ரிஸானா நஃபீக் -- என் பார்வையில்

Friday, January 11, 2013 Anisha Yunus 31 Comments

ஹல்லோ சகோஸ்,
வரவர யாருக்காக நான் பதிவெழுதறேன்னே எனக்குத் தெரியாம போயிடுச்சு. என் கருத்துக்களை, நான் விரும்பியபோது, விரும்பியபடி எழுதும் உரிமை எனக்கா அல்லது என் தளத்தில் மௌனியாக வாசித்து விட்டு வெளியே போய் வாமிட் செய்பவருக்கா புரியவில்லை. என் ழ்நிலை என்ன, எதில் உழல்கிறேன் என்பதெல்லாம் சிலர் பல இஸ்லாமிய எதிர்ப்பை மட்டுமே சுவாசிக்கும் ஜீவன்களுக்கு புரிவதில்லை. பல முஸ்லிம் பதிவர்களையும் அதே தோரணையில்தான் உற்று நோக்குகின்றனர். மாடு கன்னு போட்டா பதிவு, மனுசன் மண்டையப் போட்டா பதிவுன்னு எழுத பதிவுலகம் எங்களுக்கு பணம் தருவதில்லை. (பின் தொடர்பவர்களும் தருவதில்லை என்பது வேறு விஷயம்!!). எனவே எல்லா விஷயங்களுக்கும் எங்களின் பதில் வேண்டுமென்பவர்கள் ஒரு குறிப்பிட்ட தொகையை எங்களுக்கென அனுப்பி வைத்தால் குடும்பத்தை கவனிக்க ஒரு Care Takerஐ போட்டுவிட்டு பதிவை மட்டுமே ஃபோகஸ் செய்ய வசதியாக இருக்கும். Sorry I do not accept cheques :).
(Rizana Nafeek) Thanks to Wiki.

எனி வே.... ரிஸானா நஃபீக்.... இந்தப் பெயர் இப்போதுதான் பதிவுலகில் தெரிய வந்துள்ளது என்றாலும் சில வருடங்களாகவே (2005 மல்) பிரச்சினையில் இருக்கும் பெயர்தான். இதைப் பற்றி ‘மதவெறி பெண் பதிவர்’ எழுதவில்லையென ஒரு ‘குமுதினி’ என்னும் நபர் வேறொரு பதிவில், அதுவும் சம்பந்தமே இல்லாத பதிவில் சென்று ு(றை/ரை)க்கிறார் (!!!) ஏன் மேடம்(!!!), வழி தவறிப் போயிட்டீங்களா? இங்கே வந்து ஏன் சொல்ல முடியல? ந்த தைரியம் கூட இல்லாதவங்க எதுக்கு அடுத்த வீட்டு முன்னாடி நின்னு கத்தணும்? முதலில் மேனர்ஸ் கற்றுக்கொள்ளுங்கள். பல இஸ்லாமிய புத்தகங்கள் அந்த டாப்பிக்கில் கிடைக்கும். வேண்டுமானால் இலவசமாக நானே அனுப்பி வைக்கிறேன். :)

மறுபடியும் ஆஃப் த டாபிக்.... சாரி...விஷயத்திற்கு வரலாம். நான் சவுதியில் வசிப்பவளல்ல. அதனால் சவுதியில் நடப்பெல்லாம் சவுதி வாழ் சகோதரங்கள் சொன்னால்தான் தெரியும். மேலும் என் குடும்பம், என் அலுவலகம், அதைத் தாண்டி இன்ன பிற வேலைகளின் நடுவில் எல்லா நாட்டிலிருந்தும் செய்தித்தாள்களை வாசிக்க எனக்கு நேரமிருப்பதில்லை.

எனக்கு ரிஸானாவின் விஷயம் அவரின் மரணத்திற்குப் பின் எழுந்த சலசலப்பில்தான் தெரிய வந்தது. அதிலும் சரியான, தேவையான தகவல்களோ, எது உண்மை எனத் தெரிந்து கொள்ளும் அளவுக்கான ஆதாரங்களோ எங்கேயும் இல்லை. இதோ கீழே இணைத்துள்ள இந்தக் கடிதத்தை திரு.மார்க்ஸ் அவர்கள் தன்னுடைய முகநூலில் போடும் வரை.

கதை என்ன என்பவர்களுக்காக:

இலங்கையில் திரிகோணமலை மாவட்டத்தை சேர்ந்த மூதூர் - வாழ் குடும்பம்தான் ரிஸானாவின் குடும்பம். 02.02.1988இல் வறுமையினால் பீடிக்கப்பட்ட ஒரு ஏழைக்குடும்பத்தில்தான் ரிஸானா பிறந்தார்.  பதினேழு வயதாகும் போது, பிறப்புச் சான்றிதழில் 2.2.1982 என்று மாற்றி ஒரு ஏஜண்ட் வழியாக இலங்கையிலிருந்து சவுதி சென்றடைந்தார். வீட்டு வேலைக்காக. முதல் குற்றவாளிகள்: ாஸ்போர்ட்டில் மாற்றங்கள் செய் சப் ஏஜண்ட் அஜீர்தீனும், சரிவர மக்களை பரிபாலிக்காத, ஆவணங்களை பரீசிலிக்காத இலங்கை அரசும்.


01.04.2005ல் சதி அரேபியாவுக்கு வந்து சேர்ந்த ரிஸானா, ரியாிலிருந்து சுமார் 400 மைல் தூரத்திலுள்ள அல் தவாத்மி என்னும் சிற்றூரில் நைஃப் ஜிசியான் ஹலாஃப் அல் உதைபி (Naif Jiziyan Khalaf Al Otaibi) என்னும் சவுதி அரபியின் வீட்டில், வீட்டு வேலைகளுக்காக அமர்த்தப்படுகிறார். வீட்டு வேலைகளும், நான்கு மாத குழந்தையைக் கவனிப்பதும் ரிஸானாவின் தலையில் விழுகிறது. 

பத்து நபர்களைக் கொண்டதொரு அரேபியக் குடும்பத்திற்கு 17 வயதில் உள்ள இன்றைய பெண்களில் எத்தனை பேர், இந்த அத்தனை வேலையையும் செய்யக் கூடும்? வறுமையின் பிடியிலே உழன்றவராகவே இருந்தபோதிலும் வயதையொத்த முதிர்ச்சி இருந்ததா அந்தப் பெண்ணிற்கு...?? அல்லாஹ்வே அறிவான்.  தனியே வசிக்கும் குடும்பங்களில் முதன்முதலில் குழந்தை பெறும் பெண்களே பற்பல மன அழுத்தங்களுக்கு ஆளாகும்போது 17 வயதுப் பெண்ணிடம் இத்தனையையும் சேர்த்து, அழும் குழந்தையையும் வர்க்கச்சொல்லி கேட்பது கொத்தடிமைத்தனம் அல்லவா? மொழிப்பிரச்சினையும் பக்குவமும் இல்லாத பெண்ணிடம் இத்தனையும் எதிர்பார்த்ததை என்னவென்று சொல்வது??? இரண்டாம் செட் குற்றவாளிகள் : தன் வீட்டில் வேலை செய்ய வந்த பெண்ணின் வயது முதிர்ச்சியையும், அறிவு முதிர்ச்சியையும் கணக்கில் கொள்ளாத, கொள்ள விரும்பாத அந்த அரேபிய தம்பதிகள். “நான் பத்து வருடம் வரையிலும் நபியவர்களின் வீட்டில் வேலை செய்தேன், ஒரு ‘உஃப்’ என்னும் சொல் கூட என்னை நோக்கி சொன்னதில்லை. ஏன் இதைச் செய்தாய்...ஏன் இதைச் செய்யவில்லை” என்று கூட என்னை ஒரு போதும் கேட்டதில்லை என அறிவித்தார், மாநபியவர்களின் வீட்டில் வேலை செய்த அனஸ் என்னும் நபித்தோழர். அத்தகைய குணநலன்களை கற்றுத்தந்த நபியின் மார்க்கவழியா அது???????????????

சம்பவம் நடந்த அன்று, 22 மே 2005. பகல் 12:30 மணி அளவில், நான்கு மாத குழந்தைக்கு புட்டிப்பாலை எடுத்து புகட்டுகிறார் ரிஸானா. பால் மூக்கிலும், வாயிலுமிருந்து வெளியேறுகிறது. குழந்தை தூங்கிவிட்டதென நினைத்து நெஞ்சையும், தொண்டையையும் தடவி ஏப்பம் வரவைக்க முயற்சிக்கிறார். குழந்தையிடமிருந்து எந்த அசைவும், கண் இமைகளும் திறக்காமல் போகவே, பதறிப்போய் எஜமானர்களை அழைக்கிறார். எஜமானியம்மாள் வந்து பார்த்து ரிஸானாவை செருப்பால் அடித்து அவரின் வாயிலும் மூக்கிலும் இரத்தம் வரவைக்கிறார். அது காயும் முன்பே போலீஸ் வருகிறது. ரிஸானாவை அழைத்துச் செல்கிறது. இு வையில் யார்த்ம்.

இதன் பின் நடந்ததெல்லாம்தான் வினோதம்.

1. ரிஸானாவிற்கு அரபி தெரியாது. அவருக்கு மொழிெயர்ப்ப செய்ய அமைக்கப்பட்டவர் ஒரு மலையாளி என்றும், ஆடு அறுக்கும் வேலை செய்பவர் என்றும் மட்டுமே தெரிய வருகிறது. எனில், ஏன் அரசாங்க மொழிபெயர்ப்பாளர், இலங்கை அரின் மொழிபெயர்ப்பாளர் எனாரும்,ுப்ரீம் கோர்ட் வை விம் சென்றின்னும் அமர்த்தப்படவில்லை???

2. போலீஸ் கஸ்டடியின் போது ரிஸானாவுக்கு தன் நிலையை விளக்க சந்தர்ப்பமே தரப்படவில்லை என இந்த வழக்கின் பிற்பகுதியில் ரிஸானா பலமுறை குறிப்பிட்டுள்ளார். அடி, உதை என எல்லாவற்றையும் பிரயோகித்து “தான் அந்தக் குழந்தையை கழுத்தை நெறித்து, மின்சாரம் அளித்துக் கொன்றதாக” மிரட்டி எழுதி வாங்கியதாகவும் 2008இல் கோர்ட்டில் கூறுகிறார். ஏன் அாயில்லை?

3. வயதுப்பிரச்சினை எழும்போது, சரியான ஆவணங்களை ஏன் நீதிமன்றம் ஆராயவில்லை?? 17 வானர் எந்திான ங்கிழத்ாலும் சீர்ிரத்ப்பள்ளியில் அனுப்பி வைப்பே உலாவியட்ட அணுகுமுறை எனில், ஏன் விபார்க்க அனுமிக்கில்லை?

4. மொழிப்பிரச்சினை வந்த பின்னும், முதன் முதலில் மொழிபெயர்ப்பு செய்தவரின் பதிலையே ரிஸானாவின் பதிலாக ஏற்ற நீதிமன்றம், அவர் அத்தகையதொரு வேலைக்கு தோதானவரா என ஏன் ஆராயவில்லை? இறுதியாக சுப்ரீம் கோர்ட்டில் அழைக்கப்பட்டும், கோர்ட்டில் ஆஜராகாதவரை கோர்ட் என்ன செய்துள்ளது?

5. குழந்தையின் வாயிலும் மூக்கிலும் இரத்தம் வந்ததையடுத்து ஏன் போஸ்ட்மார்ட்டம் செய்யப்படவில்லை? ஏன் அந்த ரிப்போர்ட்டை வாங்காமல் வாய்மொழி வாதங்களையே நம்பி கோர்ட் தீர்ப்பளித்தது??

6. ஒன்றரை மாதம் வரையிலும் அந்தக் குடும்பத்தில் வேலை பார்த்த ரிஸானாவிற்கு சொல்லிக்கொள்ளும்படியான பிரச்சினைகள் எதுவுமே இருக்கவில்லை எனும்போது அப்படி ஒரு கொலையை செய்ய ரிஸானாவிற்கு என்ன காரணம் இருக்கக்கூடும் என ஏன் ஆராயவில்லை??

7. மி உரிமைக்கின் ையிடும் வை ரிஸானாவிற்கு என ஒரக்கிியிக்கில்லை??? நீண்ட ாமத்ிற்குப் பிறு ஒரு வக்கிியித்ின்னும் மேலிருக்கும் கேள்விகைப் போன்றே  ேள்விகள் வக்கிர் கேட்டும், நிமன்றத்ால் நிராகிக்கப்பட்டஏன்?

இந்தக் கேள்விகளுக்கெல்லாம் பதில் தராமலே, ஜூன் 16, 2007இல் ரிஸானாவிற்கு மரணதண்டனை விதிக்கப்படுகிறது. இதன் பின்னர் மனித உரிமை அமைப்புகளும், இலங்கை அரசும் கேட்டுக்கொண்டதற்கிணங்க மீண்டும் $40,000 பணம் ஆசிய மனித உரிமைக் குழுவால் கட்டப்பட்டு அப்பீல் செய்யப்பட்டது. (அு கூட ன்னால் இயு எனங்கஅரு மத்ுவிட்டு!!) இவ்வாறே முன்னும் பின்னுமாக அலைந்த வழக்கின் இறுதித் தீர்ப்பு அக்டோபர் 21, 2010இல் வந்தது. அரேபிய சுப்ரீம் கோர்ட் வழியாக, மரணதண்டனையை உறுதி செய்து.

ஆனாலும் இறுதி வரை மேற்கண்ட வினாக்களுக்கு விடை தேடாமலே இந்தத் தண்டனையை உறுதி செய்ததும், ஜனவரி 9, 2013 அன்று ரிஸானாவின் தலையைக் கொய்து மரணதண்டனை நிறைவேற்றியதும்ான் பிரச்சினை. இஎள்ளளவும் ‘இஸ்லாம்’ அல்ல. இது அரேபியாவின் குலப்பெருமையை நிலை நாட்டச்செய்த மெனக்கெடல் மட்டுமே. இப்படி மட்டுமே இந்தத்தீர்ப்பை பார்க்க முடிகிறது. ந்தியாவில் அஜ்மல் கசாபின் தண்டனையில் இழைக்கப்பட்ட அநீதிக்கும், இதற்கும் பெருத்த வித்தியாசம் என்னவென்றால், ஷரீ’அத் வழி, இஸ்லாமிய வழி என்னும் பெயரில் இந்த அராஜகத்தை செய்திருப்பதுதான்.

ஆவணங்களெல்லாம் சரியாக இருந்து, ரிஸானா உண்மையிலேயே இந்தக் கொலையை செய்திருப்பாரானால், மரணப்பணம் வாங்கியோ, பொறுமையை மேற்கொண்டோ கூட அந்த அரேபியக் குடும்பமாவது இஸ்லாத்தை அழகுற வெளிப்படுத்தியிருக்கலாம். பொறுமை இல்லாமல் போனது முதல் படியிலிருந்தே விளங்குகிறது. இந்தக் குடும்பத்திற்கும், கேள்விகளுக்கு பதில் தேடாமல் தவறான பக்கங்களையே புரட்டிப் புரட்டி அநீதிய நிலை நாட்டிய ிாளர்குக்கும் என் வன்மையான கண்டனங்கள். இது கண்டிக்கப்பட வேண்டியது என்பதில் எனக்கு துளி கூட வருத்தமில்லை. ஆனால் ‘இஸ்லாத்தின்’ பெயரால் நடப்பதே மிகவும் வருத்தத்தை தருகிறது. இஸ்லாத்தை எல்லா செயல்களிலும் நடவடிக்கைகளிலும் வெளிப்படுத்தி ஒரு முன்மாதிரியாக திகழ வேண்டிய அரங்கஇப்படி நடந்து கொண்டது வெட்கக்கேடானது. மன்னிக்கவும், வேறு வார்த்தை இல்லை.

ே நேரம், சியாவின் நி மன்றத்ிற்கும் அருக்கும் எட்டியூரம் இருக்கிறு என்பை சியின் செய்ிகைக் கிக்கும் அனுக்கும் புரிந்திருக்கும். அப்பி இரந்தும், சி அரே அந்தப் பெற்றோருக்கன்னிக்கச்சொல்லி வேண்டுகோள் விடத்ார் என்பும், ில் ன்னாலான ிண்ணப்பங்கை வத்ார் என்பும் கிக்கப்பேண்டியிங்கள். பாரட்டப்பேண்டியிங்கள். ையெல்லாம் அந்த் பற்றோர் நிராகித்ற்கு அரால் ஒன்றும் செய்ய இயு. இை, இந்திய அரோடு ஒப்பீடு செய்யத்ை பேர் ாராக உள்ளர்?? அரோடு மட்டுமல்ல, சிலாலம் முன்பு மித்ர் நிப் பின் அக்ஸ், ற்பைய இளர் ஸல்மான், இறந்து போனுழந்தையின் ந்தை பியாற்றும் நிியைச்சத்ின் உயிகாரி அப்ுல் அக்ஸ் பேஸான் அல் உைபி எனப் பும் பி நேரங்கள் வையிலும் அந்தப் பெற்றோரிடம் ரிஸானாவிற்காகன்றாடியுள்ளர். ைப் பற்றி யாரும் மூச்சு விடக்கூட இல்லை.... ஏன்??? இது போல் இங்கிலாந்தில் நடக்கக்கூடுமா? ஏன் இந்தியாவில் நடக்கக்கூடுமா? ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் நளினியின் கதையை மறந்து விட்டோமா??? அரசின் எல்லை வீட்டு வாயில் வரை மட்டுமே.... குடும்பத்தினர் அனுமதித்தால் ஒழிய அவர்களின் விஷயத்தில் தலையிட முடியாது. இது சவுதி அரசின் பண்பாடு. அதற்கு யார் மதிப்பளிக்கின்றனர்? ழக்கிலும்

இந்தியா போலல்லாமல் எல்லா வழக்கையும் துரிதமாக நடத்தி, தீர்ப்பைத் தரும் சவுதியும் இந்த வழக்கில் ஏழு வருடம் வரை இழுத்ததும் எதற்காக? அந்தப் பெற்றோர் மனம் மாறிவிட மாட்டார்களா... மன்னிப்பு தந்து விட மாட்டார்களா என்பதற்காக. ஜெயிலில் இருந்த போதிலும் சித்திரவதைக்கு துளியும் உள்ளாக்காமல் நூல்வேலை செய்யும் அளவிற்கு ரிலாக்ஸாகத்தான் இருந்துள்ளார். இதையெல்லாம் இந்த வழக்கைப் பற்றி வாய் கிழியப் பேசுபவர்கள் ஏன் பேசுவதில்லை? சவுதி என்பதால் மட்டும் கண்ணில் விளக்கெண்ணெய், மற்ற நாடென்றால் கண்ணில் களிமண்ணா..??

ியாக ந்தக்கின் அநி, சவுதி அரசோடு போய் விடுமா? இல்லை....இல்லவே இல்லை.... வருடக்கணக்கில் அரேபியர்களின் வீட்டில் பணிப்பெண்கள் படும் கொடுமைகளை விலாவாரியாகத் தெரிந்த பின்னரும், ஏதேனும் ஓரிடத்தில் சறுக்கினால் இத்தகைய மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்ற பின்னருங்கூட இலங்கை அரசு இதில் அலட்சியமாக இருக்கிறதே...இதுதான் மூன்றாம் குற்றவாளி, முக்கியுற்றாளி. தன் குடி மக்களை, அதிலும் குறிப்பாக பெண்களை மற்றொருவர் வீட்டில் அரசின் மூலமே பணியாட்களாக நிறுத்துவது எத்தனை பெரும் கேவலம்... எத்தனை பெருங்கொடுமை.... இன்னும் நிறுத்தாமல் போய்க்கொண்டிருக்கிறது இந்தப் பயணம். சவுதி அரசை குறை சொல்பவர்கள் இலங்கை அரசையும், இன்ன பிற அரசுகளையும் கேட்கவேண்டும்... தன்னிறைவு பெறாத நாடெல்லாம் ஒரு நாடா... தன்னிறைவைத் தர இயலாத அரசெல்லாம் ஒரு அரசா என. இது இலங்கைக்கு மட்டுமல்ல எல்லா நாட்டிற்குமே பொருந்தும். பற்பல ஜிகினாப் பெயர்களில் இன்னும் காலனியாதிக்கத்தை தன் மூலமே தன் நாட்டிற்குள் வளரவிடும் எல்லா அரசுகளும் யோசிக்க வேண்டும்... இதுதான் உண்மையான சுதந்திரமா???? இதுதான் ஜனநாயக அரசா? இதுதான், அரசுப்பீடத்தில் உங்களை அமர்த்திய மக்களுக்குச் செய்யும் நன்றியா....????

வெளிநாட்டு வாழ்க்கைக்கு ஆசைப்படுபவர்கள் கவனத்திற்கு:

தயவு செய்து வேறு பாதை தேடுங்கள். வெளிநாட்டில் வாழ்பவரெல்லாம் உண்மையாய் தாங்கள் அனுபவிப்பதை ஒர் புத்தகமாக எழுத நேர்ந்தால் உலகில் வாழும் ஒருவரும் புத்தகஙள் இருக்கும் பக்கமே போக மாட்டார். அனுபவரீதியாக சொல்கிறேன். குறிப்பாக வீட்டு வேலை, பணியாள், சித்தாள் போன்ற சின்னச் சின்ன வேலைகளுக்காக வாழ்வைப் பணயம் வைத்து வெளிநாட்டில் சென்று சிக்க வேண்டாம். அதுவும் பெண்களை எக்காரணம் கொண்டும் வெளிநாட்டு பிப்பெண் வேலைகளுக்கு அனுப்பாதீர்கள். வாழ்வையும், உயிரையும் இழந்து நடைப்பிணமாய் வாழ்வதை விட  சுயமாக ஒரு தொழில் செய்து போதுமென்ற மனதுடன் வாழ்வதே சிறந்தது. சிந்தனை செய்யுங்கள். “ஒரு மகள் இருந்தாள் என்பதை விட, “கால் வயிற்றுக் கஞ்சியுடன் என் மகள் என்னுடன் இருக்கிறாள்” என்பது சாலச் சிறந்தது.


டிஸ்கி:
ஏங்க அனானி / குமுதினி, இப்ப இந்த நடுநிலை போஸ்ட்டைப் பார்த்ததும், “மனித நல வெறி பிடித்த பதிவர்”ன்னு எழுதுவீங்களா?? இதன் மேல் சுவனப்பிரியன் அண்ணனும் பதிவு எழுதியிருக்கார். இன்னும் பல முஸ்லிம் பதிவர்கள், இங்கே, இங்கே, இங்கே எனப் பல இடங்களில், இன்னும் பல தளங்களிலும்  எழுதியுள்ளார்கள். அப்ப எங்களை எல்லாம் நடுநிலைமைன்னு உங்க ‘பிரிவினைவெறி பிடித்த தீவிரவாத சங்கம்’ ஒத்துக்குமா? அதற்கு பாராட்டுவீங்களா??? செய்ய மாட்டீங்களே.... ஏன்ன்னா... உலகின் உங்களின் வாயில் இரட்டை நாக்கு!!


நன்றி:
http://latheeffarook.com
http://idrees.lk
http://en.wikipedia.org/wiki/Rizana_Nafeek
http://www.nation.lk/2010/10/31/newsfe1.htm
http://www.ahlalhdeeth.com/vbe/archive/index.php/t-2066.html
http://www.jaffnamuslim.com/2013/01/blog-post_9491.html

31 comments:

  1. மதவெறி பெண் பதிவர் அன்னுக்கு!

    மனித நல வெறி பிடித்த பதிவராக இருந்து நீங்க எழுதிய பகிர்வுக்கு நன்றி :-)))

    ஜஸ்ட் ஜோக்...

    எனக்கும் நேத்து தான் விஷயம் தெரியவந்தது. 2005 முதல் நடைபெறும் வழக்கு விஷாரிக்காமல் ஏனோ தானோ என தீர்ப்பளிக்க கூடுமா என்று தான் முதலில் கருதினேன், போஸ்ட் மார்ட்டம் பண்ணாததும் இன்னும் பிற விஷயங்களையும் இப்போது தான் தெரிந்துக்கொண்டேன்.

    ReplyDelete
    Replies
    1. ஹி ஹி ஹி....

      ஆமாம் ஆமினா. எனக்கும் அவரின் மரணத்திற்குப் பின்னர்தான் விஷயமே தெரிய வந்தது. நிறைய விஷயங்களை இபப்டித்தான் குடும்பச்சுமைகளில் தவறுகின்றோம். ஆனால் நாம என்னமோ வீடு ஃபுல்லா பிபிசியையும் ஃபாக்ஸையும் ஓட விட்டுட்டு இருக்கற மாதிரிதான் எல்லாரும் நினைச்சுக்கிறாங்க.... அவ்ளோ பில்டப்பு வேண்டான்னாலும் விட மாட்டேங்கிறாங்களே... :))

      Delete
  2. இன்னும் நிறைய இருக்கு பேச...



    http://naadodimanithan.blogspot.com/2013/01/blog-post.html

    ReplyDelete
    Replies
    1. ஆம் சகோ,

      உங்களின் பதிவையும் படித்தேன். நியாயமான கேள்விகள் நிறையவே உள்ளன. ஆனால் உண்மை என்னவென்றால் அது சவுதியில் மட்டுமல்ல. எல்லா நாடுகளிலும் உண்டு. மெக்சிகோவின் மாஃபியாவில் கொழிப்பவர்கள் எல்லாம் அமெரிக்கரே என்றாலும், பரிசோதனைக்கூட எலிகளாக வஞ்சிக்கப்பட்டு வருபவர்களும் அவர்களே... பல இடங்களில் சார்ஜ் செய்யப்படாமல், கேஸ் என எதுவும் இல்லாமல் தெருவில் ஓட ஓட விரட்டிக்கொல்லப்பட்ட சம்பவங்கள் கூட உள்ளன. இதெல்லாம் வெளியே வருவதில்லை. இந்தியாவிலும் இதை விடக் கொடுமைகள் அஸ்ஸாமில் ஆதிவாசிகளின் மேல் நடக்கிறது. இஸ்லாமிய அரசு என்பதால் மட்டும் சவுதியை நேர்மையாக வாழ் என்று சொல்வது Simply Sarcastic. எல்லாரிடமும் பலவீனம் உண்டு. வேறொன்றும் சொல்வதற்கில்லை.

      Delete
  3. மிகவும் வேதனை பட வைத்த சம்பவம்...நியாயமான கேள்விகள்...நல்ல பதிவு...

    ReplyDelete
    Replies
    1. ஸலாம் சகோ ஆஷா..,

      ஆம்.... பலரையும் வேதனைப்படுத்திய சம்பவம்தான்.... அன்னாரின் ஆன்மாவை கப்ரின் வேதனைகளிலிருந்து அல்லாஹ் காப்பாற்றி, அவரின் குடும்பத்தை இந்தப் பேரிடியிலிருந்து மீண்டு வரச்செய்ய வேண்டும். ஆமீன்.

      கருத்துக்கு மிக்க நன்றி.

      Delete
  4. மிகச் சிறந்த நடுநிலையான பதிவு. உண்மை நிலையை இறைவனே அறிவான். சவுதி சட்டங்களிலும் சில ஓட்டைகள் உள்ளதை மறுக்கவில்லை. அதை சரி செய்ய மன்னர் அப்துல்லாவின் நிர்வாகம் முயல வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. ஸலாம் சுவனப்பிரியன் பாய்,

      //மிகச் சிறந்த நடுநிலையான பதிவு.//
      உங்களுக்கு தெரியுது :( :)

      அல்லாஹ் மட்டுமே உண்மையை அறிந்தவன். ஆனால் நமக்கு சாத்தியப்பட்ட உண்மையையும் சேர்த்து புதைத்ததுதான் மிக்க வேதனை தரும் விஷயம் :(.

      சட்ட ஓட்டைகளை எல்லா நாட்டிலும் திருத்த வேண்டும். இன் ஷா அல்லாஹ் து’ஆ செய்வோம்.

      Delete
  5. இந்த ப்ளாக் வேற ஒருவர் பெயரில் அல்லவா இருந்தது...! கடை கைமாறிருச்சா..! எதையுமே சொல்லிட்டு செய்யமாட்டாங்கள.! ஐயோ.! ஹையோ !

    ReplyDelete
    Replies
    1. ஹ ஹ ஹா...

      இல்ல சகோ.. கடை ஓனர் தன் பேரை மாத்திகிட்டார். அவ்வளவே :)

      Delete
  6. ரிஸானா நஃபீக் ஆவர்களை பற்றி தகவல் என்ன என்பதை கூறித்து இன்றே விளக்கமாக தெரிந்துக்கொண்டேன். உண்மையாக அந்த பெண் குற்றம் செய்யவிடில் அந்த பெற்றோர்கள் மறுமையில் இழிய நிலையை அடைவார்கள்.

    நியாயமின்றி ஒரு உயிரை கொலை செய்வது ஒட்டு மொத்த மனித குலத்தை கொலை செய்வதற்கு சமம். - திருக்குர்ஆன்

    //ஏங்க அனானி / குமுதினி, இப்ப இந்த நடுநிலை போஸ்ட்டைப் பார்த்ததும், “மனித நல வெறி பிடித்த பதிவர்”ன்னு எழுதுவீங்களா??// 2005 இருந்து கேஸ் நடக்கிறதே அப்பிறிந்து குறல் கொடுக்கா அனானி பையன் புள்ளைகள் எல்லாம் எங்கே சென்றார்கள். இறந்தா பிறகு ஒப்பாரி வைக்க வந்திவிடுவார்கள். சில பேருக்கு இஸ்லாமிய சட்டங்களை குறைகூறவில்லை என்றால் தின்ன சோறு செறிக்காது.

    ReplyDelete
    Replies
    1. ஸலாம் நிஜாம் பாய்,

      அந்தப் பெற்றோர்கள்தான் இந்த அநீதியின் முக்கிய காரணிகள். ஒரு வேளை இந்த தாமதத்தில் மனம் மாறியிருந்தால் எத்தனை எத்தனை து’ஆக்கள் அவர்களுக்கு கிடைத்திருக்கக்கூடும். நஷ்டவாளிகளாகி விட்டனர். :(

      Delete
  7. சலாம் சகோ.அன்னு,
    பதிவின் ஒவ்வொரு வரியும் நிதர்சனம். மிகவும் சிறப்பாக இப்பிரச்சினையை அலசி ஆய்ந்து எழுதி உள்ளீர்கள். ஜசாக்கல்லாஹு ஹ்கைர் சகோ.

    இப்போது....................

    சவூதி கோர்ட்டால் முஸ்லிம்களுக்கு தலைகுனிவு.
    சவூதி கோர்ட்டால் இஸ்லாத்துக்கு சொல்லடி.
    இனியாவது திருந்தட்டும் சவூதி கோர்ட்.
    இல்லையேல் அதை திருத்தட்டும் சவூதி அரசு.

    நான்கு மாத குழந்தையை யாரோ ஒரு வேற்று நாட்டு பெண்ணிடம் புட்டிப்பால் தரச்சொல்லி வீட்டில் விட்டு செல்வோமா நாம்..?
    என்னவோரு பொறுப்பற்றத்தனம்..!?

    சவூதி இளவரசரின் இழப்பீட்டை ஏற்கமாட்டார்களாம்.
    அதற்கு பிறகு அல்லாஹ் அவர்களுக்கு குழந்தைகளை தந்தும்,
    அதிலொரு குழந்தைக்கு சவூதியின் எந்த மருத்துவமனையிலும் சிகிச்சை அளிக்க முடியாத அளவுக்கு மிகக்கொடுமையான வியாதி ஒன்று வந்துள்ளாதாம்..! இறைவிதி..! அதைக்கூட சவூதி அரசு தன் செலவில்... 'ஜெர்மனிக்கு அனுப்பி வைத்து சிகிச்சை செய்கிறோம், ரிசானாவை மன்னியுங்கள்' என்றதாம். ம்ஹூம்..! சம்பவம் நடந்து ஏழு வருஷம் ஆகியும் மன்னிக்க மாட்டார்களாம்.

    இறைவனுக்கு பிடித்த வழியில் நடக்க மறுக்கும் இவர்கள்...
    என்னவோரு மனிதத்தன்மை அற்ற பிறப்புகள்..!

    நாம் அந்த குழந்தை பூரண சுகம் அடைய இறைவனிடம் பிரார்த்திப்போம்..! அந்த பெற்றோரும் மனிதத்தன்மை அடைய பிரார்த்திப்போம்.!

    முக்கியமாக....

    சகோதரி ரிசானா தன் வாழ்நாளில் செய்த சிறிய பெரிய பாவங்கள் அனைத்தையும் மன்னித்து அவரின் கப்ரை விசாலமாக்கி,கியாமத் வரை நிம்மதியான நல்லுறக்கத்தை அருளவும்...
    இறுதித்தீர்ப்பில் கேள்விகணக்குகளை எளிமையாக்கி நேரடி சுவனத்தை அருளவும் அல்லாஹ்விடம் துவா செய்கிறேன்.

    //...கோபத்தை விழுங்கி விடுவார்கள். மனிதர்களை மன்னித்து விடுவார்கள். அல்லாஹ் இத்தகைய நல்லோரையே நேசிக்கிறான். (அல்குர்ஆன் 3:134)//

    // நபி ஸல் அவர்கள் கூறியதாக, உம்மு சல்மா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
    கொடுமை மற்றும் அநியாயமான செயல்களை மன்னிப்பவரின் கண்ணியத்தை அல்லாஹ் அதிகப்படுத்தவே செய்கின்றான். நூல் : அல் தப்ரானி//

    ReplyDelete
    Replies
    1. சலாம் சகோ.முகம்மத் ஆஷிக்.

      மிக அழகாக கருத்தை முன்வைத்தீர்கள் சகோ.மிக அழகு..அதில் ஒன்றில் மட்டும் எனக்கு மாறுபடும் எண்ணம் ..! பல பின்னூட்டங்களிலும் குழந்தையின் பெற்றோரை பழிப்பதால் இதை கேட்கிறேன் சகோ.

      அந்த குழந்தையின் பெற்றோர்கள் அவர்களுக்குரிய உரிமையைதானே தேர்ந்தேடுத்துக்கொண்டார்கள்..இதில் அவர்களை கல்நெஞ்சக்காரர்கள் என்று சொல்ல என்ன அவசியம்..மன்னித்திருந்தால் அவர்களுக்கு மறுமையில் மட்டுமல்லாமல் இம்மையிலும் மகத்தான புகழை அல்லாஹ் வழங்கியிருப்பான்..எத்துனை பேர்களுக்கு இவ்வாறு அமையும்.. அதை அவர்கள் இழந்துவிட்டார்கள் ..அவ்வளவுதானே..!

      மன்னிக்க சொல்லி ஊக்கப்படுதலாமே தவிர தேர்ந்தெடுப்பது அவர்களின் உரிமை அல்லவா..! இங்கு நாம் ரூம் போட்டு விவாதிக்க வேண்டியது சவூதி நீதிமன்றத்தைத்தான்..ஏகப்பட்ட ஓட்டைகளை காண்கிறோம்..இவ்வளவு காலம் இருந்தும் சந்தேகத்திற்கு இடமில்லாமல் தண்டனையை நிறைவேற்ற முடியவில்லை..இவர்களின் செயலால் இஸ்லாமிய சட்டங்களை அல்லவா பழிக்கின்றனர் அறியாதோர்... இவர்களை எல்லாம் என்னத்த சொல்ல..இவர்களா நீதியாளர்கள்..? இவர்களா அர்ஷின் நிழலுக்கு உரியவர்கள்..ரொம்ப கஷ்டம்தான் போல..!

      Delete
    2. உஹது போரில் தமது சிறிய தந்தை ஹம்ஜா (ரழி) அவர்களை, போர் விதிமுறைகளை மீறி மறைந்திருந்து தாக்கி ஷஹீதாக்கிய வஹ்ஷியையும், ஹம்ஜா (ரழி) அவர்களின் உடலை கிழித்து அவர்களின் ஈரலைக் கடித்துத்துப்பிய ஹிந்தா என்ற பெண்ணையம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மன்னிக்கவே செய்தனர்.

      இப்படி எல்லாம் கூறி.....//மன்னிக்க சொல்லி ஊக்கப்படுதலாமே தவிர தேர்ந்தெடுப்பது அவர்களின் உரிமை அல்லவா..!//.....ஆமாம், சகோ.நாகூர் மீரான் இது சரிதான்..!

      தம் குடும்பத்தார் இறந்த அன்று அழுபவர் சில நாட்கள் போக போக சகஜமாகிவிடுவார். சோகம் குறையும். மனம் மாற்றம் பெரும். இதேபோலத்தான் கொலையும். அதனால் ஏற்படும் பழி உணர்ச்சி அப்போது அதிகம் இருக்கும். போகப்போக அதுவும் குறைந்து மறைந்து விடும். இதற்கு காரணம் கால ஓட்டம் தந்த மனமாற்றம்.

      சவூதி சம்பவம் நடந்து ஏழு வருஷம் ஆகி விட்டது. அடுத்தடுத்து அவர்களுக்கு குழந்தைகளும் பிறந்து விட்டன. சகஜ வாழ்வில் அவர்களே தங்கள் இறந்த குழந்தையை கால ஓட்டத்தில் 7 ஆண்டுகள் கழித்து மறந்து விட்டிருப்பார்கள். ஆனால்... பழி உணர்ச்சி மட்டும் எப்படி மறைய வில்லை..?

      இதெல்லாம் விட, அவர்கள் ஒன்றும் நேரில் கொலையை பார்க்கவில்லை. ரிசானா சொல்படி விபத்து-கொலை என்று சந்தேகம்-வக்கீல் வாதம்-கொலை என்று ஊர்ஜிதம்-மரண தண்டனை தீர்ப்பு. உடனே, அப்போதே 2005 இல் இந்த தண்டனை நடந்து இருந்தால் நான் அந்த பெற்றோரை ஒன்றுமே குறை சொல்லி இருந்திருக்க மாட்டேன் சகோ.நாகூர் மீரான். கோர்ட் மீது கோபம் வந்திருக்கும்.

      ஒருவேளை இவர்கள் மட்டும் மன்னித்து இருந்திருந்தால்...
      முஸ்லிம்களுக்கு இன்று தலைகுனிவு இல்லை.
      இஸ்லாத்துக்கு இன்று சொல்லடி இல்லை.

      மாறாக எல்லாமே பிளஸ்இல் அல்லவா சென்று இருந்திருக்கும்..!?

      அதனால்தான் இவர்கள் மீது இன்று எனக்கு குறை சொல்ல தோன்றுகிறது.

      போலீசை விட,
      கோர்ட்டை விட,
      இளவரசரை விட,
      மன்னரை விட எல்லாம்....
      உச்சபட்சமாக... இந்த பெற்றோரின் கையில்தானே கடைசியாக அதிகார உயிர்க்கையிறு இவ்வாரம் வந்தது. பிடித்து நிறுத்தி இருந்திருக்கலாமே..? நழுவ விட்டுவிட்டார்களே..! இனி மீளுமா அது..???

      Delete
    3. //நான்கு மாத குழந்தையை யாரோ ஒரு வேற்று நாட்டு பெண்ணிடம் புட்டிப்பால் தரச்சொல்லி வீட்டில் விட்டு செல்வோமா நாம்..?
      என்னவோரு பொறுப்பற்றத்தனம்..!?//

      ஸலாமு அலைக்கும் ஆஷிக் பாய்,

      இதே தான் எனக்கும் தோன்றியது. அப்படி பொறுப்பில்லாமல் விடத் தெரிந்தவர்கள் இன்னும் இன்னும் எல்லா விதத்திலும் பொறுப்பற்றதன்மையையே காட்டியுள்ளனர். என்ன சொல்ல :(

      மீள முடியாததொரு தவறாகவே நமக்குப் படுகிறது. எனினும், அவர்களின் சூழ்நிலை என்ன, அல்லாஹ்வே மிக அறிந்தவன். அனைவரின் பாவத்தையும் மன்னிப்பானாக. ஆமீன்.

      Delete
  8. இது குறித்து நிறைய எழுதலாம் அன்னு. ஒருசில வரிகளில் எழுதிமுடியாது.

    ஏஜெண்ட் வயதை மாற்றி எழுதியது, ரிசானாவுக்குத் தெரியாது என்பது நம்பமுடியவில்லை. 18 வயதுக்குக் குறைந்தவர்களை, வேலைக்கு அனுப்ப இலங்கை அரசாங்கம் அனுப்புவதில்லை என்று விதி (என்று கேள்விப்பட்டிருக்கீறேன்). ஆகவே, வயது கூட்டி எழுதுவது, வேலைசெய்யாமலே அனுபவ சான்றிதழ் வாங்குவது எல்லாம் அங்கும் வழக்கத்தில் உள்ளதுதான். மேலும், இலங்கை அரசாங்கம், பணிபெண்களாக வெளிநாடு செல்பவர்களுக்கு, அறிமுகப் பயிற்சி வழங்குவதாகவும் என்னிடம் பணிபுரிந்தவர் சொல்லியிருக்கிறார்.

    http://www.thihariyanews.com/2013/01/blog-post_11.html

    ReplyDelete
    Replies
    1. ஸலாம்.

      நீங்க சொல்றது சரிதான் அக்கா. ரிஸானாவிற்குப் பல விஷயங்கள் தெரிந்தே நடந்திருக்கும். ஆனால் அது ரொம்ப சகஜமாகிப் போய்விடும்போது இத்தனை தூரம் யாரும் யோசிப்பதில்லை. பல கட்டங்களில் தவிர்க்கப்பட்டிருக்கலாம். இதில் கையாகாலாகாத்தனத்தை வெளிக்காட்டிய எல்லோருமே குற்றவாளிகள்தான்.... தன் பெண்ணை பணிப்பெண் வேலைக்கு அனுப்பிய ரிஸானாவின் தந்தை உட்பட. ஆனால் ஒவ்வொருவருடைய நிலையும் என்னவென அவர்களுக்கும், அல்லாஹ்விற்கும் மட்டுமே தெரிந்தது. இன்னல்லாஹ ம’அஸ் ஸாபிரீன்.

      Delete
    2. "ஏஜெண்ட் வயதை மாற்றி எழுதியது, ரிசானாவுக்குத் தெரியாது என்பது நம்பமுடியவில்லை. 18 வயதுக்குக் குறைந்தவர்களை, வேலைக்கு அனுப்ப இலங்கை அரசாங்கம் அனுப்புவதில்லை என்று விதி (என்று கேள்விப்பட்டிருக்கீறேன்)."

      நிச்சயமாக தெரிந்திருக்கும். ஆனால் அவருக்கு இப்படி பொய்யான விபரங்களை கொடுப்பதால் ஏற்படும் விளைவுகளை தெரிந்திருக்காது.

      Delete
  9. அஸ்ஸலாமு அலைக்கும்....
    ஆழமான கருத்துக்களோடு அருமையான பதிவிது......உம்ம் ஒமர்

    ரிசானா பற்றிய அனைவர் எழுதிய பதிகளுக்கும் பக்கம் பக்கமாக பதில் எழுதத்தோனும்...ஆனால்...
    வாசித்த பின்பு... சிந்தனைகள்...ஏனோ கட்டுக்கடங்காமல் எதை எதையோ நோக்கி தரிகெட்டு ஓடுது...
    எவற்றை நியாயப்படுத்துவதென்று தெரியவில்லை....

    "18 வயதுக்குக் குறைந்தவர்களை, வேலைக்கு அனுப்ப இலங்கை அரசாங்கம் அனுப்புவதில்லை என்று விதி (என்று கேள்விப்பட்டிருக்கீறேன்). ஆகவே, வயது கூட்டி எழுதுவது, வேலைசெய்யாமலே அனுபவ சான்றிதழ் வாங்குவது எல்லாம் அங்கும் வழக்கத்தில் உள்ளதுதான். மேலும், இலங்கை அரசாங்கம், பணிபெண்களாக வெளிநாடு செல்பவர்களுக்கு, அறிமுகப் பயிற்சி வழங்குவதாகவும் என்னிடம் பணிபுரிந்தவர் சொல்லியிருக்கிறார்."

    ஹுஸைனம்மா சொல்வது உண்மைதான்..
    21 வயதுக்கு மேலதான் அந்த அனுமதி வழங்கப்படுகிறது..
    அதுமட்டுமல்ல அறிமுகப்பயிற்சியும்..கட்டாயம் கொடுக்கப்படுகிறது...


    ரியானாவின் வெளிநாட்டுப் பயணம் குறித்து யாருக்கும் குறைகூறுவதற்கில்லை...
    ரிசானாவின் அனுமதி இல்லாமல் அவை நடந்திருக்க
    வாய்ப்பில்லை..
    அவை இலங்கையில் மாத்திரம்தான் நடக்கிறது என்று நம்புவதும் மடத்தனம்தான்...
    சட்டத்தின் ஓட்டைகளில் புகுந்து விளையாட இன்று அனைத்து நாடுகளும் பழகிவிட்டன...அது சர்வ சாதாரணவொன்றாகியும் விட்டது ஆச்சரியப்படுவதற்கும்இல்லை.....

    ...ஆனால் 7 வருடம் கடந்த பின்னும் அந்த பெற்றோரின் மனம் மாறவில்லை என்பது எமக்கு அதிர்ச்சிதான்...
    அது நிச்சயமாக பழிவாங்கும் உணர்சியல்லாமல் வேறில்லை...

    "அந்தப் பெற்றோர்கள்தான் இந்த அநீதியின் முக்கிய காரணிகள். ஒரு வேளை இந்த தாமதத்தில் மனம் மாறியிருந்தால் எத்தனை எத்தனை து’ஆக்கள் அவர்களுக்கு கிடைத்திருக்கக்கூடும். நஷ்டவாளிகளாகி விட்டனர்."
    உண்மைதான் உம்ம் ஒமர்....

    அனைவரின் பாவத்தையும் மன்னிப்பானாக. ஆமீன்.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் சகோ ஃபாத்திமா...,

      ரிஸானாவும் இதையெல்லாம் அறிந்தேதான் பயணப்பட்டிருப்பார். முழுதும் இல்லாவிட்டாலும், முக்கிய விடயங்கள் வரையும். எனினும், இதையெல்லாம் அரசு அனுமதிப்பதால்தானே நடக்கிறது???? தன் மக்களை அடுத்த நாட்டு மக்களின் வீட்டுக்கு பாத்திரம் கழுவ அனுப்பும் அரசை என்ன சொல்வது???? அதற்கு டிரெயினிங்கும் தருவதை என்னவென்பது?

      இதற்கான இன்னொரு கோணமும் உண்டு. அது மறந்து போன ‘ஜக்காத்’ என்னும் தூண். இஸ்லாத்தின் முக்கியத் தூண். அதை சரி செய்தாலே இன் ஷா அல்லாஹ் இந்தப் பிரச்சினைகள் எல்லாம் தீர்வடையும். அதை மண்ணிலிட்டுப் புதைத்த முஸ்லிம் சமூகமும் இந்தக் கொலையில் சம பங்காற்றியுள்ளது.

      இதைத் தொடர விடுவதும், முற்றுப்புள்ளியிடுவதும் நம் கைகளிலே உள்ளது.

      Delete
  10. சலாம் சகோதரி,
    மாஷா அல்லாஹ் பதிவில் அவசரம் இல்லாமல் அருமையாக மிக அழாகாக எழுதப் பட்ட நடு நிலை பதிவு சகோ உங்கள் பதிவு

    ReplyDelete
    Replies
    1. வ அலைக்கும் அஸ் ஸலாம் பாய்.

      வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி. அல்ஹம்துலில்லாஹ்.

      Delete
  11. //இந்தியா போலல்லாமல் எல்லா வழக்கையும் துரிதமாக நடத்தி, தீர்ப்பைத் தரும் சவுதியும் இந்த வழக்கில் ஏழு வருடம் வரை இழுத்ததும் எதற்காக? .//
    7 வருடங்களாக நடந்த வழக்கிலேயே விசாரணை இப்படி இருக்கிறது. துரிதமாக நடக்கும் விசாரணை எப்படி இருக்கும். சவூதியில் இதே போல்தான் எல்லா வழக்குகளும் விசாரிக்கப்படுகிறதா ?

    7 வருடத்தில் ஒரு மொழிபெயர்ப்பாளரைக் கூட ஏற்பாடு செய்ய முடியவில்லையா ?

    முதல் குற்றவாளியும் இலங்கை அரசு, மூன்றாம் குற்றவாளியும் இலங்கை அரசா ?

    உங்களுக்கு கவலை எல்லாம் இஸ்லாம், ஷரியத், சவூதியின் பெயர் கெட்டு விட்டது மட்டும்தானா ?

    தலை வெட்டும் சட்டம் பற்றியெல்லாம் எதிர்ப்பு இல்லையா ?

    செத்த பாம்பான இலங்கை அரசை அதிகம் விமர்சித்து விட்டு, சவூதியை அதிகம் புகழ்கிறீர். இப்படி ஒரு விசாரணையை நடத்திய சவூதி நீதித்துறையை யார் எப்படி கண்டிப்பது ? அதற்கு ஷரியத்திலோ வேறு எதாவதிலோ இடம் இருக்கிறதா ?

    ReplyDelete
    Replies
    1. சகோ...,

      சவுதியின் பங்கையும் கண்டித்துள்ளேன். இலங்கையின் போக்கையும் விமர்சித்துள்ளேன். அந்தக் குழந்தையின் பெற்றோரையும் கேள்வி கேட்டுள்ளேன். யாரெல்லாம் இதில் பங்காளர்களோ அவர்களெல்லோருக்குமே எனது வன்மையான கண்டனங்கள் உண்டு. யாரையும் பாரபட்சம் பார்க்காமல்தான் இந்தப் பதிவை எழுதியுள்ளேன்.

      அதே நேரம் இதில் நடந்த நியாயங்களையும், எடுக்கப்பட்ட மனிதாபிமான முயற்சிகளையும் கண்டும் காணாமல் போவதுதான் நீதியா? செத்த பாம்பு என்பதற்காக ஒரு நாட்டின் அரசை குறை சொல்லக்கூடாதா? அப்படியே இன்னும் அராஜகங்களை செய்வதற்காக விட்டுவிடச் சொல்கிறீர்களா??? செத்த் பாம்பாக இருந்தாலும் இன்னும் ராஜாங்கம் நடத்திக்கொண்டுதான் இருக்கிறது. அது இருக்கும் காலம் வரையிலும் அதன் மேலான விமர்சனங்களை தாங்கித்தான் ஆக வேண்டும்.


      தலை வெட்டும் சட்டம் பற்றி பேசும் முன்னர் ஒரு தனிமனிதனாக எங்கேயெல்லாம் மரணத்தண்டனையை, எலெக்ட்ரிக் சேர் தண்டனையை, வாட்டர்போர்டிங்கை, தூக்குத்தண்டனையை எல்லாம் எவ்வளவு தூரம் எதிர்த்துள்ளீர்கள், அரசிடம் இதைத் தடுக்க வேண்டிய வழிகளை செய்துள்ளீர்கள் என்பதை ஆதாரங்களோடு காட்டுங்கள். தூக்குதண்டனை, இன்ன பிற உயிர் வாங்கும் தண்டனைகள் இல்லாமல் போனதால் எத்தகைய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது எனவும், தீமைகள் பூஜ்ஜியமாகிவிட்டதையும் ஆதாரங்களோடு குறிப்பிடுங்கள். அதன் பின் தலை வெட்டும் சட்டத்தை என்ன செய்ய வேண்டுமென ஆராய்வோம் சரியா???

      Delete
    2. முதலில் குற்றவாளியின் உயிர் வாழும் உரிமையை ஒரு குடும்பத்தின் அதிகாரத்தில் விட்டு விட்டது. விசாரணை ஒழுங்காக நடத்தியிருக்க வேண்டுமல்லவா ? அவர் வாயிலியேயே அவர் குற்றவாளி என்று ஒப்புதல் வாங்கி உயிர்வாங்கும் உரிமையை மட்டும் அந்தக் குடும்பத்திடம் ஒப்படைத்து விட்டார்கள் இல்லையா ? இது என்ன சட்டம்

      அந்தக் குடும்பத்திடம் சவூதி மன்னர்கள் பேசியது, அவர்கள் குழந்தைக்கு சிகிச்சையை ஏற்றுக் கொள்வதாகக் கூறியதெல்லாம் மனிதாபிமான முயற்சி என்றால் போஸ்ட்மார்ட்டம் கூட செய்யாமல் மரண தண்டனையை வழங்கும் இந்த சட்டத்தையெல்லாம் கேள்வி கேட்கும் அதிகாரம் அல்லது மனிதாபிமானம் மன்னர்களுக்கு இல்லையா ?

      ஏழு வருடங்களில் ஒரு மொழிபெயர்ப்பாளரை ஏற்பாடு செய்யாமல், விசாரணையை ஒழுங்காக நடத்தாமல் ஒரு குடும்பத்தின் மன்னிப்பை எதிர்பார்த்து தண்டனையை ஒத்தி வைத்திருப்பது ஒரு சட்டமா ?

      நீங்கள் சவூதியின் இந்தத் தவறைக் கண்டிக்காமல் அதை இந்தியாவுடன் ஒப்பிட்டு புகழ்கிறீர்கள். சோத்துக்கு வழியில்லாமல் பிழைக்க வருகிறவர்களுக்கு, வெளிநாட்டு வேலைக்கு ஆசைப்படுகிறவர்கள் என்று அறிவுரை சொல்கிறீர்கள்.

      தனிமனிதனாக நான் வலைப்பூவில் எழுதுவது தவிர எதுவும் செய்யவில்லை. ஒன்றை ஆதரிப்பதற்கும் எதிர்ப்பதற்கும் ஏதாவது சாதனை செய்திருக்க வேண்டுமென்றால், எத்தனைபேர் வலைப்பூவிலும் ஃபேஸ்புக்கிலும் கருத்துச் சொல்ல முடியும். சரி சவூதியைக் கேள்வி கேட்கவாவது எனக்குத் தகுதி இருக்கிறதா இல்லையா ?

      Delete
    3. சகோ...,

      முன்னமே சொன்னதுதான் இப்போதும் பதிலில். ஒரு பொருளை குற்றம் சொல்கிறோம் என்றால் அதற்கான மாற்றுத் தீர்வை வைத்து விட்டுத்தான் குற்றம் சொல்ல வேண்டும். மாற்று வழியைப் பற்றி யோசிக்காமல் திட்டம் தீட்டினால் அது சரியான திட்டமிடுதலே இல்லை.

      உதாரணத்திற்கு ஒருவர் கணக்குப் பாடம் நடத்துகிறார். ஒரு தியரியை / வழிமுறையை உபயோகித்து அந்தக் கணக்கிற்கான விடையை அடைகிறார். பார்த்துக்கொண்டிருக்கும் ஒருவர் அந்த வழிமுறையில் குறை உள்ளது என்கிறார். அப்பொழுது என்ன அர்த்தம்??? குறை சொல்லும் நபரிடம் மாற்று வழிமுறை இருந்தால் மட்டுமே சாத்தியம். அதையேதான் இங்கேயும் சொல்கிறேன்.

      இந்தத் தவறுக்கு இந்தத் தண்டனை என இறைவன் வகுத்த சட்டத்தை நான் ஏற்கிறேன். நீங்கள் இது தவறென்று கூறினால் ஒன்று, இதை விட பெட்டர் ஆப்ஷனை /தியரியை முன் வைக்க வேண்டும்... இல்லையா இதுநாள் வரையில் மனிதன் இயற்றிய சட்டம் ஏதேனையும் காட்டி இதோ இந்த சட்டத்தால் இந்தத் தீமை முழுதும் அழிக்கப்பட்டு விட்டது என்று ஆதாரத்துடன் விளக்க வேண்டும். இரண்டுமே இல்லாமல் ஒரு சட்டத்தை குறை கூறினால் என்ன அர்த்தம். நீங்கள் கற்க வேண்டியது இன்னும் இருக்கிறது என்று அர்த்தம்.

      ரிஸானாவின் விவகாரத்தில் சவுதி நேர்மையாக நடக்கவில்லை என்றே ஆதாரங்கள் கூறுகின்றன. அதைப் பொறுத்து என் மனதில் உள்ளதை எழுதியுள்ளேன். இதை ஏன் எழுதவில்லை, அதை ஏன் கேட்கவில்லை, இதை ஏன் செய்யவில்லை என்று கேட்டால் என்ன சொல்வது?? சவுதி அரசாங்கம் என் பதிவைப் பார்த்துவிட்டுத்தான் அன்றைய பாராளுமன்றத்தை துவங்கி இதன் மேல் விவாதிக்க ஆரம்பிக்குமா??? அல்லது என் எழுத்துக்களைப் பார்த்ததும் “ஆஹா....சகோதரி மன்னித்து விடுங்கள் இதோ சட்டத்தை திருத்தி விடுகிறேன்” என்று கூறுமா???? எதுவரை என் எல்லையோ அதுவரைதான் நான் குமுற இயலும். இதைப் புரிந்து கொள்வீர்கள் என்று எண்ணுகின்றேன்.

      சகோ.... சவுதி என்றில்லை.... இன்றைய தேதியில் இஸ்லாமிய ஷரீ-அத்தை 100க்கு 100 சரியாக எந்த நாடுமே பின்பற்றவில்லை. அபப்டி ஒரு நாடு பின்பற்றுமாயின் இந்தக் கேள்விகளுக்கே இடமிருக்காது. சவுதி தன்னுடைய சில அம்சங்களையும், கலாசார ரீதியிலும் ஷரீ’அத்துடன் தன் சொந்த விதிகளையும் சேர்த்தே அமுல்படுத்தி உள்ளது. எனவே என்னால் சவுதி செய்யும் எல்லாவற்றையும் நியாயப்படுத்தவும் முடியாது. ஒதுக்கி விடவும் முடியாது.

      இன்னொரு உதாரணம் கூறுகிறேன் கேளுங்கள். சவுதியில் பெண்கள் காரோட்ட முடியாது. அதனால் வாடகை வண்டியில் பயணிக்கலாம். ஆனால் இஸ்லாத்தில் அன்னிய ஆணும், அன்னியப் பெண்ணும் சேர்ந்து ஓரிடத்தில் இருப்பது தடுக்கப்பட்டுள்ளது. அது வாகனமாக இருந்தாலும் சரியே. இதன்படி பார்க்கையில் நிச்சயம் தெளிவாகும், ஷரீ’அத் எந்த விதத்தில் அங்கே அமுலாக்கப்பட்டுள்ளது என்பது.

      போதுமான விளக்கம் தந்துள்ளேன். Remove your cap of prejudice and put on your glasses of reality. Thanks. :)

      Delete
  12. Very good balanced analysis sister !!!

    ReplyDelete
    Replies
    1. Salam Brother.

      Thankyou very much for your encouragement :)

      Delete
  13. //இம்புட்டும் படிச்சுட்டு சும்மாவா போறீங்க... நம்மளப் பத்தி நாலு நல்ல வார்த்தை சொல்லிட்டு போறது..... :))//

    எம்புட்டு படிச்சாலும் உங்கள பத்தி ஒரே வார்த்தை தான்

    "நச்"

    நல்ல பதிவு நடுவு நிலையான சிந்தனை...நீங்க நடதுங்க...அவங்க அப்பபடித்தான்....
    போட்றுவார் போற்றட்டும் தூற்றுவார் தூற்றட்டும்....

    எல்லாபுகழும் ஓர் இறைக்கே...இறுதி வெற்றியும் அவன் அணிக்கே....

    ReplyDelete
  14. https://www.facebook.com/pages/Meelparvai-Media-Centre/211951662166490

    ReplyDelete

உங்கள் கருத்துக்கள்...