சிக்கன் பர்பட்வாலா

Tuesday, December 25, 2012 Anisha Yunus 7 Comments

:: :: :: :: :: :: :: :: On Demand Chicken Burbutwaalaa:: :: :: :: :: :: :: ::

ெல்லோ சோஸ்.... நிறையேர் இை ஃபோட்டோவொடு போடச்சொல்லி கேட்டால். இஒரு பிவு அற்காகே. ரொம்பிம்பிளானு, ரொம்பேஸ்ட்டானு. ிர் சம், ரம் சம், பிரியாணி என எல்லா வைக்கும் ரொம்பொரத்ானு. நிமித்ுலெய்ுடாம். 

ே ரெசிபியை வத்ு சோயா நக்கெட் உருண்டைகை போட்டும் செய்யாம். சுடு நீரில் கிக்கத்ெடத்ு பின் நன்றாக ிழிந்து நீரை வெளியேற்றி, இரண்டுண்டுகாக்கி அப்பியே சிக்குக்கு பிலா உோகிக்காம். சோயா உருண்டை மிரியே இருக்கு.

தேவையானவை:

ாரங்க....இவ்ளான்...இவ்வான் ேவை :)
தோல் பிடிக்கும் என்பவர்கள் மட்டும் தோலோட போடுங்க...வேண்டாம் என்பவர்களுக்கு,தோலில்லாமத்தான் டேஸ்ட் ஜாஸ்தி... ஹி ஹி :)
  • தக்காளி  - 1 கமலா ஆரஞ்சு சைஸுக்கு /  ால் கப் அளுக்கு.
  • சின்ன வெங்காயம் / பெரிய வெங்காயம் - 1/4 கப்- சமமாக இரண்டு அளவு பிரித்து வைக்கவும்.
  • இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
  • கரம் மசாலா - 1/4 டீஸ்பூன்
  • மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
  • தனியாத்தூள் - 1/2 டீஸ்பூன்
  • மிளகாய்த்தூள் - 1/2 டீஸ்பூன்
  • குறுமிளகுத்தூள் - 1/2 டீஸ்பூன்.(காரம் பத்தவில்லையென்றால் இதன் அளவை கூட்டுங்கள்...மிளகாய்த்தூளை அல்ல)
  • எண்ணெய் - 2 டீஸ்பூன்
  • தேங்காய் துண்டுகள் - தேவைப்பட்டால்
  • ிக்கன் - அரைக்கிலோ சிறிய ுண்டுகள் (ோல் நீக்காவிட்டாலும் சிய .. :) )

செய்முறை:


1.  எண்ணெய், தேங்காய்த்துண்டு, சிக்கன், ஒரு பங்கு நறுக்கிய வெங்காயம் தவிர மத்ததெல்லாம் (இன்னொரு பங்கு வெங்காயம் உட்பட) எல்லாவற்றையும் சேர்த்து மைய அரைத்தெடுக்கவும்.
2. ஒரு கடாயில் எண்ணெய் காய வைத்து, எடுத்து வைத்துள்ள ஒரு பங்கு வெங்காயத்தை இட்டு நன்கு வனக்கவும்.

3. சிக்கன் துண்டுகளையும் இட்டு நன்கு வதக்கவும். இரண்டு நிமிடம் கழித்து அரைத்து வைத்துள்ள பேஸ்ட் போடவும். உப்பு கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து சரி பார்க்கவும்.
4. விரும்பினால் சிறியதாக நறுக்கிய தேங்காய் துண்டுகளைப் போட்டு பிரட்டி விடவும்.
5. அடுப்பில் மிதமான தீயில் பதினைந்து நிமிடங்கள் மட்டும் மூடி போட்டு வேக விடவும். நடுவில் ஒரு, இரண்டு தடவை திருப்பி விடவும்.
6. இதில் வெளியாகும் சிக்கனின் நீரும், அரைத்த பேஸ்ட்டும் சேர்த்து ஒரு கிரெவியாக மாறும். அதைத்தான் உர்தூவில் பர்பட் (burbut) என்போம்.  :) ரசம் சாதத்திற்குக்கூட இந்த ரெசிபி மிக பிரமாதமாக இருக்கும். அந்த கிரேவி கண்டிப்பா குழந்தைகளின் ஃபேவரைட் ஆயிடும். :) பேச்சிலர் சகோதரிகள், சகோதரர்கள் எல்லோருக்குமே ஈஸி...:) அண்ட் டேஸ்ட்டி :)

7. ஆறப்போட்டு ருசி பார்க்கவும். :)

குறிப்பு:
  • இந்த கிரேவி கொஞ்சம் ஜாஸ்தியாக வேணும்ன்னா தக்காளி வெங்காயம் ஜாஸ்தி செஞ்சுக்குங்க. தண்ணீர் சேர்த்த வேண்டாம்.
  • கிரேவி திக்காக வேணும்ன்னா ஒரு அஞ்சு நிமிஷம் மட்டும் மூடி விட்டு மீதி நேரம் எல்லாம் மூடாமலே விட்டுடுங்க.
  • தோல் மட்டுமே போட்டு கூட இதை செய்யலாம்...அப்ப மூடி போடாம அப்படியே வாட்டி எடுங்க. ருசி நல்லா இருக்கும்.
  • பெப்பர் ஜாஸ்தியா சேர்த்தினால் குளிருக்கு, சளிக்கு நல்லா இருக்கும்.
  • போன்லெஸ்...எலும்பில்லா கறி உபயோக்கிறீங்கன்னா 15 நிமிஷம் வேண்டாம்.கொஞ்சம் கம்மியான சூட்டிலேயே வைத்து 5-6 நிமிடங்களில் எடுத்து விடவும். இல்லைன்னா சக்கை போல கறி ஆகிவிடும். :(
  • சோயா உருண்டைக்கும், பச்சை வாடை போனாலே போதுமானது. அதிக நேரம் வேண்டாம்.

ஒகே. இந்தக் குறிப்பு ஜலீலாக்காவுடைய ஈவெண்ட்க்கு அனுப்பியதுதான். ஆனால் சகோஸ்கேட்டதறகாகவே மறுபடியும் ஃபோட்டோஸ் போட்டு தனியாக ஒரு பதிவாயிடுச்சு. என்சாய் :))
.

7 comments:

உங்கள் கருத்துக்கள்...

All you need is love :))

Thursday, December 20, 2012 Anisha Yunus 10 Comments

டைம்ஸ் ஸ்கொயரில் இருந்த ஒரு நபர் டெர்ரியை நோக்கி வைத்திருந்த அட்டை :))

தேவையின்றி (!!) பிரசித்தி பெற்ற டெர்ரி ஜோன்ஸை எல்லாருக்கும் தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்... 2010இல் குர்’ஆனை எரிப்பேன் என சொல்லி கைதாகி, 2011இல் எரித்து பல இடங்களில் கலவரங்களுக்கு வித்திட்ட........ கிறிஸ்தவ அடிப்படைவாதி????

அதன் அடுத்த வருடம் 2012 - முஹம்மத் நபியை (ஸல்) என்னவெல்லாம் ஜோன்ஸின் மனதில் ஆசை இருந்ததோ அந்த ஆசையெல்லாம் கொண்டவராக மாநபியை சித்தரித்து, புத்தி மழுங்கி ஒரு படத்தை எடுத்தவர். அதன் மூலம் எகிப்தின் மரணதண்டனை தீர்ப்பையும் வாங்கி, இன்னும் சுதந்திரமாய் அமெரிக்காவில் சுற்றிக் கொண்டிருப்பவர்.

இந்த ஒலக மகா மதகுரு, நியூ யார்க்கின் புகழ் பெற்ற Times Squareஇல், கடந்த செப்டெம்பர் 10, 2011இல் ஒரு வீதியில் கூடி மக்களிடம் ‘இஸ்லாத்தின் மாண்புகளை’ அவருக்கே உரித்தான வழியில் பிரசங்கம், செய்ய விழைந்தபோது நடந்த சம்பவமே இது.... :)))

”இஸ்லாம் பொய்களால் ஆனது, கட்டுக்கதைகளைக் கொண்டது, போரை, துவம்சத்தை மட்டும் ஆதரிப்பது...” என ஆரம்பித்த உடன் பிதற்றிக் கொண்டே போகிறார்.... சுற்றியிருக்கும் மக்கள் கூட்டத்தில் சலசலப்பு அதிகரிக்கிறது.... ”No...No... That is not Islam... You dont know about it.... Nay.." பல்வேறு குரல்கள் ஒலிக்க ஆரம்பிக்கின்றன. பேயறைந்த முகத்தைக் கொண்டு டெர்ரி இன்னும் அதிகமாக தான் கொண்டு வந்த பேப்பரிலிருந்து சாத்தானிய வேதம்...சாரி... அவருடைய நோட்ஸை படிக்க ஆரம்பிக்கிறார். :)


பாடலை ஆரம்பித்து வைத்த இளைஞர்.... :))
கூட்டத்தில் இருந்த ஒரு இளைஞர் தன் மொபைலில் அவசரமாக எதோ தேடி, உரத்த குரலில் பாட ஆரம்பிக்கிறார்...
“No one you can save that can't be saved.
Nothing you can do but you can learn how to be you
in time - It's easy.

All you need is love, all you need is love,
All you need is love, love, love is all you need.
Love, love, love, love, love, love, love, love, love.
..”

உண்மையிலேயே புகழ் பெற்ற பீட்டிள்ஸ் குழுவின் பாடல் அது.... மெல்ல மெல்ல கூட்டம் முழுதும் இந்தப் பாடல் வைரஸ் நோய் போல் பரவுகிறது.... வேர்க்க விறுவிறுக்க டெர்ரி ஜோன்ஸ் அந்த இடத்தை காலி செய்யும் வரையிலும் இந்தப் பாடலை அங்குள்ள மக்கள் பாடிக்கொண்டே உள்ளனர்..... :))







அங்கே நடந்ததை அப்போதே வீடியோவாக பதிவாகிவிட்டாலும், அது இப்போதுதான் நெட்டில் உலாவ ஆரம்பித்துள்ளது.... அதன் வீடியோ வடிவம் இதோ :)

( ரெஃபெர்: http://www.huffingtonpost.com/2012/12/18/terry-jones-all-you-need-love_n_2323094.html)




# அந்த நாளில் டெர்ரியின் டீ-ஷர்ட்டில் எழுதியிருந்த வாசகம் -- "Everything I Ever Needed To Know About Islam I Learned On 9/11"

# ஆனால் எழுத வேண்டியதோ -- "Everything I Ever Needed To Know About 'defeating Hate Speech' I Learned On 9/10/11" ஹ ஹ ஹா...
#  Better Luck Next Time Terry :))

தம் வாய்களைக் கொண்டே அல்லாஹ்வின் ஒளியை (ஊதி) அணைத்துவிட அவர்கள் விரும்புகிறார்கள் – ஆனால் காஃபிர்கள் (நிராகரிப்பவர்கள்) வெறுத்த போதிலும் அல்லாஹ் தன் ஒளியை பூர்த்தியாக்கி வைக்காமல் இருக்க மாட்டான். (அல்குர்ஆன்: 9:32)


.

10 comments:

உங்கள் கருத்துக்கள்...

[கீற்று] கசாப்-ஐ இரகசியமாகத் தூக்கிலிட்டது ஏன்?

Tuesday, December 18, 2012 Anisha Yunus 19 Comments


2008 ஆம் ஆண்டு நவம்பர் திங்கள் 26 ஆம் நாள் நமது மும்மை நகரம் மிகவும் மர்மமான முறையில் திடீரென தாக்கப்பட்டது. இதில் இந்தியாவில் 16 குண்டு வெடிப்புகளை நிகழ்த்திய இந்துத்துவ தீவிரவாதிகளைக் கண்டுபிடித்து நீதியின் முன் நிறுத்திய காவல்துறை அதிகாரி ஹேமந்த் கர்கரேயும் கொலை செய்யப்பட்டார். அவர் அப்போது மராட்டிய மாநில தீவிரவாதத் தடுப்புப்படையின் தலைவராக இருந்தார்.
மும்பைத் தாக்குதலே ஹேமந்த் கர்கரேயைக் கொலை செய்வதற்கான முன்னேற்பாடு என்பதை நிரூபிக்கும் காலம் நெருங்கிக் கொண்டிருந்தபோது, ‘கசாப்’ஐ திடீரென இரகசியமாகத் தூக்கிலே போட்டதாகக் கூறி, உடனேயே புதைத்து விட்டாகவும் செய்திகளைப் பரப்பி விட்டார்கள். கசாப்போடு மொத்த விவகாரத்தையும் புதைத்துவிட்டார்கள். இதில் புதைந்துபோன பல உண்மைகளை மக்கள் மன்றத்திற்குக் கொண்டு வருகின்றோம்.
நமது இந்திய அரசு திடீரென ஒரு அதிர்ச்சியை (21-11-2012 காலை 7.30 மணிக்கு) மக்கள் மன்றத்தில் வைத்தது. அதுதான் அஜ்மல் கசாப்-ஐ யாருக்கும் தெரியாமல் தூக்கிலிட்டது. யாருக்கும் தெரியாமல் என்பதில் பிரதமர் மன்மோகன் சிங் அவர்களும் காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி அவர்களும் அடங்குவார்கள்.
நாட்டின் நிருவாக இயந்திரத்தை இயக்கும் மாலுமி, பிரதமர் மன்மோகன் சிங் அவர்களே தொலைக்காட்சியைப் பார்த்துத் தான் 26/11 மும்பை தாக்குதலில் பழி சுமத்தப்பட அஜ்மல் கசாப் தூக்கிலிடப்பட்டதைத் தெரிந்து கொண்டாராம்.
டாக்டர் மன்மோகன் சிங் அவர்களைப் போல் மிகவும் முக்கியமானவர் சோனியா காந்தி. ஏனெனில் நாட்டை ஆளும் கூட்டணியின் தலைமைக் கட்சி காங்கிரஸ்-ன் தலைவர். சோனியாகாந்தி அவர்களும் தொலைக்காட்சியைப் பார்த்துத்தான் தெரிந்து கொண்டராம். அவ்வளவு இரகசியமாக ‘கசாப்’-ஐ தூக்கிலிட வேண்டிய காரணம் என்ன?
கருணை மனு
இதில் அனைவர் கண்களிலும் மண்ணைத் தூவும் மற்றொரு செய்தி என்னவெனில், 'கசாப்' தனது தண்டனைக்கு எதிராக நமது குடியரசுத் தலைவர் அவர்களிடம் சமர்ப்பித்த 'கருணை மனுவும்' நிராகரிக்கப்பட்டு விட்டதாம். இந்த நிராகரிப்பு, நவம்பர் 8 ஆம் நாள் நடந்தது என நமக்கு 21 ஆம் நாள் செய்தி சொல்லின. ஆனால் அடுத்த நாள் நமது பத்திரிகைகள் எல்லாம் நவம்பர் ஐந்தாம் நாளே அந்த நிராகரிப்பு நடந்ததாக குறிப்பிட்டன. இதில் எது உண்மை என யாரும் கேட்டிடக் கூடாது. ஏனெனில் இந்தியாவில் அப்படியொரு நீதி நிருவாகம் நடந்து கொண்டிருக்கின்றது. உண்மையைச் சொன்னால் திரைமறைவு நிருவாகம் ஒன்றை மத்திய உளவுத்துறை நடத்திக் கொண்டிருக்கின்றது.
குடியரசு தலைவர் அவர்களுக்கு, அவர்கள் அலுவலகத்திற்கு அனுப்பட்ட, கருணை மனு நிராகரிக்கப்பட்டது தெரியுமோ என்னவோ, யாமறியோம்.
அந்தத் திறைமறைவு நிருவாகம் அவ்வளவு அழுத்தம் நிறைந்தது போலும். தன் முன்னால் வரும் கருணை மனுவை ஏன் நிராகரித்தேன் என்பதற்கான காரணங்களைக் குடியரசு தலைவர் மக்கள் மன்றத்திற்கு சொல்லியாக வேண்டும். இஃது இன்றளவும் கடைபிடிக்கப்பட்டு வரும் நியதி. ஆனால் இங்கே பத்திரிகையாளர்கள், தகவல் அறியும் உரிமையின் கீழ் தகவல் கேட்ட பின்பும் அது கிடைக்கவில்லை (இந்தக் கட்டுரை அச்சேறும் வரை அது தான் நிலை.)
இன்று கசாப், நாடறிந்த கொலைகாரன். அப்படிதான் ஊடகங்கள் மக்கள் மன்றத்தை நம்ப வைத்துள்ளன. அவனது கருணை மனுவை நிராகரித்த தேதியையும், காரணங்களையும் அத்துணை மறைவாக வைத்திட வேண்டிய காரணம் என்ன?
கசாப்-ஐ இரகசியமாகத் தூக்கிலிடாமல் வழக்கமான தூக்குத் தண்டனைகளைப் போல், தேதியை மக்களுக்கு அறிவித்துத் தூக்கிலிட்டால், என்ன நடக்கும்? அப்போதும் ஊடகங்கள் நமக்குக் காட்டும் முகங்கள், ஏதோ 26/11க்கு நீதி கிடைத்துவிட்டதாக பாராட்டித்தான் இருக்கும். யதார்த்தங்கள் இப்படி இருந்திடும் போது, அத்துணை அவசரமாக இரகசியமாகத் தூக்கிட வேண்டிய காரணம் என்ன?
அரசியல் காரணம்!
நம் நாட்டில் எது நடந்தாலும் அதற்கோர் அரசியல் பின்னணி இருப்பது வழக்கம்.
இந்த வகையில் கசாப்-ஐ இரகசியமாகத் தூக்கில் போட்டதற்கும் ஓர் அரசியல் காரணம் சொல்லப்படுகின்றது. அது நவம்பர் 22 ஆம் நாள் நாடாளுமன்றம் கூடிட இருந்தது. எதிர்கட்சிகள், நம்பிக்கை இல்லா தீர்மானம் உட்பட பல கபளீகரங்களை செய்திட இருந்தன. இதனால், கசாப்-ஐ தூக்கில் போட்டு எல்லாக் கட்சிகளிடமும் ஓர் இணக்கத்தைச் சம்பாதிக்கலாம் என அரசு முடிவு செய்திருந்தது. அப்படியானால், சோனியாவும், மன்மோகனும் நாங்கள் தொலைக்காட்சியைப் பார்த்துத்தான் தெரிந்து கொண்டோம் எனச் சொன்னது பொய்யா?
ஊர் அறிய இதைச் செய்திருந்தால், இதனால் இன்னும் அதிகமான இணக்கம் கிடைத்திருந்திருக்கும். மக்களும், இப்போது போல் அரசை ஆகோ, ஓகோ எனப் பாராட்டி இருப்பார்கள் என்பதே உண்மை. இத்தனையும் இருக்கும் போது ஏன்? இரகசியமாகத் தூக்கிலிட வேண்டும்.
ஆகவே இரகசியமாகத் தூக்கிலிட்டதற்கு வேறு காரணங்கள் இருக்கின்றன. அவற்றிற்குள் புகுமுன் கசாப்-இன் பக்கம் சற்றே திரும்புவோம்.
அவன் பட்ட சித்திரவதைகளால் ஏற்கெனவே மடிந்து கொண்டிருந்தான். பொய் வாக்குமூலங்களை வாங்குவதற்கு அவனைப் படுத்திய சித்திரவதைகள் அவை.
தான் சற்றும் அறிந்திடாத ஒரு குற்றத்திற்கு இப்படி சித்திரவதை செய்கின்றார்களே என்ற மன வேதனையில் அவன் எப்போதோ மனதால் மடிந்து போயிருந்தான். அவன் நீதிமன்றங்களில், நீதிபதியிடம் பேசிட வாய்ப்புக் கிடைத்தபோதெல்லாம் என்னை தூக்கில் போட்டுவிடுங்கள் என்றே திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தான். மரணந்தான் அவனுக்கு விடுதலை, நிம்மதி!
கிடைத்த மரணம் சித்திரவதைகளிலிருந்து விடுதலை. இன்னும் சொன்னால் சிறைச்சாலையில் அவன் அடிக்கடி தன் தலையை சுவற்றில் மோதிக்கொண்டான். இதனை அசிஸ் சவுதிரி என்ற எழுத்தாளர், (இவர் மும்பை தாக்குதலில் தன் உறவினரில் சிலரை இழந்தவர்) கூறுகின்றார்: TH:23/11/2012.
யார் இந்த கசாப்?
இந்த ‘கசாப்’ நமக்குச் சொல்லப்படுவதைப் போல், பாகிஸ்தானில் இருந்து 2008 ஆம் ஆண்டு மும்பையைத் தாக்குவதற்காக வந்தவனல்ல. அவன் 2006 ஆம் ஆண்டு வறுமை தாளாமல் நேப்பாள்- என்ற நமது அண்டை நாட்டுக்கு பிழைப்புத்தேடி வந்தவன். அவன் மட்டுமல்ல இப்படி எத்தனையோ பேர் பாகிஸ்தானிலிருந்து வயிறு பிழைக்க நேப்பாளுக்கு வந்திருக்கின்றார்கள்.
இவர்களில் யாரும் நேப்பாளத்திற்குள் ஊடுருவி விடவில்லை. அவர்கள் அத்தனை பேருமே முறையான document-கள் வழி நேப்பாளத்திற்குள் வந்தவர்கள்தாம். பல நேரங்களில் அவர்களை நேப்பாள அரசு கைது செய்து முறையான வேலை அனுமதியைப் பெற்று வந்திட வேண்டும் என திரும்ப அனுப்பியுள்ளது.
இப்படிக் கைது செய்யப்படுவர்களில் சிலரை இந்திய உளவுத்துறை இங்கே கடத்தி வந்துவிடுவது உண்டு. சிலரை இந்தியாவைத் தாக்கிட நேப்பாளத்திற்கு வந்ததாகவும், பின்னர் நேப்பாளத்திலிருந்து இந்தியாவிற்குள் ஊடுருவ தயாராக இருந்தாகவும் கூறி முறையாக அழைத்து வருவதும் உண்டு. எப்படி அழைத்து வந்தாலும், அவர்களை நேப்பாளிலிருந்து அழைத்து வந்ததாகவோ, கடத்தி வந்ததாகவோ பதிவு செய்வதில்லை. இத்தனைக்கும் நமது இந்தியாவிற்கும் நேப்பாளத்திற்கும் Deportation  Agreement என்று சொல்லக் கூடிய தேவைப்படும் நபர்களை அனுப்பித் தந்திட வேண்டும் என்ற ஒப்பந்தம் இருக்கின்றது.
ஆனால் நம்மவர்கள் நமது உளவுத்துறையின், ஏற்பாட்டின் கீழ் அவர்களை இந்தியாவில் ஒரு பயங்கர பதுங்குமிடத்தில் வைத்துக் கைது செய்ததாகவே காட்டுவார்கள். இந்த மொத்த விவகாரத்தையும் தி வீக் ‘The Week’ பத்திரிகை வெளியிட்டிருக்கின்றது.
அப்படி நேப்பாளிலிருந்து கொண்டு வரப்படுபவர்களை என்ன செய்வார்கள்? அவர்களை இந்தியாவிலிருக்கும் பல்வேறு சித்திரவதைக் கூடங்களிலும் வைத்து சித்திரவதைச் செய்வார்கள். பின்னர் அவர்களைத் தங்கள் விரும்பும் இடத்தில் வைத்து, விரும்பிய குண்டு வெடிப்புகளில் சம்மந்தப்படுத்திக் காட்டுவார்கள். உண்மையில் அந்தக் குண்டு வெடிப்புகளை நடத்தியவர்கள், அபிநவ்பாரத் போன்ற இந்துத்துவ தீவிரவாத அமைப்பைச் சார்ந்தவர்களாக இருப்பார்கள்.
இப்படித்தான் அஜ்மல் கசாப் சிக்க வைக்கப்பட்டான். அவன் 2006 முதலே நமது உளவுத்துறையின் கைகளில் இருக்கின்றான், என்பதை நமது முன்னாள் காவல்துறை அதிகாரி ஷி.வி.முஷ்ரிப் அவர்கள் எழுதிய “கர்கரேயை கொலை செய்தது யார்?” என்ற நூலில் தெளிவுபடுத்துகின்றார்.
நேப்பாளத்திலுள்ள உச்ச நீதிமன்றத்தில் இவருடைய வழக்கு 2006இலேயே நடந்தது. இவருக்காக பாகிஸ்தானைச் சார்ந்த, வழக்கறிஞர் சி.வி.பாரூக் என்பவர் வந்து வாதிட்டார். ஆனால் அந்த வழக்கில் நேப்பாள உச்ச நீதிமன்றம் கசாப்-ஐ விடுதலை செய்ய மறுத்து விட்டது. காரணம் கேட்டபோது “Not on the Merits of the Case, but on the Technical Grounds” எனக் கூறியது. இதன் பொருள், அவர் மீது சாட்டப்பட்ட குற்றங்கள் நிரூபிக்கப்பட்டுவிட்டது என்பதனால் அல்ல; மாறாக, அவரை விடுதலை செய்ய எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் முறையாக அமையவில்லை என்பதனால்தான். இப்படி நேப்பாளத்தில் உச்சநீதிமன்றம் வரை விவாதித்திற்குள்ளானவர் 2008 இல் தாக்குதல் நடந்தபின் கையில் ஒரு AK 47 ரக துப்பாக்கியுடன் அத்துணை ஒய்யாரமாக நடந்து வருவானாம். இருவர் படம் எடுப்பார்களாம். நம்புங்கள் எங்களை என்கின்றார்கள் மும்பை தாக்குதலுக்கு ஏற்பாடு செய்தவர்கள். கசாப்-ஐ 2006இலேயே இந்திய உளவுத்துறையிடம் நேப்பாள் அரசு ஒப்படைத்தது என்கின்றார் வழக்கறிஞர் சி. வி. பரூக். Source:  The News Revalpindi, Tol: DEC16, 2008.
கர்கரேயைக் கொலை செய்தது யார்? என்ற நூலை நாம் தமிழகத்தில் அறிமுகப்படுத்திய நாள் முதலே, நாம் ஒரு செய்தியை நினைவுபடுத்தி வருகின்றோம்.
மும்பை CST என்ற சக்கரவர்த்தி சிவாஜி இரயில் நிலையம் என்ற மும்பை விக்டோரிய ரெயில் நிலையத்தில் தாக்குதலை நடத்தியவர்கள் முகத்தை நன்றாக மூடிக்கொண்டுதான் தாக்குதலை நடத்தினார்கள். அவர்கள் துப்பாக்கிகளை இயக்கிய வேகம் யாரும் அவர்களைப் படம் எடுக்கும் நிலையில் இல்லை. ஆகவே அஜ்மல் கசாப்-ஐ அங்கே ஜோடித்திருக்கின்றார்கள், வீடியோக்களில் தங்கள் விளையாட்டுக்களைக் காட்டி. இதனை மும்பை ரெயில் நிலையத்தில் உணவு விடுதி நடத்தி வரும் ஷஷிகுமார் சிங் என்பவரும் உறுதி செய்துள்ளார்.
தாக்குதலை நடத்தியவர்களை போட்டோ எடுத்து யார்?
மும்பை ரெயில் நிலையத்தில் தாக்குதலை நடத்தியவர்களை போட்டோ எடுத்தாகக் கூறப்படுபவர்கள் இரண்டு பேர். இவர்கள் இருவரும் இருவேறு பத்திரிக்கையைச் சார்ந்தவர்கள்.
ஒருவர் மும்பை மிரர் என்ற ஆங்கில பத்திரிகையைச் சார்ந்தவர்: பெயர் செபாஸ்டின், டி சவோசா. மற்றொருவர் “புடாரிபூன்” என்ற மராட்டிய பத்திரிகையைச் சார்ந்தவர். இந்த இரண்டு போட்டாக்களும் ஒன்று தான். அதாவது அது அவர்களின் கைகளில் (மேற்படி)யாளர்களால் திணிக்கப்பட்டவை. ஆனால் வழக்கு நடந்து கொண்டிருந்தபோது, "இந்த இருவரையும் சாட்சியம் கூறிட கொண்டு வாருங்கள்! அவர்களிடம் அவர்கள் எப்படிப் படம் எடுத்தார்கள் என்பதை விசாரிக்க வேண்டும்" என கேட்டார்கள், அஜ்மல் கசாப்பிற்காக அரசு நியமித்த முதல் வழக்கறிஞர்கள்.
அவர்களை நீதிமன்றத்திற்கு கொண்டு வந்திட இயலாது என அடம்பிடித்தார் நீதிபதி. "அவர்களை குறுக்கு விசாரணைச் செய்ய அனுமதிக்க மாட்டோம். அவர்கள் எழுதி தந்துள்ள அறிக்கையை அப்படியே அட்டி இன்று ஏற்றுக்கொள்ள வேண்டும்" என்றார் நீதிபதி தகல்யானி. "அவர்களை நீதிமன்றம் கொண்டு வந்தாக வேண்டும். அவர்களிடம் போட்டோ எப்படி எடுத்தார்கள் என்பதையெல்லாம் விசாரித்தாக வேண்டும்" என அடம்பிடித்தார் அரசு தரப்பில் கசாப்பிற்காக நியமிக்கப்பட்ட வழக்கறிஞர்.
நீதிபதி அந்த வழக்கறிஞரை மாற்றினாரே அல்லாமல், போட்டோ எடுத்தவர்களை சாட்சியம் சொல்ல தருவிக்கவில்லை. அடுத்து இன்னொரு வழக்கறிஞரை நியமித்தார்கள். அவர் தான் அப்பாஸ் காஸ்மி. அவர் இரண்டு கோரிக்கைகளை முன்வைத்தார். ஒன்று அஜ்மல் கசாப்-ஐ ஒரு முறையேனும் சந்திக்க வேண்டும். அதுவும் தனிமையில். இரண்டு, போட்டோ எடுத்தவர்களை நேரில் விசாரிக்க வேண்டும்.
சிறப்பு நீதிமன்ற நீதிபதி இரண்டு கோரிக்கைகளையுமே நிராகரித்தார். அத்தோடு அந்த வழக்கறிஞரையும் நீதிபதி நீக்கிவிட்டார். இறுதியில் கசாப்பின் தரப்பில் பொம்மைதாம் நியமிக்கப்பட்டிருந்தார். அவர் பெயர் K.P. பாவர். TH: 1/12/009. அவர் கசாப்-ஐ ஊசி போட்டுக் கொல்ல வேண்டும் என்று கசாப்பிற்காக வாதாடினார். என்னே நீதி இங்கே!.
அரசே நியமித்த வழக்கறிஞர் அரசே வெளியே தள்ளியது...?
26/11 வழக்கை நடத்திய நீதிபதி எம்.எல்.தகாலியானி அவர்கள், தன் சார்பில் ஒரு விஷயத்தை ஏற்க வேண்டும் என்றார் வழக்கறிஞர் அப்பாஸ் காசிமி அவர்களிடம். அது, "இந்த வழக்கில் 71 சாட்சிய அறிக்கைகளை வைத்திருக்கின்றோம். அஜ்மல் கசாப் சார்பில் அவற்றை ஏற்றுக் கொள்ளப்பட்ட சாட்சியங்களாக அங்கீகரிக்க வேண்டும். இந்த 71 சாட்சிய அறிக்கைகளையும் தந்த சாட்சியங்களை நீதிமன்றத்தில் கொண்டு வந்து நிறுத்த வேண்டும், அவர்களை குறுக்கு விசாரணை செய்ய வேண்டும் எனக் கேட்கக் கூடாது."
இதனையும் அப்பாஸ் காஸ்மி ஏற்றுக்கொள்ளவில்லை. அதனால் நீதிமன்றத்திலேயே பகிரங்கமாக வழக்கறிஞர் அப்பாஸ் காஸ்மி அவர்களைக் கண்டித்தார் நீதிபதி தகல்யானி.        
20,000 பக்கங்களைப் படிக்க.
கசாப் மீது தாக்கல் செய்யப்பட்ட குற்றப் பத்திரிகை 20,000 பக்கங்களைக் கொண்டது. இதைப் படிக்க, சிறப்பு நீதிமன்ற நீதிபதி தகால்யானி கொடுத்தது எட்டே நாள்கள் தாம். இந்த எட்டு நாள்களில், மூன்று நாட்கள் கசாப்-இன் வயது பற்றிய விவகாரத்தில் கடந்துவிட்டன. மீதமுள்ள ஐந்து நாள்களில் 20,000 பக்கங்களைப் படித்திட முடியாது என்ற கோரிக்கையை அவசர நீதிபதி தகாலியானி ஏற்றுக் கொள்ளவில்லை ஐந்து நாள் கால அவகாசத்தை அப்பாஸ் காசிமி ஏற்றுக் கொள்ளவில்லை. SOURCE: FRONTLINE SEPT 16, 2012. GAISIW Kasab case
இதுவும் அப்பாஸ் காசிமியை வெளியேற்றிட, அதாவது கசாப்பிற்காக வாதாடுவதிலிருந்து அப்பாஸ் காசிமியை வெளியேற்றிட தகல்யானி கண்டுபிடித்த இன்னொரு காரணம். ஏனெனில் தகாலியானியை நியமித்தவர்கள் தூக்குத் தண்டனையை விரைந்து வழங்கிட வேண்டும் எனக் கட்டளை இட்டிருந்தார்கள்.
கசாப் -இன் வயது: நமக்குப் பொதுவாகக் காட்டப்படுவதைப்போல் கசாப் ஒரு வளர்ந்த வாலிப வயதைச் சார்ந்தவன். அவனுக்காக நியமிக்கப்பட்ட வழக்கறிஞர்கள் அவன் ஒரு ‘ஜீவனைல்’ என்ற குழந்தைகள் வயதிற்குள் வரும் ஒரு பையன் என்றே நினைத்தார்கள். ஆகவே அவனை நேரடியாகத் தனியாகச் சந்திக்கும் வாய்ப்பை நீதிபதி தகாலியானிடம் கேட்டார்கள். நீதிபதி சந்திக்க விடமாட்டேன் எனக் கூறிவிட்டார். இதனால் கசாபுடைய வயதை அறிந்திட இருந்த அனைத்து வழிகளும் அடைக்கப் பட்டுவிட்டன.
ஆனால் நமது சட்டங்கள் குறிப்பாக “குழந்தைக் குற்றவாளிகள் சட்டம் 2001” என்ன சொல்லுகின்றது என்றால், குற்றவாளியின் வயதை சரியாக தெரிய வேண்டும் என்ற விண்ணப்பம் வைக்கப்படுமேயானால், அதனை நீதிமன்றம் விசாரணைக்கு உட்படுத்திட வேண்டும். உண்மையான வயதை அறிந்து ஆவணங்களில் கொண்டு வந்திட வேண்டும்.
ஆனால் நீதிபதி தகயல்யானி தனது எஜமான விசுவாசத்தைக் காட்டிட விரும்பினார். வயது குறித்த மனுதாக்கல் செய்யப்பட்ட அதே வேகத்தில் அதை நிராகரித்தார்.
அஜ்மல் கசாப்பிற்காக நமது இந்திய அரசால் நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் அப்பாஸ் காஸ்மி, மேல் முறையீட்டுக்குத் தயாரானார். உடனேயே சிறப்பு அரசு வழக்கறிஞர் யுஜ்ஜவால் நிக்காம் நீதிபதி தகல்யானி முன், அஜ்மல் கசாப்பின் வயதை அறியும் மனு ஒன்றை வேகமாகத் தாக்கல் செய்தார்.
இவ்வளவு அவசரப்பட்டதற்குக் காரணம் அஜ்மல் கசாப்பின் உண்மை வயது எங்கே வெளியே வந்து விடுமோ, எங்கே நாம் அவனை விரைந்து தூக்கிலிடுவது சிக்கலாகிவிடுமோ என்ற எண்ணங்கள்தாம்.
அஜ்மல் கசாப்-ஐ விரைந்து தூக்கிவிட்டால் தான், இங்கேயுள்ள பலரைக் காப்பாற்றிட இயலும். ஆகவே அரசு வழக்கறிஞர் யுஜ்ஜவால் நிக்காம் மனுவை (அதாவது அஜ்மல் கசாப் இன் வயதை அறியும் மனுவை) தனது சார்பில் பதிவு செய்தார். அதே வேகத்தில் அந்த மனு ஏற்றுக் கொள்ளப்பட்டது.
அஜ்மல் கசாப் இன் வயதை அறிந்திட ஏற்பாடு செய்தார்கள். அவன் குழந்தை குற்றவாளி வயதைக் கடந்த வயதுக்கு வந்துவிட்டான். “வயது சுமார் 21” என அறிவித்தார்கள். SOURCE: FRONT LINE: Sept 16, 2012.
யார் சொன்னது எனக் கேட்டபோது எக்ஸ்ரே வல்லுநர்கள் சொன்னார்கள் என்றார்கள். "அவர்களில் ஒருவரை நீதிமன்றத்தில் நிறுத்தி ஒரு நிமிடம் கேள்வி கேட்கலாமா" என்று கோரியபோது முடியாது, கூடாது எனக் கூறிவிட்டார்கள்.
"சரி அவர்கள் தந்த எக்ஸ்ரே அறிக்கையை வேறு ஒரு நிபுணரிடம் காட்டி ஒரு கருத்தைக் கேட்கலாமா? நீதியின் பெயரால் ஒரே ஒரு வாய்ப்பாவது வழங்கப்படுமா? அந்த X ray -ரிப்போர்ட்டின் உண்மை நகல் ஒன்று கிடைக்குமா?" எனக் கேட்டபோது, அதற்கும் அனுமதிக்கவில்லை. "நீ வெளியே போ" என அஜ்மல் கசாப்புக்காக வாதாட அவர்களே நியமித்த வழக்கறிஞரை தூக்கி வீசிவிட்டார்கள்.
இந்த தகவல்களைத் தரும் FRONTLINE இப்படிக் கூறுகின்றது “Getting other Experts Opinion may have helped kasmi in contesting the technical evidence”. ஏனைய நிபுணர்களின் கருத்தைத் தெரிந்திடுவது. காசிமிக்கு நீதிமன்றத்தில் காட்டப்படும் “டெக்னிக்கல்” சாட்சியங்களை எதிர்த்து வழக்காட பெரிதும் உதவி செய்திருக்கும். FRONT LINE; Sept 16, 2012. வயதைப் பொறுத்தவரை மருத்துவ சான்றிதழை ஏற்றுக் கொள்ள முடியாது என்பது வரையறுக்கப்பட்ட மருத்துவ நியதிகள். ஒரு குழந்தை குற்றவாளியை தூக்கில் போடுவது எல்லா விதத்திலேயும் தடுக்கப்பட வேண்டிய ஒன்று. அதேபோல் கசாப்பும் இன்னும் 9 பேரும் முதலில் ஒரு கப்பலில் பாகிஸ்தானிலிருந்து வந்தார்கள். பின்னர், அந்தக்கப்பலில் இருந்து வெளிபோந்த குயூபர் போட்டில் வந்தார்கள் -தீவிரவாதிகள் என கதை கட்டினார்கள்.
இந்த குயூபர் போட்டையும் பார்வையிடவேண்டும் என காசிமி கேட்டார். அதேபோல், இந்திய சாட்சிய சட்டம் பிரிவு 27 இன் கீழ் பதிவு செய்யப்பட்ட எல்லாத் தளங்களையும் பார்வை இடவேண்டும் எனக் கோரினார். இதற்கெல்லாம் நீதிபதி தந்த ஒரே பதில் - நீ ஒத்துழைக்கமாட்டேன் என்கின்றாய். வெளியே போ.
மூத்த வழக்கறிஞர் Fali S.நரீமான், அப்பாஸ் காசிமியை நீக்கிய விதத்தைக் காரணங்காட்டியே உயர் நீதிமன்றம், இந்த மொத்த தீர்ப்பையும் நிராகரித்திருக்கலாம். ஆனால் ஆச்சர்யப்படக் கூடிய அளவில் உயர்நீதிமன்றம், இந்த மொத்த விவகாரத்தையும் கண்டுகொள்ளவே இல்லை.
இதில் அதிர்ச்சிதரும் தகவல் என்னவெனில், உச்சநீதிமன்றம் ராக்கட் வேகக்தில் ஆகஸ்ட் 29இல் வழங்கிய தீர்ப்பிலும் இதைக் கண்டு கொள்ளவில்லை.
உயர்நீதிமன்றத்தில்:
உயர் நீதிமன்றத்தில் கசாப்புக்காக வைக்கப்பட்டிருந்த வழக்கறிஞர்கள் அமின் சோல்கர், பர்கானாஷா ஆகியோரும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளிடம், "தாங்கள் கசாப்-ஐ சற்று கூப்பிடு தூரத்தில் நின்றாவது சந்திக்க அனுமதி வேண்டும்" எனக் கேட்டார்கள்.
அதற்கு உயர்நீதிமன்றம் "அவன் உங்களையும் சிறையில் வைத்து ஏதேனும் செய்துவிடுவான். அதனால் சந்திக்க அனுமதிக்க முடியாது" எனக் கூறிவிட்டார்கள்.
அதன்பின் கசாப்-ஐ தூக்கில் தொங்கவிடும் ஆணையை உறுதி செய்யுமுன், அவனது மனநிலை பற்றிய ஆய்வு ஒன்றை நடத்திட வேண்டும் என்பது சட்டத்தின் தேவை. ஏனெனில் அவன் திருந்தும் வாய்ப்பிருந்தால் அல்லது சிறையில் சந்தித்த தனிமை போன்றவற்றால் மனநிலை பாதிக்கப்பட்டிருந்தால், ‘mitigating circumstance’ தூக்குத் தண்டனையை தவிர்க்கும் சூழல் ஏற்படும். இது கருணை மனுவில் பெரிய அளவில் உதவி செய்யும்.
இதற்கான ஏற்பாட்டைச் செய்திட வேண்டும் என கசாபிற்காக உயர் நீதிமன்றத்தில் நியமிக்கப்பட்ட வழக்கறிஞர்கள், கேட்டபோது அந்தக் கோரிக்கையையும் தூக்கி வீசிவிட்டார்கள்.
ஒரு பாகிஸ்தான் குழந்தையை 2006 இல் நேப்பாளிலிருந்து பிடித்து வந்து 2008 மும்பை தாக்குதலின் ஒரே குற்றவாளி எனக் கூறி கொலை செய்துவிட்டார்கள். இதில் உச்ச நீதிமன்றமும் உடந்தை!
மேலும் விளக்கங்களுக்கு படியுங்கள் "கர்கரேயைக் கொலை செய்து யார்?"
நீதிபதி தகலியானி-இன் சட்டத் துரோகம்:
ஒரு வழக்கில் குற்றச்சாட்டப்பட்டு நிற்கும் ஒருவனுக்கு, வழக்காட வக்கில்லை என்றால், அரசு ஒரு வழக்கறிஞரை நியமிக்கின்றது. அவருக்குச் சம்பளமும் தருகின்றது.
வழக்கறிஞரை நியமிக்கும் உரிமைதான் அரசுக்கு இருக்கின்றதே அல்லாமல், அவரைத் திரும்பப் பெற்றுக் கொள்ளும் உரிமை அரசுக்கில்லை. ஆனால் அந்த உரிமை குற்றம் சாட்டப்பட்ட திக்கற்ற குற்றாளிக்கு மட்டுமே உண்டு.
ஆனால் இங்கே கசாப்-ஐ தூக்கிலிட்டு, அத்தனை இந்து ராஷ்டிர சிற்பிகளையும் காப்பாற்றுவதே நோக்கம். அதனால் நமது நீதிபதிகள், நமது நாட்டுச் சட்டங்களுக்கு கசாப் வழக்கில் துரோகம் செய்வதை தேசிய சேவை என எடுத்துக் கொண்டார்கள்.
மேல் முறையீடு:
“என்னை விலக்கியது சரியல்ல, அதில் நீதிபதி சட்டத் துரோகத்தைச் செய்துவிட்டார்” என வழக்கறிஞர் அப்பாஸ் காஸ்மி அவர்கள் உயர் நீதிமன்றம் சென்றார். கசாப்-ஐ தூக்கில் போடும் வரை உயர்நீதிமன்றம் இந்த மனுவின் மேல் முடிவெடுக்கவில்லை. FRONTLINE: SEPT 16, 2012.
எப்படி இருக்கின்றது நீதிபரிபாலனம்? நம் நாட்டில் அரசியலில் முகவரி இழந்துவரும் சோற்றால் அடித்த பிண்டங்கள் பல, சட்டத்தின் எல்லா கதவுகளும் கசாப்பிற்கு திறந்து விடப்பட்டிருந்தன எனப் பிதற்றுகின்றன. வெட்கம்! வெட்கம்!! மாபெரும் வெட்கம்
புகைப்படமும் கசாப்பும்.
கசாப்-ஐ அதாவது அவன் லாவகமாக மும்பை CSTஇல் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டிருந்தபோது படம் எடுத்த பத்திரிகையாளர்களை கடைசிவரை நீதிபதியிடமோ, நீதிமன்றத்திலோ நிறுத்திடவில்லை.
ஆனால் மும்பை CST ரெயில் நிலையத்தில் - துப்பாக்கிச் சூடு நடந்த இடத்தில் - 18 ‘CCTVS’ என்ற கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தன. அவை துப்பாக்கிச் சூடு நடந்ததை மட்டுமல்ல, அங்கே நடந்த ஒவ்வொரு நிகழ்வுகளையும் நீண்ட நாள்களாகவே படமெடுத்து வருகின்றன. அவற்றின் பதிவுகள் தாம் நீதிமன்றத்தின் முன் வைக்கப்பட்டிருக்க வேண்டும்.
அதை நம்மைப் போன்றவர்கள், S.M. முஷ்ரிப் தலைமையில் கேட்டபோது "அந்த பதினெட்டுக் கேமராக்களும் அன்று வேலை செய்யவில்லை. ஆனால் மீதமுள்ள 20 கேமராக்களும் வேலை செய்தன" என்றார்கள். "இரண்டனவற்றை வேறு பக்கம் திருப்பி விட்டுவிட்டோம்" எனக் கூறிவிட்டார்கள்.
இந்து ரஷ்டிரவுக்காக அதாவது நம் நாட்டுக்கு எதிராக போர் தொடுத்துக் கொண்டிருப்பவர்களைக் காப்பாற்றிட நமது பிரதிநிதியான உள்துறை அமைப்பு செய்த ஏற்பாடு. அவர்கள் இப்போது நமது அரசாங்கத்தில் நமது வரிப்பணத்தில் சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கின்றார்கள் - என்னே அவலம்!
கசாப் - யாரைக் காப்பாற்ற இந்த அவசர தூக்கு?
உண்மையிலேயே மும்பைத் தாக்குதலை நடத்தியவர்கள் யார்? மும்பை ரெயில் நிலையத்தில் தாக்குதலை நடத்தியவர்களின் செல்போன்களும் சிம் கார்டுகளும் கிடைக்கவே செய்தன. மாவட்டம் வே தாலுக் கும்பப் புகார்வாடி கிராமத்தவர்களுக்குச் சொந்தமானவை.
ஒன்றின் உடைமையாளர் அஷோக் ஷார்க், அவர் அதனை இரத்தின கிரி என்ற இடத்தில் தொலைத்து விட்டதாகக் கூறினார். ஆனால் அதை பயன்படுத்திக் கொண்டிருந்தவர் சத்தீஷ்கர் மாநிலத்தில் சங்கப் பரிவாரத்தின் பிரச்சாரகர். இன்னொரு சிம் கார்டு, அதே முத்தாரா மாவட்டத்திலுள்ள வாலி தாலுகாவிலுள்ள ஒரு பெண்ணுக்குச் சொந்தமானது.
"இந்த சிம் கார்டு, இதனை பயன்படுத்தியவர்கள் - இவர்களையெல்லாம், ஏன் விசாரணைக்குக் கொண்டு வந்திடவில்லை?" எனக் கேட்டதற்கு, "இவர்களையெல்லாம் விசாரிக்க வேண்டும் என நாங்கள் கருதவில்லை" எனக் கூறிவிட்டார்கள்.
இவர்களையெல்லாம் விசாரித்தால் இங்குள்ள இந்துத்துவ அமைப்புகள், மொத்தமாக சிக்கி இருக்கும். அவர்களை காப்பாற்றத் தான் இந்த அவசர இரகசிய தூக்கு.
சட்டம் தன் கடமையைச் செய்ததா?
இல்லை! கசாப்-இன் கருணை மனுவை நிராகரித்திருந்தால் கூட, அவன் மீண்டும் நீதிமன்றங்களை அணுக உரிமை உண்டு. என்னென்ன காரணங்களுக்காகக் கருணை மனு நிராகரிக்கப்பட்டதோ அதை சீர்தூக்கிப் பார்த்திடும் அளவில் அவன் மறுபரிசீலனைக்கு மனு போடலாம். இதனை விளக்கமாக அறிந்திட பாரதப் பிரதமர் இந்திரா காந்தியைக் கொலை செய்த குற்றவாளி கேகர் சிங் விவகாரத்தில் என்ன நடந்தது என்பது ஓர் எடுத்துக்காட்டு.
பிரதமர் இந்திராகாந்தி கொலையும் கேஹர் சிங்கும் Kaher Singh Vs Union of India (AIR 1989 SC 653) 
கேகர் சிங் என்பவர் பாரதப் பிரதமர் இந்திரா காந்தியைக் கொலை செய்தவர்; கொலை செய்திட சதிதிட்டம் தீட்டியவர் என்றெல்லாம் குற்றம் சாட்டப்பெற்றவர். குற்றம் நிரூபிக்கப்பட்டு மரண தண்டனை வழங்கப் பெற்றவர்.
அவர் தனக்கு வழங்கப் பெற்ற மரணதண்டனையை எதிர்த்து உச்ச நீதிமன்றம் சென்றார். உச்சநீதிமன்றம் அவரது மனுவை தள்ளுபடி செய்தது; மரண தண்டனையை உறுதி செய்தது. அவருடைய மகன் குடியரசு தலைவருக்கு மனு ஒன்றை அனுப்பினான். அதில் "அரசியல் நிர்ணயச் சட்டம் பிரிவு 72இன் கீழ் தனது தந்தைக்கு கருணை காட்டிட வேண்டும். மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்க வேண்டும்" எனக் கேட்டுக் கொண்டான். அதையும் குடியரசு தலைவர் நிகராகரித்து விட்டார்.
பின்னர் கேகர் சிங் தான் குடியரசு தலைவரைத் தனியாகச் சந்தித்து சில விஷயங்களைப் பரிமாறிக்கொள்ள விரும்பி, அதற்காக மனு கொடுத்தார். இதனை குடியரசு தலைவர் நிராகரித்து விட்டார்.
"கருணை மனுவைத்தான், தான் பரீசிலிக்க முடியும். அஃதல்லாமல் வேறு யாரையும் அதுகுறித்து சந்திக்க இயலாது. காரணம் இதுவரை நம் நாட்டில் பின்பற்றப்பட்டுவரும் நெறிமுறைகளுக்கு அஃது நேர் எதிரானது" எனக் கூறிவிட்டார் குடியரசு தலைவர்.
குடியரசு தலைவரின் பதிலையும், கருணை மனு நிராகரிக்கப்பட்டதை எதிர்த்தும் டெல்லி உயர் நீதிமன்றத்திற்குச் சென்றார் கேகர் சிங். டெல்லி உயர் நீதிமன்றம் அவர் மனுவை நிராகரித்தது.
உச்ச நீதிமன்றம் சென்றார். உச்சநீதிமன்றம் "குடியரசு தலைவரின் அதிகாரத்திற்கு எல்லாம் உட்பட்டது. கருணை மனுக்களை ஏற்றுக் கொள்வது அல்லது நிராகரிப்பது என்பது நீதிமன்றங்களுக்கு இருக்கும் அதிகாரத்தை குடியரசு தலைவர் பெறுவதுதான். ஆனாலும் நீங்கள் உச்ச நீதிமன்றம் உறுதி செய்த சாட்சியங்களை மறுபரிசீலனை செய்யலாம். நாங்கள் வழங்கியுள்ள தீர்ப்பையும் மறுபரிசீலனை செய்யலாம்" எனக்கூறியது. இதில் உச்ச நீதிமன்றம் குடியரசு தலைவரின் அதிகாரத்தின் எல்லை விரிவானது என்பதை விளக்கியது. அதனால் அனைவரும் குடியரசு தலைவர் தனது அதிகாரத்தை தாராளமாகப் பயன்படுத்தலாம் என்கின்றனர். உச்ச நீதிமன்றம் மேற்கொண்ட நிலைபாட்டைப் பாராட்டினார்கள்.
மொத்த சூழலையும் பாராட்டிய மாதாபுஷி கிரிதர் (இவர் ஹைதராபாத் சட்டக்கல்லூரி பேராசிரியர்) கூறுகின்றார். “நமது உச்ச நீதிமன்றம் தவறு செய்தால், அதனை குடியரசு தலைவர் சீர் செய்யலாம். குடியரசு தலைவர் தவறு செய்தால், உச்ச நீதிமன்றம் சரி செய்யலாம்" என்கின்றார். (The Hindu, No.22,2012.)
இந்த மொத்த விவகாரத்திலும் குற்றவாளிக்கு கருணை மனுவோடு விவகாரம் முடிந்திடவில்லை. குடியரசு தலைவர் கருணை மனுவை தள்ளுபடி செய்ததற்கான காரணங்களை எதிர்த்து அவர் உயர் நீதிமன்றமும், அதுவும் மறுத்தால், உச்ச நீதிமன்றமும் சென்றிட முடியும்.
நீதி தேடிடும் மீதமிருக்கும் வழிமுறைகளை முற்றாக மறுத்துவிட்டு சட்டம் தன் கடமையைச் செய்தது எனச் சொல்லுவது நாம் ஓர் சர்வாதிகார நாடு என்பதையே சொல்லும்.
சுருக்கமாக இந்துராஷ்டிரவின் சட்டம் செயலில் வந்துள்ளது. இதனால்தான் கசாப்-ஐ நமது நீதி நிறுவாகம் கொலை செய்துவிட்டது. இப்படித்தான் கசாப்-இன் கொலையை An Act of Constitutional Improperiety என்கின்றார்கள். அதாவது அரசியல் நிர்ணயச்சட்டத்தின்படி ஓர் அடாத செயல்.
உள்துறை அமைச்சர் ஷுஷில் குமார் ஷிண்டே-இன் அறியாமை.
ஏன் அவசர அவசரமாகத் தூக்கில் போட்டீர்கள் என்பதற்கு இப்படிப் பதில் சொல்லி இருக்கின்றனர். “நான் ஒரு காவல்துறை அடியாளாய் பயிற்சி எடுத்தவன். இவற்றில் இரகசியம் காப்பது என் இயல்பு." இப்போதுதான் உண்மை வெளிச்சத்திற்கு வருகின்றது. அதாவது காவல் நிலையத்தில் அமர்ந்து அப்பாவிகள் மீது பொய் வழக்குகளைப் போட்டுக் கொண்டிருந்தவர் மத்திய அமைச்சராகி இருக்கின்றார். அத்தோடு இப்படியும் கூறியுள்ளார்.
"இன்னொரு முறை மனித உரிமைகள் அமைப்புகள் இதில் பிரச்னைகளை உருவாக்குவார்கள் என்பதால் தான் நான் இரகசியமாக வைத்திருந்தேன்." இப்படி ஒரு மத்திய அமைச்சர் கூறியிருப்பது, நம் நாட்டை ஒரு சர்வாதிகார நாடாகவே மக்கள் மனதில் பதிய வைக்கும் என்கின்றார் இந்து பத்திரிகையின் கட்டுரையாளர்.
ஆனால் நமது ஷிண்டேயை விஞ்சி மனித உரிமை அமைப்புகள் வேகமாக செயல்படுகின்றன. மும்பையிலிருந்து ஓர் மனித உரிமை அமைப்பு அனுப்பிய சுற்றறிக்கை:
IB-இன் வேலை
ஆதிமுதல் அனைத்தும், IB என்ற மத்திய உளவுத்துறையின் வேலை இது என்கின்றார்கள்.
1. அஜ்மல் கசாப்-இன் கருணை மனுவை கசாப் தயாரித்ததாகக் கூறப்படுகின்றது. அதுவும் 3 முதல் 4 நாள்களுக்குள் தயாரித்துவிட்டதாகக் கூறப்படுகின்றது.
உண்மையில் கசாப்பிற்கு ஆங்கிலம் தெரியாது. உச்ச நீதிமன்ற தீர்ப்பு ஆங்கிலத்தில் தான் வெளியே வந்தது. அது 400 பக்கங்களைக் கொண்டது. பிரபல வழக்றிஞர்களே 400 பக்கத் தீர்ப்பை படிக்க நாற்பது நாள்கள் கேட்டார்கள். ஆனால் ஆங்கிலம் தெரியாத கேசாப் 4 ஐந்து மூன்று முதல் 4 நாள்களில் படித்து, தனக்குத் தெரியாத மொழியில் கருணை மனுவை தயாரித்து விட்டானாம்.
அது உடனேயே உரிய துறைகள் மூலம் குடியரசுத் தலைவருக்கு விரைந்து சென்றதாம். குடியரசுத் தலைவர் 29 மனுக்கள் தனக்குப் பின்னால் இருக்க இந்த மனுவை முதன் முதலில் எடுத்தாராம். மறுத்தாராம்-கசாப் செத்தாராம். அனைத்தும் மத்திய உளவுத்துறையின் வேலை என்கின்றது மும்பை மனித உரிமை குழுமம்.
2. ஆனால் மேலே நாம் சொன்ன இந்த உண்மைகளையெல்லாம் மனுவாக மாற்றி மராட்டிய மாநில அரசிடம் தந்தார் வழக்கறிஞர் எங் சவுதிரி என்பவர். ஆனால் மத்திய உளவுத்துறை அதை ஒன்றுமில்லாமல் ஆக்கிவிட்டது. உச்ச நீதிமன்ற (அ) நீதிமன்ற தீர்ப்பைப் பற்றி அந்த மனித உரிமை அமைப்பின் அறிக்கை இப்படிக் கூறுகின்றது.
“உச்ச நீதிமன்ற நீதிபதிகளையும் மத்திய உளவுத்துறை ஏமாற்றிவிட்டது. இந்தியாவிலுள்ள ஒரே ஏதேச்சதிகாரி மத்திய உளவுத் துறைதான். இது பிரதம அமைச்சர் குடியரசு தலைவர், அரசு அனைத்தையும் விஞ்சி அதிகாரம் கொண்டது. சொல்லப்போனால் நாடாளும் மன்றத்தை விஞ்சும் அதிகாரத்தைக் கொண்டது. இங்கே உச்ச நீதிமன்ற நீதிபதிகளையே அது வரை கோட்டில் கையெழுத்துப் போட செய்துள்ளது என்றே சொல்ல வேண்டும். இந்தத் தீர்ப்பைத் தயாரித்தவர்கள் தங்கள் புலனாய்வில் இடம் பெற்ற ஓட்டைகளையெல்லாம் அடைப்பதற்குரிய வரிகளை தீர்ப்பில் திணித்திருந்தார்கள். இந்த வரிகளை தொடக்க நாள் முதல் இந்தச் சதியின்  அனைத்து அம்சங்களையும் தெரிந்தவர்களால் மட்டுமே வரைந்திட முடியும். நீதிபதிகள் இருவரில் ஒருவர் முஸ்லிமாக இருந்ததால் உளவுத் துறையின் வேலை மிகவும் எளிதாகிவிட்டது. முஸ்லிம்கள் பதவியில் உயர, உயர அழுத்தங்களுக்கு எளிதில் ஆளாகிவிடுகின்றார்கள்." (page 6 of the Human Rights Report) பாபரிமஜ்ஜித் வழக்கில் IB பகிரங்கமாகத் தலையிட்டது என்பதை நாம் தெளிவு படுத்தி இருந்தோம்.
ராஜீ ராமச்சந்திரன்
இவர் அரசால் உச்சநீதிமன்றத்தில் நியமிக்கப்பட்ட நீதிமன்ற நண்பன். இவர் கசாப்பிற்கும் உச்ச நீதிமன்றத்திற்கும் இடையில் நட்பை ஏற்படுத்த வேண்டும். இதிலும் ராதாகாந்த் யாதவ் - இவர்தான் நமது சார்பில் கர்கரையைக் கொலை செய்தது யார்? என நீதிகேட்டு உச்சநீதிமன்றத்திற்கும் மும்பை உயர் நீதிமன்றத்திற்கும் கொண்டு சென்றவர் - தந்த தகவல்களின் அடிப்படையில் மிகவும் சிறப்பாக விவாதித்தார். கசாப் நிச்சயமாக விடுதலை பெறுவான் என நம்பினார். ஆனால் தீர்ப்பு அவருக்குப் பெரும் அதிர்ச்சியாக அமைந்தது. இதனால் அவருக்கு உச்ச நீதிமன்றம் தந்த 11.43 லட்சம் ரூபாயையும் அவருடைய உதவியாளருக்குத் தந்த 3.50 லட்சம் ரூபாயையும் மறுத்துவிட்டார்.
= = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = =

என் கருத்து:
பகுத்தறிவுள்ள எல்லா மனிதரும் சொல்வதேதான் நானும் சொல்கிறேன். அஜ்மல் கசாப்தான் தீவிரவாதி என்பதற்கான வலுவான ஆதாரம் சமர்ப்பிக்கப்பட்டால் கசாபுக்கு தூக்கு தண்டனை ரகசியமாய் அல்ல, மக்கள் முன்னிலையிலேயே செய்யப்பட வேண்டும் என மனுவே எழுதியிருப்பேன். ஆனால் எதற்கு இத்தனை நாடகம், அவசரம், ரகசியம், தடுமாற்றம்.... இதெல்லாம் Something is fishy என்றுதான் உரைக்கின்றன. என் நாடு, என் தாய்நாடு என்னும் பற்றும் ஆசையும் இன்னும் சிறிது நாளில் காணாமலே போய் விடுமோ என்றுள்ளது. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி’ஊன்.

19 comments:

உங்கள் கருத்துக்கள்...

நானும் விஞ்ஞானிதாம்லே..... :))

Monday, December 10, 2012 Anisha Yunus 21 Comments

Ƹ̴Ӂ̴Ʒ fLaShBaCk Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ

ஹல்லோ சகோஸ்....,


தலைப்பை பார்த்ததும் பயந்து ஓடிடாதீங்க. காரணம் எங்க ஊரைப் பொறுத்தவரைக்கும் நாங்க ரொம்ப பெருந்தன்மையா நடந்துக்குறவங்க. ஒருத்தருக்கு ஒரு பொருள் பிடிச்சிருந்தா அடிச்சிட்டு பிடிச்சிட்டு எல்லாம் கிடக்க மாட்டோம்.....போனால் போகட்டும் போடா...அப்படின்னு விட்டுக் கொடுத்துடுவோம். எதுக்கு இந்த கெத்துன்னு கேட்டீங்கன்னா... தலைப்புக்காகத்தான்.

ஜி.டி. நாயுடு அந்தக் காலத்துலருந்தே ஆசைப்பட்டதால அவருக்கு விஞ்ஞானி பட்டம் கொடுத்தாச்சு. என்னதான் என்ன்ற அளவுக்கு திறமையா கார் ஓட்ட தெரியாதுன்னாலும் தம்பி நரேனுக்கு ஃபார்முலா வீரர்ங்கற பட்டமும் தந்தாச்சு. அட வீட்டுத் தொட்டியில இருக்கற செடிங்களைப் பார்த்துட்டு எப்படி வளக்குறது...எப்படி வளக்குறதுன்னு ஒரே தொண தொண... சரி போ...அப்படின்னு அக்ரி யூனிவர்ஸிட்டிக்கே எல்லா ரகசியத்தையும் தந்தாச்சு. இருந்தாலும் நம்மளை விடமாட்டேங்கிறாங்க.....

இப்ப கூட பாருங்க.... சின்ன வயசுல சூதானமா இருந்ததை, அறிவாளியா இருந்ததை எங்களோட பகிர்ந்துக்குங்க.... பகிர்ந்துக்குங்க அப்படின்னு ரெண்டு இல்லே...மூனு இல்லே.... அட நாலு தடவை கூட இல்லே... ஒரே தடவை ஆமீனா கேட்டுட்டாங்க.... என்ன செய்ய.... ஆனது ஆச்சு.... அவங்களும் என்ன நினைவு வெக்கப்போறாங்கன்னு அவங்க ஆசைக்கு சரி சொல்லிட்டேன். அதேன் இந்தப் பதிவு. 

நம்மளைப் பார்த்தீங்கன்னா சின்ன வயசில இருந்தே டீவிக்குள்ள ஆளு இருக்கிறாங்களான்னு யோசிக்க மாட்டேன்... ஓப்பன் செய்தே வெரிஃபை செய்திடுவேன்...

நிலாவுல காலை வச்சாய்ங்களா இல்லையான்னு ஆறாம் வவுப்பு படிக்கிறப்பவே வாங்கின பூதக்கண்ணாடில டெஸ்ட் செய்துட்டேன்... இதெல்லாம் சில்லித்தனமான கேள்விகள், இதுக்கு  தானா அறிவுபூர்வமா பதில் வேற சொல்றாங்களாமா.... hi hi hi hi... கேளுங்க என்னுடைய சுயதலப்பிரதாபத்தை (சரியா சொல்றேனா...)

ரொம்ப கஷ்டமில்லை ஜெண்டில் ஃபெல்லாஸ்...அண்ட்...ஃபெல்லீஸ்... மூனே மூனு எக்ஸாம்பிள்ல என்னைப் பத்தி புரிஞ்சுக்குவீங்க...(இதுக்கு மேல யாராவது தொடர் பதிவு போட சொல்வீங்க?????)

1. மேல் மாடியிலிருந்து விழுவது எப்படி?

எங்க தாத்தாவுடைய வீடு ஊர்ல ரெண்டு வீதியை அடைச்சு நிக்கும். ரெண்டு அட்ரஸ், ரெண்டு தண்ணி பில், ரெண்டு மின்சார பில்...அப்படி. யார்ன் பிஸினஸ் செய்துட்டு இருந்ததால வீடு பூரா யார்ன் மூட்டைங்களை அடைச்சு வெச்சிருப்பாரு தாத்தா. நடுசெண்டர்ல இருக்கும் ஹாலில் டைனிங் டேபிள், டீவி, தாத்தா சேரு, பாட்டி கட்டில், இவைகளைத்தாண்டி மீதி எல்லாம் மூட்டைங்க. திருப்பூர்ல இருக்கறவங்களுக்கு யார்ன் மூட்டை எவ்ளோ பெரிசிருக்கும்னு தெரியும்...இல்லியா? அந்த மூட்டைங்களைத் தாண்டி மேல மாடிக்கு போகற படிக்கட்டு.

எங்க மாமா மக, படத்துல எல்லாம் காட்டற மாதிரி துபாய் ரிடர்னு, இந்தியாவுல எல்.கே.ஜி ரகம்.... அவளுக்கு படிக்கட்டுல இருக்கற கைப்பிடி சுவர்ல வழுக்கிட்டே இறங்குவது கூட தெரியாது. India Guide நாங்க, சும்மா இருப்போமா.... இங்க வா ஷம்மூ, எப்படி வழுக்கறதுன்னு நான் சொல்லித்தர்றேன்னு சொல்லி அவளை நிக்க வச்சிட்டு கைப்பிடில ஏறி உக்காந்தாச்சு.

 “பாரு ஷம்மு, இப்படி உட்காரணும்... அப்புறம் மெதுமெதுவா பிடிப்பை விட்டா அது சறுக்கும்... கரெக்ட்டா பேலன்ஸ் செஞ்சு இந்த சைடும் சாயாம அந்த சைடும் சாயாம் உட்காரணும். ஆனா நீ இப்படி இந்த சைடு சாய்ஞ்சு உட்கார்ந்தேன்னு வெச்சுக்க... கீழே.....”... ... ... விழுந்தாச்சு.!!!

யார்ன் மூட்டை skip செஞ்சு, டைனிங் டேபிளை லாங் Jump அடிச்சு, straight landing, மார்பிள் தரைல, முதுகும், பூமியும் back to back.:)  அப்ப நைட்டு 8மணி. ஊரில இருக்கற டாக்டரையெல்லாம் நலம் விசாரிச்சுட்டு திரும்பி வீட்டுக்கு வந்த பின் Guide வேலைய விட்டாச்சு. :(

2. கரண்ட் ஷாக்கடிக்குமா?

எப்ப பார்த்தாலும், இதை தொடாதே.... அதைத் தொடாதேன்னு நை நை நைன்ண்ட்டே இருப்பாங்க எங்கம்மா. ஜிடி நாயுடுக்கே...... சரி விடுங்க... உங்களை ஏன் நோகடிக்கனும்.... அதனால அவங்களுக்கு தெரியாம அப்பப்ப எதையாவது டெஸ்ட் செய்யறது என் பொழுதுபோக்கு. அப்படி இருக்கறப்ப.... ஒரு தடவை சென்னைல இருக்கற பெரிய பாட்டி வீட்டுக்கு போயிருந்தோம். அங்கே இருக்கும் ஃப்ரிட்ஜு கைப்பிடில ஒரு இரும்புத்தகடு இருந்தது. காந்த விசையுடன் ஃப்ரிட்ஜின் கதவு ஒட்டும் பகுதி. அதோட ஓரத்தில் லைட்டா கரண்ட் லீக்காயிட்டு இருக்கும். மேல் தோல் படறப்ப எல்லாம் துருதுருன்னுஇருக்கும்.

ஆஹ்.... ஒரு விஞ்ஞானிக்கு டெஸ்ட் செய்ய லேப் என்ன, விருந்தாளியா வந்த வீடென்ன... எல்லாம் ஒன்னுதானே அப்படின்னு... அடுத்த நாள் எல்லாரும் மதியம் தூங்கிட்டிருந்த நேரம்.... மனித சஞ்சாரம் இல்லாத நேரத்துலதான் ஞானம் கிடைக்கும்னு யோசிச்சி, ஒரு ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் கிளாஸ் எடுத்துட்டு போனேன். கரண்ட் லீக்காகிற இடத்துல ஒரு சின்ன டச்சு.......டப்புன்னு கிளாஸ் விழுந்த சத்தம் கேட்டு எங்கம்மா வர்றாங்க.... எங்கம்மா வர்றாதுக்குள்ள் ரெண்டு அடி தாண்டி விழுந்திருந்த நான் அவசர அவசரமா எந்திரிச்சு நின்னுட்டேன்...
“என்ன சத்தம்...”
“ கைல பிடிச்சு விளையாண்டிட்டிருந்தேன்....டம்ளர் மிஸ்ஸாயிடுச்சு....”
“ எங்கெ போனாலும் எதையாவது ஒடைச்சிட்டிரு... வந்து தூங்கு.... ”
“...ம்ம்.. ”
ரெண்டு நாள் வரைக்கும் வலது கை தோள் பட்டை வரை பயங்கர வலி....காட்டிக்கலையே....ஹுக்கும்....

கரண்ட்டை கண்டுபிடிச்ச பெஞ்சமின் கூட அவ்ளோ சந்தோஷப்பட்டிருக்க மாட்டாரு. அடுத்த ஒரு வாரத்துக்கு ஸ்கூல்ல "கரண்ட்டை கண்டு பிடித்த வாரம்”தான் :)


 

3. தண்ணீரில் தியானம்.

மேல பாத்ததெல்லாம் சும்மா. இதை விடவும் எல்லா டெஸ்ட்டும் செய்வேன்... ஈரோட்டுக்கு பக்கத்துல ஒரு சின்ன கிராமத்துல இன்னொரு பாட்டி வீடு. காவிரிக் கரைக்கும் வீட்டுக்கும் பத்து நிமிஷ எஸ்கேப். என்னுடைய + என் பெரியப்பா பெண்ணுடைய (அவள் பெயரும் அன்னு:)) அருமை பெருமைகளைத் தெரிஞ்ச பாட்டி எங்களை விடவும் மாட்டாங்க.... மதியம் தூங்கவும் மாட்டாங்க.... ரொம்ப்ப்ப்ப கஷ்டப்படுத்திட்டு ஒரு நாள் மதியம் தூங்கிட்டாங்க. எங்க அத்தை வேற கடைக்கு போயிட்டாங்க. அழுக்குத் துணிங்களை எடுத்துப் போட்டுட்டு நானு, அவ, அவ அண்ணன் (ஒப்புக்கு சப்பாணி) ஒரே ஓட்டம். தண்ணியில் ஆட்டம் போடப்போட ஒரு ஞானோதயம்.... தண்ணிக்கடியில மூச்சுப் பிடிச்சுட்டு தியானம் செய்யிற மாதிரி உட்காரலாம்னு ஐடியா. பெரியப்பா பொண்ணு இதுக்கெல்லாம் வர மாட்டேன்னு சொல்லிடுச்சு. சத்திய சோதனை...!!!!

சரின்னு நானே மூச்சைப் பிடிச்சுகிட்டு கண்ணை மூடிட்டு தண்ணிக்கடில உட்கார்ந்தாச்சு. கொஞ்ச நேரத்துல தண்ணி அழகா நகர்த்திட்டு போகுது.... மிதக்கற மாதிரி....அருமையா இருந்தது அந்த ஃபீல்...இப்பவும் நினைவில் இருக்கு....ஒரு ரெண்டு நிமிஷம் கூட இல்லை.... அதுக்குள்ள அவளோட சத்தம் கேட்குது, என்னைக் காணோமின்னு... எந்திரிச்சு என்ன்னு பார்க்கலாம்ன்னா எந்திரிக்க முடியலை... தண்ணி வேகத்துக்கு நிக்க முடியலை... என்ன செய்யிறதுன்னு அடுத்த சாதனைக்கு முடிவெடுக்கறதுக்கு முன்ன எங்கண்ணன் வந்து என் முடியைப் பிடிச்சு இழுத்துட்டு போயி கரைல சேர்த்தான். கூட இருந்தவங்க எல்லாம் அங்கயே கதாகாலட்சேபம் ஆரம்பிச்சுட்டாங்க...சரி... நம்ம சாதனையை முறியடிக்க ஒரு கூட்டமே இருக்குன்னு மனசை திடப்படுத்திகிட்டு வீட்டுக்கு போனதும் வரவேற்பு அர்ச்சனைக்கு தயாராயிகிட்டேன்.

யாரைக் கூப்பிடறது???

ம்ம்... இதுதான் பிரச்சினை... இப்ப யோசிச்சு யோசிச்சு கிட்டத்தட்ட விஞ்ஞானிகள் போலவே பதிவெழுதற சிலர் அப்ப விஞ்ஞானிகளா இருந்தாங்களான்னும் ஒரு டெஸ்ட் செஞ்சு பார்த்துடலாம். எனவே


எல்லாரும் ‘நானும் விஞ்ஞானிதான்’ என்னும் தலைப்புல ஒரு பதிவை, சிறு வயது நினைவுகளை வெச்சு எழுதிக் குடுத்துடுங்க. ப்ளீஸ் ..... :))

பி.கு:
எனிவே... சிந்தனை செய் மனமேன்னு கிடக்கற லிஸ்ட்டிலே நான் இல்லாததால கற்பனைக் கதைகள் பற்றியெல்லாம் எழுத முடியலை.... நாய் வாலை மிதிச்சா கடிக்குமான்னு புது பட்டுப்பாவாடை சட்டைய தியாகம் பண்ண சரித்திரம் எங்களுது.... ஹி ஹி ஹி.... சரி விடுங்க.... போயி ஒரு கிளாஸ் தண்ணி குடிச்சு நல்லா மூச்சு விட்டு ரிலாக்ஸாயிக்குங்க. அடுத்த பதிவில் சந்திப்போம்.... Auf Wiedersehen :))

பி.கு 2:
இதையெல்லாம் விடுங்க. உண்மையிலேயே பரிசோதனைகள் நடத்தி, தன் வாழ்க்கையையே அந்த பரிசோதனைக்கு உட்படுத்தி, மேற்கத்திய கலாசாரத்தின் தீமைகளிலிருந்து தன்னை அகற்றி, இஸ்லாம் கூறும் வாழ்க்கை நெறிகள்தான் சிறந்ததுன்னு, தானும் ஒரு விஞ்ஞானின்னு நிரூபிச்சாங்களே சாரா போக்கர்.... அவங்களைப் பத்தியும் படிக்காம விட்டுடாதீங்க. நன்றி சகோஸ். :)

21 comments:

உங்கள் கருத்துக்கள்...

பாபரிலிருந்து பாபர் மஸ்ஜித் வரை.... ஒரு மீள்பார்வை

Thursday, December 06, 2012 Anisha Yunus 27 Comments

டிசம்பர் 6, 2012

[முன்குறிப்பு: பின்க் நிற எழுத்துக்களில் உள்ளவை - தொடர்புடைய சுட்டிகள் / லின்க்ஸ். அதில் சென்று மீத விவரங்களைப் படித்துக் கொள்ளலாம்.]

1992 ம் வருடம் ‘கரசேவகர்கள்’ என்னும் ஹிந்துத்துவ தீவிரவாதிகளின் ஒரு கூட்டம் பல்லாண்டு காலமாக முஸ்லிம்கள் இறைவனைத் தொழுது கொண்டிருந்த ஒரு பள்ளிவாசலை இடித்து தரைமட்டமாக்கி, இந்தியாவிலும் பாகிஸ்தானிலும், பங்களாதேஷிலும் ஒரு சேர கலகங்களை பற்ற வைத்த நாள். இன்றுடன் இருபது வருடங்களாகின்றது, இந்தக் கருப்பு நாளுக்கு.

வாருங்கள் பாக்கலாம் - ஒரு மீள்பார்வை இந்தியாவின் முகத்தை கருப்பாக்கிய இந்த விவகாரத்தில்... (நிகழ்கால சார்மினார், இன்னொரு பாப்ரி மஸ்ஜிதாய் ஆவதன் முன் :)

= = = = = =
ஏப்ரல் 21, 1526:
செங்கிஸ்கானின் வழிவந்த பேரரசர் பாபர் என்னும் ஜாஹிருத்தீன் முஹம்மது பாபர், லோடி சாம்ராஜ்யத்தின்(Lodhi dynasty) இறுதி சுல்தானான இப்றாஹீம் லோடியை, பானிபட்டில் நடந்த முதல் போரில் தோற்கடிக்கிறார். முகலாய சாம்ராஜ்யம் வட இந்தியாவில் நிறுவப்படுகிறது.

உஸ்பெக் தீவிரவாதியாய் இருந்த இவர் சாம்ராஜ்யம் நிறுவியபோது ‘Secular Ruler', (மதச்சார்பற்ற ஆட்சியாளர்) என்னும் பதத்திற்கே உதாரணமாய் இருந்தவர்.  அவரின் வாழ்வின் இறுதி நேரங்களில் கூட மதச்சார்பின்மையை தன் மகன் ஹுமாயூனுக்கு எத்தி வைத்தவர்.

= = = = = =
மார்ச் 17, 1527:
ஆக்ராவை அடுத்துள்ள கான்வாவில் சித்தோர்கரின் ராஜ்புத் ராஜா ரானா சங்ராம் சிங்கை ’கான்வா போரில்’( Battle of Khanwa ) தோற்கடிக்கிறார். இதன் மூலம் பாபரின் முகலாய அரசு வட இந்தியாவில் வலுப்பெறுகிறது. 

= = = = = =
1528:
பாபரின் தளபதி மிர்பாகி கான் (Mir Baqi Khan), அயோத்தியில ஒரு மசூதியைக் கட்டுகிறாராம். ராமன் பிறந்த இடம் என சில இந்துக்களால் தற்போது நம்பப்படும் ஓரிடத்தில்....(**பின்னாளில் 2010இல் சமர்ப்பிக்கப்படும் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களின் ASI REPORTS இதை மறுக்கின்றன. இதை தற்போது மெய்ப்பிக்க நாஸாவின் மென்பொருளைக்கூட காட்டுகின்றனர். மெய்யாலுமா :)))

ஏற்கனவே இருந்த ஒரு ஹிந்துக் கோயிலை✝  (!!!!)  இடித்து விட்டு மசூதியைக் கட்டுகிறாராம். இந்த மசூதியே பின்னாளில் மஸ்ஜித்-ஏ-ஜனம்ஸ்தான் (பிறந்த இடத்தின் பள்ளிவாசல்)(யார் பிறந்த இடத்தின்??? ஓ!!!) ... அல்லது.... மிர்பாகியின் மஸ்ஜித் அல்லது பாப்ரி மஸ்ஜித் என்றழைக்கப்படுகிறதாம். உண்மையிலேயே இவ்விடத்தில் அதற்கு முன் ஏதும் கோவில் இருந்ததா?

1528க்கு முன்னர் அயோத்திக்கு உரிமை கொண்டாடிய பல்வேறு மதக் குழுக்கள் இருந்ததற்கான சான்றுகளைக் காணலாம். 3000 பவுத்த துறவிகள் மற்றும் நூறு மடங்கள் இருந்ததாகவும், பிராமணீய மதத்தைச் சேர்ந்த வெறும் பத்து கோவில்கள் மட்டும் இருந்ததான சீன யாத்ரிகர் யுவான் சுவாங் எழுதினார். இந்த வரலாற்றைப் பற்றியெல்லாம் யாரும் மூச்சே விடவில்லை இதுவரையில். அதுசரி, வரலாறு என்பது பள்ளிக்கூட புத்தகங்களில்தானே... :)

**உண்மையான இராமன் பிறந்த இடம் எங்கே? பதில் இங்கே. பாபர் மசூதி கட்ட ஆரம்பிக்கும் முன்னரும் அதன் பின்னரும் ராமன் பிறந்தநாள் யாராலும் கொண்டாடப்படவில்லை. மசூதியை சொந்தம் கொண்டாட ஆரம்பித்த பின்னரே....... :)

இந்த ஹிந்துக் கோயில் பற்றியும் பின்னர் 2010இல் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களே தயங்கித் தயங்கித் தந்த ரிப்போர்ட்டின்படித்தான் தெரியும். இன்னமும் அது குறித்த கேள்விகள் பலவற்றிற்கு பதிலும் இல்லை :(

= = = = = =
மேலே மிர் பாகி கான் கட்டியதாக சொல்லப்படும் மஸ்ஜிதின் கதையையும், 2010இல் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் தரும் ரிப்போர்ட்டையும் சிறிதே.... மிக மிக மேலோட்டமாகவே ஆராய்வோம். உள்ளே வேர்களைத் தேடி ஆராய ஆரம்பித்தால் இந்த வலைப்பூ போதாது..!!

தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களின் ஆய்வு முடிவுகள் பாப்ரி மஸ்ஜித் ‘ஷர்கி’ கட்டிட அமைப்பில் இருந்ததாக கூறுகிறது.

இந்த ஷர்கி கட்டிட அமைப்பு பற்றி: Sharqi Dynasty --  இந்தியாவை ஆண்ட துக்ளக் வம்சம் 1398இல் முடிவடைந்ததும் அந்த சாம்ராஜ்யத்தின் கட்டுப்பாட்டில் இருந்த பல சிற்றரசர்கள் மீண்டும் மன்னரானார்கள். அரசனே இல்லாமல் இருந்த இடங்களில் யாரேனும் புதிதாய் அரசானவதோ அல்லது பக்கத்தில் ஆண்டுகொண்டிருக்கும் அரசனின் கட்டுப்பாட்டில் வருவதோ என எப்படியோ பல்வேறு சாம்ராஜ்யங்கள் உருவாக ஆரம்பித்தன. இந்த நேரத்தில்தான்... நாஸிருத்தீன் முஹம்மத் ஷா துக்ளக்கின் அரசவையில் முன்னர் எடுபிடியாக பணியாற்றிய மாலிக் சர்வார் என்பவர்(ள்),ஜோன்பூருக்கு சென்று அங்கே ராஜாவாக முடி சூடுகிறார்(ள்). ஆம், அவர்கள் மூன்றாம் பாலினத்தவர்கள். துக்ளக் சரித்திரத்தையும் விட மிக அழகாய் அவர்களின் வம்சம் 100 ஆண்டுகள் இந்தியாவை ஆண்டது. அந்தக் காலங்களில் கட்டிடக்கலை ஆகாயத்தை எட்டலாயிற்று. கோவில்களும், மாளிகைகளும், மசூதிகளுமாய் இந்தியா அழகில் சிறந்து விளங்கலாயிற்று. அவர்களின் ராஜ்ஜியத்தில் உருவான இறுதி மசூதி அடாலி மஸ்ஜித். இவர்கள் கட்டிய மஸ்ஜிதுகளில் மினாரா இருப்பதில்லை. மிக தனித்துவமானது. இவர்களின் ராஜ்ஜியம் நிறைவு பெற்றது இப்றாஹீம் ஷா என்னும் லோடி வம்சத்தின் ராஜாவால். பாபர் பிறப்பதற்கு பதினைந்து வருடங்களுக்கு முன்னரே  இவர்களின் வம்சம் முடிவுக்கு வந்து விட்டது. பின் இவர்களின் கட்டிடக்கலையில் எப்படி பாப்ரி மஸ்ஜித் வரும்???? அதுவும் இப்றாஹீம் ஷா ஆட்சிக்கு வந்ததும் இவர்களில் ஒருவர் கூட உயிருடன் இருக்கக்கூடாது என்று பார்த்துப் பார்த்து தீர்த்துக் கட்டியபின்???

தொல்பொருள் ஆராய்ச்சியினரின் ஆராய்ச்சிகளுக்கு முன்பே 1989இல் பாபர் மஸ்ஜிதை ஆராய்ந்து, பாபரின் வாழ்வையும் ஆராய்ந்து உண்மைகளை கண்டுபிடித்து மூன்று பாகங்கள் கொண்டதொரு நூலை எழுதுகிறார், திரு. ஷேர்சிங் ஐ.ஏ.எஸ். புத்தகங்கள வெளியான சூட்டிலேயே முஸ்லிம்களை தூண்டியதாகவும், பாஜக கட்சியின் பெயரைக் கெடுத்த்தாகவும் இன்னும் பல புகார்களைக் கூறி அவரை அரசு உத்தியோகத்திலிருந்து அப்புறப்படுத்தி விட்டார்கள். இருபத்தி ஏழு மொழிகளில் வெளியிடப்பட்டிருக்கும் அவரின் நூலை பொய்யாக்க இதுவரை யாரும் ஆதாரங்களை சமர்ப்பிக்கவில்லை. ஆயினும் அவரின் ஆராய்ச்சியையும் வழக்கை நடத்திய எவரும் அங்கீகரிக்கவில்லை....!!

பாபர் பிறக்கும்முன்னரே கட்டப்பட்ட மசூதியை ஏன் மிர்-பாகி கான் தலைமையில் பாபர் கட்டுவித்தார் எனப் பொய் பரப்பபடவேண்டும்? அந்த மஸ்ஜிதை ‘ மஸ்ஜித்-ஏ-ஜனம்ஸ்தான்’ என்றே அழைத்தார்கள் என்னும் பொய்யைப் பரப்பவா????

= = = = = =
1720:
நிர்மோஹி அக்ஹாரா(Nirmohi Akhara) என்னும் அமைப்பு உருவாகிறது. ஆயுதம் தாங்கிய சாதுக்களை அக்ஹாராக்கள் என்றழைப்பர். அவர்களில் வைஷ்ணவ மத ஹிந்து சாதுக்களால் ஆரம்பிக்கப்படும் இந்த அமைப்பு ராமனை வழிபடும் சாதுக்களின் குழு.

ஆயுதம் தாங்கிய இந்த அக்ஹாராக்களை ஆங்கில ஏகாதிபத்திய அரசே வரம்புக்குட்படுத்த நினைத்ததையும், அதற்கெதிராய் சன்னியாசிக் கலகம் (Sannyasi Rebellion) நடந்ததையும் மறந்து விட வேண்டாம். இந்த அசுர சாதுக்களின் வாழ்வை பார்வையிட இங்கே செல்லுங்கள்.

வட இந்தியாவில் செல்வாக்கும், பணபலமும், அரசியல் பலமும் நிறைந்த இந்தக்குழு, ராமன் பிறந்த இடத்தில் கோவில் அமைத்தே தீர்வோம் என்னும் கொள்கையுடன் பயணிக்க ஆரம்பிக்கிறது.

= = = = = =
 1853:
ஹிந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே இந்த இடத்தையொட்டி முதன் முதல் கலகம் வெடிக்கிறது. நிர்மோஹி அக்ஹாரா கும்பல் மஸ்ஜிதின் மீது ஏறி,‘இந்த மஸ்ஜிதில் மினாராவே இல்லை...எனவே இது முதலில் கோவிலாகத்தான் இருந்தது’ என கொக்கரிக்கிறது.,

இது ராமன் பிறந்த இடம், ஏற்கனவே இராமன் கோவில் இருந்த இடத்தில்தான் பாபர் கோவில் கட்டினார் என்னும் சர்ச்சைக்கு பிள்ளையார் சுழி போடுகிறது. :)

= = = = = =
1853:
காலனி ஆட்சியை மேற்கொண்டிருந்த பிரித்தானிய அரசு இவ்விடத்தில் ஓர் வேலியை போடுகிறது, ஹிந்துக்களுக்கும், முஸ்லிம்களுக்கும் தனித்தனியாக இடம் ஒதுக்கி. இன்னும் இரண்டு வருடம் வரை பூஜையோ, தொழுகையோ நடைபெறக்கூடாதென்று தடை போடுகிறது.

பிரித்தாளும் சூழ்ச்சியின் முதல் எழுத்து ஆரம்பமாகிறது.

= = = = = =
ஜனவரி 1885:
மசூதியின் உள் நுழையும் படிக்கட்டுக்களின் அடியில்தான் ராமன் பிறந்த இடம் இருக்கிறது எனவே அங்கே பூஜை செய்ய அனுமதிக்க வேண்டும் என்றொரு வழக்கு விசாரணைக்கு வருகிறது. விண்ணப்பித்தவர், மஹாந்த் ரகுபர் தாஸ் (இவரும் ஒரு சாது. அயோத்தியில் இருக்கும் சரயூ நதியைச் சுற்றி வாழ்ந்து வந்த, வரும் சாதுக்களின் கூட்டத்தில் ஒருவர்.)

பாபர் மஸ்ஜிதின் மேல் முதன் முதலாக சட்ட பூர்வமாக முதல் வழக்கு என்பது இதுவே. இந்த வழக்கை விசாரித்த பண்டிட் ஹரி கிஷன் என்னும் உயர் ஜாதி பிராமண நீதிபதி, இது ஆதாரமற்றது, சமயமோதலுக்கு வழிவகுக்கக்கூடியது என்று கூறி இந்த வழக்கை தள்ளுபடி செய்கிறார்.

[இந்த மஹாந்த்-க்கள் அக்ஹாராக்களின், சாதுக்களின், சன்னியாசிக்களின் குழுக்களுக்கு தலைவனைப் போலாவார்கள்.]
= = = = = =
மார்ச் 17, 1886:
மஹாந்த் ரகுபர் தாஸ் மீண்டும் ஃபைஸாபாத்தின் மாவட்ட நீதிமன்றத்தில் முறையிடுகிறார். இதுவும் நிராகரிக்கப்படுகிறது.

= = = = = =
நவம்பர் 1, 1886:
இம்முறையும் தோல்வியை ஏற்காத ரகுபர் தாஸ் அயோத்தியை அக்காலத்தில் ‘ஔத்’ என்று கூறி ஆண்டு கொண்டிருந்த விசாரணைக் கமிஷனர் யங்கிடம் வழக்கைக் கொண்டு போகிறார். (W Young). [சரயூ நதியின் கரையில் உள்ள சாதுக்கள் கூட்டம் பெரும் செல்வாக்கையும், பண பலத்தையும் கொண்டது என்பதை மீண்டும் நினைவில் கொள்ளுங்கள்.] மிஸ்டர்.யங்கும் அந்த வழக்கை நிராகரிக்கிறார்.

= = = = = =
1936
 வக்ஃப் போர்டின் கீழ், மஸ்ஜிதும், ஏற்கனவே மஸ்ஜிதையொட்டி இருந்த கஞ்ஜ்-ஏ-ஷாஹீதீன் என்னும் முஸ்லிம்களின் அடக்கஸ்தலமுமாக 67 ஏக்கர் நிலப்பரப்பும் சட்டபூர்வமாக ரிஜிஸ்தர் செய்யப்படுகிறது. முஸ்லிம்களின் மீதான வன்முறை பன்மடங்காகிறது.

= = = = = =
டிசம்பர் 10, 1949
வக்ஃப் போர்டிலிருந்து மஸ்ஜிதின் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்ட இன்ஸ்பெக்டர் முஹம்மத் இப்றாஹீம்,  உத்திரப் பிரதேச வக்ஃப் போர்டு தலைமையிடத்தில் புகார் ரிஜிஸ்தர் செய்கிறார், “...மஸ்ஜிதில் தொழ வரும் முஸ்லிம்களின் மேல் கற்கள் வீசுவதும் அவர்களை அவப்பெயர்களிட்டு அழைப்பதுமாக தொல்லை நாளுக்கு நாள் வலுப்பெற்றுக்கொண்டே வருகிறது. மஸ்ஜிதுக்கு அங்கேயுள்ள ஹிந்துக்களால் ஆபத்திருக்கிறது...” என.

காற்று அந்த வார்த்தைகளை பத்திரப்படுத்த ஆரம்பிக்கிறது.....நாளையின் நிஜம் அது..!

= = = = = = 
டிசம்பர் 22, 1949:
முஸ்லிகளுக்கென ஒதுக்கியிருந்த இடத்தில், மசூதியினுள் திடீரென ராமனின் சிலைகள் புகுந்திருக்கின்றன. இரண்டு சமுதாயமுமே காவல் நிலையத்தில் புகார் அளிக்கின்றன.  அப்போதைய காங்கிரஸ் அரசு, அந்த இடம் ‘பிரச்சினைக்குரிய இடம்’ என லேபிளிட்டு கதவுகளைப் பூட்டி வைக்கிறது. ஒரு ஹிந்துக் காவலரையும், ஒரு முஸ்லிம் காவலரையும் பணியில் அமர்த்துகிறது ஷிஃப்ட் முறையில் காவல் காக்க.
ஆபிராம் தாஸ்


அந்த நாளின் முந்தின இரவில், ஆபிராம் தாஸ் என்னும் சாது, கே.கே நாயர் என்னும் அப்போதைய ஃபைஸாபாத் மாவட்ட மாஜிஸ்டிரேட்  மற்றும்  குருதத் சிங் என்னும் ஃபைஸாபாத்தின் அப்போதைய ஃபைஸாபாத் நகர மாஜிஸ்டிரேட் மூவரும் ராமர் சிலைகளை மஸ்ஜித்தில் வைப்பதற்கு திட்டமிடுகின்றனர்.
கே கே நாயர்
இவர்களின் திட்டத்திற்கு ஃபைஸாபாத்தின் மஹாந்த் பரமஹன்ஸ் ராமச்சந்திர தாஸ் என்னும் சாதுவும் ஒத்துழைக்கிறார்.
ஆனால் அக்‌ஷயா பிரம்மச்சாரி என்னும் ஒரு சாதுவும் அவரின் சிஷ்யை மீரா பெஹெனும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். அன்றிலிருந்து சாதுக்கள் குழுவிலிருந்து அவர்கள் அப்புறப்படுத்தப் படுகின்றனர்.
குரு தத் சிங்
22ம் தேதி ஆபிராம் தாஸ் பூட்டிய மஸ்ஜிதின் காம்பவுண்டிலிருந்து வெளியே குதித்து ஓடியதை அந்த ஊரின் தையல்காரர் ஹாஷிம் அன்ஸாரி பார்க்கிறார். ஆனால் 60 வருடங்களுக்கும் மேலாக இதில் நீதி கிடைக்காது என்பது தெரியாததால் மௌனமாய் இருந்து விடுகிறார்.

தன் உயிருக்கும், குடும்பத்தினரின் உயிருக்கும் ஆயுளை வேண்டிய ‘முஸ்லிம் காவலர்’, 23ம் தேதி மதியம் 3 மணிக்கு மஸ்ஜிதின் மிம்பரில் வானிலிருந்து ஒரு ஒளி இறங்கி ராமர் சிலைகளை அங்கே தோற்றுவித்ததென காவல் துறையினருக்கு அறிவிக்கிறார்.

இந்த தகவல்களை எல்லாம் காலங்கள் பல கனிந்து வால் ஸ்ட்ரீட் ஜோர்னலுக்கு குருதத் சிங்கின் மகன் குரு பசந்த் சிங் ஒரு பேட்டியில் தெரிவிக்கிறார். இதைப் பற்றிப் பேச நாயரின் மகனோ மறுத்து விடுகிறார்.

ஆனால் இந்த விஷயங்களை இன்னொருவரும் நடந்ததென ஒப்புக்கொள்கிறார். ஆபிராம் தாஸின் தலைமைச் சீடரான மஹாந்த் சத்யேந்திர தாஸ். இவர் இப்போது பிரச்சினைக்குரிய இடத்தில் உள்ள ராமன் கோவிலில் அரசால் அமர்த்தப்பட்ட முதன்மை பூசாரி. (!!) மீத விவரங்கள் இங்கே.

= = = = = =
டிசம்பர் 23, 1949:
மஸ்ஜிதினுள் புகுந்து வலுக்கட்டாயமாக் சிலைகளை வைத்ததன் புகாரின் பெயரில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்படுகிறது.
The FIR lodged by Sub Inspector Ram Dube, Police Station Ayodhya, on December 23, 1949, as certified by the office of the city magistrate on February 11, 1986: “According to Mata Prasad (paper no. 7), when I reached to (sic) Janam Bhoomi around 8 o’clock in the morning, I came to know that a group of 50-60 persons had entered Babri Mosque after breaking the compound gate lock of the mosque or through jumping across the walls (of the compound) with a stair and established therein an idol of Shri Bhagwan and painted Sita Ram, etc, on the outer and inner walls with geru (red loam). Hans Raj on duty asked them to defer but they did not. These persons have already entered the mosque before the available PAC (Provincial Armed Corps) guards could be commanded. Officials of the district administration came at the site and involved themselves in necessary arrangements. Afterwards, a crowd of 5-6 thousand persons gathered around and while chanting bhajans and raising religious slogans tried to enter the mosque but were deferred and nothing untoward happened thereon because of proper arrangements. Ram Das, Ram Shakti Das and 50-60 unidentified others entered the mosque surreptitiously and spoiled its sanctity. Government servants on duty and several others are witnesses to it. Therefore it is written and filed.”
அந்தப் புகாரையும், அதன் வரலாறையும் வருங்காலங்களில் ம(றை)றக்கிறார்கள். :)


[ அந்த இடத்தில் ராமர் சிலைகள் தானாகவே முளைத்ததாக பின் வரும் நாட்களில் லிபர்ஹான் கமிஷனின் முன் எல்.கே அத்வானி கூறுகிறார். அது எப்படி தானாய் முளைக்கும், நீங்கள் அதை நம்புகிறீர்களா என்பதற்கு மௌனமே பதிலாகிறது. அத்வானியை இப்படிக் கேள்விகள் கேட்டு சங்கடப்படுத்தக்கூடாது என நீதிபதி லிபர்ஹான், விசாரணையின் இடையே உத்தரவும் இடுகிறார். அந்தக் கேள்வி-பதில்-உத்தரவு பற்றி கோர்ட்டின் தகவல் சேமிப்பு டாக்குமெண்ட்களிலும் இடைபெற தடை போடப்படுகிறது!!]
மஸ்ஜிதின் மிம்பரில் வைக்கப்பட்ட சிலைகள்

மஸ்ஜிதினுள் வைக்கப்பட்ட சிலைகளை அப்புறப்படுத்துமாறு அப்போதைய பிரதம மந்திரி ஜவஹர்லால் நேரு ஆணையிடுகிறார்.“ மிக அபாயகரமான உதாரணம் இதில் உள்ளது. சிலைகளை அப்புறப்படுத்தாவிட்டால் தீய விளைவுகளை சந்திக்க நேரிடும்..” நேருவின் ஆணையில் உள்ளது.

அந்த ஆணையையும் மீறி சிலைகளை உள்ளேயே இருக்க வைக்கப்படுகின்றன, உத்திரப்பிரதேச அப்போதைய முதலமைச்சர் கோவிந்த் பல்லப் பண்ட்டின்(Govind Ballabh Pant) ஆணையாலும், ஃபைஸாபாத்தின் அப்போது துணை கமிஷனர் ஆகியிருந்த கே.கே நாயரின் பிடிவாதத்தாலும்.
“இது ஒரு சட்டவிரோத செயலாகவே இருக்கலாம்....ஆனால் அதன் பின்னிருக்கும் இயக்கத்தின் உணர்வுகளை மட்டமாக எடை போட்டு விடக்கூடாது”...பதிலெழுதினார், கே.கே.நாயர்...ஜவஹர்லால் நேருவிற்கு! 1986 வரைக்கும் சிலைகள் அகற்றப்படவில்லை.

காற்று வீச ஆரம்பிக்கிறது.

= = = = = =
ஜனவரி 16, 1950:
ஃபைஸாபாத்தின் அகிலபாரத ஹிந்து மஹாசபாவின் தலைவர், கோபால் சிங் விஷாரத் என்பவர் ‘பிரச்சினைக்குரிய இடத்தில்’ இராமனுக்கு பூஜை செய்ய அனுமதிக்க வேண்டும் என ஃபைஸாபாத் நீதிமன்றத்தில்  முறையிடுகிறார். இப்பொழுதுதான் பிரச்சினை வேர் விடுகிறது.

அப்போதையஃபைஸாபாத் சிவில் கோர்ட்டின் நீதிபதி என்.என் சத்தா (N.N. Chadha) நீதி மன்றக் கட்டாயமுறை உத்தரவை உபயோகித்து (Interim Injunction Order) அயோத்தியின் லோக்கல் / உள்ளூர் ஹிந்துக்கள் மட்டும் பூஜை செய்யலாமென தீர்ப்பளிக்கிறார். இங்கே ஆரம்பிக்கிறது ஹிந்துத்துவாவின் கனவை நனவாக்கும் திட்டம்...!


= = = = = =
மார்ச், 1950:
உள்ளே வைக்கப்பட்ட ராமனின் சிலைக்கு பாதுகாப்பு வேண்டும் எனக் காவல்துறையில் புகார் பதிவு செய்கிறார், ஃபைஸாபாத்தின் மஹாந்த் பரமஹன்ஸ் ராமச்சந்திர தாஸ். உள்பக்க கேட்கள் இன்னும் பூட்டியே உள்ளன.

1950 இறுதி வரை வழக்கு முஸ்லிம் சமுதாயத்திற்கு சாதகமாய் இருக்கிறது.

= = = = = =

1961:
மஸ்ஜிதினுள் புகுந்து சட்ட விரோதமாக இராமனின் சிலைகளை பூஜிப்பதாக, Interim Injunction Orderஐ எதிர்த்து நீதிமன்றத்தில் மீண்டும் வழக்கு தொடரப்படுகிறது. இந்தத் தடவை வழக்கைப் போட்டவர், தையல்காரர் ஹாஷீம் அன்ஸாரி. :)
[ஆனாலும் கோர்ட் தீர்ப்பை விட கோர்ட்டின் வெளியேயே இந்தப் பிரச்சினையை தீர்த்துக் கொள்ளலாம், இதனால் நாட்டின் சட்ட ஒழுங்கு சீர் குலையாது என்னும் கொள்கையையே பற்றிப் பிடித்திருந்தார் அன்ஸாரி. விஷ்வ ஹிந்து பரிஷத் இவருக்கு கொலை மிரட்டல் விடுத்து இந்தக் கேஸிலிருந்து விலகி விடச் சொன்னது என்றால் அப்போதைய வக்ஃப் போர்டு இவரைப் போலிருக்கும் ஒவ்வொரு வழக்காடியின் பேச்சுக்கும் மதிப்பளிக்க முடியாது என கதவை சாத்தி விடுகிறது.]

= = = = = =
1984:
அந்த இடத்தில் மீண்டும் ஒரு கோவில் கட்ட ஒரு குழு ஏற்படுத்தப்பட்டு முதல் கட்ட வேலைகள் ஆரம்பமாகின்றன.

= = = = = =
1985:
நிர்மோஹி அக்ஹாரா குழு, ‘பிரச்சினைக்குரிய இடத்தில்’ ராமன் கோவிலைக் கட்ட அனுமதிக்குமாறு ஃபைஸாபாத் நீதிமன்றத்தில் முறையிடுகிறது. ஒரே இடத்தில் இரு மதங்களின் வணக்கஸ்தலங்கள் இருப்பது அபாயகரமானது (!!!) என நீதிமன்றம் நிராகரித்து விடுகிறது.
= = = = = = =
ஃபிப்ரவரி 1, 1986:
கேட்களைத் திறப்பதால் வானம் ஒன்றும் கீழே விழுந்து விடாது என்று உத்தரவிட்டு ஐம்பது வருடங்களுக்குப் பிறகு கேட்களை திறந்து விடச் சொல்கிறார், மாவட்ட நீதிபதி கே.எம் பாண்டே. ஹிந்துக்களை மஸ்ஜித்தின் உள் வைக்கப்பட்டுள்ள சிலைகளுக்கு பூஜை செய்துகொள்ள  நீதிமன்றம் அனுமதிக்கிறது.

அவ்விடத்தில் ஹிந்துக்களின் வணக்க வழிபாடுகளை எதிர்த்து முஸ்லிம்கள் போராட்டம் நடத்துவதற்காக ‘பாப்ரி மஸ்ஜித் கமிஷன்’ (BMAC) முதன் முதலாக அமைக்கப்படுகிறது. சுன்னி வக்ஃப் போர்டும், BMACகும் இணைந்து அல்லாஹாபாத் உயர் நீதிமன்றத்திற்கு வழக்கை கொண்டு செல்கிறார்கள்.

= = = = = =
1989:
முப்பத்தி ஒன்பது வருடங்களாக ஃபைஸாபாத் சிவில் கோர்ட்டில் இருந்த வழக்கு ஜூலை, 1989இல் அல்லாஹாபாத் மேல்கோர்ட்டுக்கு மாற்றப்படுகிறது. அல்லாஹாபாத் உயர் நீதிமன்றம் ஒரு பெஞ்சை நியமிக்கிறது. பலமுறை அதன் உறுப்பினர்கள் மாற்றப்பட்டு, 20 வருடத்திற்குப் பின் அமர்வுக்கு வருகிறது. இறுதி அமர்வாக ஜூலை 23, 1996இல் ஆரம்பித்து ஜூலை 26, 2010இல் முடிவாய் வழக்கின் அமர்வை (Hearing) முடிக்கிறார்கள்.

ராமன் கோவில் கட்டியே தீருவோம் என்னும் அமளி இப்போது வலுப்பெற ஆரம்பிக்கிறது. 

இதே வருடத்தில் நிர்மோஹி அக்ஹாரா குழு, கோவிலைக் கட்ட அனுமதிக்குமாறு  உத்திரப் பிரதேச அரசுக்கு எதிராய் இப்போது வழக்கு தொடுக்கிறது. கோவிலைக் கட்ட வேண்டிய இடமும், கோவிலும் தன் ஆளுமையில் இருக்க வேண்டும் என அதில் விண்ணப்பிக்கிறது.

இதே வருடத்தில் விஷ்வ ஹிந்து பரிஷத்தின் முன்னாள் தலைவர் தேவகி நந்தன் அகர்வால் ஒரு நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்கிறார், மஸ்ஜித்தை அந்த இடத்திலிருந்து அப்புறப்படுத்தி வேறு எங்காவது வைக்க வேண்டும் என. (!!!!)

இராமன் கோவில் கட்டுவதற்காக ஒன்றுபடுவோம் என விஷ்வ ஹிந்து பரிஷத்திற்கு பாரதீய ஜனதா பார்ட்டி பலம் தருகிறது.

பிரதம வேட்பாளராக நிற்கும் ராஜீவ் காந்தி, அயோத்தி தொகுதியிலிருந்து தன் தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பித்தார், ‘இராம இராஜ்யம் அமைப்போம்’...

விஷ்வ ஹிந்து பரிஷத் போன்ற ஹிந்துத்துவா கட்சிகள் ‘பிரச்சினைக்குரிய இடம்’ என அரசு வகைப்படுத்திய இடத்திற்கு அருகிலேயே கோவிலுக்கான அடித்தளத்தை இடுகின்றனர். அதற்கென நடந்த ‘ஷிலன்யாஸ்’ / அடித்தளம் இடும் வேள்விக்கு அன்றைய பிரதமர் ராஜீவ் காந்தி ஒப்புதலளிக்கிறார்.

காற்று பலமாய் வீசுகிறது. தீ பற்றி எரிகிறது.

= = = = = =
1990:
பா ஜ க-வின் எல்.கே.அத்வானி, அவ்விடத்தில் இராமன் கோவில் கட்ட ஒத்துழைப்பு கோரி நாடு முழுக்க ‘ரத யாத்திரை’ மேற்கொள்கிறார்.  நாடெங்கும் முஸ்லிம்களுக்கெதிரான வெறியை விதையாக தூவப்படுகிறது.

அதே ரத யாத்திரை எனும் பெயரில் அயோத்தியில் ரத யாத்திரையின் தொண்டர்களாக அத்வானியும், அவரின் கும்பலும் நுழைந்ததும் அப்போதைய உ.பி முதலமைச்சர் முலாயம் சிங் யாதவ், போலீஸுக்கு வி.எச்.பி கும்பலை கண்டதும் சுட உத்தரவளிக்கிறார்.

எதுவும் நடப்பதில்லை. காற்று தன் வழியே சென்று விட்டது.

= = = = = =
நவம்பர் 1990:
பீஹாரில் உள்ள சமாஸ்திபூரில் வைத்து எல்.கே அத்வானி சட்ட விரோத ‘ரத யாத்திரை’ மேற்கொண்டதற்காக கைது செய்யப்படுகிறார். மத்தியில் ஆளும் வி.பி சிங்குக்கு பாஜக ஆதரவை விலக்குகிறது. வி.பி சிங் பதவி விலகுகிறார். மத்தியில் ஆட்சி மாறுகிறது.

= = = = = =
1991:
மத்திய அரசின் எதிர்க்கட்சியாக வலுப்பெற்ற பாஜக உத்திரப்பிரதேசத்தில் ஆட்சிக்கு வருகிறது.

அயோத்தியில் இப்போது ‘கரசேவகர்களின்’ கும்பல் வலுப்பெற்றதைத் தொடர்ந்து கோவில் கட்டும் இயக்கம் தீவிரமடைகிறது. நாடு முழுவதிலுமிருந்து செங்கற்கள் அனுப்பப்படுகின்றன.

= = = = = =
டிசம்பர் 6, 1992:
ஹிந்துத்துவா தீவிரவாதிகளால் பாபர் மசூதி தரைமட்டமாக்கப்படுகிறது. இந்தியாவில் வகுப்புவாத வன்முறை பெருமளவில் கட்டவிழ்த்துவிடப் படுகிறது. மத்தியில் ஆளும் காங்கிரஸ் மௌனம் சாதிக்கிறது.

மஸ்ஜிதைச் சுற்றியுள்ள 67 ஏக்கர் நிலமும் அரசு இந்த சமயத்தில் கையகப்படுத்திக் கொள்கிறது.

[பாப்ரி மஸ்ஜித் இடிக்கப்படும் பொழுது அன்றைய பிரதமர் நரசிம்மராவ் அதனை தடுக்காமல் நடவடிக்கை எதுவும் எடுக்காமல் பூஜை அறையில் அமர்ந்து பூஜை செய்து கொண்டிருந்தார் என்றும், பாப்ரி மஸ்ஜித் இடித்து தரை மட்டமாக்கப்பட்டது என்ற தகவல் அறிந்தவுடன்தான் பூஜை அறையை விட்டு நரசிம்மராவ் வெளியே வந்தார் என்றும் புகழ்பெற்ற எழுத்தாளர் குல்தீப் நய்யார் தனது வாழ்க்கை வரலாற்றில் குறிப்பிட்டிருக்கிறார். பாப்ரி மஸ்ஜிதின் கடைசி கல்லும் பெயர்த் தெடுக்கப்பட்ட பின்னரே நரசிம்மராவ் பூஜை அறையை விட்டு வெளியே வந்ததாக காலம் சென்ற சோஸலிஸ்ட் தலைவர் மதுளமாயி தன்னிடம் தெரிவித்தார் என குல்தீப் நய்யார் கூறினார். மஸ்ஜித் இடிக்கப்பட்டது, தரைமட்டமாக்கப் பட்டது என்ற வரிகள் காதில் விழுந்தவுடனே எழுந்து விட்டார் அவரது பூஜை முடிந்து விட்டது என்ற வரிகள் இந்திய மக்கள் அனைவரையும் அவர் எவ்வளவு இழிவாகக் கருதியுள்ளார் இந்த நயவஞ்சக நரசிம்மராவ் என்பதை எடுத்துக் காட்டும் விதமாக குல்தீப் நய்யாரின் சுயசரிதை அமைந்துள்ளது. விபரம் இங்கே.]

டீவியில் மீண்டும் பாப்ரி மஸ்ஜித் கட்டித் தருவோம் என அப்போதைய பிரதமர் நரசிம்ஹ ராவ் உறுதி தருகிறார். :)

மாண்பு மிகு மத வாதிகளே
சில கேள்விகள் கேட்பேன்
செவி தருவீரா


அயோத்தி ராமன்
அவதாரமா மனிதனா
அயோத்தி ராமன்
அவதாரமெனில்
அவன்
பிறப்புமற்றவன்
இறப்புமற்றவன்
பிறவாதவனுக்கா
பிறப்பிடம் தேடுவீர்

அயோத்தி ராமன்
மனிதனெனில்
கர்ப்பத்தில் வந்தவன்
கடவுளாகான்
மனித கோவிலுக்கா
மசூதி இடித்தீர்
:-- அன்றைய தினத்தில் வைரமுத்து எழுதிய கவிதை.


மந்திரிகளின் மனதில் இருந்ததையும், எதிர்க்கட்சியினர் வாய் விட்டுச் சொல்லி  சிரித்ததையும் காற்று முஸ்லிம்களின் காதுக்கு கொண்டு செல்லவேயில்லை. :)


= = = = = =
டிசம்பர் 16, 1992:
மசூதி இடிந்து பத்து நாட்களுக்குப் பின் அன்றைய பிரதமர் நரசிம்மராவ் தன் தலைமையில் இந்த வன்முறையைப் பற்றி ஆராய (!!!!) ஜஸ்டிஸ் லிபர்ஹானை தலைமை நீதிபதியாகக் கொண்டு ஒரு கமிஷனை அமைக்கிறார்.

= = = = = =
ஜனவரி, 25, 1993:
விஷ்வ ஹிந்து பரிஷத் கட்சி, ‘ராம ஜென்ம பூமி நியாஸ்’ என்னும் அமைப்பை ஆரம்பிக்கிறது. ‘பிரச்சினைக்குரிய இடத்தில்’ ராமன் கோவிலை கட்டியே தீருவோம் என சூளுரைக்கிறது. இதன் தலைவராக ஃபைஸாபாத்தின் மஹாந்த் பரமஹன்ஸ் ராமச்சந்திர தாஸ் சாது நியமிக்கப்படுகிறார். :)

= = = = = =
1993:
கமிஷன் அமைக்கப்பட்ட மூன்றே மாதங்களிலேயே பாப்ரி மஸ்ஜித் இடிப்புக்கு பின் யார் உள்ளனர், எதனால் அது நடந்தது என்னும் இரகசிய, யாரும் விடையறியாக் கேள்விகளுக்கு விசாரணையை ஆரம்பிக்கிறது. (!!)

= = = = = =
1994:
பிரச்சினை சுப்ரீம் கோர்ட்டுக்கு போகிறது. லக்னோ நீதிமன்றம் இந்த சம்பவத்தில் தீர்ப்பளிக்கும் வரை முன்பிருந்ததைப் போலவே நிலம் வக்ஃப் போர்டிடமும், மஸ்ஜிதில் முஸ்லிம்களின் வணக்க வழிபாடு மட்டும் நடக்க வேண்டும் என்றும் ஆணையிடுகிறது.

தீர்ப்பு காற்றில் கரைக்கப்படுகின்றது.

= = = = = =
ஃபிப்ரவரி 27, 2002:
அயோத்தியிலிருந்து அஹ்மதாபாத் நோக்கி சென்று கொண்டிருந்த சபர்மதி எக்ஸ்பிரஸ் இரயிலின் S-6 கோச்சினுள் இருந்த 58 மக்கள் குஜராத்தில் உள்ள கோத்ராவில் கொல்லபடுகின்றனர். அவர்கள் யாவரும், அயோத்தியிலிருந்து குஜராத்தை நோக்கி வந்து கொண்டிருந்த ‘ஹிந்து சேவகர்கள்’. யாரால், எதனால் நடந்தது என்பதே வெளிவராதபோது குஜராத்தில், அதனையொட்டி நடந்த கலவரத்தில் இரண்டாயிரத்திற்கும் அதிகமான முஸ்லிம்கள் உயிரிழக்கிறார்கள். ஆயிரக்கணக்கானோர், அனாதைகளாக நடைப்பிணங்களாகிறார்கள். இன்னும் பலர் சொந்த நாட்டிலேயே அகதிகளாகிறார்கள். அதைப் பற்றிய ஆவணப்படம் இங்கே.

காற்று தீயை மூட்ட மட்டுமே உதவியிருந்தது. கண்ணீரைக் கரைக்கவில்லை.

= = = = = =
ஏப்ரல் 2002:
அப்போதைய பிரதமர் வாஜபேயி, ஹிந்து, முஸ்லிம் தலைவர்களை அழைத்து தன்னுடைய ஆஃபீசில் இருக்கும் ‘அயோத்யா செல்’லில் பேச்சு வார்த்தை நடத்துகிறார். :))

= = = = = =
2003:
அல்லாஹாபாத் நீதிமன்றம் ‘பிரச்சினைக்குரிய அந்த இடத்தில்’ கோவில் இருந்ததற்கான ஆதாரம் ஏதும் உள்ளதா என தொல்பொருள் ஆராய்ச்சி நடத்தும்படி அரசுக்கு உத்தரவிடுகிறது. ஆகஸ்ட் மாதம், அந்த இடத்தில் ராமன் கோவில் இல்லை, ஆனால் பத்தாம் நூற்றாண்டில் ஒரு சிவன் கோவில் இருந்ததற்கான ஆதாரங்களை அக்குழு சமர்ப்பிக்கிறது. 11-12ம் நூற்றாண்டில் 50-60 அடி உயரத்தில் ஒரு கட்டிடம் இருந்திருக்கலாம் என்றும், அதன் ஆயுள் சில காலம் வரைக்குமே இருந்தது என்றும் அந்த ரிப்போர்ட் கூறியது. அந்த கட்டிடத்தின் அடித்தளத்திற்கு மேல்தான் 16ஆம் நூற்றாண்டில் பாபர் மஸ்ஜித் வேலைகள் ஆரம்பமாகியுள்ளன என்றும் அந்த அறிக்கை கூறியது.

இந்திய தொல் பொருள் ஆராய்ச்சியின் 142 வருட பாரம்பரியத்தை கேள்விக்குள்ளாக்கிய ஒரு வாக்கியமும் அதில் இருந்தது. **பத்தாம் நூற்றாண்டின் அந்தக் கட்டிட இடிபாடுகளில் வளையம் போன்ற ஒரு அமைப்பில் கிழக்கை நோக்கி ஒரு செங்கல் அமைப்பும் இருந்தது. மத்தியப்பிரதேசத்தில் இருக்கும் சில பழமை வாய்ந்த கோவில்களைப் போலிருந்தது. விஷ்வ ஹிந்து பரிஷத் தன்னிடமும் ஒரு ஆதாரம் இருக்கிறதென்றும் அதில் அந்தக் கோவில் பத்தாம் நூற்றாண்டல்ல, மாறாக ஏழாம் நூற்றாண்டை சேர்ந்ததாக. அதன் மேல் கட்டப்பட்ட இரண்டாவது கோவிலைத்தான் தகர்த்து பாப்ரி மஸ்ஜித் கட்டப்பட்டது என்று எழுதியிருப்பதாகவும் மார்தட்டிக் கொண்டது. யாரும் இந்த ஆதாரத்தை ஏன் சோதிக்க முன் வரவில்லை??

அந்தக் கட்டிடம், சிவன் கோவிலும் இல்லை, இராமன் கோவிலும் இல்லை, எங்களுடையது என்று கூட ஒரு ஜெயின் அமைப்பு கூறியது. காசா பணமா..... முஸ்லிம்களின் சொத்து, மற்ற அனைவருக்கும் பொதுதானே?? :)


**இந்த வரிக்கு மட்டும் இந்திய தொல் பொருள் ஆராய்ச்சியாளர்கள் காரணமும் சொன்னார்கள், கிட்டத்தட்ட தொண்ணூறு -90 அடி ஆழத்திலுள்ள ஒரு கட்டிடத்தைப் பற்றி ஐந்தே மாதங்களில் ஆராய்ந்து பதினைந்தே நாட்களில் ரிப்போர்ட் தயார் செய்ய சொன்னதால் சரிவர தகவல்கள் திரட்ட முடியவில்லை என்று!! :)

அதே இடத்தில், தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் சொன்ன அதே கட்டிடத்தின் கற்களை திரு.ஷேர்சிங் ஐ.ஏ.எஸ் அவர்கள் ஆராய்ச்சிக்காக பல தனியார் ஆய்வுக்கூடங்களுக்கு அனுப்பியபோது அவை ஐநூறு வருடம் கூடப் பழமை பெறாதவை என்று முடிவு தரப்பட்டது. ஏன் இப்படி? பொதுவில் வைத்து இதை எந்த தனியார் அமைப்பு வேண்டுமானாலும் சேலஞ்ச் செய்து காட்டுங்கள் என ஏன் ASI முன்வரவில்லை???

அரசு தரப்பில் காட்டப்படும் மென்பொருளைக்கொண்டு இராமன் பிறந்த Exact Locationsஐ தேட முயன்றால் அயோத்தியில் மட்டுமே ஏழு இடங்களைக் காட்டுகிறது. மஸ்ஜிதிற்கு பக்கத்தில் என்றால் ஆம், மூன்று கி.மீ தொலைவில் துல்லியமாய் காட்டுகிறது? ஒரே பிறப்பு ஏழு இடத்திலா???? மனிதக் கடவுள்ன்னா அப்படித்தாங்கிறீங்களா.... :))

வக்ஃப் போர்டும், முஸ்லிம் அரசியல் கட்சியினர் தொல்பொருள் ஆராய்ச்சி முடிவுகளுக்கு மறுப்பு வெளியிடுகின்றார்கள்.

= = = = = =
ஆகஸ்ட் 2003:
மஹாந்த் பரமஹன்ஸ் தாஸ் ஜூலை 31இல் இறந்து போகிறார். ஒரு மாதகாலமாக இதய நோயினால், லக்னோவில் அவதிப்பட்டு வந்த அவர் சிகிச்சை பலனின்றி இறந்து போகிறார். அவரின் இதய நோய்க்கு காரணமே எல்.கே அத்வானிதான் என வி.எச்.பியின் துணைத்தலைவர் கிரிராஜ் கிஷோர் அறிக்கை வெளியிடுகிறார். இராமனை வழிபடும் சாதுக்களுக்கு ஒரு கோவில் கட்டும் பணியை தன் அரசியல் ஆதாயங்களுக்காக அத்வானி கழுவிலேற்றினார்....இதனாலேயே பரமஹன்ஸ் தாய் இதய நோய்க்கு ஆளாகினார் என்ற குற்றச்சாட்டை வைத்தார். இறுதி மூச்சு அயோத்தியில்தான் என்று உறுதியாய் இருந்த மஹாந்த் பரமஹன்ஸ் தாஸை இறக்கும்முன் அயோத்திக்கே கொண்டு சென்றும் விட்டனர். அங்கேயே எரிக்கப்பட்டார்.

பாஜக தலைவர்களில் ஒருவரான வாஜபேயி பரமஹம்ஸின் இறுதி சடங்கில் கலந்து கொண்டு அறிக்கை வெளியிடுகிறார், “மஹான்  பரமஹம்ஸின் லட்சியத்தை உறுதியாய் நிறைவேற்றுவோம்.... அயோத்தியில் இராமன் கோவில் கட்டியே தீருவோம்” என.

இப்பொழுதும் காற்று எம் சமூகத்தில் கிசுகிசுக்கக் கூட செய்யவில்லை. :(


= = = = = = =
செப்டெம்பர் 01, 2003:

பாப்ரி மஸ்ஜித் கலவரத்தில் கரசேவகர்களை முடுக்கி விட்டதாக ஏழு பேரை குற்றப்பத்திரிக்கையில் பெயரிடுகிறார்கள். 
  • அப்போதைய துணைபிரதமர் எல். கே அத்வானி
  • உள்துறை அமைச்சர் முரளி மனோஹர் ஜோஷி
  • பாஜகவின் உத்திரப் பிரதேச யூனிட்டின் தலைவர் வினய் கடியார்,
  • பாஜகவின் மத்தியப் பிரதேச யூனிட்டின் தலைவர் உமா பாரதி,
  • விஷ்வ ஹிந்து பரிஷத்தின் தலைவர் அஷோக் சிங்கால்,
  • விஷ்வ ஹிந்து பரிஷத்தின் துணைத் தலைவர் கிரிராஜ் கிஷோர்,
  • விஷ்வ ஹிந்து பரிஷத்தின் இன்னொரு தலைவர் விஷ்ணு ஹரி டால்மியா.
பெண் துறவி (!!!) சாத்வி ரிதம்பராவிலிருந்து மொத்தம் 66 பேரை பாப்ரி மஸ்ஜிதை இடிக்க கரசேவக கும்பலை தூண்டி விட்டதாக குற்றப்பத்திரிக்கை கை நீட்டியது.  எல்.கே அத்வானி, 1992இல் அந்த மஸ்ஜிதின் அருகிலேயே இருந்திருந்தாலும், அவரிடம் ஒரு தவறுமில்லை என குற்றப்பத்திரிக்கையிலிருந்து அவர் பெயரை பின்னர் அகற்றுகிறார்கள். இப்படியே ஒவ்வொன்றாய் எல்லாப் பெயர்களும் அழிக்கப்பட்டுவிட்டன..... அல்லது மறுக்கப்பட்டும், மறைக்கப்பட்டும், மறந்தும் போய் விட்டன.

காற்றுக்கு தெரியும் யார் யாரின் பெயரை எப்போது அழிக்க வேண்டுமென. :)


= = = = = = =
நவம்பர் 2004:
உத்திரப்பிரதேச ஹைகோர்ட் எல்.கே அத்வானி மீதான குற்றச்சாட்டை மறு பரிசீலனை செய்ய வேண்டுமென்று பரிந்துரைக்கிறது.

தீர்ப்பின் காகிதங்களை காற்று அலைக்கழித்து விட்டது :)

= = = = = =
ஜூலை 2005:
ஆறு பேர் கொண்ட இஸ்லாமிய தீவிரவாதிகள் (!!!) ’பிரச்சினைக்குரிய அந்த இடத்தில்’ ஜீப்பில் வந்து வெடிகுண்டு வீச முயன்றதாகவும், போலீஸ் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஐந்து பேர் உயிரிழந்ததாகவும். ஆறாவது நபர் தப்பி ஓடிவிட்டதாகவும் செய்திகளில் வருகிறது. (!!!)

= = = = = =
ஜூன் 2009:
பதினேழு வருடங்கள் கழித்து தன் ரிப்போர்ட்டை ‘ஜஸ்டிஸ் லிபர்ஹான் குழு’ சமர்ப்பிக்கிறது. (!!!)

சில மாதங்கள் வரை மட்டுமே அந்த குற்றப்பத்திரிக்கையிலுள்ள ஹிந்து தலைவர்களின் பெயர் நாளிதழ்களில் அடிபடுகிறது. அதன் பின் மீண்டும் பலத்த காற்று வந்து தீர்ப்பின் பக்கங்களை மண்ணில் புதைத்து விடுகிறது. :)


= = = = = = =
செப்டெம்பர் 28, 2010:
லக்னோ நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது, இராமன் குறிப்பிட்ட அந்த மஸ்ஜிதின் கட்டிட பகுதியினுள்தான் பிறந்ததாக. எனவே வக்ஃப் போர்டு, நிர்மோஹி அக்ஹாரா, மற்றும் விஷ்வ ஹிந்து பரிஷத்திற்கு அந்த இடத்தை 1/3 +1/3 + 1/3 யாக பிரித்தளிக்கப்படும் என்று... மேல் முறையீட்டுக்கு தடையோடு!

இந்த வழக்கின் பண்டைய கால வழக்காடிகளான (!!!) அகிலபாரத ஹிந்து மஹாசபா, இந்த விஷயத்தில் தமக்கு நீதி கிட்டவில்லை என்றும் முழு நிலமுமே ஹிந்துக்களின் கையில் வந்தாக வேண்டும் என்றும் இதனை எதிர்த்தது. :)

முஸ்லிம்களின் சொத்தில் பட்ட காற்றைக்கூட இனி சொந்தம் கொண்டாடுவார்கள் போல.... காற்று பலகாலமாக கரை பட்டே வந்துள்ளது.... :)

= = = = = =
மே 9, 2011
இந்த வழக்கின் நிகழ்கால வழக்காடிகள் யாருமே நிலத்தை பிரித்துக் கேட்காத போது, மூன்று கூறாக இதனை பிரித்த லக்னோ பென்ச்சின் இந்தத் தீர்ப்புக்கு  இந்திய உயர் நீதிமன்றம் - Supreme court தடை விதித்தும், இத்தகைய ஒரு குழப்பமான உத்தரவு வழக்கில் சம்பந்தப்பட்டுள்ள சமுதாயங்களை மாறி மாறிப் புலம்ப வைத்துள்ளதை கண்டித்தும் தடை அறிவித்தது. இந்த வழக்கில் 1994இலும், மார்ச் 22இலும் உயர் நீதி மன்றம் தந்திருந்த உத்தரவுகளை அமுல்படுத்தி 1994க்கு முன்பிருந்த நிலையையே மேற்கொள்ளுமாறு அனைத்து தரப்பினருக்கும் ஆணையிட்டது. அரசின் கையில் இருக்கும் 67 ஏக்கர் நிலத்தையும் வக்ஃபுக்கே திரும்ப ஒப்படைக்குமாறும் கூறியுள்ளது.

இதையெல்லாம் ஏற்றுக்கொண்ட லக்னோ நீதிமன்றம், அப்படியே அமுல்படுத்தும்படி கூறியது, எனினும் மஸ்ஜிதின் அருகில் தற்காலிகமாக நிறுவப்பட்ட இராமன் கோவிலில் பூஜைகளும் வழக்கம் போல நடக்கும் எனவும் தீர்ப்பு விதித்தது. :)

லிபர்ஹான் கமிட்டியின் குற்றப்பத்திரிக்கையில் உள்ள நபர்களுக்கெதிராக போதுமான சாட்சிகள் இல்லை எனக்கூறி சி.பி.ஐயும் இந்த வழக்கை மண்ணில் புதைத்து விடுகிறது. 


எதற்காக இதையெல்லாம் கோர்த்தெழுதினேன்? 
ஒன்றுமில்லை சகோஸ்.... எத்தனை கவனமாக, நேர்த்தியாக, அடி மேல் அடி வைத்து ஒவ்வொரு அரசியல்வியாதியும், ஹிந்துத்துவ சூத்திரதாரிகளும், தீவிரவாதிகளும் இந்திய முஸ்லிம்களை ஏமாற்றுகிறார்கள், துண்டாடுகிறார்கள், உயிரோடு எரிக்கிறார்கள், வாழ்வின் ஒவ்வொரு சிறையும் பிக்கிறார்கள் என்பதைப் பார்க்கத்தான். பரவாயில்லை சகோஸ்... As usual our life and our deaths are both taken for granted....right??? :) 


பாப்ரி மஸ்ஜித் பாகம் ரெண்டின் புகைப்படம் ரிலீஸாகிவிட்டது :))


நிச்சயமாக அல்லாஹ் நீதி செலுத்துமாறும், நன்மை செய்யுமாறும், உறவினர்களுக்கு கொடுப்பதையும் கொண்டு (உங்களை) ஏவுகிறான்; அன்றியும், மானக்கேடான காரியங்கள், பாவங்கள், அக்கிரமங்கள் செய்தல் ஆகியவற்றை விட்டும் (உங்களை) விலக்குகின்றான் - நீங்கள நினைவு கூர்ந்து சிந்திப்பதற்காக, அவன் உங்களுக்கு நல்லுபதேசம் செய்கிறான். (16:90)

27 comments:

உங்கள் கருத்துக்கள்...