என்னைச் சுற்றி ஏன் இப்படி??

Tuesday, March 29, 2011 Anisha Yunus 23 Comments

ஹ்ம்ம்... மன்னிக்கவும்.

தாமதமாக வரும் பதிவுகளுக்கு, வெறும் ஓட்டுக்களுக்கு, வராமலே போகும் பின்னூட்டங்களுக்கு என. நான் விரும்பி படிக்கும் எல்லா வலைப்பூக்களிலும் எழுதும் அளவிற்கு நேரமிருப்பதில்லை. அதுவுமின்றி கிட்டத்தட்ட என்னை பாதிக்கும் என் அருகிலுள்ளோரின் பிரச்சினைகள்... என்ன செய்ய???


=========================== = = = ===========================

இந்தப் பதிவில் எழுதியிருந்த தாயின் குழந்தைகள் அனைவரும் வாரத்தில் இரண்டு நாட்கள் முழு நாள் எங்களுடன் இருக்க விடுகிறேன். Day Careக்கு அனுப்பும் அளவிற்கு அவரிடம் பணமில்லை. அவரின் கடையில் சம்பாதிக்க வேண்டுமெனில் குழந்தைகளை வேறெங்கேயும் விடவும் முடிவதில்லை. இதனால் மற்ற நாட்களில் என் வேலைச்சுமை கொஞ்சம் கூடியுள்ளது. தவிர வலையை வலம் வரும் நேரமும் குறைகிறது. எனவே தான் முதல் பாரா.


=========================== = = = =========================== 



சில பல பிரச்சினைகளால் கவலையில் வாடும் ஒரு தோழியின் கண்ணீரையும் துடைப்பதற்கே நேரமில்லை, இதில் பதிவென்ன, ஓட்டென்ன போங்க...

விவரமாய் வேண்டாம். சுருக்கமாய் கேட்கிறேன், காலாகாலத்திற்கும் குழந்தைகளையும், கணவனையும் அவனின் உடன்பிறப்புக்களையும் பெற்றோர்களையும் கவனித்துக் கொண்டே தன் வலிமையையும், உயிரையும் கொஞ்சம் கொஞ்சமாக இழக்கிறார்கள், பெண்கள். ஆண்களோ, பெண்ணிடம் சிறிது தொய்வு தெரிந்தாலும், உடலில் சில சுருக்கங்கள் விழுந்தாலும் அடுத்த பெண்ணை நோக்க ஆரம்பித்து விடுகின்றனர். இதற்கு பெற்ற தாய் முதல் மாமியார் வரை பொறுத்திருக்க சொல்வதென்னவோ பெண்ணைத்தான். எங்கே வந்ததிந்த நியாயம்???????????

ஸ்கூலுக்கு அனுப்பினால் ஃபீஸ் என்னும் பெயரில் அடிக்கும் கொள்ளைக்கு லட்ச லட்சமாய் சம்பாதித்து தருகிறீர்கள், டாக்டரிடம் கொண்டு சென்றாலும் கேட்கும் தட்சணையை தருகிறீர்கள், குளிப்பாட்டி உணவூட்டி, பாடம் சொல்லி கொடுத்து ஆயாவிடம் விட்டாலும் மாதத்திற்கொருமுறை விருந்துபசாரம் செய்கிறீர்கள், இவை எதுவும் இல்லாமல் கேட்காமல் இவையனைத்தையும் செய்யும் மனைவியிடம் எப்படி இன்னொரு பெண் மேல் ஆசை வந்ததென்றும், நீ வசீகரமாய் இல்லையென்றும் கூற விழைகிறீர்கள்????
...
...
...
ச்ச...முடியல!!!!!



.

23 comments:

  1. enna aacchu ? something wrong with annu

    ReplyDelete
  2. கூல் டவுன் சகோ... கோபத்துல எழுதின மாதிரி இருக்கு, கொஞ்சம் பொறுமையா யோசிச்சு பாருங்க..

    ReplyDelete
  3. //கொஞ்சம் பொறுமையா யோசிச்சு பாருங்க..//
    என்னத்த யோசிக்க சொல்றீங்க பாலாஜி சார். போறவன எப்படி கால்ல விழுந்து கூப்பிடறதுன்னா. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.

    ReplyDelete
  4. //enna aacchu ? something wrong with annu//கரக்டாக தானே எழுதி இருக்காங்க...

    ஆனால் எல்லொருமே அப்படி சொல்ல முடியாது...சில பேர் அப்படி தான்...

    ReplyDelete
  5. வீட்டுக்கு வீடு வாசப்படி

    ReplyDelete
  6. இதுவும் கடந்து போகும்!

    ReplyDelete
  7. இவை எதுவும் இல்லாமல் கேட்காமல் இவையனைத்தையும் செய்யும் மனைவியிடம் எப்படி இன்னொரு பெண் மேல் ஆசை வந்ததென்றும், நீ வசீகரமாய் இல்லையென்றும் கூற விழைகிறீர்கள்???? //


    பெரியார் சொன்னதுதான் பதில்..

    சும்மா கற்பு என பயந்து ஒடுங்கி இருப்பதால் தான் சிலருக்கு இத்தனை திமிர் வரக்காரணம்..

    அதே செயலை அப்பெண்ணும் செய்வாளானால் , அல்லது செய்ய கூட வேண்டாம் , செய்வது போல் ஒரு பாசாங்கு காட்டினாலே போதும் வழிக்கு வருவார்கள் இத்தகைய ஆண்கள்..குட்ட குட்ட குனிவதால் வரும் திமிர்..க்ர்ர்ர்ர்

    இப்படித்தான் ஒருவர், வாழவே பிடிக்கல , வீட்டில நிம்மதி இல்ல , மனைவி , மக்கள் என்னை வெறுக்கிறாங்க னு பில்டப் செய்தார்..

    நாங்க சிலர் ஆறுதல் கூறினோம்.. கடசியில் பார்த்தா அவருக்கு மகளை/னை விட வயது குறைவான பெண்ணை 2வது தடவை மணமுடிக்கணுமாம்.. அதுக்கு குடும்பத்தில் சம்மதம் தரலியாம்.. இஸ்லாத்தில் தப்பில்லையாம்..


    வந்ததே கோபம் எங்களுக்கு.. !!!!!!!!!

    ஆணாதிக்கம் உள்ளவரை இவை தொடரும் பல மதத்தின் பெயராலும்..

    ReplyDelete
  8. கொஞ்சம் ஏமாளியாக இருந்தால் கேட்பார்கள். ஏமாறாமல் இருக்க கற்றுக்கொடுங்கள். திருப்பி அடித்தால் திருந்தலாம். பாம்பு கொத்துவதற்கு யோசிக்க வேண்டும் சீற யோசிக்கத்தேவையில்லை

    ReplyDelete
  9. //அனாமிகா துவாரகன் said...
    //கொஞ்சம் பொறுமையா யோசிச்சு பாருங்க..//
    என்னத்த யோசிக்க சொல்றீங்க பாலாஜி சார். போறவன எப்படி கால்ல விழுந்து கூப்பிடறதுன்னா. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.//

    அனாமிகா மேடம், அன்னு சகோ சொன்னது ஒட்டு மொத்த ஆண்களையும் குறிப்பிட்டு சொல்ற மாதிரி இருந்தது அதனாலதான் அப்படிச் சொன்னேன். என் புரிதல் தவறாகவோ, இல்லை சொல்லவந்த விஷயம் தவறாக புரிந்து கொள்ளுமளவிற்கு நான் சொன்ன வரிகளோ இருக்குமானால் என்னை மன்னிக்க!

    ReplyDelete
  10. கேள்விகளுக்கு பதில் கிடைக்கட்டும்..

    ReplyDelete
  11. நீங்கள் அந்த தாய்க்கும்
    பிள்ளைகளுக்கும் செய்யும் உதவிக்கு கடவுள் உங்களை ஆசிர்வதிப்பார் அன்னு,
    they are blessed with a caring kind neighbour

    ReplyDelete
  12. I agree with your feelings. While we are gifted (just like our spouses), when we hear stories like these, a fear comes in the mind.

    //காலாகாலத்திற்கும் குழந்தைகளையும், கணவனையும் அவனின் உடன்பிறப்புக்களையம் பெற்றோர்களையும் கவனித்துக் கொண்டே தன் வலிமையையும், உயிரையும் கொஞ்சம் கொஞ்சமாக இழக்கிறார்கள... விழுந்தாலும் அடுத்த பெண்ணை நோக்க ஆரம்பித்து விடுகின்றனர். இதற்கு பெற்ற தாய் முதல் மாமியார் வரை பொறுத்திருக்க சொல்வதென்னவோ பெண்ணைத்தான். எங்கே வந்ததிந்த நியாயம்???????????//

    That's why women's rights movements sprung up. But still...

    (Sorry for english. me too very busy now....)

    ReplyDelete
  13. ஆஹா. இப்படி தெளிவா எழுதறது. நீங்க வேற எப்படியோ சொன்ன மாதிரி தோனிச்சு. எப்பவும் கலர் கண்ணாடி போட்டுட்டு தேடறேன் போல. சண்டைக்கு இழுத்தாலும் இப்படி சமாதானமானால் எப்படி. ஒரு வாடி சண்டைக்கு வருவது தானே. சாரிங்க. நானும் கொஞ்சம் அவரசப்பட்டே முடிவுக்கு வந்த மாதிரி இருக்கு.

    ReplyDelete
  14. ஏஞ்சலின் சொன்னதை கன்னாபின்னாவென்று வழிமொழிகிறேன்.

    ReplyDelete
  15. அன்னு,யாருக்கு என்னாச்சு?ஏன் இந்த பதிவு?
    உங்களைச்சுற்றி மட்டும் இல்லை,இது நிறைய இடத்தில் இருக்கு,கவலைப் படாதீங்க,பட்டு தான் திருந்துவாங்க சில பேர்.அன்னு இந்த பிஸியிலும் வந்திட்டு போயிருக்கீங்க,மிக்க நன்றி.

    ReplyDelete
  16. @கார்த்திண்ணா,
    எனக்கு ஒன்றுமில்லை. ஒரு வேளை சரியாக எழுதவில்லையோ??
    நன்றி :)

    @பாலாஜிண்ணா,
    நான் எல்லா ஆண்களும் இப்படி என்று சொல்லவில்லை. ஆனால் முக்கால்வாசி பேர் இப்படித்தான் வேறிடம் தேட ஆரம்பிக்கிறார்கள் சீக்கிரமே!!
    நன்றி :)

    @அனாமிகா,
    காலேஜ் புத்தகத்தை ஒழுங்கா படிக்கலைன்னா சொல்லலாம். இங்கயுமா...ஹெ ஹெ ஹெ... !!
    நன்றி :)

    @கீதாக்கா,
    ரெண்டு வாரமா யோசிக்கறேன், உங்களுக்கு ஃபோன் செய்ய. யோசிக்கவே நேரம் சரியா இருக்கு. எங்க இருந்து செய்ய!! ஆமாக்கா. இன்றைய சூழ்நிலைல சிலபேர்தான் உண்மையா இருக்காங்க. :(
    நன்றி :)

    @சித்ராக்கா,
    உண்மை!!
    நன்றி :)

    @ஷங்கர்ண்ணா,
    என்னது, வரவர உங்ககிட்ட பழைய கேலி கிண்டலெல்லாம் குறைஞ்சிட்டே போகுது!!
    நன்றி :)

    @சாந்திக்கா,
    //அதே செயலை அப்பெண்ணும் செய்வாளானால் , அல்லது செய்ய கூட வேண்டாம் , செய்வது போல் ஒரு பாசாங்கு காட்டினாலே போதும் வழிக்கு வருவார்கள் இத்தகைய ஆண்கள்..குட்ட குட்ட குனிவதால் வரும் திமிர்..க்ர்ர்ர்ர்//
    அப்புறம் பெண்ணுக்கும் ஆணுக்கும் என்ன வித்தியாசம்? கற்பு மட்டும் அல்ல, குழந்தைகள், குடும்பம், பெற்றோர்கள் என எல்லோரையும் யோசித்து எந்த ஒரு முடிவும் எடுக்க பெண்ணால் மட்டுமே முடியும், சில ஆண்களும் உண்டு. ஆனால் பல ஆண்கள் இன்னும் சில பெண்கள், தங்கள் மன இச்சையே சரி என்று வாழ்கிறார்கள். என்ன செய்ய!!

    //நாங்க சிலர் ஆறுதல் கூறினோம்.. கடசியில் பார்த்தா அவருக்கு மகளை/னை விட வயது குறைவான பெண்ணை 2வது தடவை மணமுடிக்கணுமாம்.. அதுக்கு குடும்பத்தில் சம்மதம் தரலியாம்.. இஸ்லாத்தில் தப்பில்லையாம்..//
    நீங்கள் கூறும் நபரின் சூழ்நிலை என்ன என்பது எனக்கு தெரியாது. ஆனால், இஸ்லாத்தில் இதற்கு இடமுண்டு. அதை நான் ஆட்சேபிக்கவும் இல்லை. நான் குறிப்பிட்ட அந்த ஆள், இன்னொரு மணமான பெண்ணை ‘உற்று நோக்க’ ஆரம்பித்துள்ளார், அதுதான் பிரச்சினை!.
    நன்றி :)

    @சாகம்பரி அக்கா,
    கண்டிப்பாக. நம்மால் முடிந்த மனோதிடத்தை அளித்துக்கொண்டுதான் உள்ளோம். இறைவன் நல்வழி காட்டினால் சரி!!
    முதல் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி :)

    @அமைதிச்சாரலக்கா,
    தங்கள் பிரார்த்தனைக்கு நன்றி :)

    @ஏஞ்சலின்,
    கடவுள்கிட்ட மட்டும்தானே கூலி எதிர்பார்க்க முடியும். :)
    நன்றி :)

    @கோபிண்ண,
    What to do :(( !!!
    நன்றி :)

    @ஹுஸைனம்மா,
    பெண்கள் முன்னேற்ற கழகங்களா.. ஹெ ஹெ ஹெ... நான் அவை அனைத்தோடும் ஒத்துப்போபவள் அல்ல. அதே பெண்கள் அமைப்புகள் நாளை ஹிஜாபுக்காக எதிரணியில் நிற்கும், காசுக்காக அலையும் நடிகைக்கும் ஒத்து ஊதும், இன்னும் எத்தனையோ!! பெண்கள், ஆணுக்கெதிராக அல்லாமல், ஆணைக்கவரும் விதத்தில் நடந்து கொள்ளாமல் இருந்தாலே போதும், உலகம் உருப்பட்டு விடும்!!
    நன்றி :)

    @லக்‌ஷ்மிம்மா,
    மனைவியை 24/7 வேலைக்காகவும், நேசத்திற்காகாவும், ஸ்பரிசத்திற்காகவும் உபயோகித்துவிட்டு அடுத்த பெண்ணை தேடும் ஆண்கள் மேல்... சில நேரங்களில் இந்த இடத்தை இப்பொழுது பெண்களும் போட்டி போட்டுக்கொண்டு அடைகிறார்கள், அவர்கள் அனைவரின் மேலும், but, what to do??
    நன்றி :)

    @ஏஞ்சலின்,
    ஆக மொத்தம் படிக்கறதை உட்டுட்டு அரசியல்வாதியைப் போல எல்லாமே செய்யற. அப்பாவோட ஃபோன் நம்பர் இருக்கா???
    ஹெ ஹெ :)

    @ஆஸியாக்கா,
    என் தோழியின் கதை. என்ன செய்ய எல்லா இடத்திலும் இருக்கறப்ப அது செய்தியா போயிடுது, நம்மகிட்ட வர்றப்பதான் அதோட தாக்கம் புரியுது!!
    நன்றி :)

    ReplyDelete
  17. அனிஷா, மகளிர் இயக்கங்களை நானும் முழுமையாக ஆதரிப்பதில்லை, நீங்கள் குறிப்பிட்ட காரணங்களால்தான். என் கருத்து, அடக்குமுறை அதிகமாகும்போதுதான், இம்மாதிரியான விடுதலைவேட்கை இயக்கங்கள் வருகின்றன. பின்னர், தம் நோக்கத்தை விட்டு சிதைந்து போகின்றன. மகளிர் காவல் நிலையங்கள் இதற்கு சரியான உதாரணமாகும்.

    ReplyDelete
  18. காலாகாலத்திற்கும் குழந்தைகளையும், கணவனையும் அவனின் உடன்பிறப்புக்களையும் பெற்றோர்களையும் கவனித்துக் கொண்டே தன் வலிமையையும், உயிரையும் கொஞ்சம் கொஞ்சமாக இழக்கிறார்கள், பெண்கள். ஆண்களோ, பெண்ணிடம் சிறிது தொய்வு தெரிந்தாலும், உடலில் சில சுருக்கங்கள் விழுந்தாலும் அடுத்த பெண்ணை நோக்க ஆரம்பித்து விடுகின்றனர். இதற்கு பெற்ற தாய் முதல் மாமியார் வரை பொறுத்திருக்க சொல்வதென்னவோ பெண்ணைத்தான். எங்கே வந்ததிந்த நியாயம்???????????

    கேள்வியில் நெருப்பு இருக்கிறது! அருமையாய் வார்த்தை வந்து விழுந்திருக்கிறது. அன்றிலிருந்து இன்று வரை இந்த நிலைமைதான் மாறவில்லை அன்னு! ஒரே வித்தியாசம், இன்று பெண்கள் கேள்வி கேட்க ஆரம்பித்திருக்கிறார்கள். மெளனப்புரட்சி செய்யவும் ஆரம்பித்திருக்கிறார்கள்!

    ஒரு தாய்க்காக, அவர்கள் குழந்தைக்கு உதவும் உங்கள் மனதுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்! ‌

    ReplyDelete
  19. @ஹுஸைனம்மா,
    சரியாத்தான் சொன்னீங்க. இது போல இன்னும் சிலவற்றையும் மனதில் வைத்துத்தான் முதல் பின்னூட்டம்.
    நன்றி :)

    @மனோ அக்கா,
    உங்களின் வரவுக்கும், வாழ்த்துக்கும் நன்றி :)

    ReplyDelete
  20. பாம்பு கொத்துவதற்கு யோசிக்க வேண்டும் சீற யோசிக்கத்தேவையில்லை//
    என் கருத்தும் அதுதான்.

    ReplyDelete

உங்கள் கருத்துக்கள்...