பெயர்க்காரணம் - தொடர் பதிவு!!

Tuesday, March 22, 2011 Anisha Yunus 34 Comments

ஹி ஹி ஹி, நன்றி கூகிளார்!

முன்னொரு காலத்தில் நொய்யல் ஆறு, கழிவுகளோடு அல்லாமல் நல்லாறாக ஓடிக்கொண்டிருந்த வேளையில் திருப்பூரில் திரு. சுக்கூர் என்னும் பண்பான கணவருக்கு, அவரின் அன்பினுமினிய மனைவி அவர்கள், மூன்று ஆண் குழந்தைகளை பெற்றெடுத்தார். அவர்களில் கடைக்குட்டிக்கு முஹம்மது யூனூஸ் என்றும் பெயரிட்டார்கள். மூவரையும் பாராட்டி சீராட்டி வளர்த்தனர். காலங்கள் உருண்டோடின. வயதில் குழந்தைகள் கால் செஞ்சுரி தாண்டியதும் காலில் விலங்கிட்டனர். (கலியாணந்தேன்..ஹி ஹி)

கடைக்குட்டியான யூனூஸ் பாய்க்கு முதலில் ஓர் ஆண்பிள்ளை பிறந்து அது சில மணித்துளிகளில் இறந்து போனது. அடுத்து ஒரு முத்தான ஆண் பிள்ளை பிறந்தது. அதன் ஒரு வருடத்திற்கு பின் தந்தையை அச்செடுத்தது போன்றே ஒரு அழகிய, அறிவின் சிகரமான, பண்பான, தன்னடக்கத்தில் மிகுந்த, பெண் குழந்தை பிறந்தது. (யாருப்பா அது??? பூ மாலை, பட்டாசெல்லாம் வேண்டாம்...சொன்னா கேளுங்க ஹி ஹி ஹி). அந்த தந்தை, அப்பொழுது இருந்த வழக்கப்படி ‘குழந்தைகளுக்கு அழகிய இஸ்லாமியப் பெயர்கள்” புத்தகமெல்லாம் வாங்கி 'மிகவும் பொறுப்பானவள், குடும்பத்தினர்க்கு அன்பு செய்பவள்” என்றிருந்த பொருளைப் பார்த்து ‘அனிஷா’ என்று பெயர் வைத்தனர். அந்த குழந்தையும் பின்னாளில் அத்தகையவாறே வளர்ந்தது என்று சொன்னால் அது மிகையாகாது.

அந்த சிறு பெண்ணுக்கு அந்த பெயர் மீதிருந்த ஒரே கவலை என்னவெனில் பள்ளியில் எதற்கெடுத்தாலும் பெயர் வரிசைப்பிரகாரம் என்று எல்லா நேரங்களிலும் அவளின் பெயர் முன்னர் இருந்ததுதான். எனினும் என்ன செய்ய. சில நேரங்களில் அதனால் பிரச்சினை (அந்த பெண்ணுக்கல்ல, ஆசிரியருக்கு இருக்கலாம். யார் கண்டார்??) இருந்தாலும் பல நேரங்களில் அது நன்மையளிப்பதாகவே இருந்தது. பத்தாவது முடித்த பின் பெரியார் பாலிடெக்னிக்கில் டிப்ளமா படிக்கும்போது அந்த துறையின் H.O.D ஹேமலதா மேடத்திற்கு அந்த பெயர் ஒரு வலி நிவாரணியானது. எப்படி?? எந்த டெஸ்ட்டிலும், எந்த அசைன்மெண்ட்டிலும் க்ளாஸிற்கு நான்கு பேரே (அந்த நல்ல பெண் அனிஷா உட்பட....சொன்னா நம்பணும்!!)  ஒரிஜினல் பேப்பர் வைத்திருப்பர். மீதி முப்பத்தி எட்டு பேரும் அதிலிருந்து ஜெராக்ஸ் எடுத்துக் கொள்வர். அதனால் கோப மயமாக க்ளாசிற்கு வரும்போது ரிக்டர் அளவு எட்டோ பத்தோ கூட ஆகும். வந்ததும், அனைவருக்கும் தீபாவளி, பொங்கல், ஆயுத பூஜை என பல்வேறு விழாக்கள் நடத்திவிட்டு கொஞ்சம் ரிலாக்ஸ் ஆவதற்கு அட்டெண்டன்ஸ் எடுக்க ஆரம்பிப்பார். அனுஜாஆஆஆஅ, அபிராமீஈஈஈ, அனீஷாஆஆஅ என்று வந்ததும் நிற்கும். ‘உன் பேரு அனிஷாவா, மனீஷாவா?” என்பார். (ஜோக்கடிக்கிறாராமா!!!) உடனே....வாங்கிய அடியெல்லாம் மறந்து க்ளாசே கொல்லென சிரிக்கும் (சிரிக்கணும். இல்லாட்டி இண்டர்னெல் மார்க்கு அவங்க கைலதேன் தெரியுமில்ல??) பின் அந்த பாவப்பட்ட பெண் அனிஷா எழுந்து நின்று “மேம், என் பேரு அனிஷா. மனீஷா இல்ல.” என்று வழக்கமாய் சொல்லவேணும். உடனே மேம் ஒரு சிரிப்பு சிரிச்சுட்டு அதுவும் நல்லாதானிருக்குன்னு போயிடுவாங்க. இப்படியே மூன்று வருடமும் சென்றது. அதற்குள் தன் பெயரை என்னவாக மாற்றலாம் என ஓராயிரம் தடவை எண்ணியிருந்தாள் அப்பெண். ஒரு கட்டத்தில் ‘இஷா’ என்று கூட முடிந்தது. ஆனால் அது கனவாகவே நின்று போனது. மீண்டும் அனிஷாவே தொடர்ந்தது.
பின் கல்லூரி படிப்பும் முடிந்து, சில காலம் மேனாட்டு கம்பெனிகளுக்கு ஆலோசகராக............வெல்லாம் இல்லை, சாதாரண சாஃப்ட்டுவேர் என்ஜினியராக வேலை செய்து விட்டு திருவாளர்.ஒரியாவை மணந்தார். திருமணத்திற்கு முன் தனக்கு ஆண் குழந்தைகள் பிறந்தால் ஒன்றுக்கு ஹாரூன் என்றும் இன்னொரு குழந்தைக்கு யஹ்யா என்றும் பெயர் வைக்க வேண்டுமென மிகவுமே விரும்பினார். ஹாரூன் யஹ்யாவின் வலைப்பக்கங்களை பார்த்தும், படித்தும். ஆனால் பாலைவனச்சிங்கம் என்னும் திரு ஒமர் மொஃக்தாரின் வாழ்வை திரைப்படமாக கண்ணுற்ற பின்னும், இரண்டாம் கலீஃபாவான ஒமர் பின் அல் கத்தாபின் வரலாற்றை படித்த பின்னும், தன் முதல் குழந்தைக்கு ஒமர் என்று பெயர் வைத்தார். அப்பொழுது அமெரிக்காவில் தங்கிய காரணத்தினால் குடும்ப பெயராக முஹம்மதுவையும், தந்தைவழிப்பெயராக அப்துல்லாஹ்வையும் வைத்தார்.

பின்னர் சற்றே எல்லாரையும் கலவரப்படுத்தி,  சோதனைகளைத்தாண்டி  நல்லவிதமாக பிறந்த மற்றொரு குழந்தைக்கு சோதனைகளை வாழ்வின் எல்லா நிலையிலும் கண்ட / அனுபவித்த நபி.இப்றாஹீமின் பெயர் வைத்தார். தந்தை வழிப்பெயரான  அப்துல்லாஹ்(அல்லாஹ்வின் அடிமை)வை திருவாளர்.ஒரியா அவர்கள், குழந்தைக்கும் தாய்க்கும் ஏற்பட்ட சோதனைகளைக்கண்டும் அதை நல்விதமாய் முடித்துத்தந்த எல்லாம் வல்ல இறைவனின் கருணையை எண்ணியும் ‘அப்துர் ரஹீம்’(நிகரற்ற அன்புடையோனின் அடிமை) என்று மாற்றி வைத்தார். And they lived happily ever after (till now, bi'idhnillah.. )

ஆக, இதுதான் பெயர்க்காரணம். ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸப்பாஆஆஆஅ..... :))

இதனை எழுத அழைத்த கார்த்தி அண்ணாவிற்கும், கோபி அண்ணாவிற்கும் மிக மிக நன்றி. :) தங்களின் எதிர்பார்ப்புக்கேற்ற வகையில் இருந்ததா??? ஹி ஹி ஹி

இதை தொடர நான் அழைப்பது
‘பூல் புலையா பேய்ப்புகழ்’ ஆமினா (படிச்சு முடிச்சிட்டீங்களா??)
பன்னிக்குட்டி ராம்சாமிண்ணா,(இந்த பெயருக்கு பின்னாடி ஒரு வரலாறே இருக்கும்போல?)

அழைப்பிதழ் இல்லாங்காட்டியும் பரவாயில்லை. என்னை மாதிரி தன்னடக்கமா இருக்கற யாருமே இந்த தொடர் பதிவை தொடர் கதையாக்கலாம். ஹி ஹி :)


.

34 comments:

 1. //பூ மாலை, பட்டாசெல்லாம் வேண்டாம்...//

  அப்படீன்னா, பேனர் வைக்க அனுமதியுண்டா :-)))

  ReplyDelete
 2. @அமைதிச்சாரலக்கா,

  ஹெ ஹெ ஹே.... நேயர் விருப்பமே என் விருப்பமும் :)

  ReplyDelete
 3. நல்லதென் இருக்கு உங்கப் பெயர்க் காரணம்

  ReplyDelete
 4. கார்த்திண்ணா,

  தேன்க்யூ :))

  ReplyDelete
 5. பெயர் வெளக்கம்லாம் நல்லாத்தாங்க இருக்கு..... ஆனா கடைசியா ஒரு மேட்டர் இருக்கு பாருங்க..... அதான்..... அதுல நீங்க நெனைக்கற மாதிரி வரலாறு, புவியியல்லாம் இல்லீங்கோ....

  ReplyDelete
 6. உங்களோட பேர்க்காரணம் மட்டுந்தான கேட்டாங்க? குடும்பத்துக்கே எழுதிட்டீங்க??!!
  ;-)))))))))))

  ReplyDelete
 7. ஸ்ஸஸஸஸபா...பல விசயங்கள் பிரியவே இல்லை...கடைசில யாரு அப்துல் யாரு ரஹீம்...:))

  ReplyDelete
 8. அனிஸ் ...உங்க பேரை கேட்டா முழு வரலாரே சொல்லிட்டீங்க ..:-))

  பெயர் காரணங்கள் சூப்பர்..!! :-))  ஏகப்பட்ட தொடரே பாக்கி இருக்கும் போது இது வேறயா..????? அவ்வ்வ்வ்வ்வ்

  ReplyDelete
 9. பகிர்வு நல்லாயிருக்கு.தொடர்பவர்களுக்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 10. அனீஷா பெயர் நல்லாயிருக்கு. நீங்களும் பாலிடெக்னிக்கில் டிப்ளமா முடித்தவரா.

  ReplyDelete
 11. //ஒரு அழகிய, அறிவின் சிகரமான, பண்பான, தன்னடக்கத்தில் மிகுந்த, பெண் குழந்தை பிறந்தது. //

  கர்ணன் கவச குண்டலத்தோட பிறந்தான்னு படிச்சிருக்கேன், அவனையெல்லாம் நீங்க மிஞ்சிட்டீங்க சகோ! பிறக்கும்போதே அறிவு, பண்பு.. ம் ம்.. நடக்கட்டும் நடக்கட்டும்.. :)

  ReplyDelete
 12. கலக்கிட்டீங்க போங்க...

  ReplyDelete
 13. நன்றாக இருந்தது உங்கள் பெயர்க்காரணம்! பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
 14. @ராம்சாமிண்ணா,
  ஒரிஜினல் பேருக்கு இல்லாங்காட்டியும் புனைப்பெயருக்கு பின் இருக்கு ரகசியத்தை பறைங்க. போதும் :)
  நன்றி :)

  @ஹுஸைனம்மா,
  என்னை அழைத்தவர் அப்படித்தானே எழுதியிருந்தார். கார்த்தி அண்ணா பிளாக் பாருங்க. அதேன்.. ஹி ஹி
  நன்றி :)

  @நாஞ்சில் பிரதாப் அண்ணா,
  வாங்க. கடசில வழி தெரிஞ்சிடுச்சா. ஹி ஹி
  அப்துர் ரஹீம், என் இரண்டாவது மகன். :)
  நன்றி :)

  @ஜெய்லானி பாய்,
  ஏதோ நம்மால முடிஞ்சது. ஹி ஹி. எல்லா தொடரையும் ஒரே பதிவுல எழுதுங்க பாக்கலாம். உங்களால முடியாததா? :))
  நன்றி :)

  @ஆஸியாக்கா,
  வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி :)

  @கோவை2தில்லி,
  அண்ணி, ஆமாம்க்கா. நான் தஞ்சை வல்லத்தில் படித்தேன். நீங்களுமா??
  எங்கே அண்ணன் வரலை? ஷிஃப்ட் போட்டுட்டீங்களோ?? :))
  நன்றி :)

  ReplyDelete
 15. @பாலாஜிண்ணா,
  ஹெ ஹெ ஹே... அதான் சொன்னேனே தன்னடக்கம்னு. ஹெ ஹெ
  வாழ்த்துக்களுக்கு நன்றிங்ண்ணா. :)

  @ஸ்ரீராம்ண்ணா,
  நன்றி :)

  @வெங்கட் அண்ணா,
  இப்பத்தேன் மேடம்கிட்ட எங்க ஆத்துக்காரரை காணமுன்னு டைப்பிகிட்டு இருந்தேன், நீங்க வந்திட்டீங்க. :)
  நன்றி :)

  ReplyDelete
 16. "பள்ளியில் எதற்கெடுத்தாலும் பெயர் வரிசைப்பிரகாரம் என்று எல்லா நேரங்களிலும் அவளின் பெயர் முன்னர் இருந்ததுதான்"

  அடடா எனக்கும் இதே பிரச்சினை எப்பவுமே ,
  அதுவும் ஸ்கூல் படிக்கும்போது PT கிளாஸ்ல
  ஓடறது குதிக்கறது ,எக்ஸாம் ஹால்ல முதல் ரோவில் திருதிருன்னு முழிக்கறது ETC ETC ETC ,பெற்றோர்களே தயவுசெய்து
  ABCD இதை தாண்டி பேர வைங்க.

  ReplyDelete
 17. பகிர்வு நல்லாயிருக்கு.தொடர்பவர்களுக்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 18. உங்களோட பேர்க்காரணம் மட்டுந்தான கேட்டாங்க? குடும்பத்துக்கே எழுதிட்டீங்க??!!//

  ஹா ஹா ஹா

  அன்னு சுவாரஸ்மாக இருந்தது பெயர்காரணம் நானும்தான் போடனும் பார்போம் எப்ப முடியுதுன்னு..

  ReplyDelete
 19. @ஏஞ்சலின்,
  ஆஹா நீங்களும் நம்மளை மாதிரிதானா? ஹெ ஹெ (நல்ல அறிவுரை!!)
  நன்றி :)

  @இளம் தூயவன் பாய்,
  என்னாதிது, அடுத்தவங்க கமெண்ட்டை ஆட்டைய போடறது? நல்லதில்லையே!!
  நன்றி :)

  @மலிகாக்கா,
  எழுதுங்க எழுதுங்க. கண்டிப்பா கவிதைச்சாரலோட இருக்கும்னு மட்டும் தெரியுது. இன்ஷ அல்லாஹ் கலக்குங்க :)
  நன்றி :)

  ReplyDelete
 20. அடிப்பாவி அக்கா. போல்ட் பண்ணி இருந்ததை எல்லாம் படிச்சு நான் மயங்கி விழுந்திட்டேன். இப்ப தான் தண்ணி தெளிச்சு எழுப்பினாங்க. ரொம்ப ரொம்ப ஓவர். இதுக்குத் தான் புவனியோட சேரக்கூடாதுன்னு சொல்லுவாங்க. கேட்டீங்களா?

  ReplyDelete
 21. இன்னும் இநதத் தொடர்பதிவு முடியலையா???

  ReplyDelete
 22. // (யாருப்பா அது??? பூ மாலை, பட்டாசெல்லாம் வேண்டாம்...சொன்னா கேளுங்க ஹி ஹி ஹி).//

  கொழுத்திப் போட்டுட்டு இது வேறயா. உங்க அல்டாப்பு தாங்க முடியல அனிஸ்! ஹி.. ஹி.. ஹி..! பெயரில் என்ன இருக்கு.. தொடருறேன் இன்ஷா அல்லாஹ்!!

  ReplyDelete
 23. \\ஒரு அழகிய, அறிவின் சிகரமான, பண்பான, தன்னடக்கத்தில் மிகுந்த, பெண் குழந்தை பிறந்தது. \\

  ஏன் இவ்ளோ நீட்டி முழக்கி சொல்லணும்? கோபியோட சிஸ்டர்னு சொன்னா தானா புரியுது:-)

  ReplyDelete
 24. இன்ட்ரெஸ்ட்டிங் அன்னு.. குட் ஷேரிங் :)

  ReplyDelete
 25. அன்னு, உடன் வரமுடியாமல் போனதையிட்டு வருந்துகிறேன்.

  மிக அழகாக எவ்ளோ எல்லாம் சொல்லி காரணம் எழுதியிருக்கிறீங்க வாழ்த்துக்கள். என்னையும் தொடர்ப்பதிவுக்கு அழைத்தமைக்கு நன்றி.

  இதில குறை எல்லாம் நினைக்கப்பூடா... ஏற்கனவே மஹி என் வாலைப்பிடிச்சு இழுக்க இழுக்க தப்பி ஓடிவந்தேன்.. இப்போ இங்கு மாட்டிட்டனே அவ்வ்வ்வ்வ்வ்.

  அன்னு வேறு ஏதும் தொடருக்கு வருகிறேனே.... இதுபற்றி எழுத பெரிதாக ஏதுமில்லை மன்னிச்சிடுங்க...

  ஊசிக்குறிப்பு:
  ஆனா ஜெய் கட்டாயம் எழுதுவார்... மீ எஸ்ஸ்ஸ்ஸ்

  ReplyDelete
 26. //இதில குறை எல்லாம் நினைக்கப்பூடா... ஏற்கனவே மஹி என் வாலைப்பிடிச்சு இழுக்க இழுக்க தப்பி ஓடிவந்தேன்.. இப்போ இங்கு மாட்டிட்டனே அவ்வ்வ்வ்வ்வ்.//

  ஆஹா....இங்கேயும் எஸ்கேப்பா...என்னையும் ரெண்டு ரெண்டு பேரா கூப்பிடா என்ன செய்யுறது அவ்வ்..அவ்வ்.அவ்வ்வ்
  //ஊசிக்குறிப்பு:
  ஆனா ஜெய் கட்டாயம் எழுதுவார்... மீ எஸ்ஸ்ஸ்ஸ்//

  நான் எழுதினா மறக்காம அங்கே உங்களையும் கூப்பிடுவேன் ஜாக்கிரதை ஹி...ஹி...:-)))))))))))))

  ReplyDelete
 27. பெயர் பிரதாபமும், வாழ்க்கை வரலாறும் அருமை.

  ReplyDelete
 28. //ஒரு அழகிய, அறிவின் சிகரமான, பண்பான, தன்னடக்கத்தில் மிகுந்த, பெண் குழந்தை பிறந்தது//
  உங்களுக்கு விளம்பரம் பிடிக்காது...அப்படி தானே அன்னு....:)))

  //‘உன் பேரு அனிஷாவா, மனீஷாவா?” என்பார். (ஜோக்கடிக்கிறாராமா!!!)//
  அப்பவே காமடி பீஸ் தானா??????...:))

  //என்னை மாதிரி தன்னடக்கமா இருக்கற யாருமே//
  யாரும் டென்சன் ஆகாதீங்க... இன்னைக்கி வாங்க ஊர்ல "பொய் பேசும் தினமாம்"...:))

  //அனாமிகா துவாரகன் said... இதுக்குத் தான் புவனியோட சேரக்கூடாதுன்னு சொல்லுவாங்க. கேட்டீங்களா //
  ப்ரூட்டஸ்... ப்ளாக்விட்டு ப்ளாக் போய் மானத்தை வாங்கும் அனாமிகா டௌன் டௌன்....:)

  ReplyDelete
 29. அனிஷா..அனிஷா.. அழகான பெயர்?என் உடன் பிறப்பின் பெயர் நாளொன்றுக்கு நானூறு முறை உச்சரிக்கும்பெயர்.எனக்கு மிகவும் பிடித்தமான பெயர்.அது சரி இத்தனை அழகான பெயரை வைத்துக்கொண்டு எதற்கு பிளாகில் அன்னு என்ற பெயரை வைத்திருக்கின்றீர்கள்?இனி நான் இனி ஒரிஜினல் பெயரைத்தான தான் வைத்து உங்களை கூப்பிடப்போகின்றேன்

  ReplyDelete
 30. //அன்னு வேறு ஏதும் தொடருக்கு வருகிறேனே.... இதுபற்றி எழுத பெரிதாக ஏதுமில்லை மன்னிச்சிடுங்க...
  //ஏம்பா ..பூஸ் தொடர் பதிவு என்றால் இப்படி பதுங்கி பாய்ந்து பயந்து நடுங்கி ஓடுகின்றீர்கள்???

  ReplyDelete
 31. ஜெய்.... வாணாம் நீங்க எழுத வாணாம்... அன்னு கேட்டால் என்னை அடிச்சுக் கலைப்பா:)))).

  இல்ல ஸாதிகா அக்கா.... சிலதுக்கு எப்படி, எதை எழுதுவதெனத் தெரியாது... மூட் வருவதில்லை.... முன்பு தொடர்ந்திருக்கிறேந்தானே...

  கொஞ்சம் பொறுங்கோ... என் பெண் எழுத்து.... வெளிவர இருக்குது... மிக மிக விரைவில்..

  ReplyDelete
 32. @அனாமிகா,
  ஹெ ஹெ ஹெ... இப்ப தெளிவா இருக்கியா? மறுபடியும் அந்த வரிகளை படி. எப்பேர்பட்ட பெண்ணொருத்தி தன்னடக்கமா இருக்கான்னு புரியும். ஹெ ஹெ ஹெ
  நன்றி :)

  @ஷங்கரண்ணா,
  என்னாதிது, எதை சொல்றீங்க, அது வரமா சாபமா, எதுவுமே புரியல!!
  நன்றி :)

  @இந்திராக்கா,
  முடிச்சிரலாம், நான் கூப்பிட்டவங்க எழுதி முடிச்சதும்!!
  நன்றி :)

  @அப்துல் காதர் பாய்,
  அல்டாப்புன்னா???
  ஹி ஹி
  நன்றி :)

  @கோபிண்ணா,
  ஆஹ்ஹா.... பார்த்தீங்களா..உங்களை விட உங்க தங்கைக்கு அறிவு கம்மிதான்!!! ஹி ஹி
  நன்றி :)

  @அஹமது இர்ஷாத்ண்ணா,
  தேன்க் யூ :)

  @அதிராக்கா,
  என்ன இது? அடுத்த தடவை எல்லாரையும் விசாரிச்சுதே எழுதணும் போலவே!!! (கோபமுடன் ) மியாஆஆஆஆஆஆஆஆஆஆவ்
  நன்றி :)

  @ஜெய்லானி பாய்
  எத்தனை பேரு கேக்க்றாங்களோ அத்தனை பேருக்காகவும் ஒவ்வொரு காரணம் யோசிச்சு பதிவு போட்டுடுங்க. ஹி ஹி ஒரே நாள்ல இண்ட்லில ட்ராஃபிக் ஜாம் ஆக்கிடலாம்!!
  நன்றி :)

  @இராஜ ராஜேஸ்வரியம்மா,
  வருகைக்கு மிக மிக நன்றி :)

  @அப்பாவி,
  //அப்பவே காமடி பீஸ் தானா??????...:))//
  GRRRRrrrrrrrrrrrrrrr...
  அனாமிகா கிடக்கட்டும். மத்தவங்களுக்கு எப்படி தெரியும் நம்மூரு மகிமை ஹி ஹி :)
  நன்றி :)

  @ஸாதிகாக்கா,
  அன்னு என்னும் பேர், எங்க வீட்டுல் என்னை கூப்பிடும் பேர் :) நீங்க எப்படி கூப்பிட்டாலும் சரி :)
  நன்றி :)

  ReplyDelete
 33. karanam nalla irukku.... ennada unga blog en blog bola ranakalama irukkunu ninaithen. ippathan puriuthu neenga namma uuruuu ammininnu. nan dharapuram than.

  ReplyDelete

உங்கள் கருத்துக்கள்...