மீண்டும் குழந்தைவதை...
news link:--http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=42327
கோவை : பணத்துக்கு ஆசைப்பட்டு வேன் டிரைவால் கடத்திக் கொல்லப்பட்ட சிறுவனின் உடல் இன்று மீட்கப்பட்டது. ஏற்கனவே மீட்கப்பட்ட சிறுமியின் சடலம் அடக்கம் செய்யப்பட்டது. இறுதி ஊர்வலத்திற்கு ஊரே திரண்டுவந்து கதறி அழுத காட்சி நெஞ்சைப் பிசைந்தது.கோவை ரங்கே கவுடர் வீதி காட்டன் ஷெட்டி தெருவை சேர்ந்தவர் ரஞ்சித்(38). அதே பகுதியில் ஜவுளிக்கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி சங்கீதா. ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த இவர்கள் கோவையிலேயே செட்டில் ஆனவர்கள்.
ஜெயின் சமூகத்தை சேர்ந்த இத்தம்பதியினரின் மகள் முஸ்கான் (10). மகன் ரித்திக் (7). காந்திபுரம் சுகுணா ரிப் பள்ளியில் 5ம் வகுப்பு, 2ம் வகுப்பு படித்து வந்தனர். தினமும் பள்ளிக்கு மாருதி ஆம்னி வேனில் சென்றுவந்தனர்.
கடந்த வெள்ளிக்கிழமை காலை 8 மணியளவில் பழைய வேன் டிரைவர் பொள்ளாச்சி அங்கலக்குறிச்சியை சேர்ந்த மோகன்ராஜ் (25) இச்சிறுவர்களை கடத்திச்சென்றார். ரூ.10 லட்சம் வரை பெற்றோரிடமிருந்து பணம் பறிக்கத் திட்டமிட்டார். ஆனால் அதற்குள் போலீசுக்கு புகார் போய்விட்டதையும், போலீசார் தேடுவதையும் அறிந்தார். பயம் ஏற்பட்டது. பிற்பகல் 3 மணியளவில் இரண்டு பேரையும் உடுமலை அருகே சர்க்கார்புதூர் பிஏபி வாய்க்காலில் தள்ளி கொலை செய்தார். அதன்பின்னரே போலீசாரால் மோகன்ராஜை கைது செய்ய முடிந்தது.
124 கி.மீ..நீளமுள்ள பி.ஏ.பி.வாய்க்காலில் 10 அடி உயரம், 20 அடி அகலத்திற்கு தண்ணீர் ஓடிக் கொண்டிருந்தது. சிறுவன், சிறுமியின் உடல்களைத்தேடும் பணி முடுக்கி விடப்பட்டது. இரண்டாவது நாளான நேற்று காலை 8 மணியளவில் பல்லடம் அருகே வாவிபாளையம் பகுதியில் சிறுமி முஸ்கானின் உடல் மட்டும் கண்டெடுக்கப்பட்டது. இது கொலை செய்ய தள்ளப்பட்ட இடத்திலிருந்து 77 கி.மீ.,தூரமுள்ளது.
இதையடுத்து, சிறுமியின் உடலை மட்டும் பிரேத பரிசோதனை செய்து பெற்றோரிடம் கொடுக்க போலீசார் ஏற்பாடு செய்தனர். ஆனால், குடும்பத்தினர் வாங்க மறுத்துவிட்டனர். இரண்டு பிள்ளைகளையும் உயிருடன் பார்க்க முடியாமல் போய்விட்டது. அவர்கள் 2 பேரின் சடலங்களையாவது மீட்டுத் தாருங்கள். ஒரே இடத்தில் இருவரையும் அடக்கம் செய்கிறோம்‘ என்று கூறி பெற்றோர் கதறினர்.
ஆனால் இன்றும் சிறுவனின் உடலைத் தேடும் பணி தொடர்ந்ததால் பெற்றோரை போலீசார் சமாதானப்படுத்தினர். சிறுமியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு காலை 7 மணியளவில் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.
வீட்டிற்கு கொண்டு வரப்பட்ட சிறுமியின் உடலுக்கு வடமாநிலத்தவர்கள், வியாபாரிகள், அரசியல் பிரமுகர்கள் மற்றும், மாணவியர் பொதுமக்கள் என திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர்.
சிறுமி முஸ்கான் இறுதி ஊர்வலம் ரங்கே கவுடர் வீதி, இடையர் வீதி, தாமஸ் வீதி, என்.எச்.ரோடு, கடைவீதி, பாலக்காடு ரோடு வழியாக ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் ரோட்டின் இருபுறமும் திரண்டு நின்று மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் காலை 9 மணியளவில் ஆத்துப்பாலம் பொள்ளாச்சி ரோட்டில் ஜெயின் சமூகத்தினருக்கு என தனியாக உள்ள மயானத்தில் சிறுமியின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
சிறுவன் உடல் மீட்பு :
இந்நிலையில், பொள்ளாச்சி கோமங்கலம் அருகே கெடிமேட்டுக்கும், குண்டலபட்டிக்கும் இடையே பிஏபி வாய்க்காலில் சிறுவன் உடல் கிடப்பதாக விவசாயி ஒருவர் இன்று காலை போலீசுக்கு தெரிவித்தார். ஏற்கனவே, பிஏபி கால்வாய் பகுதியில் தேடுதல் பணியில் ஈடுபட்டிருந்த மாநகர போலீஸ் துணை கமிஷனர் உமா தலைமையிலான குழுவினருக்கு இந்த தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக அவர்கள் அங்கு விரைந்து சென்று, காலை 11.30 மணியளவில் சிறுவன் உடலை மீட்டனர். அது ரித்திக் உடல்தான் என்பது உறுதி செய்யப்பட்டது. கொலை செய்யப்பட்ட இடத்திலிருந்து 20 கி.மீ.,தூரத்தில் சிறுவன் உடல் கிடைத்துள்ளது. போலீஸ் கமிஷனர் சைலேந்திரபாபு ரித்திக் உடலை கோவை அரசு மருத்துவமனை கொண்டு வந்து பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார். பிரேத பரிசோதனைக்குப் பின்னர் இன்று மாலை உடல் ஒப்படைக்கப்படவுள்ளது.
------------ *****திடுக்கிடும் தகவல்கள்*****--------------
பின்னர் நடந்த அதிரடி விசாரணையில் மற்றொரு டிரைவர் மனோகருடன் சேர்ந்து இந்த படுபாதக செயலில் துணிச்சலுடன் செய்து இருப்பது தெரிய வந்தது. நீண்ட நாட்களாக திட்டமிட்டே இந்த கடத்தல் நடந்திருப்பது இப்போது தெரிய வந்துள்ளது.
மோகன்ராஜ் கால்டாக்சி ஓட்டிய போது 2 குழந்தைகளிடம் மிகவும் அன்பாக பழகி இருக்கிறான். சாக்லேட் வாங்கி கொடுத்து இருக்கிறான். அவர்களும் அண்ணா என்றே அழைத்து இருக்கிறார்கள்.
குழந்தைகள் எத்தனை மணிக்கு வீட்டில் இருந்து வெளியே வருவார்கள். பள்ளிக்கு அழைத்துச் செல்லும் கால்டாக்சி எத்தனை மணிக்கு வரும் என்பதை மோகன்ராஜ் சில தினங்களாக கண்காணித்து இருக்கிறான். எனவே முன்னதாகவே திட்டமிட்டு குழந்தைகள் வீட்டில் இருந்து வெளியே வந்ததும் அவர்களை தான் கொண்டு வந்த கால்டாக்சியில் அழைத்துச் சென்றிருக்கிறான்.
கோவையில் இருந்து பொள்ளாச்சிக்கு சென்றதும், மற்றொரு டாக்சி டிரைவர் மனோகரனையும் தன்னுடன் டாக்சியில் ஏற்றிக் கொண்டான். உடனே மோகன்ராஜ் பின் சீட்டுக்கு சென்று உட்கார்ந்து கொண்டான். மனோகரன் கால் டாக்சியை ஓட்டி இருக்கிறான். சிறுமி அருகில் உட்கார்ந்ததும் மோகன்ராஜிக்கு செக்ஸ் வெறி தலைக்கு ஏற, சிறுமி முஸ்கினிடம் செக்ஸ் தொந்தரவு செய்யத் தொடங்கி இருக்கிறான். சிறுமி அதற்கு இடம் கொடுக்காமல் அலறவே, சிறுவன் ரித்திக்கும் சேர்ந்து குரல் கொடுத்திருக்கிறான். இதனால் டாக்சியை திரு மூர்த்தி மலைப்பகுதிக்கு திருப்பி இருக்கிறார்கள்.
அப்போது சிறுவன் ரித்திக்கை கை, கால், வாயை கட்டி டாக்சியின் பின் சீட்டுக்கு கீழே கிடத்தி இருக்கிறார்கள். அப்போது மோகன்ராஜ், மனோகரன் இருவரும் சிறுமியை கற்பழிக்கும் முயற்சியில் இறங்கினர். சிறுமியின் வாயை பொத்திக் கொண்டு இந்த இரக்க மற்ற செயலில் ஈடுபட்டுள்ளனர்.
இதற்கிடையே குழந்தைகளின் தந்தைக்கு போன் செய்து ரூ. 20 லட்சம் பறிக்க முயற்சி செய்தனர். ஆனால் போனில் தொடர்பு கொள்ள முடியவில்லை. எனவே சிறுமியிடம் மீண்டும் மீண்டும் பாலியல் தொல்லை செய்தனர்.
நிலைமை விபரீதம் ஆனதால் பணம் பறிக்கும் முயற்சியை மோகன்ராஜ் கைவிட்டான். இனி பணம் வாங்கினாலும், சிறுவனும், சிறுமியும் தன்னை மாட்டி விட்டு விடுவார்கள் என்ற பயம் ஏற்பட்டது. எனவே 2 பேரையும் கொலை செய்து விடலாம் என்று மோகன்ராஜும், மனோகரனும் முடிவு செய்தனர். முதலில் 2 குழந்தைகள் முகத்தையும் பிளாஸ்டிக் பைகளால் கட்டி கொலை செய்ய முயன்றுள்ளனர்.
அப்போது 2 பேரும் அலறி துடித்துள்ளனர். எனவே அந்த திட்டத்தை கைவிட்டு கால்வாய் மதகு அருகே அழைத்துச் சென்றனர். முன்னதாக சாணி பவுடர் கலந்த பாலை குழந்தைகளுக்கு கொடுக்க முயற்சி செய்துள்ளனர். அது கசப்பாக இருந்ததால் துப்பி விட்டனர். எனவே 2 குழந்தைகளையும் கொடூரமாக கால்வாயில் தள்ளி கொலை செய்துள்ளனர்.
இதற்கு, மனோகரனும் உடந்தையாக இருந்திருக்கிறான். சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்து இருப்பதால், அக்காள்- தம்பியை பணம் பறிக்கும் நோக்கத்தில் கடத்தினார்களா? அல்லது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்வதற்காக கடத்தப்பட்டார்களா? என்ற சந்தேகம் போலீசுக்கு எழுந்துள்ளது.
இதுபோன்ற ஏற்கனவே சிறுமிகளை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார்களா? இதற்கு முன்பு டிரைவர்கள் மோகன்ராஜ், மனோகரன் எங்கெங்கு வேலை பார்த்தார்கள் என்பது குறித்து மேலும் விசாரணை நடந்து வருகிறது.
2 குழந்தைகள் கொலை: கோவை சிறுவன் உடல் மீட்பு
பணம் பறிக்க குழந்தைகளை கடத்தி கொன்றேன்: வேன் டிரைவர் வாக்குமூலம்
கோவையில் கொடூரம்: ஜவுளி கடை அதிபர் மகன்-மகள் கடத்தி கொலை-வேன் ஓட்டுநர் கைது
மீண்டும்...மீண்டும் அதே... பலியாடுகள் மட்டும் மாறுகின்றன. மாறும் நிலை எப்போது??????????
.
உங்கள் பதிவு பார்த்தேன்.... எழுத்துக்கள் coded ஆகவே இருக்கிறது. என்னால் வாசிக்க முடியவில்லை. எனக்கு மட்டும் தானா என்றும் தெரியவில்லை.
ReplyDeleteஎன்னங்க பதிவு முழுக்க சைனீஸ் பாஷைல வந்துருக்கு...என்னாச்சு...
ReplyDeleteஎழுத்துரு மாறிக்கிடக்கு...எனக்கு மட்டுமா?? இல்ல எல்லாருக்குமா???
மன்னிக்கவும், தினத்தந்தியின் செய்தியைத்தான் பேஸ்ட் செய்திருந்தேன்...ஆனால் ஃபான்ட் பிரச்சினையினால் எல்லோருக்கும் தெரியவில்லை. இப்பொழுது மாற்றிவிட்டேன், குறிப்பிட்ட சித்ராக்காவிற்கும், பிரதாப் அண்ணாவிற்கும் நன்றி.
ReplyDeleteஇப்படி கடத்தி கொள்பவர்களை எல்லாம் நடு ரோட்டில் நிறுத்தி கல்லால் அடித்தே கொள்ள வேண்டும்...
ReplyDeleteசெய்தி பார்த்து நெஞ்சம் பதறி அப்பப்பா ,இந்த கொடுமைகாரர்களை என்னதான் செய்வது?
ReplyDeleteகுழந்தைகளை கொன்ற அந்த கயவர்களை தூக்கில் போட வேண்டும்
ReplyDeleteபாத்துப் பாத்து மனசு ஆறல அன்னு. எப்படித்தான் மனசு வருதோ.. இதுக்கெல்லாம் உடனேஉடனே கடும்தண்டனை வழங்கப்பட்டால்தான் பயன். ஒரேயடியா ரெண்டு புள்ளைகளையும் இழக்கிற கொடுமை... ஆண்டவா!!
ReplyDelete:(
ReplyDeleteவேதனையான செய்தி. பணம் என்னவெல்லாம் செய்ய தூண்டுகிறது என்பதை நினைக்கும் போது நெஞ்சு பதறுகிறது.
ReplyDeleteநானும் பார்த்தேன் அன்னு. என்ன சொல்வது.. எப்படி சொல்வது..?! என்னைப் பொறுத்தவரை இதுபோன்ற கொடுமைகளைத் தவிர்க்க பெற்றோர்கள் ஜாக்கிரதையாக இருப்பதால் மட்டும் முடியாது. அரசாங்கம் கடுமையான சட்டங்கள் கொண்டு வந்தால்தான் குற்றங்களை ஒழிக்க முடியும் அல்லது பெருமளவில் குறைக்க முடியும். அதுபோன்ற சட்டங்கள் வருவதற்கு மக்கள் அனைவரும் சேர்ந்து தீவிரமாக குரல் கொடுக்கவேண்டும். போராடவேண்டும். அரசாங்கத்துக்கு சொந்த புத்திதான் இல்லாவிட்டாலும் சொல் புத்தியாவது வரட்டும் :(
ReplyDeleteஅன்னு நீங்கள் மெயில் பண்ன சொன்னீர்கள் என்று, உங்க மெயில் ஐடி முடிந்தவரை உங்கள் தளங்களில் தேடிப் பார்த்தேனே.. எனக்குதான் கண்ணுக்கு தெரியலயான்னு புரியல. எப்படி உங்களுக்கு மெயில் பண்ண? சொல்லுங்கள்.
சே என்ன ஜன்மங்கள் இவர்கள்? இவர்களையெல்லாம் மனிதர்கள் என்று சொல்லுவதற்கே நா கூசுகிறது...!
ReplyDeleteVery sad. He should be hanged for these kinds of crimes. Very cute kids. May their soul rest in peace.
ReplyDeleteமனதை உலுக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கிறதே.... இதை தடுத்து நிறுத்த வழியே இல்லையா?
ReplyDeleteகொடுமை.
ReplyDeleteகொடுமை. இவர்கள் எல்லாம் மனித ஜென்மங்களே இல்லை. கனக்கும் மனம்.
ReplyDeleteநெஞ்சம் பதறவைத்த செய்தி இது.. குற்றவாளிகளை நடுரோட்டில் வச்சு சுட்டுத்தள்ளனும் ...
ReplyDeleteஇதைப் பற்றி என்ன சொல்வதென்றே தெரியவில்லை அன்னு சிஸ்டர். மிகவும் வருத்தமாக இருக்கிறது
ReplyDelete@சங்கவி,
ReplyDeleteஉங்க முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. அப்படி நம்ம சட்டம் இடம் தரவில்லையே. இந்த மாதிரி இப்பொழுது அடிக்கடி நடப்பதால் சட்டம் இதற்காகவாவது திருத்தி அமைக்கப்பட வேண்டும் என்பதே ஆசை :(
@ஆஸியாக்கா,
என்ன சொல்ல, சட்டம் ஒழுங்கா இருந்தா எல்லாரும் ஒழுங்க இருந்திருப்பாங்க இல்ல...அது இல்லாம போனதாலதான் இப்படி உயிர் பலி கொடுக்க வேண்டியிருக்கு :(
@ஃபாத்திமாக்கா,
நீங்கள் சொல்வது சரிதான். ஆனால் நம் நாட்டில் இப்படி நடக்காதே என்பதுதான் வேதனை. :(
@ஹுஸைனம்மா,
ஆமாக்கா. நானும் அதை நினைத்தே மனம் வெம்பிவிட்டேன். எப்படியோ மகனாவது வந்து விடுவான் என்றே மாலை வரை இருந்திருக்கிறார்கள். அவனின் சடலம் கிடைத்த பின்...அல்லாஹு அக்பர், என்னால் அந்த தாயின் மனதை நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை. பத்து மாதம் சுமந்து, ஒன்றுமில்லாத அந்த உருவத்துடன் பூமியில் பிறக்கும் வரைக்கும் சந்தோஷித்து, பேசி, அழுது, பிறந்த பின்னும் உயிரையே தந்து அவர்களுக்காகவே தன் விருப்பு வெறுப்புகளையும் மாற்றிக்கொண்டு....கடைசியில் இப்படி ஒரே நாளில் இரண்டு பாடை கட்டுவதை பார்க்கவா...சுப்ஹானல்லாஹ்...
@பிரசன்னா அண்ணா,
:( வேறென்ன செய்ய இயலும், பெரு மூச்சு விடுவதை விட?
@வெங்கட் ண்ணா,
ஆமா ண்ணா, அதிலும் அவர்கள் அந்த பிள்ளைகளை எப்படியோ கொலை செய்தே ஆக வேண்டும் என்று பல வழிகளிலும் துன்புறுத்தியதை எண்ணினால்...அப்பப்பா.... :((
@அஸ்மா,
சட்டம் கடுமையாக்கப் படுவதும் தேவையான் ஒன்று. அக்ரிமெண்ட்டில் சைன் வாங்கி பல இளம்பெண்களை ருசித்தவனை எல்லாம் ஆதாயத்துக்காக ஃப்ரீயாக விடுவதன் மூலம் , இப்படி அன்னாடங்காய்ச்சிகளுக்கும் தவறு செய்யவே தூண்டுகிறது அரசு. எல்லோருக்கும் இந்த விஷயத்தில் ஒரே மாதிரி தண்டனை கொடுத்தால்தான் சரியாகும். என்னுடைய 'View Profile'இல் என்னுடைய மெயில் ஐடி உள்ளது அஸ்மா.
அனைவரின் கருத்துக்கும் நன்றி.
@ராமசாமி ண்ணா,
ReplyDelete:(( இவர்களை எல்லாம் இன்னும் மனிதர்கள் என்றெண்ணி சட்டத்தின் தீர்ப்புக்காக நம்மை காக்க வைத்துள்ளார்களே அவர்களைத்தான் என்ன செய்வது என்று தெரியவில்லை உண்மையில் :(
@வாணிக்கா,
இஸ்லாத்தின் பார்வையில் குழந்தைகள் இறந்தால் அவர்களுக்கு நேரே சொர்ர்கம் என்றே உள்ளது. இந்த உலகிற்கு வந்து இப்படி முடிவடைந்த இவர்களின் மறுமையில் இறைவன் கருணை காட்ட வேண்டும் என்பதே என் து'ஆ. ஆமீன்.
@சித்ராக்கா,
மக்கள் பொறுப்பாக இருந்தால் மட்டுமே. சட்டமும், அரசும் கைஎடுப்பார்பிள்ளை போலவே உள்ள நிலையில் என்ன சொல்ல?
@ராஜவம்சம் அண்ணா,
கொடுமைதான் அண்ணா. ஒரே நேரத்தில் இரு குழந்தைகளையும் பரிகொடுத்த துக்கம் எந்த தாய்க்குமே நேரக்கூடாது... :(
@ஸ்ரீ ராம் அண்ணா,
ஆமா ண்ணா. படிக்கும் போது மனம் கனக்கிறது.
@செந்திலண்ணா,
உண்மை. எப்பொழுது மக்கள் முன்னலையில் இப்படி தண்டனைகளை விரவில் தர ஆரம்பிக்கிறார்களோ அப்பொழுதுதான் நமக்கெல்லாம் விமோச்சனம்.
@கோபிண்ணா,
தன் குடும்பத்தாரை மட்டுமே ஜென்ம ஜென்மத்திற்கும் காக்க தெரிந்த ஆள்பவர்கள் இருக்கும் வரை, நம்மால் பெரு மூச்சு விட மட்டுமே முடியும் :(
அனைவரின் கருத்துக்களுக்கும் நன்ரி. இவர்களின் தாய் தந்தை மனம் இயல்பாகிடவும், இன்னுமிருக்கும் வாழ்வை நல்முறையில் கழித்திடவும் இறைவனிடம் இறைஞ்சுங்கள். :(
ஞாயிறு அன்று செய்தியில் பார்த்தவுடன் மனம் பதறியது . ஒரு பக்கம் இவர்களை என்ன செய்யலாம் என்ற கோபம்? நம் குழந்தைகளை எப்படி இந்த மாதிரி கயவர்களிடம் இருந்து காப்பாற்ற போகிறோம் என்ற பயம் ஒரு பக்கம் :((
ReplyDeleteஇன்று கூட ஒரு சம்பவம் சென்னையில். பையன் மீட்கப்பட்டுவிட்டான்.ஆனால் பாதுகாப்பு கேள்விக்குறியாக மாறியுள்ளது.
ReplyDeleteசட்டங்கள் இயற்றுவது மட்டும் சரியான தீர்வாக இருக்கும் என சிலர் கூறுகின்றர்கள். அதைவிட அதிகமான ஒடுக்கு முறையும் வேண்டும்,.
பகீரென மனசைத் துடிக்க வைக்கும் பதிவு இது அன்னு!! நான் இன்னும் இந்த நக்கீரனைப் படிக்கவில்லை.
ReplyDeleteநாலு கால் மிருகங்களுக்கு இருக்கும் நேசமும் அறிவும்கூட இந்த மிருகங்களுக்கு இல்லை. இந்த மாதிரி மனிதர்களுக்கு மிக்க கடுமையான தண்டனை தர வேண்டும். பெற்றோர்களும் மிக மிக கவனமாக இருக்க வேண்டிய காலம் இது.
நானும் படிச்சேங்க அன்னு..
ReplyDeleteநம்ம வீடுகள்லயும் குழந்தைகள் இருக்கு.. இதெல்லாம் படிக்கறப்போ பயமாவும் இருக்கு..
ரொம்ப பயங்கரமான விசயம்.. இந்த மாதிரி பண்றவங்களைக் கட்டி வைச்சி கல்லால அடிச்சே கொல்லனும்..
@கார்த்தி ண்ணா,
ReplyDeleteநம்முடைய பாதுகாப்பில்தான் கவனமாக இருக்க வேண்டும். வெளியாட்களிடம் நாம் பழகும் முறையும், குழந்தைகளை யாரும் அணுக நாம் அனுமதிக்கும் விதமுமே குழந்தைகளுக்கு உணர்த்தும், எவ்வளவு தூரம் யாரிடம் பழகலாம் என்பதை.
@ஜெகதீஸ்வரன் அண்ணா,
முதல் வருகைக்கு நன்ரி. அவர்களிடம் பணம் இருந்ததால் பிரச்சினையில்லாமல் பையன் திரும்ப கிடைத்துவிட்டான். அதே சென்னையில் ஒரு சிறுமி பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாகி, இன்று வரை ஊடகங்கள் கூட தன் முகத்தை அவ்விடம் திருப்பாமலே காரியம் சாதித்துள்ளன. ஏன்? இங்கு பணமில்லை. அவ்வளவுதான்.
@மனோ அக்கா,
ஆமாம். நாலு கால் பிராணிகள் கூட மற்ற பிராண்களிடம் அன்பாய் நடந்து கொள்கின்றன. தன்னை தாக்கக்கூடிய ஆற்றல் இருப்பதை அறிந்தாலும். ஆனால் மனிதன்தான் பகுத்தறிவை பெட்டியில் வைத்து பூட்டிவிட்டு மிருகமாகின்றான். என்ன செய்ய??
@பாபு ண்ணா,
மிக மிக கவனமாக இருங்கள். உறவினர் முதற்கொண்டு, வெளியாட்கள் வரை நீங்கள் கொடுக்கும் சுதந்திரம்தான் பிள்ளைகளின் பாதுகாப்பையும் சீரழிக்கும். எச்சரிக்கை தேவை!!
வருகை தந்து, பின்னூட்டமும், ஓட்டும் இட்ட அனைவருக்கும் நன்றி.