இறைவனை அஞ்ச மாட்டீர்களா????

Monday, September 19, 2011 Anisha Yunus 5 Comments

மன்னிக்கவும்...........

இது நாள் வரை நீங்கள் பார்த்திருந்த பதிவுகளுக்கும் இந்த பதிவிற்கும் மிகுந்த வித்தியாசம் உண்டு. இந்த பதிவு மனம் வெந்து வேதனையுடன் நினைவுகூறப்படும் பதிவு. இதை இங்கே எழுதும் அளவிற்கு மனம் வேதனையுற வைத்த அம்-மாக்களுக்கு இந்த பதிவும், அதன் இறுதியில் உள்ள து’ஆவும் சமர்ப்பணம்...!!!!இந்த புகைப்படத்தை பார்த்ததும், மீண்டும் ஒரு முறை இமாம் அன்வர் அவ்லகியின் வலைப்பூவில் ப்டித்த, அவருக்கு வந்திருந்த ஒரு கடிதம் நினைவுக்கு வந்தது. குஜராத்தில் ஒரு சிறிய கிராமமுமல்லாத நகரமுமல்லாத ஒரு ஊரில் இருந்து ஒரு சகோதரர் எழுதியிருந்தார்.

அவர், அவரின் அக்கா, அம்மா, அப்பா இவர்களே அவரின் குடும்பம். குஜராத் கலவரத்தின் போது, அதில் எந்த வகையிலும் சம்பந்தப்படாத தன் வேலையுண்டு தானுண்டு என ஒரு குமாஸ்தாவாய் வாழ்ந்து வந்த அந்த சகோதரரின் தந்தையை போலீஸ் இழுத்துச் சென்றது. அப்பொழுது இந்த சகோதரரின் வயது 10 கூட இல்லை. அவரின் அக்காவிற்கு 16/17 வயது. முப்பதுகளில் அவர்களின் அம்மா. அம்மாவும், மகனும், மகளும் போலீஸ் ஸ்டேசனின் படியை தினம்தினம் ஏறினார்கள், அப்பாவியான கணவரை விட்டுவிட சொல்லி. ஒரு வாரம் கழித்து போலீஸ் ஒரு நிபந்தனையுடன் அந்த குடும்பத்தின் தலைவனை விட முன் வந்தது. நிபந்தனை என்ன, அந்த இரவில் வரும் 4 அரசியல்வாதிகளுக்கு அம்மாவும், மகளும் அட்ஜஸ்ட் செய்ய வேண்டும். அப்போதுதான் விடுவோம் என்று. பிராமணர்கள் அதிகம் வாழும் பகுதியில் வாழ்ந்ததும், இஸ்லாமியர்களாக இருந்ததும், ஏழைகளாகவும் உதவிக்கு ஆளில்லாதவர்களாகவும் இருந்ததே அவர்கள் செய்த மகா பாவம். கணவன் முக்கியமா, கற்பு முக்கியமா என்று அதிகம் ஆராய்ந்து பார்க்க தெரியவில்லை அந்த தாய்க்கு.... ஊமையாய் ஒத்துக் கொண்டனர். அந்த இரவில் அரசியல்வாதிகளும் குண்டர்களுமாய் நான்கு பேர் வந்தனர். அந்த இரவோடு அது முடியவில்லை. ஒரு மாதம் முழுவதும் அந்த மகனின் முன் தாயும், தமக்கையும் சீரழிக்கப்பட்டனர்.

அக்கம்பக்கம் சுற்றம் வெறுமனே வேடிக்கை பார்த்தது பின் அவல் மெல்ல தொடங்கியது. ஒரு மாதம் கழித்து அந்த தந்தையை குற்ருயிரும் கொலையுயிருமாய் விடுதலை செய்தது போலீஸ் ஸ்டேஷன். தந்தைக்கு எந்த விவரமும் சொல்லப்படாமல், அக்கம்பக்கத்தினரின் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் வாசகங்களை சகிக்க இயலாது வேறு ஊருக்கு சென்று விட்டனர். கடிதம் எழுதிய அந்த சகோதரர், தன் மனதை, தன் தாய், தமக்கையின் மனதை / வாழ்வை எப்படி தேற்றுவது என விம்மியிருந்தார். ஒரு குடும்பமாய் வாழ்ந்தாலும் ஒருவர் முகத்தில் ஒருவர் விழிப்பதற்கே சங்கடப்படுவதும், தினம் தினம் வாழ்க்கையை முடித்து விடாமல் காப்பதுமே பெரிய மனப்போர் என்று குமுறியிருந்தார்.

சுபஹானல்லாஹ். அந்த சகோதரரை எண்ணுகிறேன். இன்னும் எத்தனை பேரின் வாழ்வை இந்த அயோக்கியன் சீரழித்திருப்பான் என்றெண்ணுகிறேன். இன்ஷா அல்லாஹ், அல்லாஹ் மோடியின் இறுதி நிமிடங்களை உலகிற்கு சாட்சியாக்கி வைப்பான். எம் மக்களின் வாழ்வை சூறையாண்டவர்களின் கதி எதுவெனவும், அவனோடு இப்பொழுது கொஞ்சி குலவுகிற இந்த முனாஃபீக்குகளின் நிலை எதுவெனவும் அல்லாஹு த ஆலா நிச்சயம் இவ்வுலனகிருக்கும் காட்டுவான், மறுமையிலும் காட்டுவான். ஆமீன்.... ஆமீன்....அல்லாஹும்ம ஆமீன்.

ஹஸ்புனல்லாஹ் வ நி’அமல் வகீல். (இறைவன் போதுமானவன்)
.5 comments:

 1. அந்த நிகழ்வு முன்பே ஒருமுறை உங்கள் பதிவிலோ, மெயிலிலோ படித்ததுண்டு. அப்பவே மனம் கொந்தளித்தது. இதுபோல எத்தனை வெளியே வரா வேதனைகளோ? இறைவன் காக்க.

  மறதிதான் பல துக்கங்களுக்கு மருந்து. ஆனால் அதே மறதிதான் நன்றிகொன்றாராகவும் ஆக்கும். இந்த அம்-மாக்களுக்கு மறதியோ, நிர்பந்தமோ?? இல்லை வேஷம் போட்டவர்களோ?

  நிகழ்கால ஃபிர்-அவ்னான இவனைச் சாட்சியாக்கியே தீரவேண்டும் இறைவன். இறைஞ்சுகீறேன்.

  ReplyDelete
 2. ஆமாம் ஹுஸைனம்மா அக்கா. கண்களில் நீருடன் பதிலிடுகிறேன்....ஒவ்வொரு நாட்டிலும் நாயை விட கேவலமாக நம் மக்கள் வேட்டையடப் படும்போது என்ன வந்தது இவர்களுக்கு, செய்தித்தாள் படிப்பதில்லையா.... இல்லை இஸ்லாத்திலும் வர்ணாசிரம்த்தை புகுத்திவிட்டார்களா??? ஏன் இப்படி நிலை மறந்து வெட்கம் கெட்டு, ஈமானை விலை பேசித் திரிகிறார்கள்...... இன்றைய நிலையில் நம் மக்களுக்கு இழைக்கப்படும் வேதனைகளுக்கு வெயிலிலிட்ட புழு போல் துடிக்க வேண்டாமோ மனம்.... இந்த நிகழ்வுகளையெல்லாம் நினைத்து நினைத்து, இத்தகையோரை அட்லீஸ்ட் வெறுத்து வெறுத்தாவது ஈமானை காக்க வேண்டாமா.... நம் சொந்தமில்லையா??? நம் இரத்தமில்லையா??? நாம் அனைவரும் ஆதமின் மக்களில்லையா??? ஒரே தாய் தந்தையை பெற்றவர்களில்லையா????? நாளை இவனுடன் மஹ்ஷரில் எழுந்திரிக்கப்படுவதையா விரும்புகிறார்கள்....!!!! லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லாபில்லாஹ்.....

  ReplyDelete
 3. வலிமிகுந்த பதிவு சகோ

  துண்டிக்கப்பட்ட கைகளுக்காகக்
  கண்ணீர் சிந்தத் தயங்கும் கண்கள்..

  கண்ணீரின் கரிப்பைச் சுவைத்த பின்னும்
  துடிக்க மறுக்கும் உதடுகள்

  இன்னும் எத்தனை சகோதரிகள்
  கனவுகள் கலைக்கப்பட்டபின்
  உங்கள் உணர்வு விழிக்கும்?
  எத்தனைத் தாய்மார்களின்
  ரத்தக் கண்ணீர் பெருகினால்
  உங்கள் கல்மனம் கரையும்?

  நாம் சகோதரர்களின் ரத்தம் சுவைத்த ஓநாய்களுக்கு
  விருந்து வையுங்கள்
  உங்களை மறுபடியும் விழுந்து புடுங்க

  ReplyDelete
 4. ஒரு இனமே அழிக்கப்பட்டிருக்கிறது. அதைப் பற்றியெல்லாம் கவலை இல்லை இவர்களுக்கு. மோடி உண்ணாவிரதம் இருக்கிறார் என்பதற்காக போட்டோவுக்கு சிரித்துக் கொண்டே போஸ் கொடுத்திருக்கும் அம்-மாக்களுக்கு அல்லாஹ் ஹிதாயத்தை கொடுப்பானாக.

  என் இனம் அழிய காரணமாய் இருந்த மோடிக்கு தகுந்த தண்டனை வல்ல இறைவன் வழங்குவானாக

  ReplyDelete
 5. யா அல்லாஹ், சூழ்ச்சிக்காரர்களின் சூழ்ச்சியை விட்டும் எம்மை பாதுகாப்பாயாக

  ReplyDelete

உங்கள் கருத்துக்கள்...