[தி ஹிந்து] தாக்கரே மறைவிற்கு ஏன் என்னால் இரங்கல் தெரிவிக்க இயலாது?
பால் தாக்கரேயின் மரணத்திற்கு அநேகமாக ஒபாமாவையும் விளாடிமிர் புடினையும் தவிர
எல்லோரும் இரங்கல் தெரிவித்துவிட்டனர். இறந்தவர்கள் குறித்து நல்ல வார்த்தை
சொல்வது ன்றொரு மரபு நமக்குண்டல்லவா? ஆனால் இறந்து போனார் என்பதற்காகக்கூட
என்னால் இந்த மனிதனைப் பற்றி நல்லவார்த்தை கூற இயலாது என்கிறார் நமது
மரியாதைக்குரிய நீதியரசர் மார்க்கண்டேய கட்ஜு.
அதற்கு அவர் சுட்டும் காரணம் தாக்கரேயின் "மண்ணின் மைந்தர்" கொள்கைதான்.
அது நமது அரசியல் சட்டத்திற்கு மட்டுமல்ல, அடிப்படை மனித நெறிகளுக்கே
அப்பாற்பட்டது. அப்படி மண்ணின் மைந்தர்கள்தான் இங்கே வாழமுடியும் என்றால்
பில்கள், கோண்டாக்கள், சந்தாலிகள், தோடர்கள்தான் இங்கே வாழ இயலும்.
இந்தியத் துணைக்கண்டமும் வட அமெரிக்காவைப்போல ஒரு குடியேறிகளின் நாடு
என்பதை மறந்து விடலாகாது என்கிறார் கட்ஜு. ஆரியர்கள் மட்டுமல்ல
திராவிடர்களும் கூட ஒரு வகையில் இன்னும் பழமையான வந்தேறிகள்தானே.
தாக்கரேயின் அரசியலுக்கு ஜனநாயக நெறிமுறைகளில் இடமில்லை. குண்டர்கள், உதிரிகள் ஆகியோரைத் திரட்டி ஒரு வெறுப்பு அரசியலைக் கட்டமைத்தவர் தாக்கரே. அவரது முதல் இலக்கு தொழிற்சங்கங்களுக்கு எதிராகத் தொடங்கியது. தொழிற்சங்கங்களும் கம்யூனிசமும் மராத்தா வலிமையைப் பலவீனமாக்கும் என்பது தாக்கரேயின் இட்லர் இரசியல். அடுத்து அந்த இலக்கு தென்னிந்தியர்களை, குறிப்பாகத் தமிழர்களை நோக்கித் திரும்பியது. தமிழ் உழைக்கும் வர்க்கம் இலக்காக்கப்பட்டது. அடுத்து அவரது இலக்கு முஸ்லிம்கள். பாபர் மசூதி இடிப்பை ஒட்டி மும்பையில் ஏற்பட்டக் கலவரத்தில் சிவசேனா ரவுடிக் கும்பல்கள் முஸ்லிம்களை வெட்டிச் சாய்த்தன. ஶ்ரீகிருஷ்ணா ஆணையம் தாக்கரேயைக் குற்றம் சாட்டியும், அவர் மீது வழக்குகள் பதியப்பட்டும் சாகும்வரை காவல்துறை தாக்கரேயை நெருங்கவில்லை. மலேகான் குண்டு வெடிப்பில் கைதான சாமியாரிணி பிரக்ஞா தாகூர், இராணுவ அதிகாரி உபாத்யாயா போன்ற பயங்கரவாதிகளின் பின் இந்துச் சமூகம் திரள வேண்டும் எனப் பகிரங்கமாக அறிவித்தார் தாக்கரே. ஒரு நிமிடம் சிந்தித்துப் பாருங்கள் , தீவிரவாதக் குற்றம்சாட்டப்பட்டுள்ள ஒரு முஸ்லிமின் பின்னால் முஸ்லிம் சமூகமே திரளவேண்டும் என இங்கே ஒரு முஸ்லிம் தலைவர் வாய்திறக்க இயலுமா?
தாக்கரேயின் அடுத்த இலக்கு பீஹாரிகள் முதலான புலம்பெயர் தொழிலாளிகள் மீது திரும்பியது.
இலக்குகளைத் தொடர்ந்து மாற்றிக்கொண்டிருந்த தாக்கரே தனது குண்டர் அரசியலையும், கொடும் வெறுப்புப் பேச்சுக்களையும் மட்டும் இறுதிவரை மாற்றிக்கொள்ளவில்லை.
இட்லரை வெளிப்படையாகப் புகழ்ந்து பேசிய தாக்கரேயைத் தன் ரோல்மாடல் எனச் சொல்லிக்கொண்டு தமிழகத்தில் ஒரு இயக்கம் காலூன்ற முயற்சிக்கும் இத்தருணத்தில், கட்ஜுவின் இக்கட்டுரை நம் கவனத்திற்குரியதாகிறது.
தாக்கரேயின் அரசியலுக்கு ஜனநாயக நெறிமுறைகளில் இடமில்லை. குண்டர்கள், உதிரிகள் ஆகியோரைத் திரட்டி ஒரு வெறுப்பு அரசியலைக் கட்டமைத்தவர் தாக்கரே. அவரது முதல் இலக்கு தொழிற்சங்கங்களுக்கு எதிராகத் தொடங்கியது. தொழிற்சங்கங்களும் கம்யூனிசமும் மராத்தா வலிமையைப் பலவீனமாக்கும் என்பது தாக்கரேயின் இட்லர் இரசியல். அடுத்து அந்த இலக்கு தென்னிந்தியர்களை, குறிப்பாகத் தமிழர்களை நோக்கித் திரும்பியது. தமிழ் உழைக்கும் வர்க்கம் இலக்காக்கப்பட்டது. அடுத்து அவரது இலக்கு முஸ்லிம்கள். பாபர் மசூதி இடிப்பை ஒட்டி மும்பையில் ஏற்பட்டக் கலவரத்தில் சிவசேனா ரவுடிக் கும்பல்கள் முஸ்லிம்களை வெட்டிச் சாய்த்தன. ஶ்ரீகிருஷ்ணா ஆணையம் தாக்கரேயைக் குற்றம் சாட்டியும், அவர் மீது வழக்குகள் பதியப்பட்டும் சாகும்வரை காவல்துறை தாக்கரேயை நெருங்கவில்லை. மலேகான் குண்டு வெடிப்பில் கைதான சாமியாரிணி பிரக்ஞா தாகூர், இராணுவ அதிகாரி உபாத்யாயா போன்ற பயங்கரவாதிகளின் பின் இந்துச் சமூகம் திரள வேண்டும் எனப் பகிரங்கமாக அறிவித்தார் தாக்கரே. ஒரு நிமிடம் சிந்தித்துப் பாருங்கள் , தீவிரவாதக் குற்றம்சாட்டப்பட்டுள்ள ஒரு முஸ்லிமின் பின்னால் முஸ்லிம் சமூகமே திரளவேண்டும் என இங்கே ஒரு முஸ்லிம் தலைவர் வாய்திறக்க இயலுமா?
தாக்கரேயின் அடுத்த இலக்கு பீஹாரிகள் முதலான புலம்பெயர் தொழிலாளிகள் மீது திரும்பியது.
இலக்குகளைத் தொடர்ந்து மாற்றிக்கொண்டிருந்த தாக்கரே தனது குண்டர் அரசியலையும், கொடும் வெறுப்புப் பேச்சுக்களையும் மட்டும் இறுதிவரை மாற்றிக்கொள்ளவில்லை.
இட்லரை வெளிப்படையாகப் புகழ்ந்து பேசிய தாக்கரேயைத் தன் ரோல்மாடல் எனச் சொல்லிக்கொண்டு தமிழகத்தில் ஒரு இயக்கம் காலூன்ற முயற்சிக்கும் இத்தருணத்தில், கட்ஜுவின் இக்கட்டுரை நம் கவனத்திற்குரியதாகிறது.
நன்றி: தி ஹிந்து -- 19/11/2012
#ம்ம்ம்.... ஜட்ஜ் கட்ஜூவின் மன தைரியம் பாராட்டுக்குரியது. பாராட்டுக்கள் சார்!
salam!
ReplyDeletebest article!
Thanks Mr kadju!
வ அலைக்கும் அஸ் ஸலாம் பாய்.
Deleteyes....An eye opener for those who blindly follow the media :)
Thanks for your inputs. :)
wa Salam.
சகோ.உண்மைகள்,
ReplyDeleteகேள்விகளெல்லாம் சரிதான். ஆனால் எதிர்மறையான பதிலை கொடுத்தால் நாமெல்லாம் ‘தேசத்துரோகிகள்’ ஆகிவிடுவோமே இந்த நல்லவர்கள் முன்??
இதையும் பாருங்கள்:
---------------------------------------------------------தாக்கரேவுக்கு எதிராக ஃபேஸ்புக்கில் கமெண்ட் போட்ட பெண், லைக் கொடுத்த பெண் கைது
---------------------------------------------------------
ஃபேஸ்புக்கில் அவர் கூறியிருப்பதாவது,
தினமும் ஒரு தாக்கரே பிறந்து, இறக்கிறார். அதற்காக எல்லாம் பந்த் நடத்தக் கூடாது என்று தெரிவித்துள்ளார்.
இதற்கு ஃபேஸ்புக்கில் ஒரு பெண் லைக் கொடுத்திருந்தார். இந்த தகவலைப் பார்த்த சிவ சேனா தொண்டர்கள் கொதிப்படைந்தனர். இதற்கிடையே ஃபேஸ்புக்கில் கமெண்ட் போட்ட பெண், அதை லைக் கொடுத்த பெண் ஆகிய இருவர் மீதும் போலீசார் வழக்குப் பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.
http://tamil.oneindia.in/news/2012/11/19/india-woman-arrested-posting-anti-thacker-comment-facebook-164872.html
:((
அஸ்ஸலாமு அலைக்கும்,
ReplyDeleteசாட்டையடி...பகுக்கும் நன்றி..
வ அலைக்கும் அஸ் ஸலாம் ஆஷிக்.
Deleteகருத்துக்கு நன்றி. :)
“நாம் வாழ்வது ஜனநாயக நாட்டில்,
ReplyDeleteபாசிச சர்வாதிகார நாட்டில் அல்ல!”
– மார்க்கண்டேய கட்ஜு
20 Nov 2012
மும்பை:ஹிந்துத்துவா சிவசேனா தலைவர் பால்தாக்கரேவின் மறைவிற்காக நடத்தப்பட்ட முழுஅடைப்பிற்கு, சமூக வலைத்தளமான ஃபேஸ்புக்கில் கருத்து எழுதிய பெண் கைது செய்யப்பட்டதை கண்டித்து மஹாராஷ்டிரா முதல்வருக்கு பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியாவின் தலைவர் மார்க்கண்டேய கட்ஜு எச்சரிக்கை கடிதம் எழுதியுள்ளார்.
மஹராஷ்டிரா முதல்வர் சவாணுக்கு கட்ஜூ அனுப்பியுள்ள கடிதத்தில்;
“மத உணர்வுகளை புண்படுத்தியதாக அந்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஒரு பந்த்துக்கு எதிராக கருத்து தெரிவித்தால், அது மத உணர்வை புண்படுத்துவதாக கூறுவது என்பது என்னைப் பொறுத்த வரையில் மோசமானது.
அரசியல் சாசனத்தின் 19(1) ஆவது பிரிவு, கருத்து சுதந்திரம் அடிப்படை உரிமை என்பதை உறுதிப்படுத்துகிறது.
நாம் ஜனநாயக நாட்டில் வாழ்ந்துகொண்டிருக்கிறோமே தவிர, பாசிச சர்வாதிகார நாட்டில் அல்ல.
அரசியல் சாசனத்தின் 341 மற்றும் 342 ஆகிய பிரிவுகளின் படி பார்த்தால், உண்மையில் இந்த கைதே ஒரு கிரிமினல் செயலாக தோன்றுகிறது.
தவறாக ஒருவரை கைது செய்வதோ அல்லது ஒருவரை குற்றம் புரிந்ததாக தவறாக சேர்ப்பதோ குற்றமாகும்.
எனவே குறிப்பிட்ட அப்பெண்னை கைது செய்த காவல்துறை மற்றும் கைது செய்ய உத்தரவிட்ட காவல்துறை அதிகாரி ஆகியோர் எவ்வளவு உயரிய பொறுப்பில் இருந்தாலும் அவர்களை உடனடியாக சஸ்பெண்ட் செய்து, கைது செய்வதோடு, அவர்கள் மீது கிரிமினல் வழக்குப் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இதை செய்ய தவறினால், அரசியல் சாசனப்படி பதவிப் பிரமாணம் எடுத்த நீங்கள், உங்கள் மாநிலத்தை நீங்கள் ஜனநாயக முறையில் நடத்த இயலாத நிலையில் உள்ளீர்கள் என்ற எண்ணத்திற்கு நான் வர நேரிடும்.
அதன் பின்னர் அதன் சட்ட விளைவுகளையும் நீங்கள் சந்திக்க நேரிடும்” என அக்கடிதத்தில் கூறியுள்ளார்.
இதனிடையே இந்த கைதுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதை தொடர்ந்து, அந்த பெண்கள் இருவரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
>>> SEE PHOTO <<<
முன்னதாக பால்தாக்கரே மறைவை தொடர்ந்து மும்பை நகரில் முற்றிலும் முழு அடைப்பு நிலை காணப்பட்டது.
இதனை விமர்சித்து சமூக வலைத்தளமான ஃபேஸ்புக்கில், “தாக்கரே போன்றவர்கள் தினமும் பிறக்கிறார்கள், இறக்கிறார்கள் அதற்காக பந்த் நடத்த வேண்டுமா?” என்று கருத்து பதிந்த பெண்ணும், அதற்கு ‘லைக்’ போட்ட பெண்ணும் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்டுள்ள இருவர் மீதும் மத உணர்வுகளை புண்படுத்தியது மற்றும் தகவல் தொழில் நுட்ப சட்டம் 2000 ஆகிய பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
குறிப்பிட்ட அந்த பெண் தனது கருத்தை வாபஸ் பெற்றுக்கொண்டு, மன்னிப்புக் கோரியபோதிலும், சிவசேனா பயங்கரவாதிகள் அந்த பெண்ணின் உறவினர் நடத்தி வரும் மருத்துவமனையை அடித்து நொறுக்கி உள்ளனர்.
SOURCE:http://www.thoothuonline.com/katju-blasts-arrest-of-women-who-commented-on-fb/
இந்நிலையில் 2 பெண்களை கைது செய்தது சட்டவிரோதமானது என்று மத்திய அமைச்சர் கபில் சிபல் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த கைது நடவடிக்கைக்கு அன்னா குழு உறுப்பினரான கிரண் பேடி மற்றும் ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியம் சாமி ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
சரியான நேரத்தில் தேவையான தகவல்களை இங்கே சேர்ப்பித்தமைக்கு நன்றி சகோ.
Deleteநம் நாட்டில் கருத்து சுதந்திரம் என்ன வாழ்வியல் சுதந்திரங்களே கூட முடக்கப்பட்டு வருகின்றன என்பதற்கு இந்த இரு பெண்களின் வழக்கே போதும்..!!!!!!!!!!!!!!!!!!!
சிவசேனா தலைவர் பால் தக்கரே இறுதி ஊர்வலத்தின் போது அவர் மீது இந்திய தேசியக்கொடி போர்த்த பட்டிருந்தது. ஒருமுறை கூட தேர்தலில் நிற்காத இந்த போரையே பார்காத அரசருக்கு எதற்கு அரசு மரியாதை?
ReplyDeleteநாட்டுக்காக உயிர்விட்ட போர் வீரர்களுக்கும் நாட்டின் முன்னேற்றத்திர்காக பாடுபட்ட அரசியல் தலைவர்களுக்கும் மட்டும் கிடைக்கும் கவுரவம் இந்த இறுதி மரியாதை...ஆனால் பால் தக்கரே போன்றகொலைகாரர்களுக்கு ஏன் இந்த மரியாதை..
இவர் என்ன...
1.ஜனாதிபதியா..
2.முதலமைச்சரா..
3.நாட்டுக்காக உயிர்விட்ட போர் வீரரா..
4.சமூக வளர்ச்சிகாக போராடியவரா..
உண்மையை சொல்ல போனால்..மேலே குறிப்பிட்டுல்ல அனைத்திற்கும் எதிரானவர்..அவர் செய்த சாதனைகள் என்ன தெரியுமா?
1.1999-ல் தேர்தல் ஆணையத்தால் தேர்தலில் நிற்க்கவும் ஓட்டுப்போட தடை செய்யப்பட்ட ஒரே அரசியல்வாதி என்ற பெருமைக்குரியவர்..
2.1992 -ல் நடந்த மிகப்பெரிய கலவரத்தின் சூத்திரதாரி.
3.சிவசேனை என்ற பெயரில் உள்நாட்டு கலவரத்தை நடத்த கலவரப்படை உருவாக்கியவர்.
4.2002 -ல் இஸ்லாமியர்களுக்கு எதிராக தற்கொலை படையை திரட்டுவோம் என்று பகிரங்க அறிவிப்பு கொடுத்தவர்.
5.தென் இந்தியர்கள் மகாராஸ்டிர மாநிலத்தில் இருக்ககூடாது என்று அறிவிப்பு விட்டவர்.
6.சிவசேனை படையை கொண்டு வடஇந்தியர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்.
இந்திய நாட்டில் இஸ்லாமியர்கலும் கிறிஸ்தவர்களும் புற்று நோய் போன்றவர்கள் அவர்களை அழிக்கும் வரை ஓயகூடது என்று கூரியவர்.இந்திய தேசியக்கொடியின் மூன்று வண்ணங்களில் காவிவண்ணத்தை மட்டும் திணிக்க முயன்ர அவருக்கு தேசியக்கொடி மரியாதை தேவையா?
நாட்டில் பிரிவினையை கொண்டுவந்து நாட்டின் அமைதியை குலைத்து,பலரின் உயிரை பறித்த இவருக்கு ஏன் தேசிய மரியாதை?
தற்கொலை படையை திரட்டுவோம் என்று பகிரங்க அறிவிப்பு கொடுத்த இவர் தீவிரவாதி இல்லையா?
மனித உருவத்தில் பலரின் ரத்தத்தை குடித்த இவரும், நாட்டு மக்களுக்காக எல்லையில் உயிர் விட்ட மாபெரும் வீரர்களும் சமமா?
//மனித உருவத்தில் பலரின் ரத்தத்தை குடித்த இவரும், நாட்டு மக்களுக்காக எல்லையில் உயிர் விட்ட மாபெரும் வீரர்களும் சமமா?//
Deleteசகோ உதயம், என்ன இப்படி கேட்டுட்டீங்க???? ஃபாசிசத்துக்காக போராடுபவர்கள்தானே இன்று ‘The men who made history' என்றறியப்படுகிறார்கள். இறந்த இது போன்றவர்களுக்காக நோபல் பரிசுக்கு கூட நம் அரசாங்கம் recommendation letters அனுப்பி வைக்கலாம்.... அப்படி இருக்கையில் இந்த அரசு மரியாதை என்பது மிகச் சிறிய பளுவே...!!!!!!!!!!!!!
:(((((((((((((
கருத்துக்கு நன்றி.
மறைந்த ஐயாவின் ஆசை மாகரஷ்டரா மாநிலம் இந்தியவின் நெ.1 மாநில இருக்க வேண்டும் என்று நினைத்தார் நீங்கள் சென்றாலும் அது இனி கண்டிப்பாக நிறைவேறும் தாக்கரே ஐயா, நீங்கள் செய்த நல்லது/கெட்டது எதுவாக இருந்தாலும் உங்களையும் என்னையும் படைத்த கடவுள்யிடம் உள்ளது. என்று கூறி விடைபெருகிறேன்.
ReplyDelete:)
Deleteகருத்துக்கு நன்றி சகோ நிஜாம்.
தமக்கையே !!!
ReplyDeleteதாங்களுக்கு வாக்களிக்க நாடிய தமையனின் அவா பொய்த்து போனதேனோ..!!!
திருவாளர் மார்கண்டேய கட்ஜு பகர்ந்ததை கேட்டு மார்தட்டி வந்த தனையன் கண்கள்,வாக்களிக்க வாய்ப்பை தேடி தேடி"மார்கண்"ணாய் ஆனதன் மர்மம் என்னவோ..!!!
(அவ்வ்வ்வ்.....)
அவ்வ்வ்வ் சகோ...... உண்மையிலேயே உங்களுக்கு மார்க்ககண்ணிலிருந்து மாறுகண் ஆகிடுச்சோன்னு தோணுது.... தலைப்புக்கு அருகிலேயே இருக்கே ஓட்டுப்பட்டை????
Delete:))))
அட..ஆமா..!!! பொதுவா இருக்கும் அடையாளத்தையே பார்த்து பழக்கப்பட்டதால எனக்கு இது வித்தியாசமா இருந்தது ..இவ்வளவு நாள் நுனி புல்லையே மேய்ந்து இருக்கிறேன் போல..!!! ம்ம்ம் ......நீங்க இன்னும் வளரனும்(என்னை சொன்னேன்..)
Delete:))
Deleteதாக்ரேயின் மருத்துவர் ஒரு முஸ்லீம் என்று செய்திகளில் உள்ளது. அவரை கல்லால் அடித்து கொல்லுவோம்.
ReplyDeleteஆமா ராவணன்....
Deleteசீக்கிரம் போங்க..... முதல்ல அதை செய்ங்க... உங்களை மாதிரி ஆட்கள் ‘உள்ளே’ கல்லுடைக்க ரொம்ப தேவைப்படறாங்களாமா..... ‘வெளியே’ வெட்டியா பொழப்பு நடத்திகிட்டு என்ன பண்றீங்க..... கடைலதான் கல்லா கட்டறதில்லயே..... I appreciate your noble thoughts Mr, You really show which 'ism' you follow. :)))))
Assalam Alaikum...
ReplyDeleteThank you for sharing good article..!!
I hate pal Thakre and also Rajani Kanth...
Good to receive your thoughts as well brother.
DeleteYou shouldn't hate such kind of 'Makers of Nazist India'. You see..... :)))))
அய்யா! பால்தாக்ரேவின் உணர்வு சரியானது தான் ஆனால் அவர்கொண்ட வழிமுறை தான் தவறானது மண்ணின் மைந்தர்களான மராத்தியர்களுக்கு அனைத்திலும் முன்னுரிமை வேண்டும் என்பது சரி ஆனால் அதற்கு தீர்வாக உழைக்கும் மக்களான தமிழர்களையும் பீகாரி களையும் எதிரியாக காண்பித்து குஜராத்தி பனியாகளுடன் கூடிக்குலவி இந்துபார்பநியதை தன வழிமுறையாக கொண்டார் இதன் மூலம் உழைக்கும் இஸ்லாமியர்களையும் எதிரியாக பாவித்தார் ஆனால் தன் பிழைப்ப்பு வாதத்திற்காகமுஸ்லிம் உயர் வர்க்க பிரிவினருடன் உறவு வைத்திருந்தார் இப்படி ஒருஇந்திய தரகு முதலாளிய பார்பனிய அடியாளுக்கு இந்திய ராணுவ மரியாதையும்இந்திய தேசிய கொடி போர்துதலும் பொருத்தமானதே
ReplyDelete//இப்படி ஒருஇந்திய தரகு முதலாளிய பார்பனிய அடியாளுக்கு இந்திய ராணுவ மரியாதையும்இந்திய தேசிய கொடி போர்துதலும் பொருத்தமானதே //
Deleteஇந்தியா இப்போது இருக்கும் நிலையை பார்த்தால் சரியாய்த்தான் தெரிகிறது....!!!!!!!!!!!!!!!
:(((((((((((((((
கருத்துக்கு நன்றி.
மதவெறிப்பிடித்தக்கூட்டம்.... இந்தப்பதிவின் நோக்கமே மற்ற மதத்தை குற்றப்படுத்துவதுதான்...
ReplyDeleteஇதுபோன்ற பதிவுகள் ஆளுக்கொன்று போட்டால் போதும்.... வெளங்கிடும்... நீங்களும் உங்கள் மதமும்.... திருந்திதொலைஙகளேன்...
காந்தியே சொல்லிட்டார்................ அப்படின்னு இன்னொரு பதிவாக போட்டு விடவா??
Deleteஹெல்லோ.....
முதல்ல நீங்க விளங்குங்க பாஸ்...
இந்த கட்டுரையை நான் எழுதலை.... காப்பி பேஸ்ட்!!
இதில் எங்கேயும் எந்த மதத்தைப் பற்றியும் குறை சொல்லவில்லை.
இந்த கருத்தை எழுதியுள்ள திரு.கட்ஜூம் ஹிந்துதான். ஆனால் ஃபாஸிஸவாதி அல்ல.
இந்து மதம் பிரச்சினைக்குரியது அல்ல. ‘மதம்’ பிடித்தவர்களே பிரச்சினைக்குரியது.
காந்தியை விட்டுட்டு கோட்ஸே படம் போட்டுக்குங்க. பொருத்தமா இருக்கும்!!!
வெட்கப்படாத ஒரு தேசம்!
ReplyDeleteNov 21: தடுமாறும் நீதி: கசாபுக்கு தூக்கு கொடுத்த நீதிக்கு, மும்பை, பாகல்பூர், பீவாண்டி, குஜராத், கோவை, என்று பல்வேறு கலவரங்களை நடத்தி பல்லாயிர கணக்கில் சிறுபான்மை மக்களை கொன்று குவித்த மோடி, அத்வானி கூட்டத்திற்கு தூக்கு கொடுக்க முடியவில்லை.
காவலில் கருத்து சுதந்திரம்: தாக்கரே மறைவுக்கு மகாராஷ்டிராவில் பெரிய பந்த் நடைபெற்றது. இதை பற்றி ஒரு பெண் தனது பேஸ்புக்கில் தாக்கரேவின் மறைவுக்காக முழு அடைப்பு தேவையில்லை, பல சுதந்திரப் போராட்ட வீரர்கள் வெள்ளையர்களால் தூக்கிலடப்பட்ட போது நாம் இதுபோல் எதுவும் நடத்தவில்லையே என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த பதிவிற்கு பேஸ்புக்கில் இவரது தோழி ரேணுகா ‘லைக்’ கொடுத்தார்.
இதை காரணமாக வைத்து மும்பை போலீஸ் இந்த இரண்டு பெண்களை கைது செய்து வழக்கு பதிவு செய்துள்ளது.
மேலும் ஷஹீன் தாதாவின் உறவினர் மருத்துவமனையை சிவசேனை பயங்கரவாதிகள் சூறையாடி இருக்கின்றனர்.
மும்பை போலீசாரை கண்டித்து இந்திய பிரஸ் கவுன்சில் தலைவர் மார்க்கண்டே இது பத்திரிகை சுதந்திரத்தின் குரலை நசுக்குவதாகும் என்று கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்
கயவர்களை அலங்கரிக்கும் தேசிய கொடி: மாராட்டியம் மராட்டியருக்கே” என்ற முழக்கத்துடன் தமிழர்கள் உள்ளிட்ட தென்னிந்தியருக்கு எதிரான கலவரத்தின் மூலம் வளர்க்கப்பட்ட மதவாத சிவசேனை இயக்கத்தின் தலைவர் பால்தாக்கரேவின் இறுதி சடங்கை அரசு மரியாதையோடு, தேசிய கொடி போர்த்தி நடத்தியது தேசிய அவமானம்.
தகுதியற்ற இரங்கல் அறிவிப்புகள்: அவரது இறப்பிற்கு பிரதமர், குடியரசுத் தலைவர், பல கட்சித் தலைவர்கள், திராவிட கழகத்தின் கீ. வீரமணி உட்பட சகலமானவர்களும் ஏதோ தேசத்தின் ஒரு முக்கிய தலைவர், தியாகி இறந்து விட்டத்தை போல் இரங்கள் தெரிவித்திருப்பது அதைவிட கேவலம்.
நாட்டில் எத்தனையோ நல்லவர்கள், மக்கள் சேவை செய்தவர்கள் இறந்திருக்கிறார்கள் அவர்களுக்கு எல்லாம் அரசு மரியாதையும், தேசிய கொடி போத்தி இறுதி ஊர்வலமும் நடத்தப்பட்டது இல்லை.
சிறந்த வெட்கம்: மும்பை கலவரத்தை முன்னின்று நடத்தியது பால்தாக்ரே என்று சொன்ன ஸ்ரீகிருஷ்ணா கமிஷன், சிவசேனா மற்றும் தாக்கரேவின் பங்களிப்பை ஆதாரத்தோடு நிரூபித்தது.
இப்படிபட்ட ஒரு கிரிமினலுக்கு வெட்கம் இல்லாமல் தேசியக்கொடி போர்த்தி அரசுமரியாதை.
ஆனால் கசாப் சடலத்தை வாங்கவே பாகிஸ்தான் அரசு மறுத்து விட்டது.
குற்றவாளி என்று தண்டிக்கப்பட்டவன் என்பதால் அந்த சடலத்தை வாங்க ஒருநாடு வெட்கப்படுகிறது.
ஆனால் இந்தியாவில் குற்றவாளிகளுக்கு அரசு மரியாதை.
SOURCE: http://www.sinthikkavum.net/2012/11/blog-post_21.html
சலாம் சகோ அன்னு..
ReplyDeleteகாபி பேஸ்டுக்கே மகுடமா???? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்....
தெரியாத விஷயம் இல்லை... இதை தெரியபடுத்த பலர் விரும்பாமல் பலர் மவுனமாய் இருக்கிறார்கள். சில நியாயங்களை பேச மறுக்கும் இந்த தேசத்தில் மார்கண்டேய கட்ஜு போன்றவரகள் தான் எதிர்கால இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரங்கள்...
பகிர்விற்க்கு நன்றி...