தலை வாரிப் பூச்சூடி உன்னை...
ஒற்றை சைக்கிள் அது. அதில் ஆஜானுபாகுவாய் எங்கள் தலைமையாசிரியர் திரு ஜெகன்னாதன் அவர்கள் ஏறி அமர்ந்து உடுமலை - பாரதியார் பெண்கள் மேனிலைப்பள்ளியிலிருந்து வீட்டிற்கோ, வீட்டிலிருந்து பள்ளிக்கோ போகையில் என் முகம் மட்டும் மலரும், அண்டை அயலாரின், ஏன், என்னுடைய உறவினர்களின் கிண்டல்களையும் எதிர்த்து சண்டை போடுவேன்.... ஏனெனில் என் தலைமையாசிரியர் அவர். அவரின் கம்பீரத்திற்கும், மேதைமைக்கும், கணீரென பள்ளி விழாக்களில் அவரின் பேச்சிற்கும், பாட்டிற்கும், ஆளுமைக்கும், இன்று வரையிலும் மாணவி மட்டுமல்ல, விசிறியும் கூட.
தலை வாரிப் பூச்சூடி உன்னை...
பாடசாலைக்கு போ என்று சொன்னாள் உன் அன்னை.. (2)
சிலை போல ஏன் அங்கு நின்றாய்?????????/
நீயும் சிந்தாத கண்ணீரை ஏன் சிந்துகின்றாய்... (2)
மலைவாழை அல்லவோ கல்வி-மலை வாழை
அல்லவோ பெண் கல்வி.. நீயும் வாயார உண்ணுவாய் போ என் புதல்வி.... தலை வாரிப் பூச்சூடி உன்னை....
(பாடலாசிரியர்: பாரதிதாசன்)
இன்று வரையிலும், இதற்கு மேலும் என்னை கற்கவும், கற்றுக் கொடுக்கவும், பயிலும்போது சோர்ந்திடாமலும் காப்பது என் தலைமையாசிரியரின் இந்த பாடலே (எழுதியது அவரல்ல.... எனினும்,அவர் குரலில் மட்டுமே இதை கேட்டுள்ளேன் நான்)
என்னை உற்சாகமூட்டிய ஒரு குரல், ஒரு இதயம், ஒரு சுடர் விடும் தீபம்...
சார்.. திரு. D. ஜெகன்னாதன் சார்...எங்கிருந்தாலும் தங்களையும், தங்கள் குடும்பத்தையும் இறைவன் காத்தருள்வானாக. நேர் வழியில் வைப்பானாக. ஆசிரியர் தின வாழ்த்துக்கள் சார்.
இன்னும் என் நினைவில தங்காமல் போன அத்தனை டீச்சர்களுக்கும், என்றும் நினைவை விட்டு அழியாத எல்லா வகுப்பு + டிப்ளமா + காலேஜ் கணித வாத்தியாரம்மாக்களுக்கும், என் கல்வி ஞானத்திற்கு ஒரு துளி வியர்வையாவது சிந்திய அத்தனை பேருக்கும், இதற்கெல்லாம் முன்னோடியாய் எனக்கு ஞானத்தையும் உணவுடன் சேர்ந்தூட்டிய என் ‘அம்மீ’க்கும், பொருளாலும், மதியாலும், தன் வியர்வையாலும் என்னை எந்த நிலையிலும் சோர்ந்து போகாமல் கற்க வைத்த என் ‘அப்பா’ விற்கும், ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்.
.
நல்ல பதிவு.
ReplyDeleteவாழ்த்துக்கள்.
http://rathnavel-natarajan.blogspot.com/2011/08/blog-post_29.html
நானும் உங்களோட சேந்து இதேப்போல எனக்கும் வாய்ச்சவங்களை நினச்சு நன்றி சொல்லிக்கிறேன் - அவர்களுக்கும், அவர்களைத் தந்த இறைவனுக்கும். :-)))))
ReplyDeleteஎல்லா ஆசிரியர்களோடவும், நம்ம முதலாசிரியருக்கும் சேர்த்து வாழ்த்துகள் சொல்லியிருக்கீங்க பாருங்க. அங்கதான் நீங்க நிக்கிறீங்க :-)
ReplyDeleteநல்ல பகிர்வுங்க.
ReplyDeleteஆசிரியரை நினைவு கூர்ந்த அன்பு பிடித்திருந்தது.
ReplyDeleteநல்ல பதிவுக்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteநல்ல நினைவு கூரல். நன்றி கூறல். நீங்கள் குறிப்பிட்டுள்ள பாரதிதாசன் பாடலை சீர்காழி கோவிந்தராஜன் குரலில் கேட்டுள்ளேன். இணையத்தில் தேடினால் பானுமதியம்மா குரலில் மட்டுமே கிடைக்கிறது அது.
ReplyDeleteநலல் பதிவு அன்னு
ReplyDeleteநானும் பதிவு போட இருந்தேன், ஆனால் அன்று முடியாம போச்சு.
சரி மெதுவா எழுதுவோம்