத்தி ஜீப்புல போட்டாச்சு.
தலை இடிச்சிரக்கூடாதுன்னு ‘தல’ கவனமா எட்டிப் பார்க்கிறார் :))


கார் ஓட்ட ஆரம்பிக்கறதுக்கு முந்திய காலத்திலிருந்தே சில வாகனங்கள் மேல ஒரு பெரிய கண் இருந்தது. Beetles, Range Rover, Mustang, Jeep, Town and country  அப்படின்னு பட்டியல் நீளும். லைசென்ஸ் வாங்கி தினமும் ஓட்டற வண்டி டயோட்டா கொரொலாதான்... இருந்தாலும் இந்த மாதிரி வாடகை வண்டி ஓட்டறப்பதானே மத்த வண்டிகளை ஒரு கை பார்க்க முடியும்... அதனால இந்தப் பயணத்தின் ‘பிஸ்மில்லாஹ்’ -- என் கையில் ஜீப். Jeep Liberty Model.

ஆனா ஒன்னுங்க.... ஜீப் மேல இருந்த ஆர்வம், கைல வண்டி வந்ததும், ஊத்திகிச்சு. வண்டிதான் ரஃப் அண்ட் டஃப்ஃபே ஒழிய, மற்றபடி அதிக வசதிகள் இல்லாதது. முக்கியமா சார்ஜிங் செய்ய ஒரே ஒரு ப்ளக் பாயிண்ட்தான்.... அதுவும் வேலை செய்யலை. பிரச்சினை என்னன்னா... அந்த பிளக் பாயிண்ட்டை நம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்பித்தேன் ஜி.பி.எஸ்ஸும், ஜி.பி.எஸ்ஸை நம்பி நாங்களும்.... ஜி.பி.எஸ் மட்டுமல்ல, மொபைலையும் அதை உபயோகித்துதான் சார்ஜ் செய்யணும். சொல்லி வச்ச மாதிரி... கொஞ்ச நேரம் ஆனதும் மொபைலும் டெட். ஆனால் முக்கால்வாசி தூரமும் ஒரே ரோடுதான் என்பதால் பிரச்சினை இல்லாமல் போக முடிந்தது. 


கொலராடோ பக்கம் வர வர அதிகாலை ஆயிடுச்சு. ஒரியாக்காரருக்கு தூக்கம் முழிக்கவே வராது. ஒரு மணி வரை முழிப்பதே பெரிய விஷயம். அதனால ஒரு மணிக்கு அப்புறம் நான் கொஞ்சம் வண்டி ஓட்டினேன். அதன் பின் மறுபடியும் கொஞ்சம் தூங்கி எழுந்து அவர் ஓட்டினார். அவர் ஓட்டுறப்ப நான் தூங்கினாலும் அப்பப்ப முழிச்சு அவர் தூங்கறாரா ஓட்டுராறான்னு பார்த்துக்குவேன்... நான் ஓட்டினால் குழந்தைகளோட குழந்தையா அவரும் நிம்மதியா தூங்கிட்டிருப்பார்.... ஒரு பேச்சுக்கு கூட எனக்கு தூக்கம் வருதா, இல்லை ஸ்டெடியா இருக்கேனான்னு யோசிக்கக் கூடமாட்டார்...(இங்கே எந்த ஸ்மைலி போடறது??)

இப்படியே எல்லாரும் ஒவ்வொரு பேக்கிரவுண்டை வெச்சுகிட்டு கொலராடோ போனோம். ஊருக்கு பக்கத்துல போகிறப்ப எங்க ரெண்டு பேர் மொபைலுமே அவுட்டு. மத்த ரெண்டு குடும்பமும் கண்ணுக்கெட்டிய தூரம் வரை காணோம். என்ன செய்யறதுன்னு அங்கங்க நிப்பாட்டி ஃபோன் சார்ஜ் போட்டு ஆளுங்க எங்கே இருக்காங்கன்னு தேடி கண்டுபிடிச்சு போயி சேர்ந்தோம்.... எங்களை காணோமின்னு போஸ்டர் அடிக்காத குறையா எல்லாரும் தேடிகிட்டு வேற இருந்தாங்க.... அப்புறம் என்ன.... இதோ குளிச்சிட்டு ரெடியாயிடலாம்னு சொல்லிட்டு போன ஆளுங்க எல்லாம் ‘மோஸ்ட் வாண்டெட்’ ஆக மாறிட்டாங்க....

பெண்களெல்லாம் மட்டும் தூக்கம் இல்லைன்னாலும் ரெடியாகி, குழந்தைகளை ரெடியாக்கி, கட்டு சோறுக்கு பதிலா சிப்ஸும் ஜூஸுமா வெயிட் செய்யறோம்....செய்யறோம்.... ஆளுங்க வர்ற மாதிரியே காணோம்...

பொறவு மதியானம் ரெண்டு மணிக்குதான் வர்றாங்க....“ஹெ ஹெ ஹெ... நீங்கெல்லாம் தூங்கலையா... நாங்க அசந்து தூங்கிட்டோம்னு....”

அப்புறமா நல்லா ஒரு வெட்டு வெட்டிட்டுதான் பயணத்தையே தொடங்கினோம்.... பிரச்சினை என்னன்னா.... நகரத்துக்கும், டூரிஸ்ட் ஸ்பாட்ஸ்க்கும் கிட்டத்தட்ட 4, 5 மணி நேரமாவது ஆகுது....ஒன் வே மட்டும்...!!!

அதிலும் லீவுன்னா கேட்கவே வேண்டாம். நம்மூர்ல முதல் அமைச்சர் ஹெலிகாப்டர்ல போறப்ப நம்மளை கீழே நிறுத்தி வெப்பாங்களே... அந்த மாதிரி வெயிட் பண்ணனும். கார் பானெட்லயே ஆம்லெட் போட்டு சாப்பிடும் அளவுக்கு சூடு வேற. :( அப்படியும் வெயிட் செய்து எப்படியோ போய் சேர்ந்தோம். முதல்ல நாங்க போனது, Bears Lake. 
ஆனா ஒரு கரடி கூட கண்ணுல மாட்டவே இல்லை :( No bear lake :)
மலையின் மேல ஏரியான்னு ஆச்சரியப்படாதீங்க... இது கொஞ்சம் சிறிய ஏரிதான்...இதை விடப் பெரிதும், சிறியதுமான ஏரிகளும் உண்டு. ஆனால் அதை நின்னு / நடந்து பார்க்கும் நேரம் இல்லை.... அதனால் சில படங்கள் மட்டும் எடுத்துட்டு நடையை கட்டியாச்சு.

Alpine Tundra 12,500 ft elevation :)
அதன்பின் போனது ‘துந்த்ரா’....

கீழே பூமியும் மேலே தொட்டு விடும் தூரத்தில் மேகங்களும், 90 டிகிர் வெயில்ல காய்ச்சி எடுக்கும் நகரத்திலிருந்து குளிரில் உறைய வைக்கும் மலை உச்சி.... புதிய வானம்.... புதிய பூமி.... எங்கும் அழகு மழை பொழிகிறது..... (பாடாதது மட்டும்தேன் பாக்கி :))



(இருங்க இன்னும் பார்க்கலாம்... :)
.

8 comments:

  1. ஹா..ஹா..ஹா...

    அன்னு! ஆரம்பம் முதல் கடைசி வரைக்கும் சிரிச்சுட்டே படிச்சேன்.. செமையா இருக்கு ஆங்காங்கே தெளித்திருக்கும் உங்க நகைச்சுவை நடை... செம கலக்கல்!

    நாங்களும் போயிட்டு வந்துட்டோம் உங்களுடன் :-)

    ReplyDelete
  2. //அன்னு! ஆரம்பம் முதல் கடைசி வரைக்கும் சிரிச்சுட்டே படிச்சேன்// நானும் படிச்சிக்குட்டே சிரிச்சேன்:)

    ஆர்வமா வந்தா பொசுக்குனு தொடாரும் போட்டுட்டிங்களே, நல்ல முயற்சி தொடருங்கள்

    ReplyDelete
  3. //“ஏன்ப்பா... லாங் டிஸ்டன்ஸு, ஷார்ட் ட்ரிப்பு, பச்சைக்குழந்தைங்களை வெச்சுட்டு... யோசிச்சுப்பாருங்க”ன்னு ரிப்பீட்டிங்கா சொல்லி சொல்லியே இன்னொரு ஃபேமிலி எங்க பயணத்தை கேன்சல் செய்ய பார்த்துச்சு..//

    அந்த இன்னொரு ஃபேமிலி - உங்க அம்மா, அப்பாதானே? ரொம்ப செல்லம் கொடுத்திருக்காங்க உங்களுக்கு. ரெஸ்ட் எடுக்க வேண்டிய நேரத்துல, ஊர்சுத்திட்டு....

    பதிவு, படங்கள், வர்ணனை எல்லாம் நல்லாருக்கு - வழக்கம்போல. ஆனா, இந்த டெம்ப்ளேட்தான் நல்லால்லை. ஆனா நிறையபேர் இதுக்கு மாறிட்டு வர்றாங்கபோல இப்ப.

    ReplyDelete
  4. @ஆமினா,
    :))
    மிகவும் மகிழ்ச்சி ஆமி :) ஜஸாகல்லாஹு க்ஹைர் :)
    வஸ் ஸலாம் :)

    @ஹாஜா மைதீன் பாய்,
    அல்ஹம்துலில்லாஹ், மகிழ்ச்சியுடன் பதிலளித்தமைக்கு :)
    என்ன செய்ய... தொடர்ந்து எழுத நேரம் அமைவதில்லை. மற்ற பாகங்களையும் சேர்த்தே எழுதறேன் இன்ஷா அல்லாஹ் :)
    வஸ் ஸலாம்.

    @ஹுஸைனம்மா அக்கா,
    அம்மா, அப்பா இல்லை... உண்மையிலேயே இன்னொரு ஃபேமிலிதான் :). ஆனால் அதிக தொலைவு என்பதால் அம்மா அப்பா வரவில்லை. ரெஸ்ட் எடுக்கணும்தான்.... ஆனால் அமெரிக்க வரலாற்றிலேயே (அதாவது அமெரிக்காவில் என்னுடைய வரலாறு :) ) இரண்டாவது சுற்றுலா. அதனால் மறுக்க மனமில்லை :)
    டெம்ப்ளேட் சிம்பிளா இருந்ததால பிடிச்சிருந்தது. இப்போ மாத்திட்டேன். மறுபடியும் மாற்ற வேண்டும்...அதுவரை இது இருக்கும் இன்ஷா அல்லாஹ் :)

    ReplyDelete
  5. சலாம்!

    பயணப் பதிவு மிக அருமை. வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  6. படிக்கும் பொழுதே பார்த்த உணர்வகள் வருகிறது. படங்கள் மிக அழகாக இருக்கிறது..

    ReplyDelete
  7. உங்க எழுத்தில் நல்ல நகைசுவை வருது அன்னு .. படங்களும் அருமை மறுபடியும் டெம்ப்ளேட் மாற்றமா ...

    ReplyDelete
  8. ரொம்ப அழகான வர்ணனை,இடங்கள் எல்ல்லாம் ரொம்ப நல்ல இருக்கு

    எனக்கும் லாங்கி ட்ரிப் க்கும் ஒத்தே வராது.
    நான் துங்கிடுவேன்.

    //அவர் ஓட்டுறப்ப நான் தூங்கினாலும் அப்பப்ப முழிச்சு அவர் தூங்கறாரா ஓட்டுராறான்னு பார்த்துக்குவேன்.//

    ரொம்ப பொறுப்பானவங்க..

    ReplyDelete

உங்கள் கருத்துக்கள்...