சிக்கன் பர்பட்வாலா
:: :: :: :: :: :: :: :: On Demand Chicken Burbutwaalaa:: :: :: :: :: :: :: ::
ஹெல்லோ சகோஸ்.... நிறைய பேர் இதனை ஃபோட்டோவொடு போடச்சொல்லி கேட்டதால். இதோ ஒரு பதிவு அதற்காகவே. ரொம்ப சிம்பிளானது, ரொம்ப டேஸ்ட்டானது. தயிர் சாதம், ரசம் சாதம், பிரியாணி என எல்லா வகைக்கும் ரொம்ப பொருத்தமானது. நிமிஷத்துல செய்துடலாம்.
இதே ரெசிபியை வைத்து சோயா நக்கெட் உருண்டைகளை போட்டும் செய்யலாம். சுடு நீரில் கொதிக்க வைத்தெடுத்து பின் நன்றாக பிழிந்து நீரை வெளியேற்றி, இரண்டு துண்டுகளாக்கி அப்படியே சிக்கனுக்கு பதிலா உபயோகிக்கலாம். சோயா உருண்டை மாதிரியே இருக்காது.
தேவையானவை:
பாருங்க....இவ்ளோதான்...இவ்வளவேதான் தேவை :) |
தோல் பிடிக்கும் என்பவர்கள் மட்டும் தோலோட போடுங்க...வேண்டாம் என்பவர்களுக்கு,தோலில்லாமத்தான் டேஸ்ட் ஜாஸ்தி... ஹி ஹி :) |
- தக்காளி - 1 கமலா ஆரஞ்சு சைஸுக்கு / கால் கப் அளவுக்கு.
- சின்ன வெங்காயம் / பெரிய வெங்காயம் - 1/4 கப்- சமமாக இரண்டு அளவு பிரித்து வைக்கவும்.
- இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
- கரம் மசாலா - 1/4 டீஸ்பூன்
- மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
- தனியாத்தூள் - 1/2 டீஸ்பூன்
- மிளகாய்த்தூள் - 1/2 டீஸ்பூன்
- குறுமிளகுத்தூள் - 1/2 டீஸ்பூன்.(காரம் பத்தவில்லையென்றால் இதன் அளவை கூட்டுங்கள்...மிளகாய்த்தூளை அல்ல)
- எண்ணெய் - 2 டீஸ்பூன்
- தேங்காய் துண்டுகள் - தேவைப்பட்டால்
- சிக்கன் - அரைக்கிலோ சிறிய துண்டுகள் (தோல் நீக்காவிட்டாலும் சரியே .. :) )
செய்முறை:
1.
எண்ணெய், தேங்காய்த்துண்டு, சிக்கன், ஒரு பங்கு நறுக்கிய வெங்காயம் தவிர
மத்ததெல்லாம் (இன்னொரு பங்கு வெங்காயம் உட்பட) எல்லாவற்றையும் சேர்த்து மைய
அரைத்தெடுக்கவும்.
3.
சிக்கன் துண்டுகளையும் இட்டு நன்கு வதக்கவும். இரண்டு நிமிடம் கழித்து
அரைத்து வைத்துள்ள பேஸ்ட் போடவும். உப்பு கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து சரி
பார்க்கவும்.
5. அடுப்பில் மிதமான தீயில் பதினைந்து நிமிடங்கள் மட்டும் மூடி போட்டு வேக விடவும். நடுவில் ஒரு, இரண்டு தடவை திருப்பி விடவும்.
6. இதில் வெளியாகும் சிக்கனின் நீரும், அரைத்த பேஸ்ட்டும் சேர்த்து ஒரு கிரெவியாக மாறும். அதைத்தான் உர்தூவில் பர்பட் (burbut)
என்போம். :) ரசம் சாதத்திற்குக்கூட இந்த ரெசிபி மிக பிரமாதமாக இருக்கும்.
அந்த கிரேவி கண்டிப்பா குழந்தைகளின் ஃபேவரைட் ஆயிடும். :) பேச்சிலர் சகோதரிகள், சகோதரர்கள் எல்லோருக்குமே ஈஸி...:) அண்ட் டேஸ்ட்டி :)
7. ஆறப்போட்டு ருசி பார்க்கவும். :)
குறிப்பு:
- இந்த கிரேவி கொஞ்சம் ஜாஸ்தியாக வேணும்ன்னா தக்காளி வெங்காயம் ஜாஸ்தி செஞ்சுக்குங்க. தண்ணீர் சேர்த்த வேண்டாம்.
- கிரேவி திக்காக வேணும்ன்னா ஒரு அஞ்சு நிமிஷம் மட்டும் மூடி விட்டு மீதி நேரம் எல்லாம் மூடாமலே விட்டுடுங்க.
- தோல் மட்டுமே போட்டு கூட இதை செய்யலாம்...அப்ப மூடி போடாம அப்படியே வாட்டி எடுங்க. ருசி நல்லா இருக்கும்.
- பெப்பர் ஜாஸ்தியா சேர்த்தினால் குளிருக்கு, சளிக்கு நல்லா இருக்கும்.
- போன்லெஸ்...எலும்பில்லா கறி உபயோக்கிறீங்கன்னா 15 நிமிஷம் வேண்டாம்.கொஞ்சம் கம்மியான சூட்டிலேயே வைத்து 5-6 நிமிடங்களில் எடுத்து விடவும். இல்லைன்னா சக்கை போல கறி ஆகிவிடும். :(
- சோயா உருண்டைக்கும், பச்சை வாடை போனாலே போதுமானது. அதிக நேரம் வேண்டாம்.
ஒகே. இந்தக் குறிப்பு ஜலீலாக்காவுடைய ஈவெண்ட்க்கு அனுப்பியதுதான். ஆனால் சகோஸ்கேட்டதறகாகவே மறுபடியும் ஃபோட்டோஸ் போட்டு தனியாக ஒரு பதிவாயிடுச்சு. என்சாய் :))
.
செய்முறை ஈசியாத்தான் இருக்கு. சாப்ட்டுப் பார்த்தா, டேஸ்டியாயிருக்கும்னு நினைக்கிறேன்.
ReplyDeleteபடங்களும் அருமை.
//சோயா உருண்டை மாதிரியே இருக்காது. //
ReplyDeleteஅப்ப சதுரமா இருக்குமா? :-)
//நன்கு வனக்கவும்.//
ReplyDeleteமனுஷனையே நாங்க வணங்குறதில்ல... நீங்க என்னன்னா.......... :-)))
சூப்பர்.அசத்துங்க.வெற்றி பெற வாழ்த்துக்கள்.
ReplyDeleteIthu thaana aathu.. Seithu parka aaval varukeerathu.. Ennaku ippa health sari illai nalla aanathuku apparam seithu parkuren.
ReplyDelete// :: :: :: :: :: :: :: :: On Demand Chicken Burbutwaalaa:: :: :: :: :: :: :: ::
ReplyDeleteஹெல்லோ சகோஸ்.... நிறைய பேர் இதனை ஃபோட்டோவொடு போடச்சொல்லி கேட்டதால். இதோ ஒரு பதிவு அதற்காகவே//
ஏயப்பா.... என்னா அலப்பறை... அப்போ “நேயர் விருப்பமா” இந்தப் பதிவு!! இருக்கட்டும், இருக்கட்டும்!!
//நிறைய பேர்// என்பதற்கு உங்கள் அகராதியில் என்ன அளவு அனிஷா? ஒரு நூறு பேர்? இருநூறு பேர்? :-D ;-)
////சோயா உருண்டை மாதிரியே இருக்காது. //
அப்ப சதுரமா இருக்குமா? :-)//
ஆமினா!! நீ என் இனமடி!! கலக்கிட்டே!! :-))))))))))
ம்ம் நல்ல இருக்கு முதல் போட்டோவில் இருந்து நல்ல எடுத்து கடைசி போட்டோவ கோட்ட விட்டுட்டீங்க.
ReplyDeleteஅதில் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம்.