ராயல் கார்ஜ் பாலமும், ரிடர்னும் :)

Friday, October 19, 2012 Anisha Yunus 4 Comments

Royal Gorge Bridge's Royal Look :)
 ஓக்கே..... மறுபடியும் ஒரு இடைவேளை... மறுபடியும் சில வேலை... என எல்லாமே என்னை இந்தப் பக்கம் வந்தாலும் எதுவும் எழுத விடாம பண்ணிடுத்து. இதெல்லாம் குடும்ப இஸ்திரீகளுக்கு ஜகஜம்தானே... ஃப்ரீ விடுங்க :)

பதிவுக்கு போகும் முன், இந்த தளத்தை பார்த்தீங்களா??? பாக்காதவிங்க பாத்துடுங்க :) இன்னும் பல பேருக்கு சொல்லிடுங்க.... ஏதோ எனக்கு தெரிஞ்ச ஏ பீ சீ டீயை எல்லாருக்கும் கத்துத் தரலாம்னுதான்.... என்னிடம் படிச்சதனாலதான் ஃபெயிலாயிட்டேன்னு யாரும் சொன்னால்.... ஹி ஹி ஹி... எதிர்பார்த்ததுதான்.... கண்டுக்காதீங்க :))

சரி... மறுபடியும் கொலராடோ போவோம்.... அடுத்த நாள், கடைசி நாள், ஹனீஃபா பாய் ஏற்கனவே அந்த பிரிட்ஜ் போயிட்டு வந்ததால அவங்க வர மாட்டேன்னுட்டாங்க... அதனால நாங்க, அந்த இன்னொரு ஃபேமிலி எல்லாம் பிரிட்ஜ் பார்க்க போனோம். ஒமரை மட்டும் வீட்டிலேயே விட்டுட்டு கிளம்பிட்டோம்.

போறோம் போறோம் போயிகிட்டே இருக்கோம்... கொலராடோவில் ஒவ்வொரு இடமும் இப்படித்தான் நகரிலிருந்து போக வரவே உங்களுக்கு 4,5 மணி நேரம், ஒன்வேயிலேயே ஆகிவிடும். அப்படி ஆரம்பித்த பயணம் பாலத்தை சென்றடைய மதியத்திற்கு மேல் ஆகிவிட்டது.

Royal Gorge Bridge


பாலம் பலகைகளாலும் தூண்கள், இரும்புக்கம்பிகளாலும் செய்யப்பட்டது. எத்தனை உயரம் என்கிறீர்களா??? கிட்டத்தட்ட 1000 அடி.... துல்லியமாக சொன்னால் 955 அடி...அதனடியில் ஓடும் அர்கன்ஸாஸ் நதியின் லெவலிலிருந்து.....!!!! 1929இல் ஐந்தே மாதத்தில் $3,50,000 செலவில் (அப்பவே!!!) கட்டப்பட்ட பாலம் அது.... நடைபாதையின் உயரத்தை மட்டும் கீழிருந்து கணக்கிட்டால் இப்பொழுதும் இந்தப்பாலம் மட்டுமே உலகின் உயரமான பாலம். ஆனால் பாலத்தின் பில்லர் / தூண்களின் உயரத்தை வைத்து கணக்கிட்டால் இது மூன்றாவது..!!!

அங்கேயும் போயி ஒரியாக்காரரை கொஞ்சம் ஃபோட்டோ பிடிங்கன்னு ஏமாத்திட்டு நானே வண்டி ஓட்டினேன்... வண்டியின் இந்தப்பக்கமும் அந்தப்பக்கமும் பார்க்கவே முடியவில்லை....காலெல்லாம் ஜிவ்வென்று சூடேறுகிறது பயத்தில்....இருந்தாலும் பாதுகாப்பான பாலம்தானே.... இங்கிருந்து அங்கே போய்தானே பார்க்கிங் செய்ய வேண்டுமென்று திடப்படுத்திக் கொண்டே ஓட்டி சென்றேன்.... பாலம் ஏறக்குறைய ஆயிரம் அடி நீளம்தான். வேகமாக போய்விட்டாலும் தெரியாது. 15 மைல் வேகம் மட்டுமே அனுமதி...அதனால மெதுவா போகும்போது கீழே பலகைகள் அதிர்வது நம்மை ‘வயிற்றுக்கும் தொண்டைக்கும் உருவமில்லா ஒரு உருண்டையும் ஓடுதடி’ என்றே பாட வைக்கும் :))

அதன் பின் மதிய + மாலை தொழுகைகளை முடித்தோம். பின் நடந்து சில நேரம் அந்தப் பாலத்தை சுற்றினோம்... இப்றாஹீமிற்கு ஓட இடம் கிடைத்ததும் தலை கால் புரியவில்லை... இளங்கன்று பயமறியாது என்பது போல பாலத்தை தாங்கியிருக்கும் கயிறுகளை ஆட்டிப் பார்த்துக் கொண்டிருந்தது சுவாரசியம்.

பாலத்தின் ஒவ்வொரு அடியிலும் இரு பக்கமும் ஒவ்வொரு மாநிலத்தின் பெயரும் இருக்கும். எந்த மாநிலத்திலிருந்து நீங்கள் வருகிறீர்களோ அதன் போர்டு முன் நின்று ஃபோட்டோ எடுத்துக் கொள்ளலாம்.

Soaring Eagle


பஞ்ஜீ ஜம்பிங், ஸிப் லைன் எல்லாவற்றிலும் இந்த தடவையாவது போக வேண்டும்...இது வரை போனதேயில்லையே என்றால், அதற்கு மட்டும் தனியாக $45 டால்ர் என்றார்கள். ரிஸ்க் எடுத்துப் போறது நாம, கட்டணம் அவனுக்கா என்று என்னவர் மறுத்து விட்டார்.... Soaring Eaglieஐ ஆசையாய் பார்த்ததோடு சரி :((

சாதனை புரியறேன்னுட்டு ஒருவர் இறந்த பிண்ணனியும் இந்த பிரிட்ஜுக்கு உண்டு... (சாதித்ததை மட்டும் பாலத்தின் மேல் ஆங்காங்கே சின்ன சின்ன பி போர்டு மாதிரி வெச்சிருக்காங்க)
//In October 2003, while performing a proximity demonstration, wingsuiter Dwain Weston was killed attempting to fly over the bridge.[3] Weston was wearing a wingsuit, a skydiving suit with fabric extended below the arms to the body and between the legs to catch air allowing for horizontal travel when skydiving. Weston was to go over the bridge while fellow skydiver Jeb Corliss was to go under it. Miscalculating his distance from the bridge, Weston struck a railing while traveling an estimated 120 mph, killing him instantly and dismembering extremities. Cleanup from his impact took two full days, and many parts of Weston's body were never recovered.//
ம்ம்ம்ம் :((((( இறைவனிடமே நாம் மீள்பவர்களாக இருக்கிறோம் :(((


சில நேரம் கழித்து கீழே விஞ்ச் மூலம் நதியினருகில் சென்றோம்... ஏதோ காரணங்களுக்காக நதியருகில் நடக்கும் பாலத்தை பூட்டி வைத்திருந்ததால் சில ஃபோட்டோஸ் மட்டும் எடுத்துக் கொண்டு திரும்பி விட்டோம்.


அதன் பின் மீண்டும், உறவினர் வீடு, ஒமரை கூப்பிட்டுக்கொண்டு, இரவு உணவிற்காக செய்த சப்பாத்தி ரோல்ஸை வாங்கிக்கொண்டு, டாட்டா பை, பை எல்லாம் சொல்லி விட்டு, அருகிலிருந்த ஒரு மஸ்ஜிதில் மக்ரிப் தொழுதுவிட்டு கிளம்பிவிட்டோம்....

மீண்டும் ஒரு இரவுப்பயணம்...அடுத்த நாள் காலை அலுவலகம் இருப்பதால் போயே ஆகவேண்டுமென்று எல்லாரும் தீவிரமாக ஓட்டினார்கள். அதிலும் ....வேணாம்...இந்த இடத்தில் அந்த இன்னொரு வண்டி ஓட்டிய அழகை சொன்னால் என் இனிய அக்கா ஒருத்தங்க ஷாக்காயிடுவாங்க :))) அதனால அதை அப்படியே கட் பண்ணி, அடுத்த நாள் நெப்ரஸ்கா சீனுக்கூ போறோம்.... எலிவேஷன்ல இருந்து பார்த்தா கால் டிக்கெட்டு, அரை டிக்கெட்டு, தரை டிக்கெட்டெல்லாம் மாடிப்படியேறி இந்தியாவிலிருந்து வந்திருந்த தங்கள் பாட்டி தாத்தாவை, ‘நாநிமா....நாநாபா’ன்னு வெளியே இருந்து கத்திகிட்டிருக்கு.... வீடு வந்தாச்சு.... சுபம்....

...அல்ஹம்துலில்லாஹ் :))):)))



Photos Courtesy: Google Inc.

4 comments:

  1. இனிய பயணம் அனுபவம்... தொடர்கிறேன்...

    நன்றி...

    ReplyDelete
  2. Antha bridge ai patkum poluthey thalai soothukerathu... good post..

    ReplyDelete
  3. நானும் உங்களுடன் கொலரடே டூர் வந்து சென்றேன்.
    ராயல் கார்ஜ் பாலத்தை பார்த்தாலே பயமாக இருக்கு காலெல்லாம் கூசுகிற்து/

    ReplyDelete
  4. கண்டுகொண்டோம்.

    ReplyDelete

உங்கள் கருத்துக்கள்...