சி.என்.என்னின் பத்து ஹீரோக்கள்

Saturday, October 23, 2010 Anisha Yunus 11 Comments


ஒரு நல்லதை செய்யும் முன் ஆயிரம் விளம்பரங்கள் செய்யும் அரசியவாதிகளின் முன், செய்ததை மேடை போட்டு சொல்லி, அந்த உதவிகளைப் பெற்றவர்களை ஃப்ளாஷ் மழையில் வெட்கப்பட வைத்து ஆளுயர மாலைகள் போட்டுக்கொள்ளும் தலைவர்கள் முன், சிறு சிறு பொறிகளால் உந்தப்பட்டு, தன் வாழ்வின் ஒவ்வொரு நாளையும் நாலு பேருக்கு பயன் பட்டதாய் வாழும் ஒவ்வொருவரும் ஹீரோக்களே!! (ஆண்பால், பெண்பால் இரண்டுக்கும் சேர்த்து!!)

ஊடகங்களை பெரும்பாலும் நான் மெச்சுவதோ, போற்றிப்புகழுவதோ கிடையாது எனினும், சி.என்.என்னின் இந்த பரிசளிப்பை பாராட்டியே ஆக வேண்டும். அரசியல், மதம், நிறம் போன்ற பிரச்சினைகளுக்கு அப்பாற்பட்டு உலகின் நிஜ ஹீரோக்களை உலகின் முன் கொண்டு வரும் இந்த முயற்சி பாராட்டத்தக்கது. அவ்வாறே இந்த ஆண்டும் 10 சிறந்த ஹீரோக்களை தேர்ந்தெடுத்துள்ளனர். இவர்களில் ஒருவரை முதன்மையாக்குவது.... நம் ஓட்டுக்கள். (கள்ள ஓட்டு போடற பார்ட்டிங்கெல்லாம் கொஞ்சம் அப்படி தள்ளி நில்லுங்க...)

இனி இந்த 10 பேரை பற்றி கொஞ்சம் கதைக்கலாம்...

1. நாராயணன் கிருஷ்ணன்
நாராயணன் கிருஷ்ணன் ஒரு காலத்தில் ஸ்டார் ஹோட்டல் ஷெஃப். ஆனால் தன்னுடைய வாழ்நாளில் ஒரு தடவை பார்த்த அந்த சம்பவம், அவரின் எதிர்காலத்தை மாற்றி அமைத்தது. சாப்பாட்டிற்கு வழியில்லாத ஒரு முதியவர், மனம் பிறழ்ந்த நிலையில் தன்னுடைய மலத்தையே தின்னும் அவலம். அன்று ஆரம்பித்த பொறி இன்று, வேராகி விருட்சமாகி, அக்ஷயா என்னும் டிரஸ்ட் மூலமாக ஒரு நாளைக்கு நானூரு பேருக்கு சாப்பாடு தருகிறார். இதுவரை கிட்டத்தட்ட 1.2 மில்லியன் மக்களுக்கு அன்னதானம் செய்துள்ள புண்ணிய ஆத்மா.
இவரைப் பற்றிய சி.என்.என்னின் பேட்டி


2. சூஸன் பர்டன்
தானே ஒரு டிரக் அடிக்டாய் இருந்த காலத்தை மறந்து, தன்னைப்போன்றே இருட்டின் பிடியில் சிக்கித்தவிக்கும் பெண்களை மீட்டு வெளிச்சப்பகலில் வாழ்க்கையை நடத்த கற்றுத் தருவதே இவரது இப்போதைய தொழில், மூச்சு, கடமை...எது வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம். இது வரை 400 பெண்களுக்கும் மேலானவர்களின் வாழ்வில் ஒளியேற்றியுள்ளார்.
இவரின் வலை:


3. டே ல வேகா (ஃபர்ஸ்ட் நேம் எல்லாம் வாயிலயும் வரலை, டைப்படிக்கவும் வரலை)
நம் திரு நாடான இந்தியாவை போன்றதே மெக்ஸிகோவும். கொலை, கொள்ளை, வன்முறை, வெடிகுண்டு என்பது வாழ்க்கையில் காத்தாடி மாதிரி மிக பொதுவான பொருட்கள் ஆகி விட்டன. ஆனாலும், இப்படி ஒரு ஊரிலும் மக்களுக்கு முதலுதவி தரவும், நோயிலிருந்து மீட்டெடுக்கவும் ஒரு மருத்துவமனையை பல போராட்டங்களுக்கு பின் தொடங்கி, இன்னும் பல பிரச்சனைகளுக்கு மத்தியில் அதை நடத்திக் கொண்டும் இருக்கிறார் இப்பெண்.  சேவை என்றொரு எண்ணம் தோன்றி விட்டால் தடை போட வயது ஏது? இவரின் வயதோ 74!!
இவரைப் பற்றிய சி.என்.என்னின் பேட்டி


4. லிண்டா ஃபோன்ட்றென்
தோசையும், மசால்வடையும், பதினோரு மணிக்கு டீயும் இல்லாமல் நாட்களை நகர்த்த முடியாத நம் போன்ற மக்களின் மத்தியில், சதை பெருத்து மலையானால் வரும் அபாயத்தை உணர்ந்து, மக்களுக்கும் உணர்த்தி வரும் ஒரு பெண்.  இவர் வாழும் ஊரின் மூன்றில் ஒரு பகுதியினர் உடல்பளுவினால் ஆபத்திலுள்ள மக்கள்.  17 வாரங்கள், இவரை நம்பி ஒப்ப்டைத்ததில் கிட்டத்தட்ட 15,000 பவுண்டுகள் (ஒரே ஆளெல்லாம் இல்ல) குறைத்துள்ளனர். நல்ல விஷயம்தான்...ஃப்ரீயா யாராவது எங்க ஊர்லயும் செஞ்சா பரவாலல்லயே...
இவரைப் பற்றிய சி.என்.என்னின் பேட்டி


5. ஹார்மன் பார்க்கர்
1989ல் மத போதகராக கென்யாவில் அடியெடுத்து வைத்த பார்க்கரின் கண்களில் விழுந்த உமுதல் காட்சியே கடும் வெள்ளமும் அதை உபயோகித்து மக்களை வேட்டையாடும் (நான் அரசியல்வாதிங்களை சொல்லலை...இருந்தாலும், அவங்களையும் சேத்துக்குங்க..) பெரிய முதலைகளும் இன்னும் பல மலைவாழ் விலங்ககுகளுமே. அந்த சம்பவமே பார்க்கரின் வாழ்வை மாற்றியமைத்தது. ஒரு பாலம் மக்களின் வாழ்வையும் அவர்களின் சமூகத்தையும் மாற்றியமைக்கும் என்பதை புரிந்து கொண்ட பார்க்கர் இன்று வரை கிட்டத்தட்ட 45 பாலங்கள், கட்டி முடித்துள்ளார்...இன்னும் பல இருக்கின்றன இவரின் கை பட. இவரின் பாலங்களால், வெள்ளம் வந்தாலும் பாலத்தை கடந்து அத்தியாவசிய பொருட்களைப் பெற அந்த மக்களால் முடிகிறதென்பதே பெரிய சாதனை.
இவரின் வலை:

6. எவான்ஸ் வடொங்கொ
இருப்பதிலேயெ சிறிய வயதுடையவர் இவர்தான் போல. சிறிய வேலைதான் செய்வதும், ஆனால் அதன் தாக்கம் மிக மிக பெரிது. கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பது போல. 23 வயதாகும் இவர் தயாரிப்பது சூரிய ஒளியில் செயல்படும் விளக்கு. விலை ஜீரோ. இதுவரை 10,000 விளக்குகளை இப்படி ஏழைகளுக்கு தந்துள்ளார். இதனால் என்ன பெரிய பயன் என்பவர்களுக்கு கிரசினும் அதன் புகையால் எழும் பாதகங்களையும் படிக்க ஆணையிடுகிறேன்...:)
இவரைப் பற்றிய சி.என்.என்னின் பேட்டி

7. அனுராதா கொய்ராலா (மனீஷாவோட அத்தையெல்லாம் இல்ல!!)
மைதி நேபாள் என்னும் அமைப்பின் நிறுவனர். இதற்கு முன் ஒரு சாதாரண ஆங்கில வாத்தியார்.   குழந்தைகள் பத்திரம் என்று ஒரு கட்டுரை ஓடுகிறதே அந்த கட்டுரையில் வரும் பெண்களைப்போல இளம் வயதிலேயே அந்த தாக்குதல்களுக்கு உள்ளான சிறுமிகளையும், உள்ளாக இருக்கும் சிறுமிகளையும் காப்பதே இவரின் தலையாய கடமையாய் உணர்கிறார், செயல்படுத்தியும் வருகிறார். இதுவரை கிட்டத்தட்ட 12,000 பெண் பிள்ளைகளை கரை சேர்த்த புண்ணியம் இவரையே சாரும். இந்திய வரலாற்றில் இடம் பெற வேண்டிய பெண்.
இவரைப் பற்றிய சி.என்.என்னின் பேட்டி

8. மேக்னஸ் மேக்ஃபேர்லேன் பேர்ரோ
இவரும் நாராயணனைப் போலவே. ஒரு நாளைக்கு இவரின் டிரஸ்ட்டால் கிட்டத்தட்ட 400,000 குழந்தைகளுக்கு (உலகம் முழுவதும்) சாப்பாடு அளிக்கப்படுகிறது. இதன் ஐடியா வந்த பிண்ணனி சுவாரசியமானாது. எப்பொழுது போல தண்ணியடிக்க ஒரு பாருக்கு சென்ற மேக்னஸ்ஸுக்கு, தண்ணியடித்த பின் ஒரு குரல் கேட்கிறது, இப்படி தண்ணியடித்துக் கொண்டிருந்தால் போஸ்னியாவின் குழந்தைகளை யார் காப்பாற்றுவார்? தண்ணியால் வந்த தெளிவு...வேலையை விட்டுவிட்டு முழு நேர தொழிலாய் மக்களுக்கு உதவ முன் வந்தார்,  மேரி'ஸ் மீல்ஸ் என்னும் இவரின் டிரஸ்ட் பள்ளி செல்லும் குழந்தைகளின் வயிற்றுப் பசியை போக்குகிறது.
இவரின் வலை:

9. அகி ரா
தான் விளைத்த கண்ணி வெடியை தன் கையை கொண்டே அகற்றுவது. சிறிய எண்ணம்தான்...சவால் பெரிது.  சாதனையும் பெரிது. இது வரை 50,000 கண்ணிவெடியை பூமியிலிருந்து அகற்றி, மக்களை உயிர் தப்ப வைத்திருக்கிறார்.  இவரைப் பற்றி யாராவது அமெரிக்கப் படைகளுக்கு வகுப்பெடுத்தால் நல்லது.!!  கம்போடியாவில் சிறு வயதில் மிலிட்டரியில் இருந்திருக்கிறார். ஒரு கத்தி, ஒரு லெதர்மேன், ஒரு குச்சி...இவற்றை கொண்டே முக்கால்வாசி குண்டுகளை பூமியிலிருந்து அகற்றியிருக்கிறார் என்றால்? வெல்டன்!
இவரைப் பற்றிய பேட்டி:

10.டேன் வால்ரத்
காயப்பட்ட போர் வீரர்களுக்கு பைசா செலவில்லாமல்(Only Mortgagae Free!!)  வீடுகள் (அமெரிக்காவில்0 கட்டித் தருவதே இவரின் வேலை. அதுவே இவரின் சாதனை. அதுவும், உடலின் ஊனத்தை பொறுத்து அதன்படி சொகுசா ப்ளான் அமைத்து தருகிறார். (வீல்சேரின் தேவைகள் போன்று) இதுவரை ஒன்பது வீரர்களுக்கு இத்தகைய பரிசு கிட்டியுள்ளது, இன்னும் 10 வீடுகள் ரெடியாகிக் கொண்டே உள்ளன. அமெரிக்காவில் வீடு இப்படி கட்டி தருவது உண்மையில் பெரிய விஷயம்தான்.
இவரின் பேட்டி:

 • இவர்களில் ஒருவரை தேர்ந்தெடுக்க (கள்ள ஓட்டெல்லாம் வேண்டாம். ஒருவருக்கு மேலேயும் தேர்ந்தெடுக்கலாம்.
 •  சனி ஞாயிறு வேறென்ன வேலை, யாரை தேர்ந்தெடுக்கறதுன்னு கவனமா படிச்சு ஓட்டு போடுங்க.  
 • அதுவரை, டின் டின்டிடின் (பிரிட்டானியா பிரேக்)


.

11 comments:

 1. 1. நாராயணன் கிருஷ்ணன் எதோ ஒரு தமிழ் சேனலில் கூட இவரை பற்றி ரொம்ப நாள் முன்னாடியே போட்டார்கள்

  ReplyDelete
 2. பகிர்வுக்கு நன்றி.நிறைய தெரிஞ்சி வச்சிருக்கீங்க.

  ReplyDelete
 3. இந்த சி.என்.என் செய்தி நிறுவனமே ஒரு அமெரிக்காவின் சி.ஐ.ஏ.வின் ஒரு பிரிவு தான்.உலகத்தில் எங்கு என்ன நடக்குது என்றும்,எப்படி ஒரு நாட்டை கொள்ளையடிக்கலாம் என்றும்,எப்படி ஒரு நாட்டின் நிம்மதி எப்படி கெடுக்கலாம் என்பதுதான் இந்த நிறுவனத்தின் நோக்கமே.இவர்கள் இப்படி ஒரு நிகழ்ச்சி நடத்தி பத்தினி வேசமும் போடத்தான் செய்வார்கள். எல்லொரும் அப்படியெ நம்பிடுங்கள்.

  ReplyDelete
 4. நல்ல உழைப்பு.. இந்த கட்டுரைக்கும்.. கள்ள ஒட்டு போட முடிகிறது

  ReplyDelete
 5. மிக நல்ல பதிவு, முக்கியமாய் நாராயணன் கிருஷ்ணனின் சேவையைப் பற்றி அறிந்து கொள்ள முடிந்ததற்கு மிக்க நன்றி அன்னு!!

  ReplyDelete
 6. நல்ல பதிவு அன்னு.

  பகிர்வுக்கு நன்றி!

  ஓட்டும் போட்டாச்சு :)

  ReplyDelete
 7. @கோபிண்ணா,
  நன்றிங்ணா.

  @கார்த்திண்ணா,
  நமக்கும் தமிழ் தொலைக்காட்சிக்கும் ரொம்ப தூரமுங்ணா.. :)

  @ஆஸியாக்கா,
  அரசியல்னு வந்துட்டாலே தியாகங்கள்தானே(நேரத்தை இதுக்காக தியாகம் பண்றதை சொன்னேன் :)

  @ராதாகிருஷ்ணன் ண்ணா,
  முதல் வருகைக்கும், மறுமொழிக்கும் நன்றி.

  @தமிழ் மாணவன்ண்ணா,
  நான் இங்கே சி.என்.என்னை பாராட்ட சொல்லலைங்ணா. தன்னால முடிஞ்ச உதவிய நாள் பூரா, வருசம் பூரா செய்ய முடிவெடுத்து அதை செயல்படுத்தியும் காட்டற ஜனங்களைதான் பாராட்ட சொல்றேன். அவங்களுக்குதான் ஓட்டும் போட சொல்றேன். பரிசு பணம் இன்னும் பத்து பேருக்கு உதவியா இருக்கும் இல்லியா? அதை யோசிங்க. நான் ஏற்கனவே பதிவுல சொன்ன மாதிரி, எந்த ஊடகத்துக்கும் நான் சப்போர்ட் செய்வதில்லை,. முதல் அவ்ர்கைக்கும் பதிலுக்கும் நன்றிங்ணா.

  @பிரசன்னாண்ணா,
  நம்மாளுங்களை பற்றி தெரிஞ்சுதான் எவ்ளோ பேருக்கு வேணுன்னாலும் போட்டுக்க ந்னு சொல்லிட்டாங்க. அப்பவும் அதே தானா ?? :))

  @வானதி,
  தாங்களும் பகிருங்கள் இதை. இறுதியில் கிடைக்கும் பரிசு பணம் கண்டிப்பாக அரசியல்வாதிகளுக்கு செல்லாது என்பதாலும் இன்னும் இவர்களின் சேவையை விரிவாக்க முடியும் என்பதாலும், ஓட்டு போட வேண்டிய இடம் இது!!

  @மனோ அக்கா,
  ஆமாக்கா. இப்படியும் ஒருத்தர் அதுவும் அரசியல்ல ஊறி திளைக்கிற மதுரைல பலன் எதிர்பார்க்காம செய்யறாருன்னா உண்மைலயே பெரிய விஷயம்தான்.

  @சுந்தராக்கா,
  ஓட்டுக்கு, மறுமொழிக்கும் நன்றிங்கக்கா.

  வருகை தந்த அனைவருக்கும் நன்றி. :)

  ReplyDelete

உங்கள் கருத்துக்கள்...