கடத்தல், கொலை, என்கவுண்டர், நீதி...??
இதற்கு முன் ஒரு பதிவில் குழந்தைகளை கடத்தி, சீரழித்து கொன்ற சம்பவத்தைப் பற்றி படித்தோம். இன்று அதிகாலை 5:30 மணியளவில் ஒரு குற்றவாளியான மோகன்ராஜை சுட்டுக் கொன்றுள்ளனர் போலீசார். கோவை மக்கள் பலர் இன்றுதான் தீபாவளி கொண்டாடியுள்ளனர். சந்தோஷம்..மிக மிக சந்தோஷம். ஆனால், அவன்தான் உண்மையான குற்றவாளியா என இப்பொழுது பல சந்தேகங்கள், கேள்விகள். ஆனால் பதில் சொல்ல வேண்டியவன் உயிருடன் இல்லை. இந்த பதிவில் பார்க்கும்போது இன்னும் இரண்டு டிரைவர்கள் இதில் உள்ளதாக ஒரு வரி. இந்த பதிவில் கோவை நிருபர் ஒருவரே பல சந்தேகங்களை எழுப்பியுள்ளார். இன்னுமொரு பதிவு இன்னும் ஆழமாக அலசுகிறது, இந்த கொலையை (என்கவுண்டரை??)தப்பி ஓடும் எந்த கைதியையும் முழங்கால் வரை சுடவே அனுமதியுள்ளது. நெஞ்சிலும் தோளிலும் உடனே சுடுவதற்கு அவன் என்ன வீரப்பனாகவா பல வருடம் வாழ்ந்தான்?? இப்படி பல கோணத்தில், ஒருவனின் மரணத்திற்கு பிறகு அந்த கேசை நாம் இன்னும் விரிவாக பார்க்க ஆரம்பிக்கிறோம். இது ஒரு வலை. இந்த வலையில் விழுந்த மீன்தான் சுடப்பட்ட மோகன்ராஜ், குழந்தையை முதலில் பலாத்காரம் செய்தது மனோகரன், ஆனால் அவன் கஸ்டடியில் பத்திரமாக..!!
இன்று காலை என் மாமியிடம் பேசிக்கொண்டிருந்தபோது சில உண்மைகள் கசிந்தன. அப்ப, தப்பு யாருதுன்னு சொல்லுங்க பாக்கலாம். அந்த குழந்தைகளின் பெற்றோரின் கடை இருக்கும் வீதியில்தான் என் மாமாவின் கடையும் உள்ளது. அந்த தந்தையும் தாயும் கடை வேலைகளிலும் இன்னும் பல சோஷியல் வேலைகளிலும் மிக பிஸியாக இருப்பதால் குழந்தைகளை அடிக்கடி வெளியே இட்டுச் செல்ல இயலவில்லை. எனவே அவர்கள் தேர்ந்தெடுத்த வழி, ஊரில் உள்ள இரண்டு மூன்று டாக்ஸிக்காரர்களிடம் பணம் தந்து, திருமூர்த்தி மலை, ஆழியார், ஊட்டி என அனுப்பி வைப்பது, பெரியவர்கள் யாரும் துணைக்கு இல்லாமலேயே. இப்பொழுது சொல்லுங்கள், தவறு யார் மீது? கடை வைத்திருப்பவன் ஒருவன், தன்னுடைய வீதியில் நடக்கும் சிலரை அழைத்து கடையை கவனிக்க சொல்லிவிட்டு செல்வதை வாடிக்கையாக வைத்தால் யார்தான் அதை உபயோகிக்க விரும்ப மாட்டார்? அதே போல்தான் நடந்துள்ளது இங்கேயும். கோவையிலும், பொள்ளாச்சியிலும் பலர் அந்த குழந்தைகள் செல்லும் வாகனத்தை நிறுத்தி விசாரித்துள்ளனர், ஆனால் இப்படி எப்பொழுதுமே போவது வாடிக்கைதானே என்பதால் குழந்தைகளும் ஆம், எங்கள் அப்பாதான் திருமூர்த்திவரை செல்ல இன்று அனுமதித்துள்ளார் என்று கூறியுள்ளனர். பின் யாருக்கு எப்படி சந்தேகம் வரும்? இந்த வசதியை பயன்படுத்தியே ஒரு கூட்டணி பலமாக தயாராகி ப்ளான் செய்யப்பட்டு இது நடந்துள்ளது. தாய் தந்தையரின் அஜாக்கிரதையாலும் (இதற்கு மேல் வேறு வார்த்தை எதுவும் கிட்ட மாட்டேன் என்கிறது!!) சந்தர்ப்பத்தை பயன்படுத்த நினைத்த சில மூளைகளாலும் இரு உயிர்கள் நாசமாகியுள்ளன. இப்பொழுது கடவுளே கடவுளே என்று கதறினால்???
நீதி:
உங்கள் குழந்தைகள் உங்களின் பொறுப்பு..!!
வேலையும், பணமும், சொத்துக்களும் எப்பொழுது வேண்டுமானாலும் வரும் போகும், குழந்தைகளின் வாழ்வின் விஷயத்தில் அஜாக்கிரதையானது, உங்கள் வாழ்விற்கும் சேர்த்து உலை வைக்கும்.
என்ன சொல்ல? பெற்றோர் தான் கவனமாக இருக்க வேண்டும்
ReplyDelete//உங்கள் குழந்தைகள் உங்களின் பொறுப்பு..!//
ReplyDeleteஉண்மை தான் என்றாலும் கூட எல்லா இடத்திற்க்கும் நாம் பின் தொடரமுடியாது உதாரணத்திற்க்கு பள்ளிக்கு அனுப்பும் போது பள்ளிவரை செல்லலாம் பள்ளியின் உள்ளே தவறு நிகழ்ந்து விட்டால் மனிதமிருகங்கள் எங்கு இருக்கும் என்று யார் அறிவார்.
இதில நிறைய சந்தேகங்கள் இருக்கு ஆனால் விடைதான் பிடிப்பட மாட்டேங்கிறது. ஆனா போன உயிர் திரும்ப வருமா..? பாவம் ..!!
ReplyDeleteஆயிரம் காரணங்கள் இப்பொழுது சொல்லலாம். ஆனால், குழந்தைகள் இன்று உயிருடன் இல்லையே.... வேதனையான மரணம் கூட.... ம்ம்ம்ம்....
ReplyDeleteஇப்போது பல காரணங்கள் கூறப்பட்டாலும், போன உயிர் போனது தானே. மரணத்தைத் தழுவிய குழந்தைகள் எவ்வளவு துடித்திருக்கும் என்பதை நினைக்கும் போது நெஞ்சம் பதறுகிறது.
ReplyDelete@கார்த்திண்ணா,
ReplyDeleteஆம். பெற்றோர்களிடம் பிள்ளைகளின் வாழ்வே உள்ளது.
@ராஜவம்சம் பாய்,
ஆனால், பல விஷயங்களில் நம்மிடமே முழு பொறுப்பும் உள்ளது. பள்ளிகளில் எந்த விதமான ஆசிரியர் நியமிக்கப்படுகிறார்கள் என்பது அவர்களை சார்ந்தது, நாம் எந்த விதமான பள்ளியை குழந்தைகளுக்கு அளிக்கிறோம் என்பது நம்மிடம். அது மட்டுமன்றி எப்பேர்ப்பட்ட பள்ளியாயினும் பிள்ளைகளிடம் அடிக்கடி நல்முறையில் விசாரித்து வைப்பதும் நம் கடமை.
@ஜெய்லானி பாய்,
ஆமாம் பாய், அதுதேன் வருத்தம். என்ன செஞ்சாலும் இனி அவங்க திரும்பி வரப்போவதில்லை. நாம்தான் இது மாதிரி ரிப்பீட் ஆகாம பாத்துக்கணும்.
@சித்ராக்கா,
மரண நொடிகள்தான் வேதனையான ஒன்னு. அவங்களை அந்த் எடத்துல நினச்சு பாக்கவே முடியலை என்னால.
@வெங்கட் அண்ணா,
போன உயிர் திரும்பி வரபோவதில்லைதான். இந்த பதிவை நான் காரணங்களை விளக்கி அவர்களின் பெற்றோரை குறைகூற எழுதவில்லை. நாம் செய்யும் ஒவ்வொரு செயலும் சமூகத்தால் கவனிக்கப் படுகிறது என்பதற்காக எழுதினேன். அந்த கண்ணோட்டம் நன்மையிலும் முடியலாம், தீமையிலும் முடியலாம். நாம்தான் எச்சரிக்கையாய் இருக்க வேண்டும்.
கருத்தளித்த அனைவருக்கும் நன்றி.