இரங்கல் செய்தி

Friday, December 09, 2011 Anisha Yunus 3 Comments



தினமலரை புறக்கணிக்க ஒரு முகபுத்தக பக்கம் ஒன்றை உருவாக்கியுள்ளேன். இன்ஷா அல்லாஹ் அனைவரும் அதை உபயோகித்து நம் எதிர்ப்பை காட்டுவோம். ஜஸாகுமுல்லாஹு க்ஹைர்.

 பக்கம் -- http://on.fb.me/vnmTFP

வஸ்ஸலாம்/


.

3 comments:

உங்கள் கருத்துக்கள்...

நறுமணத்தை தவிர மற்றதெல்லாம் பரப்பும் தமிழ்மணத்திற்கு !!

Tuesday, October 18, 2011 Anisha Yunus 5 Comments


நயனிலன் என்பது சொல்லும் பயனில
பாரித் துரைக்கும் உரை.
 
பதிவுலகில் மகிழ்ச்சியுடன் நினைவு கூறுவதற்காக வைக்கப்படும் ஒரு சக பதிவரின் புனைப்பெயரை, பெயரெச்சமாக்கி , பெயர்ச்சொல்லாக்கி உபயோகித்து, துன்பம் தருமளவிற்கு மனதில் வன்மம் கொண்ட நிர்வாகி!!!

நிர்வாகத்தின் பேரைக் கொண்டு கீழ்த்தரமாக நடந்துகொண்டாலும் அதை மட்டுறுத்தாத, பதிவர்களின் உணர்வை புரிந்து கொள்ளாத‌ , மதிப்பளிக்காத , மன்னிப்பு கேட்காத நிர்வாகம்!!!

ஒரு வரிக்காக, தமிழிலுள்ள அத்தனை வக்கிர வார்த்தைகளையும் வரிக்கு வரி உபயோகிக்கும் ???  சிந்தனை!!!!

இதற்கெல்லாம் மேலாய் ஒரு மார்க்கத்தின் நம்பிக்கையில் கொண்டுபோய்,  தனது 'பலான படங்களை பார்த்த பெருமையை'ப் பீற்றிக்கொள்ளும் கேவலம்!!!

இத்தகைய புகழ்களை எல்லாம் தானே சுமக்க விருப்பப்பட்டு, யாருக்கும் பகிர்ந்தளிக்காமல் சுமந்து கொண்டிருக்கும் தமிழ்மணமே...  "இந்த பொழப்புக்கு ------------------------!!!!" (நேயர் விருப்பம்!!)






 
பதிவு உபயம் : பெயரிலி === அறிவிலி !!!



.

5 comments:

உங்கள் கருத்துக்கள்...

சிம்பிள் தக்காளி சட்னி

Tuesday, September 27, 2011 Anisha Yunus 25 Comments

மக்களே.... பொறுத்துக்குங்க.... இந்த பதிவு ஸ்பெஷலாக என் தம்பிக்காக. பதிய சொன்னது என் அம்மா. அதனால் செய்முறையை விட விதிமுறைகள் அதிகமாக இருக்கும். அட்ஜஸ்ட் ப்ளீஸ்....ஆனா நல்ல ருசியா இருக்கும். நீங்களும் செய்து பாருங்க. ஹி ஹி ஹி


--: தக்காளி சட்னி :--
1. மூன்று நடுத்தர அளவு தக்காளி, 3 அல்லது 4 சின்ன வெங்காயம் (அல்லது ஒரு பெரிய வெங்காயம்), ஒரு நடுத்தர அளவு பச்சை மிளகாய், ஒரு டீ ஸ்பூன் கடுகு, இரண்டு டீஸ்பூன் எண்ணெய், 4 -5 கருவேப்பிலை.

2. முதலில் வெங்காயத்தை உரிக்கவும். உரித்த வெங்காயத்துடன், தக்காளி, பச்சை மிளகாய் போட்டு தண்ணீரில் நன்கு கழுவிக் கொள்ளவும்.

3. பச்சை மிளகாயை மூன்று துண்டாக நறுக்கவும். வெங்காயத்தையும் சின்ன சின்னதாக நறுக்கவும். தக்காளியை சிறு சிறு துண்டாக வெட்டிக் கொள்ளவும்.

4. அடுப்பை ஆன் செய்து, தண்ணீரில்லாமல் துடைத்த கடாயை வைத்து தீயை மீடியம் அளவில் வைக்கவும்.

5. எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகை போட்டு வெடிக்க விடவும். கடுகு வெடிக்கும்போதே கருவேப்பிலையும் சேர்த்துவிடவும். பின்னர் பச்சை மிளகாயை போட்டு பிரட்டி விடவும்..

6. தீயை கம்மியில் வைத்து வெங்காயத்தை போட்டு கிளறி விடவும்.

7. நறுக்கிய தக்காளியை மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ளவும். வெங்காயம் வெந்து கண்ணாடி போல தெரியும்போது அரைத்த தக்காளியை ஊற்றவும். 1/4 கப் தண்ணீரை மிக்ஸி ஜாரில் போட்டு நன்கு அலாசி அதையும் ஊற்றவும்.

8. பின்னர் (1/4 மஞ்சள்பொடி தேவைப்பட்டால் சேர்த்தவும்). கடாயை மூடி போட்டு மூடி விடவும். 5 நிமிடம் சரியாக கம்மி தீயிலேயெ கொதிக்க விடவும். உப்பு கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து சரி பார்க்கவும்.

9. கம கம தக்காளி சட்டினி ரெடி.

10. தோசை அல்லது இட்லியுடன் சாப்பிடவும். சாப்பிட்ட பின் மீதியை மறக்காமல் ஃப்ரிட்ஜில் வைக்கவும்.
ஹை.... மாமா எனக்கு??????

மீதி ஃபோட்டோ எடுக்க நேரமில்லை. ஹி ஹி ஹி..... செய்துட்டு சொல்லுங்க :)

.

25 comments:

உங்கள் கருத்துக்கள்...

இறைவனை அஞ்ச மாட்டீர்களா????

Monday, September 19, 2011 Anisha Yunus 5 Comments

மன்னிக்கவும்...........

இது நாள் வரை நீங்கள் பார்த்திருந்த பதிவுகளுக்கும் இந்த பதிவிற்கும் மிகுந்த வித்தியாசம் உண்டு. இந்த பதிவு மனம் வெந்து வேதனையுடன் நினைவுகூறப்படும் பதிவு. இதை இங்கே எழுதும் அளவிற்கு மனம் வேதனையுற வைத்த அம்-மாக்களுக்கு இந்த பதிவும், அதன் இறுதியில் உள்ள து’ஆவும் சமர்ப்பணம்...!!!!



இந்த புகைப்படத்தை பார்த்ததும், மீண்டும் ஒரு முறை இமாம் அன்வர் அவ்லகியின் வலைப்பூவில் ப்டித்த, அவருக்கு வந்திருந்த ஒரு கடிதம் நினைவுக்கு வந்தது. குஜராத்தில் ஒரு சிறிய கிராமமுமல்லாத நகரமுமல்லாத ஒரு ஊரில் இருந்து ஒரு சகோதரர் எழுதியிருந்தார்.

அவர், அவரின் அக்கா, அம்மா, அப்பா இவர்களே அவரின் குடும்பம். குஜராத் கலவரத்தின் போது, அதில் எந்த வகையிலும் சம்பந்தப்படாத தன் வேலையுண்டு தானுண்டு என ஒரு குமாஸ்தாவாய் வாழ்ந்து வந்த அந்த சகோதரரின் தந்தையை போலீஸ் இழுத்துச் சென்றது. அப்பொழுது இந்த சகோதரரின் வயது 10 கூட இல்லை. அவரின் அக்காவிற்கு 16/17 வயது. முப்பதுகளில் அவர்களின் அம்மா. அம்மாவும், மகனும், மகளும் போலீஸ் ஸ்டேசனின் படியை தினம்தினம் ஏறினார்கள், அப்பாவியான கணவரை விட்டுவிட சொல்லி. ஒரு வாரம் கழித்து போலீஸ் ஒரு நிபந்தனையுடன் அந்த குடும்பத்தின் தலைவனை விட முன் வந்தது. நிபந்தனை என்ன, அந்த இரவில் வரும் 4 அரசியல்வாதிகளுக்கு அம்மாவும், மகளும் அட்ஜஸ்ட் செய்ய வேண்டும். அப்போதுதான் விடுவோம் என்று. பிராமணர்கள் அதிகம் வாழும் பகுதியில் வாழ்ந்ததும், இஸ்லாமியர்களாக இருந்ததும், ஏழைகளாகவும் உதவிக்கு ஆளில்லாதவர்களாகவும் இருந்ததே அவர்கள் செய்த மகா பாவம். கணவன் முக்கியமா, கற்பு முக்கியமா என்று அதிகம் ஆராய்ந்து பார்க்க தெரியவில்லை அந்த தாய்க்கு.... ஊமையாய் ஒத்துக் கொண்டனர். அந்த இரவில் அரசியல்வாதிகளும் குண்டர்களுமாய் நான்கு பேர் வந்தனர். அந்த இரவோடு அது முடியவில்லை. ஒரு மாதம் முழுவதும் அந்த மகனின் முன் தாயும், தமக்கையும் சீரழிக்கப்பட்டனர்.

அக்கம்பக்கம் சுற்றம் வெறுமனே வேடிக்கை பார்த்தது பின் அவல் மெல்ல தொடங்கியது. ஒரு மாதம் கழித்து அந்த தந்தையை குற்ருயிரும் கொலையுயிருமாய் விடுதலை செய்தது போலீஸ் ஸ்டேஷன். தந்தைக்கு எந்த விவரமும் சொல்லப்படாமல், அக்கம்பக்கத்தினரின் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் வாசகங்களை சகிக்க இயலாது வேறு ஊருக்கு சென்று விட்டனர். கடிதம் எழுதிய அந்த சகோதரர், தன் மனதை, தன் தாய், தமக்கையின் மனதை / வாழ்வை எப்படி தேற்றுவது என விம்மியிருந்தார். ஒரு குடும்பமாய் வாழ்ந்தாலும் ஒருவர் முகத்தில் ஒருவர் விழிப்பதற்கே சங்கடப்படுவதும், தினம் தினம் வாழ்க்கையை முடித்து விடாமல் காப்பதுமே பெரிய மனப்போர் என்று குமுறியிருந்தார்.

சுபஹானல்லாஹ். அந்த சகோதரரை எண்ணுகிறேன். இன்னும் எத்தனை பேரின் வாழ்வை இந்த அயோக்கியன் சீரழித்திருப்பான் என்றெண்ணுகிறேன். இன்ஷா அல்லாஹ், அல்லாஹ் மோடியின் இறுதி நிமிடங்களை உலகிற்கு சாட்சியாக்கி வைப்பான். எம் மக்களின் வாழ்வை சூறையாண்டவர்களின் கதி எதுவெனவும், அவனோடு இப்பொழுது கொஞ்சி குலவுகிற இந்த முனாஃபீக்குகளின் நிலை எதுவெனவும் அல்லாஹு த ஆலா நிச்சயம் இவ்வுலனகிருக்கும் காட்டுவான், மறுமையிலும் காட்டுவான். ஆமீன்.... ஆமீன்....அல்லாஹும்ம ஆமீன்.

ஹஸ்புனல்லாஹ் வ நி’அமல் வகீல். (இறைவன் போதுமானவன்)
.



5 comments:

உங்கள் கருத்துக்கள்...

தலைப்பில்லா கவிதை....

Tuesday, September 13, 2011 Anisha Yunus 7 Comments



உனக்கும் எனக்குமான மௌனம் நீண்டு கொண்டே போகிறது,
வளைவுகளிலும் சுழிவுகளிலும் நீண்டு ஓடும் ஆற்றைப்போல...
சப்தத்தை விடவும் கடுமையான இரைச்சலோடு...

உனக்கென எழுதிய கடிதங்களை விடவும்
உறைக்குள் இடப்படாத எண்ணங்களே எங்கெங்கும் தெறித்துள்ளது....
தேடிப் பிடித்து புதைத்து விடப் பார்க்கிறேன்
கண்ணீர் வழியோடி மீண்டும் வெளியாகி விடுகிறது -- சட்டென உதிர்க்கும் வார்த்தைகளைப் போல...

அகண்ட வானமெங்கும் இருளாகவே...
மனவெளியாங்கும் தனியாகவே...
நேரம் போவதே தெரியாமலொரு பயணம்...
எல்லையும் தெரியாமல்....

இறந்தும் இறக்காத நினைவுகளை
தோண்டி தோண்டி பார்க்கிறேன்...
ஈர மண்ணில் ஒட்டிக்கொண்ட
ஒரு கனவைக் கொண்டாவது கோட்டை எழுப்பி விடலாம் என....
ஈரமற்ற பாலையாகவே வறண்டு போயுள்ளன அவையும் - ஜன்னல் வெளி
வெறித்தே இருக்கும் என் பார்வையைப் போல...

கவலையெல்லாம் கவிதையாகுமெனில்
கணத்தில் எழுதி விடுவேன்
வடுக்களின் ஈரம் காகிதத்தை கிழித்து விடுமோ என்றே
அஞ்சுகிறேன்...

இலக்கணமற்ற இக் கவிதைக்கு
தலைப்பையும் தவிர்க்கிறேன்.... என்னை தொட
விரையும் உன் நிழலை தெரிந்தே தவிர்ப்பது போல.....




..................
..........................
.............................
.........................................



7 comments:

உங்கள் கருத்துக்கள்...

தலை வாரிப் பூச்சூடி உன்னை...

Tuesday, September 06, 2011 Anisha Yunus 8 Comments


ஒற்றை சைக்கிள் அது. அதில் ஆஜானுபாகுவாய் எங்கள் தலைமையாசிரியர் திரு ஜெகன்னாதன் அவர்கள் ஏறி அமர்ந்து உடுமலை - பாரதியார் பெண்கள் மேனிலைப்பள்ளியிலிருந்து வீட்டிற்கோ, வீட்டிலிருந்து பள்ளிக்கோ போகையில் என் முகம் மட்டும் மலரும், அண்டை அயலாரின், ஏன், என்னுடைய உறவினர்களின் கிண்டல்களையும் எதிர்த்து சண்டை போடுவேன்.... ஏனெனில் என் தலைமையாசிரியர் அவர். அவரின் கம்பீரத்திற்கும், மேதைமைக்கும், கணீரென பள்ளி விழாக்களில் அவரின் பேச்சிற்கும், பாட்டிற்கும், ஆளுமைக்கும், இன்று வரையிலும் மாணவி மட்டுமல்ல, விசிறியும் கூட.


தலை வாரிப் பூச்சூடி உன்னை...
பாடசாலைக்கு போ என்று சொன்னாள் உன் அன்னை.. (2)
சிலை போல ஏன் அங்கு நின்றாய்?????????/
நீயும் சிந்தாத கண்ணீரை ஏன் சிந்துகின்றாய்... (2)
மலைவாழை அல்லவோ கல்வி-மலை வாழை
அல்லவோ பெண் கல்வி.. நீயும் வாயார உண்ணுவாய் போ என் புதல்வி.... தலை வாரிப் பூச்சூடி உன்னை....   

(பாடலாசிரியர்: பாரதிதாசன்)
  
இன்று வரையிலும், இதற்கு மேலும் என்னை கற்கவும், கற்றுக் கொடுக்கவும், பயிலும்போது சோர்ந்திடாமலும் காப்பது என் தலைமையாசிரியரின் இந்த பாடலே (எழுதியது அவரல்ல.... எனினும்,அவர் குரலில் மட்டுமே இதை கேட்டுள்ளேன் நான்) 

என்னை உற்சாகமூட்டிய ஒரு குரல், ஒரு இதயம், ஒரு சுடர் விடும் தீபம்...

சார்.. திரு. D. ஜெகன்னாதன் சார்...எங்கிருந்தாலும் தங்களையும், தங்கள் குடும்பத்தையும் இறைவன் காத்தருள்வானாக. நேர் வழியில் வைப்பானாக.  ஆசிரியர் தின வாழ்த்துக்கள் சார்.

இன்னும் என் நினைவில தங்காமல் போன அத்தனை டீச்சர்களுக்கும், என்றும் நினைவை விட்டு அழியாத எல்லா வகுப்பு + டிப்ளமா + காலேஜ் கணித வாத்தியாரம்மாக்களுக்கும், என் கல்வி ஞானத்திற்கு ஒரு துளி வியர்வையாவது சிந்திய அத்தனை பேருக்கும், இதற்கெல்லாம் முன்னோடியாய் எனக்கு ஞானத்தையும் உணவுடன் சேர்ந்தூட்டிய என் ‘அம்மீ’க்கும், பொருளாலும், மதியாலும், தன் வியர்வையாலும் என்னை எந்த நிலையிலும் சோர்ந்து போகாமல் கற்க வைத்த என் ‘அப்பா’ விற்கும், ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்.


.

8 comments:

உங்கள் கருத்துக்கள்...

வலை டீவியில் அன்னுவின் பேட்டி....

Wednesday, July 27, 2011 Anisha Yunus 14 Comments

(இது சுய விளம்பரமில்லை. இந்த நிகழ்ச்சியை வலையுலகினருக்கு அளிப்பது, அன்னு அண்டு கம்பெனி.... ஹி ஹி)


நிருபர்: ஹெலோ மேம்.
அன்னு: யெஸ்ஸ்ஸ்ஸ்ஸ்............... ப்ரொசீட்...

நிருபர்: எப்ப வலைல திரும்ப எழுதப்போறீங்க??
அன்னு: அவ்ளோ பேர் எனக்காக வெயிட்டீஸா?? யூ நோ... நான் இப்ப கூட எழுதலாம்... ஆனா இப்பதான் வேலைல சேர்ந்தேனா... அதுல கம்பெனி மெயிலுக்கு பதில் சொல்லவே நேரம் சரியா போகுது... சோ அதெல்லாம் முடிச்சிட்டு, அடுத்த வாரம் முதல் ரம்ஜானும் வருதே... அதையும் முடிச்சிட்டு எழுதறேன்... அது வரை வெயிட் பண்ணுங்க நேயர்களே...

நிருபர்: அதை நாங்க சொல்லிக்குவோம்... தொடரெல்லாம் எப்ப முடியும்??
அன்னு: இல்லை, தொடரை முடிக்காம இருந்தாத்தான் ‘கெத்’துன்னு...

நிருபர்: என்னது .. ??????
அன்னு:... இல்லை... நினைச்சேன்னு சொல்ல வந்தேன்...

நிருபர்: அடுத்த ரம்ஜான் வரை பதிவே எழுதலைன்னாலும் பதிவுலகம் சந்தோஷமா...ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கும்... அதை நாங்க மக்களுக்கு சொல்லத்தான் இந்த பேட்டி...
அன்னு: GRRRRRrrrrrrrrrrrrrrrrrrrr...........................






===========================================================================
சகோதர சகோதரிகள் அனைவருக்கும், நெருங்கிக் கொண்டிருக்கும், இனிய ரமதான் மாத நல்வாழ்த்துக்கள். :)
ரமதான் மாதம் முழுதும்--இங்கே பயன் பெறவும்...இன்ஷா அல்லாஹ்

.

.

14 comments:

உங்கள் கருத்துக்கள்...

ரமணிச்சந்திரன் கதைகள் - என் பார்வையில்

Thursday, June 30, 2011 Anisha Yunus 10 Comments

முன் குறிப்பு - முதலில் ‘மயங்குகிறாள் ஒரு மாது’ கதையை மட்டுமாவது படித்து விட்டு வாருங்கள்.


இனி...

போன பதிவில் சொன்னது போல தினம் ஒரு கதை என்று படிக்க ஆரம்பித்ததே இரண்டு வாரம் முன்தான். ரமணிச்சந்திரனின் ஓரிரு கதைகள் மட்டுமே நான் ஊரிலிருந்த பொழுது படித்துள்ளேன் என்பதால் நெட்டில் தேடி கதையை படித்தேன். முதலில் 3,4 கதைகளில் ஏதும் பெரிய தாக்கம் இல்லை. எப்பொழுதும் போல, நம் சினிமாக்களில் வரும் காதல் கதைகள், தளம் மட்டும் மாறி மாறி வரும். ஆனால் படித்த கதைகளில் முக்கால்வாசி கதையில் ஹீரோவாக வரும் ஆண் கண்டிப்பாக பெண்ணாசை பிடித்த சேடிஸ்ட்டாகவேதான் உள்ளான். ஏன்? இதை எதிர்த்து ஆண்கள் யாரும் பதிவு எழுதினார்களா தெரியவில்லை. அமெரிக்கா, ஆஸ்திரேலியா என்று தேடி தேடி படித்தவனாக இருப்பான், அல்லது அப்படிப்பட்ட தேசத்திற்கெல்லாம் வாரம் ஒரு முறை வர்த்தக விஷயமாய் பயணம் செய்பவனாக இருப்பான். இதிலெல்லாம் தப்பே இல்லை. தப்பு எங்கே என்றால், மது, மாது என்பது கழற்றி மாட்டும் சட்டையைப் போல மாற்றுபவனாக இருப்பதுதான். ஆனால் இப்படிப்பட்ட ஹீரோக்களும் ஹீரோயினிடம் தவறாமல் கேட்கும் முதல் கேள்வி, “நீ என்னை மயக்கி, வலையில் வீழ்த்தி என் சொத்தை அபகரிக்கத்தானே வந்தாய்??” என்ன ஒரு Mentality? எனக்கு புரியவில்லை. அதெப்படி அவனாக தேடி போகும்போது அந்த பணத்தை அப்படி வீண் விரயம் செய்வதிலோ, தாராளமாக, தாராளம் காட்டும் பெண்களுக்கு வழங்குவதிலோ நொடியும் தவறாக எண்ணாதவன், ஏழைப்பெண் மட்டும் தன் சொத்தை வலையில் போட்டுக்கொள்வாள் என ஏன் எண்ணுவான்?

இது மட்டுமல்ல. முன்னுரை எழுதியிருக்கும் விதத்தை பார்த்தால் நல்ல கருத்து சொல்லக்கூடிய கதை என்றுதான் தோன்றும். ஆனால் படிக்க படிக்க, என்ன மெசேஜ் இது என்றுதான் தோன்றும். உதாரணத்திற்கு, தன் படுக்கைக்கு வர தினம் தினம் சம்மதம் கேட்கும் ஒரு பாஸ், அவனிடத்தில் கைத்தறியை மட்டுமே உடுத்தி தன் உணர்வுகளை அடக்கியாளும் பெண். சொத்து விஷயத்தில் ஒருவனை பழி வாங்கி அவனின் வருங்கால மனைவியையே படுக்கைக்கு அழைக்கும் ஆண், அதனை வருங்கால கணவனுக்காக செய்யும் தியாகமென நினைக்கும் பெண், அப்படி என்ன தியாகம்? என்ன மெசேஜ் இது?? எல்லாவற்றிற்கும் மேலாக ‘மயங்கினாள் ஒரு மாது’ என்னும் கதையில் சித்தரிக்கப்படும் கதை. ஒரு அளவே இல்லாமல் அந்தப்பெண்ணை பாலியல் கொடுமை செய்யும் வழிமுறைகள் விளக்கப்பட்டுள்ளன. எதற்காக? தன்னை தொட்ட ஒரு அன்னியனை அவள் அறைந்துவிட்டாள் என்பதற்காக மட்டும்...!!!!!!!!! அத்தனை கொடுமையை அனுபவித்த அந்த பெண்ணும், காந்தீய வழி முறையை பின்பற்றி அவனை மன்னித்து, மணமும் புரிகிறாளாம். அருவருப்பின் உச்சகட்டம் எனலாம்.

கதையில் வரும் பெண்களெல்லாம் அழகாய், குணத்தில் சிகரமாய் இருப்பதென்னவோ சரிதான், ஆனால் சரியான நேரத்தில் சரியான முடிவெடுக்க முடியாமல் திணறும் கூட்டமாக அல்லவா இருக்கிறார்கள். பொறுமை, அமைதி என்ற பேரில் அத்தனை பாலியல் தொந்தரவுகளையும், அத்து மீறல்களையும் அனுமதிப்பவர் போலல்லவா இருக்கிறார்கள்???

என்ன தேவை? அப்படி ஒரு பெண் ஏன் வாழ வேண்டும்? கதையில் வரும் பெண்ணை விடுங்கள். இந்த மாதிரி கதைகளை படிக்கும் பெண்களை எடுத்துக் கொள்வோம், வாலிப வயதில், கற்பனைகளும், கனவுகளும் சிறகடித்துப் பறக்கும் மனநிலையில் உள்ள டீனேஜ் பெண்களே இந்த மாதிரி கதைகளை விரும்பி படிப்பர். அல்லது வீட்டில் சமைக்கும், வீட்டை கவனிக்கும் நேரம் போக மீதியுள்ள நேரத்தில் ரிலாக்ஸாக விரும்பும் மனைவிகள். இதில் இந்தளவு impractical story line தருவதில் என்ன சீர்திருத்தத்தை கொண்டு வர முடியும்? முன்னுரையில் குறிப்பிடப்படுவது போல என்ன பாங்கான வாழ்க்கை சொல்லித்தர முடியும்? ஒரு பேச்சுக்கு, உண்மையிலேயே ஒரு பெண்ணிடம் பாலியல் தொந்தரவுகளையோ, அல்லது அப்படிப்பட்ட hintsஐயோ தரும் ஒரு பணியாளரை இதையெல்லாம் படிக்கும் பெண் என்ன நினைக்க முடியும்? அய்யோ... இவரும் சிறு வயதில் தாய் தந்தை அன்பை இழந்திருப்பாரோ, அதனால் இப்படி நடந்து கொள்கிறாரோ?? அந்த கதையில் வரும் நாயகனைப் போல கடைசியில் திருந்தி மணம் செய்து கொள்வாரோ என தப்பான முடிவெடுக்க துணிந்து விட்டால்???இதைப் போன்றே மற்ற சமயங்களிலும் அத்து மீறும் ஆண்களை அடையாளப்படுத்தி விலக தெரியாமல் போனால்???

இது தேவையற்ற பயம், அப்படி யாரும் கதைகளைப் பார்த்து முடிவு செய்வதில்லை என மல்லுக்கட்ட முடியாது. எவ்வளவு செய்திகளை தினம் பார்க்கிறோம், சினிமாவுக்காக ரயில் ஏறிய சிறுமிகள் வாழ்வை தொலைப்பதும், திருமணமாகாமலே மனைவியாய் சொகுசாய் வாழ ஆசைப்பட்டு, கடைசியில் பத்திரிக்கைகளுக்கு தீனியாகிப்போவதும்... தினம் தினம் நாம் பார்ப்பதுதானே?

இவ்வளவு பெரிய வாசகர் வட்டம் வைத்திருக்கும் கதாசிரியர், இன்றைய சூழ்நிலைகளை அறிந்து அதிலுள்ள களைகளை அகற்றிட முயலக்கூடாதா??? கணவன் மனைவிக்குள் இருக்கும் (சட்ட ரீதியாக, மத ரீதியாக, சமூக ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட) உறவில் விழும் விரிசல்களை எப்படி நீக்குவது என்று எழுதலாமே?? கள்ளத்தொடர்புக்கு வழி வகுக்கும் பாதைகளை ஆராய்ந்து அதிலிருந்து மீள்வது போலவோ காப்பாற்றப்படுவது போலவோ எழுதலாமே?? தனிக்குடும்பத்தால் வரும் பிரச்சினைகளை அலசி, கூட்டுக் குடும்பங்களுக்கோ அல்லது வயதான தாய், தந்தை / மாமனார் மாமியார் போன்றவர்களை adjust செய்து வாழ்வதே எவ்வளவு பிரச்சினைகளிலிருந்து மீள வைக்கும் என்பதை எழுதலாமே?? 

நான் ஒருத்திதான் இப்படி யோசிக்கிறேனோ என்று பார்த்தால்  இன்னொரு வலைப்பதிவிலும் இந்த சிந்தனை எதிரொலிக்கிறது. இன்னும் எத்தனை பேர் மௌனமாக இதை சகிக்கிறோம் என்று புரியவில்லை. ஒரு சில கதைகள் நன்றாகவே உள்ளன. இல்லை என்றில்லை, ஆனால் 90% கதை இப்படி போவதுதான் வருத்தமாக உள்ளது. பாலியல் தொந்தர்வுகளும், அராஜகங்களும் அதிகரித்துள்ள தற்போதைய வாழ்க்கைச்சூழலில் அதை சட்டென எதிர்க்கும், துணிந்து நிற்கும் பெண்களல்லவோ ஹீரோயினாக வேண்டும்?? என்ன சொல்ல... நம் சகிப்புத்தன்மையை மெச்ச ஆளில்லை போங்கள்......!!!!

10 comments:

உங்கள் கருத்துக்கள்...

ரயில் பெட்டி -1

Friday, June 24, 2011 Anisha Yunus 17 Comments

#டவுட்டு

கலவை பதிவுக்கு ‘டிரங்குப் பெட்டி’ன்னெல்லாம் பேரு வெக்கிறப்ப, நாம ரயில் பெட்டின்னு பேர் வெச்சுக்கலாமேன்னு தோணிச்சு. கரெக்ட்தானே??? ஹெ ஹெ ஹே...


---------------------------- ~~ ---------------------------- 

 #ஹைக்கூ
அன்று
யார் வைத்த முற்றுப் புள்ளியோ 
இன்று
இவள் நெற்றியில்
பொட்டில்லை...
மலரும் நினைவுகள். 1997ல தினத்தந்தியின் ஞாயிறு மலரில் என்னுடைய இந்த கவிதைக்கு 10 ரூபாய் பரிசா அனுப்பினாங்க. (ஆனா அதுக்கு 300 ரூபாய் பார்ட்டிக்கு அழுதது வேற விஷயம்...!!)

---------------------------- ~~ ----------------------------

 #டைம் பாஸ்
இவ்வளவு நாளும் பொறுப்பா கழியணுமேன்னு தினம் ஒரு கதை ரமணிச்சந்திரனுடையது படித்தேன். அந்த கதைகளில் வருவது போல் இந்த காலத்திலும் இளவயதில் லட்ச லட்சமாய் சம்பாதிக்ககூடிய சக்தி, பெரிய பெரிய நிறுவனங்களை ஆளக்கூடிய சக்தி, எல்லா அழகிய கதாநாயகிகளுக்கும் தகுதிக்கேற்ற வேலை தரக்கூடிய சக்தி, பின் அவர்களின் வாழ்வில் மெர்க்குரி லேம்ப் ஏற்றும் சக்தியும் அரசியல்வியாதிகளின் (ஹீரோ)செல்வங்களுக்கு மட்டுமே என்பது என் தாழ்மையான கருத்து. என்ன நான் சொல்றது?

---------------------------- ~~ ----------------------------
  
#விதி
 அலபாமா, டெனெஸ்ஸீ, கெண்டக்கி மாநிலங்களைக் கடந்து நெப்ரஸ்கா மாநிலத்திலும் வெள்ளம் எல்லை தாண்டி பாய்ந்தது பல ஊர்களில். ஒமஹாவிலும்தான். ஆனால் அதிகமான பாதிப்பு இல்லாமல் இருந்தது மட்டுமே ஆறுதல். கடலருகில் இருக்கும் மாநிலம்தான் பாதுகாப்பற்றது என இனி கூற முடியாதே? உள் தங்கியிருக்கும் இந்த மாநிலங்களின் கதியைப் பார்த்தால் யாருக்குமே இனி எங்கே வசிப்பது என்றுதான் தோன்றும். 

---------------------------- ~~ ---------------------------- 

#என்ன கொடுமை இது?
சட்டீஸ்கர் மாநிலத்தில் ஜிண்டால் குழுமம், நிலக்கரியை பயன்படுத்தி மின்னாலை வைப்பதை எதிர்த்து நின்ற இரு சாமானியர்களை பொய் காரணங்களை காட்டி கைது செய்து வைத்து பாரபட்சமில்லாமல் துவைத்து எடுத்திருக்கிறார்கள். அதில் ஒருவர் டாக்டர். அவரை ஹாஸ்பிடல் கட்டிலிலேயே சங்கிலியால் பின்னியிருக்கிறார்கள். ஆமைகளை நாசமாக்கிடும் தம்ரா(ஒரிஸ்ஸா) துறைமுகத்திற்கு எதிராய் டாடா குழுமத்தை எதிர்த்தபோதும் இதே நிலை. நம்மூரு போலீஸெல்லாம் CIAக்கு அண்ணன்மார் போலவே??

---------------------------- ~~ ---------------------------- 

#ஆ...
உப்பு சத்தியாக்கிரக போராட்டத்தில் (அட அப்படித்தானே தாத்தா நினச்சுகிட்டிருக்காரு???) சிறை சென்ற தன் மகள் மனிதத்தன்மையற்ற இடத்தில் அடைக்கப்பட்டிருப்பதாகவும் அதனால் உடலில் கொப்புளங்கள் ஏற்பட்டு வாடுவதாகவும் கண்ணீர் உதிர்க்கும் தலைவருக்கு..!!

---------------------------- ~~ ---------------------------- 

#ஆஹா...
பத்து வயதே ஆனாலும் தெளிவாக சிந்தித்து, இறைவனின் மீதான நம்பிக்கை மட்டுமே காக்கும் என்றறிந்து தன்னைத் தானே காமாந்தகனிடமிருந்து காத்துக் கொண்ட அந்த சின்னஞ்சிறு மொட்டிற்கு.

---------------------------- ~~ ---------------------------- 



#ஆனந்தக் கண்ணீர்???
(ஊடல் நிமித்தம் ஒரு சின்ன மௌன யுத்தத்திற்கு பின், இரண்டு நாள் கழித்து மாலை ஆஃபீஸ் முடிந்து வந்தவர் சொன்னது)
ஒரியா: என்ன இது, பொருளெல்லாம் இரைஞ்சு கிடக்கு. மௌன யுத்தம் நடந்தப்ப கூட வீடு நீட்டா இருந்ததே??
நான்: (கண்ணை கசக்கிக் கொண்டே) நீங்க வேற, அந்த அழகான நாட்களை ஏன் நியாபகப்படுத்தறீங்க..!!
ஒரியா. GRRRRRRRRRRrrrrrrrrrrrrrrr....

---------------------------- ~~ ----------------------------


ஓக்கே... தொடராமல் பெண்டிங்கில் இருக்கும் தொடர்களோடு மீண்டும் சந்திப்போம் இன்ஷா அல்லாஹ் :))


.

17 comments:

உங்கள் கருத்துக்கள்...

மூளையை பயிற்றுவிக்கும் விளையாட்டுக்கள் -1

Wednesday, May 04, 2011 Anisha Yunus 14 Comments


உங்களுக்கு மூளை இருக்கா??

ஹ ஹ ஹா... என்னடா திடுதிப்புன்னு இப்படி ஒரு கேள்வியான்னு யோசிக்க வேண்டாம். நமக்கு இல்லாததை எப்படி ஒமஹா வரைக்கும் தெரிஞ்சு போச்சுன்னும் நினைக்க வேண்டாம். ஹெ ஹெ ஹே... பாம்பின் கால் பாம்பறியும் :))
சரி, விஷயத்துக்கு வருவோம். நம்மில் நிறைய பேர் பல்லாங்குழில பிச்சு உதறுவோம் (பழங்காலமா தோணுதோ??) சரி, செஸ் விளையாண்டாலும் சூரரா இருப்போம், கேரம்போர்டு, அந்தாக்‌ஷரி (அப்படின்னா தமிழ்ல என்ன??) இதுல எல்லாம் புலியாக / சிங்கமாக இருப்போம். ஒரு வகைல இதெல்லாம் மூளை சம்பந்தப்பட்ட விளையாட்டுக்கள். கணக்கு செஞ்சு விளையாட தெரியலைன்னா என்னை மாதிரி இது போங்காட்டம் அப்படின்னு போர்டைஅப்படியே கவுத்திட்டு ஓடறதிலயும் சூரரா இருக்கணும். இதெல்லாம் எதுக்குன்னு கேட்டீங்கன்னா, இப்பல்லாம் நாம் யாரும் இந்த வகை விளையாட்டுக்கள்ல ஈடுபடறதில்லை. எனக்கு தூரத்து சித்தப்பா ஒருத்தர் இருக்கார். ஆட்டோ ஓட்டியும், ரியல் எஸ்டேட்டிலும் வாழ்க்கையை நகர்த்திக் கொண்டு, ஆனால் அவருடன் பல்லாங்குழியும் செஸ்ஸும் விளையாண்டு ஜெயிக்கவே முடியாது. ஒவ்வொரு தடவை அவரைப் பாக்கறப்ப, அடுத்த தடவை கண்டிப்பா தோக்கடிக்கணும்ன்னே தோணும். ஆனால் அதெல்லாம் சின்ன பிள்ளைங்க விளையாட்டுன்னு அப்புறமா நானே பெரிய மனசு செஞ்சு விட்டுட்டேன். ஹெ ஹெ ஹெ... சமாளிப்ஸ்..!!

இப்பல்லாம் வீரர்களை அடுக்கி வெக்கிறதும், அடுத்தவன் வயலுக்கு தண்ணீர் பாய்ச்சிவிட்டுட்டு வர்றதும், வெனீஸ் நகரின் தண்ணீர் வழியும் வீதிகளில் படகில் போய் சண்டை போடறதும், பூட்டி வெச்ச ரூமிலிருந்து தப்பிக்கிறதுமா நம் விளையாட்டுக்கள் மூளையை பதம் பார்க்கிறதை விட்டுட்டு வேற எல்லாம் செய்யுது. ஆஹா... மூளை வெளில வர்றதுக்குள்ள என்ன மேட்டர்ன்னு சொல்லுன்னு நீங்க சொல்றது சத்தியமா என் காதுல விழலையே... ஹெ ஹெ

மூளை விளையாட்டுக்கள் குறைஞ்சு இந்த மாதிரி, ரேஸிங், ரெஸ்ட்லிங், ஷூட்டிங்னு, மனிதனிடம் ஒளிந்திருக்கிற மிருக குணத்தை மட்டும் உசுப்பி விடற விளையாட்டுக்களைத்தான் விளையாடுகிறோம், பார்க்கிறோம். ஆனால் ஆன்லைன்ல ஒரு தளம் இந்த மாதிரி மூளைக்கு பயிற்சி தரும் விளையாட்டுக்களை தருதுன்னு சொன்னா?? சந்தோஷமா இருக்கா?? இருங்க, முதல்ல என்ன பயனெல்லாம் இருக்குன்னு பார்க்கலாம்.

நம்ம நினைவுத்திறன் / ஞாபகசக்தில ’சேமிக்கும் இடம்’னு ஒன்னும், ‘உழைக்கும் இடம்’ன்னும் ரெண்டு விதமான பிரிவுகள் உண்டு. இதுல நாம் எதை சேமிக்கிறோமோ இல்லையோ, சேமித்ததை மறுபடியும் தேடி எடுக்கும் வழியை சேமிக்க மறந்துர்றோம். உதாரணத்துக்கு, நம்ம குழந்தைகளுக்கு ‘அ’ , ‘ஆ’ எழுத பழக்கும்போதும், சைக்கிள் கத்து தர்றப்பவும் நம் பால்யத்தில் இதெல்லாம் கத்துகிட்டதும், ஸ்லேட்டில் எழுதறதை விட்டுட்டு ஸ்லேட்டு குச்சியை சாப்பிட்டதும் கண்டிப்பா ஒரு நொடியாவது நம் கண் முன் வந்து போகும். ஆனால், முந்தா நாள் என்ன சாப்பிட்டோம்னு டைனிங் டேபிள்ல உக்கார்ந்து பிளேடை வச்சி யோசிச்சாலும் வருவதில்லை. அந்த ஆஃபீசருக்கு மெயில் அனுப்பினமா இல்லையா? கேஸுக்கு முதல்லயே ஃபோன் செஞ்சுட்டமா? எப்ப? இந்த மாதிரி கேள்விகள் நம்ம முன்னாடி இப்ப அடிக்கடி எட்டிப் பார்க்குது. காரணம்? ‘உழைக்கும் இடம்’னு இருக்கற மூளையையும் ‘ சேமிக்கும் இடம்’ இருக்கிற இடத்திற்கும் நாம் தர வேண்டிய லண்டன் பிரிட்ஜெல்லாம் நூலாம்படை அளவில் இருப்பதால்தான். ஆனால் இந்த ‘உழைக்கும் இடத்தை’ இன்னும் சார்ஜ் செஞ்சா நம்ம சுறுசுறுப்பு, மனதை நிலைப்படுத்தறது, சேமிக்கிற இடத்தில் இருந்து சும்மா தூசி தட்டி எடுக்கற மாதிரி, அட, முந்தா நேத்திக்கு வச்ச பொங்கலுக்கு இன்னிக்கு செஞ்ச கத்திரிக்காய் கொத்சுதான் சரி பொருத்தம். இனிமே இப்படியே செய்யின்னு சொல்லி, தங்கமணிகளை வாய் பிளக்க வைக்கலாம்(யாருங்க அது, காம்பினேஷனை பார்த்து ஜொள்ளு விடறது??)

எந்த ஒரு பொருளும் அதோட வாழ்க்கை நல்லா இருக்கணுன்னா அதற்கு தகுந்த மாதிரி பார்த்துக்கணும். நம்ம உடம்பை எப்படி ஜிம்முக்கு போயி அல்லது வாக்கிங் போயி பார்த்துக்குறோமோ, அதே போல மூளையையும் பயிற்சி கொடுத்து நல்லபடியா கவனிச்சுகிட்டா எக்ஸாம்ல நல்ல ஸ்கோர் எடுப்பதில் இருந்து, அடுத்த அப்ப்ரைஸல்ல நம்ம பேரை நாம் சொல்லாமலே மத்தவங்க சொல்ற மாதிரி கொண்டு வரலாம். அந்த நினைப்பே இப்பதான் எல்லா தரப்பு மக்களுக்கும் வர ஆரம்பிச்சிருக்கு. அப்படி ‘ஸ்டேஃப்ஃபோர்டு’ பல்கலைக்கழகத்துல மூளை சம்பந்தமான அறிவியல் மாணவராய் இருந்த மைக்கேல் ஸ்கேன்லனுக்கும் தோணியது. விளைவு, கொஞ்ச நாளைக்கு நான் அப்பீட்டுன்னு சொல்லிட்டு, குணால் சர்க்கார், டேவிட் ட்ரெஸ்ஷெர் இவர்களுடன் சேர்ந்து வலை மூலமாக மூளையை வளர்க்கும் பயிற்சிகள் தரலாமான்னு யோசிச்சப்ப வந்த ஐடியாதான் லுமோசிட்டி. 2007ல ஆரம்பிக்கப்பட்டு இன்றைய தேதியில் மூன்று மில்லியனையும் தாண்டி ஸ்டாக்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. அறுபதுக்கும் மேலான ஆராய்ச்சிகள் மூளையை பயிற்றுவித்தால் என்னவெல்லாம் முன்னேற்றம் காணலாம்னு இன்னொரு தளத்துல இருக்கு. லுமோசிட்டியின் விளையாட்டுக்களினால் அவர்களுக்கு பணம் மட்டும் இல்லாமல், மக்களின் தகவல்களும் கிடைக்குது, எந்த வயசுல எபப்டி சிந்திக்கிறாங்க, என்ன மாதிரி விடை தேடறாங்க, எப்படி இதுல முன்னேற்றம் தர முடியும்னு அவங்களுக்கு தீனியும் நாம் தான் போடறோம்.

பயன்கள்:
  • செய்யும் வேலையில் ஒழுங்கு, மனமொத்த நிலை, முன்னேற்றம்.
  • கலைத்திறனை அதிகப்படுத்தும் (ஓவியமும் ஆடல் பாடலும் மட்டுமல்ல. UML, Flow chart விஷயங்களும் அடங்கும்!!)
  • ஞாபக சக்தியை அதிகரிக்கும்
  • மூளையின் நியூட்ரான்களை வளர்க்கும் (இந்த வீரர்கள்தான் நம்மையும், நம் நினைவையும் காப்பாற்றி வைப்பது)
  • சுறுசுறுப்பாக, துரிதமாக முடிவெடுக்க வைக்கும்.
  • எந்த பிரச்சனையையும் சமாளிக்கும் திறனை அதிகப்படுத்தும்.
  • எச்சரிக்கை உணர்வையும், முனைப்புடனும் செயல்பட வைக்கும்.
  • ஃபோன் நம்பர், பெயர், சுவை போன்ற விஷயங்களை அதிகமாக நினைவில் வைக்க உதவும், அதை மீண்டும் நினைவுக்கு கொண்டு வரவும் உதவும்.
  • உங்களின் வயதோ, பாலோ, மற்ற சம்பிரதாயங்களோ உங்கள் மூளையை பயிற்றுவிப்பதில் இருந்து உங்களை தடை செய்யாது.
  • தினம் அரை மணி நேரம் விளையாடுவது பொழுதன்றைக்கும் உற்சாகமாக, புன்னகை முகமாக இருக்க வைக்கும். (அனுபவ பூர்வமான உண்மை!!)

போதுமா பில்டப்பு??? ஏற்கனவே எழுதிய பல தொடர் கட்டுரை போலவே இதுவும் தொடர்தான். ஏன்னா ஏகப்பட்ட விஷயம் இருக்கு. இந்த கட்டுரை வாசிக்கவெல்லாம் எனக்கு நேரமில்லை, நேரடியா தளத்தை காட்டுங்க, நானே போயி பார்த்துக்கறேன்னு சொல்றவங்க இங்கே சொடுக்கி, மூளையை முடுக்கி விடுங்கள். இன்னும் தெரிஞ்சுகிட்டு ஸ்டெப் எடுக்கறோம்னு சொல்றவங்க, வெயிட்டீஸ்.....!!


.

14 comments:

உங்கள் கருத்துக்கள்...

ஒரு கொலைகாரனின் பேட்டி - 4 (இறுதி) (உண்மைச் சம்பவம்)

Monday, April 18, 2011 Anisha Yunus 21 Comments

இந்த பேட்டியை அப்துல்லாஹ் அவர்களின் குரலிலேயே (ஹிந்தியில்) கேட்க:
முன் பகுதிகளைப் படிக்க:
===================================================

"... அந்த நாளிலிருந்து என் அண்ணன் நோய்வாய்ப் பட்டார். மனதின் நோய் உடலைத் தாக்கியது. என் அண்ணனின் நிலை கண்டும் ஹீறாவின் இறுதியை எண்ணியும் நான் உடைந்து போனேன். ஹீராவின் மரணம் என் அண்ணனை முழுதும் மாற்றியது. சில நாட்களிலேயே படுத்த படுக்கை ஆனார். மரணத்திற்கு இரு நாட்கள் முன்னர் என்னை அழைத்து, "இது வரை செய்த எந்தப் பாவத்தையும் திருப்ப முடியாது. ஆனால் என் மரணம் ஹீராவின் மார்க்கத்தில் அமைய வேண்டும். எனக்கு முஸ்லிமாக மரணிக்க மண் கொடுத்து விடு என்றார். அண்ணனின் உடல்நிலை கண்டு ஒடுங்கிப் போயிருந்த நானும், எனக்கு மிக கஷ்டமான பணியாயினும் அவரின் இறுதி முடிவை மாற்ற விரும்பாமல் சரி என்று சொல்லி யாரும் அறியா வண்ணம் எங்கள் ஊரின் மசூதி இமாமை அழைத்து வந்தேன். அவர் அண்ணனுக்கு கலிமா சொல்லக் சொல்லி 'அப்துர் ரஹ்மான்' என்று பெயர் வைத்தார். அண்ணன் முஸ்லிம் மார்க்கத்தின் படியே இறப்பேன் என்றதும் எனக்கு சுமை அதிகமாயிற்று. என்ன செய்வது என்றெண்ணி அவரை தில்லிக்கு இட்டு சென்றேன். அங்கே உள்ள ஹாஸ்பிட்டலில் அவரை சேர்த்தேன்.

இரண்டாவது நாள் அவர் இறந்து விட்டார். என் அண்ணன் மிக நிறைந்த மனதுடன் இறந்தார். அங்குள்ள 'ஹம்தர்த் தவாகஹானா'வில் இருந்த ஒரு டாக்டரிடம் சொல்லி அண்ணனை, சங்கம் விஹாரில் இருந்த சில முஸ்லிம் சகோதரர்களோடு சேர்ந்து இஸ்லாமியர்களின் கல்லறையில் புதைத்து விட்டு வந்தேன். "

"...நீங்கள் இஸ்லாத்திற்கு வந்தது எப்படி என்று இன்னும் சொல்லவில்லையே?"

"...ஆம்....ஆம்.... சொல்கிறேன்..."

"...இந்த சம்பவங்களால் இஸ்லாம் மீதிருந்த கோபம் எனக்குள் குறைந்திருந்தாலும் என் அண்ணன் முஸ்லிமாய் இறந்தது என்னை அதிக வருத்ததுக்குள்ளாக்கியது. என் அண்ணியும் முஸ்லிமாகத்தான் இறந்திருப்பார்கள் என்று என் மனதில் பட்டது. இதனால் யாரோ ஒரு முஸ்லிம்தான் எங்கள் குடும்பத்திற்கு செய்வினை செய்துவிட்டார்கள் என்று
நம்பினேன். அதனால்தான் எங்கள் குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரும் இஸ்லாத்திற்கு வந்து பின் இறந்து விடுகிறார்கள் போல என்றெண்ணி ஒரு தாந்த்ரிக்கை பார்த்து பரிகாரம் எதுவும் செய்ய வேண்டும் என நினைத்துக் கொண்டு ஊர் வந்து சேர்ந்தேன்.

தாந்த்ரிக்கை பார்ப்பதற்காக ஒரு நாள் 'ஓன்' என்னும் ஊருக்கு செல்ல முடிவெடுத்து பஸ்ஸில் அமர்ந்தேன். அந்த பஸ் டிரைவர் ஒரு முஸ்லிம். அவர் பஸ்ஸில் கவ்வாலி பாடல் ஒன்றை போட்டார். அந்தப் பாடலில் முஹம்மது நபியின் வாழ்வில் நடந்த ஒரு சம்பவத்தை கவ்வாலியாக பாடியிருந்தார்கள். அதில் ஒரு மூதாட்டி என்னதான் முஹம்மது நபியவர்களை இழித்தாலும் அவருடைய நற்செயல்களைப் பார்த்து அவரும் இஸ்லாத்திற்கு வந்துவிடுவார். அந்த பாடலைக் கேட்ட பின் என் மனதில் இந்த கதையில் வரும் நபிதான் முஹம்மது என்றால் அவர் உண்மையில் நல்லவராகவே இருப்பார் , பொய்யராக இருக்க மாட்டார் என்றொரு எண்ணம் விழுந்தது. 

ஸ்பீக்கர் என் தலைக்கு மேலே இருந்தது. பஸ் ஜுஞ்சானாவில் நின்றதும், ஓன் செல்வதற்கு பதில் நான் அங்கேயே இறங்கிவிட்டேன். என் மனதில் இஸ்லாம் குறித்து படிக்க வேண்டுமென்ற எண்ணம் எழுந்தது. பின் ஷாம்லி செல்லும் பஸ்ஸில் ஏறினேன். அதிலும் டேப் ஓடிக் கொண்டிருந்தது. அதில் பாகிஸ்தானி காரி.ஹனீஃப் சாஹெபின் உரை ஓடிக் கொண்டிருந்தது. அந்த உரையில் அவர் ‘ மரணமும் மரணத்தின் பின் மனிதனின் நிலையும்’ என்பதைப் பற்றி உரையாற்றிக் கொண்டிருந்தார். எனக்கு ஷாம்லியில் இறங்க வேண்டியிருந்தது. ஷாம்லி வந்தும் உரை முடியவில்லை. பஸ்ஸை  அமர்த்திய டிரைவர் டேப்பையும் அமர்த்தி விட்டு இறங்கிவிட்டார். நான் அந்த உரையை கேட்பதற்காகவே அதே பஸ்ஸில் மீண்டும் முஜாஃபர் நகர் வரை டிக்கெட் வாங்கினேன். அந்த உரை பாக்றா(மற்றொரு கிராமம்) வந்து முடிவடைந்தது. அந்த உரை இஸ்லாம் பற்றிய என் எண்ங்களை வெகுவாக மாற்றியிருந்தது. பின் நான் புதானா செல்லும் பஸ்ஸில் ஏறி அமர்ந்தேன். என்னருகில் வந்தமர்ந்தது, ஒரு மௌலவி.

நான் அவரிடம், எனக்கு இஸ்லாத்தைப் பற்றி படிக்க வேண்டும். அதைப் பற்றி அறிய வேண்டும். எனவே எனக்கு உதவி செய்யுங்கள் என்றேன். அவர் என்னை ஃபுலாட் போய் அங்கே மௌலானா கலீம் சித்திகீ சாஹெபை சென்று பார்க்க சொன்னார். அவரை விட தகுந்த ஆள் வேறெவரும் இந்தப் பகுதியில் இல்லை என்று கூறினார். நான் ஃபுலாட்டில் இடம், விவரம் தெரிந்து கொண்டு ஃபுலாட் சென்றடைந்தேன். வீட்டிற்கு செல்வதற்கு பதில் நான் ஃபுலாட் சென்றடைந்தேன். அங்கே சென்றால் மௌலானா கலீம் சித்திகீ சாஹெப் அன்று வெளியூர் போயிருந்தார். அடுத்த நாளே வருவார் என்று சொன்னார்கள்.

நான் அன்றிரவு அங்கேயே தங்கிவிட்டேன். இரவில் நான் படிப்பதற்காக அங்கிருந்த ஒரு ஆசிரியர் மௌலானா கலீம் சித்திகி அவர்கள் எழுதிய  ‘ஆப்கி அமானத் ஆப்கி சேவா மேன்’ (உங்களின் பெரும்சொத்து உங்களின் சேவையில்) என்னும் புத்தகத்தை தந்தார்கள். அதில் எழுதியிருந்த எழுத்தும், எண்ணங்களும் என் மனதையும் எண்ணங்களையும் முழுவதுமாக ஸ்வீகாரம் செய்து கொண்டது. கலீம் சித்திகீ சாஹெப் அவர்கள் அடுத்த நாள் காலை வருவதற்கு பதில் மாலை வந்து சேர்ந்தார்கள். நான் மஃரிப் தொழுகைக்கு  பின் (சூரியன் மறைந்ததும் தொழுவது) மௌலானாவிடம் முஸ்லிம் ஆகும் ஆசையை வெளிப் படுத்தினேன். நான் இஸ்லாத்தைப் பற்றி தெரிந்து கொள்ளவே இங்கே வந்தேன். ஆனால் உங்களின் பெரும்சொத்து (புத்தகம்) என்னை தன்வசம் ஸ்வீகாரம் செய்து கொண்டது என்றேன். மௌலவி கலீம் சித்தீக் சாஹெப் மிகவும் மகிழ்ச்சியடைந்தார்கள், எனக்கு ஜனவரி 31, 2000இல் கலிமா சொல்லித தந்து என்னை இஸ்லாத்தில் இணைத்துக் கொண்டார்கள்.

அன்றைய இரவு நான் அங்கேயே தங்கினேன். இரவு தொழுகை முடிந்ததும் மௌலவி சாஹெபிடம் நான் ஒரு மணி நேர அனுமதி கேட்டு, நான் செய்த தவறுகள், கொலைகள் அக்கிரமங்களைப் பற்றி கூறினேன். என் சொந்த அண்ணனின் மகளான் ஹீறாவை நானே குழியில் தள்ளி, அவள் மீது தீ வைத்ததையும் கூறினேன். மௌலவி சாஹெப் அவர்கள் நிறைய நேரம் அழுது கொண்டிருந்தார்கள். அழுதபின் அவர்கள் கூறினார்கள், ஹீறா எங்களுடந்தான் இருந்தாள். சில நாட்கள் என் தங்கையோடு தில்லியிலும் இருந்தாள் என கூறினார்கள். ‘இஸ்லாம் அதன் (இஸ்லாத்தில் சேரும் முன்) முந்தைய பாவங்களை இல்லாமல் ஆக்கிவிடுகிறது’ என்று கூறினார்கள். ஆனாலும் என் மனம் ஒப்பவில்லை, நான் செய்த பாவங்கள என் மனதை சின்னாபின்னமாக்கிக் கொண்டிருந்தன. என் பாவங்களுக்கு என்ன பரிகாரம் என திரும்ப திரும்ப மௌலவி சாஹெபிடம் கேட்டேன். அதற்கு அவர், நீங்கள் இஸ்லாத்தின் முன் முஸ்லிம்களை கொன்று கொண்டிருந்தீர்கள். இஸ்லாத்தில் இணைந்த பின்னர் அதை இறைவன் கணக்கிலிருந்து அழித்து விட்டான். ஆனால் உங்கள் மனநிம்மதிக்காக நீங்கள் இனிமேல் முஸ்லிம்களை பாதுகாத்து நன்மையை நாடுங்கள், நன்மை செய்வதும் முன்னர் செய்த தீமையை அழிக்கும் என்று கூறினார். எனக்கும் அதுவே சரியெனப் பட்டது.
அன்றிலிருந்து இன்று வரை நான் இந்த கொள்கையை கடைப்பிடித்து வருகிறேன். எங்கேயும், ஒரு முஸ்லிமின் உயிருக்கு ஆபத்து என்றால் ஓடிப்போய் காப்பாற்ற முயல்கிறேன். நான் யாரையும் காப்பாற்றுவதில்லை, காப்பாற்றுவது இறைவனே, நான் ஒரு கருவியே என்றும் எனக்கு தெரிகின்றது, இருந்தாலும் என்னால் முடிந்ததை செய்கிறேன். குஜராத் கலவரத்தின் போது நான் இங்கிருந்து அங்கே சென்று காப்பாற்ற விழைந்தேன். என் இறைவனின் கருணையையும் என்னவென்பேன், எனக்கு அதிகமான வாய்ப்புகளை கொடுத்தான் முஸ்லிம்கள் கொல்லப்படுவதிலிருந்தும் அவர்களை காக்க. 

ஒரு ஹிந்துவாக சென்று ஹிந்துக்களின் கூட்டத்தில் பங்கு பெற்று அவர்களின் திட்டத்தை அறிவேன், பின் அவர்கள் அங்கு செல்லும் முன் எப்படியாவது நான் அவர்களுக்கு முன் சென்று அங்கிருக்கும் முஸ்லிம்களை காப்பாற்றினேன். அங்கிருந்து அவர்களை பாதுகாப்பான இடங்களுக்கும் அனுப்பி வைததேன். ஒரு சில கிராமங்களிலிருந்து முஸ்லிம்களை அந்த கிராமத்தை விட்டே வெளியேற்றியும் பாதுகாத்துள்ளேன்.

இன்னுமொரு காரியத்தைப் பற்றி நான் சொல்லியே ஆகவேண்டும். அல்லாஹ் அதன் மூலம் என் மனதில் நிம்மதியை நீக்கமற நிறைத்து விட்டான். நீங்கள கேள்விப்பட்டிருப்பீர்கள் குஜராத் கலவரத்தின் போது பாவ்நகரில் உள்ள மதரஸாவின் 400 பிள்ளைகளையும் அதனுள்ளேயே வைத்து எரிக்க திட்டமிட்டதை. நான் முதலில் அந்த பகுதியின் இன்ஸ்பெக்டர் ஷர்மாவிற்கு தகவல் தந்து முதலில் அவரை தயார் நிலையில் இருக்க சொன்னேன். பின்னர் மதரஸாவின் பின் சுவற்றை என் கையால் இடித்து வழி ஏற்படுத்தி அந்த குழந்தைகளை தப்பிக்க வைத்தேன். அந்த 400 குழந்தைகளை காப்பாற்ற அல்லாஹ் என்னை பயன்படுத்தினான் என்பதே எனக்கு இன்று வரை நிம்மதி தரும் விஷயம். அல்ஹம்துலில்லாஹ் (எல்லா புகழும் இறைவனுக்கே.)

மூன்று மாதம் வரையிலும் குஜராத்தில் இதற்காகவே தங்கியிருந்தேன். இருந்தாலும் இஸ்லாத்திற்கு முன்னர் நான் செய்த அக்கிரமங்கள்  எண்ணிக்கையிலடங்காதது. இதை எப்பொழுது மௌலானால்விடம் கூறினாலும் அவர் கூறுவது ஒன்றே ஒன்றுதான். எந்த அல்லாஹ் உங்களுக்கு நேர்வழி காட்டி இன்று முஸ்லிமாக்கி இவ்வளவு நன்மைகளை  செய்ய வைத்திருக்கிறானோ அவனின் கருணையிலும், மன்னிப்பிலும் இன்னும் நம்பிக்கை வையுங்கள் என்பதே.

அதன் பின் இஸ்லாத்தை கற்பதற்காக நேரம் ஒதுக்கி ஜமா’அத்தில் செல்ல மௌலானா சாஹெப் பணித்தார்கள். நான் இரண்டு மாதங்கள் கழித்து வருகிறேன் என்று சொல்லி புதானாவிற்கு சென்று என்னுடைய நிலங்கள், மாடு, வீடு எல்லாவற்றையும் வந்த விலைக்கு விற்றுவிட்டு தில்லி சென்று ஒரு வீட்டை வாங்கினேன். என் மனைவி, ஹீறாவின் தம்பிகள், ஒரு தங்கை அனைவரிடமும் இஸ்லாத்தைப் பற்றி  எடுத்து சொல்லி அவர்கள் அனைவரையும் ஃபுலாட்டிற்கு அழைத்து வந்து இஸ்லாத்தில் இணைய வைத்தேன். அதில் எனக்கு இரண்டு மாதங்களுக்கு பதில் ஒரு வருடம் ஆகிவிட்டது. பின்னர் ஜமா’அத்தில் சேர்ந்து அதில் என் நேரத்தை பயனுள்ளதாக்கினேன். 

இருந்தாலும் என் மனதில் ஒரு கேள்வி நீங்காமல் உள்ளது, இத்தனை மனிதர்களையும், பூ போன்ற குழந்தை ஹீறாவையும் கொன்ற எனக்கு எப்படி அல்லாஹ் மன்னிப்பு தருவான் என்று. இதை மீண்டும் மௌலானாவிடம் கூறியதும் திருக்குர்’ஆனை அதிகமதிகம் படிக்குமாறும் முக்கியமாக சூறா புரூஜ்(அத்தியாயம் 85 - பால்வீதி மண்டலங்கள்) அதிகமாக வாசிக்கவும் கூறினார். அதன்படி செய்ததில் இன்று அந்த அத்தியாயம் எனக்கு மனனம் ஆகி விட்டது. 1400 வருடம் முன்னர் இறக்கப்பட்ட அந்த அத்தியாயத்தை படிக்கும்போதெல்லாம் எனக்கு, என் இறைவன் என்னைப் பற்றி அறிந்தே அதை எனக்காக இறக்கியுள்ளான் என்றிருக்கும். 

சூரா 85 : பால்வீதி மண்டலங்கள்
(அல்-புரூஜ்)


( அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன் )
85:1. கிரகங்களுடைய வானத்தின் மீது சத்தியமாக,
85:2. இன்னும், வாக்களிக்கப்பட்ட (இறுதி) நாள் மீதும் சத்தியமாக,
85:3. மேலும், சாட்சிகள் மீதும், சாட்சி சொல்லப்படுவதன் மீதும் சத்தியமாக,
85:4. (நெருப்புக்) குண்டங்களையுடையவர்கள் சபிக்கப்பட்டனர்.
85:5. விறகுகள் போட்டு எரித்த பெரும் நெருப்புக் (குண்டம்).
85:6. அவர்கள் அதன்பால் உட்கார்ந்திருந்த போது,
85:7. முஃமின்களை அவர்கள் (நெருப்புக் குண்டத்தில் போட்டு வேதனை) செய்ததற்கு அவர்களே சாட்சிகளாக இருந்தனர்.
85:8. (யாவரையும்) மிகைத்தவனும், புகழுடையோனுமாகிய அல்லாஹ்வின் மீது அவர்கள் ஈமான் கொண்டார்கள் என்பதற்காக அன்றி வேறெதற்கும் அவர்களைப் பழி வாங்கவில்லை.
85:9. வானங்கள், பூமியின் ஆட்சி அவனுக்கே உரியது; எனவே அல்லாஹ் அனைத்துப் பொருள்கள் மீதும் சாட்சியாக இருக்கிறான்.
85:10. நிச்சயமாக, எவர்கள் முஃமினான ஆண்களையும், முஃமினான பெண்களையும் துன்புறுத்திப் பின்னர், பாவமன்னிப்பு கோரவில்லையோ அவர்களுக்கு நரக வேதனை உண்டு; மேலும், கரித்துப் பொசுக்கும் வேதனையும் அவர்களுக்கு உண்டு.
85:11. ஆனால் எவர்கள் ஈமான் கொண்டு, ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்கிறார்களோ, அவர்களுக்குச் சுவர்க்கச் சோலைகள் உண்டு, அவற்றின் கீழ் நதிகள் ஓடிக் கொண்டிருக்கும் - அதுவே மாபெரும் பாக்கியமாகும்.
85:12. நிச்சயமாக, உம்முடைய இறைவனின் பிடி மிகவும் கடினமானது.
85:13. நிச்சயமாக, அவனே ஆதியில் உற்பத்தி செய்தான், மேலும் (மரணத்தற்குப் பின்னும்) மீள வைக்கிறான்.
85:14. அன்றியும், அவன் மிகவும் மன்னிப்பவன்; மிக்க அன்புடையவன்.
85:15. (அவனே) அர்ஷுக்குடையவன்; பெருந்தன்மை மிக்கவன்.
85:16. தான் விரும்பியவற்றைச் செய்கிறவன்.
85:17. (நபியே!) அந்தப் படைகளின் செய்தி உமக்கு வந்ததா,
85:18. ஃபிர்அவ்னுடையவும், ஸமூதுடையவும்,
85:19. எனினும், நிராகரிப்பவர்கள் பொய்ப்பிப்பதிலேயே இருக்கின்றனர்.
85:20. ஆனால், அல்லாஹ்வோ அவர்களை முற்றிலும் சூழ்ந்திருக்கிறான்.
85:21. (நிராகரிப்போர் எவ்வளவு முயன்றாலும்) இது பெருமை பொருந்திய குர்ஆனாக இருக்கும்.
85:22. (எவ்வித மாற்றத்துக்கும் இடமில்லாமல்) லவ்ஹுல் மஹ்ஃபூளில் - பதிவாகி பாது காக்கப்பட்டதாக இருக்கிறது.

" மக்களே... திருக் குர்'ஆனின் அந்த அத்தியாயத்தை படியுங்கள். மற்றும் என் ஹீறாவின் இறுதி சொற்களை நினைவில் வையுங்கள்:

“யா அல்லாஹ்... நீ என்னை பார்க்கிறாய் அல்லவா? யா அல்லாஹ் என்னை நீ பொருந்திக் கொண்டாய் அல்லவா.. பாறையினுள் இருக்கும் வைரத்திற்கும் செவி சாய்ப்பவனே... குழியில் நெருப்பில் கரியும் இந்த ஹீறாவின் வார்த்தையையும் கேட்கிறாய் அல்லவா... என்னைப் பொருந்திக் கொண்டாய் அல்லவா..சித்தப்பா இஸ்லாத்தின்பால் வந்து விடுங்கள். அப்பா...இஸ்லாத்தில் இணைந்து விடுங்கள்...”



.

21 comments:

உங்கள் கருத்துக்கள்...

ஒரு கொலைகாரனின் பேட்டி - 3 (உண்மைச் சம்பவம்)

Sunday, April 17, 2011 Anisha Yunus 4 Comments

”என்ன?? நீங்கள் அந்த ஹீறா அக்காவைப் பற்றியா பேசுகிறீர்கள்? எங்கள் அப்பாதானே அவர்களுக்கு ஹீறா என்று பெயரிட்டார்? எங்கே அவர்? எப்படி உள்ளார்? எங்கள் வீட்டிலிருந்தும் போய் நாளாகிவிட்டதே???

(மேலும் விசும்பும் ஒலி கேட்கிறது)

" ஆமாம் அஹ்மது பாய், தங்களின் அப்பாதான் அவளுக்கு ஹீறா என்று பெயரிட்டது. அவளின் கொடிய, ஈவு இரக்கமற்ற சித்தப்பாதான் உங்கள் முன் நின்று கொண்டிருக்கிறேன்..."

(மீண்டும் அழுகிறார்...)

“சொல்லுங்கள் அப்துல்லாஹ் பாய்...ஹீறா அக்கா எங்கே??????

அஹ்மது பாய்....சகோதரரே... நான் செய்த அந்த மாபாதக செயலைப்பற்றி சொல்லியே ஆக வேண்டும்...
...உங்களுக்கு தெரிந்ததுதான். உங்கள் தந்தை, மௌலானா சாஹேப் ஹீறாவை தில்லியில் உள்ள அவரின் தங்கையின் வீட்டிற்கு சில காலம் அனுப்பி வைத்தார். அங்கே தாயின் அன்பிற்கு சிறிதும் குறைவில்லாமல் அவளை நல் முறையில் கவனித்துக் கொண்டனர் உங்கள் அத்தையும், நாநியும் (அம்மாவின் அம்மா). ஆனால் ஒரு இரவில் ஹீறாவிற்கு அவளின் தாய் இறந்து விட்டதாக கனவு வந்தது. அவளின் தாய் மிகுந்த நாட்களாய் படுத்த படுக்கையாய் இருந்ததாலும், ஹீறா தன் தாயின் மீது மிகுந்த அன்பு வைத்திருந்ததாலும் அவளால் அந்த கனவு கண்ட பின் அங்கே இருக்க முடியவில்லை. தன் தாயை காணும் ஆவல் அதிகமானதால் காலையில் மௌலானாவிடம் அழுது தன் தாயை சந்திக்க அனுமதி கேட்டாள். ஆனால் மௌலானவும் உங்கள் அத்தையும், அவள் திரும்பி சென்றால் அவளின் உயிருக்கே ஆபத்தாகி விடும் என்று அந்த யோசனையை ஏற்கவில்லை. ஆனால் அவளின் அழுகையுடன் கடந்த நாட்களையும் தாயையே எண்ணி கலங்கிய விழிகளையும் கண்டு அவளை திரும்ப புதானாவிற்கு அனுப்ப சம்மதித்தனர். மௌலானா சாஹேப் அவர்கள், ஹீறாவை அழைத்து தன் குடும்பத்தினரை ‘தாவாஹ்’ (இஸ்லாத்தின் பால் அழைத்தல்) செய்ய மட்டும், அவர்களுக்கு இஸ்லாத்தை எடுத்துரைப்பதற்காக மட்டும் அவள் அங்கு செல்லலாம் என்றும், அப்படி செல்வதற்கு முன் இரண்டு ரக்-அத் தொழுகையை தொழுது, அல்லாஹ்விடம் இறைஞ்சிய பின் கிளம்புமாறு கூறிவிட்டார். தன் வீட்டினர் எப்பொழுதும் இஸ்லாத்தை ஏற்கவே மாட்டார்கள், இஸ்லாத்தை அவர்கள் மிகவும் வெறுக்கிறார்கள் என்றதும், அவளின் ‘தாவாஹ்’வில் வெற்றி பெறவும் இரண்டு ரக்-அத் தொழுதிட சொன்னார்கள். அதோடு நிக்காமல் மௌலானா சாஹேப் ஹீறாவிடம் பொறுமையுடன் செயல்படும்படியும், அவளின் உயிர் இதில் போனாலும் அது அவளுக்கு ‘ஷஹீத்’ (இஸ்லாத்திற்காக தன் உயிரை விட்டவர்களை  - வீரமரணம் எய்தியவர் என்ற பெயர்) அந்தஸ்து கிட்டும் என்று கூறி அவளை புதானாவிற்கு அனுப்பி வைத்தார். இதெல்லாம் அவள் வீட்டிற்கு வந்த பின் எங்களிடம் கூறியது.

ஹீறா எங்கள் வீட்டிற்கு வந்துவிட்டாள். நான் அவளை கண்டதும், அணிந்திருந்த செருப்பை கழற்றி அடித்து, அவளை வீட்டை விட்டு போகும்படி சொல்லி விட்டேன். ஹீறா சற்றும் தளராமல், தான் இஸ்லாத்தில் இணைந்து விட்டதாகவும், ஒரு முஸ்லிமாக அவள் வாழ்வதை யாரும் தடுக்க முடியாது என்றும் கூறினாள். அவளின் தாய்ப்பாசத்திற்காகவும், சிறிது நாட்களில் அவள் மனதை குடும்பத்தினர் மாற்றி விடலாம் என்ற யோசனையாலும் அவளை வீட்டினுள் மீண்டும் அனுமதித்தோம். இரண்டே மாதத்தில் அவள் தாய் இறந்துவிட்டார். இறுதி சடங்குகளை ஹீறா மிகவும் எதிர்த்தாள். தன் தாய் தன் முன் ‘கலிமா’ {அல்லாஹ் மட்டுமே இறைவன், முஹம்மது நபி(ஸல்) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் என்பதை உறுதி கூறுவது} சொல்லிவிட்டார் என்றும் கூறி, அவரை புதைக்கத்தான் வேண்டும் என்று எவ்வளவோ மன்றாடினாள். நான் ஒரு அரக்கன், அதை மறுத்து என் அண்ணனின் மனைவியின் சடலத்தை எரித்தோம்..எங்களாலும் என்ன செய்திருக்க முடியும், அவரை புதைப்பது என்பது நடவாத காரியம், அப்போது...”

(மீண்டும் அழுகிறார்)

“அதன் பின்னும் வீட்டில் தன் மற்ற சகோதரர்களையும், சகோதரிகளையும் சில சமயங்களில் அவளின் தந்தையையும் இஸ்லாத்திற்கு மாற சொல்லி சொல்லிக் கொண்டேயிருந்தாள். அவளின் தொல்லை தாங்க இயலாமல் மீரட்டிலிருக்கும் அவளின் அத்தை வீட்டிற்கு சிறிது நாளுக்காக அனுப்பி வைத்தோம். அங்கேயிருந்தும் சிறிது நாட்களில் அவளின் மாமா எங்களை கூப்பிட்டனுப்பி, ‘இந்த அதர்மத்தை இங்கேயிருந்து கொண்டு செல்லுங்கள், தினம் தினம் கொடுமையாய் இருக்கிறது’ என்ற காரணம் கூறி, இனியும் வீட்டில் இந்த பெண்ணை வைத்திருக்க முடியாது என்றனுப்பி விட்டனர். நாங்களும் எங்களால் இயன்ற வரை அவளை இந்த பிடியிலிருந்து கொண்டு வர முயன்றோம். முடியாமல் போனதில், என்னுடைய பஜ்ரங்தள் கூட்டாளிகளிடம் ஆலோசனை கேட்டேன். அவர்கள் இது இன்னும் மற்றவர்களிடம் பரவாமல் இருக்க, அவளை கொன்று விட கூறினர். அவளை திரும்ப புதானாவிற்கு கொண்டு வந்து விட்டுவிட்டு ஒரு நாள் சென்று புதானாவில் உள்ள ஒரு நதியின் அருகில் 5 அடி உயரமுள்ள ஒரு குழியை தயார் செய்து விட்டு வந்தேன்....”

(குரல் நடுங்குகிறது)

“... நானும் என் அண்ணனும், அதாவது ஹீறாவின் தந்தையும் அவளை ஊருக்கு, அவளின் பெரியம்மா வீட்டிற்கு செல்லலாம் வா என்று கூறினோம். அவளுக்கு ஒரு வேளை கனவில் நடக்கப்போகின்றத் தெரிந்துவிட்டதா என்னவென்று தெரியவில்லை. கொஞ்சம் பொறுங்கள் சித்தப்பா.. நான் என் கடைசி தொழுகையை தொழுதுவிட்டு வருகிறேன் என்று கூறினாள்....”

(மீண்டும் விசும்புகிறார்)

”...கடைசி தொழுகையாவது படிக்க விடுங்கள் என்றாள்..நாங்களும் பல்லைக் கடித்துக் கொண்டு அனுமதி தந்தோம். உடனே குளித்து, தொழுது, அழகிய உடைகளை அணிந்து கொண்டு, நகைகளையும் அணிந்து மணப்பெண்ணைப்போல அவள் தயாரானாள். நாங்கள் அவளைக் கூட்டிக்கொண்டு நடந்த போது, வழியில் பாதை இரண்டாகப் பிரிந்தது. அப்பொழுதும் அவள், பெரியம்மா வீட்டு பாதை இதுவல்லவே என்று எங்களைக் கேட்கவேயில்லை, சந்தோஷமாக எங்களுடன் வந்தாள். நதிக்கருகில் சென்ற பின், சிரித்தவாறே சென்று என் அண்ணனிடம், “அப்பா... என்னை பூவா (பெரியம்மா) வீட்டிற்கு கூட்டிப் போகிறேன் என்றுதானே கூறினீர்கள். பூவா வீட்டிற்கா அல்லது ’பிஹா’ வீட்டிற்கா (பிஹா - மாப்பிள்ளை வீட்டிற்கு அனுப்பி வைப்பது)” என்று சிரித்தவாறே கேட்டாள்..."

(அழுகிறார்... தண்ணீர் கொடுக்கப்படுகிறது...)
  


“ஹ்ம்ம்...பூர்த்தி செய்யுங்கள் அப்துல்லாஹ் பாய், அதன் பின் என்ன நடந்தது..?"

( அப்துல்லாஹ் விசும்புகிறார் ...)

"எப்படி முடிப்பேன் இந்த கதையை.... முடித்துத் தானே ஆக வேண்டும்? ..."
...
...
"சிரித்துக் கொண்டே நின்றிருந்தவளை நான் அந்த குழியில் தள்ளி விட்டேன். என் அண்ணன் அழுதுகொண்டே பார்த்துக் கொண்டிருந்தார். அரக்கனை விடவும் கொடியவனான இந்த சித்தப்பா, பூவிலும் மென்மையான அந்தப் பெண்ணை குழியில், இதே கைகளால் தள்ளினேன்...."

(மீண்டும்  அழும் ஓசை கேட்கிறது)
"... நான் வைத்திருந்த பையில் ஐந்து லிட்டர் பெட்ரோல் இருந்தது. அதை அவள் மேல் ஊற்றினேன். தீப் பெட்டியிலிருந்து ஒரு குச்சியை எடுத்து உரசினேன். .."

(அழுகிறார்)

"...எங்களை நரகத்திலிருந்து காப்பது இருக்கட்டும். முதலில் நரகத்தின் தீயை நீ சுவைத்துப் பார் என்றவாறே அந்த பிஞ்சின் மேல் தீக் குச்சியை வீசினேன். புதிய ஆடை அவள் அணிந்திருந்ததால்  அதில் தீ எளிதில் பற்றிக் கொண்டது.தீ பற்றியவுடன் கீழே விழுந்திருந்த அவள் எழுந்து நின்று விட்டாள்...."
...
...
...
"... எழுந்து நின்று வானை நோக்கி கைகளை உயர்த்தி "யா அல்லாஹ் நீ பார்த்துக் கொண்டிருக்கிறாய்தானே.. இந்த ஹீராவை காண்கிறாய்தானே ... யா அல்லாஹ் பாறைக்குள்ளிருக்கும் வைரத்தையே காண்பவன் இந்த ஹீராவை பார்க்கிறாய்தானே ? யா அல்லாஹ் நீ என்னை மன்னிப்பாயா... என்னை ஏற்றுக் கொள்வாயா? ....என்று கேட்க ஆரம்பித்தாள்"

(அடக்க முடியாமல் அழுகை தொடர்கிறது )


“...சித்தப்பா இஸ்லாத்திற்கு வந்து விடுங்கள்... அப்பா இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளுங்கள் "என்று உயர்ந்த குரலில் சொல்லிக் கொண்டே இருந்தாள். இதைக் கேட்டுக் கொண்டிருந்த என் அண்ணனோ அழுது கொண்டே என்னிடம், "இன்னும் ஒரு முறை அவளிடம் பேசிப் பார்த்திருக்கலாமே... நாம் நல்லபடி சொல்லியிருந்தால் கேட்டுக் கொண்டிருப்பாளே" என்றார்.   எனக்கு இம்முறை அவரின் மேல் கோபம் வந்தது. விடுவிடுவென்று அவரை இழுத்துக் கொண்டு நடந்தேன். குழியிலிருந்து 'லா இலாஹா இல்லல்லாஹ் ' கேட்டுக் கொண்டே இருந்தது...."

(அவரின் அழுகை நிற்கும் வரை பொறுத்திருந்து தண்ணீர் மீண்டும் தரப் படுகிறது)

"... அந்த நாளிலிருந்து என் அண்ணன் நோய்வாய்ப் பட்டார். மனதின் நோய் உடலைத் தாக்கியது. என் அண்ணனின் நிலை கண்டும் ஹீறாவின் இறுதியை எண்ணியும் நான் உடைந்து போனேன். ஹீராவின் மரணம் என் அண்ணனை முழுதும் மாற்றியது. சில நாட்களிலேயே படுத்த படுக்கை ஆனார். மரணத்திற்கு இரு நாட்கள் முன்னர் என்னை அழைத்து, "இது வரை செய்த எந்தப் பாவத்தையும் திருப்ப முடியாது. ஆனால் என் மரணம் ஹீராவின் மார்க்கத்தில் அமைய வேண்டும். எனக்கு முஸ்லிமாக மரணிக்க மண் கொடுத்து விடு என்றார். அண்ணனின் உடல்நிலை கண்டு ஒடுங்கிப் போயிருந்த நானும், எனக்கு மிக கஷ்டமான பணியாயினும் அவரின் இறுதி முடிவை மாற்ற விரும்பாமல் சரி என்று சொல்லி யாரும் அறியா வண்ணம் எங்கள் ஊரின் மசூதி இமாமை அழைத்து வந்தேன். அவர் அண்ணனுக்கு கலிமா சொல்லக் சொல்லி 'அப்துர் ரஹ்மான்' என்று பெயர் மாற்றி விட்டார். அண்ணன் முஸ்லிம் மார்க்கத்தின் படியே இறப்பேன் என்றதும் எனக்கு சுமை அதிகமாயிற்று. என்ன செய்வது என்றெண்ணி அவரை தில்லிக்கு இட்டு சென்றேன். அங்கே உள்ள ஹாஸ்பிட்டலில் அவரை சேர்த்தேன். இரண்டாவது நாள் அவர் இறந்து விட்டார். என் அண்ணன் மிக நிறைந்த மனதுடன் இறந்தார். அங்குள்ள 'ஹம்தர்த் தவாக்ஹானா'வில் இருந்த ஒரு டாக்டரிடம் சொல்லி அண்ணனை, சங்கம் விஹாரில் இருந்த சில முஸ்லிம் சகோதரர்களோடு சேர்ந்து இஸ்லாமிய கல்லறையில் புதைத்து விட்டு வந்தேன். "

"...நீங்கள் இஸ்லாத்திற்கு வந்தது எப்படி என்று இன்னும் சொல்லவில்லையே?"

"...ஆம்....ஆம்.... சொல்கிறேன்..."


(பகுதி -4)
.

4 comments:

உங்கள் கருத்துக்கள்...

ஒரு கொலைகாரனின் பேட்டி - 2 (உண்மைச் சம்பவம்)

Friday, April 15, 2011 Anisha Yunus 6 Comments

“அந்த சம்பவத்தைப் பற்றி கூறுங்கள்”
அதை சொல்லத்தான் நானும் நினைக்கிறேன். ஆனால் எங்கேயிருந்து ஆரம்பிப்பது என்றுதான் தெரியவில்லை. இந்தளவு கடினமானதாய் வளர்க்கப்பட்ட என் இருதயம் கூட அந்த கதையை கூற தைரியமற்றுப் போகிறது.

“தவிர்க்காதீர்கள். நான் வற்புறுத்துவேன், ஏனெனில் இதில் நிறைய மனிதருக்கு படிப்பினை இருக்கக்கூடும்.”
கண்டிப்பாக... என் மேல் கூட இறைவனின் கருணை ஏற்பட்டு நானே இஸ்லாத்தில் வந்துவிட்டேன் என்றால் மற்ற மனிதர்களின் மேலும் இறைவனின் கருணை விழாமலிருக்க காரணமே இல்லை...”

...

...

“...அஹ்மது பாய், கேளுங்கள் சொல்கிறேன்... 
...எனக்கு ஒரு அண்ணன் இருந்தார். நானும் என் அண்ணனும் சிறு வயது முதல் மிகுந்த அன்புடன் வாழ்ந்து வந்தோம். இருவரும் சேர்ந்தே அத்தனை மாபாதகங்களையும் செய்வோம் என்றாலும் எங்களின் பாசப்பிணைப்புக்கு இணையே இல்லாமல் வாழ்ந்திருந்தோம். இருவருக்கும் திருமணம் ஆகியது. எனக்கு இன்று வரை குழந்தை இல்லை. ஆனால் என் அண்ணனுக்கோ இரண்டு மகள்களும் இரு மகன்களுமுண்டு. அவரின் மூத்த பெண்ணின் பெயரே ஹீறா (வைரம்).

ஹீறா மிகவும் உணர்ச்சிவசப்பட்ட பெண்ணாய் இருந்தாள். எவ்வளவு சீக்கிரம் யாரையும் நேசிக்க ஆரம்பிப்பாளோ அதே நேரம் சில மணித்துளிகளில் எதையும் விட்டுவிடவும் தயங்கமாட்டாள். அவளின் இத்தகைய குணத்தால் நாங்கள் கலவரப்பட்டு அவளை மனோதத்துவ டாக்டர்களிடமும், மாந்திரீகவாதிகளிடமும் கொண்டு செல்லாத நாட்களில்லை. ஆனால் எதுவும் பயனளிக்கவில்லை. எங்கள் சமூகத்தில் பெண்களை அதிகம் படிக்க வைக்க மாட்டோம் என தெரிந்திருந்தும் அவள் 8வது முடித்ததும் மீண்டும் அதற்கு மேல் படிக்க பள்ளியில் விண்ணப்பம் தந்து வந்து விட்டாள். நாங்களெல்லாம் மிகவும் கோபம் செய்ததும், எங்களின் வயலில் வேலை செய்து படிப்பு செலவை சமாளிப்பேன் என கூறிவிட்டாள்.

பள்ளி ஆரம்பமானதும் அருகிலுள்ள ஒரு அக்ரஹாரத்தில் தெரிந்த ஒரு பிராமணர் வீட்டில் அவர் மகளிடம் டியூஷன் படிக்க ஆரம்பித்தாள். அந்த பிராமணரின் மகன் ஒரு கொடியவன். அவன் அவளின் மனதை மயக்கி வீட்டை விட்டு ஓடி வரச்செய்து பரோட்டுக்கு அருகிலுள்ள காட்டில் கொண்டு சென்று விட்டான். அங்கே அவனின் கூட்டாளிகளும் இருந்தனர். அவர்களெல்லாம் தீவிரவாதிகள். அங்கே போன பின் ஹீறாவுக்கு தான் தவறு செய்தது புரிந்தது. குடும்பத்தின் மானத்தை கெடுத்து விட்டோமே என்று பரிதவித்தாள். தன் கற்பை காத்துக் கொள்ளவும் சிரத்தையுடன் இருந்தாள். இதன் காரணமாக சதா அழுதுகொண்டிருந்தாள். அந்த குழுவில் இத்ரீஸ்பூரிலிருந்து ஒரு முஸ்லிம் பையனும் இருந்தான். அவளின் அழுகையைக் கண்ட அவன், காரணத்தை கேட்டறிந்தான். அவனிடம் அனைத்து உண்மையையும் அவள் கூறினாள். அவளின் இடைவிடா அழுகையை கண்ட அவனும், தானொரு முஸ்லிமாதலால், ஹீறாவை தங்கையாக ஏற்று அவளையும் அவளின் கற்பையும் காப்பாற்றுவதாக வாக்களித்தான். அவளை அந்த கும்பலிலிருந்து காப்பாற்றுவதாகவும் உறுதி கூறினான்.

பின் அந்த குழுவினரிடம் நேரம் கிடைக்கும்போதெல்லாம் அவன், ஹீறா நிறைய அறிவுடையவள் என்றும் அவளை ஆண்களின் உடையை அணிய வைத்து அவளுக்கும் பயிற்சி தரவேண்டும் என்று கூறினான். பகலில் ஆண் போல முழுக்கை சட்டையும் பேண்ட்டும் அணிந்ததால் பாதுகாப்பாகவும் இருந்தது. இரவினில் அவள் தூங்குமிடத்திற்கு யாரும் வராமலும் பார்த்துக் கொண்டான். சிறிது நாட்களிலேயே குழுவில் அவளின் மேல் எந்த சந்தேகமும் இல்லாமல் போனது. இரண்டொரு நாட்களில் அவன் குழுவினரிடம் ஹீறாவை இத்ரீஸ்பூரிலிருந்து சில தகவல்கள் பெறவும், சில பொருட்களுக்காகவும் அனுப்பி வைக்கலாம் என்று கூறி திட்டமிட்டு அவளை தன் தம்பியுடன் அனுப்பி வைத்தான். போகும் முன் தன் தம்பியை அழைத்து ஹீறாவை போலீஸிடம் தனியே அனுப்பி வைக்கும்படி கூறிவிட்டு, பின் திரும்பி வந்து குழுவினரிடம், ஹீறாவின் நடத்தையில் சந்தேகம் வந்து கிராம மக்கள் அவளை போலீஸிடம் தந்துவிட்டதாக கூற சொன்னான். அவனின் தம்பியும் அவ்வாறே செய்தான். ஹீறாவைப் பற்றி ஏற்கனவே எல்லா போலீஸ் ஸ்டேஷனிலும் ஒரு எஃப்.ஐ.ஆர் இருந்ததால் ஹீறாவை ஒரு பெண் போலீஸுடன் புதானாவிலுள்ள எங்கள் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். எங்கள் வீட்டிற்கு அவள் வந்துவிட்டாலும் வீட்டை விட்டு ஓடிப்போனவளை எப்படி வீட்டினுள் சேர்ப்பது, அவள் சோடை போயிருப்பாளே என்றே தவித்துக் கொண்டிருந்தோம். ஹீறா இதை அறிந்து கொண்டவளாய் எங்களிடம் வந்து, தான் வீட்டை விட்டு ஓடிப்போனது உண்மைதான் எனினும் தன் கற்பு பறி போகவில்லை என்றே சாதித்தாள். மேற்படிப்பு படித்திருந்த எங்களுடைய உறவினர் ஒருவர், அவளை டாக்டரிடம் அழைத்துச் சென்று பரிசோதிக்க யோசனை கூறினார். போகும்போதே, இவள் தூய்மையானவள் என்று தெரிந்தால் வீட்டிற்கு கூட்டி வரலாமென்றும், இல்லையென்றால் எங்கேயாவது வெட்டி வீசிவிட்டு வந்து விடலாம் என்றும் நானும் என் அண்ணனும் முடிவெடுத்துக் கொண்டோம். டாக்டர் அவளை தூய்மையான பெண் என்று கூறியதும் அவளை மீண்டும் வீட்டிற்கே கூட்டி வந்தோம்.

வீட்டிற்கு வந்த பின் தினம் தினம் அவள் அந்த முஸ்லிம் பையனைப்பற்றி பேசுவதும், முஸ்லிம்களை போற்றுவதுமாக இருந்த அவளின் குணம் எங்கள் எல்லோருக்கும் கோபத்தை வரவழைத்தது. அடியும், மிதியுமாக நாட்கள் சென்றது. ஒரு நாள் எங்கள் தெருவினருகில் குடியிருந்த சில முஸ்லிம்களின் புத்தகங்கள் எங்கள் வீட்டினில் இருக்கக்கண்டு எனக்கு ஆத்திரம் பன் மடங்காக உயர்ந்தது. அவளை என் பலம் கொண்ட மட்டும் அடித்து உதைத்து, இனிமேல் இத்தகைய புத்தகங்களை கண்டால் அவளை உயிரோடேயே விட்டு வைக்க மாட்டேன் என்று கூறிவிட்டேன். ஆனால் நாங்களறியா வண்ணம் அவளோ முஸ்லிம்களின் புத்தகத்தை படிப்பதையும், அதை ஆராய்வதுமாக இருந்துள்ளாள். நாங்களெல்லாம் அவளுக்கு யாரோ மாந்திரீகம் செய்து விட்டதாகவே எண்ணியிருந்தோம். அவளோ தன்னுடைய பள்ளிக்கூட ஸ்னேகிதியின் மூலம் எங்கள் கிராம மௌலானாவிடம் (மசூதியின் இமாம்) இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு நாங்கள் இல்லாத நேரம் வீட்டினில் தொழுகையும் செய்து வந்துள்ளாள். அதன்பின் அவளின் செய்கைகளில் நிறைய மாற்றம் வந்துவிட்டிருந்தது. சோகமே வடிவாக சில நாட்கள் இருந்தவள், பின் யாரிடமும் சொல்லாமல் எங்கள் வீட்டை விட்டு வெளியேறி விட்டாள். ஃபுலாட்டிலுள்ள ஒரு மௌலானா வீட்டிற்கு சென்று விட்டாள். அங்கே சில காலம் இருந்தவள் பின் அஹம்து பாய், பின் உங்கள் வீட்டிற்கு வந்துவிட்டாள்
.”

”என்ன?? நீங்கள் அந்த ஹீறா அக்காவைப் பற்றியா பேசுகிறீர்கள்? எங்கள் அப்பாதானே அவர்களுக்கு ஹீறா என்று பெயரிட்டார்? எங்கே அவர்? எப்படி உள்ளார்? எங்கள் வீட்டிலிருந்தும் போய் நாளாகிவிட்டதே???

(மேலும் விசும்பும் ஒலி கேட்கிறது)

" ஆமாம் அஹ்மது பாய், தங்களின் அப்பாதான் அவளுக்கு ஹீறா என்று பெயரிட்டது. அவளின் கொடிய, ஈவு இரக்கமற்ற சித்தப்பாதான் உங்கள் முன் நின்று கொண்டிருக்கிறேன்..."

(மீண்டும் அழுகிறார்...)

“சொல்லுங்கள் அப்துல்லாஹ் பாய்...ஹீறா அக்கா எங்கே??????

அஹ்மது பாய்....

6 comments:

உங்கள் கருத்துக்கள்...

ஒரு கொலைகாரனின் பேட்டி - 1 (உண்மைச் சம்பவம்)

Thursday, April 14, 2011 Anisha Yunus 8 Comments

”டொக்”
டேப் ஆன் செய்யப்பட்டது. ரிக்கார்டு பட்டன் அழுத்தப்படுகிறது.

“அஸ் ஸலாமு அலைக்கும் றஹ்மஹ்த்துல்லாஹி வ பரக்காத்துஹூ”
“வ அலைக்கும் அஸ் ஸலாம் வ றஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ”

“அப்துல்லாஹ் பாய், உங்களுக்கு தெரிந்திருக்கும். ஃபுலாட்டிலிருந்து ‘அர்முகான்’ என்னும் இதழ் வெளியாகிறது. அதில் உங்களைப்பற்றி எழுத உள்ளோம். உங்களைப்பற்றி எங்கள் ’அர்முகான்’ நேயர்களுக்கு கொஞ்சம் சொல்லுங்களேன்”
“அஹ்மது பாய்...”

(கண்களிலிருந்து வழியும் நீரை துடைக்கிறார். விசும்பும் ஒலி கேட்கிறது)

“என்னைப்பற்றி கேட்டு உங்கள் நேயர்களை ஏன் நோகடிக்க விரும்புகிறீர்கள்??, என்னைப்போல ஒரு பாதகனை, கொடியவனைப் பற்றி சொல்லி என்னவாகப்போகிறது??”

(விசும்பும் ஒலி கேட்கிறது)

“அழாதீர்கள். ப்ளீஸ். உங்களைப்பற்றி என் தந்தை மௌலானா கலீம் சித்திகி அவர்கள் ’இறைவனின் அதிசயம்’ என கூறிய பின்பே தங்களைப்பற்றி பேட்டி எடுக்கும் ஆவல் வந்தது. சொல்லுங்கள்...”
உங்கள் தந்தைக்கு இறைவன் நிறைய ஆயுள் தந்து அருள் புரியட்டும். என் எஜமானனைப் போன்று அவர். அவரின் விருப்பம் இது என்றால் நான் தடை செய்யவில்லை...கேளுங்கள், என்ன கேட்க விரும்புகிறீர்கள்??

“உங்களைப் பற்றி சொல்லுங்கள்...”
இந்த உலகம் ஆரம்பித்தது முதல் ஒரு கொடிய, மிருகத்தனமான, இரக்கமற்ற, அரக்க குணமுள்ள மனிதன் ஒருவன் இருந்திருக்கிறான் என்றால் அது நானே. அதுதான் என்னைப்பற்றிய முன்னுரை..

“நீங்கள் உணர்ச்சி பூர்வமாக பேசுகிறீர்கள். சரி உங்களின் பிறப்பு, குடும்பம் பற்றி கூறுங்கள்..”
நான் 42 அல்லது 43 வருடங்களுக்கு முன் முஜாஃபர் நகர் என்னும் மாவட்டத்தில் (உத்தரப்பிரதேசம்) மாடு மேய்க்கும் 'ஆஹிர்’ ஜாதியில் பிறந்தேன். புதானா என்பது என் ஊரின் பெயர். அங்கே முஸ்லிம் ராஜ்புத்கள் அதிகம். என் குடும்பமோ மிக மிக ஆச்சாரமான ஹிந்து குடும்பம். சிறிது கிரிமினல் பேக்கிரவுண்டும் உண்டு. கொலை செய்வது, கொடுமை செய்வது, அதிகாரம் செய்வது என்பதெல்லாம் என் தொட்டில் பழக்கம் எனலாம். அப்படிப்பட்டது, நான் வளர்ந்த சூழ்நிலை. என் பெரியப்பாவும், தந்தையும் இம்மாதிரியான் ஒரு கும்பலுக்கு தலைவர்கள்.

1987இல், மீரட்டில் வசிக்கும்போது அந்த நேரம் கலவரம் நடந்து கொண்டிருந்தது. என் தந்தையும், நானும் எங்கள் உறவினர்களுக்கு பாதுகாப்பாளர்களாய் இருந்தோம். அந்நாட்களில் கிட்டத்தட்ட 25 முஸ்லிம்களையாவது நாங்கள் கொன்றிருப்போம். அதன் பின் நான் பஜ்ரங்தள்லிலும் சேர்ந்தேன், முஸ்லிம் எதிர்ப்பு அலையை வளர்க்கவே சேர்ந்தேன். 1990இல் ஷாம்லியில் வசிக்கும்போது இன்னும் அதிகமான முஸ்லிம்களை கொன்று குவித்தேன். அப்பொழுது பாபரி மஸ்ஜித்தின் பிரச்சினையும் நடந்து கொண்டிருந்தது எனக்கு வசதியாய் போனது. மீண்டும் 1992இல் நான் புதானாவிற்கே வந்தேன். அங்கேயும் முஸ்லிம்களை கண்டால் கொல்ல ஆரம்பித்தேன். எங்கள் ஊரிலேயே ஒரு முஸ்லிம் இளைஞன் இருந்தான். அவனின் ஐவேளை தொழுகையும், நேர்மையும், பணிவான முகமும் எங்களாட்களுக்கு பயம் தர ஆரம்பித்தது. நானும் என் நண்பர்களும் குழு அமைத்து, கூட்டாக அவனை சுட்டுக் கொன்றோம். இந்தளவு முஸ்லிம்களைக் கண்டால் வரும் எரிச்சலானது, இறுதியில் என்னை ஒரு கொடியதிலும் கொடிய குற்றத்தை செய்ய வைத்தது...

(அழும் சப்தம் கேட்கிறது)

என்னைப்போல ஒரு மிருகம், அரக்கன் இந்த வானத்தின் கீழ் வாழ்ந்திருக்கவும் மாட்டான், பிறந்திருக்கவும் மாட்டான்..."

(அழுகை அதிகமாகிறது)

“சரி, இஸ்லாத்திற்கு எப்படி வந்தீர்கள் என்பதை சொல்லுங்கள்”
திருக்குர்’ஆனில் 30வது அத்தியாயத்தில் அல்லாஹ் நெருப்பின் குழியில் விழும் மனிதர்களைப் பற்றி பேசுகிறான் அல்லவா?? அது என்னைப் பற்றியே... அங்கே மக்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளதுதான் வினோதம், ஏனேனில் நான் ஒருவனே அந்த அத்தியாயத்தில் குறிப்பிடப்படுபவன் போலுள்ளவன், நீங்கள் வேண்டுமானால் அந்த ஆயத்தை ஓதிப் பாருங்கள்.

 “நீங்களே ஓதுங்கள்”

"قُتِلَ أَصْحَابُ الْأُخْدُودِ"

இப்ப, அரபியில் நாம் ‘நெருப்பில் விழுந்த மனிதர்களின் மேல் இறைவன் தன் கருணையை இறக்கினான்’ என்று எப்படி சொல்வோம்??

“ரஹம் அஸ்ஹாபல் உக்ஹ்து..”
ஆம். ஆனால், அந்த வசனம் என்னை குறிப்பிடுவதாக இருந்தால் நான்தான் அந்த ‘ரஹம் அஸ்ஹாபல் உக்ஹ்து’..

“அந்த சம்பவத்தைப் பற்றி கூறுங்கள்”
அதை சொல்லத்தான் நானும் நினைக்கிறேன். ஆனால் எங்கேயிருந்து ஆரம்பிப்பது என்றுதான் தெரியவில்லை. இந்தளவு கடினமானதாய் வளர்க்கப்பட்ட என் இருதயம் கூட அந்த கதையை கூற தைரியமற்றுப் போகிறது.

“தவிர்க்காதீர்கள். நான் வற்புறுத்துவேன், ஏனெனில் இதில் நிறைய மனிதருக்கு படிப்பினை இருக்கக்கூடும்.”
கண்டிப்பாக... என் மேல் கூட இறைவனின் கருணை ஏற்பட்டு நானே இஸ்லாத்தில் வந்துவிட்டேன் என்றால் மற்ற மனிதர்களின் மேலும் இறைவனின் கருணை விழாமலிருக்க காரணமே இல்லை...”

...

...

“...அஹ்மது பாய், கேளுங்கள் சொல்கிறேன்...”

==================================================================
என்ன இது, இப்படி ஒரு பதிவு என்று எல்லோரும் நினைக்கக்கூடும். இது ஒரு உண்மையான பதிவு. பதிவு முழுதும் உண்மையான நகரங்கள், இடங்கள், குறிப்பிடப்படுபவைகளுக்கு லின்க் தரப்படும். இந்த பதிவிலும் குறிப்பிடப்பட்டுள்ள மௌலானாவையும் ஃபேஸ்புக்கின் லின்க்கோடு இணைத்துள்ளேன். இப்படி ஒரு பேட்டி வந்ததாக எந்த தொலைக்காட்சியிலும் பார்க்கவில்லையே என்போருக்கு, இந்த பேட்டி ஒரு புத்தக தொகுப்பாகவும் வந்துள்ளது. இப்படிப்பட்ட மனிதர் கைதாகவில்லையா என்றால்.... இது நடந்தது, இது போல நடப்பதும் இந்தியாவில் சில காலமாய் சகஜமாகி விட்டது. :(

இந்த பேட்டியை கேட்கும்போது இருந்த அதிர்ச்சி, முடிக்கும்போது வெடித்த அழுகையாய் மாறியது. பேட்டியின் முடிவில் ஒலி வடிவ லின்க்கும் தருகிறேன், இன்ஷா அல்லாஹ். இதை கேட்டவுடன் மனதில், இதை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று தோணியதால் மட்டுமே பகிர்கிறேன். ஹிந்தியிலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு, பின் தமிழுக்கு வருவதால் சில வார்த்தைகள் மாறியிருக்கலாம். முடிந்தவரை சரியாக தர முயல்கிறேன்.

புத்தக தொகுப்பு (ஹிந்தியில்) கிடைக்குமிடம்:
Naseem e hidaayat ke jhonke part 1
English Name : Breeze of the Guidance
Compiler : Mohammed Yusuf Usman Nadvi
Pages : 260
Year of  Publication : 2010
Price Rs 100/- (One Hundred Rupees only)
Name of Book Suppliers:- 
  1. Jamia-Tul-Imam Wali-ullah Al-Islamia, Phulat, Distt. Muzaffar Nagar. 
  2. Dar-E-Arqam, Batla House, Okhla Head, New Delhi-110025. 
  3. Maktaba Shah Wali-ullah, Batla House, Okhla Head, New Delhi-110025.
    .

    8 comments:

    உங்கள் கருத்துக்கள்...

    பெண் எழுத்து - தொடர் பதிவு

    Monday, April 11, 2011 Anisha Yunus 21 Comments

    அழைத்த ஆஸியாக்காவிற்கு நன்றி............. :)

    எல்லாரும் எழுதி முடிச்சிட்டாங்க... இப்பத்தேன் நீ ஆரம்பிக்கிறியான்னு யாரும் என்னை குத்தம் சொல்லக்கூடாது. உருது பேசற முஸ்லிம்களிடத்தில் அடிக்கடி எந்த இடத்திற்கும் தாமதமாய் வருபவர்களுக்கு ‘லேட் லதீஃப்’ அப்படின்னு ஒரு பட்டப்பெயர் அமையும், அந்த விருது வழக்கமா என் கைலதேன் இருக்கு. பார்க்கலாம், வேற யாருக்கும் தரும் வேளை வருதான்னு. ஹி ஹி ஹி

    யாரும் தப்பு கண்டு பிடிக்கக்கூடாது!! சொல்லிட்டேன்!!
    பெண் எழுத்துன்னு சொன்னவுடனே கொசுவத்தி சுத்தினா முதல்ல வந்தது எங்கம்மாதேன். ஆறாம் வகுப்புடன் தன் பள்ளிப்படிப்பை முடித்துக்கொண்டவர். ஆனால் அவரின் அறிவும், மேனேஜ்மெண்ட்டும் இன்றும் ஒரு கம்பெனியின் C.E.Oக்கு குறையாதது. (எல்லார் அம்மாவும் கிட்டத்தட்ட இப்படித்தான், இல்லையா??) நான் மூன்றாம் வகுப்பு படிக்கும் மட்டும் தினம் தினம் என்னுடைய நோட்டில் அன்றைய ஹோம்வர்க் என்னன்னு எழுதறது அவங்கதான். நான் ஹோம்வர்க் எழுதவே டிமிக்கி தர்ற ஆளு, இதுல ஹோம்வர்க் என்னன்னு வேற எழுத சொன்னா?? அதுவும் இல்லாம, நர்ஸரி போகறப்பா ஆங்கில ரைம்ஸ் எல்லாம் அப்பாகிட்ட சொல்லி தமிழ்ல எழுதி வச்சுக்குவாங்க. அப்புறம் அதை சொல்லிக் குடுப்பாங்க. இப்படி எங்களை வளர்க்க அவங்க எழுதி எழுதி கஷ்டப்பட்டு வளர்த்தாலும் இப்பவும் அவங்க தமிழை நான் கிண்டலடித்துக்கொண்டே இருப்பேன், எங்கே ‘துணைக்கால்’ போட வேண்டுமோ அது அங்கிருக்காது, குறில் இருக்க வேண்டிய இடத்தில் நெடிலும், நெடிலுக்கு பதில் குறிலும் இருக்கும். கடைக்கு எழுதும் சாமான் லிஸ்ட்டே போதும் அன்றைய பொழுதைப் போக்க. ஹெ ஹெ ஹே...

    சகோதரி. யுவான் ரிட்லீ

    அதன் பின் என்னை மிகவும் கவர்ந்த எழுத்துக்கள் சகோதரி. யுவான் ரிட்லியுடையது. தன்னை கடத்தியவர்களை உற்று நோக்கி, அவர்களின் குணங்களை அறிந்து, அதன் மூலம் இஸ்லாத்தை விரும்பி, இன்றளவும் இஸ்லாமிய ஆண்கள் சிலர் கூட வெளியே பகிரங்கமாக பேசிட அஞ்சும் விஷயங்களுக்காக தன்னை முன் நிறுத்துபவர். அது துனிசியாவின் விடுதலைக்காக ஆகட்டும் அல்லது எகிப்தின் மத தலைவர்களின் சாயங்களை வெளுப்பதாகட்டும். சுப்ஹானல்லாஹ். ”இன்னும் இவரைப்போன்ற பல சகோதர சகோதரிகளைத் தா அல்லாஹ்” என்றுதான் பிரார்த்திக்கிறேன்.

    டாக்டர். ஃபர்ஹாத் ஹாஷ்மி

    மீடியாவின் பின்னாலும், யூரோப்பிய நாகரீகம் என்னும் அசட்டுத்தனத்தின் பின்னாலும் இந்தியா மட்டுமல்ல, பாகிஸ்தானும் மிதமிஞ்சிதான் போயுள்ளது. அப்படிப்பட்ட நாட்டின் பெண்களை மீண்டும் நல்வழிக்கு கொண்டு வர சகோதரி. டாக்டர்.ஃபர்ஹத் ஹாஷிமியின் எழுத்துக்களும், வகுப்புக்களும் பெரிதளவில் உதவியுள்ளது என்றால் அது மிகையல்ல. கலாசார சீரழிவிலிருந்து பாகிஸ்தானிய பெண்களை பெருமளவில் காப்பாற்றி, இப்பொழுது வீட்டிலிருந்தே எளிய வழியில் மார்க்கத்தை கற்க வைத்திருப்பதும், அதன் மூலம் இன்னும் அவர்களின் உலகை விரித்ததும், இவரின் எழுத்துக்கள் மற்றும் வேர்வை முத்துக்களின் சாதனையே!! ஹாஃபிதஹுல்லாஹ் (அல்லாஹ் அவரை பாதுகாத்து வைப்பானாக). ஆமீன்.

    இதை தாண்டினால் அதிகம் வாசிக்கும் பெண் எழுத்துக்கள் எல்லாம் குழந்தைகளை வீட்டிலிருந்தே படிக்க வைக்கும் தாய்களின் எழுத்துக்களைத்தான். அதில் ஒரு விஷயத்தை கற்றுத் தரத்தான் எத்தனை வழிகள், எத்தனை இலகு, எப்படிப்பட்ட் குழந்தையும் அதன் தாயிடம் எவ்வளவு சுலபத்தில் கற்றுக் கொண்டு விடுகிறார். எனக்கு பிடித்த சில Home Schooling Mom Writers இங்கே, இங்கே, மற்றும் இங்கே. :) ராயல் சல்யூட்!!

    அதன்பின் பார்த்தால், எனக்கு தெரிஞ்ச பெண் எழுத்துக்கள்ன்னா, பெண் பதிவர்கள்தேன்!! (எல்லா பெண் பதிவர்களும் குலவை சத்தம் கேக்குதா!! ஹி ஹி ஹி...) அதனால அவங்க எழுத்துக்களில் எனக்கு பிடிச்ச எழுத்துக்களை இங்கே சமர்ப்பிக்கிறேன். (ஹெ ஹெ...தப்பிச்சிட்டேன்..!!!) எந்த துறையிலும் சில விஷயங்களை சுவாரஸ்யமா சொல்ல பெண்களை விட்டால் யாருமில்லை.... மனசிலாயோ??? ஓக்கே... லெட்ஸ் கோ டு தி பாயிண்ட்.

    அமெரிக்காவின் அன் அஃபீஷியல் விக்கியாக அமெரிக்காவா, சித்ராக்காவிடம் கேளு என்பது போல், அமெரிக்காவைப் பற்றிய பல விஷயங்களை புட்டு புட்டு வைப்பதுவும், அதுவும் அவருக்கே உரிய நகைச்சுவை இழையில் பதிவிடுவதில் அவருக்கு நிகர் அவரே. அதே போல பல விஷயங்களையும், பல்புகளையும் சர்வ சாதாரணமாக, தன்னையும், படிப்பவரையும் ஒரு சேர கலாய்க்கும் பாங்கு ஹுஸைனம்மாவிடம் உள்ளது. இருவரின் மொழியாளுமையும் என்னை திகைக்க வைக்கும் இன்னும்!!

    சமையல் பற்றித்தான் எழுதுகிறார்கள் என்றாலும் ஒரு தாயன்போடு எழுதும் ஜலீலாக்கா, எப்படிப்பட்ட ரெசிபியையும் படம் போட்டு எளிதாக்கி விடும் ஆஸியாக்கா, படித்த துறைக்கும் இப்பொழுது எழுதும் பதிவுக்கும் சம்பந்தமே இல்லாவிடினும் டயட் சமையலில் இவருக்கு போட்டி யாருமில்லை எனும் அளவிற்கு கீதாக்கா, சிறு குறிப்பு போல முத்தாக எழுதும் மேனகாக்கா, கமலாம்மா இவர்களின் எழுத்தும் எனக்கு பிடிக்கும். ஒரியாக்காரரிடம், பேர் சொல்லுங்க போதும், பலகாரம் ஆஜர் என்று நான் நம்பிக்கையுடன் சொல்ல இவர்களின் வலைப்பூக்களே காரணம்... ஹி ஹி ஹி


    இன்னும் எழுதலாம், ஆனால் நேரமின்மை. குழந்தைகளையும் பார்த்துக் கொண்டு, சமையலும் செய்து, வீட்டின் மற்ற தேவைகளையும் கவனித்து, படித்தது பி.ஈ என்றாலும் இதற்கு மேலும் தேவையானபோது படித்து, ஆராய்ச்சி செய்து, எப்படி எழுத வேண்டும் என்று யோசித்து யோசித்து, திறம்பட எழுதிடும் என் எழுத்தும் எனக்கு பிடிக்கும்தான். ஹி ஹி ஹி... (DISCLAIMER: This passage is sponsored by the Company)


    தொடர் பதிவுக்கு யாரை அழைத்தாலும் எழுத மாட்டேன் என்று போர்டு மாட்டாத குறைதான். எனவே இந்த முறை அழைக்கவில்லை. ஹெ ஹெ ஹெ... அறிவிப்பே செய்யறேன், யாரெல்லாம் எழுதறாங்கன்னு.

    இவர்களின் எழுத்தும் புன்னகை வரவைக்கும் ஆயுதங்களே!!! :))

    ஓக்கே...30 நாளைக்குள்ள எழுதலைன்னா அவ்ளோதேன்!!
    நான் சைனிங் ஆஃப்!!


    .

    21 comments:

    உங்கள் கருத்துக்கள்...

    ஓட்டளிப்பது எப்படி...!!

    Sunday, April 10, 2011 Anisha Yunus 5 Comments

    படம் பார்த்து பக்குவமா நடந்துக்குங்க மக்களே. அப்புறம், எந்த கட்சிக்கு வாக்கு போட்டீங்கன்ற ரெக்கார்டையும் பத்திரமா வைங்க. வரலாறு முக்கியம்!!! ஹெ ஹெ ஹெ :))







    ...:: DISCLAIMER: THE COMPANY DOES NOT ENDORSE THE ACTOR, OR THE ROLE PLAYED BY HIM WHETHER IN 
    REAL OR IN SILVER SCREEN. ::...



    .

    5 comments:

    உங்கள் கருத்துக்கள்...

    அலிகார் பிரியாணி

    Monday, April 04, 2011 Anisha Yunus 37 Comments


    ஹெல்லோ, என்ன நானெல்லாம் சமையல் பதிவு எழுத ஆரம்பிச்சுட்டேன்னு நினைக்கப்பிடாது. ஐம்பதாவது பதிவையாவது ஜனங்க படிக்கற மாதிரி எழுதியாகணுமேன்னு ஒரு சித்தம். அதேன். (ஹி ஹி விளம்பரம்!!)

    நாங்க ஒரு நாலு குடும்பம் இங்கே அப்பப்ப Get Together  என்ற போர்வையில் ஆளுக்கு கொஞ்சமாய் சமைச்சு எடுத்துட்டு வந்து வகை வகையா ஒரு பிடி பிடிப்போம், மாசத்துக்கு ரெண்டு வாட்டியாவது. இதுல அலிகார்ல இருந்து இங்க வந்திருக்கற ஒரு தோழி வீட்டு சாப்பாடுன்னா மட்டும் எல்லார் வீட்டு குழந்தைகளும் விரும்பி சாப்பிடும். சாப்பிடும் அளவும் அதிகரிக்கும். காரம், மசாலா எக்ஸெட்ரா எக்ஸெட்ரா எல்லாம் இல்லாம அதே நேரம் ருசியா இருந்தா குழந்தைங்க என்ன, நாமே ஒரு பிடி, பிடிப்போம்தானே?? அதனாலேயே மற்ற குழம்பு, சைடு டிஷ், இனிப்பு என மற்றவங்க எல்லாம் ஒரு பொறுப்பு எடுத்துகிட்டாலும் சாப்பாடு (அதாவது, பிரியாணி ) எப்பவுமே அவங்க வீட்டுதுதேன் இருக்கும். அதனுடைய ரெசிபி இதோ.


    தேவை:
    • முழு கோழி - 1 (அல்லது 2 பவுண்டு / 900 கிராம் மட்டன்)
    • முதலில் சிக்கன் ஸ்டாக் செய்ய: 
    1. பூண்டு 10-12 பற்கள்
    2. துருவிய இஞ்சி - 1 மேஜைக்கரண்டி
    3. சோம்பு, தனியா - 1 மேஜைக்கரண்டி தனித்தனியாக எடுத்து ஒரு சிறிய துணியில் பொட்டலம் கட்டிக்கொள்ளவும்.
    4. பெரிய / கறுப்பு ஏலக்காய் - 3
    5. பிரியாணி இலை - 1 (கட்டாயம் இல்லை)
    6. குறுமிளகு - 1 தேக்கரண்டி
    7. இலவங்கம் - 4
    8. சிறிய பச்சை மிளகாய் 10 (’யலபேனோ’வாக இருந்தால் அதே அளவிற்கு வெட்டிக்கொள்ளுங்கள்)
    9. நறுக்கிய பெரிய வெங்காயம் 1/2 கப் (என்னிடம் அப்போது சின்ன வெங்காயமே இருந்தது, ஹி ஹி அட்ஜஸ்ட் ப்ளீச்!!)
    • உப்பு - தேவையான அளவு
    • தண்ணீர் 2 கப்
    • எண்ணெய் - 1 மேஜைக்கரண்டி
    செய்முறை:
    குக்கரில் எண்ணை விட்டு எண் 1 முதல் 9 வரையுள்ள பொருட்கள் எல்லாம் போட்டு தாளித்து விடவும். பின் 
    • சிக்கன் தோலுடன் இருந்தால், தோல் மற்றும் தேவையற்ற எலும்புகளை போட்டு தண்ணீர் சேர்த்து உப்பு சரி பார்த்து 7 - 8 விசில் விடவும்.
    • கட் செய்த சிக்கன், தோலில்லை என்றால், சிக்கனை சேர்க்காமல் தண்ணீர் மட்டும் ஊற்றி இரண்டு விசில் விடவும். பின் சிக்கன் துண்டுகள் போட்டு 2 நிமிடம் மட்டும் வதக்கி எடுத்துக்கொள்ளவும்.
    • தனியே எலும்புகள் மட்டும் வாங்கியிருந்தால் அதனை தண்ணீர், உப்பு எல்லாம் சேர்த்து 7-8 விசில் விடவும்.
    எந்த வகையானாலும் கறியை சிறிது வதக்கி பின்னர் தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து வேக விடுங்கள்.
    ஸ்டாக் தயாராகி விட்டது. தோல், எலும்பு நீக்கிவிட்டு, பொட்டணத்தையும் எடுத்து விட்டு நீரை வடித்து அளவு பார்த்து வையுங்கள்

    பிரியாணி செய்ய:
    அரைக்க :-
     
    • பூண்டு பற்கள் - 20
    • இஞ்சி 4 துண்டுகள் (1” சைஸில்)
    • பட்டை - 2 துண்டுகள் (1” சைஸில்)
    • ஜாதிக்காய் 2 துண்டுகள் (ஒரு ஜாதிக்காயை உடைத்து சிறிய இரண்டு துண்டுகள் போட்டால் போதுமானது 1/4 அளவு)
    ஜாவித்ரி
    • ஜாவித்ரி - 2 சிறிய பூக்கள் (நம்ம ஊரு தாழம்பூவை காய வைத்தது போலிருக்கும், ஜாதிக்காய் மேலுள்ள பூ. சிறிய பூக்களாக போடவும்)
    • மேற்கண்ட அனைத்தையும் சிறிதே சிறிது தண்ணீர் விட்டு நன்கு அரைத்து விழுதாக வைத்துக் கொள்ளவும்.
     
    தாளிக்க:
    • குறுமிளகு - 1/2 தேக்கரண்டி
    • கருப்பு / பெரிய  ஏலக்காய் - 2
    • எண்ணெய் 1 மேஜைக்கரண்டி
    • தயிர் 1 கப்
    • பாஸ்மதி அரிசி - 3.5 கப்
    • சுடு நீர் (தயார் செய்த ஸ்டாக்குடன் சேர்த்து 5.5 கப் அல்லது அதற்கும் கம்மி. பார்த்துக்கொள்ளுங்கள்)

    செய்முறை:
    அடி கனமான வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் குறுமிளகு, ஏலக்காய் போட்டு வெடிக்க விடவும். தீ மிதமாக இருக்கட்டும்.


    அரைத்த விழுதை போட்டு எண்ணெய் விடும் வரை (1-2 நிமிடங்கள்) வனக்கவும். 

     

    கறித்துண்டுகளைப்போட்டு சிறிது வனக்கவும். உப்பு சேர்க்கவும்.





    பின் தயிர் சேர்த்து மீண்டும் எண்ணெய் பிரியும் வரை வனக்கவும். 



    ஒரே கப்பை தண்ணீருக்கும் அரிசிக்கும் உபயோகியுங்கள். அளவு மாறாமல் இருக்க.
    எண்ணெய் பிரியும் நிலைக்கு வந்ததும் சுடுநீரை ஊற்றி கொதிக்க விடவும். ஆய்ந்து, கழுவி வைத்துள்ள அரிசியை சேர்க்கவும். பின் நல்ல கனமான மூடியைப்போட்டு மூடிவிட்டு 20 நிமிடம் வரை குறைந்த அளவு தீயில் ‘தம்’மில் விடவும்.


    பின் திறந்து பார்க்கவும், அரிசி வேகாமல் இருந்தால் அப்படியே அடுப்பை அணைத்து விட்டு, ’அவனை’ 350 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கு (150 டிகிரி செல்சியஸ்) முற்சூடு செய்து அதில் 20 நிமிடங்கள் மூடி வைத்து விடவும்.
    எப்பவும் போல நான் செய்யும்போது மட்டும் தண்ணீர் ஜாஸ்தியாகி விட்டது!!
    • இந்த பிரியாணியின் சிறப்பம்சமே அதன் வெள்ளை வெளேர் நிறம்தான். அரைத்த விழுதை கரியும் வரை வதக்க வேண்டாம். 
    • முழு ஜாதிக்காயில் கால்வாசி போதும். அதிகம் சேர்த்தால் ஒரு மாதிரி தொண்டை எரியும், தலை சுத்துவது போன்றுமிருக்கும்.
    • அதிக அளவில் செய்யும்போது தண்ணீர் குறைத்துக் கொள்ளவும்.
    • இதே போல் மட்டனிலும் செய்யலாம். மட்டனில் செய்பவர்கள் ஸ்டாக் செய்யும்போது முழுக்கவே மட்டன் துண்டுகளை வேக விட்டு (அல்லது இன்னும் ஒரு விசிலில் வெந்து விடும் போன்ற நிலை வரை) எடுக்கவும்.
    • ஸ்டாக் தயாரித்த பின் கறி இல்லாமல் பிளெயின் சாதமாக கூட இப்படி கிளறி எடுத்துக் கொள்ளலாம். எந்த கறி சால்னாவுடனும் அருமையாக இருக்கும்.
    • தேவையானால் ஆரஞ்சு கலரை 1 தேக்கரண்டி பாலில் கலக்கி கடைசியில் தெளித்துக்கொள்ளவும்.
    டிஸ்கி:
    இந்த பிரியாணி, அதிகமா மசாலா காரம் இல்லாம டேஸ்டியாய் சாப்பிடும் பெரியவர் முதல் குழந்தைகள் வரை விரும்பி சாப்பிடுவாங்க. உறுதி. அப்படி யாராவது ”இல்லை, எனக்கு பிடிக்கலை”ன்னு சொன்னாக்க ஜெய்லானி பாய் பேரை மாத்திரலாம்...அஆங்!!

    அதெல்லாம் ஓக்கே, விடுங்க. கிரிக்கெட் ஆரம்பிக்கும் முன் பாய்காட் செய்ங்கன்னு நிறைய இடத்துல பார்த்த ஞாபகம், இப்ப எங்கயுமே அந்த பட்டன் காணம்??? ஹெ ஹெ ஹெ... அவ்வளவு சீக்கிரம் நம்மால இலங்கை போரை மறக்க முடிந்ததே...என்ன சொல்ல!!

    .

    .

    37 comments:

    உங்கள் கருத்துக்கள்...