சிம்பிள் பச்சைப்பயறு குழம்பு :))

Sunday, July 29, 2012 Anisha Yunus 10 Comments

அன்பின் சகோஸ்,

இது எனதருமை அண்ணன் ஹைதர் அலி பாய் கேட்டுக்கொண்டதற்கிணங்க இன்னுமொரு எளிமையான, சத்தான, சுலப முறை சமையற் குறிப்பு (என் அம்மாவிடமிருந்து :)). முந்தைய தக்காளி சட்னி குறிப்பு போலவே மிக எளிமையானதும் கூட. :))


இனி...
தேவை:
பச்சைப்பயிறு -- 1/2 கப்
பெரிய / சிறிய வெங்காயம் -- 1/4 கப் நறுக்கியது
தக்காளி -- 1 சிறியது (1/4 கப் நறுக்கியது)
மஞ்சள் பொடி -- கால் டீஸ்பூன் (ஹப்பாடா சரியா எழுதிட்டேன் :))
உப்பு -- தேவைக்கேற்ப


தாளிக்க:
எண்ணெய் -- 2 டீஸ்பூன்
கருவேப்பிலை -- 1/2 ஆர்க்கு 
வர மிளகாய் -- 2 (இரண்டாக ஒடித்து வைத்துக் கொள்ளவும்)
கடுகு -- 1/2 டீஸ்பூன்
சீரகம் -- 1/2 டீஸ்பூன்
தனியா விதை (இது கட்டாயமில்லை, தேவையெனில் சுவைக்காக ) -- 1/2 டீஸ்பூன்


செய்முறை:
1. ( முக்கியம்:: ஒரே கப்பை, ஒரே டீஸ்பூனை பயன்படுத்தவும். ) அரை கப் பச்சைப்பயறை எடுத்து கல் நீக்கி வைத்துக் கொள்ளவும்.

2.ஈரமில்லாத ஒரு சட்டி / வாணலியை எடுத்து மித சூட்டில் வைத்து, பச்சைப்பயறை அதிலிட்டு வாசம் வரும் வரை வெறுமனே வறுக்கவும். (சிறிது பச்சையும் சாம்பலும் கலந்த நிறம் வரும் வரை.) கருக விட வேண்டாம்.


3. பச்சைப்பயறை அளந்த அதே கப்பில் 1:4 விகிதத்தில் தண்ணீர் அளந்து ஒரு குக்கரில் ஊற்றவும். (அதாவது ஒரு கப் பயறு : நான்கு கப் தண்ணீர்)

4. கால் டீஸ்பூன் மஞ்சள் பொடியும் சிறிது உப்பும் (தேவைக்கேற்ப) போட்டு குக்கரை நன்கு மூடி விடவும். ஆவி வெளியேற ஆரம்பித்ததும் குக்கர் விசில் / வெயிட்டை பொருத்தவும். மிதமான சூட்டிலேயே விடவும். 


5. ஐந்து தடவை விசில் வந்ததும் அடுப்பை அணைத்து ஆவி அடங்கும் வரை பொறுக்கவும். ஆவி அடங்கிய பின்  குக்கரை திறந்தால் பயறு நன்கு வெந்து மசிந்திருக்க வேண்டும். அப்படி இல்லையெனில் மீண்டும் மூடிவிட்டு இரண்டு விசில் விடவும். பயறு நன்கு வெந்திருந்தால், ஆறவிட்டு, ஆறிய பின் தண்ணீரை வடிகட்டி மத்தில் நன்கு கடைந்து கொள்ளவும் அல்லது மிக்ஸியில் அரைத்து எடுத்துக் கொள்ளவும். (தண்ணீரை கொட்டி விட வேண்டாம். இறுதியில் தாளித்த பின் சேர்த்துக் கொள்ளவும்.)

6. இன்னொரு கடாயை அடுப்பில் வைத்து ஈரம் காய்ந்ததும் எண்ணையை விட்டு காய விடவும்.

7. எண்ணெய் காய்ந்ததும் கடுகை இட்டு பொரிய விடவும். கடுகு பொரிந்ததும் சீரகம் இட்டு பொரிய விடவும். அதன் பின் வர மிளகாய், கருவேப்பிலை, தேவையெனில் தனியா விதை எல்லாம் ஒன்றன் பின் ஒன்றாக போட்டு தாளிக்கவும். 

8. நறுக்கிய வெங்காயத்தை விட்டு கண்ணாடி போல் ஆகும் வரை வனக்கவும். பின் நறுக்கிய தக்காளியையும் வனக்கவும். 

தக்காளி சிறிது வனங்கியதும் கடைந்து வைத்துள்ள பச்சைப்பயறையும் அதை வேக வைத்த தண்ணீருடன் சேர்த்து தாளித்த பொருட்களுடன் கலக்கவும். நுரைத்து வரும்வரை மூடி விடவும்.

9. இதுக்கப்புறம் என்ன, சாதம் / சப்பாத்தி / தோசை எதாவது வெச்சு என்சாய் செய்ங்க :)). ரமதான் மாத சஹர் நேரத்திலும் இஃப்தாரிலும் விரைவில் செய்யக்கூடிய சத்தான குறிப்பு இது. ரெம்ப டேஸ்டியும் கூட. :)) இன்ஷா அல்லாஹ் நேரம் கிடைத்தால் இன்னும் சில சிம்பிள் குறிப்புக்களை போட முயல்கிறேன் :))



10. இந்த ஸ்டெப்தான் மிக மிக முக்கியம். மறக்காம இந்த எளிய, இனிய குறிப்பு கொடுத்த எங்கம்மாவுக்காக து’ஆ செய்ங்க :))))))))))))






# ஒரு கப் என்பது, பொதுவாக நாம் தேனீர் அருந்தும் டம்ளர் அளவு. 250 மிலி வரை பிடிக்கும். 


சகோ.ஷர்மீ.... லேபிள்களைப் பார்த்து டென்ஷனாகாதீங்க. ஹி ஹி ஹி.... எவ்ளோஓஓஓஓ பேருக்கு யூஸாகுதோ என்னமோ...... ஹி ஹி  :))


.

10 comments:

உங்கள் கருத்துக்கள்...