உண்மை வருத்தம்

Friday, October 01, 2010 Anisha Yunus 3 Comments

Thanks to Sathish Acharya..!

வந்துள்ள தீர்ப்பு அரசியல்வாதிகளுக்கு சாதகமே ஒழிய இந்தியன் என்று மார்தட்டும் எந்த குடிமகனுக்கும் சாதகமாய் இல்லை என்பது உலகறிந்த செய்தி. ஒரு தடவை மீண்டும் என் தாய்த்திருநாட்டைப்பற்றி சிறு வயதில் என்னவெல்லாம் நினைதிருந்தேனோ அதெல்லாம் கனவு என்று ஆணித்தரமாய் என் நினைப்பினை தவிடு பொடியாக்கியுள்ளது!:)



.

3 comments:

  1. உங்களின் வேதனையை சுருக்கமாக சொல்லியிருக்கீங்க அன்னு! ஒவ்வொரு இந்திய குடிமகனும் அடுத்தவங்களை அநியாயமா காயப்படுத்துகிறோமே என்று சிந்தித்தால்தான் இந்தியாவில் பல இன, மதங்களையும் தாண்டி ச‌கோதரத்துவம் ஓங்கும்! இல்லையேல் இந்தியாவின் தலைவிதி இன்றைவிட மோசமாகதான் போகும் :(

    ReplyDelete
  2. @புவனா,
    ஆமாம் புவனா. கஷ்டமாத்தான் இருக்கு. என்ன செய்ய..சில நாட்களாகவே தொடராக இந்த மாதிரி செய்திகளே கிடைக்கின்றன. அழிந்து போகும் உணவை கூட ஏழைகளுக்கு வினியோகிக்க மறுக்கும் செய்தியும்...எல்லாமே நாம் சின்னவற்றில் நம்பியதற்கும் உண்மைக்கும் உள்ள வித்தியாசத்தை உணர்த்தி...நெஞ்சு பொறுக்குதில்லையே என்ற பாரதியை நினைத்துப் பார்க்கிறேன்.

    @அஸ்மா,
    நீண்ட நெடிய கட்டுரை வகையில் கருத்தை / ஏமாற்றத்தை கூறினாலும் ஒன்றும் ஆகப்போவதில்லை என்கிற உண்மை என்னை அறைகின்றது....எனவே பெரும்பாலான வேளைகளில் கண்ணீரைப் போலவே கவலையையும் விழுங்க நேரிடுகின்றது!

    அனைவரின் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி, மிக மிக நன்றி.

    ReplyDelete

உங்கள் கருத்துக்கள்...