மோடியின் குஜராத்தும், சமாஜ்வாடியின் உத்திரப்பிரதேசமும்.... ஒரே அம்பின் இரு பக்கம்!!!

Friday, December 20, 2013 Anisha Yunus 0 Comments


மூன்று மாதங்களுக்கு(ம்) முன்னர் இந்து வகுப்புவாதிகளால் தாக்கப்பட்ட மற்றும் அவர்களின் கிராமங்களில் இருந்து விரட்டப்பட்ட பத்து ஆயிரக்கணக்கான முஸ்லீம்கள்அவர்களின் வீடுகளுக்கு திரும்ப முடியாதபடிக்குஇந்தியாவின் அதிக மக்கள்தொகை கொண்ட மாநிலமான உத்தர பிரதேசத்தின் சமாஜ்வாதி கட்சி அரசாங்கத்தால் (SP - சோசலிச கட்சி)சட்டவிரோதமாக தடுக்கப்பட்டு உள்ளனர்உத்தர பிரதேசத்தின் முஜாபர்நகர் மாவட்டத்தில் உள்ள அவர்களின் சொந்த கிராமங்களுக்கு ஒருபோதும் திரும்ப முடியாதபடிக்குஉடைமைகளைப் பறிகொடுத்துள்ள அந்த முஸ்லீம்களிடமிருந்து கட்டாய வாக்குறுதிகளைப் பெற சமாஜ்வாதி கட்சி அரசாங்கம்தங்களின் வீடுகளையும்,வாழ்வாதாரத்தையும் இழந்துள்ள அந்த மக்களின் இயலாமையைச் சுரண்டதுன்பியலான விதத்தில் போதுமானதாக இல்லாத ஒரு நஷ்டஈடு பேரத்தைப் பயன்படுத்துகிறது இது முஸ்லீம்களின் வெளியேற்றத்திற்கு அரசின் ஆதரவு என்பதல்லாமல் வேறொன்றுமில்லைஇது (அவர்களின் மதத்திற்கு அப்பாற்பட்டுஉத்தர பிரதேசத்தின் முஸ்லீம்கள் இந்து குடியானவர்களுக்கு சமாந்தரமாக உள்ளனர் என்ற போதினும்அரசாங்கத்தின் அணுகுமுறைகள் மற்றும் இன சுத்திகரிப்பு செய்வதற்கான அதன் தீர்மானம் இரண்டு விஷயத்திலுமே வெளிப்படுகிறது.

உலகின் மிகப் பெரிய ஜனநாயகம்என்று கருதப்படும் ஒரு நாட்டில் மிகப்பெரிய சிறுபான்மை மதத்தினரின் அங்கத்தவர்களைப் பாதிக்கச் செய்யும் இந்த அப்பட்டமான பிரத்யேகவாத (exclusive) மற்றும் அரசியலமைப்பிற்கு விரோதமான நடவடிக்கையைத் தடுக்க இந்தியாவின் காங்கிரஸ் கட்சி தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியோ (UPA) அல்லது இந்தியாவின் உச்சநீதிமன்றமோ தலையிடவில்லை.
தங்களின் சொந்த வீடுகளுக்குத் திரும்ப தடுக்கப்பட்டுள்ளபெருமளவிலான ஏழைகள்அரசியல் ஆதரவில்லாமல்உள்நாட்டிற்கு உள்ளேயே இடம்பெயர்த்தப்பட்டுள்ள அந்த முஜாபர்நகர் முஸ்லீம்கள் இழிவார்ந்த முறையில் வெறும் பலவீனமான பிளாஸ்டிக் கூடாரங்களைக் கொண்ட அகதிகள் முகாம்களில் வாடும் நிலைக்கு விடப்பட்டுள்ளனர்உத்தர பிரதேச மாநில மற்றும் இந்திய அரசாங்கங்களால் கைவிடப்பட்டிருக்கும்ஏறத்தாழ வெறும் உடுத்திய உடையோடு வெளியேறிய இந்த பாதிக்கப்பட்ட கிராமவாசிகள்தன்னார்வ அமைப்புகள் வழங்கும் உதவிகள் மற்றும் சமாஜ்வாதி அரசாங்கத்தால் வழங்கப்படும் அற்பமான அவசரகால உதவிகளில் உயிர்வாழ நிர்பந்திக்கப்பட்டுள்ளனர்மிகக் குறைந்த உணவு,குடிநீர்மருத்துவ பராமரிப்போடு முறையான கழிவறை வசதிகள் கூட இல்லாமல்கடுங்குளிரில் இருத்தப்பட்டுள்ளதால்அந்த நிவாரண முகாம்கள் வியாதிகளை அடைகாக்கும் இடமாக மாறி வருகிறது
முறையான மருத்துவ பராமரிப்பு இல்லாததால்குறைந்தபட்சம் 50 குழந்தைகள் ஏற்கனவே இறந்துவிட்டனர் மற்றும் நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் பலர் படுமோசமான நிலைமையில் உள்ளனர்வேறு வார்த்தைகளில் கூறுவதானால்அந்த அகதிகள் முகாம்களில் வசிப்பவர்களுக்குமுஜாபர்நகரில் அவர்களின் வீட்டைவிட்டு வெளியேற நிர்பந்தித்த அந்த வகுப்புவாத கலவரத்தை விட இன்னும் அதிக மரணகரமாக மாறி உள்ளன. ஜாட் மஹாபஞ்சாயத்தின் பிற்போக்கு தலைவர்கள்ஜாட் சமூகத்தின் நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாக கூறிக்கொள்ளும் ஒரு ஜாதிய அமைப்புவரலாற்றுரீதியில் நிலவுடைமை கொண்ட ஒரு விவசாய குழுஜாட் சமூகத்தின் இரண்டு இந்து இளைஞர்களின் மரணத்திற்கு காரணமானவர்கள் என்று யாரை பொறுப்பாக்கினார்களோ அந்த "முஸ்லீம்களை" தாக்க ஆக்ரோஷமான குண்டர்களை திரட்டிய போதுசெப்டம்பரின் தொடக்கத்தில் முதன்முதலில் பெரியளவிலான தாக்குதல்கள் நிகழ்ந்தன

இந்த குண்டர்கள் மூர்க்கத்தனமாக வன்முறையில் இறங்கிஎல்லா முஸ்லீம்களையும் அல்லது பெருமளவிலான முஸ்லீம்களை பல கிராமங்களை விட்டு விரட்டி அடித்தனர்குறைந்தபட்சம் 48 பேர் கொல்லப்பட்டனர்அதில் பெரும்பாலானவர்கள் முஸ்லீம்கள்ஆயிரக்கணக்கானவர்கள் காயமடைந்தனர்அதனோடு பல முஸ்லீம் பெண்கள் கும்பல் பாலியல் பலாத்காரத்திற்கு உட்பட்டனர்இத்தகைய தாக்குதல்கள் 50,000த்திற்கும் மேலானவர்களைபெரும்பாலான முஸ்லீம்களைவீடற்றவர்களாக ஆக்கியது.

இந்து மேலாதிக்க அமைப்புகளின்பிஜேபி (பாரதீய ஜனதா கட்சிமற்றும் அதன் "பங்காளிகளானஆர்எஸ்எஸ் (ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்அல்லது தேசிய தன்னார்வ அமைப்பு), மற்றும் விஷ்வ இந்து பரீஷத் (உலக இந்து கவுன்சில்ஆகியவற்றின்காரியாளர்கள் முஜாபர்நகரின் முஸ்லீம் கிராமவாசிகளுக்கு எதிராக பாரிய வன்முறையைத் தூண்ட உதவியமைக்கான நிறைய ஆதாரங்கள் அங்கே உள்ளனசான்றாகபுது டெல்லியை ஆதாரமாக கொண்ட கொள்கை பகுப்பாய்வு மையம் (Center for Policy Analysis) பிஜேபி மற்றும் அதன் கூட்டாளிகளின் பாத்திரம் குறித்து ஒரு விரிவான அறிக்கை வெளியிட்டுள்ளது. இத்தகைய அமைப்புகள் வகுப்புவாத ஆதிக்கத்தைத் தூண்டிவிடுவதில் ஒரு நீண்ட வரலாறைக் கொண்டுள்ளன.

இந்த கொள்கை பகுப்பாய்வு மையமும் மற்றும் ஏனைய நம்பத்தகுந்த ஆதாரங்களும்முஜாபர்நகரில் வகுப்புவாத குழப்பம் வெடித்த போது சமாஜ்வாதி அரசாங்கம் பொலிஸ் தலையீடு செய்வதில் இருந்து அதை தடுத்து வைத்தது அதாவது முஸ்லீம்கள் மீது வகுப்புவாத தாக்குதல்கள் தொடர திட்டமிட்டு அனுமதித்தன என்பதற்கு நம்பத்தகுந்த ஆதாரங்களையும் வழங்குகின்றன.

முஸ்லீம்கள் அவர்களின் கிராமங்களை விட்டு வெளியேற்றப்பட்டு ஏறத்தாழ இரண்டு மாதங்களுக்குப் பின்னர்அக்டோபர் 28இல்முதல் மந்திரி அகிலேஷ் யாதவ் தலைமையிலான மாநில அரசாங்கம் தங்களின் வீடுகளையும்,வாழ்வாதாரத்தையும் இழந்தமைக்காக அவர்களுக்கு "நஷ்ட ஈடாக"இடம்பெயர்த்தப்பட்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூபாய் 500,000 (அண்ணளவாக 8000 அமெரிக்க டாலர்வழங்கும் என்று அறிவித்தது.
அரசாங்க தகவல்களின்படிஇந்த நஷ்டஈடு 1,600 குடும்பங்களுக்கு வழங்கப்படுகிறதுஎவ்வாறிருந்த போதினும்இந்த சொற்ப தொகையைப் பெறபாதிக்கப்பட்ட அந்த முஸ்லீம்கள் தங்களின் கிராமங்களுக்கும்வீடுகளுக்கும் அவர்கள் ஒருபோதும் திரும்ப மாட்டார்கள் என்று வாக்குறுதி அளித்து ஒரு உறுதிமொழி பத்திரத்தில் கையெழுத்திட வேண்டும்.

அந்த உறுதிமொழி பத்திரம் பின்வருமாறு அறிவிக்கிறது: எங்கள் கிராமத்தில் நடந்த வன்முறை சம்பவங்களால் எங்களின் வீடுகளையும்கிராமத்தையும் விட்டு வெளியேறி உள்ள நானும் மற்றும் எனது குடும்ப உறுப்பினர்களும் எந்த சூழ்நிலையிலும் இப்போது முதல் எங்களின் சொந்த கிராமத்திற்கோ வீட்டிற்கோ திரும்ப மாட்டோம்.”

அவர்களின் கிராமத்தில் உள்ள சொத்துக்களுக்குஅல்லது வேறு ஏதேனும் கூடுதல் நகரா சொத்துக்களுக்குவேறெந்த அரசாங்கம் வழங்கும் மானியங்களுக்காக முன்செல்வதிலும் கையெழுத்திட்டவர்களின் மீது உ.பி.அரசாங்கத்தின் இழப்பீடு நிபந்தனை விதிக்கிறது.

முஜாபர்நகர் முஸ்லீம்களின் வெளியேற்றத்திற்கு அரசாங்கம் ஒப்புதல் வழங்குகின்றஉண்மையில்நிர்பந்திக்கின்ற அதேவேளையில்அவர்கள் பெயரில் இருக்கும் எந்தவொரு சொத்தும் அவர்கள் பெயரிலேயே இருக்குமென்றும்அதை விற்பதற்கோ அல்லது வைத்திருப்பதற்கோ தடையேதுமில்லை என்றும் அரசாங்கம் எரிச்சலூட்டும் விதமாக வாதிடுகிறதுஆனால் இதுபோன்ற நுட்பமான சட்ட குறிப்புகளுக்கு நடைமுறையில் அர்த்தமே இல்லைஅந்த கிராமவாசிகள் தங்களின் கிராமங்களுக்குள் காலடி எடுத்து வைக்கவும் கூட முற்றிலும் அஞ்சுகின்றனர்.வியாபார பரிவர்த்தனைகளுக்காக அவர்கள் ஒருசில நாட்களுக்கு மட்டுமே வீடுகளுக்குத் திரும்பினால் கூடமாநில அரசாங்கம் எந்தவொரு தாக்குதலில் இருந்தும் அவர்களைக் காப்பாற்றாது என்பது அவர்களுக்கு நன்றாக தெரியும்,அதனால் இப்போதைக்கு அவ்வாறு செய்வது ஆபத்தாகும் என்பதால் அரசாங்கம் வழங்கும் சிறிய இழப்பீடு அவர்களைக் கவர்ந்திழுக்கிறது.

இதற்கிடையில்சமாஜ்வாதி கட்சியின் மாநில அரசாங்கம் இடம்பெயர்த்தப்பட்ட கிராமவாசிகளை மனித குப்பைகளையும் விட ஒருபடி மேலாக கருதுகின்ற நிலையில், அது அகதிகள் முகாம்களை மூடவும் முயன்று வருகிறதுஇதுவே SP அரசாங்கத்தின் முழு நோக்கமாக உள்ளதென்பதை நிவாரண முகாம்கள் ஒன்றில் ஒரு சுய ஆர்வலரால் கண்டறியப்பட்டதுஅவர் பத்திரிகைக்கு கூறுகையில், “மக்கள் தாசில் அலுவலகத்திற்கு (உள்ளூர் அரசு அலுவலகம்அழைக்கப்பட்டு இந்த காகிதங்களில் கையெழுத்திட செய்யப்படுகின்றனர்அவர்களில் பல பேர் சுமார் ரூ. 10 இலட்சத்திற்கும் மேல் (1 மில்லியன் ரூபாய்ஏறத்தாழ 16,000 அமெரிக்க டாலர்நிரந்தரமாக இழந்துள்ளனர்ஆனால் அவர்களுக்கு மிகவும் குறைவான தொகையில் கணக்குவழக்கு முடிக்கப்படுகிறதுஅவர்கள் நிவாரண முகாம்களில் தங்கி இருப்பது நிர்வாகத்திற்கு தர்ம சங்கடமாக இருப்பதால் அது அவர்களை அங்கிருந்து வெளியேற நிர்பந்தித்து வருகிறது.”

முஸ்லீம் அல்லாத குடும்பங்களின் ஒரு சிறிய பிரிவும் அவர்களின் வீடுகளை இழந்திருந்தனர் என்ற உண்மைக்கு இடையில்சமாஜ்வாதி அரசாங்கம் அதன் அசல் அறிக்கையில்அந்த இழப்பீடு "பாதிக்கப்பட்ட முஸ்லீம்களுக்குமட்டுமே என்று குறிப்பிட்டு இருந்தது.

சில ஜாட் குடும்பத்தினரின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட ஒரு சட்ட புகாரிற்கு விடையிறுப்பாகஇந்தியாவின் உச்ச நீதிமன்றம் நவம்பர் 22இல்,மதரீதியில் சம்பந்தப்படுத்தாமல்அரசாங்கத்தின் விதிமுறைகளுக்கு உடன்பட்டஇடம் பெயர்த்தப்பட்ட எந்தவொரு குடும்பத்திற்கும் இழப்பீட்டை வழங்க வேண்டுமென்பதை வரையறுத்து அறிக்கையை மீண்டும் வெளியிடுமாறு SP அரசாங்கத்திற்கு உத்தரவிட்டது.

இதற்கு விடையிறுப்பாகசமாஜ்வாதி கட்சி அரசாங்கத்தின் வழக்கறிஞர் முஸ்லீம்களின் வெளியேற்றத்தைஅதாவது "மத சுத்திகரிப்பை"—தானாக முன்வந்து இடம்பெயரும் ஒரு திட்டமாகவும் அதற்கு அரசாங்கத்தின் ஒப்புதலும் ஆதரவும் இருப்பதாகவும் காண்பித்தார்அரசு வழக்கறிஞர் கூறுகையில், “நிவாரண முகாம்களைப் பார்வையிட்ட குழுமுஸ்லீம்கள் மட்டுமே வேறு இடத்திற்கு செல்ல விரும்பினார்கள் என்று கருதியது.தற்போது அதுயாரெல்லாம் இடம்பெயர விரும்புகிறார்களோ,அனைவருக்கும் விரிவாக்கப்படும்,” என்றார். [வலியுறுத்தல் சேர்க்கப்பட்டது]
வெளிப்பார்வைக்கு இந்தியாவின் மதசார்பற்ற அரசியலமைப்பின் பாதுகாவலனாக விளங்கும்நீதிமன்றமானதுவகுப்புவாத வன்முறையில் பாதிக்கப்பட்டவர்கள் அவர்களின் சொந்த கிராமங்களில் இருந்து நிரந்தரமாக வெளியேற வேண்டுமென்ற நிபந்தனையின் கீழ்அரசாங்க-நிர்பந்த வெளியேற்றத்திற்கு அது இழப்பீடு வழங்குகிறது என்ற உண்மையை அப்பட்டமாக புறக்கணிக்கிறதுஅது வெறுமனேஇந்த குற்றத்தை தெளிவாக முஸ்லீம்களோடு மட்டுப்படுத்தி விடாமல் ஒரு "மதசார்பற்றவேஷத்தை வழங்குவதை உறுதிப்படுத்த விரும்பியது.

நன்றி: சகோதரர்.அபூ சய்யஃப்

0 comments:

உங்கள் கருத்துக்கள்...

மோடி மோசடி: தேர்தல் பிரச்சாரம்: சமூக வலைதளங்களில் அரங்கேறும் தில்லு முல்லு!

Wednesday, December 18, 2013 Anisha Yunus 2 Comments

கோப்ராபோஸ்ட் (cobrapost) என்கிற இணையதளம் நடத்திய புலனாய்வில், பல ஐடி நிறுவனங்கள், ஃபேஸ்புக், யூடியூப் மற்றும் டிவிட்டர் ஆகிய சமூக வலைதளங்களை, அரசியல்வாதிகளின் செல்வாக்கை போலியாக உயர்த்தவும்,

அவர்களுக்கு வேண்டாதவர்களை எதிர்க்கவும் பயன்படுத்துகின்றன என செய்தி வெளியிட்டுள்ளது. இதில் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடிக்கும், பாஜக கட்சிக்கும் பல நிறுவனங்கள் வேலை செய்வதாகவும் தெரியவந்துள்ளது.
 
பிரச்சார யுக்திகள்...
புளூ வைரஸ் (blue virus) என்று பெயரிடப்பட்ட இந்த ஸ்டிங் ஆப்ரேஷனில், இந்தியா முழுவதும் உள்ள, ஏறக்குறைய 24 ஐடி நிறுவனங்களைப் பற்றித் தெரியவந்துள்ளது. பெரிய நிறுவனங்களுக்கான சமூக வலைதள விளம்பர நடவடிக்கைகளை கவனித்துக் கொள்வதாக காட்டிக் கொள்ளும் இத்தகைய நிறுவனங்கள், குறிப்பிட்ட அரசியல்வாதிகளுக்கு ஆயிரக்கணக்கான
அபிமானிகள் இருப்பதைப் போலவும், வேறொருவரது கணக்கை ஹேக் செய்து, அவர் பேசுவது போல தரக்குறைவான பதிவுகளை இடுவது போலவும் பல மோசடிகளை செய்து வருவது தெரியவந்துள்ளது. இவையனைத்தும், அந்தந்த கட்சி சம்பந்தப்பட்டவர்கள் அல்லது பெரிய நிறுவனங்களுக்காக செய்வதாகவும், பணம்தான் இதன் குறிக்கோள் என்றும் கோப்ரா போஸ்ட் இணையதளம் தெரிவிக்கிறது.
செய்தியாளர்களிடம் பேசிய கோப்ரா போஸ்டின் ஆசிரியர் அனிருத்தா பஹால், "இணையதளத்தின் இணை ஆசிரியர் சையத் மஸ்ரூர் ஹசன், இருபதுக்கும் மேற்பட்ட ஐடி கம்பெனிகளை அணுகினார். தனது தலைவர் நேதாஜி என்பவர், சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக, சமூக வலைதளத்தில் பிரச்சாரத்தை ஆரம்பிக்க விரும்புவதாகவும், அவருக்கு எதிரானவர்களின் பெயரைக் கெடுக்க, செய்திகள் பரப்ப வேண்டும் என்றும் சையத் தெரிவித்துள்ளார்".
"அவர் அணுகிய அனைத்து கம்பெனிகளுமே, ஃபேஸ்புக்கிலும், டிவிட்டரிலும், போலியாக பல அபிமானிகள் இருப்பதாக காட்டலாம். இதனால் எதிர்கட்சியினரின் நற்பெயர் கெடுப்பதைப் போல செய்திகளும் பரப்பலாம் என்றே கூறின".
 
பாஜக, மோடி...
"இந்த புலனாய்வில கிடைத்த தகவலின் படி, பாஜக மற்றும் அதன் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியே, அதிக அளவில் சமூக வலைதளங்களை பிரச்சாரத்திற்கு பயன்படுத்துவதாகத் தெரிகின்றது. அவருக்காக பல நிறுவனங்கள், இரவு பகல் பாராமல் உழைத்து வருகின்றன".
வெறும் நரேந்திர மோடியின் பெயர் மற்றுமே புலானய்வில் வெளியாகியதைப் பற்றி கேட்ட போது, நடந்த 5-6 புலான்ய்வு ஆபரேஷன்களில், அவரைப் பற்றித் தான் மீண்டும் மீண்டும் தெரிய வந்தது என்று அனிருத்தா கூறினார்.
"பலர், நாங்கள் குறிப்பிட்ட நபர்களைத் தாக்குகிறோமா எனக் கேட்கின்றனர். நாங்கள் அப்படி செய்யவில்லை. அதே நேரத்தில் இது சாதாரண விஷயமும் இல்லை. இப்படிப்பட்ட ஒரு மோசடி நடக்கிறபோது, அதை வெளிச்சத்திற்கு கொண்டு வர வேண்டும் என்று நினைத்தோம். அவ்வளவே. ஆனால், இந்த நிறுவனங்கள், வேறு எந்த கட்சிக்கும் வேலை செய்யவில்லை என்பதை அறுதியிட்டுக் கூற முடியாது".
எதிர்வினை பதிவுகளை அழித்தல், அரசியல்வாதிகள் இடும் பதிவுகளை பல பேர் விரும்புவது போல் மாற்றுதல், ஒரு பெரிய ரசிகர் கூட்டத்தை உருவாக்குதல் எனப் பல சேவைகளையும் வழங்குவதாக, அந்த ஐடி கம்பெனிகள் தெரிவித்துள்ளன.
 
தடம் தெரியாமல்...
எங்கிருந்து பதிவேற்றப்பட்டது என்பதை மறைக்கும் வகையில், எதிராளியைப் பற்றிய தவறான பதிவுகள் இடுகையில், அவை அமெரிக்கா போன்ற வெளிநாடுகளிலிருந்து வந்ததாக பதிவெற்றப்படும். அதே போல, பயன்படுத்தப்படும் கணிணியின் பாகங்களும், பல கடைகளிலிருந்து வாங்கப்பட்டு, ஒன்று சேர்க்கப்பட்டு, அந்த வேலை முடிந்த பின்னர் அழிக்கப்படும். இருக்கும் இடம் தெரியாமல் இருக்குமாறு ஒவ்வொரு மணி நேரத்திற்கும் பிராக்ஸி கோடுகள் மாற்றப்படும். இவை, தடம் தெரியாமல் இருக்க, அந்த கம்பெனிகள் பின்பற்றும் முறைகள்.
பஹால் மேலும் பேசுகையில், "சையத் அணுகும் போது, இந்த கம்பெனிகள், முஸ்லிம்களின் பெயரில் போலி அக்கவுன்டுகளை ஆரம்பித்து, அவர்கள் நேதாஜியைப் பற்றி நல்லவிதமாக பேசுவதைப் போலவும், அவர்கள் கட்சியின் புகழ்பாடும் வீடியோக்களை, யூடியூபில் பல பேர் பார்த்தது போன்று உருவாக்க முடியும் என்றும் கூறியுள்ளனர்" என்றார். 

தகவல் தொழில்நுட்ப சட்டம், மக்கள் பிரதிநிதித்துவ சட்டம், வருமான வரி சட்டம் உட்பட பல சட்டங்களை, இத்தகைய மோசடிகள் மீறுகின்றன. இவை அனைத்தும் தண்டைனக்குரியவை என்றும் பஹால் தெரிவித்தார். 

நன்றி: தி ஹிந்து

2 comments:

உங்கள் கருத்துக்கள்...

ஊடகம், கடைகளை கொள்ளையடிக்கவோ, உயிர்களை பலியிடவோ செய்வதில்லை மிஸ்டர் மோடி!!!

Monday, December 16, 2013 Anisha Yunus 0 Comments

செய்தியாளன் இன்னொரு முறை சுடப்பட்டிருக்கிறான்....!

கார்கிலில்...
கந்தஹாரில்...
...இப்போது குஜராத்தில்!

அரசின் இயலாமைக்கு ஊடகங்களையே பலியாக்குகிறார்கள். தற்போதைய காலகட்டத்தில் 24 மணி நேர செய்தி சேனல்கள், மிக எளிதான இலக்குகள் ஆகிவிட்டன, அவர்களுக்கு.

கார்கிலின் போது...
இராணுவ கட்டமைப்பில் உள்ள பலவீனங்களால் எழுந்த தோல்வியே மிக முக்கிய குற்றவாளி என அதிகாரமட்டத்தில் அனைவருக்கும் தெரிந்திருந்தபோதும், ஊடகங்களையே, தேசிய பாதுகாப்பிற்கு பங்கம் விளைவிப்பவர்கள் எனக் குற்றஞ் சாட்டினார்கள்.

கந்தஹார் விவகாரத்தில்...?
ஒரு செய்தி ஊடகமாவது, இந்திய வெளியுறவுத்துறை மந்திரி, ‘மசூத் அஸார்’உடன் பயணம் செய்து ஆஃப்கானிஸ்தான் வரைப் போக வேண்டும் என யோசனை தந்ததா? முன்மொழிந்ததா? அல்லது மறைமுகமாக திணித்ததா? எதுவுமே இல்லை. எனினும், அரசாங்கத்தின் மீது வலுக்கட்டாயமாக அழுத்தத்தை தந்து கடத்தல்காரர்களின் கோரிக்கைக்கு பணிய வைத்தவர்கள் ஊடகங்களே என வேகமாய் சுட்டு விரல் நீட்டினார்கள்.

இப்பொழுது குஜராத்தில் இன வெறியை பற்ற வைத்ததும் ஊடகங்களே என்கிறார்கள்....? ஆனால் உண்மை என்ன...? காந்திநகரிலிருந்து ஆளும் அரசின் ஆதரவு பெற்ற கும்பல்களில் ஒரு பிரிவே, சமூகத்தின் நடுவே பிரிவினையையும், குறிப்பிட்ட இனத்தவர் மீது வெறுப்பையும் பற்ற வைக்க உந்துசக்தியாக இருந்தது என்றால் அதில் மிகை இல்லை.
கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை ஊடகங்கள் நடத்தினவா?
வன்முறை கைக்கடங்காமல் வெடிக்கிறது என்று தெரிந்த பின்னும், ரயில் எரிப்பு சம்பவத்திற்கு அடுத்த நாளே 24 மணி நேர ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தது ஊடகங்களா?
குறிப்பிட்ட இனத்தவரின் கடைகளையும் அமைப்புக்களையும் கொள்ளையிடுமாறு மக்களிடம் விண்ணப்பித்தது ஊடகங்களா??
சர்வ நிச்சயமாக, அஹ்மதாபாதிலும், வடோதராவிலும், இன்னும் மாநிலத்தின் பல இடங்களிலும் குறிப்பிட்ட இனத்தவருக்கு எதிராக, இனச்சுத்திகரிப்பை செய்யச் சொல்லி ஊக்குவித்ததும்..... 
...ஊடகங்கள் அல்ல!

படுகொலைகளை எல்லாம் செய்தி சேனல்கள் திரும்ப திரும்பக் காட்டிக்கொண்டே இருந்ததுதான் வன்முறை அதிகம் வெடிக்கக் காரணமாயிற்று என்கிறார்கள். ஆனால், யாரேனும் இதை நம்புகிறீர்களா??? ஊருக்குள் ஒரு கும்பல் புகுந்து கடைகளையும் வீடுகளையும் தீக்கிரையாக்குகிறார்கள் என்றதும் யாரேனும் எழுந்து, உடனே வெளியே சென்று, அது போன்றே ஒரு தீயை பற்றவைப்பார்களா?? உண்மை என்னவென்றால், அன்று நடந்த சம்பவங்களின் தீவிரத்தையும், திசைகளையும் கட்டுக்குள் வைத்திருந்தது, அந்தக் கும்பலே தவிர, களத்திலிருந்து நேரடி ஒளி/ஒலி பரப்பு செய்துகொண்டிருந்த செய்தி ஊடகங்கள் அல்ல.

செப்டம்பர் 11க்கு பிறகிலிருந்து, இந்திய அமைச்சர்கள் எல்லோரும், “செய்தித் தொடர்பு ஒழுக்கங்கள்” என்றால் அது அமெரிக்க ஊடகங்களை பாரமானியாகக் கொண்டு கற்க வேண்டும் என எண்ணுகின்றனர். அதனால்தான் குஜராத் பற்றிய இந்திய ஊடகங்களின் ஆவணம் எல்லாவற்றையுமே குற்றம் சாட்ட முடிகிறது அவர்களால். அவ்வாறெனில் ரோட்னி கிங்கை (Rodney King) கண்டித்ததற்காக வன்முறை வெடித்ததே லாஸ் ஏஞ்சல்ஸில்... பத்தாண்டுகளுக்கு முன் அமெரிக்காவையே உலுக்கிய அந்த இனக்கலவரத்தை ஊடகங்கள் எப்படி செய்தியாக்கின என்பதையும் சேர்த்தே அவர்கள் பார்க்கட்டும்.

செய்தித் தொடர்பு ஊடகங்களை அன்று கட்டுப்பாட்டில் கொண்டு வந்திருந்தால், வெறி பிடித்தலைந்த கும்பலை இல்லாமல் ஆக்கியிருக்கலாம் என்கின்றது அரசு. அன்றைய தினத்தில், ஊடகங்களைத் தவிர்த்து மற்ற எல்லாவற்றின் மீதும் கட்டுப்பாடு இருந்ததாகவே காட்டிக்கொள்கிறது. ஆனால் உண்மை....?? அரசின் அறிக்கைகளை விடவும் பன்மடங்கு தூரத்தில் அது இருக்கிறது. அதுவும் வன்முறை வெடிக்க ஆரம்பித்த முதல் 48 மணி நேரத்தில்....? உதாரணமாக போலீசாரையே எடுத்துக் கொள்வோம். அன்றைய தினத்தில் போலீசார் கைகளைக் கட்டிக்கொண்டு வேடிக்கை பார்த்தனர் என்று சொன்னால், உடனே காவல்துறையின் ஒழுக்கத்திற்குக் கேடு விளைவிக்கப் பார்க்கிறோம் என்று குமுறுவார்கள். ஆனால் நிஜத்தில், ஒவ்வொரு தெருவிலும், அராஜகம் செய்யும் கும்பல்களுக்கு, அவர்களின்  செயல்களுக்கு பாதகம் ஏற்படாதவாறு போலீசார் பாதுகாத்தார்கள் என்பதே உண்மை!

பன்மடங்கு பெருகிய அளவில் ஒரு வன்முறை வெடிக்கும்போதும், ஊடகங்கள் அரசின் பைனாகுலர்களை வாங்கி, அது சொல்லும் எண்களிலேயே நிஜத்தைப் பதிவு செய்யவும், வீரியமான, கடினமான உண்மையை மறைக்கவும் செய்யவேண்டும் என எதிர்பார்க்கிறார்களா?? மாநிலத்தில் பல இடங்களிலும் வன்முறை ஒரு தொடராக வெடித்துக்கொண்டே இருக்கும்போது, மாநில முதலமைச்சர் தொலைக்காட்சியில் வந்து, “நிலைமை கட்டுக்குள் இருக்கிறது” என்று சொன்னால், உடனே பொய்யை வெளிக்கொணராமல் இருந்து விட வேண்டுமா?? அரசு, இராணுவம் வந்து விட்டது என்று செய்தி ஒளிபரப்ப சொல்லும்.... ஆனால் உண்மையில் இராணுவம், வெறி பிடித்த கும்பல்கள் பயணம் செய்யும் லாரிக்களுக்குப் பாதுகாப்பாய் நின்று கொண்டிருக்கும்.... இதில் எந்த உண்மையை நாங்கள் மக்களிடம் எடுத்துச் சொல்வது??

‘ஹிந்துக்கள்’, ‘முஸ்லிம்கள்’ என்ற சொற்களை தொலைக்காட்சி நிருபர்கள் அடிக்கடி உபயோகித்ததனால்தான் சூழ்நிலை கெட்டுக்கொண்டே போனது என குற்றப்பத்திரிக்கை வாசிக்கிறார்கள். உண்மையில், சமூகங்களுக்கு / மதங்களுக்கு இடையே வன்முறைச் சம்பவங்கள் வெடிக்கும்போது இரு தரப்பினரின் பெயரையும் வெளியிடக்கூடாது என்பது காலம் காலமாக கடைப்பிடிக்கப்படும் ஊடகவிதிதான். எனினும், ஒரு ‘போஹ்ரா முஸ்லிம்’இன் கடை சூறையாடப்படும்போது, ‘சிறுபான்மை சமூகத்தினரின் சிறுபான்மைப் பிரிவினரின் ஓர் உறுப்பினரின் கடை’ என்றா செய்தி வாசிக்க முடியும்??

இதை விட துக்ககரமான செய்தி என்னவென்றால், முழுக்க முழுக்க குஜராத் மாநில அரசுக்கு எதிராகவும், பொதுவாகவே ‘ஹிந்துக்களுக்கு’ எதிராகவுமே ஊடகங்கள் இருக்கின்றார்கள் என்கின்றார்கள்.  செய்தி ஊடகங்கள், அதிலும் குறிப்பாக ஆங்கில வழி செய்தி ஊடகங்களுக்கு (அச்சு + தொலைக்காட்சி) எதிராக சங் பரிவாரங்கள் காலம் காலமாக வைக்கும் குற்றச்சாட்டு அதுவே. ஊடகங்களில் ஒரு பிரிவினரை இப்படி அழுத்தம் கொடுத்து நெருக்குவதாலும், மதச்சார்பற்ற ‘தலிபான்கள்’ எனப் பெயரிடுவதாலும் ‘ஹிந்துத்துவ தேசபக்தியாளர்களுக்கும்’, ‘தேச - விரோத - போலி - மதச்சார்பின்மையாளர்களுக்கும்’ இடையில் ஒரு கோட்டை எழுப்பிவிடலாம் என்றே சங் பரிவாரம் தனது குறிக்கோளாகக் கொண்டுள்ளது. இதுதான் அதன் பிரச்சாரத்தின் உயிர் துடிப்பாகவும் உள்ளது.

மாறாக சங் பரிவாரத்தின் இந்த அடிமுட்டாள்தனமான பிரச்சாரத்தால் ஊடகங்கள் தற்காப்பு நிலையைக் கையிலெடுத்து, பாரபட்சம் காட்டாமல் இருப்பதின் தேவையுணர்ந்து, எத்தகைய சூழ்நிலையிலும் நடுநிலை செய்திகளையே பரப்பவேண்டும் எனத் தங்கள் மீது கடமையாக்கிக் கொண்டுள்ளன. கோத்ராவின் ரயில் எரிப்பு சம்பவத்தின் பின்னே சில உள்ளூர் முஸ்லிம் தலைவர்கள் இருந்ததை** யாரும் மறுக்க  இயலாது எனினும் முஸ்லிம்களைச் சூறையாடிய பல இடங்களிலும், விஸ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங்தள் போன்ற அமைப்புக்களின் தலைவர்களே முன்நின்று கும்பல்களை வழிநடத்தினார்கள் என்பது மறுக்க இயலா உண்மை. அந்த அராஜகத்தை, நியூட்டனின் விதியின் படி, விளைவின் எதிர்விளைவு என்று கூறி முதலமைச்சர் மோடி சமாளிக்க முயன்றிருக்கலாம் ஆனால் ஊடகங்களின் கண்களுக்கு, தன்னுடைய இயலாமையை, கோழைத்தனத்தை மறைக்க அரசு அளித்த வெட்கக்கேடான பதிலே அது என்பது தெள்ளெனத் தெரியும். பாரபட்சமாக நடந்து கொள்கிறார்கள் என்னும் குற்றச்சாட்டையும் ஊடகங்களின் வாசற்படியில் வீசுகிறார்கள்.... அங்கே வீசாதீர்கள், மாறாக வன்முறையின் போது வி.இ.பரிஷத் மற்றும் பஜ்ரங்தள்ளின் பின்னே அமர்ந்து பயணம் செய்துவிட்டு, தற்போது அவசர அவசரமாக கீழே இறங்க முயற்சிக்கும் அரசின் வாயிற்படியில் வீசுங்கள்..!

இதனாலெல்லாம் ஊடகங்கள் தம்மைத்தாமே சுயபரிசோதனை செய்யக்கூடாது என சொல்லவில்லை. போர், வன்முறை, தீவிரவாதம்---இது போன்றவைதான் 24 மணி நேர செய்தி ஊடகங்களுக்கு உணவாகும். காணபவர்களை விடாமல் இழுத்து ஓரிடத்தில் வைக்க வேண்டும் என்றால் இது போன்ற செய்திகளை சுண்டி இழுக்கும் பலம் வாய்ந்த நிழற்படங்களை / காணொளிகளுடன்தான் சொல்ல இயலும். இந்த மாதிரியான நேரங்களில் செய்திகளைச் சொல்லும் ஓர் ஊடகம் என்னும் தகுதியில் இருந்து இறங்கி, கவர்ச்சியை நம்பி, பரப்பப்படும் செய்தியின் சாராம்சத்தில் சமரசம் செய்யும் நிலையும் வரும். இது மிக கவனிக்கப்படவேண்டிய ஆபத்தாகும். செய்தி ஊடகங்கள், வாராந்தரிகளைப் போல் நடந்து கொள்வது என்பது லேசான விஷயமல்ல.... இப்படியான நேரங்களில் சுயமாகவே தம்மை தணிக்கைக்கு உட்படுத்துவது மிக அவசியமாகிறது.

ஆயினும், எப்படி செய்தி ஊடகங்கள் பரிமாணமடைந்து வருகின்றனவோ, அதே போல், ஊடகங்களின் இந்த புதிய தலைமுறைக்கு ஏற்ப பதில் சொல்வதும் அரசின் மீது தார்மீகக் கடமையாகிறது. 24 மணி நேர செய்தி ஊடகங்களை இந்த அரசுதான், இந்திய வரலாற்றில் முதன்முறையாக எதிர்கொள்கிறது. குஜராத்தில், அரசு தரப்பு செய்திகளில் கூட ஆதாரப்பூர்வ / சரியான தகவல்களைத் தருவது என்பது இல்லாமல் போய்விட்டதை கண்கூடாகப் பார்க்க முடிகிறது.

அமெரிக்காவில், ஊடகங்களைப் பயன்படுத்தியே ஒரு சம்பவத்தின் போக்கை அறிந்து கொள்ளவும், அதைக் கட்டுக்குள் கொண்டு வரவும் அரசு தன் வலிமையாக்கிக் கொண்டுள்ளது. ஆனால் இங்கேயோ, கிடைக்கும் சொற்ப தகவல்களுக்கே, ரிஷி மூலம், நதிமூலம் பார்ப்பதும், அதிகார வர்க்கத்தின் மூலம் நிருபர்களின் சான்றுகளை / ஆவண / அத்தாட்சிகளை கேள்விக்குள்ளாக்குவதுமே அரசின் மனப்பான்மையாக உள்ளது. வேதனையான விஷயம் என்னவெனில், இந்திய அரசியல்வாதிகளிலேயே நியூ யார்க் வரை சென்று ஊடக மேலாண்மை பற்றிய படிப்பைப் படித்ததும், அதைப் பற்றிய அதிக அறிவும் படைத்தவர் என்றும் கருதப்படுகிறவரே நரேந்திர மோடிதான். ஆனால், நினைத்துப் பார்த்தால், அவருக்குத்தான் மீண்டும் ஒரு முறை அந்தப் படிப்பை படிப்பது நல்லதெனத் தோன்றுகிறது..... தொலைக்காட்சிகளைத் தடை செய்யும் ஆணையை பிறப்பிப்பதற்கு முன்!!

--------------------
கட்டுரையாளர், ராஜ் தீப் சர்தேஸாய் 1994இலிருந்து செய்தி ஊடகங்களில் பணி புரிய ஆரம்பித்து, 2008இல் எல்லாம் தனக்கென தனி செய்தி ஊடகத்தை ஆரம்பிக்கும் அளவுக்கு வேகத்திலும், விவேகத்திலும், தொழில்நுட்பத்திலும் பரிணாமம் பெற்ற ஊடகவியலாளர். தனக்கென தனி செய்தி-ஊடகம் ஆரம்பிக்கும் வரை இவரின் செய்தியில் நடுநிலைத்தன்மையும் உண்மையும் 100% இருந்தன என்றால் அது மிகையல்ல. இப்போதில்லையா என்றால், அவரின் தற்போதைய எழுத்துக்களே அதற்கு பதில் சொல்லும். :)

இந்தக் கட்டுரையை தற்போது பதிவிடக் காரணம், ஒரு ஊடக- நடுநிலையாளர் குஜராத் அரசைப் பற்றியும், திரு.மோடியைப் பற்றியும் என்ன கருத்தினைக் கொண்டிருந்தார் என்பதை நினைவூட்டுவதற்கே. இன்றைய ஜொலிஜொலிப்பில், நேற்றைய கசடுகளை மறப்பது பகுத்தறிவல்லவே... :)

மோடியின் / குஜராத் மாநில வளர்ச்சியின் சுயத்தை வெளிப்படுத்தும் நடுநிலையாளர்களின், குறிப்பாக இஸ்லாமியரல்லாதவர்களின் கட்டுரைகள் தொடரும். இது தமிழ் சமூக மக்களின் விழிப்புணர்வுக்காக மட்டுமே. கருத்துக்களை வரவேற்கிறேன். 

*ஆங்கில மூலம்:  Did the media ransack shops, take lives, Mr Modi? | http://bit.ly/19r5qKf

(**உம்ம் ஒமர்: இது மிக மிக தவறான கூற்று. இதுவும் ஆர்.எஸ்.எஸ், சங் பரிவாரங்களின் கயமைத்தனமே என்பதற்கு மறுக்க இயலாத அனைத்து ஆதாரங்களும் இணையம் / அச்சு ஊடகங்களில் பரவியுள்ளது.)

0 comments:

உங்கள் கருத்துக்கள்...

அந்த ஜன்னல்...

Friday, December 13, 2013 Anisha Yunus 4 Comments

(*சிறுகதை முயற்சி)


எப்பொழுதும் போல முன்னதாகவே கிளம்பி விட்டேன் அந்த அலுவலகத்திற்கு. எல்லா “தொழில்நுட்ப பூங்கா” கட்டிடச் சிறைகளைப் போலவே அந்தப் பூங்காவும் இருந்தது. வழக்கம் போல், என் இடத்திலிருந்து அந்தப் பூங்காவை தேடுவதை விடவும், பூங்காவினுள் அந்த அலுவலகத்தைத் தேடுவது மிகக் கடினமாக இருந்தது.

மணி பத்தே முக்கால் ஆகியிருந்தது. நான் பத்தரை மணிக்கே வந்திருக்க வேண்டும். என் தைராய்டையும், அதன் பெயரைச் சொல்லியே காலம் தாழ்த்தும் சோம்பேறித் தனத்தையும் நொந்து கொண்டே வாகனத்தை பார்க் செய்துவிட்டு, கீழ் தளத்தில் சென்று விசாரித்தேன். ‘உள் நுழை’ அட்டையைப் பரிசோதித்த பின் நான்காவது மாடி, இடது புறம் உள்ள மின்தூக்கியில் (elevator) ஏறினேன். ஒன்று. இரண்டு.. மூன்று... நான்கு.... தளம் வந்து விட்டது. கதவுகள் திறந்ததும், மீண்டும் ஒரு முறை தேவையான ஆவணங்கள் எல்லாம் சரியாய் இருக்கிறதா எனப் பார்த்துக் கொண்டேன். எதனையோ இழந்த வலி ஒன்று மின்சாரம் போல் தாக்கிச் சென்றது. நொடியில் அதிலிருந்து மீண்டு மீண்டும் தோள்ப்பையை பூட்டிவிட்டு, வலது புறம் நோக்கினேன். வாயிற்காப்பாளர்கள் குளிர்ந்த வரவேற்பறையில் விறைத்த சீருடையில் கறிக்குதவாத எதோ ஓர் விஷயத்தை மென்று கொண்டிருந்தார்கள். இங்கேதான் செல்ல வேண்டும். ரோட்டைக் கடக்கும் முன்னர் இரு பக்கமும் பார்ப்பது போல் என் கண்கள் தானாக என் இடப்புறத்தை நோக்கியும் சென்றன. அது...

வியர்த்தது எனக்கு.
கால்களின் அடியில் பூமி பறிக்கப்பட்டது போலிருந்தது.
கண்களின் உள் சுரப்பிகள் வேலைநிறுத்தம் செய்து விட்டதாக நினைத்திருந்தேனே... இது என்ன? என் கண்கள் நீரினால் நிரம்புகிறதே...
மின்னல் ஒன்று என்னை வெட்டி, இன்னும் என்னைக் கடக்காமலே உயிர் அனைத்தையும் உறைய வைக்கின்றதே....
நினைவுகள் பின்னோக்கிச் சென்றன...

---------- ---------- ---------- ---------- ----------

“...எல்லாம் சரியாய் இருக்கிறதா?”
“ஆமாம் அய்யா....ஆமாம்....எல்லாம் சரியாக இருக்கிறது.
அங்கே கூட யாரும் இத்தனை காகிதங்களையும் கேட்க மாட்டார்கள், உங்கள் தொல்லை தாங்க இயலவில்லை...”

“உன் மறதியைப் பற்றி எனக்குத்தானே தெரியும்...”
”சரி விடுங்கள்... குழந்தையைப் பார்த்துக் கொள்ளுங்கள். பால் ஃப்ரிட்ஜில் இருக்கிறது. பாட்டில்களைக் கழுவி வைத்துள்ளேன். கொஞ்சமாக சூடாக்கி தந்தால் போதும். சர்க்கரை சேர்த்தாதீர்கள். மதியம் வந்து சாப்பாடு வைத்தால் போதும்தானே? அதற்குள் பசித்தால் ஃபிரிட்ஜிலிருக்கும் எதையேனும் சாப்பிடுங்கள். சரியா...”

“சரி...சரி... என்னைப் பற்றியே பேசிக்கொண்டு முதல் நாளே தாமதமாக செல்லாதே... வழி நினைவிருக்கிறது அல்லவா.... என் உடல்நிலை சரியாக இருந்திருந்தால் கொண்டு வந்து விட்டிருப்பேன்...”
“இல்லை இல்லை.... இப்பொழுதுதான் கொஞ்சம் தேறியுள்ளீர்கள். அதுவும் மழை வேறு பெய்து கொண்டே இருக்கிறது, ஓய்வெடுங்கள். இரண்டு நிமிட தூரம்தானே அலுவலகம் வந்து விடுவேன் உடனே... சரியா...”

“சரி... பார்த்து மெதுவாக டிரைவ் செய்.”
“ம்ம்...ஓக்கே...பை..”

அது ஒரு மழைக்காலம். சிகாகோவின் மழைக்காலம் அவ்வளவு ரம்மியமானதல்ல எனறாலும், நாங்கள் வாழும் நேபர்வில் எனும் மிகச் சிறிய கிராமத்தில் உற்சாகம் தரும் காலம். ஒவ்வொரு நகரிலும் ஏற்படுத்தப்பட்டுள்ள செயற்கைத் தடாகங்கள், இயற்கையாக ரோட்டின் அருகேயே உள்ள கால்வாய்கள், சில மணி நேரப் பயணத்திலேயே மணிக்கணக்கில் பயணம் செய்தாலும் தீராத நெற்பயிர்-வயல்கள் என மனம் மயக்கும் அழகிய கிராமம். சிகாகோ நோக்கிச் செல்பவர்களைக் கூட, டவுனுக்கு போறீங்களா என்றுதான் கேட்பார்கள். அன்பும், பண்பும் மிக்க அழகிய குக்கிராமம். அங்கே மூன்றாண்டுகள் வசித்து, குழந்தை அப்துலும் பிறந்த பின் வேலைக்குச் செல்லும் தேவை ஏற்பட்டது. அவரின் அலுவலகத்திலேயே வேலை கிட்டியது இன்னும் வசதியாகிப் போனது. இன்றுதான் சேர வேண்டும். அதற்குள் இவருக்கு சின்னம்மை தாக்கிவிட்டது. ஒரு வாரமாக அவர் படும் பாடு மிகக் கடினமாக இருந்தது. வீட்டில் வெளியில் என என் வேலையும் கூடினாலும், அவரின் சட்டென மெலிந்த உடலும் சுமையைக் கூட்டியது. எனினும், முதல் நாளே விடுமுறை கேட்கவேண்டாம் என்றதால் வந்தே ஆக வேண்டிய கட்டாயம்.

அதோ, அந்த வெஸ்ட்ப்ரூக் வளைவில் திரும்பியதும் அலுவலகம். அந்த வீதி முழுக்க எங்கள் அலுவலகமே பலப் பிரிவுகளாக நிறைந்துள்ளது. அதில் மூன்றாவது கட்டிடத்தில் இரண்டாவது தளத்தில் என் கேபின். முதல் நாள் என்பதால் மனிதவளத் துறையினரிடம் சில பல வேலைகள் இருந்தன. எல்லாம் முடித்துக் கொண்டு வரவே பத்தரை மணி என்பது பத்தேமுக்கால் ஆகிவிட்டது. முதல் தளத்தில் இருந்த ஒரு அமெரிக்கப் பென், புதிதாக வேலைக்குச் சேர்ந்தவள் என்பதால் ஒவ்வொரு தளத்தையும், அதிலுள்ள ஒவ்வொரு இடத்தையும், எல்லா துறைகளையும் சுற்றிக்காட்டி விட்டு இரண்டாம் தளத்தில் என் சீட் எதுவென்றறிந்து அது வரை கையோடு அழைத்து வந்து விட்டார். அடுத்த பத்து நிமிடங்களில் மேனேஜர் கென் டார்பி, மிக்கேல், ஜான், ஷுபா, ஆஸ்டின் என என்னுடன் வேலை செய்யும் அனைவரையும் அறிமுகம் கொண்டு அளவளாவ ஆரம்பித்தாயிற்று.

மதிய உணவிற்கு வீட்டிற்குச் செல்ல அலுவலகத்திலிருந்து இரண்டே நிமிடங்கள்தான். சென்றதும் எலெக்ட்ரிக் குக்கரில் அரிசியிட்டு, அளவாக ரசம் செய்து, மைக்ரோவேவிலேயே சுட்ட அப்பளத்துடன் சாப்பிட்டு விட்டு, மீண்டும் அலுவலகம்.

மதியம் காஃபி குடிக்கும் போதுதான் கவனித்தேன். என் கேபினை ஒட்டியிருந்த அந்த ஜன்னலை. அழகிய ஜன்னல். அதை விட அழகு, அங்கே அமர்ந்து ஓய்வாக காஃபி குடிப்பதற்காக போடப்பட்டிருந்த பார் நாற்காலிகளும், ஒரு வட்ட மேஜையும். அதை விடவும் அழகு, அந்த ஜன்னலின் வழி தெரியும் காட்சி.

சில நாட்களிலேயே அந்த ஜன்னலுக்கும் எனக்கும் சொல்லப்படாத ஓர் உறவு உண்டாகிப் போனது. மகிழ்வோ, வருத்தமோ, அந்த ஜன்னலின் அருகில் உள்ள சேரில் அமர்ந்து, வெளியே தெரியும் தொலைபேசி டவரையும், வரிசையாக நிறுத்தப்பட்டிருக்கும் வாகனங்களையும், பனியிலும், வெயிலிலும், இலையுதிர்காலத்திலும் அழகை இழக்கவே இழக்காத வரிசையாய் வீற்றிருக்கும் பைன் மரங்களின் வசந்தத்தையும் ரசித்துக்கொண்டே இருப்பேன். ரம்மியம். ரம்மியம். விவரிக்க வார்த்தைகளே இல்லை.

அங்கிருந்து பார்த்தால் என் ரேவ்4 தெரியும். கடும் பனி இருந்தால் மட்டுமே அருகில் இருக்கும் பார்க்கிங் கட்டிடத்தினுள் நிறுத்துவேன். இல்லையெனில், திறந்த வெளியில் என் ஜன்னலுக்கெதிரிலேயே தெரியும்படிதான் நிறுத்தியிருப்பேன். “என்றைக்காவது ஒழுங்காக பார்க் செய்கிறாயா, என்றைக்கும் கோணலாகத்தான் இருக்கிறது” என்பார் அவர். “என்னுடையது எனத் தனியாகத் தெரிய வேண்டாமா...” எனத் தோல்வியை மறைக்க ஒரு நகைச்சுவையை துணைக்குத் தேடுவேன். வாழ்க்கை மிக அழகியதாக இருந்தது. நாட்கள் ஓடியதே தெரியவில்லை. வருடங்கள் ஓடியது. என் வாழ்விலும், வசந்தம், வெயில், பனி, என எல்லாம் முடித்து இலையுதிர ஆரம்பித்திருந்தது.

அப்துலுக்குப் பிறகு ஹீராவும் வந்து விளையாட ஆரம்பித்திருந்தாள். ஒட்டுவதற்குப் பதில் கண்ணாடியில் விரிசல் கூடிக்கொண்டே போனது. ஒவ்வொரு மதியமும், அந்த ஜன்னலிடம் என் ஆசை, நிராசை, சுகம், துக்கம் என எல்லாம் சொல்வதே வேலையானது. கூடிய விரிசல்கள் எல்லாம் சேர்ந்து வாழ்க்கைக்கண்ணாடியை பதம் பார்த்தன ஓர் நாள்.

உயிரைக் கொடுத்து உருவாக்கிய உறவுகள், காகித வழி எழுத்துக்களின் மூலம் பிரிந்து சென்றன. ஹீரா அவருடனும், அப்துல் என்னுடனும் என முடிவாயிற்று. இதோ, அத்துடன் இந்தியா வந்து ஐந்து வருடங்கள் ஆகிவிட்டன. இது, அது என எல்லா வேலையிலும் ஏதேனும் ஒரு காரணம் அவ்வேலையை விட்டுவிட வைத்தது. ஆசிரியரான என் தந்தையின் காரணத்தால், அவரின் பள்ளியிலேயே அப்துலும் படிக்க ஆரம்பித்திருந்தான். பளு என எதுவும் இல்லாதிருந்தது.

பணம் இருந்தது. எதிலும் செலுத்தும் மனம்தான் இல்லாமல் போனது. எனவே மீண்டும் மீண்டும் வேலை தேடுவது வழமையாகிப் போனது.

அப்படியொரு நாளில்தான் இந்த அலுவலகம் வந்து சேர்ந்தேன். என் இடதுபுறத்தில் தெரிந்ததும், அதே போன்றொரு ஜன்னல். என் மனதைரியத்தை எல்லாம் சுக்கு நூறாக்கியது. என் கைகள் பரபரத்தன. கால்கள் அத்திசையில் செல்ல தடை விதித்தன. மீண்டும் வலது புறம் திரும்பியதோ, அலுவலகத்தினுள் சென்று இண்டர்வியூவில் பேசியதோ, இண்டர்வியூ ரிசல்ட் தெரியும் வரை மீண்டும் வரவேற்பறையில் வந்து ஜன்னல் வழியாக நேபர்வில்லைத் தேடியதோ...எல்லாமே இயந்திர கதியில் நடந்தது.

இதோ.... எல்லாம் ஒரு கெட்ட கனவுதான். அது முடிந்து விட்டது. இப்பொழுதே மின்தூக்கியில் கீழே செல். உன் கார் காத்திருக்கிறது. இரண்டு நிமிடங்களில் உன் வீட்டில், உன் படுக்கையில் களைப்புத் தீர உறங்கலாம். இது வரை நடந்த எல்லாக் கனவும் சிதறி விடும்... மாலையில் ஹீராவும், அவரும் வந்து விடுவார்கள்...

...கதறியது மனது.
...கரை புரண்டது கண்கள்.
எனினும் நிஜத்தில் கடிகார முள் நகரக்கூட இல்லை. நிகழ்காலத்தின் கோரப்பிடியில் இறந்த காலம், இன்னொரு முறை இறந்தது. இதயம் மட்டும் சிக்கித் தவித்தது.

---------- ---------- ---------- ---------- ----------

“மேடம்.... கோபால் சார் அழைக்கிறார்”...


“...சார்...உள்ளே வரலாமா??”
“வாருங்கள் நஸீஹா. வாழ்த்துக்கள். கிட்டத்தட்ட 280 விண்ணப்பங்கள் வந்திருந்தன இந்த வேலைக்கு. எனினும் யாவரையும் தோல்வியுறச் செய்து நீங்கள் வெற்றி பெற்று விட்டீர்கள். வாழ்த்துக்கள். வருடம் எட்டு லட்சம் சம்பளத்தில் நாளைக்கே ஜாயின் செய்து விடலாம்.”

“...இல்லை சார். எனக்கு இந்த வேலை வேண்டாம்...”
“எக்ஸ்கியூஸ்மீ.... என் காதுகளில் சரியாக விழவில்லை.... என்ன சொன்னீர்கள்...?”

“...எனக்கு இந்த வேலை வேண்டாம் என்றேன் சார்...”
“...ஏன் சம்பளம் குறைவாக இருக்கிறதா? வேறு ஏதேனும் அலவன்ஸ் சேர்த்த வேண்டுமா?? கையில் வேறு ஏதும் ஆஃபர் இல்லை என்றுதானே சொன்னீர்கள்?? ஒரு வருடத்திற்குள் சீனியாரிட்டியும் கிடைத்து விடும். தங்களைப் போல அறிவார்ந்தவர்கள் ஒரே வருடத்தில் வெற்றிக்கனிகளை பறித்துக்கொண்டே செல்லலாம்....”

“...இல்லை சார். என்னிடம் அறிவில்லை. என் தோல்விகள் எனக்கு மட்டுமே தெரியும்... இந்த வேலையை இழப்பதைத் தவிர வேறு வழியில்லை என்னிடம்... மன்னியுங்கள். வேறு எதுவும் பேசுவதற்கில்லை.... நான் செல்கிறேன்...”
“...”

மீண்டும் வரவேற்பறை.
மீண்டும் ஜன்னல்.
யாருமில்லா மின்தூக்கியினுள் அரவமில்லாமல் ஓர் பெருவெள்ளம்.
இறுமாந்திருந்த இதயம் தோல்வியுற்றது மீண்டும்...
கண்முன்னே கனவுகள் தோன்றி மறைந்தன மீண்டும்...

எதுவும் இனி கிடைப்பதற்கில்லை....
எதுவும் இனி மீண்டு வருவதற்கில்லை...
எதுவும் இனி தொடர்வதற்கில்லை....
முற்றுப்புள்ளியை தொடர்ந்து விட அவளாலும் முடியவில்லை...
காய்ந்து போன காயங்கள் என அவள் நினைத்த நினைவுகள் ஈரமண்ணில் ஒட்டிக்கொண்ட பாதங்களைப் போல் நிலைத்திருந்தன. அழுத்தமாக தம் பதிவுகளை விடாமலே வீற்றிருந்தன.

ஜன்னல்கள் காத்திருக்கின்றன...

4 comments:

உங்கள் கருத்துக்கள்...

இஸ்லாத்தின் பார்வையில்... | சர்வதேச இலஞ்ச எதிர்ப்பு தினம் | டிசம்பர் 9

Sunday, December 08, 2013 Anisha Yunus 4 Comments

ஒரு சமூகத்தின் தலைவன் அந்த சமூக மக்களின் ‘பணியாளன் - சேவகன்’ என்றார்கள், நபிகள் நாயகம் (ஸல்). தலைமை பதவியை ஏற்கின்ற ஒவ்வொரு தலைவனுக்கும் இருக்க வேண்டிய அவசியமான முதன்மைப் பண்பாகும் இது.

அதிலும் குறிப்பாய், மக்கள் பிரதிநிதிகளாக தேர்வாகின்ற ஒவ்வொரு சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மக்கள் நலப் பணியாளர்கள், பாதுகாவலர்கள் என ஏனைய நபர்களுக்கும் கட்டாயம் இருந்தாக வேண்டிய உயரிய தகுதியாக ‘சேவை மனப்பான்மையை’ இஸ்லாம் மிக வலியுறுத்திச் சொல்கிறது.

நேர்மை, பொதுநலம் என்ற உறுதியான அடித்தளத்தின் மீதுதான் இஸ்லாமின் ஜனநாயக அரசியலை பெருமானார் (ஸல்) அவர்கள் இப்பூமிக்கு அர்ப்பணம் செய்தார்கள். இதற்கு இஸ்லாமிய ஆட்சியாளர்களின் ஆளுமைகள் சிறந்ததோர் சான்றாகும்.

இன்றோ??

தன் உரிமையை பெறுவதற்காக ஒரு குடிமகன் பணம் கொடுப்பதும், தன் கடமையைச் செய்ய வேண்டிய அரசாங்க ஊழியன் அதற்காக பணம் பெறுவதும் வழமையான நிகழ்வாகிவிட்டது.

நிகழ்வு 1:

இஸ்லாத்தின் இரண்டாம் ஜனாதிபதி உமர் (ரலி) அவர்களின் மனைவிக்கு, அரசவையில் பணி புரிந்த ஒருவர் இரண்டு தலையணையை அன்பளிப்பாக வழங்குகின்றார். ஜனாதிபதி உமர் (ரலி) அவர்கள் அரசவையில் அரசர் சாய்ந்து அமர்கின்ற மாதிரியான இரு தலையணையை தம் வீட்டினுள் பார்க்கிறார்கள்.

உடனே, தன் மனைவியிடம், இந்த இரண்டும் எங்கிருந்து வந்தது? அல்லது நீ விலைக்கு வாங்கினாயா? உண்மையைச் சொல், மறைக்காதே என ஜனாதிபதியாக தன் மனைவியிடம் சற்று வேகப்படுகிறார்கள்.

இதை இன்ன நபர் நமக்கு அன்பளிப்பாக அனுப்பியுள்ளார் என தன் மனைவியின் பதில் கேட்டு, “அல்லாஹ் அவருடன் போரிடுவானாக...” எனக் கோபமாக சொல்கிறார்கள்.

அந்த நபர் தனக்கு உண்டான ஒரு தேவையை நிவர்த்தி செய்து தருமாறு அவைக்கு வந்தார். அதை நான் அனுமதிக்கவில்லை. இப்போது என் குடும்பத்தினர் வழியாக சமரசம் பேசவே இந்த இரண்டு தலையணையை அன்பளிப்பு என்ற பெயரில் கொடுத்து அனுப்பியுள்ளார் என சொன்னார்.

பின்னர் அந்த இரண்டு தலையணையையும் தன் மனைவியிடமிருந்து பிடுங்கிச் செல்கிறார்கள். எதுவும் பேச இயலாது, மனைவி தன் கணவர் உமர் (ரலி) அவர்கள் பின் சென்று, அதன் மேல் இருக்கின்ற கம்பளி உறை நம்முடையது என்றதுமே அதை மட்டும் எடுத்துக் கொடுத்து விடுகிறார்கள்.

பின்பு, ஜனாதிபதி உமர் (ரலி) அவர்கள் அதை மக்கா மற்றும் மதீனாவின் இரண்டு பெண்களுக்கு அன்பளிப்பாக கொடுத்து விடுகிறார்கள்.

இந்த உமர் செய்த ஆட்சியைத்தான் நம் தேசத்தந்தை அண்ணல் மஹாத்மா நேசித்தார் என்பது உலகம் அறிந்த ஒன்றே.

சிறிய தலையணையில் என்ன நேர்ந்து விடப் போகிறது என் நாம் நினைக்கலாம். அற்ப பொருளுக்குக்கூட ஒரு ஆட்சியாளன், மக்கள் தலைவன் விலை போய் விடக் கூடாது என்பதே இதன் ஆழமான  தத்துவமாகும்.

அத்தோடு, இது போன்ற சிறிய பொருட்களிடமிருந்துதான் அனைத்து வித இலஞ்சத்திற்கும் அடித்தளம் அமைக்கப் படுகிறது. மக்கள் பிரதிநிதிகளான ஆட்சியாளர்களால் வசூலிக்கப்படுகின்ற பில்லியன் மதிப்பிலான பணப்பரிமாற்றங்களுக்கான ஊக்கம் இலஞ்சமாய் வழங்கப்படுகின்ற சொற்பக் காசுகளில் துவங்குகிறது.

இதன் விளைவுதான், நம் தேசத்தில் சமீபமாக அறியப்பட்ட பல அதிர்ச்சிகரமான லஞ்ச விவரப் பட்டியல்கள்...

இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை முறைகேடு, 2010 காமன்வெல்த் ஊழல், ஆதர்ஷ் வீட்டு வசதி சங்க முறைகேடு, நிலக்கரி சுரங்க முறைகேடு, ஆந்த்ராக்ஸ் தேவாஸ் ஒப்பந்தம், கோதாவரி படுகை எரிவாயு தோண்டுதலில் பிரச்சினை, தேசிய பொருள்கள் பரிமாற்ற சந்தையில் ஊழல், ஏர் இந்திய நிறுவன விமானக் கொள்முதலில் ஊழல், மற்றும் ஐ.பீ.எல் விளையாட்டில் ஊழல் என நீளுகின்ற இலஞ்சப் பட்டியல்கள். பல இன்றும் தீர்வு காண முடியாத தலைப்புச் செய்திகளாகவே இருக்கின்றன.

இப்படியான இக்கட்டான தருணத்தில், ஒரு இஸ்லாமிய ஆட்சியாளரின் நேர்மைத் தன்மையை இந்திய ஆளுமைப் பீடங்களின் செவிப் புலன்களுக்கு உரத்துச் சொல்வது அவசியமாகிறது.

நிகழ்வு 2:

இஸ்லாமியப் படை ஒன்று ஜனாதிபதி உமர் (ரலி) அவர்களின் ஆட்சியின் போது துருக்கிஸ்தானை வெற்றி கொள்கிறது. அதிலே அவர்களுக்கு ஏராளமான பொருட்கள் பொக்கிஷமாகக் கிடைத்தது. வெற்றிக்களிப்பின் மிகுதியால் ஜனாதிபதி உமர் (ரலி) அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் சில பொருட்கள் அன்பளிப்பாக அனுப்பி வைக்கிறார்கள்.

ஆனால், ஜனாதிபதி உமர் (ரலி) அவர்கள் அதைப் பயன்படுத்துவது கூடும் (ஹலால்) என்ற போதும், அன்பளிப்பை ஏற்க மறுத்தது மட்டுமின்றி, அதை விற்றுக்கிடைக்கின்ற பணத்தை இஸ்லாமிய அரசின் நிதி அமைச்சகத்தில் சேர்த்து விடுமாறு உத்தரவு பிறப்பிக்கிறார்கள்.

என்னவென்று சொல்வது?? முறையாக அரசுடைமையாக்கப்பட வேண்டிய நாட்டின் இயற்கை வளங்களில்  பெருமாபாலானவை ‘மக்க்ளின் பிரதிநிதி’ என்ற பெயரில் தனியொரு மனிதனின் பாக்கெட்டை நிரப்புவதற்காக மட்டுமே இன்று பயன்படுத்தப் படுகிறது. இது ஜனநாயக அரசியலின் இறையாண்மயைக் குழி தோண்டிப் புதைத்து விடுவதற்கான அடையாளமாகும்.

ஆங்கிலேயனின் பிடியிலிருந்து மீண்டோம். ஆனால், காலனிய ஆட்சியில், பரவலாகக் காணப்பட்ட  சகல விதமான  கையூட்டுப் பழக்கத்தை விட்டொழிக்க முடியாமல்  இன்று வரை ஊழலுக்கு நம் தேசம் அடிமைப்பட்டுக் கிடக்கிறது.

இந்த நிலையில் நம் தேசம் பூரண சுய ராஜ்ஜியத்தை பெற்று விட்டதாய் நாம் பெருமையோடு மார் தட்டிக்கொள்கிறோம்.

நிகழ்வு 3:

ஜனாதிபதி உமர் இப்னு அப்துல் அஸீஸ் (ரலி)  அவர்கள் ஹஜ்ரத் உமரைப் போன்றே இஸ்லாமிய ஜனாதிபதிகளில் மிகப் பிரசித்தி பெற்றவர்கள். ஜனாதிபதியான ஹஜ்ரத் உமர் இப்னு அப்துல் அஸீஸ் (ரலி) திடீரென ஆப்பிள் பழம் சாப்பிட வேண்டும் என்று ஓர் சிறிய ஆசை. ஆனால் ஆப்பிள் வாங்குவதற்கான பணம் அவர் கைவசம் இல்லை.

அவர்களின் சகாக்களுடன் இருந்தபோது ஒரு கூடை ஆப்பிள் அன்பழிப்பு செய்யப்படுகிறது. அவற்றில் ஒரு ஆப்பிளை எடுத்து முகர்ந்து பார்த்து விட்டு, திருப்பிக் கொடுத்து விடுகிறார்கள். “ஏன்... சாப்பிடவில்லையா..?” எனக் கேட்கப்படுகிறது.

பெருமானார் (ஸல்) அவர்களும், ஹஜ்ரத் அபூபக்கர் (ரலி), ஹஜ்ரத் உமர் (ரலி) அவர்களுக்கும் இது போன்ற பொருட்கள் தரப்பட்டது. அது அவர்களுக்கு அன்பளிப்பாகும். ஆனால் என்னைப் போன்ற மக்கள் பிரதிநிதியான அரசு ஊழியனுக்கு இன்று வழங்கப்படுகின்ற எல்லா அன்பளிப்புக்களும் தன் சுய தேவையை முன் வைத்து தரப்படுகின்ற இலஞ்சமே ஆகும். எனவே எனக்கு ஆப்பிள் வேண்டாம் என திருப்பி அனுப்பி விடுங்கள் என உத்தரவிடுகிறார்கள்.

மக்கள் பணியான அரசியல் தெய்வீகமானது. பொது நல சேவை நோக்கத்தோடு இருக்க வேண்டிய பக்திமயமான அரசியலை இலஞ்சத்தால் கறை படிந்த கரத்தால் களங்கம் செய்து விடக் கூடாது என்பதில் இஸ்லாமிய ஆட்சியாளர்கள் மிகக் கவனமாக இருந்துள்ளார்கள் என்பதை இதிலிருந்து உணர முடிகின்றது.

ஊழலின் காரணத்தால் ஜனநாயக தேசத்தின் அரசியல் நிலைத்தன்மை, அதன் சமத்துவம், இறையாண்மை ஒரு கடைச்சரக்காகி விட்டது. மேலும் அந்த சமூக மக்களின் தூய்மைக்குணமும், ஒழுக்கச் சிந்தனையும், நேர்மையான பார்வையும், விலை மாதரைப் போல் களங்கப்பட்டு நிற்கிறது.

வெகுஜன மக்களின் வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியும் பெருமளவில் பாதித்துள்ளது. அத்தோடு வறுமைக் கோட்டிற்குக் கீழ் தள்ளியதோடு மட்டுமின்றி நாட்டின் மொத்த உற்பத்தி(ஜி.டி.பி)யிலும் தொய்வை ஏற்படுத்தியுள்ளது, என ஊழலால் ஏற்படுகின்ற பாதிப்பை விவரித்துக் கொண்டே போக முடியும்.

இது மாதிரியான அவல நிலையை ஏற்படுத்துகின்ற ஊழல் பேர்வழிகளை இஸ்லாம் மிகக் கடுமையாக கண்டிக்கிறது. இதனால்தானோ என்னவோ பெருமானார் (ஸல்) அவர்கள் ‘இலஞ்சம் கொடுப்பவனும், இலஞ்சம் பெறுபவனும் நாசமாகட்டும்’ என சபித்துள்ளார்கள்.

பேரம் பேசுவதும், பணத்தைக் கொடுப்பதும் இன்றைய ஊழல் அரசியலோடு ‘நகமும் - சதையும்’ ஆக பின்னிப்பிணைந்த பிரிக்க முடியாத கலாசாரமாகி விட்டது என்பது மட்டுமல்ல. அந்தப் பேரத்தில் வெற்றி பெறுபவன் ஒரு ‘அரசியல் சாணக்கியனாகவும்’, தோல்வியுறுபவன் ‘பிழைக்கத் தெரியாதவனாகவும்’ விமர்சிக்கப்படுகின்றான்.

நிகழ்வு 4:

நபித் தோழர் அப்துல்லாஹ் இப்னு ரவாஹா (ரலி) அவர்களை கைபர் பகுதியில் வசிக்கும் யஹூதிகளிடம் பேரீத்தம்பழ அறுவடையில் கிடைப்பவற்றில் தோராயமாகக் கணக்கிட்டு வரியை வசூல் செய்வதற்காக நாயகம் (ஸல்) அவர்கள் நியமனம் செய்து அனுப்புகிறார்கள்.

வரி வசூல் செய்வதற்காக சென்ற அப்துல்லாஹ் இப்னு ரவாஹா (ரலி) அவர்களிடம், நாங்கள் செலுத்த வேண்டிய வரியில் சற்றுக் கண்டு கொள்ளாமல் விட்டு விடுங்கள், நாங்கள் தருவதை மட்டும் எடுத்துச் செல்லுங்கள், அதற்குப் பதிலாக அந்துல்லாஹ்வே இந்த ஆபரணங்களை முழுமையாக நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள் என தங்கள் பெண்களின் தங்க ஆபரணங்களை இலஞ்சமாக தருவது குறித்துப் பேசுகிறார்கள்.

இலஞ்சத்தை வாங்கிக்கொண்டு உங்கள் வரியில் என்னை சமரசம் செய்யச் சொல்கிறீர்கள், இறைவனின் மீது சத்தியமாக அதை நான் செய்யமாட்டேன் என மறுத்து விட்டார்கள், என்பது வரலாறு.

இப்படியாய் இஸ்லாமிய ஆட்சியாளர்களை பின்பற்றி அரசாங்கத்திடம் அடிமட்டம் தொடங்கி மேல்மட்டம் வரைக்கும் ‘நேர்மையான பொதுநல ஊழியனாக’,   ‘சேவை செய்ய மட்டுமே’ ஆசைப்படுகிற புனிதர்களின் தேர்தல் வெற்றிதான் - இலஞ்சம் இல்லாத உலகம் இயங்குவதற்கான ஆரம்பமாகும்.

அல்லாஹ் மிக்க அறிந்தவன்.

மௌலவி எம்.ஏ.முஹம்மத் லுத்ஃபுல்லாஹ் பிலாலி, பள்ளபட்டி. 

| தினத்தந்தி ஆன்மீக மலர் | 3/12/2013

* (ஸல்) -  ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் 
| இறைவனின் சாந்தி அவரின் மீது உண்டாகட்டும்.

*(ரலி) - ரலியல்லாஹு அன்ஹூ
| இறைவன் அவர்களைப் பொருந்திக் கொள்ளட்டும்.

4 comments:

உங்கள் கருத்துக்கள்...

மீன்கள் ஜாக்கிரதை! உரம் போட்டு, ஊசி போட்டு, கழிவுகள் கொட்டி... விகடன் பார்வை

Wednesday, December 04, 2013 Anisha Yunus 6 Comments

| காசி. வேம்பையன், படங்கள்: கே.குணசீலன்

'மீன் குழம்பு’ என்று வாசித்தாலே நாக்கில் எச்சில் ஊறும் நம்மவர்களுக்கு! ஆட்டுக்கறி, கோழிக்கறியைக் காட்டிலும் அசைவ உணவு வகைகளில் மீனுக்கு எப்போதும் தனி மவுசு உண்டு. அசைவ உணவு வகைகளில் சத்து மிகுந்ததும் மீன்தான். எல்லாவற்றையும் நச்சுப்படுத்தி லாபம் பார்க்கும் நவீனகால வியாபார உலகம், மீன்களை மட்டும் விட்டுவைக்குமா? இன்று நாம் உண்ணும் மீன்கள் எந்த அளவுக்கு ஆரோக்கியமானவை? அவை எத்தகைய சூழலில், எவ்வாறு உற்பத்தி செய்யப்படுகின்றன? ஞாயிற்றுக்கிழமை மதியங்களை சுவைமிக்கதாக மாற்றும் மீன் வாசனையின் இன்னொரு பக்கத்தை இங்கே அலசலாம்.
மீன் உணவை, இரு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கலாம். ஒன்று, உள்நாட்டு மீன்கள். இன்னொன்று, கடல் மீன்கள். உள்நாட்டு மீன்களைப் பொறுத்தவரை ஆறு, ஏரி, குளம் போன்ற நீர்நிலைகளில் தானாக வளர்பவை ஒரு வகை. குளம் வெட்டி பண்ணை அமைத்து, தொழில் முறையில் வளர்க்கப்படும் மீன்கள் இன்னொரு வகை. அதிகரித்துவரும் மீன் தேவையின் கணிசமான அளவை உள்நாட்டு மீன்கள் பூர்த்தி செய்துவரும் நிலையில், இவற்றின் நேர்-எதிர் அம்சங்களைத் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியமாகிறது.
சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை கிராமங்களில் குளத்து மீன் என்றால், அது ஊர்ப் பொதுக் குளத்தில் வளர்வதுதான். ஆண்டுக்கு ஒருமுறை குளம் ஏலம் விடப்படும். மீன் பிடிக்கும் நாள் அன்று தண்டோரா போடப்பட்டு ஊரே மீன் வாங்கும்.
2000-ம் ஆண்டுகளில் இந்த நிலைமை மாறியது. ஊர்ப் பொதுக் குளத்தை ஏலம் எடுத்தவர்கள், அதில் கெமிக்கல் உரங்களையும், மாட்டுச்சாணம், பன்றிக் கழிவுகளையும் அள்ளிக்கொட்டி அதிவேகமாக மீன்களை வளர்த்து 'இருபோக’ வருமானம் பார்த்தார்கள். வரும்படி வருவது தெரிந்ததும் குளம் ஏலத்தில் போட்டி உருவானது. 5,000 ரூபாய்க்கு ஏலம் போன குளம், 20 ஆயிரம் ரூபாய்க்குப் போனது. கிராமத்துக் குளத்தின் ஏலம் இப்போது லட்சத்தைத் தொட்டுவிட்டது என்பதுடன், அது அரசியல் அதிகாரத்துடனும் இணைந்துவிட்டது.
ஒரு கிராமத்தில், அதிகபட்சம் நான்கைந்து குளங்கள்தான் இருக்கும். அதை நான்கு பேர்தான் ஏலம் எடுக்க முடியும். ஏலம் எடுத்து மீன் வளர்த்து, அந்த நான்கு பேர் மட்டுமே லாபம் பார்க்கும்போது மற்றவர்கள் வேடிக்கை பார்ப்பார்களா? 'அப்படியான லாபத்தைக் குவிக்க என்ன செய்யலாம்?’ என்று யோசித்தவர்கள், தங்களின் சொந்த விவசாய நிலங்களை மீன் குளங்களாக மாற்றினார்கள்.
'போட்ட காசு கைக்கு வருமா?’ என்ற நிச்சயம் இல் லாத விவசாய நிலங்களைக் கட்டிகொண்டு அழுவதைவிட, உத்தரவாத லாபம் தரும் மீன் குளமே மேல் என்று எண்ணத் தொடங்கினர். இதன் விளைவாக... கிராமப்புறங்களில் எக்கச்சக்கக் குளங்கள் பெருகின. அரசும், உள்நாட்டு மீன் வளர்ப்பு என இதற்கு மானியம் கொடுத்து ஊக்குவிக்கிறது. மானியத்தை வாங்கி முறைப்படி மீன் வளர்த்து, விற்பனை செய்து லாபம் பார்த்தால் பிரச்னை எதுவும் இல்லை. மாறாக, கெமிக்கல் உரங்களை அள்ளிக்கொட்டி விவசாயம் செய்வதுபோலவே மீன்களையும் வளர்க்கத் தொடங்கிவிட்டனர். இயற்கையான முறையில் குளங்களில் வளரும் நாட்டு மீன்களைவிட, அதிவேகமாக வளரும் இந்த வளர்ப்பு மீன்கள் இவர்களின் லாபத்தை அதிகப்படுத்தின. இந்த பயங்கரத்தின் உண்மையை திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்ட மக்கள் நேரடியாக உணர்வார்கள்.
''ஊர்ப் பொதுக் குளங்களில் இயற்கையாகவே நாட்டு மீன் இனங்கள் இருக்கும். குளம் வற்றினாலும் அவற்றின் முட்டைகள் குளத்திலேயே படிந்திருக்கும். தண்ணீர் வந்ததும் மறுபடியும் குஞ்சுகள் உற்பத்தியாகும். இது, இதுவரை நடந்த இயற்கையான நடைமுறை.
இப்போது என்ன செய்கிறார்கள் என்றால், குளம் காய்ந்து இருக்கும்போது பூச்சிக்கொல்லிகளைத் தெளித்து இந்த நாட்டு மீன்களின் முட்டைகளை அழித்துவிடுகின்றனர். அவற்றை விட்டுவைத்தால், வளர்ப்பு மீன்களுக்குப் போடும் தீவனத்தைத் தின்றுவிடும்; அதனால் லாபம் குறைந்துவிடும் என்பதற்காக இவ்வாறு செய்கின்றனர். மேலும், வளர்ப்பு மீன்களை ஒப்பிடும்போது, நாட்டு ரக மீன்கள் அளவில் சிறியவை. மெதுவாக வளரக்கூடியவை. இதனால் அவற்றை கருவிலேயே கொன்றுவிட்டு வளர்ப்பு மீன்களை உற்பத்தி செய்கிறார்கள்'' என்று அதிரவைக்கிறார் நக்கீரன். இவர் நன்னிலம் பகுதியில் வசிக்கும் சூழலியல் நிபுணர்.
தொடர்ந்து அவர் பேசும்போது, ''மீன்கள் வேகமாக வளர்வதற்கு செயற்கைத் தீவனங்களை குளங்களில் கொட்டுகிறார்கள். அதில் வழக்கமான மீன் தீவனங்களும் உண்டு. அத்துடன் பூச்சிக் கொல்லிகள், யூரியா, சூப்பர் பாஸ்பேட் உரங்கள், மாட்டுச்சாணம், பன்றிக் கழிவுகள் போன்றவற்றையும் கொட்டுகின்றனர். இது பொய் இல்லை. கிராமங்களுக்குச் சென்றால், இந்தக் காட்சியை நேரில் காணலாம். இந்த நச்சுகள் கரைந்து, அமில நிலையில் இருக்கும் தண்ணீரைக் குடித்தும் சுவாசித்தும்தான் அந்த மீன்கள் வளர்கின்றன. இப்படி உரம் போட்டு வளர்க்கப்படும் மீன்கள், கொஞ்சம்கூட அழுக்கு இல்லாமல், இயந்திரத்தில் வார்த்து எடுக்கப்பட்ட செதில்களைப் போல நேர்த்தியாக இருக்கும். பளபளப்புடன் மின்னும். இன்று உள்நாட்டுக்குள் கிடைக்கும் மீன்களில் பெரும்பாலானவை இத்தகையவையே!
முன்பெல்லாம் தஞ்சாவூர் மாவட்டக் குளங்களில் கிடைக்கும் கெண்டை மீன்கள், அவ்வளவு ருசியாக இருக்கும். குளத்து மீனுக்கே உரிய மண்வாசனையை அதில் உணர முடியும். ஆனால், இந்த வளர்ப்புக் கெண்டைகளை சாப்பிட்டால் யூரியா வாசனைதான் வருகிறது. எந்தச் சுவையும் இல்லாமல் சக்கையாக இருக்கிறது. நீண்ட வருடங்களுக்குப் பிறகு சொந்த ஊருக்கு வந்து மீன் சாப்பிடுபவர்கள் இந்தச் சுவை வேறுபாட்டைத் துல்லியமாக உணர்வர். மீன் உணவின் மூலம் கிடைக்கும் ஆரோக்கியமும் சத்துகளும் இந்த மீன்களில் கிடைக்காது. இவற்றால் உடல் ஆரோக்கியம் சீர்குலையும் ஆபத்தும் இருக்கிறது. ஆகவே, வளர்ப்பு மீன்கள் குறித்து உடனடியாக நாம் விழிப்பு உணர்வு அடைய வேண்டும். உள்நாட்டு மீன் வளர்ப்பை முறைப்படுத்த வேண்டும்!'' என்கிறார் நக்கீரன்.
இத்தகைய மீன் குளங்கள், பெரும்பாலும் வயல்வெளிகளுக்கு இடையிலேயே அமைந்துள்ளன. சுற்றிலும் நெல் விவசாயம். நடுவே மீன் விவசாயம். இதனால் நெற்பயிர்களுக்கு அடிக்கப்படும் ஆபத்தான பூச்சிக்கொல்லிகள் குளத்து நீரில் கலப்பது கண்கூடு. இத்தகைய மீன் பண்ணைகளில் அதிகம் வளர்க்கப்படுவது கெண்டை மீன்களே. அதிகம் எடை நிற்கும் என்பதாலும், விறுவிறுவென வளரும் என்பதாலும், மக்கள் அதிகம் இந்த மீனை விரும்புவதாலும் இந்த மீனைத் தேர்வு செய்கின்றனர்.
வேறு சில இடங்களில் விறால் மீன்கள் வளர்க்கப்படுகின்றன. கடல் மீனில் வஞ்சிரத்துக்கு உள்ள மதிப்பு, நாட்டு மீனில் விறாலுக்கு உண்டு. ஒரு கிலோ 400 ரூபாயைத் தாண்டி விலைபோகக்கூடிய மீன் இது. இவை வளர்க்கப்படும் குளங்களில் இவற்றுக்கு உணவாக 'ஜிலேப்பி’ மீனும் வளர்க்கப்படுவது வாடிக்கை. இப்போது விறால் மீனின் துரிதமான வளர்ச்சிக்காக, அழுகிய முட்டைகள், கோழி இறைச்சியின் கழிவுகள் ஆகியவையும் கொட்டுகின்றனர்.
இப்படி கண்டதையும் கொட்டி மீன்களை வளர்ப்பதால் அவை நச்சுத்தன்மையுடன் வளர்வது ஒரு பக்கம் இருக்க... நமது நாட்டு ரக மீன்கள் அடியோடு ஒழித்துக்கட்டப்படுகின்றன. சாணிக்கெண்டை, உழுவை, குறவை, அயிரை, கெளுத்தி, பனையேறிக் கெண்டை போன்ற நாட்டு மீன் வகைகள் இப்போது அழிவின் விளிம்புக்கு வந்துவிட்டன. தவளைகள், நத்தைகள், வயல் நண்டுகள் போன்ற சுற்றுச்சூழலுக்கு அரணாக இருந்த பல உயிரினங்களை, இந்த கெமிக்கல் கழிவுகள் வேகமாக அழித்துவருகின்றன. தவளையின் அழிவு, பல்லுயிர்ச் சூழலில் பெரும் விளைவுகளை உருவாக்கக்கூடியது என்று சூழலியல் அறிஞர்கள் எச்சரிக்கின்றனர். மறுபுறம், வளர்ப்பு மீன்களுக்கு வைக்கப்படும் நச்சு உணவின் விளைவாக குளத்தின் தண்ணீர் பச்சை நிறமாக மாறிவிடுகிறது. அதில் குளித்தால் உடம்பில் கடும் அரிப்பு ஏற்பட்டு, தோல் நோய்கள் வருகின்றன.
கோயம்புத்தூரில் உள்ள 'சலீம் அலி சென்டர் ஃபார் ஆர்னித்தியாலஜி’ சார்பில் கேராளாவில் 150 இடங்களில் மீன் குளங்களில் சோதனை செய்யப்பட்டது. அனைத்துச் சோதனை முடிவுகளும், குளங்களில் பூச்சிக்கொல்லியின் தாக்கம் அளவுக்கு அதிகமாக இருப்பதை உறுதிப்படுத்தின.
மதுரை மருத்துவர் சௌந்தரபாண்டியன் சொல்லும் இன்னொரு தகவல் அதிரவைக்கிறது. ''பிராய்லர் கோழிகளை குறைந்த நாட்களில் அதிக வளர்ச்சி அடையவைப்பது போல, மீன்களையும் வளரவைக்க 'குரோத் ஹார்மோன்’ உள்ள தீவனங்களைப் பயன்படுத்துகின்றனர். இதனால், மீன்கள் அதிவேகமாக வளர்கின்றன. மேலும், பிராய்லர் கோழிக் கழிவுகளைத் தீவனமாக கொடுத்து வளர்க்கும்போது, அந்தக் கோழிகளுக்கு பயன்படுத்தப்பட்ட ஹார்மோன்களின் எச்சமும் மீன்களில் கலக்கிறது. இத்தகைய 'குரோத் ஹார்மோன்’ உள்ள மீன்களை தொடர்ந்து சாப்பிடும்போது பெண் குழந்தைகளின் உடல் வளர்ச்சி அளவுக்கு அதிகமாக மாற வாய்ப்பு உள்ளது. 15 வயது பெண்ணுக்கு இருக்க வேண்டிய உடல் வளர்ச்சி, 10 வயதுப் பெண்ணுக்கு வந்துவிடும். பெண் குழந்தைகள் குறைந்த வயதிலேயே பூப்பெய்துகின்றனர்'' என்கிறார் இவர்.
பிராய்லர் கோழிகளுக்கு ஹார்மோன் ஊசி போடுவதைப் போல சில இடங்களில் சினையுற்ற மீன்களுக்கும் ஹார்மோன் ஊசி போடுகிறார்கள். வயிற்றில் இருக்கும் மீன் குஞ்சுகள் ஆரோக்கியமாகப் பிறக்கவும், கொழுகொழுவென வளரவும் தூண்டும், அந்த ஹார்மோன் ஊசி.
'நாட்டு மீன்களில்தானே இவ்வளவு பிரச்னை... கடல் மீன்களாவது பரவாயில்லையா?’ என்று கேட்டால், ஒப்பீட்டளவில் பரவாயில்லை என்று சொல்லலாம். எனினும் கடல் மீன்களும் பலவகைகளில் பாதிக்கப்பட்ட பிறகுதான் மீனவர்களின் வலைகளில் சிக்குகின்றன. குறிப்பாக, நீண்ட கடற்கரையைக் கொண்ட தமிழ்நாட்டில், கடலோரங்களில் ஏராளமான தொழிற்சாலைகள் உள்ளன. அணுமின் நிலையம் தொடங்கி, கெமிக்கல் தொழிற்சாலைகள் வரை பல உள்ளன. இவற்றின் கழிவுகள் கடலில் கலப்பதால் மீன்வளம் பாதிக்கப்படுவது பல்வேறு ஆய்வுகளில் உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
''கடலோரப் பகுதிகளில் வளரும் கானாங்கெளுத்தி, சுழுவை, வேலா போன்ற மீன் இனங்களில் 'டி.டி.டி, எண்டோசல்பான்’ போன்ற பூச்சிக்கொல்லிகளின் தாக்கம் இருப்பதை ஆய்வுகள் உறுதிசெய்துள்ளன. 2007-2008ம் ஆண்டு அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் உள்ள கடல்சார் ஆய்வு மையத்தின் மூலம் முத்துப்பேட்டை, பிச்சாவரம் பகுதிகளில் ஆய்வுசெய்யப்பட்டது. அதில் அலையாத்திக் காடுகளின் இலைகள், பவளப் பூண்டுகள், கடல் பாசிகள் போன்றவற்றில் மெர்க்குரி, காட்மியம் ஆகியவற்றின் நஞ்சுகள் இருப்பது கண்டறியப்பட்டது'' என்கிறார் சூழலியலாளர் நக்கீரன்.
நமது மீன்வளத்தின் உற்பத்தி முதல் விற்பனை வரை அனைத்தையும் முறைப்படுத்த வேண்டிய காலக்கெடு நெருங்கிவிட்டது!

கரன்சி கடல்!
தமிழகம் முழுக்க 608 கடலோரக் கிராமங்களில், 8.11 லட்சம் மீனவர்கள் (2010-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி) உள்ளனர். தமிழ்நாடு முழுவதும், 3.75 லட்சம் ஹெக்டேரில் உள்நாட்டு மீன் இனங்களும், உவர்நீர் மீன் இனங்களும் வளர்க்கப்படுகின்றன. உள்நாட்டு மீனவர்களின் மக்கள்தொகை 2.25 லட்சம். 2012-2013ம் ஆண்டுகளில் 1.85 லட்சம் மெட்ரிக் டன் உள்நாட்டு மீன்கள் பிடிக்கப்பட்டுள்ளன.
 2010-2011ம் ஆண்டுக்கு மீன்வளத் துறைக்கு 193.32 கோடி ரூபாயும், 2013-2014ம் ஆண்டுக்கு 467.44 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்துள்ளது தமிழக அரசு.
ஆதாரம்: தமிழக அரசின் மீன்வளத் துறை கொள்கை விளக்கக் குறிப்பு 2013-2014.

இயற்கை முறையிலும் மீன் வளர்க்கலாம்!
சாயன உரங்களையும், உடலுக்குக் கேடுகளை விளைவிக்கும் தீவனங்களையும் தவிர்த்துவிட்டு இயற்கையான முறையில் மீன்களை வளர்க்க முடியுமா? ''நிச்சயம் முடியும்'' என்கிறார் மயிலாடுதுறை, ஆனந்த குடியைச் சேர்ந்த பிச்சைப்பிள்ளை.
''நோய் தொற்றுக்காக பூச்சிக்கொல்லி மருந்து தெளிப்பதற்கு பதிலாக, நாம் அன்றாடம் பயன்படுத்தும் மஞ்சள் பொடியைப் பயன்படுத்தினாலே நோய்கள் மீன்களை அண்டாது. மீன்களின் உணவான நுண்ணுயிர்கள் மற்றும் சிறிய தாவரங்களின் வளர்ச்சிக்குப் பசுஞ்சாணமே போதுமானது. மேலும், கடலைப் பிண்ணாக்கு, தேங்காய்ப் பிண்ணாக்கு, அரிசித் தவிடு, கோதுமைத் தவிடு, வாழை இலைகள், வேலிகளில் மண்டிக்கிடக்கும் கல்யாண முருங்கை, அகத்தி, சூபாபுல், சிறியாநங்கை, துளசி மாதிரியான தாவரங்களும், அசோலா பாசியும் கொடுத்தாலே... மீன்கள் ஜம்மென்று வளர்வதுடன், ஆரோக்கியமான உணவாகவும் இருக்கும்'' என்கிறார். இவரைப் போலவே இயற்கை முறையில் மீன் வளர்க்கும் ஏராளமானோர் தமிழ்நாடு முழுவதும் உள்ளனர்.

நாட்டு மீன்.. கடல் மீன்.. எது நல்லது?
பொதுவாக, 'நாட்டுவகை மீன்களைவிட கடல் மீன்களே சத்து நிறைந்தவை’ என்கிறார்கள் நிபுணர்கள். ''ஆழ்கடலில் குளிர்ந்த நீரில் வளரும் மீன்களில் 'ஒமேகா-3’ என்ற புரதச் சத்து அதிகமாக இருக்கும். கடலோரப் பகுதியில் வளரும் மீன்களில் இது சற்றுக் குறைவு. ஆற்று மீன்களிலும் வளர்ப்பு மீன்களிலும் இது மிகமிகக் குறைவாகவே இருக்கும். இதனால்தான் ஆழ்கடல் மீன்களைத் தொடர்ச்சியாக சாப்பிடுபவர்களுக்கு, மாரடைப்பு மாதிரியான ஆபத்துகள் வருவது இல்லை என ஆய்வுகள் சொல்கின்றன. வெளிநாட்டினர், கடல் மீன்களை மட்டும் இறக்குமதி செய்வதும் இதனால்தான். ஒரு மனிதன் தனக்குத் தேவையான புரதச் சத்துகளைப் பெறுவதற்கு ஆண்டுக்கு 15 கிலோ மீன் உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். நமக்குக் கிடைப்பதோ ஆண்டுக்கு 7.5 கிலோ மட்டும்தான். நீண்ட கடற்பகுதியைக் கொண்ட இந்தியாவில் தாராளமான ஆழ்கடல் மீன்வளம் உள்ளது. ஆனால், அவை வெளிநாட்டு ஆலைக் கப்பல்கள் மூலமாகப் பிடிக்கப்பட்டு கடலில் இருந்தவாறே ஏற்றுமதி செய்யப்படுகின்றன'' என்கிறார் கடல்வள அரசியல் ஆய்வாளரும், பேராசிரியருமான வறீதையா கான்ஸ்தந்தின்.

6 comments:

உங்கள் கருத்துக்கள்...