எப்படி பதில் தந்திருக்க வேண்டும்?

Tuesday, September 18, 2012 Anisha Yunus 7 Comments

ஹெலோ சகோஸ்,

மறுபடியும் தனது கோர முகத்தை காட்டியுள்ள அறிவீனத்திற்கு ஒரு பதில் பதிவுதான் இது. எங்கே? எப்படி? என்பவர்களுக்கு, ஒரே டைட்டில்தான் பதில். ‘The Innocence of muslims'.

படத்தோடு சம்பந்தப்பட்டவர்களுக்கு: Simply bullshit. All it has is mendacity and the movie itself is nothing more than a sophomoric trifle...and for your thoughts to provoke everyone to follow your suit....better luck!! Not this alone, but even a thousand better films even can never ever change the 1.5 billion (and counting)  muslims following Prophet Muhammad in their daily life, bit by bit, minute by minute. Islam = Bliss !!

முஸ்லிம் மக்களுக்கும், முஸ்லிம் அமைப்புக்களுக்கும்:
1. இதற்காக அப்பாவி மக்களை கொன்றது மிகப்பெரிய தவறு. என் கண்டங்களை பதிவு செய்கிறேன்.

இதற்கென அறவழியில் போராட்டம் செய்வதோடு மட்டுமல்லாமல்,

2. நம்மிடம் உள்ள ஆற்றலைக் கொண்டு இன்னொரு வீடியோ / மீடியா மூலமாக இன்னும் சிறப்பான விதத்தில் எடுக்கப்பட்ட, தகவலைக் கொண்ட உயர்ந்ததொரு படத்தை தந்திருக்கலாம்.

3. The Message போன்ற படங்களை தத்தம் மொழிகளில் மொழி பெயர்த்து, அந்தப் படம் வந்த அதே நேரத்தில் அதே வலைதளத்தில் அப்லோடு செய்திருக்கலாம்....Make hay while the sun shines...!!

4. இஸ்லாமிய டாக்குமெண்டரிகளை  / திரைப்படங்களை தத்தம் லோக்கல் கேபிள் சேனல்களில் (அதான் ஊரெங்கும், உலகெங்கும் இப்போதுள்ளதே...) ஒளிபரப்பியிருக்கலாம்.

5. அந்த வீடியோவின் லின்க்கை பரவ விடாமல் அதிக ஹிட்ஸ் கிடைக்க விடாமல் தவிர்த்திருக்கலாம்.

6. இஸ்லாத்தில் இணைந்த / பிறந்து வளர்ந்த பெண் மேதைகளையும், சாதனையாளர்களையும், முக்கியமாக மேலை நாட்டில் பிறந்து வளர்ந்து இஸ்லாத்தில் இணைந்த பெண்களையும் இணைத்து அவர்களின் பார்வையிலிருந்து இஸ்லாத்தைப் பற்றியும் நபிகள் நாயகம் (ஸல்) பற்றிய அவர்தம் பார்வையைப் பற்றியும் வீடியோ எடுத்து வெளியிட்டிருக்கலாம்.

7. இதை விட எல்லாம் பெரிய ஆயுதமான து’ஆவை பள்ளிகளிலும் ஜமா’அத்தாக கூடும் இடங்களிலும் மக்களுக்கு எடுத்துரைத்து அனைவரும் தஹஜ்ஜுத்தில் மறவாது து’ஆ கேட்குமாறு அழைத்திருக்கலாம்.

8. இப்படி ஒரு படம் வெளியாக இருக்கிறது என்று தெரிந்த போதிருந்தே இத்தகைய யோசனைகளை இஸ்லாமிய அழைப்புக்களும், இஸ்லாமிய அரசுகளும் முன்னமே சிந்தித்து ஏதேனும் ஒரு வகையிலாவது செயல்பட்டிருக்கலாம்.

இன்னும் எத்தனை பெரிய அறீவீனங்களுக்கும் துளியும் தளராது இஸ்லாம். ஆனால் எல்லா நேரத்திலும் வெற்று அறிக்கைகள் விட்டு, இதற்கெல்லாம் உணர்ச்சி வயப்படக்கூடாது என வாய்வார்த்தைகளை மட்டும் ஆதரவாக்கிவிட்டு இன்னும் பல கோழைத்தனமான செயல்களால் மட்டுமே பதில் சொல்லும் நம்மால், நம் அரசுகளால், நம் அமைப்புக்களால்.... இஸ்லாம் .....?????????????????

மேலும் படிக்க:

 

7 comments:

  1. உண்மை தான் அன்னு...

    தேவையே யில்லாத விளம்பரத்தை இவர்களே ஏற்படுத்தி கொடுத்திட்டிருக்காங்க... அதுக்கு பதிலாக அவர்கள் வழியிலேயே மீடியா மூலம் உண்மையை உலகறிய செய்திருக்கலாம்...

    அதற்கான வேலைகளை முன்பிருந்தே செய்திருக்கலாம்...

    //எல்லா நேரத்திலும் வெற்று அறிக்கைகள் விட்டு, இதற்கெல்லாம் உணர்ச்சி வயப்படக்கூடாது என வாய்வார்த்தைகளை மட்டும் ஆதரவாக்கிவிட்டு இன்னும் பல கோழைத்தனமான செயல்களால் மட்டுமே பதில் சொல்லும் நம்மால், நம் அரசுகளால், நம் அமைப்புக்களால்.... இஸ்லாம் .....?????????????????//

    :( :( :( :(

    ReplyDelete
  2. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

    கண்டிப்பாக நபிவழியை சின்ன சின்ன விஷயங்களில் கூட இனி நாம் அதிகளவு உந்துதலோடும் பற்றோடும் கடைப்பிடிக்க தொடங்குவோம். நம் அருமை நபி ஸல் அவர்களை இழிவு படுத்துவோரின் மீது அல்லாஹ்வின் வேதனை இறங்கட்டும். இன்ஷா அல்லாஹ்

    ReplyDelete
  3. //இப்படி ஒரு படம் வெளியாக இருக்கிறது என்று தெரிந்த போதிருந்தே //

    வெளியாகும் முன்பு தகவல் தெரிந்திருக்குமா என்பது சந்தேகமே. ஏன்னா, கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் என்னன்னவோ கொச்சைப் படங்கள் வெளியாகிற நாடுகளில் ஒன்று.

    வெளியான பின்பு சரியான வழிகள் மூலம் - வழக்கு போடுவது போன்ற - தடை முயன்றிருக்கலாம். அதைவிடுத்து, போராட்டம், வன்முறை எல்லாம் எதற்கு... இவங்கபாட்டுக்கு செஞ்சிடுவாங்க, அதுக்குப் பழி (ஒண்ணும் செய்யாத) நாமளும் சேர்த்து ஏத்துக்கணும்.

    தமிழகத்திலும் போராட்டம் நடந்தது. பெண்களையும் சேர்த்து அழைத்து வந்து... சில நிகழ்ச்சிகளில் பெண்களைப் படம் பிடிக்க வேண்டாம்னு சொல்றோம். ஆனா பத்திரிகைகளில் எங்கும் பெண்களின் படங்கள்தான்!! :-((((

    ReplyDelete
  4. ஸலாம் சகோ.அன்னு...

    குரல்/எழுத்து மூலமான எதிர்ப்பும்,
    ஜனநாயக நாட்டில் எதிர்ப்பின் ஓர் அடையாளமாக எல்லா இயக்கமும் இணைந்த ஒரு நாள் மக்கள் திரள் கண்டன ஆர்பாட்ட ஊர்வலமும் நடத்திவிட்டு... சும்மா இருந்து விடாமல்...

    நீங்கள் இங்கே சொன்னவைகளையும் மேற்கொள்ள வேண்டும். பாயிண்ட்ஸ் எல்லாமே மிகவும் அவசியம்தான் சகோ.அன்னு.

    லாம்..லாம்..லாம்..லாம்..லாம்...
    இந்த பதிவு ஐந்து நாட்களுக்கு முன்னர் வந்திருக்க...லாம். :-))
    நல்ல கருத்துக்கள் சகோ.
    ஜசாக்கல்லாஹு க்ஹைர்.

    ReplyDelete
  5. salam,
    Good thought. All our cries are going to deaf ears of our dear brothers

    ReplyDelete
  6. சரிதான் செஞ்சி இருக்கலாம். உணர்ச்சிதானே மேலோங்குது.என்ன செய்ய

    ReplyDelete
  7. சலாம் சகோ அன்னு...

    அருமையான பதிவு வாழ்த்துக்கள்..! :)


    இஸ்லாத்திற்கு எதிராக பரப்பப்படும் எந்த விஷயமும் இஸ்லாத்தின் பால் மக்களை ஈர்க்கவே செய்து இருக்கிறது காலம் காலமாக... அது போலவே இந்த விஷயத்திலும் நடக்கட்டும் என இறைவனை பிரார்தித்தவளாய்..

    உங்கள் அன்பு சகோதரி
    ஷர்மிளா ஹமீது

    ReplyDelete

உங்கள் கருத்துக்கள்...