எங்கே செல்கின்றன நம் இஸ்லாமியப் பள்ளிகள்????



நம்முடைய மார்க்கத்தை நல்வழியில் கற்றுத்தரும் இடம் என்றுதான் நம் குழந்தைகளை இஸ்லாமியப் பள்ளிக்கூடங்களுக்கு அனுப்பிக்கொண்டுள்ளோம். என்ன கற்றுத்தருகிறார்கள் என்பது இருக்கட்டும். இஸ்லாமிய விழுமியங்களின் படிதான் இஸ்லாமியப் பள்ளிக்கூடங்கள் நடக்கின்றதா என்னும் கேள்விக்கும் அதிர்ச்சியான பதில்கள்தான் நம்மை வந்தடைகின்றது. 

கட்டுரையை முழுதும் வாசிக்க -- தூது இணையதளத்திற்கு -- செல்லவும்.

திரை விமர்சனம் - Inside Out (2015) Animated Movie

முதன் முதலாக சத்தியமார்க்கம் தளத்தில் என்னுடைய பதிவு.....
===================
ரிலீ மட்டுமல்ல... நம் வீட்டுக்குழந்தைகளும் இன்றைய சூழலில், தொட்டதெற்கெல்லாம் அபாயகரமான முடிவுகளையே எடுக்கின்றனர். ஒவ்வொரு சிறு இடறலுக்கும் வாழ்வையே பணயம் வைக்கத் துணிந்து விடுகின்றனர். அதே துணிவை ஏன் வாழ்வை மீட்டுப் பார்ப்பதற்காக வைக்கக்கூடாது? இது குழந்தைகளுக்கான படமே எனினும், எல்லாப் பெற்றோரும், ஆசிரியப் பெருமக்களும், குழந்தைகள் நல ஆர்வலர்களும் கட்டாயம் காண வேண்டிய படம் இது.
======================


விமர்சனக் கட்டுரையை முழுதும் படிக்க - http://www.satyamargam.com/news/news-and-views/2603-inside-out-movie-review.html

வாசித்து, கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் சகோஸ்... 2015இல் வெளியான Inside Out அனிமேடட் திரைப்படத்திற்கான விமர்சனமே இது. வெளியிட்ட சத்தியமார்க்கம் குழுவினருக்கு மிக்க நன்றியுடன்....

விவசாயிகள் தற்கொலை, குறையும் எண்ணிக்கை சதியா? உண்மையா?

புதுச்சேரியில் மட்டுமல்ல, சட்டீஸ்கர் மாநிலமும் அதே வழியைத்தான் பின்பற்றுகின்றது. 2001இலிருந்து 2010 வரை கிட்டத்தட்ட 14,000க்கும் மேலான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டார்கள். 2010லிருந்து 2013 வரை ஒரு விவசாயியும் அந்த வழியில் செல்லவில்லை என்கிறது அரசாங்கம். எப்படி உருவானது இந்த திடீர் ஞானோதயம்?? ஞானோதயம் ஏற்பட்டது, விவசாயிகளுக்கா அல்லது மாநில அரசுக்கா??
வருடத்தில் 951 விவசாயிகளின் உயிருக்கு உலை வைத்த மேற்கு வங்கம் ஆகட்டும், 558 பேரின் உயிர் குடித்த ஆந்திரா, மத்திய பிரதேசம் (82), கர்நாடகா (472)வாகட்டும், தற்கொலை செய்யும் விவசாயிகளின் எண்ணிக்கை சடாரென பூஜ்ஜியத்திற்கு வந்ததன் பின்னணி என்ன??? 

சூழலியலாளர் திரு பி சாய்நாத்தின் முழு கட்டுரையையும் தமிழில் வாசிக்க தூது இணையதளத்திற்குச் செல்லுங்கள் -- http://www.thoothuonline.com/archives/75648

ஹிரோஷிமாவின் வானம்பாடி (Hiroshima No Pika)

சென்ற வருடம் இந்தப் புத்தகத்தினைப் பற்றிப் படித்த போதிலிருந்தே இந்த வருட புத்தக விழாவில் வாங்கி விட வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. நேற்று பொங்கல்-புத்தகத் திழுவிழா(!!)வில் வாங்கினேன். மிகச் சிறிய புத்தகம்தான். 45 ஒரு பக்கத்தாள்களில் முடிந்து விடுகின்றது. 1945, ஆகஸ்ட் 6 அன்று ஹிரோஷிமா மீது வீசப்பட்ட அணுகுண்டால், சாமானியக் குடும்பம் ஒன்றில் சிறு பிள்ளையாக வளரும் 7 வயது மாயி-சான் அடுத்தடுத்த தினங்களில் காணும் காட்சிகளையும், வருடங்கள் கழிந்தும் அதன் தாக்கத்தை தன்னிலிருந்தும் பிறருடனும் காணும் அவலத்தைப் பதிவு செய்துள்ளது இந்த சிறு கதை.

தோசி மாருகியின் ஆழமான எழுத்தை, தமிழுக்கு மொழி பெயர்த்துள்ளார் சகோதரர் கொ.மா.கோ.இளங்கோ. பாரதி புத்தகாலயத்தின் வெளியீடு.

கதை முழுதும் ஒரு அமைதியான நடையில் எழுதப்பட்டுள்ளது. மூர்க்கத்தனமோ, வெறியோ, அடங்காமல் வெடித்துச் சிதறும் சொற்களோ இல்லை. வீசப்பட்ட குண்டின் அராஜகத்தின் முன் அமைதியாய் எழுத்துக்கள் மட்டுமே நிமிர்ந்து நிற்கின்றன. இதுவே
 அதன் அளவிலா துயரத்தின் சாரமாக அமைகிறது.

ஒரு ஏழு வயதுப் பிள்ளையின் கண் முன் ஊரே உடலில் துணியற்று திக்கெங்கும் ஓடினால்.... கைக்குழந்தையின் சடலத்தை ஏந்தியவாறு தாயும் கண்ணீருடன் தண்ணீரில் மூழ்கினால்....பெண் குழந்தைகளின் முதல் வீரனாக வாழும் தந்தையின் உடல் முழுதும் கொப்புளங்களால் சூழப்பட்டு அதே நிலையில் மரணத்தையும் எய்தினால்....சூரியக் கதிர்கள் பட்டு பொங்கிக் களித்த நீர்நிலைகள் நீல நிறம் வற்றிப்போய் கருத்த மேனியுடனும் அடர்த்தியான இறுக்கத்துடனும் தாங்கொணா துயரத்தில் ஓடுவதைக் காண நேர்ந்தால்... அந்தப் பிஞ்சின் மனதில் எப்படியான வலிகள்... எப்படியான எண்ணங்கள் பதியப்படும் என்பதை கிரகிக்கவே இயலவில்லை.

ஹிரோஷிமாவில் குண்டு போடப்பட்டது என்பதைப் படிக்கிறோம். ஆனால், அதன் தாக்கம் ஒரு குழந்தையின் மீது படியும்போது நிகழும் உளவியல் வன்முறையை இந்தப் புத்தகம் காட்சிப்படுத்துகின்றது. குழந்தைகளை இலக்காகக் கொண்டு இந்தப் புத்தகம் வெளிவந்திருந்தாலும், இது பேசும் துயரத்தை அறியும் சிட்டுக்கள், இனி வரும் வாழ்வின் மீது நம்பிக்கை வைப்பார்களா என்னும் சந்தேகம் வலுக்கின்றது.

ஆற்றமுடியாத அவலத்தின் கண்ணீர், பேனா மையாய்க் கசிந்துள்ளது..... ஆங்கிலத்தில் இணையம் மூலமாக படித்திட -http://bit.ly/1OpDJob.