புதிய ............... வாழ்த்துக்கள் !!

Tuesday, January 01, 2013 Anisha Yunus 1 Comments

முந்தைய வருடங்களைப் போலவே
ஒரு கல்லையும் நகர்த்தவில்லை நாம்,
இந்த வருடத்திலும்...

தீமையிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்க,
பெண்களின் வாழ்வைப் பாதுகாக்க,
போர்களிலில் வீழும் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க,
கனன்றெரியும் வறுமையைப் புசிப்பதிலிருந்து தடுக்க,
ஏழைகள் ஏழைகளாகிக் கொண்டே போவதைத் தடுக்க,
உள்ளங்களில் நஞ்சு விளைந்துகொண்டே போவதைத் தடுக்க,
வயலுக்கு இடும் மருந்தால் வாழ்வைத் தொலைக்கும் விவசாயியைக் காப்பாற்ற,
பணம் என்றும், பொருள் என்றும் குடும்பத்தைத் தொலைக்கும் உயிர்களைக் காப்பாற்ற...
வரதட்சணை ஸ்டவ்வை வெடிக்க விடாமலிருக்க...
காமக்கண்களிலிருந்து விளையாப்பயிர்களைக் காப்பாற்ற...
வேகத்தின் பிடியில் நரகில் வாழும் குழந்தைகளின் சுவர்க்கத்தைக் காப்பாற்ற...
இன்னும் எண்ணற்ற கேள்விகளுக்கு விடை காணாமலேயே...

வெட்கமற்று வாழ்த்துகிறோம் இன்னொரு
புது வருடப் பிறப்பிற்கு...!!

# வாழ்க மனிதம்..!

1 comment:

  1. இனியாவது நல்ல மாற்றம் வரட்டுமே என்ற ஒரு நப்பாசையில் விரும்பியவர்கள் வாழ்த்திக் கொள்ளுகிறார்கள். நாமும் பிரார்த்திப்போம், இன்று ஒரு தினம் என்றில்லாமல் என்றுமே!! சில அநியாயங்களை நேரில் கண்டாலும், வேறு என்ன செய்ய முடிகிறது?

    ReplyDelete

உங்கள் கருத்துக்கள்...