All you need is love :))

Thursday, December 20, 2012 Anisha Yunus 10 Comments

டைம்ஸ் ஸ்கொயரில் இருந்த ஒரு நபர் டெர்ரியை நோக்கி வைத்திருந்த அட்டை :))

தேவையின்றி (!!) பிரசித்தி பெற்ற டெர்ரி ஜோன்ஸை எல்லாருக்கும் தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்... 2010இல் குர்’ஆனை எரிப்பேன் என சொல்லி கைதாகி, 2011இல் எரித்து பல இடங்களில் கலவரங்களுக்கு வித்திட்ட........ கிறிஸ்தவ அடிப்படைவாதி????

அதன் அடுத்த வருடம் 2012 - முஹம்மத் நபியை (ஸல்) என்னவெல்லாம் ஜோன்ஸின் மனதில் ஆசை இருந்ததோ அந்த ஆசையெல்லாம் கொண்டவராக மாநபியை சித்தரித்து, புத்தி மழுங்கி ஒரு படத்தை எடுத்தவர். அதன் மூலம் எகிப்தின் மரணதண்டனை தீர்ப்பையும் வாங்கி, இன்னும் சுதந்திரமாய் அமெரிக்காவில் சுற்றிக் கொண்டிருப்பவர்.

இந்த ஒலக மகா மதகுரு, நியூ யார்க்கின் புகழ் பெற்ற Times Squareஇல், கடந்த செப்டெம்பர் 10, 2011இல் ஒரு வீதியில் கூடி மக்களிடம் ‘இஸ்லாத்தின் மாண்புகளை’ அவருக்கே உரித்தான வழியில் பிரசங்கம், செய்ய விழைந்தபோது நடந்த சம்பவமே இது.... :)))

”இஸ்லாம் பொய்களால் ஆனது, கட்டுக்கதைகளைக் கொண்டது, போரை, துவம்சத்தை மட்டும் ஆதரிப்பது...” என ஆரம்பித்த உடன் பிதற்றிக் கொண்டே போகிறார்.... சுற்றியிருக்கும் மக்கள் கூட்டத்தில் சலசலப்பு அதிகரிக்கிறது.... ”No...No... That is not Islam... You dont know about it.... Nay.." பல்வேறு குரல்கள் ஒலிக்க ஆரம்பிக்கின்றன. பேயறைந்த முகத்தைக் கொண்டு டெர்ரி இன்னும் அதிகமாக தான் கொண்டு வந்த பேப்பரிலிருந்து சாத்தானிய வேதம்...சாரி... அவருடைய நோட்ஸை படிக்க ஆரம்பிக்கிறார். :)


பாடலை ஆரம்பித்து வைத்த இளைஞர்.... :))
கூட்டத்தில் இருந்த ஒரு இளைஞர் தன் மொபைலில் அவசரமாக எதோ தேடி, உரத்த குரலில் பாட ஆரம்பிக்கிறார்...
“No one you can save that can't be saved.
Nothing you can do but you can learn how to be you
in time - It's easy.

All you need is love, all you need is love,
All you need is love, love, love is all you need.
Love, love, love, love, love, love, love, love, love.
..”

உண்மையிலேயே புகழ் பெற்ற பீட்டிள்ஸ் குழுவின் பாடல் அது.... மெல்ல மெல்ல கூட்டம் முழுதும் இந்தப் பாடல் வைரஸ் நோய் போல் பரவுகிறது.... வேர்க்க விறுவிறுக்க டெர்ரி ஜோன்ஸ் அந்த இடத்தை காலி செய்யும் வரையிலும் இந்தப் பாடலை அங்குள்ள மக்கள் பாடிக்கொண்டே உள்ளனர்..... :))







அங்கே நடந்ததை அப்போதே வீடியோவாக பதிவாகிவிட்டாலும், அது இப்போதுதான் நெட்டில் உலாவ ஆரம்பித்துள்ளது.... அதன் வீடியோ வடிவம் இதோ :)

( ரெஃபெர்: http://www.huffingtonpost.com/2012/12/18/terry-jones-all-you-need-love_n_2323094.html)




# அந்த நாளில் டெர்ரியின் டீ-ஷர்ட்டில் எழுதியிருந்த வாசகம் -- "Everything I Ever Needed To Know About Islam I Learned On 9/11"

# ஆனால் எழுத வேண்டியதோ -- "Everything I Ever Needed To Know About 'defeating Hate Speech' I Learned On 9/10/11" ஹ ஹ ஹா...
#  Better Luck Next Time Terry :))

தம் வாய்களைக் கொண்டே அல்லாஹ்வின் ஒளியை (ஊதி) அணைத்துவிட அவர்கள் விரும்புகிறார்கள் – ஆனால் காஃபிர்கள் (நிராகரிப்பவர்கள்) வெறுத்த போதிலும் அல்லாஹ் தன் ஒளியை பூர்த்தியாக்கி வைக்காமல் இருக்க மாட்டான். (அல்குர்ஆன்: 9:32)


.

10 comments:

  1. ஸலாம் சகோதரி பகிர்வுக்கு ஜெஸக்கல்லாஹ் ஹைர் ....கனோளி அருமை. இதற்குமேல் யாரும் ஜெரியை கேவப்படுத்த முடியாது ...... ஹா ஹா ஹா

    உண்மையைப் பொய்யின் மேல் வீசுகிறோம். அது பொய்யை நொறுக்கு கிறது. உடனே பொய் அழிந்து விடுகிறது. - அல்குர்ஆன் (21.18)

    ReplyDelete
    Replies
    1. ஹ ஹ ஹா.... டெர்ரியின் முகத்தைப் பார்க்க சிரிப்புதான் அதிகரிக்கிறது. என்னவொரு அவமானம்... ஹ ஹ ஹா.... கருத்துக்கு நன்றி பாய். :)

      Delete
  2. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வ பரக்காதஹூ சகோ....

    மாஷா அல்லாஹ் அருமையான பதிவு.

    வீடியோ பார்த்தேன்.இந்த தாத்தாக்கு வயசான காலத்துல ஏன் இந்த வேலை? சிரிப்புதான் வருது.

    ஆனால் அந்த வாலிபர்களின் செயல் மன மகிழ்வை தருகிறது.இப்போது அவர்கள் புரிந்து கொண்டுள்ளார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.

    தம் வாய்களைக் கொண்டே அல்லாஹ்வின் ஒளியை (ஊதி) அணைத்துவிட அவர்கள் விரும்புகிறார்கள் – ஆனால் காஃபிர்கள் (நிராகரிப்பவர்கள்) வெறுத்த போதிலும் அல்லாஹ் தன் ஒளியை பூர்த்தியாக்கி வைக்காமல் இருக்க மாட்டான். (அல்குர்ஆன்: 9:32)

    ReplyDelete
    Replies
    1. வ அலைக்கும் அஸ் ஸலாம் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு சகோ...

      கருத்துக்கு நன்றி. ஆனால் ஒன்ரு தெரிந்து கொள்ளுங்கள். நியூ யார்க் நகர மக்கள் சமயோசித / அந்த நேரத்துக்கு தகுந்த படி யோசித்து தம் இருப்பை வெளிப்படுத்துவதில் பேரும்புகழ் அடைந்தவர்கள். பகுத்தறிவும், எதையும் புத்திக்கூர்மையுடன் உற்று நோக்கவும் தெரிந்தவர்கள். அதுவே இங்கேயும் வெளிப்பட்டுள்ளது..!

      குர்’ஆன் வசன்ம் இங்கே அழகாக பொருந்துகிறது. நன்றி. :)

      Delete
    2. நீங்கள் குறிப்பிட்ட வசனத்தை பயன்படுத்திக் கொண்டேன்... நன்றி :)

      Delete
  3. ஹா...ஹா..ஹா... வீடியோவும், அந்த இடியட் பதாகையும் சூப்பர் சகோ.!

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் பாஸித். அந்த வீடீயோவின் முக்கிய அம்சமே அந்த சகோதரரின் உத்திதான்... ஹ ஹ ஹா.... அங்கே நான் இல்லாமல் போனேனே என்ரு தோன்றுகிறது.... வாழ்க்கை முழுதும் நினைத்து நினைத்து சிரிக்க இது ஒன்று போதும் :))

      Delete
  4. Neethu padivai parthen aanal reply panna mudiyalai.. ennaku intha sambavam paathi mulusa theriyathu.. Apparam en hus kitha keethu therinthu konden..

    ReplyDelete
  5. சரியான சவுக்கடி...
    பொருத்தமான குர்ஆன் வசனங்கள்..

    ReplyDelete

உங்கள் கருத்துக்கள்...