சிம்பிள் தக்காளி சட்னி
மக்களே.... பொறுத்துக்குங்க.... இந்த பதிவு ஸ்பெஷலாக என் தம்பிக்காக. பதிய சொன்னது என் அம்மா. அதனால் செய்முறையை விட விதிமுறைகள் அதிகமாக இருக்கும். அட்ஜஸ்ட் ப்ளீஸ்....ஆனா நல்ல ருசியா இருக்கும். நீங்களும் செய்து பாருங்க. ஹி ஹி ஹி
2. முதலில் வெங்காயத்தை உரிக்கவும். உரித்த வெங்காயத்துடன், தக்காளி, பச்சை மிளகாய் போட்டு தண்ணீரில் நன்கு கழுவிக் கொள்ளவும்.
3. பச்சை மிளகாயை மூன்று துண்டாக நறுக்கவும். வெங்காயத்தையும் சின்ன சின்னதாக நறுக்கவும். தக்காளியை சிறு சிறு துண்டாக வெட்டிக் கொள்ளவும்.
4. அடுப்பை ஆன் செய்து, தண்ணீரில்லாமல் துடைத்த கடாயை வைத்து தீயை மீடியம் அளவில் வைக்கவும்.
5. எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகை போட்டு வெடிக்க விடவும். கடுகு வெடிக்கும்போதே கருவேப்பிலையும் சேர்த்துவிடவும். பின்னர் பச்சை மிளகாயை போட்டு பிரட்டி விடவும்..
6. தீயை கம்மியில் வைத்து வெங்காயத்தை போட்டு கிளறி விடவும்.
7. நறுக்கிய தக்காளியை மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ளவும். வெங்காயம் வெந்து கண்ணாடி போல தெரியும்போது அரைத்த தக்காளியை ஊற்றவும். 1/4 கப் தண்ணீரை மிக்ஸி ஜாரில் போட்டு நன்கு அலாசி அதையும் ஊற்றவும்.
8. பின்னர் (1/4 மஞ்சள்பொடி தேவைப்பட்டால் சேர்த்தவும்). கடாயை மூடி போட்டு மூடி விடவும். 5 நிமிடம் சரியாக கம்மி தீயிலேயெ கொதிக்க விடவும். உப்பு கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து சரி பார்க்கவும்.
9. கம கம தக்காளி சட்டினி ரெடி.
10. தோசை அல்லது இட்லியுடன் சாப்பிடவும். சாப்பிட்ட பின் மீதியை மறக்காமல் ஃப்ரிட்ஜில் வைக்கவும்.
மீதி ஃபோட்டோ எடுக்க நேரமில்லை. ஹி ஹி ஹி..... செய்துட்டு சொல்லுங்க :)
.
--: தக்காளி சட்னி :--
1. மூன்று நடுத்தர அளவு தக்காளி, 3 அல்லது 4 சின்ன வெங்காயம் (அல்லது ஒரு பெரிய வெங்காயம்), ஒரு நடுத்தர அளவு பச்சை மிளகாய், ஒரு டீ ஸ்பூன் கடுகு, இரண்டு டீஸ்பூன் எண்ணெய், 4 -5 கருவேப்பிலை.2. முதலில் வெங்காயத்தை உரிக்கவும். உரித்த வெங்காயத்துடன், தக்காளி, பச்சை மிளகாய் போட்டு தண்ணீரில் நன்கு கழுவிக் கொள்ளவும்.
3. பச்சை மிளகாயை மூன்று துண்டாக நறுக்கவும். வெங்காயத்தையும் சின்ன சின்னதாக நறுக்கவும். தக்காளியை சிறு சிறு துண்டாக வெட்டிக் கொள்ளவும்.
4. அடுப்பை ஆன் செய்து, தண்ணீரில்லாமல் துடைத்த கடாயை வைத்து தீயை மீடியம் அளவில் வைக்கவும்.
5. எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகை போட்டு வெடிக்க விடவும். கடுகு வெடிக்கும்போதே கருவேப்பிலையும் சேர்த்துவிடவும். பின்னர் பச்சை மிளகாயை போட்டு பிரட்டி விடவும்..
6. தீயை கம்மியில் வைத்து வெங்காயத்தை போட்டு கிளறி விடவும்.
7. நறுக்கிய தக்காளியை மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ளவும். வெங்காயம் வெந்து கண்ணாடி போல தெரியும்போது அரைத்த தக்காளியை ஊற்றவும். 1/4 கப் தண்ணீரை மிக்ஸி ஜாரில் போட்டு நன்கு அலாசி அதையும் ஊற்றவும்.
8. பின்னர் (1/4 மஞ்சள்பொடி தேவைப்பட்டால் சேர்த்தவும்). கடாயை மூடி போட்டு மூடி விடவும். 5 நிமிடம் சரியாக கம்மி தீயிலேயெ கொதிக்க விடவும். உப்பு கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து சரி பார்க்கவும்.
9. கம கம தக்காளி சட்டினி ரெடி.
10. தோசை அல்லது இட்லியுடன் சாப்பிடவும். சாப்பிட்ட பின் மீதியை மறக்காமல் ஃப்ரிட்ஜில் வைக்கவும்.
ஹை.... மாமா எனக்கு?????? |
மீதி ஃபோட்டோ எடுக்க நேரமில்லை. ஹி ஹி ஹி..... செய்துட்டு சொல்லுங்க :)
.
இண்ட்லி காணாம போயிடுச்சே.... யாராவது பார்த்தீங்களா??
ReplyDeleteவாவ்...எனக்கு ரொம்ப பிடித்த சட்னி..இட்லிக்கு சூப்பர்ப் காம்பினெஷன்...அழகான தெளிவான படங்கள்...குட்டி பையன் சூப்பராக இருக்கின்றார்...
ReplyDeleteசட்னி இங்கே இருக்கு இ(ண்)ட்லி எங்கே ?????
ReplyDeleteசட்னி நல்லாருக்குப்பா.. இதையே தக்காளியையும் சேத்து வதக்கிட்டு, அப்றம் மொத்தமா மிக்ஸியில் போட்டு அரைச்சா, இன்னொரு விதமான ருசியாயிருக்கும்.
குட்டிப் பையன் செம க்யூட் :-)
சூப்பார் புளிப்பு சட்னி... படங்கள் அருமை.. குட்டி பையனி விரலில் இன்னும் ருசி இருக்கா சப்பி கொண்டே இருக்கானே..
ReplyDeleteஅமெரிக்காவுல ஆத்தா; ஆத்தா செஞ்ச இட்லி, சாம்பார்னு ஸ்டேட்டஸ் போடும்போதே நெனச்சேன், இதுமாதிரி விபரீதங்களுக்கு வாய்ப்பிருக்குன்னு!! :-)))))
ReplyDeleteஇதப் படிச்சு, உங்க தம்பி தக்காளி சட்னி செஞ்சா மாதிரிதான்!! பாதி படத்தக் காணோம்; முக்கியமான விதிமுறைகளைக் காணோம். (உ.ம். மிக்ஸியில் தக்காளிய அரைக்கும்போது, மூடிய டைட்டா மூடி இறுக்கமாப் பிடிச்சுக்கணும்; இல்லையின்னா மௌலூதுக்கு சந்தனம் தெளிச்சா மாதிரி கிச்சன்பூரா தக்காளி சூஸு தெறிக்கும் - ஹி.. ஹி.. அனுபவம்!!)
அதெல்லாம் தானே செஞ்சிருந்தா (பிரியாணி போஸ்ட் மாதிரி) தெரிஞ்சிருக்கும். அம்மா செஞ்சித் தந்தத, ஃபோட்டோ எடுக்கிற பொறுமைகூட இல்லாம, சாப்பிடமட்டும் செஞ்சா இப்படித்தான் பாதியோட நிக்கும்!! :-)))))
// 1/4 மஞ்சள்பொடி //
இது என்னா - கால் மஞ்சள் - புது மஞ்சள் பொடியா இருக்கு?
இன்னும் நெறயாச் சொல்லலாம். அந்தப் பச்சப் புள்ளயோட அழகான முகத்துக்காக விடுறேன்!! :-)))))))
அஸ்ஸலாமு அலைக்கும் அன்னு
ReplyDeleteசட்னி சூப்பர்.
//இண்ட்லி காணாம போயிடுச்சே.... யாராவது பார்த்தீங்களா??//
என்னோட பதிவிலும் காணோம் . இன்னும் சில பதிவில் இல்லை
அன்னு அன்னு எப்படி இருக்கீங்க .குட்டிபையன் அழகா ஸ்வீட்டா இருக்கார் .
ReplyDeleteசட்னி ரெசிப்பி சூப்பர் .அதுவும் முக்யம்மா இந்த இடம்தான் எனக்கு பிடிச்சது //உப்பு கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து சரி பார்க்கவும்.//
குட்டிப் பையன் அழகா இருக்கான். இண்ட்லி எங்குமே வரவில்லை.
ReplyDeleteஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு...
ReplyDeleteமாஷா அல்லாஹ்...
எங்க அம்மா சூப்பரா செய்வாங்க இந்த சட்னி...
மாஷா அல்லாஹ்..பையன் க்யுட்டா இருக்கார்...இஸ்லாம் காட்டித்ததந்த வழியில் வளர, வளர்க்கப்பட என்னுடைய துவாக்கள்..
வஸ்ஸலாம்,
உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அ
ஆமா எங்கே உங்க ட்ரேட் மார்க் "ஹெ ஹெ " சிரிப்பு
ReplyDeleteஓ அதுதான்அதுக்கு பதில் தக்காளி வெங்காயம் மிளகா எல்லாம் சிரிக்குதா .
Luvly Thakali Onion Chutney displayed.Luv ur blog contents - very interesting.Following U
ReplyDeleteஅன்னு தக்காளி சட்னி சூப்பர்
ReplyDeleteப்ச்சமிளகாய் காரம் மட்டும் தானா?
இத பார்த்ததும் எங்க பெரிமா ந்ஞாபகம் வருது
கியுட் குட்டி
ReplyDeleteஉங்களை வலைச்சரத்தில் அறிமுகபடுத்தியுள்ளேன். நேரமிருக்கும் போது பார்வையிடவும் :-)
ReplyDeletehttp://blogintamil.blogspot.com/2011/10/blog-post_27.html
அருமையான சமையல் செய்முறை விளக்கங்கள் நன்றி.
ReplyDeleteவலைச்சரத்தில் அறிமுகமாகிருக்கும் தங்களுக்கு வாழ்த்துக்கள்
ReplyDeleteDearest Annu
ReplyDeleteEID MUBARAK to You and your family with all best wishes.
wow! thakkali chutney ah ida kutti payan dhan azhagu
ReplyDeleteஅன்னு செல்லம் இந்த உலக மகா சமையல் குறிப்பை கூட நான் அட்ஜஸ்ட் பண்ணிக்கிறேன்.. ஆனா அது என்னடிமா.. சமூக சேவை ன்னு ஒரு லேபல்... வேணாம்... வலிக்கிது... அழுதுடுவேன்... :((
ReplyDelete//(உ.ம். மிக்ஸியில் தக்காளிய அரைக்கும்போது, மூடிய டைட்டா மூடி இறுக்கமாப் பிடிச்சுக்கணும்; இல்லையின்னா மௌலூதுக்கு சந்தனம் தெளிச்சா மாதிரி கிச்சன்பூரா தக்காளி சூஸு தெறிக்கும் - ஹி.. ஹி.. அனுபவம்!!)
ReplyDeleteஅதெல்லாம் தானே செஞ்சிருந்தா (பிரியாணி போஸ்ட் மாதிரி) தெரிஞ்சிருக்கும். அம்மா செஞ்சித் தந்தத, ஃபோட்டோ எடுக்கிற பொறுமைகூட இல்லாம, சாப்பிடமட்டும் செஞ்சா இப்படித்தான் பாதியோட நிக்கும்!! :-)))))
// 1/4 மஞ்சள்பொடி //
இது என்னா - கால் மஞ்சள் - புது மஞ்சள் பொடியா இருக்கு?
// ஹஹஹா செம்ம செம்ம செம்ம ஹுசைனம்மா அக்கா ( ??!!).. :))
மாஷா அல்லாஹ் பயனுள்ள குறிப்பு. படிக்கவே வேண்டாம் போட்டோவை பார்த்தலே தெரிகிறா எவ்வளவு ஏழியமுறையில் உள்ளது உங்கள் செய்முறை. ஜெஸக்கால்லாஹ் ஹைர் சகோதரி.
ReplyDeleteAkka,
ReplyDeleteரொம்ப நன்றி .. இப்ப தான் உங்க தக்காளி சட்னி செய்தேன் .. நல்ல இருக்கு ..
- thambi Senthil
தேன்க் யூ... செய்து பார்த்து எழுதியதற்கு :)
Deleteakka,
ReplyDeleteநீங்க ஏன் பேச்சுலர் சமையல் தொடர வில்லை.. உங்க தம்பிக்கு கல்யாணம் ஆயிடுச்ச !!
yes brother.... ஆனா மற்றவங்களுக்காகவும் அப்பப்ப தொடர்கிறேன் :)
Delete