குழந்தைகள் பத்திரம்!! (பகுதி மூன்று)

Wednesday, November 10, 2010 Anisha Yunus 10 Comments


3. உளவியல் குறைபாடுகள்

இந்த பதிவில் குழந்தைவதைகளுக்கு ஆளான, சிறுவயதிலேயே பலாத்காரம் செய்யப்பட்ட குழந்தைகளின் வாழ்வில் ஏற்படும் மாறுபாட்டினை பார்க்க இருக்கின்றோம்.

a. தனித்தன்மையில் தீவிரம்:
பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குழந்தையின் தனித்தன்மையும் பாதிப்பின் பின் வெகுவாக மாறுபடுகிறது. அவர்களின் உடல் சார்ந்த, உள்ளம் சார்ந்த விஷய‌ங்களில் ஒரு தீவிரத்தன்மை காணப்படுவது ஒரு நெருக்கடி தரும் விஷயமாகும். இந்த மாற்றமானது சமூகம் சார்ந்ததோடு மட்டுமல்லாமல் அவர்களின் சொந்த வாழ்க்கையிலும், ஆன்மீக வாழ்விலும் நிறைய மாற்றங்களை தருகிறது. இப்படி அசாதாரண குணங்களை கொண்ட குழந்தைகள் எல்லாருமே பலாத்காரம் செய்யப்பட்டவர்களில்லை. அதே சமயம், பலாத்காரத்திற்கு ஆளான் குழந்தைகளால் சாதாரணமாய் வாழ்வை ரசிக்க முடியாது என்பதும் உண்மை, உதாரணமாக, அதிகமான சுத்தத்துடன் இருக்க பார்ப்பது, தன் முடிவையே அனைவரும் எல்லா நேரத்திலும் பின்பற்ற வேண்டும் என்றிருப்பது, அல்லது எதை பற்றியுமே அக்கறையில்லாமல் இருப்பது, அதிகமாக, அடிக்கடி தன் யோசனைகளிலும், செயல்களிலும் மாறுபடுவது, இல்லையென்றால், தாய் அல்லது தந்தை போன்ற யாரிடமாவது சிறு குழந்தை போல மிகவும் டிபென்டென்ட் ஆக இருப்பது அல்லது மிக மிக அதிகமாக சுதந்திரத்தை எதிர்பார்ப்பது போன்ற செயல்களைக் கொண்டு அறியலாம். இதிலுள்ள எல்லாமே நாமும் செய்வதுதான் என்றாலும், இவர்கள் விஷயத்தில் ஒரு தீவிரமும், கடுமையும் இருக்கும். இன்னும் சொல்லப்போனால் அவர்களால் ஒரு உறவையும் பேணுவது மிக கடினமாகி விடும். ஒன்று, அவர்கள் எல்லாரையும் விட்டு தனித்திருக்கவே பிரியப்படுவார்கள், இல்லையென்றால் யாரும் இல்லாமல் தனியாக இருப்பதே அவர்களால் சில மணித்துளிகளுக்கு கூட முடியாது, இதனாலேயே, பல உறவுகளை தொலைத்தும் இருப்பார்கள்.

ஆன்மீக குடும்பத்தை சார்ந்தவராகவோ, அல்லது சிறு வயதிலிருந்தே ஆன்மீகத்தில் ஈடுபாடு கொண்டவராகவோ இருந்தால் அதிலும் தீவிரத்தை காணலாம். ஒன்று ஆன்மீகத்தில் ஊறிப் போய் இருக்கலாம், இல்லையென்றால், எந்த குறிக்கோளும் இல்லாமலே, சரியான விளக்கம் இல்லாமலே நாத்திகவாதியும் ஆகலாம். இவை இரண்டிலும் உச்சத்திலுள்ளவர்கள் இப்படி அடிபட்டவர்களோ என எடுத்துக் கொள்ளக்கூடாது.

a.1) அவர்கள் நாடியபோது, தேடியபோது கிடைக்காத ஆறுதலால் இறைவனை குறை சொல்பவராக, மதிப்பில்லாமல் பேசக்கூடியவராக, மாறலாம். செயல்களின் மூலமும் இறைவன் மேல் தனக்கிருக்கும் கோபத்தை காட்ட முயற்சிக்கலாம். அவந‌ம்பிக்கை என்பதை கம்மியாகவும், வெறுப்பு என்பதை அதிகமாகவுமே காட்ட முயற்சிப்பர்.


a.2) இன்னொரு விதத்தில் பார்த்தால் ஆன்மீகத்தில் மிக மிக அதிகம் திளைப்பவராய், அதிலேயே மூழ்கியவராகவும் இருப்பார்கள்.

தேன்மொழி, அவளின் மாமாவால் இத்தகைய கொடுஞ்செயலுக்கு ஆளானாள். அவள் வேற்று நாட்டை சேர்ந்தவள் எனினும், இப்பொழுது அமெரிக்காவில் வசிப்பவள். இந்த கொடுஞ்செயலினால் அவள் தனக்கான பாதுகாப்பாய் தன் வாழ்வை மாற்றிக்கொண்டாள். எப்படி? ஆன்மீகத்தின் மூலம் தன்னுடைய உடம்பையே வருத்தி வருத்தி ஆறுதல் தேடுவது. அதிகமாக இரவு கண்விழித்து இறைவனை பிரார்த்தித்தல், தூக்கமில்லாமல் அவதிபட்டாலும் சரி. விரதம், நோன்பு, என அதிகமான நாட்கள் உண்ணாமலிருத்தல். இன்னும் சாலையிலும் வீட்டிற்கு வெளியிலும் வராமலே நாட்கணக்கில் இருத்தல், இதன் மூலம் தன்னுடலை வருத்திக்கொள்வதால் ஒரு சந்தோஷம், ஒரு நிம்மதி அவளுக்கு கிடைக்கிறது. எத்தனை கடுமையாக ஒரு செயலை செய்கிறாளோ அதன் பாதிப்பை அத்தனை அதிகமாகவே அவள் ரசிக்க ஆரம்பித்தாள். தன்னை சுத்தப்படுத்திக் கொள்ள முடிந்ததாக எண்ணினாள். அவள் குழந்தைகளிடத்திலும் அதே கண்டிப்புடன் வாழ்கிறாள். வீட்டின் உள்ளேயும், வெளியேயும் ஆயிரம் சட்டங்களை போட்டு, ஒரு தாயாய் இல்லாமல் ஒரு சந்தேகத்தின் ஊற்றாய்..!! இப்பொழுது ட்ரீட்மெண்ட் எடுத்துக் கொண்டிருந்தாலும் இன்னும் சில வேளைகளில் அவளால் அவளையே தடுக்க முடியாமல் போகிறது!!

தேன்மொழியின் கதையோ பரவாயில்லை. தன்னை இப்படி துன்புறுத்துகிறாளே தவிர அங்கஹீனம் ஏற்படுத்தும் அளவிற்கு எதுவும் செய்யவில்லை. ஆனால் இன்னும் சிலரின் வாழ்வு அப்படியில்லை.

லிஷாவின் வாழ்வும் அபப்டியே. சிறு வயதில், ஒன்று இரண்டு என்றில்லாமல் பல முறை அவளின் சித்தப்பா மகனால் கொடுமைக்கு ஆளாகியிருக்கிறாள், கொடுமை என்னவெனில், அவர்களின் வீடு அருகருகே இருந்ததுதான். அவளின் தாய்க்கு இது தெரிய வந்த போதும் குடும்ப கௌரவத்துக்கு அஞ்சி காதுகளில் பஞ்சை வைத்தவள் போல் இருந்து விட்டார். இதுவே அந்த 'அண்ணனி'ற்கு வசதியாய் போனது இன்னமும். இப்பொழுது லிஷாவிற்கும் திருமணமாகி இரண்டு குழந்தைகளிருக்கிறார்கள். ஆனால் இன்னமும் அவளால் அந்த வடுக்களிலிருந்து மீள முடியவில்லை. இதன் பலனாய் சில சமயம் இறைவ‌னே கதி என்பது போல் கிட்டத்தட்ட துறவறம் பூண்டவள் போல் வாழ்ந்தால், இன்னும் சில சமயங்களில் குழந்தைகள் பசித்து அழுதாலும், தன‌க்கும் அவர்களுக்கும் சம்பந்தமில்லை என்பது போலிருக்கிறாள். இன்னும் பலர் இப்படி வாழ்ந்து கொண்டும், இறந்து கொண்டும் உள்ளனர்.

இது அவர்களின் தனிப்பட்ட வாழ்வில் மட்டுமல்ல, பல பேர் வாழ்வில் திருமணம் என்பது பெரும் கொடுமையாகவே மாறியுள்ளாது இதனால். இதை அடுத்த பதிவில் காண்போம், இன்ஷா அல்லாஹ்.

10 comments:

  1. அன்னு ஒரு சிறு கோரிக்கை.இந்தத் தொடரை நான் இரவில் மட்டும் படிக்கப் போகிறேன்,. பகலில் படித்தால் அன்று முழுவதும் இந்த சம்பவங்கள் என் மனதை வாட்டும்

    ReplyDelete
  2. தேன்மொழியின் கதையோ பரவாயில்லை. தன்னை இப்படி துன்புறுத்துகிறாளே தவிர அங்கஹீனம் ஏற்படுத்தும் அளவிற்கு எதுவும் செய்யவில்லை. ஆனால் இன்னும் சிலரின் வாழ்வு அப்படியில்லை.


    ......நினைத்து பார்க்கவே முடியல..... எப்படித்தான் இன்னொரு மனித ஜீவனை வதைக்க மனம் வருகிறதோ?

    ReplyDelete
  3. குழந்தைகளைச் சுற்றி எவ்வளவு ஆபத்துக்கள் இருக்கு.. :-(

    இந்தப் பதிவைப் படிச்சு மனசுக்கு ரொம்ப கஷ்டமாயிடுச்சுங்க அன்னு..

    ReplyDelete
  4. //அவளின் தாய்க்கு இது தெரிய வந்த போதும் குடும்ப கௌரவத்துக்கு அஞ்சி காதுகளில் பஞ்சை வைத்தவள் போல் இருந்து விட்டார்.//

    இவளைத் தாய் என்றே கூற முடியாது..

    ReplyDelete
  5. பயங்கர உலகில் பிஞ்சுகளை வஞ்சிக்க் ஆயிரம் நஞ்சுகள் உண்டு.

    ReplyDelete
  6. Very Informative Post.

    ஆனால் இதற்கும் ஆன்மீகத்தில் நாட்டம் இருப்பதற்கும் என்ன சம்பந்தம்.

    Not sure whether being fully involved in spirituality is considered as a mental illness.

    Liked your first two posts though.
    Lets spread the awareness.

    Keep on writing.

    ReplyDelete
  7. நிலையில்லா உலகில் நிலைதடுமாறும் மனங்களாய் வாழும் மரத்த மனிதர்களால் படும் அவதிகள் ஏராளம்.
    பாவம் இதுபோன்றொரு கொடுமைகள் யாருக்கும் திகழக்கூடாது. இறைன் காப்பாற்றவேண்டும் அனைவரையும்..

    ReplyDelete
  8. @கார்த்திண்ணா,
    படிக்கும் உங்களுக்கே இந்த நிலை என்றால், தமிழாக்கம் செய்ய மறுபடி மறுபடி படிக்க வேண்டிய எனக்கு? சுப்ஹானல்லாஹ்...!!

    @சித்ராக்கா,
    நான் முன்னிருக்கும் பதிவுகளில் சொன்னது போல கலசார சீரழிவினாலும் சமூகத்தின் மேல்தட்டு மக்கள் காட்டும் தவறான் எடுத்துக்காட்டுகளாலும் எல்லோரும் சிதைபடுகிறோம் என்பது உண்மை. அந்த மேல்தட்டு மக்களுக்கு தவறு செய்ய கிடைக்கும் வாய்ப்புக்கள் கீழ்தட்டில் கிடைக்காத போது அதன் ஆத்திரம் எல்லார் மேலும் பாய்கிறது. எல்லோருக்கும் ஒரே மாதிரி கலாசாரமும் சட்டமும் இருந்தால் மட்டுமே தடுத்து நிறுத்த இயலும்.

    @பாபுண்ணா,
    ஆமாண்ணா. எதிர்க்கும் சக்தியற்ற எளியவர்களின் மேல்தானே எல்லாரும் தத்தம் சக்தியை பயன்படுத்துகிறார்கள்???

    @இந்திராக்கா,
    இந்த உலகின் பல தாய்மாரின் நிலை இதுதான். வேறென்ன சொல்ல?

    @நிலாமதி க்கா,
    உண்மை. God of Small thingsஇல் அதை அருமையாக எடுத்துக்காட்டியுள்ளார் அருந்ததி. அதுதான் உண்மை, பல இடங்களில்.

    @ No country for old men,
    Sir, you are mistaken. I dint say jus an interest in divine things. But I say that their involvement would be extraordinary. how will you explain about someone if he / she is fasting day and night and standing in prayer throughout the night and doesn't even involve in a small chit chat fearing that may distract their attention? such kind of extreme personality is what am talking about. Thanks for your appreciation though.

    @மலிகாக்கா,
    இறைவன் மட்டுமே காப்பாற்ற முடியும். வேறெவரும் இலர் ... :(

    வருகை தந்து கருத்தளித்த அனைவருக்கும் நன்றி.

    ReplyDelete
  9. ஹாய் அன்னு...,உங்கள் பக்கத்திற்க்கு இன்றுதான் விஜயம் செய்கிறேன்.ஒவ்வொன்றும் பயனுள்ள பகுதிகளாகவே உள்ளது.அதிலும் இந்த கட்டுரை மிகவும் பயனுள்ளதாகும்.பல அதிர்ச்சியுள்ள சம்பவங்களை சுட்டிகாட்டியுள்ளீர்கள்.இது பெண்ணை பெற்றவர்களுக்கு தரப்படும் விழிப்புணர்வு மட்டுமின்றி சிறுசலன புத்தி உள்ளவர்கள் கூட வெட்க்கத்தால் தலைகுனிந்து திருந்த நினக்க வேண்டும் என்று எல்லா வல்ல இறைவனிடன் இறைஞ்சுவோம்.

    அன்புடன்,
    அப்சரா.

    ReplyDelete
  10. @அப்சராக்கா,
    ரொம்ப நன்றி, உங்க வருகைக்கும் கருத்துக்கும். இன்ஷா அல்லாஹ் திருந்தினால் சரி. இப்பவும் துபாய்ல நடந்த நிகழ்ச்சியை நினச்சு இன்னும் மனசு கஷ்டமாயிடுச்சு. :((

    ஹஸ்புனல்லாஹு வ நி’அமல் வகீல்.

    ReplyDelete

உங்கள் கருத்துக்கள்...