தாய்மை எனப்படுவது யாதெனில்... (இறுதி) + அவார்டு, யாருக்கு?

Saturday, February 12, 2011 Anisha Yunus 35 Comments


லிஃப்ட்டுல ஏறி 4வது மாடி போயாச்சு. போய் சேர்ந்த பின், ரிசப்ஷன்ல தேவையான தகவல்களை சொல்லிட்டு நர்ஸ் வந்தா ரெண்டு நிமிஷம் காத்திருக்க சொல்லுங்க, நான் தொழுதுக்கறேன்னு சொல்லி ரிசப்ஷன்லயே லொஹர் தொழுதாச்சு. அல்லாஹ்விடம் துஆ கேட்டு முடிக்கவும் என்னை பாத்துக்க வேண்டிய நர்ஸம்மா வந்து கூப்பிட்டு போனாங்க. போயி வழக்கம் போல ரத்தக் கொதிப்பு, எடை, சுவாசம் எல்லாம் டெஸ்ட் செஞ்சிட்டு ஆடைகளை மாற்றி ஹாஸ்பிடல் கவுன் தந்துட்டாங்க. அப்புறம் என்னையும் இன்னும் ரெண்டு மூணு மெசினையும் ஒன்னா வயர் வெச்சி பிணைச்சிட்டு போயிட்டாங்க. பசி வேற வயித்த கிள்ள ஆரம்பிச்சிடுச்சு. காலைல இருந்து எதுவும் ஆகாரம் இல்ல, மணி 2 ஆகப் போகுது. 2 மணிக்கு எல்லா நர்ஸும், டாக்டருக்கு படிக்கற ஸ்டூடண்ட்ஸ் எல்லாம் ஆஜர். டாக்டர் ஸ்டான்சில் மட்டும் வரலை. விசாரிச்சப்ப அவரோட வண்டி டயர் பழுதானதால கொஞ்சம் கழிச்சு வருவாருன்னாங்க. அதுக்குள்ள ஜுஜ்ஜூவை ஹன்னாஹ் வீட்டுல விட்டுட்டு வந்துட்டார். அவரும் எதுவும் சாப்பிடலை. 2:10க்கு ஒரு டாக்டரம்மா வந்தாங்க. அவங்க இந்த ப்ரொசீஜரைப் பத்தி மறுபடியும் விளக்கிட்டு, எனக்கு இப்ப ஒரு ஊசி நரம்புல போடுவாங்கன்னும், அந்த மருந்து இதயத்தை பலமா ஓட வைக்கும்னும், அதனால பயப்பட வேண்டாம்னும் சொன்னாங்க.சரின்னு சொன்ன பின் வேண்டிய ஃபாரங்கள்ல கையெழுத்து வாங்கிட்டு நரம்புல ட்ரிப்ஸுக்கு ஏத்தற மாதிரி செட் பண்ணாங்க. முதல் தடவை ஒரு நர்ஸ் செய்யறப்ப தவறா போயிடுச்சு, எனக்கு பயங்கரமா வலிக்குதே ஒழிய சரியா மருந்து எறங்கலை. அப்புறம் மணிக்கட்டுல இன்னொரு எடம் பார்த்து இன்னொரு வயசான நர்ஸம்மா வந்து போட்டாங்க. போட்டு ரெண்டே நொடிதான், இதயம் வேக வேகமா துடிக்குது, எனக்கு மூச்சு விட சிரமமா இருக்கு. டாக்டரம்மா கிட்ட சொல்லலாம்னா அவங்க சர்வ சாதாரணமா மானிட்டரை பாத்துகிட்டு இருக்காங்க. எனக்கு பேசவும் முடியலை, இதயம் துடிக்கற வேகத்துக்கு மூச்சும் திணறுது. எப்படின்னா, தொட்டபெட்டா சிகரத்துல நின்னு பாத்துகிட்டிருக்கற உங்களுக்கு திடீர்னு கால் கொஞ்சம் ஸ்லிப்பானா எப்படி இதயம் துடிக்கும், அதை விட வேகமா..யப்பா..ரெம்ப கஷ்டமாவும் இருந்தது. அம்மியை ரெம்பவே மிஸ் பண்ண நிமிடங்கள் அது.

பின்ன 2:15க்கு டாக்டர் ஸ்டான்சில் வந்துட்டார். அவர் வந்தவுடன் மறுபடியும் ஒரு தடவை என்னவெல்லாம் செய்வாங்கன்னு சொல்லிட்டு, இப்போ வயித்து மேல(பாப்பா தலைப்பக்கம்) அவர் ஒரு கை, அடி வயித்துல(பாப்பா இடுப்பு பக்கம்) அந்த டாக்டரம்மா ஒரு கை வப்பாங்க, வச்சு தள்ள ஆரம்பிப்போம், எப்ப முடியலையோஅப்ப சொல்லுங்க நிறுத்திடறோம்னு சொன்னார். என்னுடைய ரெண்டு கையவும் கட்டிலுக்கு அடியில் ஒரு பிடிப்பு இருக்கு அதை பிடிச்சிக்குங்கன்னு சொல்லிட்டு ஒரியாக்காரரை என் தலைமாட்டுல நிக்க சொல்லிட்டார். அவ்ளோதான், இப்ப ஸ்டார்ட் செய்றோம்னு சொல்லிட்டு தள்ள ஆரம்பிச்சாங்க. அதுவரை வாழ்க்கைல அந்த பிட்ச்சுல நான் கத்தியது இல்ல. உள்ள இருக்கற  pancreas, kidney, liver  எல்லாத்தையும் எங்கெங்கே இருக்குன்னு தெரிஞ்சுக்கற மாதிரி வயித்துல எல்லாமே உருளுது. என்னால நார்மலா சுவாசிக்கவும் முடியல, வலியவும் பொறுக்க முடியல, வலிங்கறதை விட, ஒரு அழுத்தம் /  Pressure,  அப்படின்னு சொல்லலாம். ரெண்டே நிமிஷம்தான். அந்த ரெண்டு நிமிஷத்துல வஸியத்தே நான் ரெடி செஞ்சிட்டேன். இதோ இப்ப உயிர் போயிடும்னு தோணிய நிமிஷம் அது. மலக்குல் மவ்த் சிரிச்ச முகத்தோட வருவாங்களா இல்ல... அப்படின்னு பயந்தும் போயிருந்த நிமிஷம் அது. சுப்ஹானல்லாஹ். நான் போதும், வேண்டாம்னு சொல்ல நினைக்கறப்ப அவங்களே நிறுத்திட்டாங்க. மானிட்டர்ல ஒரு 2 நிமிஷம் மறுபடியும் வெயிட் செஞ்சு பாத்தாங்க, இவன் சொல்பேச்சு கேக்கற பயலா இல்லையான்னு. ஹனீஃபா மறுபடி மேல வரலைன்னவுடனே, எல்லாம் சரியாகிடுச்சு, எதும் சாப்பிடறதுன்னா சாப்பிட்டுக்குங்க, நாம் எபிடோசின் குடுத்து வலியை ஆரம்பிக்கலாம், ஏன்னா ஏற்கனவே டெலிவரி டேட்டுக்கு மேல ரெண்டு நாள் ஆயிடுச்சு. இதுக்கு மேல வெயிட் செய்ய வேண்டாம்னு சொல்லிட்டார். டாக்டர் டேக் கேர்னு சொல்லிட்டு போனதுதான் தெரியும் மறுபடி மயக்கமா, இல்ல சோர்வால வந்த தூக்கமான்னு தெரியலை. ஒரு அஞ்சு நிமிஷம் ஒலகம் மறந்து கண் மூடியாச்சு. அந்த ப்ரொசீஜர் முடிஞ்சவுடனே என்னை வேற ரூமுக்கு மாத்தணும். ஆனா நான் தூங்கிட்டு இருக்கறதை பார்த்த நர்ஸ், சரி எழுந்ததும் கூப்பிடுங்கன்னு சொல்லிட்டு போயிட்டாங்க. முழிச்ச பின் மறுபடியும் வேற ரூம்.

இன்னொரு நர்ஸம்மா, கொஞம் வயசானவங்க என்னை இப்ப வேற ரூமுக்கு கொண்டு போயி, கீழ இருக்கற கஃபேக்கு எப்படி ஃபோன் செய்யணும், எப்படி ஆர்டர் செய்யணும்னு எல்லாம் சொல்லிட்டு, ஐ.வி. கனெக்‌ஷன் குடுத்துட்டு போயிட்டாங்க. அதுலதேன் எபிடோசின் ஏத்துவாங்க. இவருக்கும் எனக்கும்  Mac n Cheese, Veg fried rice  சொல்லிட்டு அம்மாக்கு மறுபடியும் ஃபோன் செஞ்சு எல்லாம் நல்லபடியா நடந்ததுன்னு சொல்லிட்டு அவங்களுக்கும் ஆறுதலை தந்திட்டு கொஞ்சம் ரிலாக்ஸானோம். அதுவரை அம்மா அப்பாவும் தூங்காம இரவு வேர தொழுகை / தஹஜ்ஜத் தொழுது து’ஆ அழுதழுது கேட்டுட்டு இருந்திருக்காங்க. அம்மிதான் பக்கத்துல இருக்க முடியலையேன்னு அழுகை. அவங்களையும் சமாதானப்படுத்தியாச்சு. கொஞ்ச நேரத்துல சாப்பாடும் வந்தது, சாப்பிட்டபின் நர்ஸம்மா எபிடோசின்னையும் ஏத்திட்டாங்க. 4 மணிக்கு டாக்டர் ஸ்டான்சிலும் வந்து எல்லாம் நல்லபடியா போகுதா குழந்தை அதே பொசிஷன்ல இருக்கான்னு எல்லாம் பார்த்துட்டு போயிட்டார். அதன் பின் மறுபடியும் அஸ்ர், மக்ரிப், இஷா எல்லாம் 6:30 மணிக்கு முடிஞ்சிடுச்சு. இவரும் மசூதிக்கு போயிருந்தவர் வந்திட்டார். (இதெல்லாம் எழுதறப்ப, தோபி கட்ன்னு புதுசா வந்த படத்துல ஒரு முஸ்லிம் பொண்ணு அவங்க அண்ணனுக்கு வீடியோ ரெக்கார்டு செய்வாங்களே அந்த ஞாபகம் வருது!! :)

எட்டு மணி போல மறுபடியும் வந்த டாக்டர் ஸ்டான்சில், முன்னேற்றம் எதையும் காணம், எபிடோசின்னை அதிகமாக்குங்கன்னு போயிட்டார். அதிகமாக்கிய ஒடனே பயங்கர வலி, அதுவும் 2 நிமிசத்துக்கு ஒரு தடவை, நர்ஸம்மா டாக்டர்கிட்ட சொல்லவும், வேறெதோ மருந்தை சேர்த்தி அதை கொஞ்சம் கொறைச்சாங்க. மறுபடியும் கொஞ்சம் ரிலாக்ஸாச்சு. அம்மி, அப்பாவை ஸ்கைபில வர சொல்லி பாத்துகிட்டேன். அம்மியும் கொஞ்சம் என்னை பார்த்த பின் ரிலாக்ஸானாங்க. அப்போ அந்த நர்ஸம்மா முடிஞ்சு வேற ஒரு நர்ஸ் ஜெர்மின்னு பேரு. அந்த பொண்ணு வந்தாங்க. அவங்களும் சந்தோஷமா எங்க அப்பா அம்மாகிட்ட பேசினாங்க. 4 டாக்டரம்மா, 2 நர்ஸு, 2 மெடிக்கல் ஸ்டூடண்ட் எல்லாருமே 12 மணிக்குள்ள பேசிட்டு போயிட்டாங்க. அம்மி அப்பாவையும் போயிட்டு காலைல நெட்டுக்கு வாங்கன்னு சொல்லியாச்சு.

அதுவரை எல்லாம் சரியா போச்சு. 1 மணிக்கு வந்த டாக்டரம்மா ரெண்டு பேர் என்னை சோதிச்சிட்டு, முன்னேற்றம் எதிர் பார்த்த அளவுக்கு இல்லை. அதுவுமில்லாம குழந்தையோட இதய துடிப்பு திடீர்னு வெறும் 40ல போயிகிட்டு இருக்கு (150 கிட்ட இருக்கணும்!!), அதனால எபிடூரல் எடுத்துக்குங்கன்னு சொன்னாங்க. அதே நேரம் NICU (NeoNatal Intensive Care Unit)ல இருக்கற டாக்டர்ஸ்க்கும் தகவல் சொல்லி, ஒரு 10 பேர் வந்து பக்கத்து ரூமல் காத்திட்டிருக்காங்க. பிள்ளைக்கு மேற்கொண்டு எதும் ஆயிட்டா ஒடனே பாக்கறதுக்கு. எபிடூரல் எடுத்த பின் அல்ஹம்துலில்லாஹ் இதய துடிப்பு கொஞ்சம் சீராயிடுச்சு. ஆனால் தொப்புள் கொடி லைட்டா சுத்தி இருந்துச்சு. அது, திருப்பி விட்டதால வந்திருக்கலாம், பட் பயப்படற அளவு இல்லைன்னு சொல்லிட்டாங்க. எபிடூரல் எடுத்த பின் கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகவும் செஞ்சேன். 5 மணி வரை எல்லாம் சுபம், 5 மணிக்கு டாக்டர் ஸ்டான்சில் செக் பண்ண வந்தார். அப்ப ஹனீஃபாவோட இதய துடிப்பு 200ஐ தொட்டுகிட்டு இருக்கு. மேற்கொண்டு எதுவுமே பேசலை டாக்டர். மறுபடியும் ஃபாரம் எல்லாம் வந்தது. என்ன காரணம்னு தெரியலை. ஆனால் குழந்தையோட இதய துடிப்பு இப்படி மேல கீழ போறது நல்லதில்லை, உங்களுக்கு 8செமீ தான் டைலேட் ஆகியிருக்கு. இன்னும் 5 மணி நேரமாவது உங்களுக்கு ஆகும் இயற்கையா பிள்ளை பிறக்கணும்ன்னா ஆனா அப்படி பிறக்கற குழந்தைக்கு மூளை வளர்ச்சி சரியிருக்காது. ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டால்தான் குழந்தைக்கு இதய துடிப்பு தாறுமாறாகும். ஏன் இப்படின்னு ஆராய்ச்சி செய்ய நேரமில்ல, என்னை பொறுத்தவரை இன்னும் 5 நிமிஷத்துல குழந்தை வெளில வந்தாதான் நல்லதுன்னு சொல்லிட்டார். எனக்கு ஒலகமே இருண்டு போன  மாதிரி ஒரு ஃபீலிங். இந்த ஆபரேஷனை முதல்லயே நான் செஞ்சிருப்பேனே, எதுக்கு இவ்வளவு ரிஸ்க் எடுக்கணும்னெல்லாம் மனசுல தோணுது. இவரும் மூஞ்சிய தொங்கப்போட்டுட்டு நிக்கறார். டாக்டர் எல்லா ஸ்டாஃபுக்கு ஆபரேஷன் ரூமை ரெடி பண்ண சொல்லிட்டிருக்கார். எல்லாரும் என் கையெழுத்துக்கு மட்டும்தான் காத்துகிட்டிருக்காங்க. கண்ணுல தண்ணியோட கையெழுத்தும் போட்டாச்சு. வேற வழி?

மனிதர்களுக்கு அல்லாஹ் தன் ரஹமத்தில் (அருள் கொடையில்) இருந்து ஒன்றைத் திறப்பானாயின் அதைத் தடுப்பார் எவருமில்லை, அன்றியும் அவன் எதைத் தடுத்து விடுகிறானோ, அதன் பின், அதனை அனுப்பக் கூடியவரும் எவரும் இல்லை மேலும் அவன் யாவரையும் மிகைத்தவன்; ஞானம் மிக்கவன்.( ஃபாத்திர்: 2)
அப்புறம் எபிடூரலை அதிகமாக்கிட்டே என் கால்களை அசைத்து பாக்க சொல்லிட்டிருந்தாங்க. ஆப்ரேஷன் தியேட்டர் வரை அப்படி அசைக்க முடிஞ்சது. அதன் பின் நாந்தான் அசைக்க நினைக்கறேனெ ஒழிய கால் நகர மாட்டேங்குது. பின் இங்க குத்துதா அங்க குத்துதான்னு மரத்துப்போன வயித்துமேல ஒரு நர்ஸம்மா என்னை ஊசியால குத்தி குத்தி பாத்துகிச்சு. பின்ன மருத்துவமனைல வர்ற ஸ்பிரிட் மாதிரி வாசனையிருக்கற எதையோ என் வயிறு முழுக்க தடவுனாங்க. ரெண்டு கைகளையும், கால்களையும் வெல்க்ரோ டேப் வெச்சு என்னை நகர முடியாம செஞ்சாங்க. என்னுடைய தலை மாட்டுகிட்ட ஒரு சேர் போட்டு இவருக்கு தந்திட்டாங்க. என்னுடைய நெஞ்சுக்கு நேரா ஒரு திரைச்சீலை போட்டு ஆபரேஷனை மறைச்சிட்டாங்க. கொஞ்ச நேரம் அவங்க பேசறேதெல்லாம் கேட்டுட்டு இருந்தேன். விஜயகாந்த் படங்கள்ல  வர்ற மாதிரி சிசர்ஸ் குடு, அது குடு, இது குடுன்னு கேட்டுகிட்டிருந்தார் டாக்டர், நர்ஸெல்லாம் ஓடி ஓடி ஒழைச்சுகிட்டிருந்தாங்க. பின்ன ஒரு 2 நிமிஷம் கழிச்சு சள புள சள புளன்னு கொழம்பு கொதிக்கற மாதிரி சத்தம். நானே புரிஞ்சுகிட்டேன், சரி நம்மளை கிழி கிழின்னு கிழிச்சிட்டாங்கன்னு. பின்ன கர கரன்னு சத்தம். பெரியண்ணன் பூமிக்கு வந்திட்டார். ஜெர்மி நர்ஸ் அது வரை என் தோள்களை ஆதரவா பிடிச்சிட்டிருந்தவங்க காதுல சொன்னாங்க. எல்லாம் நல்லபடியா முடிஞ்சது, பிள்ளை வெளில வந்திட்டான்னு. அப்புறம் இவரை கூட்டிட்டு போயி அவர் முன்னாடியே குழந்தைய தண்ணி ஊத்தி, எடை போட்டு காமிச்சு, பாதுகாப்பு வளையங்களை மாட்டிவிட்டு எனக்கும் காட்ட கூப்பிட்டு வந்தாங்க. அப்புறம் அவர்கிட்ட சொல்லி பேரீச்சையை சப்பி அதை தடவி விடுங்கன்னு சொல்லிட்டு, தொழுகைக்கு குடுக்கற பாங்கையும் ஓதிட ஞாபகப்படுத்தினேன். அவரும் அதன் பின் நர்ஸரிக்கு போயிட்டார்.

பின்ன சில நிமிஷங்கள்ல ஸ்டேப்ளர் அடிக்கற சத்தம் கேட்டது, சரி தெச்சு முடிச்சிட்டாங்கன்னு நினச்சிட்டேன். பின் திரைச்சீலை எல்லாம் நகர்த்திட்டு டாக்டர் ஸ்டேன்சில் மறுபடியும் வந்து ஆறுதல் சொன்னாரு. என்னதான் நாம் ஒரு முடிவெடுத்தாலும், கடைசி நிமிடத்துல குழந்தைக்கு ஏதாவதுன்னா நாம் ஒடனே சில ஸ்டெப்ஸ் செய்ய வேண்டியிருக்கு, அதனால மனசை போட்டு குழப்பிக்காதீங்கன்னு போயிட்டார்.அதுக்கப்புறம் வந்துச்சு பாருங்க ஒரு குளிர், டெல்லில காலைல 5 மணிக்கு கூட அப்படி குளிராது. கைகளெல்லாம் வெட வெடன்னு நடுங்குது என்னால இழுக்க முடியல. என்ன ஆகுதுன்னு கேக்கற நர்ஸுக்கு சொல்ல முடியலை. கால்களும் இன்னும் டேப்லயே இருக்கு. குளிருதுன்னு சொல்றதுக்குள்ள நாக்கு குழறுது. நான் செத்தேன்னு நினச்சது ரெண்டே எடங்கள்லதான். ஒன்னு, அந்த ப்ரொசீஜரப்ப, இன்னொன்னு இந்த குளிரப்ப. இந்த மாதிரி நடப்பது சாதாரணம்ன்னு நினைக்கறேன். ஏன்னா குளினு சொன்னவுடனே நர்ஸ் ஜெர்மி, எங்கிருந்தோ சுட சுட, ஆவி பறக்கற பெட்ஷீட்டுக்கள் கொண்டு வராங்க. கிட்டத்தட்ட 10 பெட்ஷீட் போட்டாச்சு...எல்லாத்துல இருந்தும் ஆவி வெளியாகுது, இருந்தும் குளிர் அடங்கலை. டாக்டர் ஏதோ மாத்திரை போட சொன்னார். போட்டும் நிக்கலை. குளிர்ல இங்க நாங்க போடற கோட்டெல்லாம் அவர் கொண்டு வந்து போட்டுவிட்டார், எதுவுமே வேலைக்கு ஆவலை. குழந்தை 6:24க்கு பிறந்தான். 8:30 வரை இந்த கஷ்டத்தை சகிக்க முடியாம திணறி திணறி சகிக்க வேண்டியிருந்தது. 8 மணிக்கு நர்ஸ் ஜெர்மிக்கு ட்யூட்டி முடியறப்ப அவங்களோட ஏதோ ரெக்கார்டுல எழுதக்கூட நேரமில்லை. எங்ககிட்ட அவசர அவசரமா சொல்லிட்டு கிளம்ப வேண்டிய நிலமை. அந்தளவு என்னை பாக்க வேண்டியிருந்தது. பின் 8:30 மணிக்கு மெதுவா தூக்கம் வருது. அப்பதான் ஒரியாக்காரர் எங்கேன்னு கேட்டா பக்கத்து பெட்டுட தூங்கிட்டிருக்கார். பார்த்து, டாக்டர் யாரும் வந்து அவருக்கும் ஊசி போட்டுரப் போறாங்கன்னு சொல்லிட்டு தூங்கிட்டேன். பின் 10 மணிக்கு அம்மி ஃபோன் செய்யறப்பதான் நடந்த எல்லா விஷயமும் சொன்னோம். கேட்டவுடனே அவங்களுக்கு அங்க ஐவி ஏத்த வேண்டியதாயிடுச்சு. எங்க மாமிக்கு சொன்னவுடனே அவங்களும் அழுகை. ரெண்டு பேரும் தனியா இருந்துட்டு இவ்ளோ கஷ்டப்படணுமான்னு. பின்ன மூணு நாள் ஹாஸ்பிடல் வாசம், ஜுஜ்ஜூவுக்குதான் கஷ்டம். தினம் கொஞ்ச நேரம் வந்து பாத்திட்டு போறப்ப, போக மாட்டேன்னு அழுகை, அப்படி இப்படின்னு தேத்தி அவர் கொண்டு போயி விட்டாலும் காரிலிருந்து எறங்க மாட்டேன்னு அழுகை. ஹன்னாஹ் வீட்டிலும் ஒரு நாள் சாயந்திரம் முழுக்க யாருடனும் பேசாமல், விளையாடாமல் ஹன்னாஹ் வீட்டுக்காரர் மடியிலேயெ அழுதழுது தூங்கியிருக்கான். எப்படியோ இதெல்லாம் கழிஞ்சுது. அல்ஹம்துலில்லாஹ். இப்ப ரெண்டு மாசம் ஆகற ஹனீஃபா சிரிச்சு சிரிச்சு வலியெல்லாம் மறக்க வெச்சிட்டிருக்கார். :))


...
ஹனீஃபாவும், ஜுஜ்ஜூவும் :)
...
...

இருங்க இருங்க போயிடாதீங்க. இந்த இவ்வளவு கஷ்டமான வேளைகளிலும் அடிக்கடி எனக்கு மெயில் செஞ்சு, மெயில்ல கர்ப்பிணிப் பெண்களுக்கான டிப்ஸ், ரெசிபி எல்லாம் தந்து, சுகப்பிரசவம் ஆக ஆறுதலெல்லாம் தந்து, டெலிவரி ஆன பின்னும் ஒரு நாள் எனக்காக் நெடு நேரம் இரவு கண் முழிச்சு சாட்  Chat மூலமா ஆதரவு  தந்துன்னு...இன்னும் நிறைய நிறைய உதவிகள் செஞ்ச ஒருத்தங்களுக்கு ஒரு அவார்டு தரப்போறேன். நீங்களும் வாங்க. பக்கத்தில இருந்தால் உண்மையாகவே தந்திருப்பேன், அவங்க அன்புக்கு என் து’ஆக்களும், நன்றிகளும். தூரமா இருப்பதால், எப்ப முடியுதோ அப்ப இன்ஷா அல்லாஹ் நானும் உதவிட முயல்கிறேன். யாருன்னு யூகிச்சீங்களா???

..



..
வேற யாரு, நம்ம ஜலீலாக்காதான். அல்ஹம்துலில்லாஹ், அவர்களுடைய அன்பு, அள்விட முடியாதது. அக்கா, இந்த அவார்டு உங்களுக்காகவே. இப்போதைக்கு இதுதான் தர முடிந்தது :( இன்ஷா அல்லாஹ், அல்லாஹ் உங்களுக்கு தக்க கூலி தருவானாக. :)






35 comments:

  1. உங்கள் குழந்தைகளின் போட்டோ அருமை..... எல்லா நலனும் பெற்று சிறக்க வாழ்த்துக்கள்!

    ...very nice post

    ReplyDelete
  2. i thought u did.:) i thought u or bro.lk would be posting t first comment he he... u guys race each other he he... tnx sis. take care :)

    ReplyDelete
  3. ஜலீலா அக்காவின் அன்பையும் ஆதரவையும் நான் என்றும் மறக்க மாட்டேன். தேவ சித்தம் இருந்தால், அவர்களை சந்திக்கும் நாளை காண ஆவலுடன் காத்து இருக்கிறேன். அழகான விருதை, நீங்கள் அவர்களுக்கு கொடுக்கும் போது - விசில் சத்தம் வருதே..... அது நானே தான்!!!!!

    ReplyDelete
  4. அப்போ எனக்கு வடை வேண்டாம்... ஒரு plate பிரியாணி பார்சல்....
    On second thought, I saw your comment on Aasiya's biriyani recipe..... So, பிரியாணி நல்லா வந்தப்புறம் சொல்லி அனுப்புங்க. வந்து வாங்கிக்கிறேன்... ஹி, ஹி, ஹி...

    ReplyDelete
  5. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... சுகப்பிரசவம்னுதான் நினைச்சேன் அன்னு! நீங்க வரிசையா சொல்லிட்டு வரும்போது இடையில் கேட்கக் கூடாது, சஸ்பென்ஸாவே சொல்லட்டும்னுதான் கேட்காமல் இருந்தேன். இந்த கடைசி பார்ட் நான் பட்ட கஷ்டங்களை ஞாபகப்படுத்துகிறது. ஆனா நம் குழந்தையின் முகத்தை ஒரு நிமிடம் பார்த்தாலே அதெல்லாம் மறந்துடும், சுப்ஹானல்லாஹ்! நல்லா ரெஸ்ட் எடுங்க அன்னு.

    ReplyDelete
  6. aahaa. en biriyani perumai kentucky varaikkum vanthiducha. he he... oru plate enna rendu platennaalum vaangikunga. aanaa ahtukku comment, minus vote ellaam podappidaathu. sollitten, aamaam... :))

    jaleela akka unmailaye great than. naanum avangalai santhikka rembave virumbaren. :))

    ReplyDelete
  7. wa alaikum as salam asma,

    suspensennaale ethirpaaraatha thruppam irukkanume. enakke kadaisila suspensagathan mudinchathu. enna seyya. allaah naadiyavaare. enna onnu, antha kaaranaththai arinju kolgira sakthiyo, athai poruthuk kolgira manapaanmaiyo namakku ellaa neraththilum amaivatillai. thu'aa seyngga. unga udambu eppadi irukku?

    ReplyDelete
  8. அன்னு பகல் நேரம் மட்டுமே என் இணைய உலா எல்லாம். இரவு பத்து மணிக்கு முன்னாடி கணினி தூங்கிடும். என்னோட பகல் நேரத்தில் போட்டு இருந்தால் நாந்தான் முதல் கமென்ட் :)

    இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள் அன்னு. திவ்யா பிறந்தப்ப நானும் பக்கத்தில் இல்லை. சொன்னா டைம்க்கு ஒரு மாசம் முன்னாடியே பாப்பா ரொம்ப மேல ஏறிட்டானு ஆபரேசன் பண்ணிட்டாங்க

    ReplyDelete
  9. அன்னு. கஷ்டம்தான் சிஸ்டர். ஒவ்வொரு வரியும் விடாம படிச்சேன்.

    குழந்தைகள் ரெண்டும் லட்டு மாதிரி இருக்கு. சுத்திப் போடுங்க.

    பெரிய குழந்தை கண்களில் அவ்வளவு வாஞ்சை தம்பி பாப்பா மேல:-)

    இந்தத் தொடர் பதிவுக்கு ரொம்ப நன்றி அன்னு. நானும் எங்க பொடியன் பொறந்த கணங்களை அடிக்கடி நினைவு கூர வைத்த பதிவுகள் இவை.

    குழந்தைகள் எல்லா வளமும் பெற்று வாழ்வாங்கு வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

    ReplyDelete
  10. எல்லாம் நல்லபடி ஆனது சந்தோஷம். இறைவன் நினைப்பதை யாராலும் மாற்ற முடியாது என்று புரிகிறது. சேய்களுக்கும் தாய்க்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  11. அக்கா ஜே (அ‍ப்படித்தான் அவங்களை கூப்புடுவேன்.) கண்டிப்பாக ஒரு ஜெம். ரொம்பவே அக்கறையானவங்கனு நிறையப் பேர் சொல்லிக்கேட்டிருக்கேன். கண்டிப்பாக ஒரு நாள் இவர்களை எல்லாம் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைக்கும் என்று நம்புவோமாகா?

    குட்டிப்பையன் குழந்தையைத் தூக்கிக்கொண்டிருக்கும் அழகோ கொள்ளை அழகு. அன்பு முத்தங்கள் குட்டிபசங்களுக்கு.

    ReplyDelete
  12. முதலில் இருந்தே படிச்சுட்டு வந்தாலும், இன்று தான் பின்னூட்டம் போடறேன். படிச்சப்போ கூஸ்பம் கிடைச்சுது. கொஞ்சம், கொஞ்சமல்ல ரொம்பவே பயங்கரமாக இருக்கு. நேரே இருந்து பார்ப்பது போல இருக்கறது, எப்படித் தான் அவ்வளவு தர்ப்பரூபமாக எழுதுகிறீர்களோ தெரியவில்லை. யாரோ அடி வயிற்றில் கீறுவது போல. முள்ளம் தண்டில் விண் என்று தோன்றுகிறது, திரில்லர் படம் பார்த்த எபக்ட், மனுஷனுக்கு உயிர் போறது, உனக்கு படம் பார்த்த எபக்ட்டானு திட்டக்கூடாது =(

    இன்று வரை திருமணம் குழந்தைகள் பற்றி நினைத்ததே இல்லை. இதைப் படிச்சப்போ ஆளை விடு சாமின்னு இருக்குக்கா. ஏனோ இதை சொல்லாமல் இருக்க முடியல.

    ReplyDelete
  13. ஒரு திகில் கதையை படிச்ச உணர்வுடன் நிறைய செய்திகளையும் தெரிஞ்சிகிட்டேன் .!!

    ஹனிஃபா , தாத்தாவின் சாயல் தெரிகிறது :-))

    ஆல் இன் ஆல் டாக்டர்ஜலீலாக்கா வாழ்க..வாழ்க..

    ReplyDelete
  14. ஐந்து பகுதியும் படித்து முடித்தபோது அல்லாவின் அருளால் எல்லாம் நல்லபடியாய் முடிந்தது என்று சந்தோஷம். ஹனிஃபா அண்ணன் கையில் அழகாய் இருக்கிறார். எனது மகள் பிறந்தபோது நான் வெளியில் காத்திருந்தது எனக்கு நினைவுக்கு வந்தது. நல்ல அனுபவம் எனக்கு.

    ReplyDelete
  15. ஒவ்வொரு பிரசவமும் பெண்களுக்கு மறுவாழ்வுன்னு கேள்விப் பட்டிருக்கேன். நீங்க அதைவிட ஒரு படி மேல! இந்தத் தொடரை படிச்சு முடிச்சவுடனே பெண்களின் மேல் இன்னும் மரியாதை, மதிப்பு கூடுது சகோ! இதைப் பதிவிட்டதற்கு மிக்க நன்றியும்! :)

    ReplyDelete
  16. Masha Allah.. sister.. i almost cried reading the Quran verse.. May Allah swt make things easy on you..


    \\வேற யாரு, நம்ம ஜலீலாக்காதான். அல்ஹம்துலில்லாஹ், அவர்களுடைய அன்பு, அள்விட முடியாதது\\

    100% enakku avanga naan preggy aa irukkumbodhu ennalamo senju thaandhaangale.. masha Allah!

    ReplyDelete
  17. அல்ஹம்துலில்லாஹ் எல்லா புகழும் இறைவனுே ரொம்ப கஸ்டம் தான் அதற்க்கான பலனையும் அடைந்து விட்ீர்கள் வாழ்த்துக்கள்.

    ஜலிலாக்கா எந்தளவுக்கு ஆதரவாக இருந்திருப்பார்கள் என்று உங்கள் பதிவிேே உணரமுடிகிரது அவர்ளுக்கு நன்றியும் அவார்டுக்கு வாழ்த்துக்களும்.

    ReplyDelete
  18. ANNU ,
    How are you now.i read both this one and the previous post together,
    padichhu mudiyum pothu enakke fits vandha madhiri irukku.
    jujoo romba cute.
    jaleela is really a caring person.i d like to meet her too .

    ReplyDelete
  19. வாழ்த்துகள் ஜலிலா அக்கா..

    அருமையான பகிர்வு அன்னு...உடம்பினை பார்த்து கொள்ளுங்க..

    குட்டிஸ் இரண்டு பேரும் படு cuteஆக இருக்காங்க...சூத்தி போடுங்க...

    ReplyDelete
  20. பரபரப்பான சஸ்பென்ஸ் கதை படிக்கிற மாதிரி ஃபீலிங். இப்பவும் அதேதான் சொல்றேன், பிரவச கடைசி நேரத்தில் டென்ஷன்/ரிஸ்க் எடுக்காமல், மருத்துவரை முழுமையா நம்பி, இறைவனிடம் பொறுப்பை ஒப்படைத்து ரிலாக்ஸா இருக்கணும்.

    நல்லவேளை டாக்டர் சரியான சமயத்துல சரியான முடிவெடுத்தார். அல்ஹம்துலில்லாஹ், குழந்தை நல்லபடியா இருக்கான்.

    இதைப் படிக்கிறவங்களும், இதை ஒரு பாடமா எடுத்துக்கணும். வேணும்னா, இயற்கையா குழந்தை பிறப்புக்கென்று, ஆரம்பத்திலிருந்தே சில பயிற்சிகள் செய்துவரலாம் (மருத்துவர் ஆலோசனையோடு).

    ReplyDelete
  21. எனக்கும் ரெண்டும் சிஸேரியந்தான். இரண்டாவதை எப்படியாவது நார்மலாக்கணும்னு நான் நடக்காத நடை (வாக்கிங்), ஏறாத படி இல்லை (மாடிப்படிகள் ஏறியிறங்கினா நார்மல் உறுதினு சொன்னாங்க). முதப் பிரசவத்துல வரவேவராத வலிக்குச் சேத்துவச்சு, மூணு நாள் வலியோட கஷ்டப்பட்டதுதான் மிச்சம், இதுவும் ஆபரேஷந்தான் ஆனது!! இது தெரிஞ்சா, வாக்கிங்/ட்ரெக்கிங் (மாடிப்படிகள்) கஷ்டமாவது இல்லாம ஜாலியா இருந்திருக்கலாம்னு நொந்துகிட்டேன்!!

    (ஆஹா, என்னையும் கொசுவத்தி சுத்த வச்சுட்டீங்களே!!) ;-)))))

    ReplyDelete
  22. ஜலீலாக்காவைப் பத்தி நிறைய பேர் இதுமாதிரி சொல்றது ஜகஜமாகிடுச்சு இப்பல்லாம். நவீன ‘ஃப்ளாரன்ஸ் நைட்டிங்கேல்”னு பட்டம் கொடுக்கலாம் போல!!

    ReplyDelete
  23. ஐந்து பகுதிகளையும் ஒன்றாக படித்ததும் ஒரு பிரசவமே ஆனது போல இருந்தது. குழந்தைகள் இருவரும் அழகாக இருக்கிறார்கள். அம்மா கூட இருந்தால் அது ஒரு ஆறுதல், தைரியம் எல்லாம் கிடைப்பது போன்று இருக்கும். என் அம்மா இறந்த அடுத்த மாதம் தான் நான் கர்ப்பம் ஆனேன். என் பிரசவ காலம் மாமியார் வீட்டில் தான். குடுத்த தேதி வந்தும் எனக்கு வலி வரவில்லை. ஊசி போட்டும் வரவில்லை. ஜெல் வைத்தார்கள். பின்பு தான் வலி வந்தது. நார்மல் டெலிவரி தான். குழந்தை பிறந்ததும் என்ன குழந்தை என கேட்டு பாலும் குடுத்தேன். எல்லாம் நினைவில் இருக்கிறது. இன்னொரு குழந்தை என்று நினைக்கும் போது பிரசவ பயம் தான் மனதில் வருகிறது.

    ReplyDelete
  24. //......எனக்காக் நெடுநேரம் இரவு கண் முழிச்சு சாட் Chat மூலமா ஆதரவு தந்துன்னு...இன்னும் நிறைய நிறைய உதவிகள் செஞ்ச.....//

    'டாக்டர்' ஜலீலாக்கான்னு பெயர் போட்டு வழங்கி இருந்தால் இன்னும் சிறப்பா இருந்திருக்குமோ! நிறைய அனுபவங்களை அழகாக சொல்லி, அப்புறம்..பட்ட கஷ்டங்களை எல்லாம் மறந்து பரங்கிபேட்டை பிரியாணி சாப்டாச்சா ஹி..ஹி...!!

    ReplyDelete
  25. இப்பதான் இந்தக்கதையை படித்தேன்,முதலில் டெலிவரி அனுபவத்தை ஸ்டெப் ஸ்டெப்பாக போட்டு எங்க இதயத்தை எகிற வைத்த அன்னுவிற்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்.வாழ்த்துக்கள்.எல்லாப் புகழும் ஏகவல்ல இறையோனுக்கே!குழந்தைகள் நலம் வாழ துவாச்செய்கிறேன்.

    ஜலீலாவை பற்றி சொல்லவே வேண்டாம்,வாழ்த்துக்கள்.வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  26. நிஜமாவே கூட இருந்து அந்த வலிகளை உணர முடிந்தது.. அந்த தனிமையை வார்த்தையில் சொல்லிட முடியாது..

    அதிலும் முதல் குழந்தையை வெளியே விட்டுவிட்டு திரும்ப பார்ப்போமா என நினைக்கும்போது..

    இறைவனுக்கு நன்றி.. குழந்தைகளுக்கு என் அன்பும்..

    ReplyDelete
  27. அன்னுக்கா, சூப்பர். குழந்தைகள் அழகா இருக்காங்க.

    ReplyDelete
  28. அன்னு,
    மொதல் பகுதி படிச்சுட்டு அப்புறம் இந்த பக்கம் வரல... உண்மைய சொல்லணும்னா நீங்க போட்டு முடிச்சப்புறம் படிக்கணும்னு எஸ்கேப் ஆய்ட்டேன். எல்லா பகுதியும் இன்னிக்கி படிச்சேன். வலியை கூட இப்படி விவரிக்க முடியும்னு இன்னிக்கி தான் பாத்தேன். ஒரு ஒரு பார்ட் படிக்க படிக்க எனக்கு கமெண்ட் போட கூட முடியல.. கடைசி வரை படிச்சுட்டு ஒண்ணா சொல்லிக்கலாம்னு ஒரே வேகத்துல படிச்சேன். எனக்கு இந்த வலி அனுபவம் இன்னுமில்லை. ஆனா என் தோழிகள் கூட அவங்க வலி நேரத்துல இருந்து இருக்கேன். Hats off to your braveness as you tried for normal birth at that critical time too. It would've been much harder for your husband of watching you (what you going thru.). You made me wanted to see my mom now....:)
    Nothing more to say I guess... great write up Annu. God bless little ones.. great to see kids pictures. Older one is so fond of the little brother as he looks at his bro in this pic. Take care
    Best Regards,
    Bhuvana

    ReplyDelete
  29. அனைத்து நெஞ்சங்களுக்கும் நன்றி...நன்றி...!!
    :))

    ReplyDelete
  30. எம்மாடி பயங்கரமா போராடி இருக்கீங்க, குளிர் எல்லாத்துக்கும் அந்த நேரம் தூக்கி அடிக்கும், ஆனால் உங்களுக்கு கொஞ்ச்ம ஓவராவே இருந்திருக்கு .அல்ஹம்து லில்லாஹ் எல்லாம் நல்ல படியாக முடிந்ந்ததே. சும்மாவா சொன்னாங்க பிரசவம் என்பது ஓவ்வொரு பெண்ணிற்கும் மறு பிறவி போல் என்று,
    இரண்டு பேரையும் வளர்ப்பதில்லேயே காலங்கள் ஓடிடும், நான், ஸாதிகா அக்கா,ம் ஹுஸனாம்மா, அடுத்து நீங்க இரண்டும் பையன்கள், ஹிஹி
    லிஸ்ட் லே சேர்ந்துட்டோம்.
    அட இவ்வளவு சஸ்பென்ஸா அவார்ட் என்க்கா? நான் என்னபா செய்தேன்,ஒரு கர்பிணி பெண் தவிபப்து தான் என் கண் முன் தெரிந்ந்தது,, அல்லாவே லேசாக்கி வயின்னு தூஆ தான் கேட்கமுடியும் , ஆனால் பட வேண்டிய வலி நீங்க பட்டு பெத்தெடுத்து இருக்கீஙக்,
    அங்கு நீங்க தனிய தவிப்பத்டு ரொம்ப வே வேதனையா இருந்தது , உங்க மம்மி டாடிக்கு எப்படி இருந்திருகும் ,
    அவார்டுக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  31. @ஜலீலாக்கா,
    து’ஆ கேட்பதற்கும், நினைவில் வைத்திருந்து மடல் எழுதுவதற்கும், இந்த காலத்தில் ஒரு மனது வேண்டும். அதுதான் உங்களை தனித்துக் காட்டியது. நன்றிக்கா. :)

    ReplyDelete
  32. உங்கள் குழந்தைகளின் போட்டோ அருமை..... எல்லா நலனும் பெற்று சிறக்க வாழ்த்துக்கள்!

    ...very nice post...
    vaazka valamutan.

    ReplyDelete
  33. ஸலாம் சகோ அன்னு..

    பெண்களின் பிரசவ காலத்தை கண்முன் கொண்டுவந்துவிட்டீர்கள்...
    ஆண்களை விட பெண்கள் பலகீனமானவர்களாக இருந்தாலும்,,உண்மையிலேயே..பிரசவகால நோவை எந்த ஆணாலும் தாங்கிக்கொள்ள முடியாது..

    பெண்களின் மீதான மரியாதை கூடித்தான் போகிறது..அவர்களின் பிரசவ நேர வேதனைகளை காணும் போது..

    பிள்ளைகள் அருமை..
    அல்லாஹ் உங்கள் அனைவருக்கும்,மேலான வளநலங்களை வழங்க போதுமானவன்..

    அன்புடன்
    ரஜின்

    ReplyDelete
  34. அஸ்ஸலாமு அலைக்கும்.

    ஒரு தொடர் கட்டுரை படித்த உணர்வு. அதிலும் சுபா, ராஜேஷ்குமார் நாவல்ல வர மாதிரி பயங்கர சஸ்பென்ஸ்.

    அந்த குர்ஆன் வசனம் பலமுறைகளில் நம்மை இறைவனின் அடிமை என்று ஞாயபகப்படுத்தி, அந்த உனர்வை உறுதிபடுத்துகிறது. இந்தியாவில் சுகப்பிரசவம் என்பது அரிதாகி இப்போது குழந்தையும், தாயும் நல்மாக இருக்கிறார்களா? என்று விசாரித்தே திருப்தி கொள்ள முடிகிறது.

    வாழ்த்துக்கள் சகோ.

    ஜலீலா அக்காவிற்கு அல்லாஹ் அருள் பாலிப்பானாக

    ReplyDelete

உங்கள் கருத்துக்கள்...