எதுக்கு மகளிர் தினம் கொண்டாடனும்?
ஒரு சிறிய டூர் போயிருந்தோம். அட்லாண்ட்டா வரை. அதனால் கொஞ்சம் தாமதமாகி விட்டது எழுத. திங்கள் அன்று திரும்ப வீட்டிற்கு வந்து விட்டாலும் அடுத்த நாள் கிடைத்த ஒரு செய்தி என்னால் எழுத முடியாத / யாரிடமும் பேசமுடியாத அளவிற்கு மனக் கஷ்டத்தை தந்து விட்டது. ப்ச்...
நாங்கள் இருக்கும் ஊரில் ஆப்பிரிக்க இனத்தவர்கள் ஜாஸ்தி. சோமாலியாவினரும், சூடான், எத்தியோப்பியா நாட்டுக்காரரும் அதிகம். அவர்களில்லாமல், பரம்பரை பரம்பரையாய் அமெரிக்காவில் வாழும் ஆஃப்ரோ-அமெரிக்கரும் ஜாஸ்தி. எங்கள் வீடு அவர்களின் பள்ளிவாசலுக்கு அருகில் இருப்பதால் அவர்களுடன் நட்பு பாராட்டுவதும் அதிகம்.
அப்படித்தான் எனக்கு அவர்களை தெரியும். ஒரு ஆஃப்ரோ அமெரிக்க கணவன், அமெரிக்க மனைவி, இரண்டு பெண்கள், ஒரு கடைக்குட்டி பையன். மனைவிக்கு இது இரண்டாவது திருமணம். முதல் திருமணத்தில் ஏற்பட்ட மனஸ்தாபம், மணமுறிவுக்கு வழி விட, இருந்த ஒரு பையன் தந்தையுடனும், பெண் தாயுடனும் கோர்ட்டு மூலம் பிரிந்தனர். அப்படி பிரிந்த பின் இப்பொழுது இன்னொரு கறுப்பினத்தவரையே திருமணம் செய்து இன்னும் ஒரு பெண்(10% மனனிலை பாதிக்கப்பட்ட பெண்), பையன் என சந்தோஷமாய்தான் இருந்தனர். அல்லது, அப்படி நாங்கள் நினைத்துக் கொண்டிருந்தோம்.
இரண்டு வாரங்களுக்கு முன்னர்தான் கேள்விப்பட்டேன், அந்த ஆணை போலீஸ் ஜெயிலில் வைத்திருக்கின்றதென்று. எங்களுக்கு என்ன விவரம் என்று தெரியாததால் குடும்ப சண்டை பெரிதாகி ஆண், அந்த பெண்ணை அடித்திருப்பான் அதனால் அவள் 911க்கு அழைத்திருப்பாள் என ஊகித்துக் கொண்டோம். பின் இரண்டு நாளில் என் கணவர் சொன்னார், ஏதோ பெரிதாய் நடந்துள்ளது போல, அந்த ஆளுக்கு $50,000 பெயிலில் உள்ளேயே இருக்கிறார். ஹோல்சேலாய் மாமிசம் வாங்கி அதை குடும்பங்களுக்கும், இங்கிருக்கும் கடைகளுக்கும் பிரித்துக் கொடுப்பவர், எனவே அவரிடம் இந்தளவு பணமில்லை, ஏன் இபப்டி ஆயிற்று. அந்த ஆள் முன்கோபி, பண விஷயத்தில் நம்ப முடியாது என்றுவரைதான் கேட்டிருக்கிறேன். ஆனால் என்ன விஷயத்தில் அவர் உள்ளே தள்ளப்பட்டார் என்று தெரியவில்லை. அதன் பின் நாங்கள் வெளியூர் பயணம் மேற்கொண்டதிலும், வந்த களைப்பிலும் அதைப்பற்றி சுத்தமாக மறந்து போனோம்.
பின் மற்றொரு நாள் இரவு தொழுகைக்கு சென்று வந்த என் கணவர், பள்ளியில் சந்தித்த இன்னொரு நண்பர் கூறிய விஷயத்தை என்னிடம் கூறினார். இரவு உறக்கம் தொலைத்து, மனம் வெதும்பி அழ வைத்த விஷயம் அது. அந்த ஆள், மனைவியின் முதல் திருமணத்தில் பிறந்த அந்த பெண்ணிடம் தகாத உறவை கொண்டிருக்கிறான். உறவல்ல, வன்முறை, குழந்தைவதை., பலாத்காரம், கற்பழிப்பு. இப்படி எந்த வித பேர் வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம். ச்சீ...மனித மிருகம்.
அந்த சிறு பெண்ணை மசூதிக்கு போகும் வேளைகளில் பார்த்துள்ளேன், தானுண்டு, தன் தம்பி தங்கையருண்டு என அமைதியாய் இருக்கும் பெண். அமெரிக்க குழந்தைகளுக்கே உரிய ஆட்டம், பாட்டம், 12 வயது பெண்பிள்ளைகளுக்குரிய வெட்கம், குறுகுறுப்பு எதுவுமில்லாமல் அமைதியான் ஒரு பெண். நேற்று வரை அந்த பெண் மனனில 10% பிறழ்ந்தவள் என்று கூட எனக்கு தெரியாது. அந்தப் பெண்ணுடன்.... மனிதனா இவன்? மிருகம் கூட இப்படி செய்யாதே??? அந்த பெண்ணை மிரட்டியே வைத்திருந்திருக்கிறான், இவ்வளவு காலமும், தாயிடம் சொன்னால் கொலை செய்து விடுவேன் என்று. எப்படி இந்த விஷயம் இப்பொழுது வெளி வந்தது என எனக்கு தெரியாது. நான் அறியவும் முற்படவில்லை, அதிகமாக துருவினால் அந்த தாயின் உள்ளம் என்னவாகும்? ஆறுதல் சொல்கிறார்களா இல்லை அவல் மெல்கிறார்களா என எண்ண வைத்து விடும். என்னால் ஆற்றாமையை தாங்க இயலவில்லை. ச்சீ...ச்சீ...ச்சீ.... அந்த ஆள் எங்கள் வீட்டீற்கு வந்த நாட்களை எல்லாம் எண்ணுகிறேன், சேற்றில் காலை வைத்தது போலிருக்கிறது. அதிகமாக நாங்கள் பழகியதில்லை. ஏற்கனவே அந்த ஆளிடம் சூதானமாய் இருக்க சொல்லி சில பேர் சொன்னதால் நாங்கள் சிறிது தள்ளியே இருந்தோம். ஆனால் அவன் இப்படிப்பட்ட கொடிய நஞ்சுடைய நெஞ்சானவனாய் இருப்பான் என கனவிலும் நினைக்கவில்லை. எப்படி தன் வீட்டில், தன்னை தந்தையாய் நினைத்து வளைய வரும் பெண்ணிடம் இப்படி செய்ய தோன்றும்?
நான் அந்த தாயின் இடத்தில் இருந்தால் எனன் செய்வேன் என யோசித்துப் பார்த்தேன், வாயில் வருவது போல, வெட்டிப் போட்டிருப்பேன் என சொல்லிக்கொள்ளலாம், ஆனால் அதன் பின் குழந்தைகளை யார் பாதுகாப்பது? அந்த பெண்ணை அதிலிருந்து மீட்டெடுப்பது எவ்வாறு?? இப்படி பல கேள்விகள் முன்னாலிருக்கும் போது சட்டம் தன் கடமையை செய்யட்டும் என விட்டுவிடுவோம். இவனுக்கு மரண தண்டனை கிடைக்குமா என எனக்கு தெரியாது. கிடைத்தால் மிகவும் சந்தோஷப்படுவேன். கூனிக் குறுக வைக்கும் கேள்வியாளார்கள், வக்கீல்கள் என்னும் போர்வையில் இங்கில்லை என்பதே சந்தோஷம். ஹ்ம்ம்... பெருமூச்சு முட்டுகிறது எழுதுவதற்கே... பாதிக்கப்பட்ட சிறுமியையும் அதன் தாயையும் எண்ணிப்பார்க்கிறேன்.
அதிகாலையிலேயே அந்த தாய்க்கு ஃபோன் செய்தேன். பேச்சு வர வில்லை. இரண்டு பக்கமும் அழுகையே முட்டி நின்றது. இனி எதற்காகவும், எந்த நேரம் வேண்டுமானாலும் உன் குழந்தைகள் மூன்றையுமே வேண்டுமானாலும் என்னிடத்தில் விட்டுவிட்டுப்போ, இரவு நேரமானாலும் என்னிடம் விடு, இது பாதுகாப்பான இடம் உன் குழந்தைகளுக்கு என்று மட்டுமே கூற முடிந்தது.
இப்படி, குழந்தைகளுக்கும், பெண்களுக்கும் பாதுகாப்பில்லாத வாழ்வு, எல்லா சமூகத்திலும் இருக்கும்போது எதற்காக மகளிர் தினம் என்று கொண்டாடப்படவேண்டும்? ஏர் இந்தியாவில் 100 ரூபாயில் பயணம் செய்வதால் பாதுகாப்பு கிட்டிடுமா?? அன்றைய தினம் கேளிக்கைகளிலும், கூத்துக்களிலும், ஊடகங்களிலும் பெண்களுக்காக நேரமொதுக்கினால் மட்டும் போதுமா? யார் காப்பார் இவர்களை? இப்பொழுது நான் பாதுகாப்ப?ளிக்கிறேன், என கூறிவிட்டேன். நடந்து முடிந்ததின் வடுவிலிருந்து யார் காப்பார்? பாதுகாப்பு என்பது தாய் தந்தையுடந்தானே ஆரம்பிக்கிறது???? இதை விட கொடுமை, இந்த விஷயத்தை கேள்விப்பட்டு முன்னாள் கணவனும், அந்த மகனும் வந்து அழுதுவிட்டு போனது. மனஸ்தாபங்களை குறைத்திருந்தால், மணமுறிவு ஏற்படாமல் காத்திருந்தால் பெண் வாழ்க்கை தப்பியிருக்குமே. இப்படி ஒரு பிசாசிடம் வாழ்க்கைப்பட நேர்ந்திருக்காதே?????
சுதந்திரம் பெற்றதால் சுதந்திர நாள், நரகாசுரன் அழிந்ததால் தீபாவளி, தியாக செம்மலாய் வாழ்ந்ததால் ஈதுப்பெருனாள் என ஒவ்வொரு தினத்தின் பின்னும் கொள்கை உள்ளது? என்ன கொள்கைக்காக நாம் மகளிர் தினம் கொண்டாடுகிறோம்?? இரவில் பெண் தனியாக நகை அணிந்து போகும் காலத்தில்தான் சுதந்திரம் என்றார் காந்தி, இங்கு பகலில் வீட்டிலேயே பாதுகாப்பில்லையே???? வளர்ப்புத்தந்தை என்னும் பெயரில் குள்ள நரி ஒன்று பதுங்கியிருந்தது தெரியவில்லையே??? என்னுடைய இயலாமையை என்ன செய்வதென்று தெரியவில்லை. எனவே இங்கே பதிவிட்டு பாதி மனச்சுமையை இறக்குகிறேன்.
பிகு. இந்த விஷயத்தை என் கணவரிடம் சொன்ன அந்த நண்பர் மேலும் கூறியது என்னவென்றால், அவரின் பிள்ளைகள் அந்த ஆள் தொடாமல் பார்த்துக் கொள்ளச் சொலி யாரோ முன்பே கூறியிருந்தனராம். யப்பா... நீங்க நல்லா இருப்பீங்க, இந்த மாதிரி ஆட்களை ரகசியமா வெக்காதீங்க. தயவு செஞ்சு பப்ளிக்கா சொல்லுங்க. உங்க பிள்ளைங்க தப்பினா போதும், மத்தவங்க பத்தி கவலையில்லாம இருக்கலாம்னு நினைக்காதீங்க. நான் பெக்கலைன்னாலும் அந்த பொண்ணு மேல நான் அன்பு காட்டாம இருக்க முடியுமா? அவ வீட்டிலேயே அவளுக்கு நரகம் இருக்குன்னு நான் எப்படியாவது சொல்லியிருப்பேனே????
இந்த ஒரு கொடுமைக்காகவாவது ஷரீஅத் சட்டம் எல்லா நாட்டிலும் அமலாக்கப்படணும்னு மனசு ஏங்குது. யார் கேட்பா??
//கோபிண்ணா, கார்த்தின்ணா... கொஞ்சம் டைம் கொடுங்க, உங்க தொடர் பதிவு எழுத. இந்த மனநிலைல முடியல.//
.
I just finished a safe environment seminar for 10 year old children. We covered topics on sexual, verbal and physical abuses at home. I can understand the severity of the incident. Atleast, that girl is protected from him now.
ReplyDeleteஇப்ப இது மாதிரி செய்தி தான் எங்கும்,உலகம் எங்கே போய் கொண்டிருக்கிறது,நல்லவர்கள் மத்தியில் ஒரு சிலர் இப்படியும்.
ReplyDeleteஎன்ன சொல்ல, காலையில் மனசு ரொம்ப கஷ்டம் ஆய்டுச்சு. மறுபடியும் வந்து விரிவா பதில் போடறேன்
ReplyDelete//இந்த விஷயத்தை கேள்விப்பட்டு முன்னாள் கணவனும், அந்த மகனும் வந்து அழுதுவிட்டு போனது. மனஸ்தாபங்களை குறைத்திருந்தால், மணமுறிவு ஏற்படாமல் காத்திருந்தால் பெண் வாழ்க்கை தப்பியிருக்குமே. இப்படி ஒரு பிசாசிடம் வாழ்க்கைப்பட நேர்ந்திருக்காதே?????//
ReplyDeleteமிகச்சரியான பாயிண்ட் ..இது..!! :-)) இதை அவர்கள் முன்னாலேயே யோசிச்சு இருக்கனும்
எங்க பக்கத்து வீட்டு பாட்டி அடிகடி சொல்வாங்க பெண் குழந்தைகளுக்கு தன் தாய் மட்டும் தான் முழு பாதுகாப்பு என்று
ReplyDeleteஇதே போல் ஒரு சம்பவம் இங்கும் நடந்தது தன் சொந்த மகளுடன் இவர்களை மிருகம் என்று கூறி மிருகத்தை கேவலப்படுத்த விருப்பமில்லை.
//இந்த ஒரு கொடுமைக்காகவாவது ஷரீஅத் சட்டம் எல்லா நாட்டிலும் அமலாக்கப்படணும்னு மனசு ஏங்குது.//
உண்மைதான்.
என்ன எழுதன்னே தெரியலைப்பா. குட் டச், பேட் டச்னு சொல்லிக்கொடுக்கச் சொல்றோம். ஆனா இதுபோன்ற மனநிலை பாதிப்புள்ளவர்களிடம் என்னவெனச் சொல்லுவது? இந்த உலகத்தில்தான் நம் குழந்தைகளும் இருக்கிறார்கள் என எண்ணும்போது...
ReplyDelete//சுதந்திரம் பெற்றதால் சுதந்திர நாள், நரகாசுரன் அழிந்ததால் தீபாவளி, தியாக செம்மலாய் வாழ்ந்ததால் ஈதுப்பெருனாள் என ஒவ்வொரு தினத்தின் பின்னும் கொள்கை உள்ளது? என்ன கொள்கைக்காக நாம் மகளிர் தினம் //
ReplyDeleteஹூம்...
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
ReplyDeleteசகோ அன்னு...//இந்த ஒரு கொடுமைக்காகவாவது ஷரீஅத் சட்டம் எல்லா நாட்டிலும் அமலாக்கப்படணும்னு மனசு ஏங்குது. யார் கேட்பா??//...ஆணாதிக்கவாத அமெரிக்கா கேட்கவே கேட்காது சகோ.
அமெரிக்காவில்தான் உலகத்திலேயே அதிக அளவிலான வல்லுறவு குற்றங்கள் நிகழ்கின்றன என்று புள்ளி விபரங்கள் கூறுகின்றன.
உலகில் உள்ள நாடுகளில் அமெரிக்காதான் முற்றிலும் நாகரீகமடைந்த நாடாக பொதுவாக(!?)கருதப்படுகிறது. அதே அமெரிக்காவில்தான் உலகத்திலேயே அதிக அளவிலான வல்லுறவு குற்றங்கள் நிகழ்கின்றன.
------------------------------------------------
1990 ஆம் ஆண்டில் மாத்திரம் அமெரிக்காவில் 1,02,555 வல்லுறவு குற்றங்கள் நிகழ்ந்ததாக அந்த நாட்டின் உளவுத்துறையான எஃப். பி. ஐ. யின் அறிக்கை தெரிவிக்கிறது. 1990 ஆம் ஆண்டு மாத்திரம் அமெரிக்காவில் நாள் ஒன்றுக்கு சராசரியாக நடந்த வல்லுறவு குற்றங்களின் எண்ணிக்கை 1,756 ஆகும்.
அமெரிக்காவில் 1996 ஆம் ஆண்டு மாத்திரம் 990,322 வல்லுறவு குற்றங்கள் நிகழ்ந்ததாக அமெரிக்க நீதித்துறையின் மற்றொரு பிரிவான குற்றம் இழைக்கப்பட்டோர் பற்றி தேசிய அளவில் ஆய்வு செய்யும் அமைப்பின் அறிக்கை மூலம் அறியலாம்.
எனில், சராசரியாக நாள் ஒன்றுக்கு 2,713 வல்லுறவு குற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன. அதாவது ஒவ்வொரு 32 வினாடிக்கும் ஒரு வல்லுறவு குற்றம் நிகழ்ந்திருக்கிறது.
இப்போதைய வருடங்களில் அமெரிக்கர்கள் இன்னும் கூடுதலாக வல்லுறவு குற்றங்களில் ஈடுபட்டிருக்கலாம்..!
இவ்வாறு வல்லுறவு குற்றங்களில் ஈடுபட்டவர்களில் 10% பேர்கள்தான் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டதாக 1990ஆம் ஆண்டு எஃப். பி. ஐ. வெளியிட்டுள்ள அறிக்கை கூறுகிறது. இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை மொத்தத்தில் 1.6 %. மேற்படி கைது செய்யப்பட்டவர்களில் 50% பேர் அவர்கள் செய்த வல்லுறவு குற்றம் நீதி மன்றத்தின் முன்பு நிருபிக்கப்படாததால் விடுதலை செய்யப்பட்டனர். அதற்கு அர்த்தம் 0.8% குற்றவாளிகள்தான் நீதி விசாரனைக்கு உட்படுத்தப்படுகிறார்கள். வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால் 125 பேர் வல்லறவு குற்றங்கள் நிகழ்ந்தால் தண்டனை வழங்கப்படுவது ஒரேயொரு குற்றத்திற்கு மாத்திரம்தான்..!
இவ்வாறான சட்டங்கள் இருந்தால் மனிதர்களில் பலர் வல்லுறவு குற்றம் புரிவதை ஒரு தொழிலாகவே வைத்திருப்பார்கள்..!
இவ்வாறு நீதி விசாரணைக்கு உட்படுத்தப்பட்டவர்களில் 50 % பேர் குற்றவாளிகள் என நிருபிக்கப்பட்டபின் 1 வருடத்திற்கும் குறைவான சிறை தண்டனையைத்தான் பெறுகின்றனர் என மேற்படி அறிக்கை மேலும் கூறுகிறது.
இவ்வளவுக்கும் ஒரு வல்லுறவு குற்றம் புரிந்த குற்றவாளிக்கு அமெரிக்க குற்றவியல் தண்டனை சட்டத்தின்படி 7 வருடங்கள் சிறை தண்டனை வழங்க வேண்டும்..!(இந்த அமெரிக்க கண்டுபிடிப்பைத்தான் இந்தியா உட்பட பெரும்பாலான முன்னேறும் நாடுகள் கடைப்பிடிக்கின்றன)
முதன் முறையாக வல்லறவு குற்றம் புரிந்த ஒருவனுக்கு கடுமையான தண்டனைகள் இன்றி நீதிபதி விடுதலை செய்யலாம் என்பது அமெரிக்க குற்றவியல் தண்டனை சட்டத்தின் விதி.(இதையும் பின்பற்றலாமா என்று யோசித்து வருகிறது இந்தியா)
இப்போது...கற்பனை செய்து பாருங்கள்..! ஒரு மனிதன் 125 முறை வல்லுறவு குற்றம் செய்தாலும், அவன் தண்டனை பெறுவதற்குரிய சாத்தியக்கூறு ஒரேயொரு முறைதான் அமெரிக்காவில்..! அந்த ஒரு முறையிலும் அது முதல்முறை என்றால்...நீதிபதியின் கருணையினால் விடுதலை செய்யப்படலாம்..! அல்லது ஒரு வருடத்திற்கும் குறைந்த சிறை தண்டனையைப் பெறலாம்..!
நன்றி:http://www.ottrumai.net/IslamicQA/25-WhyShouldWeFollowIslam.htm
------------------------------------------------
மகளிர் தினம்....ஒரு மாய்மாலம்...!
இஸ்லாமிய சட்டங்கள் நடைமுறைக்கு ஒத்துவரக்கூடியவையும், மனித சமுதாயத்திற்கு பலன்களை தரக்கூடியவையும் ஆகும்.
இஸ்லாம் பெண்கள் மானபங்கபடுத்தப்படுவதையும், வல்லுறவு கொள்ளப்படுவதையும், மனஇச்சையுடன் கூடிய இரண்டாவது பார்வையையும் மிக கடுமையான குற்றங்கள் என தடை செய்துள்ளது.
அத்துடன் இஸ்லாமிய ஆடை முறைகளை ஆண் பெண் இருவரையும் பின்பற்ற சொல்வதோடு, வல்லறவு குற்றம் செய்ததாக நிரூபிக்கப்படுபவருக்கு கடுமையான மரண தண்டனைகளையும் வலியுறுத்துகிறது.
தண்டனைகள் கடுமையாக இல்லை என்றால் குற்றங்கள் மிகைக்கத்தான் செய்யும்.
பெண்ணுரிமைக்கு எதிரான வல்லுறவுக்கு ஏழு வருஷம் சிறை. அதுவே, அவனின் முதல் முயற்சி என்றால் மன்னிப்பு... விடுதலை...! அமெரிக்காவில்தான் பெண்ணுரிமை காக்கப்படுகின்றது என்று எல்லோருக்கும் மூடநம்பிக்கை.
மனசுக்கு ரொம்ப கஷ்டமா போச்சுப்பா..
ReplyDeleteரொம்ப கஷ்டமாயிடுச்சுங்க..
ReplyDeleteபடிக்க ரொம்ப கஷ்டமா இருக்கு சகோ! பெரிய தண்டனை அவனுக்கு கிடைக்கணும்..
ReplyDeleteவக்கிரங்களுக்கு எந்த ஊரிலும் குறைவில்லை. கொடுமை.
ReplyDeleteஅன்னு, மனம் கனக்கிறது. வேறேதும் சொல்லத் தோன்றவில்லை:-(
ReplyDeletesaaaaaaaaaaaad...
ReplyDeleteஒன்னு மட்டும் சொல்ல முடியும் பெண்கள் ஆண்களிடம் விடுதலை கோருவதை விட்டுவிட்டு, தம்முள் மறைந்திருக்கும் தைரியத்திற்கு விடுதலை கொடுத்தால் மகளிர் பிரச்சனை அன்றோடு போச்சு..
:அஷ்வின் அரங்கம்:
ஆண் விடுதலை வேண்டும்- சீரியஸ் பாஸ்.
வணக்கம் தங்கள் படைப்புகள இந்த தளத்தில் இணைக்கவும்
ReplyDeleteதமிழ் திரட்டி
"மிருகம்" இல்லை அன்னு.ஏனா மிருகம் கூட இப்பட கீழ்த்தரமா நடந்துக்காது.
ReplyDeleteமனதை கனக்க வைத்த பதிவு .
அன்னு, இன்றுதான் படிக்க முடிந்தது, எவ்வளவு கேவலமான , வேதனையான விஷயம்...
ReplyDeleteநானும் இப்படி, பெற்ற தந்தையே(வெள்ளையர்) மகளுக்கு செய்த கொடுமை ஒரு மகஷினில் படித்திருக்கிறேன்... குழந்தையை வெளியே எதுவும் சொல்லக்கூடாதென மிரட்டி வைத்திருந்தாராம்... தாயிடம் குழந்தை சொல்ல, தாய் நம்பவில்லை குழந்தையை ஏசியிருக்கிறா. பிள்ளை தன் 13வது வயதில், தானாகப் போய் போலீஷிலே புகார் கொடுத்திருக்கிறார். தான் அதுவரை பட்ட வேதனைகளை எழுதியிருந்தா படிக்கவே முடியாமல் இருந்தது... இதை பப்ளிக்கில் எழுதவே எனக்கு கூசுது..
அஸ்ஸலாமு அலைக்கும் அன்னு! 'இஸ்லாமிய சட்டங்கள் என்றாலே கொடுமையானவை' என்று கூக்குரலிடும் சிலருக்கு இதுபோன்ற நிகழ்ச்சிகள் சர்வ சாதாரணமானவையாக தெரியலாம். அவர்கள் பாதிக்கப்படும் வரை!
ReplyDeleteமத அடிப்படையில் பார்க்காமல் மக்கள் நலனை மட்டும் ஒரு அரசாங்கம் கருத்தில் கொண்டால், இஸ்லாமிய சட்டங்களை நிச்சயம் செயல்படுத்தலாம். ஆள்பவர்களுக்கல்லவா அந்த புத்தி வரவேண்டும்..? இல்லையேல் ஒரு கட்டத்தில் மக்களே அந்த சட்டங்களை தன் கையில் எடுத்து செயல்படுத்தும் நிலை வந்தாலும் வரலாம். அதுவரை இந்தக் கொடுமைகள் தொடர்ந்துக் கொண்டுதான் இருக்கும். ஹ்ம்...
நிச்சயம் இதற்கு கடுமையான தண்டனைகள் கொடுக்க கூடிய சட்டம் வேண்டும்.
ReplyDeleteFor those who think American laws are liberal, you are wrong. if he is proven, he will never see the light again.
ReplyDeleteLot of these types of incident are not reported in 3rd world countries including india otherwise you will see staggering numbers.
அன்னுக்கா, படிக்கவே வெறுப்பா இருக்கு. இந்த சம்பவங்கள் எல்லா நாடுகளிலும் நடக்குது. ஆனால், வெளி வருவது குறைவு. அமெரிக்காவில் வெளிவருகின்றபடியால் இங்கே மட்டும் தான் நடக்கின்றது என்று நினைக்க வேண்டாம். மூன்றாம் உலக நாடுகளில் இப்படி வெளி வந்தால் அந்தப் பெண்ணின் பெயர் எவ்வளவு பாதிக்கப்படும். அதோடு அந்தப் பெண்ணை திருமணம் செய்ய யார் முன்வருவார்கள். அதனால் தான் நம்ம நாடுகளில் வெளியே தெரியாமல் மறைத்து விடுகிறார்கள்.
ReplyDeleteதினமும் பல பெண்கள் இந்தக் கொடுமைகளுக்கு உள்ளாகிறார்கள். பாதிக்கப்படுவது எங்களுக்கு தெரிந்தவர்களாக இருக்கும் போது ஆத்திரம் வருகிறது.
என்னத சொல்ல...இது மாதிரி நிறைய இடங்களில் நடக்கின்றது..
ReplyDeleteஎனக்கு கல்யாணம் ஆகும் முன்பு எங்க தெருவில் உள்ள ஒருந்தவங்க வீட்டில் அப்பாவே பெண்ணிடம் தப்பாக நடந்ததால் அந்த ஆண்டி அவருடைய கணவருடன் இன்று வரை வாழவில்லை..பின்ன அந்த மிருகத்துடன் யாரு இருப்பாங்க...
படிக்கும் பொழுது அது தான் நினைவுக்கு வந்தது...
இந்த ஒரு கொடுமைக்காகவாவது ஷரீஅத் சட்டம் எல்லா நாட்டிலும் அமலாக்கப்படணும்னு மனசு ஏங்குது
ReplyDeleteஆமாம் . சரியாகத்தான் இருக்கும் அமெரிக்க சட்டத்தைவிட.
சலாம் சகோதரி அன்னு...,அல்லாஹூ...படிக்கவுமே மனசெல்லாம் வலிக்குது..பெத்த தாய்க்கு எப்படி இருந்திருக்கும்?எல்லோரும் சொல்றா மாதிரி இப்ப எங்க பார்த்தாலும் பல கொடுமைகள் நடக்கதான் செய்யுது.... உலகத்தை நினைத்தால் பயமாக இருக்கு.
ReplyDeleteஉண்மையிலேயே இது போன்ற பதிவுகள் நம்மை மேலும் மேலும் விழுப்புற செய்யும்னு நினைக்கிறேன்.
நன்றி அன்னு.
அன்புடன்,
அப்சரா.
படிக்கும்போதே பதறியது மனது. என்ன மனிதன் அவன் ச்சே மானங்கெட்ட ஜென்மம்.
ReplyDelete//இந்த ஒரு கொடுமைக்காகவாவது ஷரீஅத் சட்டம் எல்லா நாட்டிலும் அமலாக்கப்படணும்னு மனசு ஏங்குது. யார் கேட்பா??//
நிச்சயமாக..
இறைவன் அனைவருக்கும் நேரான வழியை தந்தருளவேண்டும் இதுபோன்ற விஷகிருமிகளிடமிருந்து பாதுகாதருளவும் வேண்டும்..
@சித்ராக்கா,
ReplyDeleteஅதைப்பற்றி உங்களிடம் பேச வேண்டும் என்று நினைத்துக் கொண்டுதானிருக்கிறேன். நேரம் கிட்டவில்லை. ஏதும் சாஃப்ட் காப்பி இருந்தால் மெயில் செய்யுங்களேன்??
நன்றி :)
@ஆஸியாக்கா.
தப்பா எழுதிட்டீங்க போல. உலகம் போகும் போக்கை பார்த்தால் கெட்டவர்கள் மத்தியில்தான் ஒன்ரிரண்டு நல்லவர்களும் வாழ்கிறார்கள் என்றுதான் தோன்றுகிறது.
நன்றி :)
@கார்த்திண்ணா..,
என்ன செய்ய. இப்பொழுதெல்லாம் விடிந்தவுடன் இன்று எத்தனை குழந்தைகளின் வாழ்வு பாழானதோ என்றுதான் இருக்கிறது. :(
நன்றி :)
@ஜெய்லானி பாய்,
நீங்க வேற. அதைதான் நானும் இந்த தடவை அந்த தாஇடம் கேட்டேன். அவர் கூறினார். முதல் கணவன் இப்படி பெண்ணாசை பிடித்தவனாக இருந்ததால்தான், அதுவுமின்றி வேலை வெட்டிக்கு செல்லாதவனாக சோம்பேறியாக இருந்ததால்தான் அவனை விட வேண்டி வந்தது என்றார்கள். அதுவுமன்றி, அமெரிக்கவில் வேலை இல்லமலிருப்பவர்களுக்கு மாதாமாதம் அரசு ஒரு தொகை தரும். அதை வைத்தே சகல் ஜீவனமும் நடத்துகிறார்கள் சிலர். அதில் அந்தாளும் ஒருவர்.!!
நன்றி :)
@ராஜவம்சம் பாய்,
ஆம். உண்மைதான். தாயை விட சிறந்த பாதுகாப்பு வேறெங்கும் பிள்ளைகளுக்கு இல்லை!!
நன்றி :)
@ஹுஸைனம்மா,
ஆமாம்பா. இன்னிக்கு அந்த பெண்ணுடைய தங்கை தம்பிக்கு சாக்லேட் தரும்போது, எனக்கும் தரச்சொல்லு என தாயிடம் ரகசியம் பேசுகிறாள். இப்படி ஒரு மனதளவில் குழந்தையைப் போய்....ச்சை...
:(
நன்றி :)
@முஹம்மது ஆஷிக் பாய்,
வ அலைக்கும் அஸ் ஸலாம் வ றஹ்மதுல்லாஹ்,
அந்த ஆள் ஏற்கனவே ஜெயிலில்லிருந்து வந்து வாழ்ந்தவந்தானாம். பரோலில். இப்பொழுது இப்படி மாட்டிக் கொண்டு விட்டதால் 7, 8 வருடம் ஜெயில் தண்டனை இருக்கும் என்றார் அந்த தாய். ஹ்ம்ம்.. 7, 8 வருடம் எல்லாம் ஒரு தண்டனையா? அதுவும் நம்மூர் ஜெயில் மாதிரியா இங்கே????
நன்றி :)
@அமைதிச்சாரலக்கா,
உள்ளன்போடு இப்படி பாதிக்கப்படும் / பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்காக இறைவனிடம் வேண்டுங்கள். அதுவே பெரிய உதவி.!!!
நன்றி :)
@பாபுண்ணா,
என்ன செய்ய. எல்லா இடத்திலும் தீ போல அல்லவா பரவிகிட்டு இருக்கு??
நன்றி :)
@பாலாஜிண்ணா,
தெரியவில்லை. தெரியவரும்போது கண்டிப்பாக பதிவிடுகிறேன், இன்ஷா அல்லாஹ்.
நன்றி :)
@ஸ்ரீராமண்ணா,
100% சரியா சொன்னீங்க.
நன்றி :)
@கோபிண்ணா,
ஹ்ம்ம்... நம்மால் முடிந்தவரை இப்படி பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவோமே, அட்லீஸ்ட், சாய தோள் தந்தாலே நன்மையே!!
நன்றி :)
@அஷ்வின்,
பெண்களை அவர்களின் உடலை வைத்து எடை போடுவதை விட்டு எப்பொழுது மனதிற்கும் மனிதத்திற்கும் விலை போடுகிறார்களோ, அப்பொழுதுதான் சுதந்திரம் என்று அர்த்தம் நன்றி தங்களின் முதல் வருகைக்கு!!
நன்றி :)
@பார்ட் டைம் வேலை,
யப்பா...என்ன பதிவுக்கு பின்னூட்டம் போடறீங்கன்னாவது பார்த்து பின்னூட்டமிடுங்க!!
நன்றி :)
@சண்முககுமாரண்ணா..
நல்லது. முடிந்தால் செய்கிறேன்.
நன்றி :)
@ஏஞ்சலின்,
ஆமாம் ஏஞ்சலின், மிருகத்தின் குணம் கூட வரவர மனிதனுக்கு இல்லாமலே போகின்றது!!
நன்றி :)
@அதிராக்கா,
உங்கள் மறுமொழியை பார்த்து கண்ணிலிருந்து இரத்தம் வராததுதேன் குறை. ச்ச....மனித இனம்தானா இவர்களெல்லாம்???
நன்றி :)
@அஸ்மா,
//மத அடிப்படையில் பார்க்காமல் மக்கள் நலனை மட்டும் ஒரு அரசாங்கம் கருத்தில் கொண்டால், இஸ்லாமிய சட்டங்களை நிச்சயம் செயல்படுத்தலாம். //
ஆமாம் அஸ்மா. ஆனால் இஸ்லாமியப்பாடகர் பாடிய தேசப்பாடலையே முடக்குபவர்களுக்கு மற்றவை எம்மாத்திரம்??
நன்றி :)
@தூயவன் பாய்,
இன்ஷா அல்லாஹ். அவனுக்கும், அது போல் செய்கின்ற எவருக்கும் இன்னும் கடுமையான தண்டனைகள் கிட்ட பிரார்த்திப்போம்.
நன்றி :)
@linuxaddict,
//For those who think American laws are liberal, you are wrong. if he is proven, he will never see the light again.// only for a max 7-8 years???
@வானதிக்கா,
அப்படி ஒரு பிரச்சினை இங்கில்லை. ஆனாலும் புண்பட்ட மனதை ஒருக்காலும் சீர் செய்வது கடினமே.
நன்றி :)
@கீதாக்கா,
படித்தும், கேட்டும், பார்த்தும் அதன் தாக்கம் குறைந்து கொண்டே போவது போல ஒரு பிரமைதான் ஏற்படுகிறது!!
நன்றி :)
@இராஜராஜேஸ்வரி அம்மா,
கண்டிப்பாக. அமெரிக்க சட்டமும் மனிதனால் இயற்றப்பட்டதுதானே. அதில் தவறுகள் இல்லாமலிருக்குமா??
நன்றி :)
@அப்சரா சகோ,
வ அலைக்கும் அஸ்ஸலாம் வறஹ்மதுல்லாஹ்,
கண்டிப்பாக. இதை எழுதுவதே நம்மில் பலபேர் முன்னெச்சரிக்கையாய் இருப்போம் என்றுதான்.
நன்றி :)
@மலிக்காக்கா,
ஆமீன், தங்களின் து’ஆவிற்கு.
நன்றி :)