பர்தா என்ன சாதிக்கவில்லை... சொல்லுங்க?

Saturday, April 28, 2012 Anisha Yunus 2 Comments

இங்கே இருக்கும் முஸ்லிம், முஸ்லிமல்லாத அத்தனை சகோக்களையும் பார்த்து நான் கேட்கிறேன், இந்தப் பதிவின் கடைசியில், இஸ்லாமிய பெண்ணாக இருந்ததால் என்ன விதத்தில் என் வாழ்க்கை குறைந்து விட்டதென்று தெரியப்படுத்தவும். 


மேலும் வாசிக்க கீழே உள்ள தலைப்பில் சுட்டவும்.


பர்தா என்ன சாதிக்கவில்லை???

 

 

.

2 comments:

உங்கள் கருத்துக்கள்...

உண்மையிலேயே இறைவன் என்று எதுவும் இருக்கிறதா???

Friday, April 20, 2012 Anisha Yunus 25 Commentsஒரு ஊருக்கு போகிறோம், அல்லது ஊருக்குள்ளேயே பயணிக்கிறோம், அந்தப் பயணங்களில் எத்தனை முறை நாம் பாலங்களை கடக்க வேண்டி உள்ளது? அது தானாக முளைத்து விட்டது என்றால் நம்பும்படி உள்ளதா? ஒரு கட்டிடமோ, வாகனமோ அல்லது ஒரு தார் சாலையோ ஒரு மனிதன் அல்லது ஒரு நிறுவனத்தின் துணையின்றி இதெல்லாம் முளைத்திருக்கும் என்று நினைக்கிறீர்களா? அந்த அந்த பொருட்களின் அல்லது கட்டிட அமைப்புக்களிலேயே அதை இவ்வளவு சிறப்பாய் வடிவமைக்க அந்தத்துறையின் நிபுணர் தேவை என்று நினைக்கிறோம், இல்லையா? அப்படி இருக்க, உயர்தரமான, கடுஞ்சிக்கலான கட்டமைப்புகளுடன் கூடிய இந்த மனித உடம்பு? யோசித்துப்பாருங்கள் சகோ...

சிந்தனை செய்யும் மூளையைப் பற்றியும் யோசித்துப்பாருங்கள்: அது எப்படி சிந்திக்க உதவுகிறது, எப்படி பகுப்பாய்கிறது, எப்படி தகவல்களை சேமிக்கிறது, எவ்வாறு அவற்றை மீண்டும் வெளிக்கொணறுகிறது? எப்படி தகவல்களை பிரிக்கிறது, வகைப்படுத்துகிறது?? ஒரு மைக்ரானுக்கும் குறைவான நேரத்தில் இவை அனைத்தையும் செய்யவும் வல்லது, அல்லவா? (இந்த வரியைப் படித்து பிரம்மிக்கவும் அதே மூளையை உபயோகப்படுத்திக் கொண்டுள்ளோம், நினைவிருக்கட்டும் !!)

கொஞ்சம் இதயத்தையும் கவனிப்போம். மனிதன் பிறந்த நொடியிலிருந்து இறக்கும் வரையிலும் நொடி தவறாமல் எப்படி இரத்தத்தை இறைக்கிறது? கல்லீரலும் சிறுநீரகமும் கூட இவ்வாறே ஓய்வின்றி உழைக்கின்றனவே. இரத்தத்தை சுத்திகரித்து, அதிலுள்ள நஞ்சை அகற்றிடவும், இரசாயன மாற்றங்களை கட்டுக்குள் வைக்கவும் என ஒன்றா இரண்டா எத்தனை எத்தனை பணிகளை ஆற்றுகின்றன? நம் கட்டுக்குள் வரக்கூடியவையா இவை?

கண்கள்? அதைப் பற்றியும் யோசியுங்கள் சகோ...  

உயர் தர கேமராவையும் மிஞ்சும் வேகம், காட்சிகளை மையத்தில் குவிக்கும் திறன், சுழலும் பார்வையை நொடிக்கும் குறைவான நேரத்தில் சரி செய்யும் புலமை, காணும் காட்சியை மூளைக்கு மொழி பெயர்க்கவும், மதிப்பீடு செய்யவும், நிறங்களை உடலுக்கும் நரம்புக்கும் ஏற்புடையதாக்கி சுற்றியுள்ள ஒளிக்கும் தூரத்திற்கும் ஏற்ப தகவல்களை தரும் விவேகம், திறமை - இவையெல்லாம் யாரும் உருவாக்காமல், திட்டமிட்டுத் தராமலே வரக் கூடுமா? அல்லது சிலர் கூறுவது போல, இத்தகைய கடுஞ்சிக்கலான ஒழுங்குமுறைகளை தற்செயலான மரபணு மாற்றங்களோ அல்லது பரிணாமமோ உருவாக்கியிருக்க முடியுமா?

சுத்தமாக இருக்கும் ஒரு வெள்ளை சுவற்றில் பல்வேறு நிறங்களை பீய்ச்சி அடிக்கிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள். வர்ணங்களெல்லாம் சேர்ந்து ஒரு கை போன்றோ, பறவை போன்றோ, அல்லது வேறு ஏதாவது ஒரு பொருள் போன்றோ கூட தோன்றலாம். ஆனால் அவை யாவும் கலந்து திடீரென மோனலிசா போன்றாயிடுமா? அல்லது ஒரு கலைஞனின் திறமையும் முயற்சியும் இன்றி ஒரு மோனலிசா ஓவியம் வந்து விடக் கூடுமா?

சகோ...ஒவ்வொரு பாகமாக பார்த்துப் பார்த்து செதுக்கியது போன்றுள்ள நம் உடல், அந்த மோனலிசா ஓவியத்தை விட மிக சிக்கலான பாகங்களையும் நுணுக்கங்களையும் கொண்டது இல்லையா? அப்படி இருக்கையில், இந்த உடம்பின் அமைப்பும், அழகும், நுட்பமும் எவரின் ஞானமும் இல்லாமல் இப்படியே உருவாகிவிட்டது என்று நம்புவது எந்த விதத்தில் பகுத்தறிவாகும் சொல்லுங்கள் ??? 

இந்தப் பிரபஞ்சத்தையே எடுத்துக் கொள்வோமே... நாம் வாழும் பூமியானது சூரிய மண்டலத்தில் உள்ள பல கோள்களைப் போன்றதொரு கோள். நம் சூரிய மண்டலமும் பால் வீதியில் உள்ள பல்லாயிரக்கணக்கான மண்டலங்களில் ஒன்று. நாம் வாழும் பால் வீதி மண்டலமும் அதைப்போல் எண்ணிக்கையில் அடங்காத பால்வீதிகளில் ஒன்று. மொத்த பிரபஞ்சத்திலும் இது போல் லட்சக்கணக்கில் பால்வீதிகள் உள்ளதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். அதே நேரம் இந்த மொத்த பிரபஞ்சத்திலும் ஒரு உன்னதமான ஒழுங்கும் நுட்பமும் கலந்திருப்பதையும் நாம் கண்கூடாகக் காண்கிறோம்.  

இன்றைய தேதியில் இன்னும் பல வருடங்களுக்கு பின் வர இருக்கும் சூரிய கிரகணம், சந்திர கிரகணத்தைக் கூட இன்றே கணிக்க முடிகிறதே... எப்படி இது சாத்தியம்?  

சூரிய உதயத்தையும் அஸ்தமனத்தையுங்கூட இன்னும் 200 வருடங்களுக்கு இன்றே, இப்போதே கணிக்க முடியும். இவையெல்லாம் எப்படி முடிகிறது?  

அந்தப் பால்வீதியிலும், எண்ண இயலாத நட்சத்திரங்களிலும் கோள்களிலும், அவற்றின் அசைவிலும், சுழற்சியிலும் உள்ள ஒழுங்கால், அந்த நேர்த்தி மாறாது என்னும் நம்பிக்கையால்...  

இவையெல்லாம் பறை சாற்றுவது என்ன???  இந்தப் பிரபஞ்சத்தை படைத்தவனின் நேர்த்தியான கலைத்திறன் மற்றும் இதைப் பற்றியுள்ள உன்னதமான அறிவு.


அணுவளவும் பிறழாத ஒழுங்கும், அலாதியான அழகுடனும் விளங்கும் இந்தப் பிரபஞ்சம் தானாகவே வந்து விட்டதாக நினைக்க முடிகிறதா சகோ? 

திடீரென நிகழ்ந்த ஒரு பெரு வெடிப்பில் இத்தனை சிக்கலான ஒரு அமைப்பு வந்து விட முடியுமா?  தானாக வாய்த்து விடுமா?

நிகழ்வாய்ப்பில் ஒரு உதாரணம் சொல்லவா?  வெவ்வேறு நிறங்களாலான 10 கோலிக்குண்டுகளை வரிசைப்படுத்தி ஒரு பையில் போட்டு நன்றாக குலுக்குங்கள். அதன் பின் கண்களை மூடிக்கொண்டு ஒன்றிலிருந்து பத்து வரையான கோலிக்குண்டுகளை வரிசை தவறாமல் எடுக்க வேண்டும். முடியுமா? அதற்கான வாய்ப்புகள் எத்தனை தெரியுமா? இரண்டு கோடியே அறுபது லட்ச வாய்ப்புகளுக்கு ஒரு வாய்ப்பு (2,60,00,000 to 1) மட்டுமே. 

10 கோலிக்குண்டுகளுக்கு மட்டுமே இந்த நிலை எனில், லட்சோப லட்ச நட்சத்திரங்களும், கோள்களும், சம கால நிகழ்வில் இத்தனை துல்லியமான நேர்த்தியுடனும், ஒரு இனிய பல்லியத்துடனும் தற்செயலாக இயங்க எத்தனை வாய்ப்புகள் உண்டு, சொல்லுங்கள்???? 

பதில்????......................பூஜ்ஜியம்தான்!!!!

இந்த சிறிய உதாரணமே போதுமானதாக இல்லையா படைத்தவனின் இருப்பை விளக்க?????

எல்லாம் வல்ல அல்லாஹ், தன் திருமறையில் கூறுகிறான்,
அல்லாஹ்தான் அனைத்துப் பொருட்களையும் படைப்பவன்; இன்னும், அவனே எல்லாப் பொருட்களின் பாதுகாவலனுமாவான். (39:62)

.

25 comments:

உங்கள் கருத்துக்கள்...

புதுசு கண்ணா புதுசு...... :)

Monday, April 16, 2012 Anisha Yunus 8 Comments

ஓக்கே.... யதேச்சையா ஒரு சண்டே லீவில் (ஐ மீன், வீட்டு வேலையும் கம்மியாய் / இல்லாமல்) கிடைத்த ஒரு மணி நேரத்தை உருப்படியா செலவழித்து (ஓக்கே... ஓக்கே.... ஒரியாக்காரர் பாக்கட்டையும் கொஞ்சம் செலவு செய்துதான்... :)) செய்த ஒரு சிறிய ப்ராஜெக்ட்டை உங்களுக்கும் சொல்லி தர்றேன்... :))
இதுதான் ப்ராஜெக்ட். ரொம்ப நாளா அந்த கருப்பு சேர் என்னை டென்ஷன் செய்து கொண்டிருந்தது. சிகாகோவில் மொத்த செட்டையும் வித்த பின் ஒரே ஒரு சேர் மட்டும் விடாது கருப்பு மாதிரி என் பின்னாடியே இருந்தது. அதை ஒப்புக்கு சப்பாணி போல அப்பப்ப உபயோகப்படுத்திக் கொண்டாலும் ஒரு டென்ஷன் பொருளாகவேதான் எனக்கு படும். சரி, அந்த எபிசோடு அப்படியே ஒடிகிட்டு இருந்தது. இன்னொரு எபிசோடு, ஜுஜ்ஜுவிற்கு ஒரு சேரும் டேபிளும் வாங்கிப் போடவேண்டும் என்பது. காலையிலும் மாலையிலும் குர்’ஆன் ஓதிப்பார்க்கும்போதும், மற்ற பாடங்களை படிக்கையிலும் நன்றாக இருக்குமே என்று. குழந்தைகளுக்கு என்று விற்கப்படும் டேபிள் சேர் நம்ம பட்ஜெட்டுக்கு கட்டுப்படியாவதில்லை.

இன்னொரு எபிசோடும் இருக்கு இதில... ஹி ஹி ஹி..கொஞ்சம் அட்ஜஸ்ட் செய்து படிங்க.


பக்கத்துல இருக்கும் குட் வில் கடையில் (ஒருவர் வேண்டாமென்று நினைக்கும் பொருளை அங்கே டொனேட் செய்யலாம். அந்த பொருளை இன்னொருவர் தேவைப்பட்டால் வாங்கிக் கொள்ளலாம். விற்ற பணத்தைக் கொண்டு ஏழை மக்களுக்கு உதவி செய்வார்கள்.) அந்த கடையில் ஒரு நல்ல டேபிள் 10 டாலருக்கு கிடைத்தது. உடனே வாங்கிக் கொண்டு வந்து வெச்சுட்டேன். அதன் பின் டேபிள் சேருக்கான ஐடியாவும் கிடைச்சிருச்சு. அதை செயல் படுத்தியதில், முதல் பாகம் இப்ப.... அடுத்த பாகம் கொஞ்சம் கழிச்சு.... :))

ஓக்கே... இப்ப எப்படி இதுல வேலை செய்வதுன்னு பார்க்கலாம்.

தேவைப்படுவது:
  • நேரம் : 30 நிமிடங்கள் - 1 மணி நேரம் வரை.
  • பிடித்தமான துணி,தேவைப்படும் அளவு.(ஹி ஹி ஹி)
  • துணி வெட்டும் கத்திரிக்கோல்
  • ஸ்டேப்ளர் கன் (பலமான ஸ்டேப்ளர் பின்னடிக்க உதவும் கருவி)
  • ஸ்க்ரூ டிரைவர்

செய்முறை:


முதல்ல உங்களுக்கு பிடிச்ச துணி ஒரு யார்டு வாங்கிக்குங்க. கனமான துணியாக இருப்பது நல்லது. வெல்வெட் மாதிரி துணி அல்லது சில்க், கம்பளி வித துணி எல்லாம் கொஞ்சம் அனுபவம் வந்த பின் வாங்கலாம். இப்ப காட்டன் துணி, தடிமனா வாங்கிக்குங்க. நான் வாங்கிய துணி மெலிதாக இருப்பது போலிருந்ததால், உள்ளே வைக்க அதே அளவு வெள்ளைத்துணியும் வாங்கிக் கொண்டேன்.
 ஸ்க்ரூ டிரைவர் வெச்சு சேரின் உட்காரும் பாகத்தின் பின்னால் உள்ள ஸ்க்ரூ எல்லாம் கழற்றி பத்திரமா ஒரு பேக்கட்டில் போட்டு வைங்க.

அதன் பின் முன் பக்கம் உள்ள உட்காரும் பேட் தனியாக வந்து விடும். அதில் ஒரு சமயம் ஸ்டேப்ளரோ அல்லது பசையோ போட்டு ஒட்டப்பட்டிருக்கும். ஸ்டேப்ளர் மட்டும் என்றால் வேலை கம்மி. அழகாக எல்லா ஸ்டேப்ளரும் எடுத்துவிடலாம்.
சேரின் கீழ் பகுதி.
ஸ்டேப்ளர் கன்
ஒவ்வொரு ஸ்டேப்ளராக பார்த்து அகற்றவும். அகற்றியவற்றை பத்திரமாக குப்பையில் போடவும்.
வளைவாய் உள்ள பகுதிகளில் கவனமாக பார்த்தெடுக்கவும்.
ஸ்டேப்ளர் இல்லாம பசையா இருந்தால் கஷ்டம்தான். கிழிச்சோ/ பிரிச்சோ எடுக்க வேண்டி வரும். உள்ளிருக்கும் கார்டு போர்டுக்கு பிரச்சினை வராம கழட்டணும்.
எல்லா ஸ்டேப்ளரும் கழட்டிய பின், பேடிங், மேற்துணி, கார்டு போர்ட்
எல்லா ஸ்டேப்ளரும் கழட்டிய பின் மெதுவாக கார்டு போர்டை நகரத்திப்பாருங்க. அதன் மேலிருக்கும் பேடிங் / ஃபோம் பஞ்சு நல்லா இருந்ததுன்னா பிரச்சினை இல்லை. இல்லை, கிழிஞ்சு போய், இத்துப் போயிருந்தால் அதையும் புதிதாக வாங்க வேண்டி இருக்கும். என்னுடையதில் அது போதுமென்று பட்டதால் அதையே உபயோகிச்சாச்சு. 
உட்காரும் பகுதியையும், புதிய துணியையும் வைத்து அளவு பாருங்கள்.
புது கத்திரிக்கோலை பேக்கெஜிங்கில் இருந்து பிரிப்பது எப்படின்னு இன்னொரு பதிவுல சொல்றேன் :)

அளவு சரி பார்த்து வெட்டுங்க.
வெட்டி எடுத்த துணியை சரியாக பொருந்தி வருவது போல் வைத்து, இறுக்கமாக இழுத்து ஸ்டேப்ளர் போட ஆரம்பிக்கவும். 
ஏற்கனவே சேரின் மீதிருந்த துணி தேவைப்பட்டால் வைங்க. இல்லையென்றால், ஃபோம் பஞ்சு, கார்டுபோர்டு மட்டும் போதும்.
வளைவுகளில் நன்றாக இழுத்து ஸ்டேப்ளர் அடிக்கவும். குண்டூசி அல்லது டேப் கொண்டு துணியை நகர விடாமல் செய்து விட்டும் ஸ்டேப்ளர் அடிக்கலாம்.

துணி வழுக்குவது போல இருந்தாலோ, ஸ்டேப்ளர் கன் இல்லையென்றாலோ, எந்த பொருளிலும் ஒட்டும் நல்ல பசை அல்லது டக்ட் டேப் உபயோகியுங்கள்.
தேவைப்படும் அகலம் போதும். இது சாம்பிள் இமேஜ்.

கவனமாக ஸ்டேப்ளர் எல்லாம் அடங்கியுள்ளதா மேல் பக்கம் நீட்டிக்கொண்டுள்ளதா எனப்பார்க்கவும். சுத்தியல் கொண்டு நன்கு மழுங்கச் செய்யவும்.
கீழ்ப் பாகம் ரெடி :)
இனி சேரின் மேல் பாகத்தில், தலை வைக்கும் இடத்தை கொஞ்சம் கவனிப்போம்.
இந்த பாகத்துல பிரச்சினை என்னன்னா கொஞ்சம் வளைஞ்சு இருப்பது. ஸ்டேப்ளரும் சுத்தியலும் அடிச்சா பிஞ்சு வந்துடும் போல லேசான கார்டுபோர்டு. அதனால இதை அதிகம் சதாய்க்க வேண்டாம் என்று முடிவு. :)
இதையும் தலைகீழாய் வைத்து, தேவையான அளவு துணி வெட்டி எடுக்கவும். பின், டக்ட் டேப் போட்டு இறுக்கி வைக்கவும்.
வளைவுகளில் மட்டுமே ஸ்டேப்ளர் அடித்தேன். மற்ற இடங்களில் டக்ட் டேப் போட்டு துணியை நகர்  விடாமல் செய்ததும், மீண்டும் நீள வாக்கில் டேப் போட்டே ஒட்டியாயிற்று.
இதோ மேல் பாகமும் ரெடி.
 கீழ் பாகத்திலும் மேல் பாகத்திலும் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், ஸ்டேப்ளர் அடிக்கும்போதோ, பசை ஒட்டும்போதோ, ஒட்டப்படும் துணி, ஏற்கனவே இருக்கும் ஸ்க்ரூவின் ஓட்டைகளை மறைக்காதவாறு பார்த்துக் கொள்ளவேண்டும். துணியில் ஓட்டை போட்டு மேலே ஸ்க்ரூ வருமாறு செய்வது துணிக்கு நல்லதல்ல. எனவே ஓட்டைகளை மறைத்து விடாமல் கவனம் தேவை.
இனி, மொட்டையாய் இருக்கும் சேரை சிறிது துடைத்து சுத்தம் செய்து, கீழ்/மேல் பாகங்களை செட் செய்ய வேண்டியாதுதான்.
நேரம் அதிகம் இருந்தால், அல்லது சேரின் கலரே உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் ஸ்ப்ரே பெயிண்டிங் செய்து அதையும் மாற்றலாம். எனக்கு கருப்பே பிடித்திருந்ததாலும், அதில் கீறல் எதுவும் இல்லாமல் இருந்ததாலும் அதை மாற்றவில்லை. அப்படியே விட்டுவிட்டேன்.  கீழ் பாகத்தையும் மேல் பாகத்தையும் கவனமாக ஸ்க்ரூ போட்டு இறுக்கி வைக்கவும். ஸ்டேப்ளர் எதுவும் குத்துகிறதா என்று கை வைத்து பார்க்கவும். தேவைப்பட்டால் சுத்தியில் இன்னும் கொஞம் அழுத்தி விடவும்.
புது சேர் ரெடி :)
என்ன அழகு.... எத்தனை அழகு.... நானே பாடிக்கிறேன்... :)
ஜுஜ்ஜூவிற்கு சந்தோஷம் தாங்க முடியவில்லை... சிரிக்கும் வாயை மறைத்து ஒரு போஸ் :)
இனி இந்த டேபிளில் வேலை உள்ளது. அது இரண்டாவது பாகம். :)
யெஸ்...!! பத்தே டாலர்தான். இதையும் விலையுயர்ந்ததாய் மாற்றுவோம்... காத்திருங்கள். :).

8 comments:

உங்கள் கருத்துக்கள்...

உண்மையை நோக்கி ஒரு பயணம்...

Tuesday, April 10, 2012 Anisha Yunus 33 Comments

குறிப்பு:

மன்னிக்கவும். இந்த பதிவை நிறைய நாட்களுக்கு பிறகு பப்லிஷ் செய்யும் அவசரத்தில் சில தகவல்களை சொல்ல இயலாமல் போய் விட்டது. இந்த தொடரை இஸ்லாமிய அழைப்புப் பணியை செய்யும் ஒரு குழுவிற்காகவே செய்கிறேன். இந்த தொடரும், ஆங்கில மூலத்தில் இருந்து தமிழில் மாற்றம் செய்யப்படும் ஒரு தொடரே. இந்த குழுவானது, குறிப்பாக அழைப்புப் பணியை செய்பவர்களுக்காகவும், மற்றும் அனைத்து முஸ்லிம் / முஸ்லிமல்லாத சகோதர சகோதரிகளுக்காகவும் ஒரு வலைதளத்தை அமைத்துள்ளது. அதில் எண்ணற்ற கேள்வி பதில்களும், இறைவனை / இஸ்லாத்தை பற்றிய தகவல்களை மிக அழகாகவும் ஃப்ளாஷ் வீடியோ வடிவில் தருகின்றது. மேலும் விவரங்களுக்கு இந்த லின்க்கில் பார்க்கவும். ---
www.dawah.invitetogod.com

"யாருப்பா இன்னும் டிக்கட் வாங்கலை? வாங்காதவங்க எல்லாம் சீக்கிரம் வாங்குங்க பார்க்கலாம். பாட்டிம்மா... கூடைய  அப்படி கொஞ்சம் தள்ளி வைங்களேன்..."
"ஒரு ஜி.பி குடுங்க..."
"கணபதி ரெண்டு"
"அங்கிள் சி.எம்.ஸ் ஸ்கூல் ரெண்டு"
"இந்தா புடிங்க எல்லாம்... இன்னும் யாரு வாங்கல..டிக்கட் டிக்கட்..."
"எனக்கு ஒரு டிக்கட்"
"எங்கே சார் போகணும்?"
"தெ...தெ...தெரியாது"
"என்னது??, எங்கே போகணும்ன்னாவது தெரியாதா? போக வேண்டிய அட்ரஸ் எதுனாச்சும் வெச்சிருக்கீங்களா??"
"......இல்லை. எங்கே போகணும்...?"
"நாசமா போச்சு... ஏன் சார், எங்கே போகணும்னு என்னை கேட்டா? எங்கே போகணும்னு தெரியாம பஸ்ல ஏறிட்டு ஏன் சார் எங்க உயிரை வாங்கறீங்க???
- - -

- - -

- - -
பஸ்ஸில் உள்ள அத்தனை தலையும் ஒரே தலையை பார்த்தபடி. ஒரு தலைக்கு பல கதைகளை யோசித்தபடி....

என்ன?

இப்படி ஒரு பயணத்தை நீங்கள் முன்ன பின்ன பார்த்திருக்கீங்களா??

போகுமிடம் தெரியாத அந்த நபரின் இடத்தில் நீங்க இருந்திருக்கீங்களா??  

அதெப்படி, போகற இடம் எதுன்னு தெரியாம போகும்னு கேக்கறீங்களா??  

இல்லை...அந்த நபர் எந்த நோயால் தாக்குண்டு இருப்பார்னு நினைக்கறீங்களா? எந்த நோயுமே இல்லாவிட்டால்..............??

ஒரு சிறிய பஸ் பயணத்தில் கூட நாம் போகுமிடம் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது. எதற்காக இந்தப் பயணம், எங்கே போகிறோம், எப்படி, எவருடன், எதைக்கொண்டு போகிறோம் என்பதை திட்டமிடுதல் அவசியமாகிறது. ஆனால் அதை விட பன்மடங்கு பெரிதான வாழ்க்கைப்பயணத்தை இப்படி திட்டமிடுகிறோமா?? எதற்காக இந்த வாழ்க்கை, எங்கே போகிறது இந்தப் பயணம், எந்த இலக்கை நோக்கி? அதற்கான திட்டங்கள் எங்கே?? இதற்கெல்லாம் உங்களின் பதில் "இல்லை / தெரியாது /யோசிக்கவில்லை" என்றால் பஸ் பயணத்தில் நாம் சந்தித்த அதே நபர் போல்தான் உங்களின் நிலையும்.... இல்லையா??

நீங்கள் மட்டுமல்ல. இந்த உலகில் எதற்காக பிறந்தீர்கள், உங்கள் வாழ்க்கையின் தேவை என்ன, உங்களை படைத்தது யார்? எதற்காக? உங்களின் மரணத்திற்கு பின் என்ன நடக்கப்போகிறது?"-- என்ற இவ்வாறான கேள்விகளுக்கெல்லாம் பதிலில்லாத அனைவருமே அந்த நபரைப் போல்தான்பின் அவருக்கும் நமக்கும் என்ன வித்தியாசம் இருக்கப்போகிறது?? உண்மைக்கு திரையிட்டு இன்னும் எவ்வளவு நாட்கள்தான் நாம் அறியாமையிலேயே இருக்க போகிறோம்??

சகோ,  காரணமில்லாமல் நீங்களோ, நானோ, நாம் நடமாடிக்கொண்டிருக்கும் இந்த உலகமோ படைக்கப்படவில்லை. அதன் காரணம் என்ன, அவசியம் என்ன என்பதை நம் அனைவரைக்கும் உணர்த்துவதே இந்த ஆக்கத்தின் நோக்கம்.  சமூகத்தில் வாழும் அனைத்து மக்களின் நடுவிலும் அமைதியையும் நல்லிணக்கத்தையும் மெருகேற்ற இந்த கட்டுரை உதவும் என்றே நம்புகின்றோம்.(தொடரும்)


.

33 comments:

உங்கள் கருத்துக்கள்...