ரயில் பெட்டி - 3

Wednesday, May 16, 2012 Anisha Yunus 4 Comments

ஸ்ஸ்ஸ்.... ஹுசைனம்மா அக்கா டிரங்குப் பெட்டிய போட்டாதான் எனக்கு ட்ரெயின் பொட்டி பதிவு போடவே நினைவு வருது .... ஹி ஹி ஹி.... என்ன செய்ய... அங்கங்க கொஞ்சம் அலாரம் வெச்சிருக்கணும் இல்லைன்னா.... இப்படித்தான்....

--- ------ ------------ ----- ---


ரொம்ப நாள்... இல்ல இல்ல மாதம்... இல்ல இல்ல... கிட்டத்தட்ட வருடங்களுக்கு பிறகு என்னுடைய தோழி ஒருத்திக்கு போன் செய்து பேச முடிந்தது. (வருஷக்கணக்கா அதே நம்பர் அவளும் வச்சிருக்கா... என்னிடமும் அது இருக்கு.... ஹி ஹி) அததற்கு நேரம் வரணும் இல்ல.....அதான் லேட்டு.  ஆனா என்ன, நான் பேசிய நேரம் ஏண்டா இவ்ளோ நாள் பேசலைன்னு ஆயிடுச்சு. இப்போதான் ஒரு வாரம் முன்னாடி அவளுக்கு மூன்றாவது குழந்தை பிறந்திருக்கு. அதற்கு ஹைட்றேசெபலஸ்ன்னு ஒரு வியாதி (Hydrocephalus). புதுசா இப்போதான் இது மாதிரி எல்லாம் கேட்கிறோம் இல்லியா? அது எப்படிப்பட்ட வியாதின்னா மூளையில் இருக்கும் நீர் அதிகமாக இருப்பது. சாதாரணமாக பிறக்கும் குழந்தைகளுக்கு 12 - 14மிலி மட்டும்தான் தண்ணீர் இருக்கணும் மூளையில். ஆனால் இந்த பாப்பாக்கு 16மிலி தண்ணீர் இருக்கு. அல்லாஹு அக்பர். முன்று மாதம் மானிட்டர் செய்துட்டு அந்த தண்ணி வத்திருமா இல்லை ஆபரேஷன் செய்யிறதான்னு பார்க்கலாம்னு டாக்டர் சொல்லி இருக்காங்க. இந்த பக்கத்துல அது பற்றிய தகவல்களை படிச்சு உயிர் போயி உயிர் வந்த நிலைதான் எனக்கு. ஒரு தனி பதிவே போடும் அளவிற்கு இதைப்பற்றி பேசலாம். ஆனால் இந்த விவரம் எதுவுமே இன்னும் என் தோழிக்கு தெரியாது. ஆபரேஷன் செய்தால் சரியாயிடும்னு மட்டும்தான் தெரியும். எல்லாரும் இறைவனிடம் இதற்காக வேண்டிக்குங்க ப்ளீஸ்.
#ஆனா ஆளானப்பட்ட இந்த வியாதிக்கு அரை நுற்றாண்டு முன்னமே மருந்தும், வியாதியைப் போக்கும் வழிமுறையையும் கண்டுபிடிச்சிருக்காங்கன்னா என்ன சொல்ல :) :)

--- ------ ------------ ----- ---

ரயில் பெட்டின்னு சொன்ன பின்தான் நினைவுக்கு வருது. யாருக்கெல்லாம் ரயில் பயணம் பிடிக்கும்? முதல் முதல்ல குதிரைகளை வைத்துதான் ரயில்வண்டி இழுத்தாங்க என்பது உங்களுக்கு தெரியுமா? எப்படி அதுல பயணம் செய்திருப்பாங்கன்னு யோசிக்கறேன். நடந்து போக முடியாது. எழுந்து நிக்க முடியாது. குறைந்த தூரங்களை வேண்டுமானால் இப்படி கடந்திருக்கலாம். அதிக தூரத்தை எப்படி கடக்க முடியும்? அரதப் பழசான ரயில் சிஸ்டம் இன்னும் ஆஸ்திரியாவுல இருக்காம். அங்க யாராவது போயி வந்திருந்தால் போட்டோ போடுங்க. :))))))
--- ------ ------------ ----- ---

ரொம்ப சிறிய கதைகளை எழுதிப் பார்க்க சொல்லி ஹரீஷ்ண்ணா அவர் வலைப்பூவில சொல்லி இருந்தார். அப்ப இருந்து நானும் முயற்சிக்கிறேன். சரியா வந்திருக்கா பாருங்க.

"எத்தனை தடவைதான் முயற்சி செய்யிறது இன்னிக்காவது சரியா இருக்கணும்..." பாக்கெட்டிலிருந்த ரிப்போர்ட் கார்டை எடுத்து 'பெற்றோர் கையெழுத்து பகுதி"யை பார்த்துக் கொண்டான்.
"போன தடவை பெயில் ஆன மாதிரி இருக்ககூடாது. இந்த தடவை எவ்ளோ முயற்சி, எவ்ளோ கஷ்டப்பட்டோம்... ".... டீச்சரிடம் அதை தரும்வரை மனது நடுங்கியது.
"...ம்ம் இந்த தடவ உங்கப்பா ஒன்னும் சொல்லலியா? கையெழுத்து போட்டு தந்துட்டாரா...?? போ... போயி உக்காரு.."
"ஹப்பாடா.... பாஸாயிட்டோம்..!!"

--- ------ ------------ ----- ---
நாங்கள் இருவருமே வேலைக்கு போவதால் ஜுஜ்ஜுவும் இப்ராஹீமும் டே கேருக்கு(Day Care) போகின்றனர். அந்த டே கேரை  நிர்வகிப்பது ஒரு அரபி பெண். சில நாள் முன்பு மாலையில், அவர்களுக்கு கொடுத்தனுப்பும் உணவுப்பையை செக் செய்யும்போது ஒரு தயிர் டப்பாவும் அதனுடன் ஒரு குறிப்பும் இருந்தது. அந்தத் தயிரை இப்ராஹீம் மிக விரும்பி சாப்பிடுவதாகவும் அதை கடையில் வாங்கி அனுப்புமாறும் எழுதி இருந்தது. எப்பொழுதும் போல அதில் என்னென்ன சேர்த்திருக்கிறது என்று நெட்டில் தேடிப் பார்த்தேன். ஜெலட்டின் இல்லை, ஆனால் தயிரை நன்கு கெட்டியாக வைக்க மாட்டின் தோலிலிருந்து எடுக்கப்படும் ஒரு பொருளை (Gelatin made  from Cow Hide)அதில் உபயோகப்படுத்துவதாக அந்த தயிர் கம்பெனி வெப்சைட்டில் எழுதி இருந்தது. அதுவும் மாட்டுத் தோலிலிருந்து எடுக்கப்படும் அந்தப் பொருள், 'உண்பதற்குரியது அல்ல'  (Gelatin made from Inedible Cow Hide !!!) என்கிற காரணத்தால் அதற்கு யூத ராப்பாய் (Jewish Rabbi) ஒருவர் 'கோஷேர்' (Kosher)எண்ணும் அனுமதியை வழங்கியுள்ளார்.. அதைப் பார்த்ததும் எப்பொழுதும் போல அமெரிக்க நாட்டாமையான பிபிபிக்கு(BBB.org) ஒரு கம்ப்ளைன்ட் செய்தேன். உண்ணத் தகுதி இல்லாத பொருளை சேர்த்திருக்கிறார்கள் என்று சொல்லி. அவர்கள் தயிர் கம்பெனிக்கு எழுதியதற்கு, இந்தப் பொருள் 'GRAS' எண்ணும் தகுதியின் கீழ் அமெரிக்க உணவுத்துறை (FDA.GOV) அனுமதி வழங்கியிருக்கிறது என்று தயிர் நிறுவனம் பதில் அளித்துள்ளது. 

வேதனை என்னவென்றால் அந்த  'GRAS' எண்ணும் தகுதியுடைய பொருட்களை உணவுத்துறை முக்கால்வாசி நாட்கள் பரிசோதிப்பதே இல்லை.  சரி என்று அமெரிக்க உணவுத்துறைக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பினேன். அவர்களும் தந்த பதில் அதுதான். ஒரு குறிப்பிட்ட பிராசஸ்(process) மூலம் உண்ணுவதற்கு தகுதியற்ற அந்த ஜெலடினை உண்ணத்தகுந்ததாக மாற்றலாம் என(Inedible to edible). அது என்னப்பா அப்படி ஒரு பிராசஸ்னு கேட்டு எழுதினா நெட்டுல தேடிக்குங்க. அது பற்றிய விவரம் எங்ககிட்ட இல்லைன்னு எழுதறாங்க.... 

இது என்ன சின்னப்பசங்க விளையாட்டா??? எங்கே இதை கொண்டு போறதுன்னு யோசிச்சுகிட்டு இருக்கேன். அதை பத்தி தேடினப்ப இன்னொரு யூத ராப்பாயே கிண்டலாக எழுதியிருந்த ஒரு பதில் கிடைத்தது இங்கே... 

ஙே..... :((
#எங்கே போகும் இந்தப் பாதை?


--- ------ ------------ ----- ---

உங்க வீட்டில் இதுக்கும் வாண்டுக்கு கலர் செய்வது பெயிண்ட்டிங் எல்லாம் பிடிக்குமா? அப்படின்னா இதை தெரிஞ்சுக்குங்க. ஒரு வருடத்துக்கு Crayola தயாரிக்கிற கலர் மார்க்கர்ஸ் அரை பில்லியன் எண்ணிக்கை அளவு.  அதில் விசேஷம் என்னவென்றால் அத்தனையும் ஒரே லைன்ல வெச்சா மொத்த பூமியை மூணு தரம் சுத்தி வந்துரலாம். இதிலென்ன எனக்கு பிரச்சினைன்னு யோசிக்கிறீங்களா? அரை பில்லியன் மார்க்கருல ஒன்னு கூட மண்ணில் மக்கும் பொருளால் ஆனது கிடையாது!!!!!!!!!!!!!!!!! ரத்தம் கொதிக்குதா? என்ன செய்யனும்னு யோசிக்கிறீங்களா? எனக்கு தெரிஞ்ச்க ஒரு வழி, இங்கன போயி தோள் குடுப்பது. இதுக்கும் மேல செய்ய வாய்ப்புள்ளவர்கள் கண்டிப்பா செய்ங்க,,,, நம் பூமி நம் அக்கறை மிக மிக முக்கியம் !! :)


சரி, இன்னும் கொஞ்சம் கழிச்சு அடுத்த அலாரம் அடிக்கிறப்ப அடுத்த பதிவு... :)

அதுவரை.........ஸலாம்.  :)


.



.

4 comments:

  1. ட்ரெங்கு பொட்டி, அஞ்சறை பொட்டி எல்லாம் போய் இப்ப டிரெயின் பொட்டியா?

    உங்கள் பிரண்ட் குழந்தை சீக்கிரம் குணமாக என் துஆக்கள்.

    ReplyDelete
  2. ஸலாம் சகோ உங்க ட்ரெயின் பொட்டி..உண்மையிலேயே ஸ்வாரஸ்யமானதுதான்....

    உங்க தோழியின் பிள்ளைக்கு குணமாக பிராத்திக்கிறேன்..

    தயிர் பற்றிய விபரம் அருமை...அத்தோடு..அது குறித்து தங்களின் மெனக்கெடுப்பு...சற்றே ஆச்சர்யம்தான்... இவ்ளோவும் நம்மில் எத்தனை பேர் செய்றோம்...

    நீங்க ரியலி ஒரு அன்னியன் அம்பியா என் கண்முன்னாடி தெரியுரீங்க... :) ஹா ஹா ஹா...

    எனிவே..குட் வொர்க்..கீப் இட் அப்..

    அன்புடன்
    ரஜின்

    ReplyDelete
  3. என் பதிவுக்கும் விளம்பரம் கொடுத்ததற்கு நன்றி!! :-)))

    Hydrocephalus - பிறந்த குழந்தைகளுக்கு தலை ஓட்டின் வளர்ச்சி முழுமை பெற்றிருக்காது என்பதால், இந்தத் தண்ணீர் அளவு அதிகமாகக் கூடிக்கொண்டே போகும்போது, நீரின் அளவிற்கேற்ப தலை பெரிதாகிக் கொண்டே போகும். என் சிறு வயதில், பெரிய்ய தலையுடன் சில பிள்ளைகளைப் பார்த்திருக்கிறேன் ஊரில்.

    பொதுவாக இதற்கான (அறுவை)சிகிச்சை எளிதானதே. அதிலும் இக்குழந்தைக்கு 2 மிலி(மிமி?) மட்டுமே அதிகம் என்பது பிரச்னை அதிகமாக இல்லாததுபோல்தான் தோன்றுகிறது. இறைவன் நலமாக்கித் தரட்டும்.

    /குதிரைகளை வைத்துதான் ரயில்வண்டி இழுத்தாங்க //
    உங்க ட்ரெயின் பெட்டிக்கும் குதிரைகிடைக்குமான்னு பாருங்க. இப்ப ஆமைக்குட்டி வேகத்துல வருது!! :-))))

    Gelatin-Rabbi-kosher-BBB-GRAS
    ஒண்ணுமே புரியலை!! நல்லவேளை நாங்க அமெரிக்கா வரலைன்னு ஒரு நிம்மதிப் பெருமூச்சு விட்டுகிட்டேன்!! :-(((((

    க்ரேயோலா மார்க்கர்ஸ் மட்டுமா.. நாம உபயோக்கிற மொபைல், டிவி, கம்ப்யூட்டர், இன்னபிற... எல்லாமே ‘மக்காத’ பொருட்கள்தான்!! :-((((( ஆனா, மக்கள் மொபைல்கள மாற்றும் வேகத்தைப் பார்த்தால்... அதுவும் இந்த so-called environmentalistsகூட!!

    ReplyDelete
  4. சலாம் சகோ!

    சிறந்த பதிவு. உங்களின் தோழியின் பிரச்னை தீர்வடைய பிரார்த்திக்கிறேன்.

    ReplyDelete

உங்கள் கருத்துக்கள்...