ஒரு கொலைகாரனின் பேட்டி - 1 (உண்மைச் சம்பவம்)

Thursday, April 14, 2011 Anisha Yunus 8 Comments

”டொக்”
டேப் ஆன் செய்யப்பட்டது. ரிக்கார்டு பட்டன் அழுத்தப்படுகிறது.

“அஸ் ஸலாமு அலைக்கும் றஹ்மஹ்த்துல்லாஹி வ பரக்காத்துஹூ”
“வ அலைக்கும் அஸ் ஸலாம் வ றஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ”

“அப்துல்லாஹ் பாய், உங்களுக்கு தெரிந்திருக்கும். ஃபுலாட்டிலிருந்து ‘அர்முகான்’ என்னும் இதழ் வெளியாகிறது. அதில் உங்களைப்பற்றி எழுத உள்ளோம். உங்களைப்பற்றி எங்கள் ’அர்முகான்’ நேயர்களுக்கு கொஞ்சம் சொல்லுங்களேன்”
“அஹ்மது பாய்...”

(கண்களிலிருந்து வழியும் நீரை துடைக்கிறார். விசும்பும் ஒலி கேட்கிறது)

“என்னைப்பற்றி கேட்டு உங்கள் நேயர்களை ஏன் நோகடிக்க விரும்புகிறீர்கள்??, என்னைப்போல ஒரு பாதகனை, கொடியவனைப் பற்றி சொல்லி என்னவாகப்போகிறது??”

(விசும்பும் ஒலி கேட்கிறது)

“அழாதீர்கள். ப்ளீஸ். உங்களைப்பற்றி என் தந்தை மௌலானா கலீம் சித்திகி அவர்கள் ’இறைவனின் அதிசயம்’ என கூறிய பின்பே தங்களைப்பற்றி பேட்டி எடுக்கும் ஆவல் வந்தது. சொல்லுங்கள்...”
உங்கள் தந்தைக்கு இறைவன் நிறைய ஆயுள் தந்து அருள் புரியட்டும். என் எஜமானனைப் போன்று அவர். அவரின் விருப்பம் இது என்றால் நான் தடை செய்யவில்லை...கேளுங்கள், என்ன கேட்க விரும்புகிறீர்கள்??

“உங்களைப் பற்றி சொல்லுங்கள்...”
இந்த உலகம் ஆரம்பித்தது முதல் ஒரு கொடிய, மிருகத்தனமான, இரக்கமற்ற, அரக்க குணமுள்ள மனிதன் ஒருவன் இருந்திருக்கிறான் என்றால் அது நானே. அதுதான் என்னைப்பற்றிய முன்னுரை..

“நீங்கள் உணர்ச்சி பூர்வமாக பேசுகிறீர்கள். சரி உங்களின் பிறப்பு, குடும்பம் பற்றி கூறுங்கள்..”
நான் 42 அல்லது 43 வருடங்களுக்கு முன் முஜாஃபர் நகர் என்னும் மாவட்டத்தில் (உத்தரப்பிரதேசம்) மாடு மேய்க்கும் 'ஆஹிர்’ ஜாதியில் பிறந்தேன். புதானா என்பது என் ஊரின் பெயர். அங்கே முஸ்லிம் ராஜ்புத்கள் அதிகம். என் குடும்பமோ மிக மிக ஆச்சாரமான ஹிந்து குடும்பம். சிறிது கிரிமினல் பேக்கிரவுண்டும் உண்டு. கொலை செய்வது, கொடுமை செய்வது, அதிகாரம் செய்வது என்பதெல்லாம் என் தொட்டில் பழக்கம் எனலாம். அப்படிப்பட்டது, நான் வளர்ந்த சூழ்நிலை. என் பெரியப்பாவும், தந்தையும் இம்மாதிரியான் ஒரு கும்பலுக்கு தலைவர்கள்.

1987இல், மீரட்டில் வசிக்கும்போது அந்த நேரம் கலவரம் நடந்து கொண்டிருந்தது. என் தந்தையும், நானும் எங்கள் உறவினர்களுக்கு பாதுகாப்பாளர்களாய் இருந்தோம். அந்நாட்களில் கிட்டத்தட்ட 25 முஸ்லிம்களையாவது நாங்கள் கொன்றிருப்போம். அதன் பின் நான் பஜ்ரங்தள்லிலும் சேர்ந்தேன், முஸ்லிம் எதிர்ப்பு அலையை வளர்க்கவே சேர்ந்தேன். 1990இல் ஷாம்லியில் வசிக்கும்போது இன்னும் அதிகமான முஸ்லிம்களை கொன்று குவித்தேன். அப்பொழுது பாபரி மஸ்ஜித்தின் பிரச்சினையும் நடந்து கொண்டிருந்தது எனக்கு வசதியாய் போனது. மீண்டும் 1992இல் நான் புதானாவிற்கே வந்தேன். அங்கேயும் முஸ்லிம்களை கண்டால் கொல்ல ஆரம்பித்தேன். எங்கள் ஊரிலேயே ஒரு முஸ்லிம் இளைஞன் இருந்தான். அவனின் ஐவேளை தொழுகையும், நேர்மையும், பணிவான முகமும் எங்களாட்களுக்கு பயம் தர ஆரம்பித்தது. நானும் என் நண்பர்களும் குழு அமைத்து, கூட்டாக அவனை சுட்டுக் கொன்றோம். இந்தளவு முஸ்லிம்களைக் கண்டால் வரும் எரிச்சலானது, இறுதியில் என்னை ஒரு கொடியதிலும் கொடிய குற்றத்தை செய்ய வைத்தது...

(அழும் சப்தம் கேட்கிறது)

என்னைப்போல ஒரு மிருகம், அரக்கன் இந்த வானத்தின் கீழ் வாழ்ந்திருக்கவும் மாட்டான், பிறந்திருக்கவும் மாட்டான்..."

(அழுகை அதிகமாகிறது)

“சரி, இஸ்லாத்திற்கு எப்படி வந்தீர்கள் என்பதை சொல்லுங்கள்”
திருக்குர்’ஆனில் 30வது அத்தியாயத்தில் அல்லாஹ் நெருப்பின் குழியில் விழும் மனிதர்களைப் பற்றி பேசுகிறான் அல்லவா?? அது என்னைப் பற்றியே... அங்கே மக்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளதுதான் வினோதம், ஏனேனில் நான் ஒருவனே அந்த அத்தியாயத்தில் குறிப்பிடப்படுபவன் போலுள்ளவன், நீங்கள் வேண்டுமானால் அந்த ஆயத்தை ஓதிப் பாருங்கள்.

 “நீங்களே ஓதுங்கள்”

"قُتِلَ أَصْحَابُ الْأُخْدُودِ"

இப்ப, அரபியில் நாம் ‘நெருப்பில் விழுந்த மனிதர்களின் மேல் இறைவன் தன் கருணையை இறக்கினான்’ என்று எப்படி சொல்வோம்??

“ரஹம் அஸ்ஹாபல் உக்ஹ்து..”
ஆம். ஆனால், அந்த வசனம் என்னை குறிப்பிடுவதாக இருந்தால் நான்தான் அந்த ‘ரஹம் அஸ்ஹாபல் உக்ஹ்து’..

“அந்த சம்பவத்தைப் பற்றி கூறுங்கள்”
அதை சொல்லத்தான் நானும் நினைக்கிறேன். ஆனால் எங்கேயிருந்து ஆரம்பிப்பது என்றுதான் தெரியவில்லை. இந்தளவு கடினமானதாய் வளர்க்கப்பட்ட என் இருதயம் கூட அந்த கதையை கூற தைரியமற்றுப் போகிறது.

“தவிர்க்காதீர்கள். நான் வற்புறுத்துவேன், ஏனெனில் இதில் நிறைய மனிதருக்கு படிப்பினை இருக்கக்கூடும்.”
கண்டிப்பாக... என் மேல் கூட இறைவனின் கருணை ஏற்பட்டு நானே இஸ்லாத்தில் வந்துவிட்டேன் என்றால் மற்ற மனிதர்களின் மேலும் இறைவனின் கருணை விழாமலிருக்க காரணமே இல்லை...”

...

...

“...அஹ்மது பாய், கேளுங்கள் சொல்கிறேன்...”

==================================================================
என்ன இது, இப்படி ஒரு பதிவு என்று எல்லோரும் நினைக்கக்கூடும். இது ஒரு உண்மையான பதிவு. பதிவு முழுதும் உண்மையான நகரங்கள், இடங்கள், குறிப்பிடப்படுபவைகளுக்கு லின்க் தரப்படும். இந்த பதிவிலும் குறிப்பிடப்பட்டுள்ள மௌலானாவையும் ஃபேஸ்புக்கின் லின்க்கோடு இணைத்துள்ளேன். இப்படி ஒரு பேட்டி வந்ததாக எந்த தொலைக்காட்சியிலும் பார்க்கவில்லையே என்போருக்கு, இந்த பேட்டி ஒரு புத்தக தொகுப்பாகவும் வந்துள்ளது. இப்படிப்பட்ட மனிதர் கைதாகவில்லையா என்றால்.... இது நடந்தது, இது போல நடப்பதும் இந்தியாவில் சில காலமாய் சகஜமாகி விட்டது. :(

இந்த பேட்டியை கேட்கும்போது இருந்த அதிர்ச்சி, முடிக்கும்போது வெடித்த அழுகையாய் மாறியது. பேட்டியின் முடிவில் ஒலி வடிவ லின்க்கும் தருகிறேன், இன்ஷா அல்லாஹ். இதை கேட்டவுடன் மனதில், இதை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று தோணியதால் மட்டுமே பகிர்கிறேன். ஹிந்தியிலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு, பின் தமிழுக்கு வருவதால் சில வார்த்தைகள் மாறியிருக்கலாம். முடிந்தவரை சரியாக தர முயல்கிறேன்.

புத்தக தொகுப்பு (ஹிந்தியில்) கிடைக்குமிடம்:
Naseem e hidaayat ke jhonke part 1
English Name : Breeze of the Guidance
Compiler : Mohammed Yusuf Usman Nadvi
Pages : 260
Year of  Publication : 2010
Price Rs 100/- (One Hundred Rupees only)
Name of Book Suppliers:- 
  1. Jamia-Tul-Imam Wali-ullah Al-Islamia, Phulat, Distt. Muzaffar Nagar. 
  2. Dar-E-Arqam, Batla House, Okhla Head, New Delhi-110025. 
  3. Maktaba Shah Wali-ullah, Batla House, Okhla Head, New Delhi-110025.
    .

    8 comments:

    1. இது முன்பே மெயிலில் பார்த்ததாக நினைவு அன்னு.

      ReplyDelete
    2. நல்ல பகிர்வு. நன்றி, அன்னு!

      ReplyDelete
    3. மெயிலில் வந்த ஒலித்தொகுப்பு இந்தியில் இருந்ததால், முழுமையாகப் புரியவில்லை. நடந்தவற்றைத் தெரிந்துகொள்ள ஆவலாக இருக்கிறேன். வன்முறையைக் கையிலெடுப்பவர்கள் எல்லாருமே இப்படி திருந்தும் காலம் வர இறைவன் கருணை புரியட்டும்.

      ReplyDelete
    4. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

      அதிரடி பேட்டியாகத்தான் இருக்கிறது. விறுவிறுப்பாக எழுதி உள்ளீர்கள்,சகோ.அன்னு. தொடர்ந்து படிக்க ஆவல்.

      //இப்படிப்பட்ட மனிதர் கைதாகவில்லையா என்றால்....//---இவர் இந்திய சட்டங்களுக்கு கட்டுப்பட்டு, செய்த கொலைக்குற்றங்களுக்கு தண்டனையை எதிர்நோக்கி மறுமை சிந்தனையுடன் சட்டத்தின் முன் சரணடைந்துதான் இருந்திருக்க வேண்டும்.

      ('சரணடைந்தாலும்... ஒப்புதல் வாக்குமூலம் தந்தாலும்... இந்திய சட்டத்தின் மூலம் தம் கொலைக்குற்றங்களுக்கு தமக்கு தண்டனை ஏதும் வராது' என்பதை அசீமானந்தா மூலம் அறிந்து கொண்டாரோ..!?!?!)

      ReplyDelete
    5. வன்முறை குறைந்து மனிதம் பெருகட்டும்.

      ReplyDelete
    6. @ஆஸியாக்கா.
      ஆமாம்க்கா. அதே கதைதான் இங்கும்.
      நன்றி :)

      @சித்ராக்கா,
      கண்டிப்பாக தொடர்ந்து படியுங்கள். நிறைய தகவல்கள் கிடைக்கும்.
      நன்றி :)

      @ஹுஸைனம்மா,
      உங்கள் து’ஆவிற்கு ஆமீன்.
      இன்ஷா அல்லாஹ், சீக்கிரமே தொடருகிறேன்.
      நன்றி :)

      @முஹம்மது ஆஷிக் பாய்,
      வ அலைக்கும் அஸ் ஸலாமு வ றஹ்மத்துல்லாஹ்,
      அவர் சரணடையும்போது ஹிந்துவாக இருந்தாலும் சரி, முஸ்லிமாக இருந்தாலும் சரி, இன்னும் பல தலைகள் உருளும் வாய்ப்புள்ளது அதனால் அப்படி சாவதற்கு பதில் வேறென்ன முடிவெடுத்தார் என்பதை பொறுத்திருந்து காணுங்கள்.
      வருகைக்கு நன்றி :)

      @ஸ்ரீராம் அண்ணா,
      தங்கள் பிரார்த்தனையை இறைவன் ஏற்றுக் கொள்வானாக.
      நன்றி :)

      ReplyDelete
    7. அன்னு நான் இது வரை படித்திராதது எல்லாவற்றையும் படிகக் ஆவலாக இருக்கிறேன்,.
      ஓவ்வொரு பதிவாக வந்து படிக்கிறேன்

      ஹிந்தியில் இருந்து ஆங்கிலம் பிறகு தமிழில் என்றால் நீங்கள் எவ்வளவு சிரம் எடுத்துஇந்த பதிவை அழ்காக எங்களுக்கு வழங்கி இருக்கீங்க,

      ReplyDelete
    8. அல்ஹம்துலில்லாஹ் ,,,

      ReplyDelete

    உங்கள் கருத்துக்கள்...