நானும் விஞ்ஞானிதாம்லே..... :))

Monday, December 10, 2012 Anisha Yunus 21 Comments

Ƹ̴Ӂ̴Ʒ fLaShBaCk Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ

ஹல்லோ சகோஸ்....,


தலைப்பை பார்த்ததும் பயந்து ஓடிடாதீங்க. காரணம் எங்க ஊரைப் பொறுத்தவரைக்கும் நாங்க ரொம்ப பெருந்தன்மையா நடந்துக்குறவங்க. ஒருத்தருக்கு ஒரு பொருள் பிடிச்சிருந்தா அடிச்சிட்டு பிடிச்சிட்டு எல்லாம் கிடக்க மாட்டோம்.....போனால் போகட்டும் போடா...அப்படின்னு விட்டுக் கொடுத்துடுவோம். எதுக்கு இந்த கெத்துன்னு கேட்டீங்கன்னா... தலைப்புக்காகத்தான்.

ஜி.டி. நாயுடு அந்தக் காலத்துலருந்தே ஆசைப்பட்டதால அவருக்கு விஞ்ஞானி பட்டம் கொடுத்தாச்சு. என்னதான் என்ன்ற அளவுக்கு திறமையா கார் ஓட்ட தெரியாதுன்னாலும் தம்பி நரேனுக்கு ஃபார்முலா வீரர்ங்கற பட்டமும் தந்தாச்சு. அட வீட்டுத் தொட்டியில இருக்கற செடிங்களைப் பார்த்துட்டு எப்படி வளக்குறது...எப்படி வளக்குறதுன்னு ஒரே தொண தொண... சரி போ...அப்படின்னு அக்ரி யூனிவர்ஸிட்டிக்கே எல்லா ரகசியத்தையும் தந்தாச்சு. இருந்தாலும் நம்மளை விடமாட்டேங்கிறாங்க.....

இப்ப கூட பாருங்க.... சின்ன வயசுல சூதானமா இருந்ததை, அறிவாளியா இருந்ததை எங்களோட பகிர்ந்துக்குங்க.... பகிர்ந்துக்குங்க அப்படின்னு ரெண்டு இல்லே...மூனு இல்லே.... அட நாலு தடவை கூட இல்லே... ஒரே தடவை ஆமீனா கேட்டுட்டாங்க.... என்ன செய்ய.... ஆனது ஆச்சு.... அவங்களும் என்ன நினைவு வெக்கப்போறாங்கன்னு அவங்க ஆசைக்கு சரி சொல்லிட்டேன். அதேன் இந்தப் பதிவு. 

நம்மளைப் பார்த்தீங்கன்னா சின்ன வயசில இருந்தே டீவிக்குள்ள ஆளு இருக்கிறாங்களான்னு யோசிக்க மாட்டேன்... ஓப்பன் செய்தே வெரிஃபை செய்திடுவேன்...

நிலாவுல காலை வச்சாய்ங்களா இல்லையான்னு ஆறாம் வவுப்பு படிக்கிறப்பவே வாங்கின பூதக்கண்ணாடில டெஸ்ட் செய்துட்டேன்... இதெல்லாம் சில்லித்தனமான கேள்விகள், இதுக்கு  தானா அறிவுபூர்வமா பதில் வேற சொல்றாங்களாமா.... hi hi hi hi... கேளுங்க என்னுடைய சுயதலப்பிரதாபத்தை (சரியா சொல்றேனா...)

ரொம்ப கஷ்டமில்லை ஜெண்டில் ஃபெல்லாஸ்...அண்ட்...ஃபெல்லீஸ்... மூனே மூனு எக்ஸாம்பிள்ல என்னைப் பத்தி புரிஞ்சுக்குவீங்க...(இதுக்கு மேல யாராவது தொடர் பதிவு போட சொல்வீங்க?????)

1. மேல் மாடியிலிருந்து விழுவது எப்படி?

எங்க தாத்தாவுடைய வீடு ஊர்ல ரெண்டு வீதியை அடைச்சு நிக்கும். ரெண்டு அட்ரஸ், ரெண்டு தண்ணி பில், ரெண்டு மின்சார பில்...அப்படி. யார்ன் பிஸினஸ் செய்துட்டு இருந்ததால வீடு பூரா யார்ன் மூட்டைங்களை அடைச்சு வெச்சிருப்பாரு தாத்தா. நடுசெண்டர்ல இருக்கும் ஹாலில் டைனிங் டேபிள், டீவி, தாத்தா சேரு, பாட்டி கட்டில், இவைகளைத்தாண்டி மீதி எல்லாம் மூட்டைங்க. திருப்பூர்ல இருக்கறவங்களுக்கு யார்ன் மூட்டை எவ்ளோ பெரிசிருக்கும்னு தெரியும்...இல்லியா? அந்த மூட்டைங்களைத் தாண்டி மேல மாடிக்கு போகற படிக்கட்டு.

எங்க மாமா மக, படத்துல எல்லாம் காட்டற மாதிரி துபாய் ரிடர்னு, இந்தியாவுல எல்.கே.ஜி ரகம்.... அவளுக்கு படிக்கட்டுல இருக்கற கைப்பிடி சுவர்ல வழுக்கிட்டே இறங்குவது கூட தெரியாது. India Guide நாங்க, சும்மா இருப்போமா.... இங்க வா ஷம்மூ, எப்படி வழுக்கறதுன்னு நான் சொல்லித்தர்றேன்னு சொல்லி அவளை நிக்க வச்சிட்டு கைப்பிடில ஏறி உக்காந்தாச்சு.

 “பாரு ஷம்மு, இப்படி உட்காரணும்... அப்புறம் மெதுமெதுவா பிடிப்பை விட்டா அது சறுக்கும்... கரெக்ட்டா பேலன்ஸ் செஞ்சு இந்த சைடும் சாயாம அந்த சைடும் சாயாம் உட்காரணும். ஆனா நீ இப்படி இந்த சைடு சாய்ஞ்சு உட்கார்ந்தேன்னு வெச்சுக்க... கீழே.....”... ... ... விழுந்தாச்சு.!!!

யார்ன் மூட்டை skip செஞ்சு, டைனிங் டேபிளை லாங் Jump அடிச்சு, straight landing, மார்பிள் தரைல, முதுகும், பூமியும் back to back.:)  அப்ப நைட்டு 8மணி. ஊரில இருக்கற டாக்டரையெல்லாம் நலம் விசாரிச்சுட்டு திரும்பி வீட்டுக்கு வந்த பின் Guide வேலைய விட்டாச்சு. :(

2. கரண்ட் ஷாக்கடிக்குமா?

எப்ப பார்த்தாலும், இதை தொடாதே.... அதைத் தொடாதேன்னு நை நை நைன்ண்ட்டே இருப்பாங்க எங்கம்மா. ஜிடி நாயுடுக்கே...... சரி விடுங்க... உங்களை ஏன் நோகடிக்கனும்.... அதனால அவங்களுக்கு தெரியாம அப்பப்ப எதையாவது டெஸ்ட் செய்யறது என் பொழுதுபோக்கு. அப்படி இருக்கறப்ப.... ஒரு தடவை சென்னைல இருக்கற பெரிய பாட்டி வீட்டுக்கு போயிருந்தோம். அங்கே இருக்கும் ஃப்ரிட்ஜு கைப்பிடில ஒரு இரும்புத்தகடு இருந்தது. காந்த விசையுடன் ஃப்ரிட்ஜின் கதவு ஒட்டும் பகுதி. அதோட ஓரத்தில் லைட்டா கரண்ட் லீக்காயிட்டு இருக்கும். மேல் தோல் படறப்ப எல்லாம் துருதுருன்னுஇருக்கும்.

ஆஹ்.... ஒரு விஞ்ஞானிக்கு டெஸ்ட் செய்ய லேப் என்ன, விருந்தாளியா வந்த வீடென்ன... எல்லாம் ஒன்னுதானே அப்படின்னு... அடுத்த நாள் எல்லாரும் மதியம் தூங்கிட்டிருந்த நேரம்.... மனித சஞ்சாரம் இல்லாத நேரத்துலதான் ஞானம் கிடைக்கும்னு யோசிச்சி, ஒரு ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் கிளாஸ் எடுத்துட்டு போனேன். கரண்ட் லீக்காகிற இடத்துல ஒரு சின்ன டச்சு.......டப்புன்னு கிளாஸ் விழுந்த சத்தம் கேட்டு எங்கம்மா வர்றாங்க.... எங்கம்மா வர்றாதுக்குள்ள் ரெண்டு அடி தாண்டி விழுந்திருந்த நான் அவசர அவசரமா எந்திரிச்சு நின்னுட்டேன்...
“என்ன சத்தம்...”
“ கைல பிடிச்சு விளையாண்டிட்டிருந்தேன்....டம்ளர் மிஸ்ஸாயிடுச்சு....”
“ எங்கெ போனாலும் எதையாவது ஒடைச்சிட்டிரு... வந்து தூங்கு.... ”
“...ம்ம்.. ”
ரெண்டு நாள் வரைக்கும் வலது கை தோள் பட்டை வரை பயங்கர வலி....காட்டிக்கலையே....ஹுக்கும்....

கரண்ட்டை கண்டுபிடிச்ச பெஞ்சமின் கூட அவ்ளோ சந்தோஷப்பட்டிருக்க மாட்டாரு. அடுத்த ஒரு வாரத்துக்கு ஸ்கூல்ல "கரண்ட்டை கண்டு பிடித்த வாரம்”தான் :)


 

3. தண்ணீரில் தியானம்.

மேல பாத்ததெல்லாம் சும்மா. இதை விடவும் எல்லா டெஸ்ட்டும் செய்வேன்... ஈரோட்டுக்கு பக்கத்துல ஒரு சின்ன கிராமத்துல இன்னொரு பாட்டி வீடு. காவிரிக் கரைக்கும் வீட்டுக்கும் பத்து நிமிஷ எஸ்கேப். என்னுடைய + என் பெரியப்பா பெண்ணுடைய (அவள் பெயரும் அன்னு:)) அருமை பெருமைகளைத் தெரிஞ்ச பாட்டி எங்களை விடவும் மாட்டாங்க.... மதியம் தூங்கவும் மாட்டாங்க.... ரொம்ப்ப்ப்ப கஷ்டப்படுத்திட்டு ஒரு நாள் மதியம் தூங்கிட்டாங்க. எங்க அத்தை வேற கடைக்கு போயிட்டாங்க. அழுக்குத் துணிங்களை எடுத்துப் போட்டுட்டு நானு, அவ, அவ அண்ணன் (ஒப்புக்கு சப்பாணி) ஒரே ஓட்டம். தண்ணியில் ஆட்டம் போடப்போட ஒரு ஞானோதயம்.... தண்ணிக்கடியில மூச்சுப் பிடிச்சுட்டு தியானம் செய்யிற மாதிரி உட்காரலாம்னு ஐடியா. பெரியப்பா பொண்ணு இதுக்கெல்லாம் வர மாட்டேன்னு சொல்லிடுச்சு. சத்திய சோதனை...!!!!

சரின்னு நானே மூச்சைப் பிடிச்சுகிட்டு கண்ணை மூடிட்டு தண்ணிக்கடில உட்கார்ந்தாச்சு. கொஞ்ச நேரத்துல தண்ணி அழகா நகர்த்திட்டு போகுது.... மிதக்கற மாதிரி....அருமையா இருந்தது அந்த ஃபீல்...இப்பவும் நினைவில் இருக்கு....ஒரு ரெண்டு நிமிஷம் கூட இல்லை.... அதுக்குள்ள அவளோட சத்தம் கேட்குது, என்னைக் காணோமின்னு... எந்திரிச்சு என்ன்னு பார்க்கலாம்ன்னா எந்திரிக்க முடியலை... தண்ணி வேகத்துக்கு நிக்க முடியலை... என்ன செய்யிறதுன்னு அடுத்த சாதனைக்கு முடிவெடுக்கறதுக்கு முன்ன எங்கண்ணன் வந்து என் முடியைப் பிடிச்சு இழுத்துட்டு போயி கரைல சேர்த்தான். கூட இருந்தவங்க எல்லாம் அங்கயே கதாகாலட்சேபம் ஆரம்பிச்சுட்டாங்க...சரி... நம்ம சாதனையை முறியடிக்க ஒரு கூட்டமே இருக்குன்னு மனசை திடப்படுத்திகிட்டு வீட்டுக்கு போனதும் வரவேற்பு அர்ச்சனைக்கு தயாராயிகிட்டேன்.

யாரைக் கூப்பிடறது???

ம்ம்... இதுதான் பிரச்சினை... இப்ப யோசிச்சு யோசிச்சு கிட்டத்தட்ட விஞ்ஞானிகள் போலவே பதிவெழுதற சிலர் அப்ப விஞ்ஞானிகளா இருந்தாங்களான்னும் ஒரு டெஸ்ட் செஞ்சு பார்த்துடலாம். எனவே


எல்லாரும் ‘நானும் விஞ்ஞானிதான்’ என்னும் தலைப்புல ஒரு பதிவை, சிறு வயது நினைவுகளை வெச்சு எழுதிக் குடுத்துடுங்க. ப்ளீஸ் ..... :))

பி.கு:
எனிவே... சிந்தனை செய் மனமேன்னு கிடக்கற லிஸ்ட்டிலே நான் இல்லாததால கற்பனைக் கதைகள் பற்றியெல்லாம் எழுத முடியலை.... நாய் வாலை மிதிச்சா கடிக்குமான்னு புது பட்டுப்பாவாடை சட்டைய தியாகம் பண்ண சரித்திரம் எங்களுது.... ஹி ஹி ஹி.... சரி விடுங்க.... போயி ஒரு கிளாஸ் தண்ணி குடிச்சு நல்லா மூச்சு விட்டு ரிலாக்ஸாயிக்குங்க. அடுத்த பதிவில் சந்திப்போம்.... Auf Wiedersehen :))

பி.கு 2:
இதையெல்லாம் விடுங்க. உண்மையிலேயே பரிசோதனைகள் நடத்தி, தன் வாழ்க்கையையே அந்த பரிசோதனைக்கு உட்படுத்தி, மேற்கத்திய கலாசாரத்தின் தீமைகளிலிருந்து தன்னை அகற்றி, இஸ்லாம் கூறும் வாழ்க்கை நெறிகள்தான் சிறந்ததுன்னு, தானும் ஒரு விஞ்ஞானின்னு நிரூபிச்சாங்களே சாரா போக்கர்.... அவங்களைப் பத்தியும் படிக்காம விட்டுடாதீங்க. நன்றி சகோஸ். :)

21 comments:

 1. //இதெல்லாம் சில்லித்தனமான கேள்விகள், இதுக்கு தானா அறிவுபூர்வமா பதில் வேற சொல்றாங்களாமா//

  அதானே... சின்னபுள்ளத்தனமாவுல்ல இருக்கு!!

  //கேளுங்க என்னுடைய சுயதலப்பிரதாபத்தை (சரியா சொல்றேனா...) //

  இது கேள்வி!! கேள்வின்னா இப்படி இருக்கணும்!!

  ReplyDelete
  Replies
  1. //அதானே... சின்னபுள்ளத்தனமாவுல்ல இருக்கு!!//
   அதானே :)))))

   அதென்ன செலெக்டிவ் அம்னீஷியா மாதிரி செலெக்டிவ் போஸ்ட் கமெண்ட்டிங்???? :))))

   Delete
 2. //இப்ப யோசிச்சு யோசிச்சு கிட்டத்தட்ட விஞ்ஞானிகள் போலவே பதிவெழுதற சிலர் அப்ப விஞ்ஞானிகளா இருந்தாங்களான்னும் ஒரு டெஸ்ட் செஞ்சு பார்த்துடலாம். //

  எம்மா.... என்னா ஒரு கொல வெறீ...!!

  இந்தத் தொடர்பதிவு ஆரம்பிக்கும்போதே என்னை யாரும் கூப்பிடரக்கூடாதேன்னு, ஏர்வாடிக்கு நேந்துக்கவா... பொட்டல்புதூருக்கு நேந்துக்கவான்னு யோசிச்சுகிட்டிருந்தேன்.. அந்த சிந்தனை முடியிறதுக்குள்ள கூப்பிட்டுட்டீகளே... நான் என்ன செய்வேன்... சின்ன வயசுல போட்ட சோத்தைத் தின்னு, சொன்னப் பேச்சைத் தட்டாமக் கேட்டு வளந்து சாலிஹான புள்ளையாக்கும் நானு!! எப்படி எழுத..என்ன எழுதன்னு ஒண்ணும் புரியலையே.. பொய் சொல்லக்கூடத் தெரியலையே...

  ReplyDelete
  Replies
  1. ஸ்ஸ்ஸ்ஸ்....அப்பாட... நல்ல வேளை நீங்களே வந்துட்டீங்க.... உங்களுக்கு மறந்து போயிருந்தாலும் உங்க அம்மாப்பா, கண்டிப்பா பேரன்மாரிடம் உங்க ஆட்டோகிராஃப்ஃபை ரிலீஸ் செஞ்சிருப்பாங்க.... கேட்டாவது எழுதிடுங்க.... ஏர்வாடிக்கும் நேர்ந்துக்குவீங்களோ... ம்ம்.. கவனிச்சுக்குறேன்... :))

   Delete
 3. ஆங்.. சொல்ல மறந்துட்டேன்... நாங்கல்லாம் “நானும் ரவுடிதாம்லேன்னு பதிவு எழுதுனவுக.. என்னப் போயி “நானும் விஞ்ஜானிதாம்லே’யின்னு எழுதச் சொல்றீக... !!!

  வாட் எ ஷேம்!! ஐயம் ஆங்கிரி...!!

  (அப்பாடா, தப்பிச்சாச்சு!!)

  ReplyDelete
  Replies
  1. அதுக்குள்ள யோசிச்சு சைக்கிள் கேப்புல ஒரு விளம்பரமா> திருந்துங்கக்கா.... திருந்துங்க,.... :))

   பெரிய பெரிஅ அரசியல் வியாதிங்களே ரவுடியாத்தான் இருந்தாய்ங்க.... இருக்காய்ங்க.... நீங்க ரவுடியிலிருந்து விஞ்ஞானியா... சாரி... விஞ்ஞானியிலிருந்து ரவுடியாகக்கூடாதா???? ஆகுங்க...ஆகுங்க :))))

   மீ வெயிட்டிங் :))

   Delete
 4. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..

  ஹா ஹா...நல்ல வேள ஜி.டி நாயுடு உங்களுக்கு முன்னமே பிறந்துட்டாரு..இல்லைனா உங்க முன்னாடி அவரு எப்டி விஞ்ஞானி
  பட்டம் வாங்க முடியும்...:)

  மனம் விட்டு சிரிக்க முடிஞ்சுச்சு...சின்ன பிள்ளைகள்ல எல்லாம் ஒரு மார்க்கமா தான் இருந்திருப்பிங்க போல...:)

  ReplyDelete
  Replies
  1. வ அலைக்கும் அஸ் ஸ்அலாம் அக்கா...,

   //ஹா ஹா...நல்ல வேள ஜி.டி நாயுடு உங்களுக்கு முன்னமே பிறந்துட்டாரு..இல்லைனா உங்க முன்னாடி அவரு எப்டி விஞ்ஞானி
   பட்டம் வாங்க முடியும்...:)// ஹி ஹி ஹி... உங்களுக்கு தெரியுது :))

   //மனம் விட்டு சிரிக்க முடிஞ்சுச்சு...//
   அல்ஹம்துலில்லாஹ் அக்கா :))

   Delete
 5. ரவுடி, அடிதடி ன்னு இந்த பக்கம் நிறைய வார்த்தைகள் வருவதால் பயத்தில் ஜூட்......:-)

  ReplyDelete
  Replies
  1. ஹெ ஹெ ஹே.... சுவனப்பிரியன் பாய்....

   என்னதான் இருந்தாலும் நாங்க உங்க ரேஞ்சுக்கு வருவோமா....

   “பயம்”???????????
   உங்களுக்கு ????????

   :)))))))))

   Delete
 6. //பகிர்ந்துக்குங்க.... பகிர்ந்துக்குங்க அப்படின்னு ரெண்டு இல்லே...மூனு இல்லே.... அட நாலு தடவை கூட இல்லே...//

  பரவாயில்லையே...அன்னுக்கு இத்தன பேரு பாக்கு வெத்தல வச்சுருக்காங்களான்னு ஆச்சர்யப்பட்டேன்...:-))))

  ReplyDelete
  Replies
  1. ஹி ஹி ஹி.... :))

   பில்டப்புதான் :))

   Delete
 7. எப்பா! என்ன மாதிரியெல்லாம் பண்ணியிருக்கீங்க....பயமா இருக்குப்பா....:))

  ReplyDelete
  Replies
  1. இப்போல்லாம் அப்படி செய்யறதில்லை சகோ.ஆதி. பெரிய ஆளு ஆயாச்சில்லே :))

   Delete
 8. Replies
  1. :))
   கருத்துக்கு நன்றி பாய்.

   Delete
 9. அடடா விஞ்ஞானிகன் பட்டியல் நீண்டுகிட்டே போகுதே
  பட்டியலின் அடுத்தபக்கம் நம்ம அன்னுதானோ!

  தண்ணீர் தியானம் நாமளும் செய்துபார்த்து, உம்மம்மாக்கிட்ட செமய்ய வாங்கியிருக்கோமுல்ல..

  சூப்பர், ஒரு ரவுடிய விஞ்ஞானியாக்க முயற்சிக்கும் அன்னு வாழ்க வாழ்க..

  ReplyDelete
  Replies
  1. //அடடா விஞ்ஞானிகன் பட்டியல் நீண்டுகிட்டே போகுதே
   பட்டியலின் அடுத்தபக்கம் நம்ம அன்னுதானோ!
   //
   hi hi hi :))

   //தண்ணீர் தியானம் நாமளும் செய்துபார்த்து, உம்மம்மாக்கிட்ட செமய்ய வாங்கியிருக்கோமுல்ல..//
   அதானே..... நீங்களும் எழுதுங்கக்கா... :))

   //சூப்பர், ஒரு ரவுடிய விஞ்ஞானியாக்க முயற்சிக்கும் அன்னு வாழ்க வாழ்க..//
   ஹுஸைனம்மாக்கா நோட் திஸ் ப்ளீஸ்.... :)))

   Delete
 10. ha itha annikkee padissi siri sirinnu sirissaassu

  ReplyDelete

உங்கள் கருத்துக்கள்...