பாபாசாகேப் அம்பேத்கர்

Wednesday, December 01, 2010 Anisha Yunus 13 Comments




“எனக்குத் தாயகம் உண்டு என்று நீங்கள் கூறுகிறீர்கள். ஆனால், நான் மீண்டும் கூற விரும்புகிறேன், எனக்கு அது இல்லை… நாய்கள், பூனைகளைவிட நாங்கள் மோசமாக நடத்தப்பட்டால், குடிதண்ணீர் பெறவும் உரிமை இல்லை என்றால் சுயமரியாதையுள்ள எந்த தீண்டப்படாதவன் இந்த நாட்டைத் தன் நாடாகக் கருதுவான்? இந்த நாடு எங்களுக்கு அளித்த உதவி, இன்னல்களையும் அநீதிகளையும் மலைபோல் எங்கள் மீது சுமத்தியதே ஆகும். யுகயுகமாகக் காலால் மிதித்து நசுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட என் மக்களுக்கு மனித உரிமைகளுக்காக நான் செய்யும் முயற்சிகளின் காரணமாக இந்த நாட்டுக்கு எவ்விதத் தீங்கும் நேர்ந்துவிடாது.”
:- 1931-ம் ஆண்டு மகாத்மா காந்தியைச் சந்தித்தபொழுது டாக்டர் அம்பேத்கர் முன் வைத்த கருத்துகள் இவை.


டாக்டர் அம்பேத்கரின் இந்த சொற்களுக்கு இன்றும் அர்த்தமோ, அதனடியில் இருக்கும் வலியோ கொஞ்சமும் மாறவில்லை. அன்றும் அவரின் பேச்சும், படமும் ஓட்டுக்களை எண்ண பயன்பட்டன. இன்றும் அவ்வாறே. அவரின் வாழ்க்கையை படமாக எடுத்தும் அது படும் பாட்டை இங்கே தெரிந்து கொள்ளுங்கள். என்னைப் பொறுத்தவரை, தனியாளாக நின்று போராடிய அவரின் முன் செல்வாக்கு பெற்று சுற்றமும் புறமும் சூழ வாழ்ந்த காந்தியடிகள் அவ்வளவு பெரிய தலைவராக தெரியவில்லை. சுதந்திரம் பெற்ற நாளிலிருந்து இன்று வரை தத்தம் குடும்பங்களுக்கு மட்டுமே சொத்து சேர்க்க முற்படும் பிற  so called 'தலைவர்கள்’ முன் அம்பேத்கர் போற்றப்பட வேண்டியவர். இந்த பதிவு, வலையுலகம் முழுவதும் உள்ள அன்பர்கள் இந்த படத்திற்கு தரவேண்டிய விளம்பரத்திற்காகவே. வணிக ரீதியில் தயாராகும் படங்களுக்காக விமர்சனம் எழுதி ஆவலை தூண்டிய, தூண்டும் எல்லா சகோதர சகோதரிகளையும் அழைக்கிறேன், இந்த படத்திற்கும் முக்கியத்துவம் கொடுங்கள். குடும்பத்துடன் சென்று கண்டு களியுங்கள். இவரின் வாழ்க்கையை அருகிலிருந்து பாருங்கள், அனைவருக்கும் கூறுங்கள். செய்வீர்களா நண்பர்களே??

 

மேலதிக தகவல்களுக்கு : உண்மைத்தமிழனின் வலைப்பூ.



.

13 comments:

  1. நல்ல பதிவு அன்னு.

    இந்தப் படம் பார்ப்பதற்காகவே ஒருமுறை சென்னை போகலாம் என்று தோன்றுகிறது

    ReplyDelete
  2. நல்ல பகிர்வு அன்னு.

    ReplyDelete
  3. //செய்வீர்களா நண்பர்களே??//

    கண்டிப்பா செய்றோம் அன்னு.

    ReplyDelete
  4. நல்லதொரு பகிர்வு அன்னு.

    அன்னு எப்படியிருக்கீங்க நலமா?

    ReplyDelete
  5. அருமை . தேவையான கட்டுரை . வீடியோ பிரமாதம்

    ReplyDelete
  6. நல்ல பகிர்வு.

    ReplyDelete
  7. நல்ல சிந்தனை தரும் பதிவு அன்னு!!!

    கண்டிப்பா இந்த படம் பாக்கணும்!!!!

    ReplyDelete
  8. நண்பரே!

    பகிர்வுக்கு நன்றி.

    என வலைப்பக்கத்தில் அம்பேத்கர் படத்திற்கான போஸ்டர் வெளியிட்டு இருக்கிறேன். தங்கள் வலைப்பக்கத்தில் அதனை விட்ஜெட்டாக்கி பலருக்கும் செய்திகள் செல்ல உதவும்படி கேட்டுக் கொள்கிறேன்.

    ReplyDelete
  9. நல்ல பகிர்வுங்க..

    கண்டிப்பாகப் பார்க்க முயற்சிக்கறேங்க..

    ReplyDelete
  10. சமூகப்பகிர்வு.
    +1

    எந்த படமா இருந்தாலும் netல தான் பார்க்கனும் இங்கு தியேட்டர் இல்லை.

    ReplyDelete
  11. தோழரே,
    நன்பர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பிவிட்டேன், நாளை காலை Escape திரைஅரங்கில் பார்க்க போகிறேன், பார்த்துவிட்டு பதிவு போடுகிறேன்.

    தோழமையுடன்,
    மோகன்

    ReplyDelete
  12. நல்ல தகவல்.. பகிர்வுக்கு நன்றி :-))

    ReplyDelete

உங்கள் கருத்துக்கள்...