கேளேன்...நீ கேளேன், மச்சி கேளேன்....என் கவித...
இரவினில்தான் கவிதை வரும் என்று
ஜன்னலருகில் அமர்ந்தபோதுதான்
தெரிந்தது, வானத்தின் இருள்.
அமாவாசையா நீ?
கன்னே, மனியே
என்றெல்லாம் கவிதை
எளுதலாம் என்றால்
கனவிலும் வந்து கரெக்சன் செய்கிறார் - உன்
தமிழாசிரியத் தந்தை
சைட்டடிக்க சைக்கிளே என்று
எட்டி மிதிக்கும் வேளையில்
நினைவில் வந்து நின்றது - உன்
அண்ணனின் பூத உடல்
கொலுசின் சத்தத்தில்
என்னை உணர்வாய் என்று
வாங்கிட விளைகையில்
எனக்கு முன் கியூவில்
உஷா உதூப்பாய் உன் தாய்
தூது செல் செல்லக்கிளியே
என்று உன் தங்கையை தேடினால்
கலர் கலராய் பெல்ட்டை காட்டுகிறது கராத்தே
அடச்சே...
வந்து வாய்க்குது பார்
எனக்குன்னு!!
.
machi nee kealeaan, machi keallupaaa naan commrntaithaan sollureannnn,,
ReplyDeletemachi oru quater sollu machiii, rangeukku irrunthathu kavijai
கடைசி வரியில் உதிர்த்த முத்தான கருத்து.. அபாரம் :-)))))))))))))))))
ReplyDelete@வினு ண்ணா,
ReplyDeleteஹி ஹி ஹி....னல்லா புரிஞ்சுக்கிடவங்க நீங்கதான் :). முதல் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி!!
@அமைதிச்சாரலக்கா,
ஹி ஹி ஹி...காசா பணமா...தத்துவம்தானே எப்பவுமே ஃப்ரீயா கிடைக்கற ஒன்னு...!! வருகைக்கும், பகிர்தலுக்கும் நன்றி.
அட்ரா சக்க!
ReplyDeleteநகைச்சுவையை கவிதையில் கொண்டுவர்றது கஷ்டம் சகோ! உங்களுக்கு அது வாய்த்திருக்கிறது!
@வசந்த்ண்ணா,
ReplyDeleteஇதுல் ஏதும் உள் குத்தம் இல்லையே??? :)) வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிண்ணா.
கவிதையையே நகைச்சுவையா எழுதியிருக்கீங்க.. அதுவும் கடைசி வரியில சிரிப்பே வந்திடுச்சு.. :-)))
ReplyDeleteநல்லாயிருக்கு கவித!!
@ பாபுண்ணா,
ReplyDeleteஉங்க வருகைக்கும், பின்னூட்டத்திர்கும் சந்தோஷம். எப்படியோ என் கவிதய கவிதைன்னு ஒத்துகிட்டீங்களே...அதே பெருசு!! :)
ஐயோ யாராவது இங்க வாங்களேன். அன்னு சிஸ்டருக்கு என்ன ஆச்சு பாருங்களேன்:)
ReplyDelete@கோபிண்ணா,
ReplyDeleteGRRRRRRRRRRRRRRRrrrrrrrrrrrrrrrr....
என்ன, பழிக்கு பழியா...இதுக்கெல்லாம் நாங்க அசர மாட்டோம்ல. உங்க கதைகளைப் போலவே நானும் கவித எழுதியே தீரணும்னு முடிவு பண்ணிட்டேன்... :) வருகைக்கும், மனசார வாழ்த்தியதிற்கும் நன்றி (ஹி...ஹி...ஹி...Half Glass Full attitude!!)
ரைட்டு.. கலக்குங்க...:)
ReplyDeleteடேய் இனிமே நீ கவிதை எழுதுவ... (என்னை நானே கேட்டுகிறேன் )
ReplyDeleteஅன்னு என் இந்த கொலை வெறி...
அய்யய்யோ எல்லாரும் ஓடுங்க அது நம்மள நோக்கித்தான் வருது! :))
ReplyDeleteகவித.... கவித... அப்படியே அருவி மாதிரி கொட்டுது...
ReplyDeleteஅதுவும் அந்த கடைசி வரிகள்... :))))))))
@ பாலாஜி சரவணண்ணா,
ReplyDeleteவாழ்த்துக்களை வார்த்தைகளாக சொல்ல தெரியலைன்னாலும் உங்க நல்ல மனசு எனக்கு தெரியுதுண்ணா. கண்டிப்பா இதைப் போன்ற முயற்சியை வலை உள்ளவரை தொடர்வேன்னு இங்க சொல்ல நான் கடமைப்பட்டுள்ளேன். ஹி ஹி ஹி. வருகைக்கும், (இனி தொடர் வருகைக்கும்) மறுமொழிக்கும், நன்றி, நன்றி. :)
@கார்த்திண்ணா,
தமிழை காப்பாத்தறதுன்னு முடிவு பண்ணப்புறம் அது கதையா இருந்தா என்ன, கவிதையா இருந்தா என்ன, எல்லாத்தையுமே ஒரே மாதிரி பாக்கணுங்கண்ணா. ஹி ஹி ஹி தொடர் வருகைக்கும், பின்னூட்டங்களுக்கும் நன்றிங் :)
@ஷங்கர்ண்ணா,
பாத்தீங்களா உங்களை மாதிரி வலை பக்கமே எட்டிப் பாக்காத ஆளுங்களையும் இப்படி ஒரு அருமையான கவிதைதேன் கூப்பிட்டு வந்திருக்கு. இதுக்காகவே இன்னொரு கவிதய....அட நில்லுங்ணா....ண்ணா...தேன்க்ஸாவது கேட்டுட்டு போங்....அட... :))
@வெங்கட்ண்ணா,
ஹி ஹி ....எல்லாம் உங்களை மாதிரி பெரியவங்க ஆசிர்வாதம்தான். வருகைக்கும் ஊக்குவிப்புக்கும்(!!!) நன்றிங்ணா. :)
//கண்டிப்பா இதைப் போன்ற முயற்சியை வலை உள்ளவரை தொடர்வேன்னு இங்க சொல்ல நான் கடமைப்பட்டுள்ளேன்.//
ReplyDeleteடேய், யார்றா அங்க, முதல்ல இந்த வலையைக் கிழிச்சுத் தொங்கவிடு. வலை இருந்தாத்தானே இந்தப் பிரச்னையெல்லாம்!! நல்லவேளை தாயி, நீ உயிர் உள்ளவரைன்னு சொல்லலை, அந்த மட்டுக்கும் பொழச்சுகிட்ட!! :-))
ஆமா, நீங்க டாக்குட்டர் விஜய்க்கு சொந்தக்காரவுகளா? வார்த்தைக்கு வார்த்தை, ‘ங்ணா, ங்ணா’னுகிட்டு.. ;-))))
:))))))))
ReplyDeleteஹஹஹ கஷ்டம்தான்....
ReplyDeleteரசிக்கும்படி இருந்தது அன்னு...:))
haha... very funny!
ReplyDeleteசபாஷ்...
ReplyDelete//ஆமா, நீங்க டாக்குட்டர் விஜய்க்கு சொந்தக்காரவுகளா? வார்த்தைக்கு வார்த்தை, ‘ங்ணா, ங்ணா’னுகிட்டு.. ;-)///
ReplyDeleteஅம்மணி கோவைன்னு நினைக்கிறேன். சரீங்களா அம்மணி
அடடா அப்படியே மெய் சிலிர்த்திட்டேன்..... ! உங்க கவிதையை படிச்சிட்டு என் கவிதையை நிஜமா மறந்திட்டேன் தோழி....! சிரிச்சிட்டே இருக்கிறேன்....! நன்றாக இருக்கிறது...மிகவும் ரசித்தேன்...!
ReplyDelete@ஹுஸைனம்மா,
ReplyDeleteயக்கா...உங்களுக்கு ஏன் இப்படி ஒரு கோபம் வலை மேல. நாளைக்கு எங்கே என்னை கவிப்பேரரசின்னு சொல்லிடுவாங்களோன்னு பொறாமை. கவலைப்படாதீங்கக்கா. ஜெயலலிதாக்கு ஒரு சசி போல உங்களை நான் கூட பிறக்காத அக்காவா வச்சி பாத்துக்கறேன்... :))
அது வேற ஒன்னுமில்லீங்க்கா, நம்மூரு கோயமுத்தூர். அதோட தனி சிறப்பே வார்த்தைக்கு வார்த்தை 'ண்ணா' சேத்திக்கிறதுதேன். இதுல டாக்குடர் விஜயயெல்லாம் ஞாபகப்படுத்தினீங்க அப்புறம் கவிதய மெயில்ல அனுப்ப ஆரம்பிச்சிடுவேன்... :))
@sen22,
ண்ணா, என்ன அப்படியே உறைஞ்சிட்டீங்க போல என் கவிதைல?? ஹி ஹி :))))))) முதல் வருகைக்கும், ஆதரவுக்கும் நன்றிங்ணா. :)
@பிரதாப் ண்ணா,
எல்லாம் உங்கள மாதிரி பெரியவங்க எழுதற கவிதைய பாத்துதேன்...ஹி ஹி..வருகைக்கும், மறுமொழிக்கும் நன்றிங்ணா.
@வானதி,
என்ன இப்படி சொல்லிட்டீங்க? அவ்ளோ ஃபன்னியாவா இருக்கு....சைடா பார்த்தா கொஞ்சம் இலக்கியத்தரமா தெரியல?? வருகைக்கும், மறுமொழிக்கும் நன்றிங்க்கா. :)
@ஸ்ரீராம் ண்ணா,
சபாஷ், இப்படி ஒரு கமேன்ட்டைதான் எதிர்பார்த்தேன் :) வருகைக்கும், ஆதரவுக்கும் நன்றிங்ணா. :)
@கார்த்திண்ணா,
ReplyDeleteபின்ன, வேறெந்த ஊர்ல இருந்து இவ்ளோ மரியாதையா பேசுவாங்க சொல்லுங்ணா!! :)
@கௌசல்யாக்கா,
ஹி ஹி ஹி, கவியுலக மேதைகளே மெச்சுற அளவுக்கு இருக்குதுன்னா, ("அன்னு நீ...எங்கேயோ போயிட்டம்மா...போயிட்டம்மா....போயிட்டம்மா...Mind Voice with Echo) மிக்க நன்றிங். :) வருகைக்கும் மறுமொழிக்கும் மிக்க நன்றிங்க்கா. :)
கலக்கலான கவிதை(?)செம ஜாலி கவிதை தான்.
ReplyDelete/, வேறெந்த ஊர்ல இருந்து இவ்ளோ மரியாதையா பேசுவாங்க சொல்லுங்ணா!! :)//
ReplyDeleteஎனக்குப் பிடிக்காத ஊரு கோவைதான்
உங்களுக்கு அனுபவம் போதாதுன்னு நினைக்கிறேன் , இந்த விசயத்துக்குன்னே காலம் காலமா உதவுற பிரண்ட்ஸ் குரூப்பா மறந்துட்டிங்களே ???
ReplyDeleteரொம்ப நொந்து போயிருப்பீங்க போல???
ReplyDeleteரசித்துப் படித்தேன்.
ReplyDeleteகலக்குங்க.
ReplyDelete@ஆஸியாக்கா,
ReplyDeleteஜாலி கவிதையாவா இருக்கு ...ஹி ஹி ஹி...வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றிங்க்கா.
@கார்த்திண்ணா...,
இருங்க திவ்யாட்டயும், திவ்யா அம்மாட்டயும் சொல்லித்தாரேன்... :))
@அமைச்சரே,
கவலையே படாதீங்க. அடுத்த கவிதைல எழுதிரலாம்...ஹி ஹி ஹி :)
@இந்திராக்கா,
உங்களுக்கு புரியுது...ஹூம்... :)
@அப்பாதுரை,
தங்களின் முதல் வருகைக்கும், மறுமொழிக்கும் மிக்க நன்றி, மீண்டும் வருக.
@மாதேவி,
செஞ்சுருவோம் :))
வருகை தந்த அனைவருக்கும் மிக மிக நன்றிங் :)
superb
ReplyDeleteSuperb....
ReplyDeleteகன்னே, மனியே
ReplyDeleteஎன்றெல்லாம் கவிதை
எளுதலாம் என்றால்
கனவிலும் வந்து கரெக்சன் செய்கிறார் - உன்
தமிழாசிரியத் தந்தை.//
கண்ணே மணியே என்னாமா
அன்னு கவிதையில் கலக்குறான்னு
ஆசிரியர் இப்பபாத்தா சந்தோஷப்படுவார்.அன்னு.
@தங்லீஷ் அண்ணா,
ReplyDeleteநன்றி.
@மலிகாக்கா,
ஹெ ஹெ... எப்படியோ தமிழ வாழ் வக்கிறோம்ல?? வருகைக்கும், மறுமொழிக்கும் நன்றிங்க்கா.
நல்ல முயற்சி
ReplyDelete@நீடூர் அலி பாய்,
ReplyDeleteவருகைக்கும், கருத்துக்கும் நன்றி. :)