நவம்பர் 18 - நடந்தது என்ன?

Friday, November 23, 2012 Anisha Yunus 13 Comments

6:00 am
எங்கள் இறைவனே! எங்கள் மீது பொறுமையையும் (உறுதியையும்) பொழிவாயாக முஸ்லீம்களாக (உனக்கு முற்றிலும் வழிப்பட்டவர்களாக எங்களை ஆக்கி), மரணிக்கச் செய்வாயாக!.
ஆமீன்...ஆமீன்..

9:00
am
அடடே வாங்க ஆமினாம்மா... அஸ் ஸலாமு அலைக்கும்

வ அலைக்கும் அஸ்ஸலாம்... என்ன எதோ கல்யாண வீடு போல எங்கே எல்லாரும் ரெடியாகுறீங்க?

அது ஒன்னுமில்லம்மா... என் மகன் ஏதோ ஒரு டூரிஸ்ட் பையனை பிடிச்சிருக்கான். அவன்கிட்ட இருக்கற விலை உயர்ந்த கேமராவுல மொத்த குடும்பத்தையும் வெச்சு படம் எடுக்கனுமின்னு காலைல இருந்து எல்லாரையும் துரத்திட்டு இருக்கான்....

அது சரிப்பா.... எப்ப வரை இருப்பமோ... இருக்கறவரை சந்தோஷப்பட விடுங்க....
 
! ! !
! ! ! 
! ! !


10:00
am
அப்துல்லாஹ்... கென்னத்தை நீதான் போயி கூட்டிட்டு வரணும்.


அதெல்லாம் முடியாது பாஸ்.... அப்புறம் நான் மட்டும் ஃபோட்டோவுல கசங்கி இருப்பேன்.... அவனை அட்ரஸ் சொல்லி வரச்சொல்லிடுங்க....
 

உன்னை.... சரி... அப்புறம் பாத்துக்கறேன்... :))

11:00
am
ஜல்லூ ஜல்லூ...
 

எடீ...இன்னொரு தடவை என் பேரை சொன்னே..... பாரு அப்பாகிட்ட சொல்லித் தர்றேன்.... ஜமால் பையான்னு சொல்றியா இல்லியா??
 

ஜல்லூ...புய்யா...
 

ஹ ஹ ஹா....
 

ராணி... ஹேய்....யூசுஃப் அண்ணன் வர்றான்...ஸைலண்ட்...

எல்லாரும் இங்கதான் ஒளிஞ்சிட்டிருக்கீங்களா... கிளம்புங்க போயி அழகா ரெடியாகுங்க பாக்கலாம்...

12:00
pm
ஏம்மா சமா....
சொல்லுங்க அத்தை....
சுலஃபாவுக்கும் தஹானிக்கும் சொல்லிட்டியா...
ஆங்.... சொல்லிட்டேன் அத்தை ரெண்டாவது மாடியில குழந்தைகளுக்கு சோறூட்டறாங்க.... வந்துடுவாங்க...
சரிம்மா.... இப்றாஹீம் முழிச்சிருந்தா கொண்டு வா கொஞ்ச நேரம் நான் கைல வச்சிருக்கேன்...
சரிங்க அத்தை...

1:00
pm
ஹேய் கென்னெத்...ஹெல்லோ...
அப்துல்லாஹ் சொல்லுடா...
டேய் நீ வந்துடுவேதானே....லேட் ஆயிடுச்சு பிளேன் ஏறனும்னு போயிட மாட்டியே...
இல்லை அப்துல்லாஹ்...டீல்... ஷார்ப் அட் 4 ஒகே?
ஓகே பாஸ்

2:00
pm
அம்மா சல்மா வீட்டுக்காவது விடேன்..... ப்ளீஸ்மா.... இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துடறேன்...
நத்திங் டூயிங் யூசுஃப்.... இப்போ அப்பாவும் அந்த அங்கிளும் வந்துடுவாங்க...
...ம்மீ.... அதுக்கு அப்புறம் நான் போவேன் ஓகே?
ஓகேப்பா...

2:30
pm
மாமா கீழே ஹாலுக்கு வந்துடறீங்களா? அங்கயே கொஞ்சம் ரெஸ்ட் எடுத்தீங்கன்னா அவர் வரும் நேரத்துக்கு சரியா இருக்கும். கென்னெத் அண்ணனிடம் ரொம்ப நேரம் இல்லைன்னு சொன்னார்....
சரிம்மா... வர்றேன்... தஹானி எங்கே?
அவங்க ஆமினாம்மா கூட கீழே இருக்காங்க.
அப்ப அவங்க பேரன் அப்துல்லாஹ்வும் இருக்கானா...
ஆமாம் மாமா
சரி அவனை வர சொல்லு.... படியில் இறங்க உதவியா இருக்கும்...
சரி மாமா....

2:45
pm
ஹ்ம்ம்... யூசூஃப் பாப்பாங்களை எல்லாம் கீழே கூட்டிட்டு வர்றியா?
சரிப்பா....

டேய்... குட்டீஸ்...என்னாதிது...
ஹி ஹிஹி..ஹிஹி...ட்ரெயின்ப்பா....

ஓஹ் ட்ரெயின் பெட்டி மாதிரி எல்லாரும் கையை கையை இணைச்சு வெச்சிருக்கீங்களா....
ஹி ஹி ஹி... ஆமாம்ப்பா...யூசுஃப் புய்யா சொன்னங்க...
 

நீயும் உன் புய்யாவும்... ஓகே எல்லாரும் வரிசையா உட்காருங்க.... பார்க்கலாம்...
ஹி...ஹி..ஹி...ஹிஹி..ஹிஹி...

2:50
pm
சுலஃபா எங்கே உங்க வீட்டுக்காரரும், பசங்களும் மட்டும் இல்லே....
இல்லெப்பா உங்க மருந்துதான் சீக்கிரம் வாங்கிட்டு வந்துர்றோம்னு போயிருக்காங்க...
அப்படியா சரி சரி, ஆமினாம்மாக்கும் ஒரு சேர் தஹானி பக்கத்துல போட்டுடு...
சரிப்பா..

2:52
pm
ஹ்ம்ம் எல்லாரும் என்ன செய்வீங்க ஃபோட்டோ எடுத்தப்புறம் சொல்லுங்க....
நானூ...ஜல்லூ புய்யா... ஊசெஃப் புய்யா எல்லாரும் ஸ்கூலுக்கு கொண்டு போவொம்...
ஆமா...இவதான் இப்ப ஸ்கூலுக்கு போறா... ஹி ஹி ஹி...
தாத்தா நான் ரியாஸ்ட்ட, சல்மாட்ட...இன்னும் ஒலகத்துல எல்லார்ட்டயும் காட்டுவேனே...அப்படித்தானே அப்பா...

ஆமாம் ஜமால்...கண்டிப்பா....

2:56
pm
உனக்கு கரெக்ட் இன்ஃபர்மேஷன் வந்திடுச்சா.
ஆமாம் சார். ஷேக் ரித்வான் ஏரியாவுல மூனு மாடி பங்களா இவனுடையது மட்டும்தான். ஏற்கனவே ரேஞ்ச் 542வை அனுப்பிட்டேன்...இன்னேரம் டார்கெட் பக்கம் போயிருப்பாங்க.

3:00
pm
ம்மா...ம்மா....இஹாஹீமும் என் மடில குடேன்....
இல்லடா செல்லம்...ஃபோட்டோ எடுத்தப்புறம் தரேன் சரியா....
ம்ம்ம்.....புய்யா....புய்யா...
ஏங்க ஜீ என்ன இன்னும் வாசல்ல...
நீ போம்மா... நானும் அப்துல்லாஹ்வும் கொஞ்சம் பேசிட்டு வரோம்...
அது சரி... ட்யூட்டி நியாபகத்துல அப்படியே ரோடுக்கு போயி ட்ராஃபிக் சரி செய்ய நின்னுடாதீங்க....
(கண்கள் மட்டும் புன்னகையை பரிமாற்றம் செய்துகொள்கின்றன)

3:05 pm
சார். டார்கெட் லொக்கேட்டட்.
அவன் தெரியறானா?
ஆமாம் சார். வாசல்லயே இருக்கான்.
ஓகே, தென் Leafil2 வை Unload செய்துடுங்க.
ஓகே சார்.

3:10 pm

அப்பாஆஆஆஆஆஆஆஆஆஆ.......
புய்யா...புய்....
...ஜ்...ஜி....
அல்லாஹு அக்பர்....
அல்லாஹு அக்பர்....
அல்லாஹு அக்பர்...
யல்ல யல்லா.... யா ஹபீபீ...யல்ல யல்லா....

3:20 pm

[Breaking News]At 3:10 pm, November 18, Israel rocked a house belongs to Al-Dalou family in Sheikh-Redwan area, west Gaza, killing at least 10 people, including 4 women and 4 children. [Breaking News]

The List includes:
 • Mohammed Jamal Al-Dalou, the father.
 • Ranin Mohammed Jamal Al-Dalou, 5 years old.
 • Jamal Mohammed Jamal Al-Dalou, 7 year old.
 • Yousef Mohammed Jamal Al-Dalou, 10 years old.
 • Ibrahim Mohammed Jamal Al-Dalou, 1 year old.
 • Jamal Al-Dalou, the grandfather.
 • Sulafa Al Dalou, 46 years old
 • Samah Al-Dalou, 25 years old
 • Tahani Al-Dalou, 50 years old
 • Ameina Matar Al-Mzanner, 83 years old.
 • Abdallah Mohammed Al-Mzanner, 23 years old.

4:00
ஓஹ் கென்னெத் நீங்க ஸ்பாட்லதான் இருக்கீங்களா...
....ஸ்ஸ்ஸ்....சார்...
சீக்கிரம் டெட் பாடீஸை ஃபோட்டொ எடுத்து கார்ப்பரேட்டுக்கு அனுப்பிடுங்க.

... ... ... !!பின்குறிப்பு:
ஒரு கற்பனையே.... எப்படியெல்லாம் அந்த குடும்பம் இருந்திருக்கும் என.... என்னவெல்லாம் அந்த குழந்தைகள் அன்று விளையாடியிருப்பார்கள் என....
எல்லாம் முடிந்த பின் தவறான வீட்டை பெயர்த்து விட்டோம் என காகிதத்திலிருந்து கவனம் சிதறாமல் ஒரு அறிவிப்பு வருகிறது..... எத்தனை கனவுகள், எத்தனை வண்ணங்கள்....இப்போது எல்லாம் சிகப்பு வண்ணத்தில் மட்டும் :( • http://rt.com/news/gaza-family-idf-mistake-017/
 • http://www.thenews.com.pk/article-76029-Nine-killed-in-Gaza-strike-
 • http://occupiedpalestine.wordpress.com/2012/11/18/gazaunderattack-nov-18-2012-live-blog/nov-18-2012-gaza-under-attack-al-dalou-family-massacre-535463_524553097556561_364602567_n/ 
எங்கள் இறைவா! எங்களுக்குப் பொறுமையைத் தந்தருள்வாயாக! எங்கள் பாதங்களை உறுதியாக்குவாயாக! காஃபிரான இம்மக்கள் மீது (நாங்கள் வெற்றியடைய) உதவிசெய்வாயாக!” (2:250)


.


13 comments:

உங்கள் கருத்துக்கள்...

[தி ஹிந்து] தாக்கரே மறைவிற்கு ஏன் என்னால் இரங்கல் தெரிவிக்க இயலாது?

Tuesday, November 20, 2012 Anisha Yunus 27 Comments

பால் தாக்கரேயின் மரணத்திற்கு அநேகமாக ஒபாமாவையும் விளாடிமிர் புடினையும் தவிர எல்லோரும் இரங்கல் தெரிவித்துவிட்டனர். இறந்தவர்கள் குறித்து நல்ல வார்த்தை சொல்வது ன்றொரு மரபு நமக்குண்டல்லவா? ஆனால் இறந்து போனார் என்பதற்காகக்கூட என்னால் இந்த மனிதனைப் பற்றி நல்லவார்த்தை கூற இயலாது என்கிறார் நமது மரியாதைக்குரிய நீதியரசர் மார்க்கண்டேய கட்ஜு.

அதற்கு அவர் சுட்டும் காரணம் தாக்கரேயின் "மண்ணின் மைந்தர்" கொள்கைதான். அது நமது அரசியல் சட்டத்திற்கு மட்டுமல்ல, அடிப்படை மனித நெறிகளுக்கே அப்பாற்பட்டது. அப்படி மண்ணின் மைந்தர்கள்தான் இங்கே வாழமுடியும் என்றால் பில்கள், கோண்டாக்கள், சந்தாலிகள், தோடர்கள்தான் இங்கே வாழ இயலும். இந்தியத் துணைக்கண்டமும் வட அமெரிக்காவைப்போல ஒரு குடியேறிகளின் நாடு என்பதை மறந்து விடலாகாது என்கிறார் கட்ஜு. ஆரியர்கள் மட்டுமல்ல திராவிடர்களும் கூட ஒரு வகையில் இன்னும் பழமையான வந்தேறிகள்தானே.

தாக்கரேயின் அரசியலுக்கு ஜனநாயக நெறிமுறைகளில் இடமில்லை. குண்டர்கள், உதிரிகள் ஆகியோரைத் திரட்டி ஒரு வெறுப்பு அரசியலைக் கட்டமைத்தவர் தாக்கரே. அவரது முதல் இலக்கு தொழிற்சங்கங்களுக்கு எதிராகத் தொடங்கியது. தொழிற்சங்கங்களும் கம்யூனிசமும் மராத்தா வலிமையைப் பலவீனமாக்கும் என்பது தாக்கரேயின் இட்லர் இரசியல். அடுத்து அந்த இலக்கு தென்னிந்தியர்களை, குறிப்பாகத் தமிழர்களை நோக்கித் திரும்பியது. தமிழ் உழைக்கும் வர்க்கம் இலக்காக்கப்பட்டது. அடுத்து அவரது இலக்கு முஸ்லிம்கள். பாபர் மசூதி இடிப்பை ஒட்டி மும்பையில் ஏற்பட்டக் கலவரத்தில் சிவசேனா ரவுடிக் கும்பல்கள் முஸ்லிம்களை வெட்டிச் சாய்த்தன. ஶ்ரீகிருஷ்ணா ஆணையம் தாக்கரேயைக் குற்றம் சாட்டியும், அவர் மீது வழக்குகள் பதியப்பட்டும் சாகும்வரை காவல்துறை தாக்கரேயை நெருங்கவில்லை. மலேகான் குண்டு வெடிப்பில் கைதான சாமியாரிணி பிரக்ஞா தாகூர், இராணுவ அதிகாரி உபாத்யாயா போன்ற பயங்கரவாதிகளின் பின் இந்துச் சமூகம் திரள வேண்டும் எனப் பகிரங்கமாக அறிவித்தார் தாக்கரே. ஒரு நிமிடம் சிந்தித்துப் பாருங்கள் , தீவிரவாதக் குற்றம்சாட்டப்பட்டுள்ள ஒரு முஸ்லிமின் பின்னால் முஸ்லிம் சமூகமே திரளவேண்டும் என இங்கே ஒரு முஸ்லிம் தலைவர் வாய்திறக்க இயலுமா?

தாக்கரேயின் அடுத்த இலக்கு பீஹாரிகள் முதலான புலம்பெயர் தொழிலாளிகள் மீது திரும்பியது.

இலக்குகளைத் தொடர்ந்து மாற்றிக்கொண்டிருந்த தாக்கரே தனது குண்டர் அரசியலையும், கொடும் வெறுப்புப் பேச்சுக்களையும் மட்டும் இறுதிவரை மாற்றிக்கொள்ளவில்லை.

இட்லரை வெளிப்படையாகப் புகழ்ந்து பேசிய தாக்கரேயைத் தன் ரோல்மாடல் எனச் சொல்லிக்கொண்டு தமிழகத்தில் ஒரு இயக்கம் காலூன்ற முயற்சிக்கும் இத்தருணத்தில், கட்ஜுவின் இக்கட்டுரை நம் கவனத்திற்குரியதாகிறது. 
 
நன்றி: தி ஹிந்து -- 19/11/2012


#ம்ம்ம்.... ஜட்ஜ் கட்ஜூவின் மன தைரியம் பாராட்டுக்குரியது. பாராட்டுக்கள் சார்!

27 comments:

உங்கள் கருத்துக்கள்...

துப்(பறது மட்டும்தேன் )பாக்கி....!!!

Thursday, November 15, 2012 Anisha Yunus 5 Comments

அப்படி ஒரு படத்தை எடுத்ததுக்கு பதிலா 

இப்படி ஒரு பிச்சை எடுக்கலாம்.....!!!!!!


5 comments:

உங்கள் கருத்துக்கள்...

ஒரு ரெசிபி....பல காம்பினேஷன் :)) Yummy Yummy :)

Monday, November 05, 2012 Anisha Yunus 12 Comments

சகோஸ்....

எப்படி இருக்கீங்க.... இங்கே விண்டர் ஆரம்பித்து விட்டதால் ஹைபெர்னேட்டிங் அப்பப்ப ஆகிடுது.... இருந்தாலும் எங்க விடறாங்க என்னை.... :))

விஷயத்துக்கு வருவோம்.... எந்த விதமான காய்கறியா இருந்தாலும் உங்க வீட்டு வாண்டுக எனக்கு எனக்குன்னு கேட்டு கேட்டு சாப்பிட்டா???? விக்கிற காய் விலையில தினம் தினம் காய்கறியான்னு நீங்களே கவலைப்படற நிலைக்கு போனா.... இதெல்லாம் எந்த படத்துலன்னு கேக்கப்படாது. கடந்த இரண்டு வாரமா ஆரய்ச்சி செய்து சுடச் சுட சூடாக உங்ககிட்ட இதை ஷேர் செய்துக்கறேன்....

ஒரு வேளை சாப்பாடானாலும் புரோட்டீன், பச்சைக்காய்கறி, தானியம் என மூன்றுமே கலந்து தரும் சமையல்தான் என் சாய்ஸ். அதிலும் காய்கறிகளை சாகடிக்காத ரெசிபியாக தேடுவதே பகுதி நேர வேலை. :))

இந்த தடவை, இரண்டு வாரத்துல நானும் இரண்டு வாண்டுகளும் சேர்ந்து பாதி ஃப்ரீஜரை (வெறும் காய்கறிகள் மட்டும்) காலி செய்திருக்கிறோம்.... இதற்கு ஒரே ஒரு ரெசிபிதான் உபயோகப்படுத்தப்பட்டுள்ளது. அது மட்டுமல்ல.... போனஸ்ஸான விஷயம் என்னவெனில், அளவான எண்ணை, உப்பு, பெப்பர், எலுமிச்சை மட்டுமே காரசாரத்திற்கு.... நம்பினால் நம்புங்க.... பீன்ஸ் கூட உங்க பசங்க கேட்டு கேட்டு சாப்பிட வச்சிடும்... 

பேச்சிலர் சகோஸ்.... இந்த ஒரே ரெசிபியை வாரம் முழுதும் (என்னைப் போல :)) ) பல காய்கறிகளுடன் சேர்த்து வெரைட்டி பார்க்கலாம். முதல்ல ரெசிபி சொல்லுங்கறீங்களா.... ஹெ ஹெ ஹே..... இதோ.... உங்களுக்காக. (ஃபோட்டோ எல்லாம் அவசரத்துல மொபைல் வழியாவே எடுத்தது.... அதனால நோ கம்ப்ளைண்ட்ஸ் :)) )

தேவை:
1. ஒரு கன்வெக்‌ஷன் அல்லது ட்ரெடிஷனல் ஓவன். (மைக்ரோவேவ் / டோஸ்டர் அல்ல..) 450 டிகிரி ஃபாரன்ஹீட்டில் முற்சூடு.

2. புராக்கோலி - 2 lb அல்லது முக்கால் கிலோ (இதை புறாக்கோழின்னு சொல்லப்படாதா????? )
Yummy Yummy Costco Frozen Organic florets :)
3. சின்ன  / பெரிய வெங்காயம் அரை கப் நீளவாக்கில் நறுக்கியது.
I used Onion infused Salt.... laziiiiiiiiiiiii :)), minced Garlic and Pepper
 4. பூண்டு 3 அல்லது 4 பல். தோல் நீக்கப்பட்டது, நசுக்கியது. (தோலோட இருப்பதை அப்படியே சப்பாத்திக்கட்டையால் தட்டுங்க..... நசுங்கிய பின் தோல் தனியாக கழண்டு விடும்... பின் தோல் நீக்குவது எளிது... ## என் ஷார்ட்கட் )

5. (வெங்காயம் / பூண்டு விரும்பினால் உலர்ந்த பவுடரையும் உபயோகிக்கலாம். அரை அல்லது முக்கால் தேக்கரண்டி போதும்.)

6. உப்பு தேவைக்கும் கொஞ்சம் குறைவாய் ( 1 தேக்கரண்டிக்கும் குறைவாய்)

7. பொடித்த குறுமிளகுப்பொடி  1 தேக்கரண்டி.

8. இத்தாலிய சீசனிங் (உப்பில்லாதது) அல்லது ஒரிகானோ / மற்ற ஹெர்ப்ஸ் கலவை (தேவைப்பட்டால் மட்டுமே) - 1 தேக்கரண்டி

9. பாதி எலுமிச்சையின் சுரண்டிய தோல் (மேற்தோல் மட்டும்.... zest)
தேங்காய் துருவியிலேயே சன்னமா எலுமிச்சை தோலையும் துருவிக்குங்க.

10. எலுமிச்சை சாறு 1 தேக்கரண்டி.

11. 1 மேஜைக்கரண்டி ஆலிவ் ஆயில் (இல்லாதவர்கள், நல்லெண்ணையும் உபயோகிக்கலாம்... அதிலும் சுவை நன்றாக இருக்கிறது)
இதயம் நல்லெண்ணெய்... இதயத்திற்கு கீழுள்ள வயிற்றுக்கும் ரொம்ப நல்லது :))

செய்முறை:
 • ஓவனை 450 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கு முற்சூடு செய்யவும்.

 • புராக்கோலியை நன்கு கழுவி நீளவாக்கில் சற்று மெல்லியதாக வெட்டிக்கொள்ளவும்.

 • நீள வாக்கில் சன்னமாக வெட்டிய வெங்காயத்தையும், தட்டிய பூண்டையும், புராக்கோலியுடன் கலந்து வைக்கவும்.

 • ஆலிவ் / நல் எண்ணெய், உப்பு, குறுமிளகுப்பொடி, தேவைப்பட்டால் ஹெர்ப்ஸ் எல்லாம் நன்கு கலந்து விடவும்.
 • ஒரு பேக்கிங் டிரேயில் இந்த காய்கறிக்கலவையை ஒரே சீராக பரத்தி முற்சூடு செய்த அவனில் 20 நிமிடத்திற்கு பேக் செய்யவும்.

 • 20 நிமிடம் முடிந்ததும் எடுத்து வேறொரு பாத்திரத்தில் இட்டு துருவிய எலுமிச்சை தோல், எலுமிச்சை சாறு எல்லாம் விரவி பரிமாறவும்.

 • அவ்ளோதான்... அவ்வளவேதான்.... ஆனால் நம்புங்க...  இதே ரெசிபில கிட்டத்தட்ட எல்லா காய்கறியும் செய்யலாம்.... வித்தியாசமான சுவை, வெளிப்புறத்தில் லைட்டாக க்றிஸ்பியாகவும், உள்ளே மெத்தெனவும் சுவையோடிருக்கும்... தேவைக்கும் குறைவான உப்பே போடுவதால் ஒரு வகையான இனிப்புமிருக்கும்.
Sorry for the photo.... Mini Cheese omelet and Baked Broccoli.... Meal in itself :)

இதே ரெசிபியைக் கொண்டு நான் செய்து பரிசீலித்த மற்ற காம்போக்கள்... ( Toddlers Approved :)) )

1. புரோக்கோலி மட்டும்.
2. புராக்கோலியும் மக்காச்சோளமும் சம அளவில் கலந்தது. (ஒரு நாள் இது மட்டும்தான் மதிய உணவு... வேறு எதுவுமே தொடாமல் இதை மட்டுமே சப்புக்கொட்டி மூன்று பேரும் சாப்பிட்டு முடித்தோம்....ஹி ஹி )
3. காளான் மட்டும் (சன்னமாக நறுக்கியது) (1 தேக்கரண்டி சோயா சாஸும் சேர்த்தேன்)
4. புராக்கோலியும் காளானும் சம அளவில் கலந்தது. (1 தேக்கரண்டி சோயாசாஸும், 1 தேக்கரண்டி சோம்பு தூளும் எக்ஸ்ட்ரா....வாவ்.... அபார சுவை :) )
5. க்ரீன் பீன்ஸ் (2 இன்ச் நீளமாக நறுக்கியது...ஒரு மேஜைக்கரண்டி வால்நட்ஸும் கலந்து பேக் செய்யுங்கள்.... சான்ஸே இல்லே :)) ) (வால்நட்ஸ் இல்லாவிட்டாலும் செம டேஸ்ட்... நம்ம ஊருல பொரியல்ல செய்யும் பீன்ஸான்னு நீங்களே ஆச்சரியப்படுவீங்க..... எலுமிச்சை மேற்தோல் ரொம்ப முக்கியம் இதில்!!!!!)
6. வெண்டைக்காய் மட்டும்(1/2 இன்ச் நீளத்தில் கட் செய்தது. [உண்மையில் இதை விட எளிதாய் பிள்ளைகளை வெண்டைக்காய் சாப்பிட வைக்க முடியாது.... சிம்ப்லி கிரேட் டேஸ்ட்]...கொஞ்சம் கூட வழவழப்பே தெரியலை...)
7. வெண்டைக்காயும் தோலுடன் உருளைக்கிழங்கும் ( சம அளவில் கலந்தது.... ஆர்கேனிக் / இயற்கையாய் விளைவித்த உருளையே வாங்குங்கள்.... இல்லாவிட்டால் தோல் நீக்கி விடுங்கள்)
8. உருளைக்கிழங்கு மட்டும். (அகல வாக்கில் 1/2 இன்ச் அகலத்தில் கட் செய்யவும்.)
9. மீன் ஃபில்லெட்ஸ் (திலெபியாவும், ஃப்ளோண்டரும் மிக சுவையாய் இருந்தன. )
10. கேரட் ( 2 இன்ச் நீளத்தில், 1/2 இன்ச் அகலமாக)
11. சர்க்கரை வள்ளிக்கிழங்கு {sweet potato} ( 2 இன்ச் நீளத்தில், 1/2 இன்ச் அகலமாக) (ஃபிரெஞ்சு ஃப்ரைஸில் உள்ளது போல்)

இப்ப சொல்லுங்க.... ஒரே ரெசிபியை வைத்து எத்தனை காய் செய்ய முடிகிறது.... எண்ணெய், மசாலாப்பொருட்களும் அதிகமில்லை.... உடலுக்கும் சேதாரமில்லை.... நாக்கிற்கும் சுவையில் குறைவில்லை.... பிள்ளைகள் விரும்பும் உணவாகிவிடும்.... செய்து பாருங்கள்..... கமெண்ட்டுங்கள் :)))

12 comments:

உங்கள் கருத்துக்கள்...