மோடியின் குஜராத்தும், சமாஜ்வாடியின் உத்திரப்பிரதேசமும்.... ஒரே அம்பின் இரு பக்கம்!!!
மூன்று மாதங்களுக்கு(ம்) முன்னர் இந்து வகுப்புவாதிகளால் தாக்கப்பட்ட மற்றும் அவர்களின் கிராமங்களில் இருந்து விரட்டப்பட்ட பத்து ஆயிரக்கணக்கான முஸ்லீம்கள், அவர்களின் வீடுகளுக்கு திரும்ப முடியாதபடிக்கு, இந்தியாவின் அதிக மக்கள்தொகை கொண்ட மாநிலமான உத்தர பிரதேசத்தின் சமாஜ்வாதி கட்சி அரசாங்கத்தால் (SP - சோசலிச கட்சி)சட்டவிரோதமாக தடுக்கப்பட்டு உள்ளனர். உத்தர பிரதேசத்தின் முஜாபர்நகர் மாவட்டத்தில் உள்ள அவர்களின் சொந்த கிராமங்களுக்கு ஒருபோதும் திரும்ப முடியாதபடிக்கு, உடைமைகளைப் பறிகொடுத்துள்ள அந்த முஸ்லீம்களிடமிருந்து கட்டாய வாக்குறுதிகளைப் பெற சமாஜ்வாதி கட்சி அரசாங்கம், தங்களின் வீடுகளையும்,வாழ்வாதாரத்தையும் இழந்துள்ள அந்த மக்களின் இயலாமையைச் சுரண்ட, துன்பியலான விதத்தில் போதுமானதாக இல்லாத ஒரு நஷ்டஈடு பேரத்தைப் பயன்படுத்துகிறது. இது முஸ்லீம்களின் வெளியேற்றத்திற்கு அரசின் ஆதரவு என்பதல்லாமல் வேறொன்றுமில்லை. இது (அவர்களின் மதத்திற்கு அப்பாற்பட்டு, உத்தர பிரதேசத்தின் முஸ்லீம்கள் இந்து குடியானவர்களுக்கு சமாந்தரமாக உள்ளனர் என்ற போதினும்) அரசாங்கத்தின் அணுகுமுறைகள் மற்றும் இன சுத்திகரிப்பு செய்வதற்கான அதன் தீர்மானம் இரண்டு விஷயத்திலுமே வெளிப்படுகிறது.
“உலகின் மிகப் பெரிய ஜனநாயகம்" என்று கருதப்படும் ஒரு நாட்டில் மிகப்பெரிய சிறுபான்மை மதத்தினரின் அங்கத்தவர்களைப் பாதிக்கச் செய்யும் இந்த அப்பட்டமான பிரத்யேகவாத (exclusive) மற்றும் அரசியலமைப்பிற்கு விரோதமான நடவடிக்கையைத் தடுக்க இந்தியாவின் காங்கிரஸ் கட்சி தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியோ (UPA) அல்லது இந்தியாவின் உச்சநீதிமன்றமோ தலையிடவில்லை.
தங்களின் சொந்த வீடுகளுக்குத் திரும்ப தடுக்கப்பட்டுள்ள, பெருமளவிலான ஏழைகள், அரசியல் ஆதரவில்லாமல், உள்நாட்டிற்கு
உள்ளேயே இடம்பெயர்த்தப்பட்டுள்ள அந்த முஜாபர்நகர் முஸ்லீம்கள் இழிவார்ந்த
முறையில் வெறும் பலவீனமான பிளாஸ்டிக் கூடாரங்களைக் கொண்ட அகதிகள்
முகாம்களில் வாடும் நிலைக்கு விடப்பட்டுள்ளனர். உத்தர பிரதேச மாநில மற்றும் இந்திய அரசாங்கங்களால் கைவிடப்பட்டிருக்கும், ஏறத்தாழ வெறும் உடுத்திய உடையோடு வெளியேறிய இந்த பாதிக்கப்பட்ட கிராமவாசிகள், தன்னார்வ
அமைப்புகள் வழங்கும் உதவிகள் மற்றும் சமாஜ்வாதி அரசாங்கத்தால்
வழங்கப்படும் அற்பமான அவசரகால உதவிகளில் உயிர்வாழ
நிர்பந்திக்கப்பட்டுள்ளனர். மிகக் குறைந்த உணவு,குடிநீர், மருத்துவ பராமரிப்போடு முறையான கழிவறை வசதிகள் கூட இல்லாமல், கடுங்குளிரில் இருத்தப்பட்டுள்ளதால், அந்த நிவாரண முகாம்கள் வியாதிகளை அடைகாக்கும் இடமாக மாறி வருகிறது.
முறையான மருத்துவ பராமரிப்பு இல்லாததால், குறைந்தபட்சம் 50 குழந்தைகள் ஏற்கனவே இறந்துவிட்டனர் மற்றும் நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் பலர் படுமோசமான நிலைமையில் உள்ளனர். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், அந்த அகதிகள் முகாம்களில் வசிப்பவர்களுக்கு, முஜாபர்நகரில் அவர்களின் வீட்டைவிட்டு வெளியேற நிர்பந்தித்த அந்த வகுப்புவாத கலவரத்தை விட இன்னும் அதிக மரணகரமாக மாறி உள்ளன. ஜாட் மஹாபஞ்சாயத்தின் பிற்போக்கு தலைவர்கள்—ஜாட் சமூகத்தின் நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாக கூறிக்கொள்ளும் ஒரு ஜாதிய அமைப்பு, வரலாற்றுரீதியில் நிலவுடைமை கொண்ட ஒரு விவசாய குழு—ஜாட் சமூகத்தின் இரண்டு இந்து இளைஞர்களின் மரணத்திற்கு காரணமானவர்கள் என்று யாரை பொறுப்பாக்கினார்களோ அந்த "முஸ்லீம்களை" தாக்க ஆக்ரோஷமான குண்டர்களை திரட்டிய போது, செப்டம்பரின் தொடக்கத்தில் முதன்முதலில் பெரியளவிலான தாக்குதல்கள் நிகழ்ந்தன.
இந்த குண்டர்கள் மூர்க்கத்தனமாக வன்முறையில் இறங்கி, எல்லா முஸ்லீம்களையும் அல்லது பெருமளவிலான முஸ்லீம்களை பல கிராமங்களை விட்டு விரட்டி அடித்தனர். குறைந்தபட்சம் 48 பேர் கொல்லப்பட்டனர், அதில் பெரும்பாலானவர்கள் முஸ்லீம்கள். ஆயிரக்கணக்கானவர்கள் காயமடைந்தனர், அதனோடு பல முஸ்லீம் பெண்கள் கும்பல் பாலியல் பலாத்காரத்திற்கு உட்பட்டனர். இத்தகைய தாக்குதல்கள் 50,000த்திற்கும் மேலானவர்களை, பெரும்பாலான முஸ்லீம்களை, வீடற்றவர்களாக ஆக்கியது.
இந்து மேலாதிக்க அமைப்புகளின்—பிஜேபி (பாரதீய ஜனதா கட்சி) மற்றும் அதன் "பங்காளிகளான" ஆர்எஸ்எஸ் (ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங், அல்லது தேசிய தன்னார்வ அமைப்பு), மற்றும் விஷ்வ இந்து பரீஷத் (உலக இந்து கவுன்சில்) ஆகியவற்றின்—காரியாளர்கள் முஜாபர்நகரின் முஸ்லீம் கிராமவாசிகளுக்கு எதிராக பாரிய வன்முறையைத் தூண்ட உதவியமைக்கான நிறைய ஆதாரங்கள் அங்கே உள்ளன. சான்றாக, புது டெல்லியை ஆதாரமாக கொண்ட கொள்கை பகுப்பாய்வு மையம் (Center for Policy Analysis) பிஜேபி மற்றும் அதன் கூட்டாளிகளின் பாத்திரம் குறித்து ஒரு விரிவான அறிக்கை வெளியிட்டுள்ளது. இத்தகைய அமைப்புகள் வகுப்புவாத ஆதிக்கத்தைத் தூண்டிவிடுவதில் ஒரு நீண்ட வரலாறைக் கொண்டுள்ளன.
இந்த கொள்கை பகுப்பாய்வு மையமும் மற்றும் ஏனைய நம்பத்தகுந்த ஆதாரங்களும், முஜாபர்நகரில் வகுப்புவாத குழப்பம் வெடித்த போது சமாஜ்வாதி அரசாங்கம் பொலிஸ் தலையீடு செய்வதில் இருந்து அதை தடுத்து வைத்தது— அதாவது முஸ்லீம்கள் மீது வகுப்புவாத தாக்குதல்கள் தொடர திட்டமிட்டு அனுமதித்தன— என்பதற்கு நம்பத்தகுந்த ஆதாரங்களையும் வழங்குகின்றன.
முஸ்லீம்கள் அவர்களின் கிராமங்களை விட்டு வெளியேற்றப்பட்டு ஏறத்தாழ இரண்டு மாதங்களுக்குப் பின்னர், அக்டோபர் 28இல், முதல் மந்திரி அகிலேஷ் யாதவ் தலைமையிலான மாநில அரசாங்கம் தங்களின் வீடுகளையும்,வாழ்வாதாரத்தையும் இழந்தமைக்காக அவர்களுக்கு "நஷ்ட ஈடாக"இடம்பெயர்த்தப்பட்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூபாய் 500,000 (அண்ணளவாக 8000 அமெரிக்க டாலர்) வழங்கும் என்று அறிவித்தது.
அரசாங்க தகவல்களின்படி, இந்த நஷ்டஈடு 1,600 குடும்பங்களுக்கு வழங்கப்படுகிறது. எவ்வாறிருந்த போதினும், இந்த சொற்ப தொகையைப் பெற, பாதிக்கப்பட்ட அந்த முஸ்லீம்கள் தங்களின் கிராமங்களுக்கும், வீடுகளுக்கும் அவர்கள் ஒருபோதும் திரும்ப மாட்டார்கள் என்று வாக்குறுதி அளித்து ஒரு உறுதிமொழி பத்திரத்தில் கையெழுத்திட வேண்டும்.
அந்த உறுதிமொழி பத்திரம் பின்வருமாறு அறிவிக்கிறது: “எங்கள் கிராமத்தில் நடந்த வன்முறை சம்பவங்களால் எங்களின் வீடுகளையும், கிராமத்தையும் விட்டு வெளியேறி உள்ள நானும் மற்றும் எனது குடும்ப உறுப்பினர்களும் எந்த சூழ்நிலையிலும் இப்போது முதல் எங்களின் சொந்த கிராமத்திற்கோ வீட்டிற்கோ திரும்ப மாட்டோம்.”
“அவர்களின் கிராமத்தில் உள்ள சொத்துக்களுக்கு, அல்லது வேறு ஏதேனும் கூடுதல் நகரா சொத்துக்களுக்கு" வேறெந்த அரசாங்கம் வழங்கும் மானியங்களுக்காக முன்செல்வதிலும் கையெழுத்திட்டவர்களின் மீது உ.பி.அரசாங்கத்தின் இழப்பீடு நிபந்தனை விதிக்கிறது.
முஜாபர்நகர் முஸ்லீம்களின் வெளியேற்றத்திற்கு அரசாங்கம் ஒப்புதல் வழங்குகின்ற, உண்மையில், நிர்பந்திக்கின்ற அதேவேளையில், அவர்கள் பெயரில் இருக்கும் எந்தவொரு சொத்தும் அவர்கள் பெயரிலேயே இருக்குமென்றும், அதை விற்பதற்கோ அல்லது வைத்திருப்பதற்கோ தடையேதுமில்லை என்றும் அரசாங்கம் எரிச்சலூட்டும் விதமாக வாதிடுகிறது. ஆனால் இதுபோன்ற நுட்பமான சட்ட குறிப்புகளுக்கு நடைமுறையில் அர்த்தமே இல்லை. அந்த கிராமவாசிகள் தங்களின் கிராமங்களுக்குள் காலடி எடுத்து வைக்கவும் கூட முற்றிலும் அஞ்சுகின்றனர்.வியாபார பரிவர்த்தனைகளுக்காக அவர்கள் ஒருசில நாட்களுக்கு மட்டுமே வீடுகளுக்குத் திரும்பினால் கூட, மாநில அரசாங்கம் எந்தவொரு தாக்குதலில் இருந்தும் அவர்களைக் காப்பாற்றாது என்பது அவர்களுக்கு நன்றாக தெரியும்,அதனால் இப்போதைக்கு அவ்வாறு செய்வது ஆபத்தாகும் என்பதால் அரசாங்கம் வழங்கும் சிறிய இழப்பீடு அவர்களைக் கவர்ந்திழுக்கிறது.
இதற்கிடையில், சமாஜ்வாதி கட்சியின் மாநில அரசாங்கம் இடம்பெயர்த்தப்பட்ட கிராமவாசிகளை மனித குப்பைகளையும் விட ஒருபடி மேலாக கருதுகின்ற நிலையில், அது அகதிகள் முகாம்களை மூடவும் முயன்று வருகிறது. இதுவே SP அரசாங்கத்தின் முழு நோக்கமாக உள்ளதென்பதை நிவாரண முகாம்கள் ஒன்றில் ஒரு சுய ஆர்வலரால் கண்டறியப்பட்டது. அவர் பத்திரிகைக்கு கூறுகையில், “மக்கள் தாசில் அலுவலகத்திற்கு (உள்ளூர் அரசு அலுவலகம்) அழைக்கப்பட்டு இந்த காகிதங்களில் கையெழுத்திட செய்யப்படுகின்றனர். அவர்களில் பல பேர் சுமார் ரூ. 10 இலட்சத்திற்கும் மேல் (1 மில்லியன் ரூபாய், ஏறத்தாழ 16,000 அமெரிக்க டாலர்) நிரந்தரமாக இழந்துள்ளனர், ஆனால் அவர்களுக்கு மிகவும் குறைவான தொகையில் கணக்குவழக்கு முடிக்கப்படுகிறது. அவர்கள்
நிவாரண முகாம்களில் தங்கி இருப்பது நிர்வாகத்திற்கு தர்ம சங்கடமாக
இருப்பதால் அது அவர்களை அங்கிருந்து வெளியேற நிர்பந்தித்து வருகிறது.”
முஸ்லீம் அல்லாத குடும்பங்களின் ஒரு சிறிய பிரிவும் அவர்களின் வீடுகளை இழந்திருந்தனர் என்ற உண்மைக்கு இடையில், சமாஜ்வாதி அரசாங்கம் அதன் அசல் அறிக்கையில், அந்த இழப்பீடு "பாதிக்கப்பட்ட முஸ்லீம்களுக்கு" மட்டுமே என்று குறிப்பிட்டு இருந்தது.
சில ஜாட் குடும்பத்தினரின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட ஒரு சட்ட புகாரிற்கு விடையிறுப்பாக, இந்தியாவின் உச்ச நீதிமன்றம் நவம்பர் 22இல்,மதரீதியில் சம்பந்தப்படுத்தாமல், அரசாங்கத்தின் விதிமுறைகளுக்கு உடன்பட்ட, இடம் பெயர்த்தப்பட்ட எந்தவொரு குடும்பத்திற்கும் இழப்பீட்டை வழங்க வேண்டுமென்பதை வரையறுத்து அறிக்கையை மீண்டும் வெளியிடுமாறு SP அரசாங்கத்திற்கு உத்தரவிட்டது.
இதற்கு விடையிறுப்பாக, சமாஜ்வாதி கட்சி அரசாங்கத்தின் வழக்கறிஞர் முஸ்லீம்களின் வெளியேற்றத்தை—அதாவது "மத சுத்திகரிப்பை"—தானாக முன்வந்து இடம்பெயரும் ஒரு திட்டமாகவும் அதற்கு அரசாங்கத்தின் ஒப்புதலும் ஆதரவும் இருப்பதாகவும் காண்பித்தார். அரசு வழக்கறிஞர் கூறுகையில், “நிவாரண முகாம்களைப் பார்வையிட்ட குழு, முஸ்லீம்கள் மட்டுமே வேறு இடத்திற்கு செல்ல விரும்பினார்கள் என்று கருதியது.தற்போது அது, யாரெல்லாம் இடம்பெயர விரும்புகிறார்களோ,அனைவருக்கும் விரிவாக்கப்படும்,” என்றார். [வலியுறுத்தல் சேர்க்கப்பட்டது]
வெளிப்பார்வைக்கு இந்தியாவின் மதசார்பற்ற அரசியலமைப்பின் பாதுகாவலனாக விளங்கும்—நீதிமன்றமானது, வகுப்புவாத வன்முறையில் பாதிக்கப்பட்டவர்கள் அவர்களின் சொந்த கிராமங்களில் இருந்து நிரந்தரமாக வெளியேற வேண்டுமென்ற நிபந்தனையின் கீழ், அரசாங்க-நிர்பந்த வெளியேற்றத்திற்கு அது இழப்பீடு வழங்குகிறது என்ற உண்மையை அப்பட்டமாக புறக்கணிக்கிறது. அது வெறுமனே, இந்த குற்றத்தை தெளிவாக முஸ்லீம்களோடு மட்டுப்படுத்தி விடாமல் ஒரு "மதசார்பற்ற" வேஷத்தை வழங்குவதை உறுதிப்படுத்த விரும்பியது.
நன்றி: சகோதரர்.அபூ சய்யஃப்
மோடி மோசடி: தேர்தல் பிரச்சாரம்: சமூக வலைதளங்களில் அரங்கேறும் தில்லு முல்லு!
கோப்ராபோஸ்ட் (cobrapost) என்கிற இணையதளம் நடத்திய புலனாய்வில், பல ஐடி
நிறுவனங்கள், ஃபேஸ்புக், யூடியூப் மற்றும் டிவிட்டர் ஆகிய சமூக வலைதளங்களை,
அரசியல்வாதிகளின் செல்வாக்கை போலியாக உயர்த்தவும்,
அவர்களுக்கு
வேண்டாதவர்களை எதிர்க்கவும் பயன்படுத்துகின்றன என செய்தி வெளியிட்டுள்ளது.
இதில் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடிக்கும், பாஜக கட்சிக்கும் பல
நிறுவனங்கள் வேலை செய்வதாகவும் தெரியவந்துள்ளது.
பிரச்சார யுக்திகள்...
புளூ வைரஸ் (blue virus) என்று பெயரிடப்பட்ட இந்த ஸ்டிங் ஆப்ரேஷனில்,
இந்தியா முழுவதும் உள்ள, ஏறக்குறைய 24 ஐடி நிறுவனங்களைப் பற்றித்
தெரியவந்துள்ளது. பெரிய நிறுவனங்களுக்கான சமூக வலைதள விளம்பர நடவடிக்கைகளை
கவனித்துக் கொள்வதாக காட்டிக் கொள்ளும் இத்தகைய நிறுவனங்கள், குறிப்பிட்ட
அரசியல்வாதிகளுக்கு ஆயிரக்கணக்கான
அபிமானிகள் இருப்பதைப் போலவும்,
வேறொருவரது கணக்கை ஹேக் செய்து, அவர் பேசுவது போல தரக்குறைவான பதிவுகளை
இடுவது போலவும் பல மோசடிகளை செய்து வருவது தெரியவந்துள்ளது. இவையனைத்தும்,
அந்தந்த கட்சி சம்பந்தப்பட்டவர்கள் அல்லது பெரிய நிறுவனங்களுக்காக
செய்வதாகவும், பணம்தான் இதன் குறிக்கோள் என்றும் கோப்ரா போஸ்ட் இணையதளம்
தெரிவிக்கிறது.
செய்தியாளர்களிடம் பேசிய கோப்ரா போஸ்டின் ஆசிரியர் அனிருத்தா பஹால்,
"இணையதளத்தின் இணை ஆசிரியர் சையத் மஸ்ரூர் ஹசன், இருபதுக்கும் மேற்பட்ட ஐடி
கம்பெனிகளை அணுகினார். தனது தலைவர் நேதாஜி என்பவர், சட்டமன்ற தேர்தலுக்கு
முன்பாக, சமூக வலைதளத்தில் பிரச்சாரத்தை ஆரம்பிக்க விரும்புவதாகவும்,
அவருக்கு எதிரானவர்களின் பெயரைக் கெடுக்க, செய்திகள் பரப்ப வேண்டும்
என்றும் சையத் தெரிவித்துள்ளார்".
"அவர் அணுகிய அனைத்து கம்பெனிகளுமே, ஃபேஸ்புக்கிலும், டிவிட்டரிலும்,
போலியாக பல அபிமானிகள் இருப்பதாக காட்டலாம். இதனால் எதிர்கட்சியினரின்
நற்பெயர் கெடுப்பதைப் போல செய்திகளும் பரப்பலாம் என்றே கூறின".
பாஜக, மோடி...
"இந்த புலனாய்வில கிடைத்த தகவலின் படி, பாஜக மற்றும் அதன் பிரதமர்
வேட்பாளர் நரேந்திர மோடியே, அதிக அளவில் சமூக வலைதளங்களை பிரச்சாரத்திற்கு
பயன்படுத்துவதாகத் தெரிகின்றது. அவருக்காக பல நிறுவனங்கள், இரவு பகல்
பாராமல் உழைத்து வருகின்றன".
வெறும் நரேந்திர மோடியின் பெயர் மற்றுமே புலானய்வில் வெளியாகியதைப் பற்றி
கேட்ட போது, நடந்த 5-6 புலான்ய்வு ஆபரேஷன்களில், அவரைப் பற்றித் தான்
மீண்டும் மீண்டும் தெரிய வந்தது என்று அனிருத்தா கூறினார்.
"பலர், நாங்கள் குறிப்பிட்ட நபர்களைத் தாக்குகிறோமா எனக் கேட்கின்றனர்.
நாங்கள் அப்படி செய்யவில்லை. அதே நேரத்தில் இது சாதாரண விஷயமும் இல்லை.
இப்படிப்பட்ட ஒரு மோசடி நடக்கிறபோது, அதை வெளிச்சத்திற்கு கொண்டு வர
வேண்டும் என்று நினைத்தோம். அவ்வளவே. ஆனால், இந்த நிறுவனங்கள், வேறு எந்த
கட்சிக்கும் வேலை செய்யவில்லை என்பதை அறுதியிட்டுக் கூற முடியாது".
எதிர்வினை பதிவுகளை அழித்தல், அரசியல்வாதிகள் இடும் பதிவுகளை பல பேர்
விரும்புவது போல் மாற்றுதல், ஒரு பெரிய ரசிகர் கூட்டத்தை உருவாக்குதல் எனப்
பல சேவைகளையும் வழங்குவதாக, அந்த ஐடி கம்பெனிகள் தெரிவித்துள்ளன.
தடம் தெரியாமல்...
எங்கிருந்து பதிவேற்றப்பட்டது என்பதை மறைக்கும் வகையில், எதிராளியைப்
பற்றிய தவறான பதிவுகள் இடுகையில், அவை அமெரிக்கா போன்ற வெளிநாடுகளிலிருந்து
வந்ததாக பதிவெற்றப்படும். அதே போல, பயன்படுத்தப்படும் கணிணியின்
பாகங்களும், பல கடைகளிலிருந்து வாங்கப்பட்டு, ஒன்று சேர்க்கப்பட்டு, அந்த
வேலை முடிந்த பின்னர் அழிக்கப்படும். இருக்கும் இடம் தெரியாமல் இருக்குமாறு
ஒவ்வொரு மணி நேரத்திற்கும் பிராக்ஸி கோடுகள் மாற்றப்படும். இவை, தடம்
தெரியாமல் இருக்க, அந்த கம்பெனிகள் பின்பற்றும் முறைகள்.
பஹால் மேலும் பேசுகையில், "சையத் அணுகும் போது, இந்த கம்பெனிகள்,
முஸ்லிம்களின் பெயரில் போலி அக்கவுன்டுகளை ஆரம்பித்து, அவர்கள் நேதாஜியைப்
பற்றி நல்லவிதமாக பேசுவதைப் போலவும், அவர்கள் கட்சியின் புகழ்பாடும்
வீடியோக்களை, யூடியூபில் பல பேர் பார்த்தது போன்று உருவாக்க முடியும்
என்றும் கூறியுள்ளனர்" என்றார்.
தகவல் தொழில்நுட்ப சட்டம், மக்கள் பிரதிநிதித்துவ சட்டம், வருமான வரி
சட்டம் உட்பட பல சட்டங்களை, இத்தகைய மோசடிகள் மீறுகின்றன. இவை அனைத்தும்
தண்டைனக்குரியவை என்றும் பஹால் தெரிவித்தார்.
நன்றி: தி ஹிந்து
ஊடகம், கடைகளை கொள்ளையடிக்கவோ, உயிர்களை பலியிடவோ செய்வதில்லை மிஸ்டர் மோடி!!!
செய்தியாளன் இன்னொரு முறை சுடப்பட்டிருக்கிறான்....!
கார்கிலில்...
கார்கிலில்...
கந்தஹாரில்...
...இப்போது குஜராத்தில்!
அரசின் இயலாமைக்கு ஊடகங்களையே பலியாக்குகிறார்கள். தற்போதைய காலகட்டத்தில் 24 மணி நேர செய்தி சேனல்கள், மிக எளிதான இலக்குகள் ஆகிவிட்டன, அவர்களுக்கு.
கார்கிலின் போது...
இராணுவ கட்டமைப்பில் உள்ள பலவீனங்களால் எழுந்த தோல்வியே மிக முக்கிய குற்றவாளி என அதிகாரமட்டத்தில் அனைவருக்கும் தெரிந்திருந்தபோதும், ஊடகங்களையே, தேசிய பாதுகாப்பிற்கு பங்கம் விளைவிப்பவர்கள் எனக் குற்றஞ் சாட்டினார்கள்.
கந்தஹார் விவகாரத்தில்...?
ஒரு செய்தி ஊடகமாவது, இந்திய வெளியுறவுத்துறை மந்திரி, ‘மசூத் அஸார்’உடன் பயணம் செய்து ஆஃப்கானிஸ்தான் வரைப் போக வேண்டும் என யோசனை தந்ததா? முன்மொழிந்ததா? அல்லது மறைமுகமாக திணித்ததா? எதுவுமே இல்லை. எனினும், அரசாங்கத்தின் மீது வலுக்கட்டாயமாக அழுத்தத்தை தந்து கடத்தல்காரர்களின் கோரிக்கைக்கு பணிய வைத்தவர்கள் ஊடகங்களே என வேகமாய் சுட்டு விரல் நீட்டினார்கள்.
இப்பொழுது குஜராத்தில் இன வெறியை பற்ற வைத்ததும் ஊடகங்களே என்கிறார்கள்....? ஆனால் உண்மை என்ன...? காந்திநகரிலிருந்து ஆளும் அரசின் ஆதரவு பெற்ற கும்பல்களில் ஒரு பிரிவே, சமூகத்தின் நடுவே பிரிவினையையும், குறிப்பிட்ட இனத்தவர் மீது வெறுப்பையும் பற்ற வைக்க உந்துசக்தியாக இருந்தது என்றால் அதில் மிகை இல்லை.
அரசின் இயலாமைக்கு ஊடகங்களையே பலியாக்குகிறார்கள். தற்போதைய காலகட்டத்தில் 24 மணி நேர செய்தி சேனல்கள், மிக எளிதான இலக்குகள் ஆகிவிட்டன, அவர்களுக்கு.
கார்கிலின் போது...
இராணுவ கட்டமைப்பில் உள்ள பலவீனங்களால் எழுந்த தோல்வியே மிக முக்கிய குற்றவாளி என அதிகாரமட்டத்தில் அனைவருக்கும் தெரிந்திருந்தபோதும், ஊடகங்களையே, தேசிய பாதுகாப்பிற்கு பங்கம் விளைவிப்பவர்கள் எனக் குற்றஞ் சாட்டினார்கள்.
கந்தஹார் விவகாரத்தில்...?
ஒரு செய்தி ஊடகமாவது, இந்திய வெளியுறவுத்துறை மந்திரி, ‘மசூத் அஸார்’உடன் பயணம் செய்து ஆஃப்கானிஸ்தான் வரைப் போக வேண்டும் என யோசனை தந்ததா? முன்மொழிந்ததா? அல்லது மறைமுகமாக திணித்ததா? எதுவுமே இல்லை. எனினும், அரசாங்கத்தின் மீது வலுக்கட்டாயமாக அழுத்தத்தை தந்து கடத்தல்காரர்களின் கோரிக்கைக்கு பணிய வைத்தவர்கள் ஊடகங்களே என வேகமாய் சுட்டு விரல் நீட்டினார்கள்.
இப்பொழுது குஜராத்தில் இன வெறியை பற்ற வைத்ததும் ஊடகங்களே என்கிறார்கள்....? ஆனால் உண்மை என்ன...? காந்திநகரிலிருந்து ஆளும் அரசின் ஆதரவு பெற்ற கும்பல்களில் ஒரு பிரிவே, சமூகத்தின் நடுவே பிரிவினையையும், குறிப்பிட்ட இனத்தவர் மீது வெறுப்பையும் பற்ற வைக்க உந்துசக்தியாக இருந்தது என்றால் அதில் மிகை இல்லை.
கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை ஊடகங்கள் நடத்தினவா?
வன்முறை கைக்கடங்காமல் வெடிக்கிறது என்று தெரிந்த பின்னும், ரயில் எரிப்பு சம்பவத்திற்கு அடுத்த நாளே 24 மணி நேர ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தது ஊடகங்களா?
குறிப்பிட்ட இனத்தவரின் கடைகளையும் அமைப்புக்களையும் கொள்ளையிடுமாறு மக்களிடம் விண்ணப்பித்தது ஊடகங்களா??
சர்வ நிச்சயமாக, அஹ்மதாபாதிலும், வடோதராவிலும், இன்னும் மாநிலத்தின் பல இடங்களிலும் குறிப்பிட்ட இனத்தவருக்கு எதிராக, இனச்சுத்திகரிப்பை செய்யச் சொல்லி ஊக்குவித்ததும்.....
...ஊடகங்கள் அல்ல!
படுகொலைகளை எல்லாம் செய்தி சேனல்கள் திரும்ப திரும்பக் காட்டிக்கொண்டே இருந்ததுதான் வன்முறை அதிகம் வெடிக்கக் காரணமாயிற்று என்கிறார்கள். ஆனால், யாரேனும் இதை நம்புகிறீர்களா??? ஊருக்குள் ஒரு கும்பல் புகுந்து கடைகளையும் வீடுகளையும் தீக்கிரையாக்குகிறார்கள் என்றதும் யாரேனும் எழுந்து, உடனே வெளியே சென்று, அது போன்றே ஒரு தீயை பற்றவைப்பார்களா?? உண்மை என்னவென்றால், அன்று நடந்த சம்பவங்களின் தீவிரத்தையும், திசைகளையும் கட்டுக்குள் வைத்திருந்தது, அந்தக் கும்பலே தவிர, களத்திலிருந்து நேரடி ஒளி/ஒலி பரப்பு செய்துகொண்டிருந்த செய்தி ஊடகங்கள் அல்ல.
செப்டம்பர் 11க்கு பிறகிலிருந்து, இந்திய அமைச்சர்கள் எல்லோரும், “செய்தித் தொடர்பு ஒழுக்கங்கள்” என்றால் அது அமெரிக்க ஊடகங்களை பாரமானியாகக் கொண்டு கற்க வேண்டும் என எண்ணுகின்றனர். அதனால்தான் குஜராத் பற்றிய இந்திய ஊடகங்களின் ஆவணம் எல்லாவற்றையுமே குற்றம் சாட்ட முடிகிறது அவர்களால். அவ்வாறெனில் ரோட்னி கிங்கை (Rodney King) கண்டித்ததற்காக வன்முறை வெடித்ததே லாஸ் ஏஞ்சல்ஸில்... பத்தாண்டுகளுக்கு முன் அமெரிக்காவையே உலுக்கிய அந்த இனக்கலவரத்தை ஊடகங்கள் எப்படி செய்தியாக்கின என்பதையும் சேர்த்தே அவர்கள் பார்க்கட்டும்.
செய்தித் தொடர்பு ஊடகங்களை அன்று கட்டுப்பாட்டில் கொண்டு வந்திருந்தால், வெறி பிடித்தலைந்த கும்பலை இல்லாமல் ஆக்கியிருக்கலாம் என்கின்றது அரசு. அன்றைய தினத்தில், ஊடகங்களைத் தவிர்த்து மற்ற எல்லாவற்றின் மீதும் கட்டுப்பாடு இருந்ததாகவே காட்டிக்கொள்கிறது. ஆனால் உண்மை....?? அரசின் அறிக்கைகளை விடவும் பன்மடங்கு தூரத்தில் அது இருக்கிறது. அதுவும் வன்முறை வெடிக்க ஆரம்பித்த முதல் 48 மணி நேரத்தில்....? உதாரணமாக போலீசாரையே எடுத்துக் கொள்வோம். அன்றைய தினத்தில் போலீசார் கைகளைக் கட்டிக்கொண்டு வேடிக்கை பார்த்தனர் என்று சொன்னால், உடனே காவல்துறையின் ஒழுக்கத்திற்குக் கேடு விளைவிக்கப் பார்க்கிறோம் என்று குமுறுவார்கள். ஆனால் நிஜத்தில், ஒவ்வொரு தெருவிலும், அராஜகம் செய்யும் கும்பல்களுக்கு, அவர்களின் செயல்களுக்கு பாதகம் ஏற்படாதவாறு போலீசார் பாதுகாத்தார்கள் என்பதே உண்மை!
பன்மடங்கு பெருகிய அளவில் ஒரு வன்முறை வெடிக்கும்போதும், ஊடகங்கள் அரசின் பைனாகுலர்களை வாங்கி, அது சொல்லும் எண்களிலேயே நிஜத்தைப் பதிவு செய்யவும், வீரியமான, கடினமான உண்மையை மறைக்கவும் செய்யவேண்டும் என எதிர்பார்க்கிறார்களா?? மாநிலத்தில் பல இடங்களிலும் வன்முறை ஒரு தொடராக வெடித்துக்கொண்டே இருக்கும்போது, மாநில முதலமைச்சர் தொலைக்காட்சியில் வந்து, “நிலைமை கட்டுக்குள் இருக்கிறது” என்று சொன்னால், உடனே பொய்யை வெளிக்கொணராமல் இருந்து விட வேண்டுமா?? அரசு, இராணுவம் வந்து விட்டது என்று செய்தி ஒளிபரப்ப சொல்லும்.... ஆனால் உண்மையில் இராணுவம், வெறி பிடித்த கும்பல்கள் பயணம் செய்யும் லாரிக்களுக்குப் பாதுகாப்பாய் நின்று கொண்டிருக்கும்.... இதில் எந்த உண்மையை நாங்கள் மக்களிடம் எடுத்துச் சொல்வது??
‘ஹிந்துக்கள்’, ‘முஸ்லிம்கள்’ என்ற சொற்களை தொலைக்காட்சி நிருபர்கள் அடிக்கடி உபயோகித்ததனால்தான் சூழ்நிலை கெட்டுக்கொண்டே போனது என குற்றப்பத்திரிக்கை வாசிக்கிறார்கள். உண்மையில், சமூகங்களுக்கு / மதங்களுக்கு இடையே வன்முறைச் சம்பவங்கள் வெடிக்கும்போது இரு தரப்பினரின் பெயரையும் வெளியிடக்கூடாது என்பது காலம் காலமாக கடைப்பிடிக்கப்படும் ஊடகவிதிதான். எனினும், ஒரு ‘போஹ்ரா முஸ்லிம்’இன் கடை சூறையாடப்படும்போது, ‘சிறுபான்மை சமூகத்தினரின் சிறுபான்மைப் பிரிவினரின் ஓர் உறுப்பினரின் கடை’ என்றா செய்தி வாசிக்க முடியும்??
இதை விட துக்ககரமான செய்தி என்னவென்றால், முழுக்க முழுக்க குஜராத் மாநில அரசுக்கு எதிராகவும், பொதுவாகவே ‘ஹிந்துக்களுக்கு’ எதிராகவுமே ஊடகங்கள் இருக்கின்றார்கள் என்கின்றார்கள். செய்தி ஊடகங்கள், அதிலும் குறிப்பாக ஆங்கில வழி செய்தி ஊடகங்களுக்கு (அச்சு + தொலைக்காட்சி) எதிராக சங் பரிவாரங்கள் காலம் காலமாக வைக்கும் குற்றச்சாட்டு அதுவே. ஊடகங்களில் ஒரு பிரிவினரை இப்படி அழுத்தம் கொடுத்து நெருக்குவதாலும், மதச்சார்பற்ற ‘தலிபான்கள்’ எனப் பெயரிடுவதாலும் ‘ஹிந்துத்துவ தேசபக்தியாளர்களுக்கும்’, ‘தேச - விரோத - போலி - மதச்சார்பின்மையாளர்களுக்கும்’ இடையில் ஒரு கோட்டை எழுப்பிவிடலாம் என்றே சங் பரிவாரம் தனது குறிக்கோளாகக் கொண்டுள்ளது. இதுதான் அதன் பிரச்சாரத்தின் உயிர் துடிப்பாகவும் உள்ளது.
மாறாக சங் பரிவாரத்தின் இந்த அடிமுட்டாள்தனமான பிரச்சாரத்தால் ஊடகங்கள் தற்காப்பு நிலையைக் கையிலெடுத்து, பாரபட்சம் காட்டாமல் இருப்பதின் தேவையுணர்ந்து, எத்தகைய சூழ்நிலையிலும் நடுநிலை செய்திகளையே பரப்பவேண்டும் எனத் தங்கள் மீது கடமையாக்கிக் கொண்டுள்ளன. கோத்ராவின் ரயில் எரிப்பு சம்பவத்தின் பின்னே சில உள்ளூர் முஸ்லிம் தலைவர்கள் இருந்ததை** யாரும் மறுக்க இயலாது எனினும் முஸ்லிம்களைச் சூறையாடிய பல இடங்களிலும், விஸ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங்தள் போன்ற அமைப்புக்களின் தலைவர்களே முன்நின்று கும்பல்களை வழிநடத்தினார்கள் என்பது மறுக்க இயலா உண்மை. அந்த அராஜகத்தை, நியூட்டனின் விதியின் படி, விளைவின் எதிர்விளைவு என்று கூறி முதலமைச்சர் மோடி சமாளிக்க முயன்றிருக்கலாம் ஆனால் ஊடகங்களின் கண்களுக்கு, தன்னுடைய இயலாமையை, கோழைத்தனத்தை மறைக்க அரசு அளித்த வெட்கக்கேடான பதிலே அது என்பது தெள்ளெனத் தெரியும். பாரபட்சமாக நடந்து கொள்கிறார்கள் என்னும் குற்றச்சாட்டையும் ஊடகங்களின் வாசற்படியில் வீசுகிறார்கள்.... அங்கே வீசாதீர்கள், மாறாக வன்முறையின் போது வி.இ.பரிஷத் மற்றும் பஜ்ரங்தள்ளின் பின்னே அமர்ந்து பயணம் செய்துவிட்டு, தற்போது அவசர அவசரமாக கீழே இறங்க முயற்சிக்கும் அரசின் வாயிற்படியில் வீசுங்கள்..!
இதனாலெல்லாம் ஊடகங்கள் தம்மைத்தாமே சுயபரிசோதனை செய்யக்கூடாது என சொல்லவில்லை. போர், வன்முறை, தீவிரவாதம்---இது போன்றவைதான் 24 மணி நேர செய்தி ஊடகங்களுக்கு உணவாகும். காணபவர்களை விடாமல் இழுத்து ஓரிடத்தில் வைக்க வேண்டும் என்றால் இது போன்ற செய்திகளை சுண்டி இழுக்கும் பலம் வாய்ந்த நிழற்படங்களை / காணொளிகளுடன்தான் சொல்ல இயலும். இந்த மாதிரியான நேரங்களில் செய்திகளைச் சொல்லும் ஓர் ஊடகம் என்னும் தகுதியில் இருந்து இறங்கி, கவர்ச்சியை நம்பி, பரப்பப்படும் செய்தியின் சாராம்சத்தில் சமரசம் செய்யும் நிலையும் வரும். இது மிக கவனிக்கப்படவேண்டிய ஆபத்தாகும். செய்தி ஊடகங்கள், வாராந்தரிகளைப் போல் நடந்து கொள்வது என்பது லேசான விஷயமல்ல.... இப்படியான நேரங்களில் சுயமாகவே தம்மை தணிக்கைக்கு உட்படுத்துவது மிக அவசியமாகிறது.
ஆயினும், எப்படி செய்தி ஊடகங்கள் பரிமாணமடைந்து வருகின்றனவோ, அதே போல், ஊடகங்களின் இந்த புதிய தலைமுறைக்கு ஏற்ப பதில் சொல்வதும் அரசின் மீது தார்மீகக் கடமையாகிறது. 24 மணி நேர செய்தி ஊடகங்களை இந்த அரசுதான், இந்திய வரலாற்றில் முதன்முறையாக எதிர்கொள்கிறது. குஜராத்தில், அரசு தரப்பு செய்திகளில் கூட ஆதாரப்பூர்வ / சரியான தகவல்களைத் தருவது என்பது இல்லாமல் போய்விட்டதை கண்கூடாகப் பார்க்க முடிகிறது.
அமெரிக்காவில், ஊடகங்களைப் பயன்படுத்தியே ஒரு சம்பவத்தின் போக்கை அறிந்து கொள்ளவும், அதைக் கட்டுக்குள் கொண்டு வரவும் அரசு தன் வலிமையாக்கிக் கொண்டுள்ளது. ஆனால் இங்கேயோ, கிடைக்கும் சொற்ப தகவல்களுக்கே, ரிஷி மூலம், நதிமூலம் பார்ப்பதும், அதிகார வர்க்கத்தின் மூலம் நிருபர்களின் சான்றுகளை / ஆவண / அத்தாட்சிகளை கேள்விக்குள்ளாக்குவதுமே அரசின் மனப்பான்மையாக உள்ளது. வேதனையான விஷயம் என்னவெனில், இந்திய அரசியல்வாதிகளிலேயே நியூ யார்க் வரை சென்று ஊடக மேலாண்மை பற்றிய படிப்பைப் படித்ததும், அதைப் பற்றிய அதிக அறிவும் படைத்தவர் என்றும் கருதப்படுகிறவரே நரேந்திர மோடிதான். ஆனால், நினைத்துப் பார்த்தால், அவருக்குத்தான் மீண்டும் ஒரு முறை அந்தப் படிப்பை படிப்பது நல்லதெனத் தோன்றுகிறது..... தொலைக்காட்சிகளைத் தடை செய்யும் ஆணையை பிறப்பிப்பதற்கு முன்!!
--------------------
கட்டுரையாளர், ராஜ் தீப் சர்தேஸாய் 1994இலிருந்து செய்தி ஊடகங்களில் பணி புரிய ஆரம்பித்து, 2008இல் எல்லாம் தனக்கென தனி செய்தி ஊடகத்தை ஆரம்பிக்கும் அளவுக்கு வேகத்திலும், விவேகத்திலும், தொழில்நுட்பத்திலும் பரிணாமம் பெற்ற ஊடகவியலாளர். தனக்கென தனி செய்தி-ஊடகம் ஆரம்பிக்கும் வரை இவரின் செய்தியில் நடுநிலைத்தன்மையும் உண்மையும் 100% இருந்தன என்றால் அது மிகையல்ல. இப்போதில்லையா என்றால், அவரின் தற்போதைய எழுத்துக்களே அதற்கு பதில் சொல்லும். :)
இந்தக் கட்டுரையை தற்போது பதிவிடக் காரணம், ஒரு ஊடக- நடுநிலையாளர் குஜராத் அரசைப் பற்றியும், திரு.மோடியைப் பற்றியும் என்ன கருத்தினைக் கொண்டிருந்தார் என்பதை நினைவூட்டுவதற்கே. இன்றைய ஜொலிஜொலிப்பில், நேற்றைய கசடுகளை மறப்பது பகுத்தறிவல்லவே... :)
மோடியின் / குஜராத் மாநில வளர்ச்சியின் சுயத்தை வெளிப்படுத்தும் நடுநிலையாளர்களின், குறிப்பாக இஸ்லாமியரல்லாதவர்களின் கட்டுரைகள் தொடரும். இது தமிழ் சமூக மக்களின் விழிப்புணர்வுக்காக மட்டுமே. கருத்துக்களை வரவேற்கிறேன்.
*ஆங்கில மூலம்: Did the media ransack shops, take lives, Mr Modi? | http://bit.ly/19r5qKf
(**உம்ம் ஒமர்: இது மிக மிக தவறான கூற்று. இதுவும் ஆர்.எஸ்.எஸ், சங் பரிவாரங்களின் கயமைத்தனமே என்பதற்கு மறுக்க இயலாத அனைத்து ஆதாரங்களும் இணையம் / அச்சு ஊடகங்களில் பரவியுள்ளது.)
Subscribe to:
Posts (Atom)
Popular Posts
Labels
இதுவரை...
-
►
2016
(11)
- ► April 2016 (1)
- ► February 2016 (4)
- ► January 2016 (6)
-
►
2015
(33)
- ► December 2015 (1)
- ► October 2015 (1)
- ► September 2015 (12)
- ► August 2015 (6)
- ► February 2015 (1)
-
►
2014
(6)
- ► December 2014 (1)
- ► April 2014 (1)
- ► March 2014 (2)
- ► January 2014 (1)
-
►
2013
(13)
- ► December 2013 (6)
- ► October 2013 (1)
- ► September 2013 (2)
- ► January 2013 (4)
-
►
2012
(30)
- ► December 2012 (6)
- ► November 2012 (4)
- ► October 2012 (1)
- ► September 2012 (5)
- ► August 2012 (1)
- ► April 2012 (4)
- ► March 2012 (1)
-
►
2011
(25)
- ► December 2011 (1)
- ► October 2011 (1)
- ► September 2011 (4)
- ► April 2011 (7)
- ► March 2011 (4)
- ► February 2011 (4)
-
►
2010
(16)
- ► December 2010 (1)
- ► November 2010 (5)
- ► October 2010 (6)
- ► September 2010 (2)
- ► August 2010 (1)