நவம்பர் 18 - நடந்தது என்ன?

Friday, November 23, 2012 Anisha Yunus 13 Comments

6:00 am
எங்கள் இறைவனே! எங்கள் மீது பொறுமையையும் (உறுதியையும்) பொழிவாயாக முஸ்லீம்களாக (உனக்கு முற்றிலும் வழிப்பட்டவர்களாக எங்களை ஆக்கி), மரணிக்கச் செய்வாயாக!.
ஆமீன்...ஆமீன்..

9:00
am
அடடே வாங்க ஆமினாம்மா... அஸ் ஸலாமு அலைக்கும்

வ அலைக்கும் அஸ்ஸலாம்... என்ன எதோ கல்யாண வீடு போல எங்கே எல்லாரும் ரெடியாகுறீங்க?

அது ஒன்னுமில்லம்மா... என் மகன் ஏதோ ஒரு டூரிஸ்ட் பையனை பிடிச்சிருக்கான். அவன்கிட்ட இருக்கற விலை உயர்ந்த கேமராவுல மொத்த குடும்பத்தையும் வெச்சு படம் எடுக்கனுமின்னு காலைல இருந்து எல்லாரையும் துரத்திட்டு இருக்கான்....

அது சரிப்பா.... எப்ப வரை இருப்பமோ... இருக்கறவரை சந்தோஷப்பட விடுங்க....
 
! ! !
! ! ! 
! ! !


10:00
am
அப்துல்லாஹ்... கென்னத்தை நீதான் போயி கூட்டிட்டு வரணும்.


அதெல்லாம் முடியாது பாஸ்.... அப்புறம் நான் மட்டும் ஃபோட்டோவுல கசங்கி இருப்பேன்.... அவனை அட்ரஸ் சொல்லி வரச்சொல்லிடுங்க....
 

உன்னை.... சரி... அப்புறம் பாத்துக்கறேன்... :))

11:00
am
ஜல்லூ ஜல்லூ...
 

எடீ...இன்னொரு தடவை என் பேரை சொன்னே..... பாரு அப்பாகிட்ட சொல்லித் தர்றேன்.... ஜமால் பையான்னு சொல்றியா இல்லியா??
 

ஜல்லூ...புய்யா...
 

ஹ ஹ ஹா....
 

ராணி... ஹேய்....யூசுஃப் அண்ணன் வர்றான்...ஸைலண்ட்...

எல்லாரும் இங்கதான் ஒளிஞ்சிட்டிருக்கீங்களா... கிளம்புங்க போயி அழகா ரெடியாகுங்க பாக்கலாம்...

12:00
pm
ஏம்மா சமா....
சொல்லுங்க அத்தை....
சுலஃபாவுக்கும் தஹானிக்கும் சொல்லிட்டியா...
ஆங்.... சொல்லிட்டேன் அத்தை ரெண்டாவது மாடியில குழந்தைகளுக்கு சோறூட்டறாங்க.... வந்துடுவாங்க...
சரிம்மா.... இப்றாஹீம் முழிச்சிருந்தா கொண்டு வா கொஞ்ச நேரம் நான் கைல வச்சிருக்கேன்...
சரிங்க அத்தை...

1:00
pm
ஹேய் கென்னெத்...ஹெல்லோ...
அப்துல்லாஹ் சொல்லுடா...
டேய் நீ வந்துடுவேதானே....லேட் ஆயிடுச்சு பிளேன் ஏறனும்னு போயிட மாட்டியே...
இல்லை அப்துல்லாஹ்...டீல்... ஷார்ப் அட் 4 ஒகே?
ஓகே பாஸ்

2:00
pm
அம்மா சல்மா வீட்டுக்காவது விடேன்..... ப்ளீஸ்மா.... இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துடறேன்...
நத்திங் டூயிங் யூசுஃப்.... இப்போ அப்பாவும் அந்த அங்கிளும் வந்துடுவாங்க...
...ம்மீ.... அதுக்கு அப்புறம் நான் போவேன் ஓகே?
ஓகேப்பா...

2:30
pm
மாமா கீழே ஹாலுக்கு வந்துடறீங்களா? அங்கயே கொஞ்சம் ரெஸ்ட் எடுத்தீங்கன்னா அவர் வரும் நேரத்துக்கு சரியா இருக்கும். கென்னெத் அண்ணனிடம் ரொம்ப நேரம் இல்லைன்னு சொன்னார்....
சரிம்மா... வர்றேன்... தஹானி எங்கே?
அவங்க ஆமினாம்மா கூட கீழே இருக்காங்க.
அப்ப அவங்க பேரன் அப்துல்லாஹ்வும் இருக்கானா...
ஆமாம் மாமா
சரி அவனை வர சொல்லு.... படியில் இறங்க உதவியா இருக்கும்...
சரி மாமா....

2:45
pm
ஹ்ம்ம்... யூசூஃப் பாப்பாங்களை எல்லாம் கீழே கூட்டிட்டு வர்றியா?
சரிப்பா....

டேய்... குட்டீஸ்...என்னாதிது...
ஹி ஹிஹி..ஹிஹி...ட்ரெயின்ப்பா....

ஓஹ் ட்ரெயின் பெட்டி மாதிரி எல்லாரும் கையை கையை இணைச்சு வெச்சிருக்கீங்களா....
ஹி ஹி ஹி... ஆமாம்ப்பா...யூசுஃப் புய்யா சொன்னங்க...
 

நீயும் உன் புய்யாவும்... ஓகே எல்லாரும் வரிசையா உட்காருங்க.... பார்க்கலாம்...
ஹி...ஹி..ஹி...ஹிஹி..ஹிஹி...

2:50
pm
சுலஃபா எங்கே உங்க வீட்டுக்காரரும், பசங்களும் மட்டும் இல்லே....
இல்லெப்பா உங்க மருந்துதான் சீக்கிரம் வாங்கிட்டு வந்துர்றோம்னு போயிருக்காங்க...
அப்படியா சரி சரி, ஆமினாம்மாக்கும் ஒரு சேர் தஹானி பக்கத்துல போட்டுடு...
சரிப்பா..

2:52
pm
ஹ்ம்ம் எல்லாரும் என்ன செய்வீங்க ஃபோட்டோ எடுத்தப்புறம் சொல்லுங்க....
நானூ...ஜல்லூ புய்யா... ஊசெஃப் புய்யா எல்லாரும் ஸ்கூலுக்கு கொண்டு போவொம்...
ஆமா...இவதான் இப்ப ஸ்கூலுக்கு போறா... ஹி ஹி ஹி...
தாத்தா நான் ரியாஸ்ட்ட, சல்மாட்ட...இன்னும் ஒலகத்துல எல்லார்ட்டயும் காட்டுவேனே...அப்படித்தானே அப்பா...

ஆமாம் ஜமால்...கண்டிப்பா....

2:56
pm
உனக்கு கரெக்ட் இன்ஃபர்மேஷன் வந்திடுச்சா.
ஆமாம் சார். ஷேக் ரித்வான் ஏரியாவுல மூனு மாடி பங்களா இவனுடையது மட்டும்தான். ஏற்கனவே ரேஞ்ச் 542வை அனுப்பிட்டேன்...இன்னேரம் டார்கெட் பக்கம் போயிருப்பாங்க.

3:00
pm
ம்மா...ம்மா....இஹாஹீமும் என் மடில குடேன்....
இல்லடா செல்லம்...ஃபோட்டோ எடுத்தப்புறம் தரேன் சரியா....
ம்ம்ம்.....புய்யா....புய்யா...
ஏங்க ஜீ என்ன இன்னும் வாசல்ல...
நீ போம்மா... நானும் அப்துல்லாஹ்வும் கொஞ்சம் பேசிட்டு வரோம்...
அது சரி... ட்யூட்டி நியாபகத்துல அப்படியே ரோடுக்கு போயி ட்ராஃபிக் சரி செய்ய நின்னுடாதீங்க....
(கண்கள் மட்டும் புன்னகையை பரிமாற்றம் செய்துகொள்கின்றன)

3:05 pm
சார். டார்கெட் லொக்கேட்டட்.
அவன் தெரியறானா?
ஆமாம் சார். வாசல்லயே இருக்கான்.
ஓகே, தென் Leafil2 வை Unload செய்துடுங்க.
ஓகே சார்.

3:10 pm

அப்பாஆஆஆஆஆஆஆஆஆஆ.......
புய்யா...புய்....
...ஜ்...ஜி....
அல்லாஹு அக்பர்....
அல்லாஹு அக்பர்....
அல்லாஹு அக்பர்...
யல்ல யல்லா.... யா ஹபீபீ...யல்ல யல்லா....

3:20 pm

[Breaking News]At 3:10 pm, November 18, Israel rocked a house belongs to Al-Dalou family in Sheikh-Redwan area, west Gaza, killing at least 10 people, including 4 women and 4 children. [Breaking News]

The List includes:
 • Mohammed Jamal Al-Dalou, the father.
 • Ranin Mohammed Jamal Al-Dalou, 5 years old.
 • Jamal Mohammed Jamal Al-Dalou, 7 year old.
 • Yousef Mohammed Jamal Al-Dalou, 10 years old.
 • Ibrahim Mohammed Jamal Al-Dalou, 1 year old.
 • Jamal Al-Dalou, the grandfather.
 • Sulafa Al Dalou, 46 years old
 • Samah Al-Dalou, 25 years old
 • Tahani Al-Dalou, 50 years old
 • Ameina Matar Al-Mzanner, 83 years old.
 • Abdallah Mohammed Al-Mzanner, 23 years old.

4:00
ஓஹ் கென்னெத் நீங்க ஸ்பாட்லதான் இருக்கீங்களா...
....ஸ்ஸ்ஸ்....சார்...
சீக்கிரம் டெட் பாடீஸை ஃபோட்டொ எடுத்து கார்ப்பரேட்டுக்கு அனுப்பிடுங்க.

... ... ... !!பின்குறிப்பு:
ஒரு கற்பனையே.... எப்படியெல்லாம் அந்த குடும்பம் இருந்திருக்கும் என.... என்னவெல்லாம் அந்த குழந்தைகள் அன்று விளையாடியிருப்பார்கள் என....
எல்லாம் முடிந்த பின் தவறான வீட்டை பெயர்த்து விட்டோம் என காகிதத்திலிருந்து கவனம் சிதறாமல் ஒரு அறிவிப்பு வருகிறது..... எத்தனை கனவுகள், எத்தனை வண்ணங்கள்....இப்போது எல்லாம் சிகப்பு வண்ணத்தில் மட்டும் :( • http://rt.com/news/gaza-family-idf-mistake-017/
 • http://www.thenews.com.pk/article-76029-Nine-killed-in-Gaza-strike-
 • http://occupiedpalestine.wordpress.com/2012/11/18/gazaunderattack-nov-18-2012-live-blog/nov-18-2012-gaza-under-attack-al-dalou-family-massacre-535463_524553097556561_364602567_n/ 
எங்கள் இறைவா! எங்களுக்குப் பொறுமையைத் தந்தருள்வாயாக! எங்கள் பாதங்களை உறுதியாக்குவாயாக! காஃபிரான இம்மக்கள் மீது (நாங்கள் வெற்றியடைய) உதவிசெய்வாயாக!” (2:250)


.


13 comments:

 1. kathai karpanaiyaga iruthaalam ithu poola ethanai kudumba ithil pillaigal kanavugaludan aasaiyudan irunthu irupargal.. Ovaru seithum padikum poluthum parkum poluthum alugai thaan varugerathu.

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் ஃபாயிஜா. நாம் அனைவரும் தினம் தினம் துக்கம் அனுசரித்தால் கூட மாறாத கறையாகி விட்டது. :(

   Delete
 2. சலாம் மிகவும் உணர்வு பூர்வமான காணொளி.

  ReplyDelete
  Replies
  1. வ அலைக்கும் அஸ் ஸலாம் பாய்.

   ஆமாம் பாய், எதிர் வீட்டம்மா பேசும்போது அவரின் குரல் எத்தனை நடுங்குகிறது என்பதை எவரும் கவனிக்கலாம்.... சற்று முன் வரை இருந்த மூன்று மாடி கட்டிடம் நொடியில் சிதறி, அதிலுள்ளவர்களும் சிதறி.....ப்ச்...

   Delete
 3. சலாம் சகோ.

  வித்தியாசமான சிந்தனை ..!!!

  நமது உள்ளம் அமைதி பெற ஒரு ஹதீஸ் :

  முஸ்லிம்கள் யூதர்களுடன் போரிடும் வரை மறுமை நாள் வராது. எந்த அளவுக்கென்றால் அவர்களில் ஒருவர் கல்லின் பின்னால், மரத்தின் பின்னால் ஒளிந்து கொள்ள, அந்தக் கல், அல்லது மரம் "முஸ்லிமே! அல்லாஹ்வின் அடியானே! இதோ, என் பின்னால் ஒரு யூதன் இருக்கின்றான். அவனைக் கொன்று விடு'' என்று கூறும். "கர்கத்' என்ற மரத்தைத் தவிர. ஏனெனில் இது யூதர்களின் மரமாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
  அறிவிப்பவர்:அப்துல்லாஹ்பின்உமர்(ரலி)
  நூல்: முஸ்லிம் (5200)

  நன்றி !!!

  ReplyDelete
  Replies
  1. வ அலைக்கும் அஸ் ஸலாம் சகோ.

   இல்லை சகோ.. இது வித்தியாசம் இல்லை.... ஒவ்வொரு குழந்தையின் மய்யித்தையும் பார்க்கும்போது என் குழந்தைகளை எண்ணிப் பார்க்கிறேன்.... என்னால் அந்த துக்கத்தை தாளவே முடியாது.... 83 வயது தாய்மாரும் மௌத் ஆகின்றார், ஒரு வருடம் கூட நிரம்பாத பிஞ்சுகளும் கபனாடை உடுத்தி :(((

   ஹதீத் நிகழ்வாகும் நாளையே எண்ணியிருக்கிறோம்.... இன்ஷா அல்லாஹ் !

   Delete
 4. :( May Allah swt reunite them in Jannathul firdouse.

  ReplyDelete
 5. பார்க்கும் போது மனம்துடிக்குது தொண்டை அடைக்கிறது அழுகைதான் வருகிறது.

  ReplyDelete
  Replies
  1. என்னக்கா செய்ய நமக்கும்ம் குழந்தைகள் இருக்கிறார்கள்தானே.... கோபத்தில் இரண்டு அடி போட்டு விட்டாலும் இரவில் உட்கார்ந்து அழும் பெண் நாம், இதில் இத்தனை குழந்தைகள் கொத்து கொத்தாக கல்லறையில் அடக்கப்படும்போது.....

   Delete
 6. அஸ்ஸலாமு அலைக்கும் சகோ.அன்னு,
  இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

  //எல்லாம் முடிந்த பின் தவறான வீட்டை பெயர்த்து விட்டோம் என காகிதத்திலிருந்து கவனம் சிதறாமல் ஒரு அறிவிப்பு வருகிறது.....//-----ஹராம் அலைக்க யா இஸ்ரேல்..!

  ReplyDelete
 7. முஹம்மது ஆஷிக் சகோ...

  வ அலைக்கும் அஸ் ஸலாம் வ ரஹ்மத்துல்லாஹ்.

  :(
  :(
  :(

  ReplyDelete
 8. உங்களை தொடர்பதிவுக்கு அழைச்சுருக்கேன்...

  கலந்துக்கோங்க http://www.kuttisuvarkkam.com/2012/11/blog-post_25.html

  ReplyDelete

உங்கள் கருத்துக்கள்...