குழந்தைகளின் பருவம் எங்கே போனது?

Wednesday, October 06, 2010 Anisha Yunus 29 Comments

நன்றி : உணர்வலைகள்

இந்த செய்தியை படித்த பின் மனதே சரியில்லை. அதெப்படிங் ஒரு சின்னப்பொண்ணைப்பார்த்து இப்படி செய்ய மனசு வருது? அதை கூப்பிடறப்பவே மிட்டாய் தர்றேன்னுதான் கூப்பிட்டுருக்கான், அப்போ எந்தளவு சின்னப்பொண்ணுன்னு தெரிஞ்சிருக்கு...பொறகு எப்படி இப்ப‌டியெல்லாம் செய்ய மனசு வருது? எதிர் வூட்டு பொண்ணுன்னா நம்ம வீட்டு பொண்ணுமாதிரி தோணாம எப்படி போகும்? இந்தளவுக்கு கீழ்த்தரமா நடந்துக்க நினைக்கிறவன் எல்லாம் மனுஷனா? இது முதல்தடவையா நான் படிக்கலை. இதைபோல ஏற்கனவே நிறைய சொல்லப்போனா தினம் தினம் படிக்கற அளவு இருக்கு.

குழந்தையையும் மனைவியையும் வித்தியாசப்படுத்தத் தெரியாதவன் எப்படி தன் மகளை மட்டும் விட்டான்? ஒரு வகைல பார்த்தா அந்த சின்னஞ்சிறு பிஞ்சு இறந்து போனதும் நல்லதுன்னே தோணுது. உயிரோட இருந்திருந்தால் ஒரு நாள் இல்லைன்னா ஒரு நாள் அவள் மேலேயே இதன் காரண அம்பு எய்யப்பட்டிருக்கும். இல்லைன்னா...இது போல இன்னும் அதிகமான சம்பவங்களை கடக்க வேண்டியிருக்கலாம். மறக்கவும் முடியாம மறைக்கவும் முடியாம இது எந்த வித அனுபவம்னு வகைப்படுத்த தெரியாம தினம் தினம் செத்துப் போயிருக்கலாம். அவளுடைய சுய சிந்தனை, சுய கௌரவம் எல்லாமே மண்ணாகியிருக்கலாம். இன்னும் எவ்வளவோ விதத்துல மனசால அவள் இந்த உலகத்தை எதிர்கொள்ள முடியாம திண்டாடியிருக்கலாம். அதனால் அது ஒரு விதத்துல நல்லதுன்னு தோணுது....ஆனா...குழந்தைகளை குழந்தைகளா இல்லாம இந்த மாதிரி எண்ணக்கூடிய நினைவு எப்பலேர்ந்து வந்தது?

இன்னொரு செய்தியில குறைகளையும் தவறுகளையும் எதிர்த்து நிற்க சொல்லி வளர்க்கப்படும் ஒரு இளம்பயிரை கொலை செய்து தற்கொலை என்று கூறியிருக்கின்றனர். இது கொலையா, தற்கொலையா, காரணம் என்ன என்பது நமக்கு தெரியாத விஷயமாகவே இருக்கட்டும்...ஒரு மாணவன், அதுவும் 15 வயது கூட எட்டாத ஒரு மாணவன் இறந்த பின்னர் அதைப்பற்றி கவலைப்படாமல் சமையல்காரர்களால் எப்படி சிரித்து பேசி இயல்பாய் இருக்க முடிந்திருக்கின்றது? மனிதர்களிலெல்லாம் பிரிவு பார்க்காமல் தன்னை சுற்றியுள்ளவர்களையெல்லாம் நல்லவராக நினைத்தே வாழும் பருவம் குழந்தைப்பருவம், எப்படி இந்த இளந்தளிர்களை வேட்டையாட மனது வரும்? அந்த அளவு மனிதனின் மனது ஏன் சிறுத்துப்போய்விட்டது?

இந்த விஷயங்களைப்பற்றி என் நண்பர் ஒருவரிடம் அளவளாவியபோது அவர் கூறிய இரண்டு காரணங்கள்:

1.இப்பொழுது எங்கே பார்த்தாலும், இன்டர்னெட், சினிமா, கதை புத்தகங்கள், வாராந்திர / மாத இதழ்கள் என எல்லாவற்றிலும் பெண்களின் கவர்ச்சியே பிரதானமாக இருக்கிறது. எந்த ஒரு விளம்பரத்தையும் பாருங்கள்...பெண்களுக்கும் அதற்கும் துளி சம்பந்தமும் இருக்காது...ஆனால் கவர்ச்சியாக ஒரு பெண்ணை சேர்த்தாமல் ஒரு பொருளை விற்க முடியாது என்றே சூழலை உருவாக்கியுள்ளனர். கேலண்டர் விளம்பரம் முதல் கேசினோ விளம்பரம் வரை அரைகுறை ஆடைகளுடன் இருக்கும் பெண்ணே பிரதானம். இதனால் ஆண்களின் மனது ஒரு சலிப்பான நிலைக்கு போயுள்ளது...இந்த கவர்ச்சியையும் அதிலிருக்கும் இன்பத்தையும் இலை மறை காயாய் இல்லாமல் திறந்த புத்தகமாக படித்து படித்து சலித்து போயுள்ளனர். எனவே மாற்று வழிகளில் அந்த ஆசையை அடக்கவும், பெண்களிடம் கிடைக்கும் இன்பத்தை விடவும் மேலான இன்பத்தை பெறவும் குழந்தைகள், தத்தம் பாலினங்கள், அல்லது இன்னும் மட்டமாக போய் விலங்குகளிடம் என தன் ஆசையை அடக்க வழி தேடுகின்றனர். எனவே இத்தகைய குற்றங்கள் பெருகுகின்றன.

2.இன்னுமோர் காரணம், சமுதாயத்தில் ரோல் மாடலாக வாழவேண்டியவர்கள் தவறிழைப்பதும் அதை அப்பட்டமாக ஒத்துக்கொள்வதும். உதாரணத்திற்கு, இப்போதைய காரணிகள். எல்லோருமே பணக்காரர்களையோ அல்லது சினிமாக்காரர்களையோ அல்ல‌து அரசியல்வாதிகளையோ தமது வாழ்வின் முன்னுதாரணமாக எடுத்துக்கொள்வதில்லை என்றாலும் அடித்தட்டு மக்களும் இன்னும் படித்த பலரும் இந்த மோகத்தில் வாழ்வது மறுக்க இயலாது. இதில் அமெரிக்கா உள்பட நாடுகளும் அடக்கம். எந்த ஒரு பத்திரிக்கை கடைக்கும் போய்ப்பாருங்கள், எல்லா நாளிதழ்களிலும் மற்ற இதழ்களிலும் சினிமாக்காரர்கள் / அரசியல்வாதிகள் / பணக்கார குடும்பங்களைப் பற்றி எழுதாமல் ஒரு பக்கம் கூட இருக்காது. மீடியாவே அவ்விஷயங்களை சாமானிய மனிதனின் வாழ்க்கையின் ஓர் அங்கமாக புகுத்த முயற்சிக்கும்போது நாம் எப்படி விலகியிருப்பது? உதாரணமாக எந்திரன் படத்தை எடுத்துக்கொள்ளுங்கள், பதிவே போடாதவர்கள் கூட அதைப் பார்த்துவிட்டு தன் அபிப்பிராயத்தை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும், தானும் அவர்களில் ஒருவன் என அறைகூவ வேண்டும் என்றே எதிர்பார்க்கின்றனர். இதிலிருந்து என்ன தெரிகின்றது? அவர்களை தெரிந்தோ தெரியாமலோ நாம் கண்காணிக்கின்றோம், அவர்களைப்போலவே நடக்க முயற்சிக்கிறோம், என்பதே. இத்தகைய காலகட்டத்தில் மேல்தட்டு மக்களும், அவர்களைப்போலவே பணத்தில் உலவும் மதகுருமார்களும் தவறு செய்கின்றபோது மற்ற மக்களும் இது சரியா தவறா என்று கூட எண்ணாமல் அதை தன் வாழ்விலும் செய்ய முயல்கின்றனர். அதனாலும் இத்தகைய தவறுகள் அதிகமாகின்றனர். திருமண பந்தங்களிலும் இதனால் பல சரிவுகள்.

இந்த பதிவின் நோக்கம்,

1. என்ன செய்யலாம் நம் குழந்தைகளை காக்க? இத்தகைய சம்பவங்களில் சிக்காமல் இருப்பதற்கும், இது போல மனனிலையை எதிர்காலத்தில் வளர்க்காமல் இருப்பதற்கும்?

2. பதிவுலகம் என்றொரு பெரிய மனித சங்கிலி போன்றொரு பின் மூலம் ஏதேனும் அவேர்னேஸ் உருவாக்கிட முடியாதா? வாழ்வில் சாதிக்கும் பற்பல சாதாரண‌ மனிதர்களை எடுத்துக்காட்டாக நாம் பதிவுகளின் மூலம் மற்றவர்களுக்கு காட்டக்கூடாது?

3. மிக மிக முக்கியமாக இரண்டு வ‌யதிலிருந்தே குழந்தைகளுக்கு இத்தகைய குற்றங்க:ளிலிருந்து காப்பாற்றிக்கொள்ளும் நுட்பத்தை கற்பிக்க சொல்கின்றார்கள்....எங்கிருந்து ஆரம்பிப்பது? எப்படி அவர்களுக்கு விளக்குவது?

பதில்களைப்பொறுத்து இன்ஷா அல்லாஹ் இதனை இன்னொரு பதிவிலும் அலசலாம்...அதுவரை இப்படிப்பட்ட குழந்தைகளை காத்தருள எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றேன்.

29 comments:

  1. அன்னு, இதெல்லாம் யாரும் விழிப்புணர்வு கொண்டு வர முடியாத சம்பவங்கள். சினிமா மோகம், போதை பொருட்கள் என்று பல காரணங்கள் இருக்கு. கடுமையான சட்டங்கள் கொண்டு வர வேண்டும். சவுதிஅரேபியா போன்று சட்டம் கொண்டு வர வேண்டும். அரசியல்வாதிகளுக்கு இதைக்கவனிக்க ஏது நேரம். அந்த குட்டிப் பெண்ணுக்காக, அவர் குடும்பத்திற்காக இரக்கபடுவதை தவிர வேறு எதுவும் செய்ய முடியுமா என்று தோன்றவில்லை. அவரின் ஆன்மா சாந்தி அடையட்டும். ஆனால், செய்த பாவத்திற்கு தண்டனை என்று ஒன்று உண்டல்லவா? காலம் தான் அவனுக்கு பதில் சொல்லும்.

    ReplyDelete
  2. மனம் கனக்கிறது இது போன்ற செய்திகள் கேட்கும்போது....மிருகத்தனமான செயலால் இளம் பயிர் கருகியதை நினைத்தால்..அய்யோ ! ...இப்படிப்பட்டவங்களுக்கு அதிகபட்ச தண்டனை உடனடியாக வழங்க வேண்டும்...

    ”மிக மிக முக்கியமாக இரண்டு வ‌யதிலிருந்தே குழந்தைகளுக்கு இத்தகைய குற்றங்க:ளிலிருந்து காப்பாற்றிக்கொள்ளும் நுட்பத்தை கற்பிக்க சொல்கின்றார்கள்....எங்கிருந்து ஆரம்பிப்பது? எப்படி அவர்களுக்கு விளக்குவது?”
    இது தான் எப்படி என்று சிந்திக்க வேண்டும்......கண்டிப்பாக எதாவது செய்தே ஆகவேண்டும்...

    ReplyDelete
  3. என்னனு சொல்றது சகோ... சின்ன வயசில் இருந்தே குட் டச் பேட் டச் சொல்லி வளர்க்கலாம். அறிமுகம் இல்லாதவர்களிடம் எச்சரிகையாக இருக்கும்படி சொல்லலாம். இப்பொழுது பெண் குழந்தைகளை வளர்ப்பது சவாலான ஒன்று

    ReplyDelete
  4. //பதிவுலகம் என்றொரு பெரிய மனித சங்கிலி போன்றொரு பின் மூலம் ஏதேனும் அவேர்னேஸ் உருவாக்கிட முடியாதா? ///

    இந்த் விஷயத்தில் பதிவுலகம் மட்டும் போதாது. மீடியாக்கள் ஒன்றிணைய வேண்டும்

    ReplyDelete
  5. இது போன்ற ஆட்களை கடுமையாக தண்டிக்கும் வகையில் சட்டம்
    கொண்டு வர வேண்டும்.

    ReplyDelete
  6. அய்யோ மனசு பதறுது இது மாதிரி செய்தி பார்த்தால் வாசிக்கவே பயம்.மனித மிருகங்கள் அவர்களாக திருந்தினால் தான் உண்டு.

    ReplyDelete
  7. எல்லா தீய‌ செய‌ல்க‌ளையும் நியாய‌ ப‌டுத்த‌ ஒரு கூட்ட‌ம் இருக்கும் வ‌ரை ஒண்ணும் செய்ய‌ முடியாது ச‌கோ...

    ReplyDelete
  8. இந்த (மாதிரி) செய்தி(கள்) சமீபத்துல நிறைய வர ஆரம்பிச்சிருக்கிறது எந்த அளவு சமூகம் சீரழிகீறது என்று காட்டுகிறது. மிகவும் வருத்தமாத்தான் இருக்கு. என்ன செய்யன்னு ஒண்ணும் புரியலை.

    நம்ம அளவுல நம்ம குழந்தைகளைப் பாதுகாப்பா வச்சிருக்கிறதுதான் நாம செய்யக்கூடியது. யாரையும் - எவ்வளவு நெருங்கினவங்களா இருந்தாலும் - நம்ப முடியாது போல. ஏன்னா, இந்த மாதிரி சம்பவங்களிலெல்லாம் தெரிஞ்சவங்க அல்லது அறிமுகமானவங்கதான் ஈடுபடறாங்க. அதனால தனியா யாரோடும் இருக்கக் கூடாதுன்னு சொல்லித்தரலாம்.

    குட் டச், பேட் டச் சொல்லிக் கொடுத்தாலும், இந்தச் சந்தர்ப்பங்களில் சிறுவர்களால் ஆணின் உடல்பலத்தை, வன்முறையை எதிர்க்க முடியாது என்பதால் தனியே இருக்கும்படியான சந்தர்ப்பங்களைத் தவிர்க்கச் சொல்லித் தரவேண்டும்.

    மிட்டாய், பொம்மை போன்றவற்றிற்கு மயங்காதிருக்கவும் சொல்லித்தர வேண்டும்.

    வீட்டிலும், பள்ளியிலும், வெளியேயும் என்ன நடக்கிறது, யாரோடு பேசுகிறார்கள், பழகுகிறார்கள் என்பதை நம்மிடம் தவறாமல் தெரிவிக்கச் சொல்வது; நாமும் நேரம் ஒதுக்கிக் கேட்டுத் தெரிந்துகொள்வதும் வேண்டும்.

    பிள்ளைகள் சொல்வதில் சிறிதளவு சந்தேகம் வந்தாலும் கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

    இதெல்லாம் மிடில் கிளாஸ், அப்பர் கிளாஸ் ஃபேமிலிகளில் சாத்தியமாகலாம். ஆனால், இந்தச் சிறுமியைப் போன்ற அன்றாடங்காய்ச்சி குடும்பங்களில் இதில் எதைப் பின்பற்ற முடியும்?

    இன்னொரு முரண் பாருங்கள், நாமே குழந்தைகளை நண்பர்கள், உறவினர்கள், அக்கம்பக்கத்தினருடன் பழகவும் சொல்லுகிறோம். அவர்களிடம் கவனமாக இருக்கவும் சொல்கிறோம். நமக்கே எல்லைகள் வரைவதில் தடுமாற்றம் வரும்போது, குழந்தைகள் குழம்பிவிட மாட்டார்களா?

    என்னவோ போங்க. என்னவர் நான் பிள்ளைகளைப் பொத்திப் பொத்தி வளர்த்து, அவர்களுக்கு ”street smartness" இல்லாதவர்களாக ஆக்குவதாகக் குற்றம் சாட்டினாலும், இதுபோன்று நடப்பதையெல்லாம் பார்க்கும்போது, நான் செய்வதே சரி என்று தோன்றுகிறது.

    ReplyDelete
  9. இது போன்ற செய்திகளைப் படிக்கும்போது முதலில் ப்ரஷ்ஷர்தான் ஏறுகிறது :(

    தண்டனைகள் கடுமைப் படுத்தப்படவேண்டும். குற்றங்கள் உறுதி செய்யப்பட்டவுடனேயே தண்டனைகள் நிறைவேற்றப்படவேண்டும். எந்த ஜாமீனும் ஏற்றுக் கொள்ளப்படக்கூடாது. பொது மக்களுக்கு முன்னிலையில் தண்டனைகள் நிறைவேற்றப்படவேண்டும். அப்போதுதான் அடுத்தவன் அதே தவறைச் செய்யாமல் அச்சம் ஏற்படும். இதையெல்லாம் இந்திய அரசாங்கம் கவன‌மெடுத்து சட்டத் திருத்தங்கள் செய்து, உடனே அமுலுக்கு கொண்டு வரவேண்டும். முதலில் அரஸ்ட், அப்புறம் கோர்ட்டு, கேஸ் என்று கொஞ்ச நாள், பின்னர் ஜாமீனில் விடுதலை என்று சட்டங்கள் இருக்கும் வரை இது போன்ற குற்றங்கள் நம் நாட்டில் அதிகரிக்கதான் செய்யும் :(

    ReplyDelete
  10. மிக வருத்தமான செய்தி..

    அவரவர் தாம் தம் குழந்தைகளை பாதுகாக்கணும்.. போல .:(( பள்ளியும் சேர்ந்து..கண்காணிக்கணும்..

    பொதுவில் தண்டனை வழங்கப்படணும்..

    ReplyDelete
  11. இதுபோன்ற மனிதர்கள், கோழைகள் மனவியாதிக்காரர்கள். தங்கள் ஆளுமையை தங்கள் வயதையொத்தவர்களிடம் காட்ட தெரியாத ஈனர்கள். மிருகமனம் படைத்த இதுபோன்ற கயவர்களை ஏதாவது புதிய முறையில் தண்டிக்க வேண்டும்.

    ReplyDelete
  12. இது மாதிரி சிறுமிகளை செய்பவர்கள், பெரும்பாலும் குடும்ப நண்பர்கள், அல்லது நன்கு பரிச்சயமானவர்களாக தான் இருக்கிறது. இவ்வாறு பாதிக்கப்படும் சிறுவர்கள், எவ்வளவு தான் வாழ்வில் முன்னுக்கு வந்தாலும் அந்த குறிப்பிட்ட சம்பவத்தை மறக்க முடியாமல் உள்ளுக்குள் புழுங்கிக்கொண்டு தான் இருக்கின்றனர்.
    இப்படி இருதயமில்லாமல் நடக்கும் அயோக்யர்களை தயவு தாட்சண்யமின்றி சித்திரவதை செய்து தான் மரணம் கொடுக்க வேண்டும்.

    ReplyDelete
  13. அந்தக் காலத்தில் இருந்த கூட்டுக் குடும்பம் நடைமுறை இப்போது பெரும்பாலும் காணப் படுவது இல்லை. வீட்டில் பெரியவர்கள் இருக்கும்போது நல்லது கெட்டதை நாசூக்காக குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுப்பது வழக்கம். இழுத்தடிக்கும் சட்ட நடைமுறைகள் வேறு. பிரபாவதி கேசில் இன்னமும்தான் தீர்ப்பு வந்து கொண்டிருக்கிறது.

    ReplyDelete
  14. அரபி ஸ்டைல்ல ஒருத்தனுக்கு தண்டனை கொடுத்தம்னா, அடுத்து ஒரு நாய் கூட இந்த செயலை செய்யாது......

    ReplyDelete
  15. இதுமாதிரியான கொடுமையான காமுகன்களுக்கு
    கடுமையான தண்டனைகள் கொடுக்கப்பட
    வேண்டும். இவன்களுக்கு ஜாமீன் கொடுக்கக்கூடாது.
    இப்படியான செய்திகள் வெளியிடும் ஊடகங்கள்,
    அவர்களுக்கு சட்டத்தால் வழங்கப்படும் தண்டனைகள்
    பற்றியும் ஃபாலோ-அப் செய்திகளை கொடுக்கவேண்டும்.

    பெண்களை தேவையில்லாமல் விளம்பரங்களில்
    பயன்படுத்துவதையும் ஆபாச சுவரொட்டிகள்
    சுவர்களில் ஒட்டப்படுவதையும் காவல்துறை
    கண்காணிப்பதோடு, சமூகநல அமைப்புகள்
    மற்றும் பெண்கள்நல அமைப்புகளுடன் இணைந்து
    காவல்துறை கட்டுப்படுத்திட வேண்டும்.

    ReplyDelete
  16. அன்னு...
    அந்த சின்ன குழந்தையை நினச்சு மனசுக்கு கஷ்டமா இருக்குப்பா..!
    இப்பெல்லாம் பெண் குழந்தைகளை ஒரு கடைக்கு கூட்டி போகக் கூட பயமா...இருக்குப்பா..
    பாப்பா ரொம்ப அழகா இருக்குன்னு, நம்ம எதிரயே கன்னத்த தடவுரானுங்க..
    தூக்கி போட்டு மிதிக்கணும் போல இருக்கும்...என்னத்த செய்றது..??
    நம்ம குழந்தைகள் கிட்ட, இப்பவே சொல்லி வளர்க்க வேண்டியது தான்...
    கழுத்துக்கு கீழ், காலிற்கு மேல்... எல்லாமே பிரைவேட் பகுதி..
    யார் தொடவும் அனுமதிக்காதே...ன்னு
    சொல்லி வளர்க்க வேண்டும்..

    ReplyDelete
  17. ச்சே... இவங்கெல்லாம் மனுஷ ஜென்மங்களே இல்லைன்னு தோணுதுங்க அன்னு... மிருகங்கள் கூட தன்னோட இணை எதுனு பகுத்தறியும்... ஆறரிவு எதுக்கு இந்த ஜென்மங்களுக்கு ஆத்திரமா வருது...

    ReplyDelete
  18. @@@நாஞ்சில் மனோ--
    அரபி ஸ்டைல்ல ஒருத்தனுக்கு தண்டனை கொடுத்தம்னா, அடுத்து ஒரு நாய் கூட இந்த செயலை செய்யாது.. //

    இந்த ஒத்த வரி பதிலே என்னுடைய பதிலும்... !!

    ReplyDelete
  19. வருத்தப்படுவதைத் தவிர வேறு என்ன செய்வது என்று தெரியவில்லை. இது போன்ற கயவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும்.

    இதற்காகத் தான் இஸ்லாம் "அந்நிய ஆண்கள்", "அந்நியப் பெண்கள்" என்ற கோட்பாடை வைக்கிறது.

    இன்னொன்று, உணர்ச்சிகளை தூண்டிவிட்டு பணம் சம்பாதிக்கும் நிலைக்கு (சினிமா, தொலைக்காட்சி, புத்தகங்கள் போன்ற)மீடியாக்கள் வந்துவிட்ட நிலையில் இது போன்ற அவலங்களை தடுக்க முடியுமா என்பது சந்தேகமே!

    ReplyDelete
  20. அரபு நாடுகளில் போன்று சட்டங்கள் கடுமையாக்கப்பட்டால் இப்படிப்பட்ட குற்றங்கள் குறையும்.

    ReplyDelete
  21. @வானதி,
    முயன்றால் முடியாதது என்று எதுவுமில்லை. ஆயினும் தற்போதைய மீடீயாக்களின் ஆதிக்கத்தாலும் ஒரு கட்டுப்பாடின்றி கிடைக்கக்கூடிய பல்வித உணர்ச்சிகளை தூண்டக்கூடிய எழுத்து / படம் / பாடல் போன்றவற்றாலும் பெற்றோராகிய நமக்கு மிக மிக பெரிய சவால் இதுவே. அரசியல்வாதிகளும் ஆள்பவர்களும் இதில் மூழ்கிதான் இருக்கிறார்கள். சில நாட்களுக்கு முன் பிரச்சினையில் மாட்டிய ஆந்திர கவர்னர் நினைவில் இருக்கலாம். அதனால் அரசு தரப்பிலிருந்து எதையும் எதிர்பார்க்கும் நிலையிலிருந்து நாமே விடுபட வேண்டும். தண்டனை மட்டுமே எல்லாவற்றையும் திருத்திடுமா என்பதும் ஓர் கேள்விக்குறியே!!

    @சுடர்விழி,
    ஆம் சுடர்விழி, என் பையனுக்கு மறைவான பாகங்களை பிரைவேட் என்றே சொல்லி வளர்க்கிறேனே ஒழிய இன்னும் அதன் உண்மையான அர்த்தத்தை எப்படி விளக்குவது என்று தெரியாமலே முழிக்கிறேன். தண்டையெல்லாம் ஒன்னும் செய்யாது சுடர்விழி, சிறையின் உள்ளே போய் இதைவிட அதிகமான அனுபவங்களால் மூளை இன்னும் ஆக்கிரமிக்கப்படும் என்றே நான் அஞ்சுகின்றேன்!!

    @கார்த்தி ண்ணா,
    பெண் குழந்தைகள் என்று மட்டும் எண்ணி விடாதீர்கள். சிறுவர்களையும் இந்த கொடிய நோய் விட்டு வைப்பதில்லை. இத்தகைய செயலை செய்ய துணிந்த ஒருவனுக்கு துணிக்கடைகளில் வைக்கும் பொம்மை ஒன்று கூட போதும் என்றே தோணுகின்றது! மீடியாக்கள் ஒன்றிணைவதும் இயலாத விஷயம் அண்ணா. மீடியாக்களால்தான் எங்கேயோ எபோதோ கேள்விப்பட்ட செய்தியெல்லாம் இப்படி தினம் தினம் நடக்கும் விஷயமாகி விட்டது என்றே படுகின்றது!

    @சைவ கொத்து பரோட்டா,
    ஆமாங்ணா, சட்டம் முழுமையானதாகவும், அதே நேரம் எல்லா தரப்பு மனிதர்களுக்கும் ஒரே மாதிரியான தீர்ப்பை சொல்லும் வகையில் இருந்தால் மட்டுமே சட்டமும் செயல்படும், 'நிஜத்தில்'

    தங்கள் அனைவரின் வருகைக்கும், மறுமொழிக்கும் நன்றி !!

    ReplyDelete
  22. @ ஆஸியாக்கா,
    ஆமாங்க்கா. நானும் முதலில் இந்த மாதிரி செய்தியை பார்த்தாலே தவிர்த்து விடுவேன். இப்பொழுதெல்லாம் முதலில் அதைத்தான் படிக்கிறேன்...எதுவும் க்ளூ கிடைக்குமா, அத்தகைய சம்பவங்களிலிருந்து நம் பிள்ளைகளை காப்பாற்றியாகி வேண்டுமே என்று!!

    @ ஸ்டீபன் ண்ணா,
    ஆமாங்ணா, எல்லா தப்பையும் நியாயப்படுத்த ஆளுங்க இருக்கற வரை கஷ்டம்தான். இத்தகைய ஆட்களுக்கும் மனநல மருத்துவர்களும் சில என்.ஜி.ஓ க்களும் சப்போர்ட் செய்யத்தானே செய்கின்றன. அப்படி இருக்கும் பட்சத்தில் நம்மால் நம் பிள்ளைகளை காப்பதே பெரிய விஷயமாகி விடுகின்றது!

    @ஹுஸைனம்மா,
    ஆமாங்க்கா. உண்மைதான். ஸ்டிரீட் ஸ்மார்ட்னெஸ் தேவையானதுதான்...ஆனால் தற்காப்பு அதை விட முக்கியம். ஜுஜ்ஜூ எல்லாரிடமும் சென்று கை குலுக்குவதில்லை, மஸ்ஜிதில் யாரும் கூப்பிட்டாலும் போவதில்லை என்று ஒரியாக்காரரும் சில சமயம் கம்ப்ளைன் பண்ணுவார். நான் கண்டும் காணாமல் இருந்து விடுவேன். அவன் வயதேற ஏற புரிந்து கொள்வான் என்ரு. மேலும் நமக்கு எல்லார் மனதையும் படிக்கக்கூடிய வசதி இல்லையே?? இன்னும் ஒன்று, இது ஆண்கள் மட்டும் செய்வதல்ல. இந்த திரு நாட்டின் நாளேடுகளில் பெண்களும் இதில் இணையானவர்களாய் இருப்பதையே காண்கிறேன்.

    //பிள்ளைகள் சொல்வதில் சிறிதளவு சந்தேகம் வந்தாலும் கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும்.//
    இதுதான் உண்மை. நம் பிள்ளைகளின் வார்த்தைகளில் நாம் நம்பிக்கை வைக்க வேண்டும். எதிரணியில் இருப்பது யாராக இருந்தாலும் சரி!

    //இதெல்லாம் மிடில் கிளாஸ், அப்பர் கிளாஸ் ஃபேமிலிகளில் சாத்தியமாகலாம். ஆனால், இந்தச் சிறுமியைப் போன்ற அன்றாடங்காய்ச்சி குடும்பங்களில் இதில் எதைப் பின்பற்ற முடியும்?//
    யோசிக்க வேண்டிய கேள்வி. இதன் பதில் என்னிடமும் இல்லை. சமூக ஆர்வலர்கள் இது பற்றியும் அதிகமாக ஞானத்தை பரப்பினால்தான் உண்டு.

    @அப்துல்லாஹ் பாய்,
    தங்களின் உடன்பாட்டுக்கும் நன்றி பாய்.

    @அஸ்மா,
    ஆமாம் அஸ்மா. எனக்கும் கோபம் பன்மடங்காய் ஏறும். எனினும் எதும் செய்ய இயலாத ஒரு நிலையிலிருப்பதை எண்ணி நானே அமைதியாகிவிடுவேன்.

    //தண்டனைகள் கடுமைப் படுத்தப்படவேண்டும். குற்றங்கள் உறுதி செய்யப்பட்டவுடனேயே தண்டனைகள் நிறைவேற்றப்படவேண்டும். எந்த ஜாமீனும் ஏற்றுக் கொள்ளப்படக்கூடாது. பொது மக்களுக்கு முன்னிலையில் தண்டனைகள் நிறைவேற்றப்படவேண்டும். அப்போதுதான் அடுத்தவன் அதே தவறைச் செய்யாமல் அச்சம் ஏற்படும்.// வர வர நம் நாட்டின் ஆட்சியாளர்கள் மேல் ஒரு பிடிப்பே இல்லாமல் போய்விட்டது அஸ்மா. பூனா டாக்டர் கேஸ் நினைவிலிருக்கிறதா? என்ன ஆயிற்று இறுதியில்? ...மக்களையும் முட்டாளாக்க, மெல்ல மெல்ல மீடீயாக்களும் தாடி வைத்த இன்னொருவரை தேடி போய்விடும் ஜிஹாத் கட்டுரை எழுத.

    அனைவரின் வருகைக்கும், மறுமொழிகளுக்கும் நன்றி.

    ReplyDelete
  23. @பயணங்களும் எண்ணங்களும்,

    ஆம். பள்ளிகளின் கடமை இது. பிள்ளைகளை நாம் அனுப்பவது வெறும் ஏட்டுக்கல்வி கற்க அல்லவே? உலக கல்வியும் கற்கவே. அவரவர் தற்காப்புக்காக கராத்தே, குங்ஃபூ என கற்று தரும் பள்ளிகள், இத்தகைய தருணங்களிலிருந்து தம்மை காத்துக் கொள்ளவும், தைரியமாய இதை அம்பலப்படுத்தவும் கற்றுத்தர வேண்டும்.ஆனாலும் நிறைய பள்ளிகளில் ஆசிரியர்களே இவ்விதம் நடந்தகொள்கிறார்கள் என்பதே உண்மை.

    @ஹரீஷ்ணா,
    ஆம். இவர்களெல்லாம் மனவியாதிக்காரர்கள்தான். ஆனால் இதிலிருந்து விடுபட ஆசையோ எண்ணமோ கிஞ்சித்தும் இல்லாதவர்கள். எனவே வியாதியஸ்தன் என்ற போர்வைக்குள் புக முடியாது. தண்டனையின் மூலமே திருத்த இயலும். ஆனால், எத்தகைய தண்டனை? இந்தியாவில் இதற்கெல்லாம் சட்டம் இருக்கிறதா என்றும் எனக்கு தெரியாது. இந்திராவின் வலைப்பக்கத்திலும் 'அந்தாள் என்மேல ஒண்ணுக்கு போயிட்டான்' என்னும் பதிவில் சட்டத்திலிருந்து எத்தனை எளிதாக அவர்களால் வர முடிகின்றது என்பதை படிக்க முடியும். பாதிக்கப்பட்டவரின் வலியோ மரணம் வரையில் உறைந்திருக்கும்.

    @இந்திராக்கா,
    //இது மாதிரி சிறுமிகளை செய்பவர்கள், பெரும்பாலும் குடும்ப நண்பர்கள், அல்லது நன்கு பரிச்சயமானவர்களாக தான் இருக்கிறது. // ஆம் இந்திராக்கா. இதுதான் அவர்களின் மிகப் பெரிய பலம், நம்முடைய பெரிய பலவீனம். இந்த பலவீனத்தையே குழந்தையின் மேலும் பாய்ச்சுவார்கள். நம்முடைய முதல் பாடமே நம் குழந்தைகளிடம் நம்மைப்பற்றிய‌ நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும். நம் பெற்றோர் நம்மை நம்புவார்கள், நம்மை பாதுகாப்பார்கள் என்று உணர வைக்க வேண்டும்.
    //இப்படி இருதயமில்லாமல் நடக்கும் அயோக்யர்களை தயவு தாட்சண்யமின்றி சித்திரவதை செய்து தான் மரணம் கொடுக்க வேண்டும். //
    சத்தியமான உண்மை!!

    @ஸ்ரீராம் ண்ணா,
    ஆமாங்ணா. கூட்டுகுடும்பத்தில் வாழ்வதால் பல்வேறு அசௌகரியங்கள் என்று நினைப்பவர்களுக்கு தெரியாது, இது எத்தனை பெரிய ஒரு வரப்பிரசாதம் என்று. தனிமை என்று ஒரு சூழலே இல்லாது போகும்பொழுது தீங்குகளுக்கும் இடமிறாது.
    //பிரபாவதி கேசில் இன்னமும்தான் தீர்ப்பு வந்து கொண்டிருக்கிறது. //
    இத்தகைய கேஸ் எல்லாமே டி ஆர் பி ரேட்டிங் ஏற்றவும், அதிக வாசக வட்டத்தை பெறமட்டுமே துணை புரியும். பின்
    கிடப்பில் போட்டுவிடப்படும்...மறுக்க இயலா நிஜம் இதுவே.

    @மனோ ண்ணா,
    ஆமாங்ணா. ஆனால் மனித உரிமை நிறுவனங்கள் சில, இத்தகையவர்களுக்காகவும் வாதாட வந்து விடும். அதுவே பெரிய உரிமை பறிப்பு போர்!!

    @நிஜாம் பாய்,
    //அவர்களுக்கு சட்டத்தால் வழங்கப்படும் தண்டனைகள்
    பற்றியும் ஃபாலோ-அப் செய்திகளை கொடுக்கவேண்டும்.// இதை ஒழுங்காக செய்தாலே நாட்டில் பலபேர் இதை செய்ய பயந்து வாழ்வர். இதெல்லாம் தேவைக்கேற்றார் போல் முதல் பக்கத்திலிருந்து கடைசி பக்கம், கடைசி பத்தி வரை முக்கியத்துவம் மாறி மாறி காண்ப்படுவதால், யாருக்கும் சட்டமும், அதன் தண்டனையும் ஒரு பொருட்டாகவே தெரிவதில்லை. பெண்களை அப்படி கவர்ச்சி பொருளாக்கக்கூடாது என்று சட்டம் வந்தால் முதலில் அதை எதிர்ப்பது பெண்கள்நல அமைப்பினரே. அதனால் பெண்ணின் சுதந்திரம் பறி போகும் என்று!! வேடிக்கை!!

    தங்கள் அனைவரின் வருகைக்கும், மறுமொழிகளுக்கும் நன்றி.

    ReplyDelete
  24. @ஆனந்திக்கா,
    100% சவிகிதம் உண்மை நீங்கள் சொல்வது. நம் முன்னாடியே உரிமை எடுக்கும்போது எந்த ஆதாரத்தை கொண்டு எதிர்ப்பது என்று நாம் குழம்பிப் போகிறோம். அதுவே அவர்களுக்கு சாதகமாய் போய்விடுகிறது. 'காட் ஆஃப் ஸ்மால் திங்ஸ்' புத்தகத்தில் இப்படி நடப்பதை பற்றியும் அதனால் வாழ்க்கை முழுக்க அந்த பையன் அந்த வலியை சுமந்து திரிவதை பற்றியும் அருந்ததி ராய் எழுதியிருப்பார். நம் குழந்தைகளை நம்மருகே மற்றவர் தொடாதவாறு காத்துக் கொள்வதே நல்லது. இன்னுமோர் விஷயம், எந்த கடை சென்றாலும், அன்னியர்கள் அதிகம் புழங்கும் இடங்களுக்கு உணவருந்தவோ சென்றாலும் என் சுபாவத்தை கோபமானவள் போல் வைத்துக் கொள்வது எனக்கு கை கொடுத்துள்ளது. யாரும் நம்மையும் சீந்த மாட்டார்கள், நம் பிள்ளைகளையும். இதனால் ஒரு பாதுகாப்பை உணர்ந்துள்ளேன்.

    @புவனா,
    ஆமா புவனா. எந்த மிருகமும் தன்னுடைய இனத்தை தவிர வேறெதையும் இதற்கென நாடாது. மனிதன் மட்டுமே பகுத்தறிவை இந்தளவிற்கு பயன்படுத்த கற்றுக் கொண்டுள்ளான். என்ன சொல்றது?

    @ஜெய்லானி பாய்,
    நன்றி, தங்களின் உடன்பாட்டிற்கும், வருகைக்கும்.

    @அப்துல் பாஸித் பாய்,
    ஆமா அண்ணா. இஸ்லாத்தின் கட்டுக்கோப்புகள் விளையாட்டுக்கல்ல என்பது அனுபவிப்பவர்களுக்கே புரியும், வெறுமனே ஆராய்ந்து அதில் ஓட்டை கண்டு பிடிக்க முற்படுபவர்களுக்கல்ல.

    //இன்னொன்று, உணர்ச்சிகளை தூண்டிவிட்டு பணம் சம்பாதிக்கும் நிலைக்கு (சினிமா, தொலைக்காட்சி, புத்தகங்கள் போன்ற)மீடியாக்கள் வந்துவிட்ட நிலையில் இது போன்ற அவலங்களை தடுக்க முடியுமா என்பது சந்தேகமே! // எனக்கும் அதே வருத்தம் உண்டு!

    @ஸாதிகாக்கா,
    ஆமாங்க்கா. சட்டங்கள் கடுமையாக்கப்படுவதோடு அதில் ஓட்டைகள் எவ்விதத்திலும் இல்லாமலும் பார்த்துக் கொள்ள வேண்டும். இல்லையென்றால், உள்ளே போய் இரண்டு நாளில் சுய சரிதை எழுதியோ, அலல்து வெளியே வரும்போது ஆன்மீகப்போர்வை போர்த்தியோ மீண்டும் வேலியை தாண்ட ஆரம்பிப்பார்கள்!!

    அனைவரின் வருகைக்கும், மறுமொழிகளுக்கும், ஓட்டுக்களுக்கும் நன்றி, நன்றி.

    ReplyDelete
  25. @ஆனந்திக்கா,

  26. @ஆனந்திக்கா,

  27. @ஆனந்திக்கா,

  28. ரொம்ப வேதனயா இருக்கு தோழரே
    பெரிய பிரச்சன என்னனா , ஒருத்தன் பொரிக்கினு தெரிஞ்சாலும் அவன விளக்கி நடத்த மாட்டேங்க்ராங்க . அம்மாகளுக்கும் கூட அடி பட்ட வலி புரிய மாட்டேங்குது. எது உறவு எது விஷம்னு புரிய மாட்டேங்குது இவ்வங்களுக்கு.

    ReplyDelete

உங்கள் கருத்துக்கள்...