பெண் எழுத்து - தொடர் பதிவு

Monday, April 11, 2011 Anisha Yunus 21 Comments

அழைத்த ஆஸியாக்காவிற்கு நன்றி............. :)

எல்லாரும் எழுதி முடிச்சிட்டாங்க... இப்பத்தேன் நீ ஆரம்பிக்கிறியான்னு யாரும் என்னை குத்தம் சொல்லக்கூடாது. உருது பேசற முஸ்லிம்களிடத்தில் அடிக்கடி எந்த இடத்திற்கும் தாமதமாய் வருபவர்களுக்கு ‘லேட் லதீஃப்’ அப்படின்னு ஒரு பட்டப்பெயர் அமையும், அந்த விருது வழக்கமா என் கைலதேன் இருக்கு. பார்க்கலாம், வேற யாருக்கும் தரும் வேளை வருதான்னு. ஹி ஹி ஹி

யாரும் தப்பு கண்டு பிடிக்கக்கூடாது!! சொல்லிட்டேன்!!
பெண் எழுத்துன்னு சொன்னவுடனே கொசுவத்தி சுத்தினா முதல்ல வந்தது எங்கம்மாதேன். ஆறாம் வகுப்புடன் தன் பள்ளிப்படிப்பை முடித்துக்கொண்டவர். ஆனால் அவரின் அறிவும், மேனேஜ்மெண்ட்டும் இன்றும் ஒரு கம்பெனியின் C.E.Oக்கு குறையாதது. (எல்லார் அம்மாவும் கிட்டத்தட்ட இப்படித்தான், இல்லையா??) நான் மூன்றாம் வகுப்பு படிக்கும் மட்டும் தினம் தினம் என்னுடைய நோட்டில் அன்றைய ஹோம்வர்க் என்னன்னு எழுதறது அவங்கதான். நான் ஹோம்வர்க் எழுதவே டிமிக்கி தர்ற ஆளு, இதுல ஹோம்வர்க் என்னன்னு வேற எழுத சொன்னா?? அதுவும் இல்லாம, நர்ஸரி போகறப்பா ஆங்கில ரைம்ஸ் எல்லாம் அப்பாகிட்ட சொல்லி தமிழ்ல எழுதி வச்சுக்குவாங்க. அப்புறம் அதை சொல்லிக் குடுப்பாங்க. இப்படி எங்களை வளர்க்க அவங்க எழுதி எழுதி கஷ்டப்பட்டு வளர்த்தாலும் இப்பவும் அவங்க தமிழை நான் கிண்டலடித்துக்கொண்டே இருப்பேன், எங்கே ‘துணைக்கால்’ போட வேண்டுமோ அது அங்கிருக்காது, குறில் இருக்க வேண்டிய இடத்தில் நெடிலும், நெடிலுக்கு பதில் குறிலும் இருக்கும். கடைக்கு எழுதும் சாமான் லிஸ்ட்டே போதும் அன்றைய பொழுதைப் போக்க. ஹெ ஹெ ஹே...

சகோதரி. யுவான் ரிட்லீ

அதன் பின் என்னை மிகவும் கவர்ந்த எழுத்துக்கள் சகோதரி. யுவான் ரிட்லியுடையது. தன்னை கடத்தியவர்களை உற்று நோக்கி, அவர்களின் குணங்களை அறிந்து, அதன் மூலம் இஸ்லாத்தை விரும்பி, இன்றளவும் இஸ்லாமிய ஆண்கள் சிலர் கூட வெளியே பகிரங்கமாக பேசிட அஞ்சும் விஷயங்களுக்காக தன்னை முன் நிறுத்துபவர். அது துனிசியாவின் விடுதலைக்காக ஆகட்டும் அல்லது எகிப்தின் மத தலைவர்களின் சாயங்களை வெளுப்பதாகட்டும். சுப்ஹானல்லாஹ். ”இன்னும் இவரைப்போன்ற பல சகோதர சகோதரிகளைத் தா அல்லாஹ்” என்றுதான் பிரார்த்திக்கிறேன்.

டாக்டர். ஃபர்ஹாத் ஹாஷ்மி

மீடியாவின் பின்னாலும், யூரோப்பிய நாகரீகம் என்னும் அசட்டுத்தனத்தின் பின்னாலும் இந்தியா மட்டுமல்ல, பாகிஸ்தானும் மிதமிஞ்சிதான் போயுள்ளது. அப்படிப்பட்ட நாட்டின் பெண்களை மீண்டும் நல்வழிக்கு கொண்டு வர சகோதரி. டாக்டர்.ஃபர்ஹத் ஹாஷிமியின் எழுத்துக்களும், வகுப்புக்களும் பெரிதளவில் உதவியுள்ளது என்றால் அது மிகையல்ல. கலாசார சீரழிவிலிருந்து பாகிஸ்தானிய பெண்களை பெருமளவில் காப்பாற்றி, இப்பொழுது வீட்டிலிருந்தே எளிய வழியில் மார்க்கத்தை கற்க வைத்திருப்பதும், அதன் மூலம் இன்னும் அவர்களின் உலகை விரித்ததும், இவரின் எழுத்துக்கள் மற்றும் வேர்வை முத்துக்களின் சாதனையே!! ஹாஃபிதஹுல்லாஹ் (அல்லாஹ் அவரை பாதுகாத்து வைப்பானாக). ஆமீன்.

இதை தாண்டினால் அதிகம் வாசிக்கும் பெண் எழுத்துக்கள் எல்லாம் குழந்தைகளை வீட்டிலிருந்தே படிக்க வைக்கும் தாய்களின் எழுத்துக்களைத்தான். அதில் ஒரு விஷயத்தை கற்றுத் தரத்தான் எத்தனை வழிகள், எத்தனை இலகு, எப்படிப்பட்ட் குழந்தையும் அதன் தாயிடம் எவ்வளவு சுலபத்தில் கற்றுக் கொண்டு விடுகிறார். எனக்கு பிடித்த சில Home Schooling Mom Writers இங்கே, இங்கே, மற்றும் இங்கே. :) ராயல் சல்யூட்!!

அதன்பின் பார்த்தால், எனக்கு தெரிஞ்ச பெண் எழுத்துக்கள்ன்னா, பெண் பதிவர்கள்தேன்!! (எல்லா பெண் பதிவர்களும் குலவை சத்தம் கேக்குதா!! ஹி ஹி ஹி...) அதனால அவங்க எழுத்துக்களில் எனக்கு பிடிச்ச எழுத்துக்களை இங்கே சமர்ப்பிக்கிறேன். (ஹெ ஹெ...தப்பிச்சிட்டேன்..!!!) எந்த துறையிலும் சில விஷயங்களை சுவாரஸ்யமா சொல்ல பெண்களை விட்டால் யாருமில்லை.... மனசிலாயோ??? ஓக்கே... லெட்ஸ் கோ டு தி பாயிண்ட்.

அமெரிக்காவின் அன் அஃபீஷியல் விக்கியாக அமெரிக்காவா, சித்ராக்காவிடம் கேளு என்பது போல், அமெரிக்காவைப் பற்றிய பல விஷயங்களை புட்டு புட்டு வைப்பதுவும், அதுவும் அவருக்கே உரிய நகைச்சுவை இழையில் பதிவிடுவதில் அவருக்கு நிகர் அவரே. அதே போல பல விஷயங்களையும், பல்புகளையும் சர்வ சாதாரணமாக, தன்னையும், படிப்பவரையும் ஒரு சேர கலாய்க்கும் பாங்கு ஹுஸைனம்மாவிடம் உள்ளது. இருவரின் மொழியாளுமையும் என்னை திகைக்க வைக்கும் இன்னும்!!

சமையல் பற்றித்தான் எழுதுகிறார்கள் என்றாலும் ஒரு தாயன்போடு எழுதும் ஜலீலாக்கா, எப்படிப்பட்ட ரெசிபியையும் படம் போட்டு எளிதாக்கி விடும் ஆஸியாக்கா, படித்த துறைக்கும் இப்பொழுது எழுதும் பதிவுக்கும் சம்பந்தமே இல்லாவிடினும் டயட் சமையலில் இவருக்கு போட்டி யாருமில்லை எனும் அளவிற்கு கீதாக்கா, சிறு குறிப்பு போல முத்தாக எழுதும் மேனகாக்கா, கமலாம்மா இவர்களின் எழுத்தும் எனக்கு பிடிக்கும். ஒரியாக்காரரிடம், பேர் சொல்லுங்க போதும், பலகாரம் ஆஜர் என்று நான் நம்பிக்கையுடன் சொல்ல இவர்களின் வலைப்பூக்களே காரணம்... ஹி ஹி ஹி


இன்னும் எழுதலாம், ஆனால் நேரமின்மை. குழந்தைகளையும் பார்த்துக் கொண்டு, சமையலும் செய்து, வீட்டின் மற்ற தேவைகளையும் கவனித்து, படித்தது பி.ஈ என்றாலும் இதற்கு மேலும் தேவையானபோது படித்து, ஆராய்ச்சி செய்து, எப்படி எழுத வேண்டும் என்று யோசித்து யோசித்து, திறம்பட எழுதிடும் என் எழுத்தும் எனக்கு பிடிக்கும்தான். ஹி ஹி ஹி... (DISCLAIMER: This passage is sponsored by the Company)


தொடர் பதிவுக்கு யாரை அழைத்தாலும் எழுத மாட்டேன் என்று போர்டு மாட்டாத குறைதான். எனவே இந்த முறை அழைக்கவில்லை. ஹெ ஹெ ஹெ... அறிவிப்பே செய்யறேன், யாரெல்லாம் எழுதறாங்கன்னு.

இவர்களின் எழுத்தும் புன்னகை வரவைக்கும் ஆயுதங்களே!!! :))

ஓக்கே...30 நாளைக்குள்ள எழுதலைன்னா அவ்ளோதேன்!!
நான் சைனிங் ஆஃப்!!


.

21 comments:

 1. ha ha. //அவரின் அடப்பாவித்தனத்தை புட்டு புட்டு வைக்கும் அனாமிகா// i'm lovin'it

  ReplyDelete
 2. //அவரின் அடப்பாவித்தனத்தை புட்டு புட்டு வைக்கும் அனாமிகா//

  i like it.....

  ReplyDelete
 3. //அப்பாவிப்பெண்ணின் எழுத்தாக தங்கமணி//

  thappu thappu

  ReplyDelete
 4. அழைப்பை ஏற்று அருமையாக எழுதியிருக்கீங்க,மிக்க சுவாரசியம்.தொடர்பவர்களுக்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 5. //எல்லார் அம்மாவும் கிட்டத்தட்ட இப்படித்தான், இல்லையா?? //
  ம் ம்.. கண்டிப்பா! :)

  ReplyDelete
 6. நானே நானா... நம்ம்ப்ப்ப்ப முடியவில்லை... என்னையும் பாராட்டிருக்கீங்க அனிஷா.. யேன்? யேன்? புகழனைத்தும் இறைவனுக்கே.

  யுவான் ரிட்லீ -துனிஷியா புரட்சியின்போது அறிந்தேன். மற்றவரை இப்போத்தான் பார்க்கிறேன். அவரின் பணி மகத்தானது. இறைவன் நற்கூலி தரட்டும்.

  மற்ற பதிவர்களுக்கும் என் வாழ்த்துகள். அந்த ரெஸிபியிலிருப்பது உங்க கையெழுத்தா, அம்மாவோடதா? அம்மாவோடதாத்தான் இருக்கணும்; நாமெல்லாம் யூத்தாச்சே, பிரிண்ட்-அவுட்டுல்ல எடுத்து வைப்போம்!! :-)))))))

  ReplyDelete
 7. நல்லதொரு தொடர்பதிவு.
  கட்டாயம் எழுத முயற்சி செய்கிறேன்.

  ReplyDelete
 8. இன்னும் எழுதலாம், ஆனால் நேரமின்மை. குழந்தைகளையும் பார்த்துக் கொண்டு, சமையலும் செய்து, வீட்டின் மற்ற தேவைகளையும் கவனித்து, படித்தது பி.ஈ என்றாலும் இதற்கு மேலும் தேவையானபோது படித்து, ஆராய்ச்சி செய்து, எப்படி எழுத வேண்டும் என்று யோசித்து யோசித்து, திறம்பட எழுதிடும் என் எழுத்தும் எனக்கு பிடிக்கும்தான். ஹி ஹி ஹி... (DISCLAIMER: This passage is sponsored by the Company)  ......ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா.... சூப்பர்!

  உண்மையில், இத்தனை வேலைகளுக்கு மத்தியில் , நீங்கள் பதிவிலும் கவனம் செலுத்தி எழுதுவதை பாராட்டுகிறேன்.

  ReplyDelete
 9. Fantastic Annu!
  என் உள்ளத்தை கொள்ளை கொண்ட பெண்ணெழுத்து
  உங்கள் அன்பு அம்மாவின் கையால் எழுதிய சமையல் குறிப்பு தான் .

  ReplyDelete
 10. சுவராஸ்யமான பதிவு!!

  ReplyDelete
 11. பெண் எழுத்து தொடரிலேயே வித்தியாசமான எழுத்து வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 12. @அனாமி,
  சத்தமா சொல்லிடாதே... அப்பாவி வந்து உன்னை சுனாமியா தாக்கிடும்!!
  நன்றி :)

  @கார்த்திண்ணா,
  சரி, இனிமே அடப்பாவின்னே போட்டுர்றேன்.. ஹெ ஹெ
  நன்றி :)

  @ஆஸியாக்கா,
  வாழ்த்துக்கு மிக மிக நன்றி :)

  @பாலாஜி சகோ,
  ஆமாம்ப்பா. எல்லார் வீட்டு அம்மாவும், படிச்சாலும் சரி படிக்காட்டியும் சரி, மேனேஜ்மெண்ட்டிலும், நிர்வாகத்திலும் டாக்டர்கள்தான்.
  நன்றி :)

  @ஹுஸைனம்மா,
  என்னிக்கு யார் கட்சி ஆரம்பிப்பாங்கன்னு தெரியலை. நீங்கதேன் அதிகமா புரட்சி பத்தி எழுதினவங்க. அதான் இப்பவே துண்டு போட்டு வெச்சுக்கலாம்னு. ஹெ ஹெ ஹே
  ரெஸிபி அம்மாவுதேதான். எனக்காகவே நிறைய இடத்தில் துணைக்கால் கடைசி நிமிடத்தில் அழிக்கப்பட்டிருக்கும். உற்றுப் பாருங்கள். ஹெ ஹெ
  நன்றி :)

  @இந்திராக்கா,
  கட்டாயம் எழுதுங்க. எல்லாருமே விதவிதமா எழுதறவங்கதான். இன்னும் பல பேரு எழுத்து பிடிக்கும்ன்னாலும் உட்கார்ந்து எழுத எனக்கு நேரமின்மையே காரணம்!!
  நன்றி :)

  @சித்ராக்கா,
  ஹ ஹ ஹா... வாழ்த்துக்களுக்கும் சேர்த்து, நன்றி அக்கா :)

  @மேனகாக்கா,
  நன்றி :)

  @அமைதிச்சாரலக்கா,
  நன்றி :)நன்றி :)

  @ராஜவம்சம் பாய்,
  வாழ்த்துக்களுக்கும், வருகைக்கும், நன்றி :)

  ReplyDelete
 13. நல்லா எழுதி இருக்கின்றிங்க..

  அம்மாவின் ரெஸிபி எழுத்து அருமை....

  பகிர்வுக்கு ரொம்ப நன்றி...எப்படி தான் உங்களுக்கு டைம் கிடைக்குதோ தெரியவில்லை..ரொம்ப ஸ்மார்ட் ....

  ReplyDelete
 14. /அவரின் அடப்பாவித்தனத்தை புட்டு புட்டு வைக்கும் அனாமிகா//
  Interesting.

  ReplyDelete
 15. பகிர்வுக்கு ரொம்ப நன்றி.

  ReplyDelete
 16. // ஓக்கே...30 நாளைக்குள்ள எழுதலைன்னா அவ்ளோதேன்//
  அவ்ளோ தான்னா... பொழச்சு போனு அர்த்தமோ...ஹி ஹி...:))

  புல் ரவுண்டு அப் நீங்களே போட்டாச்சு... இனி நான் என்ன எழுதறது... ஏதோ என் சிற்றறிவிற்கு (இல்லாதத பத்தி என்ன பேச்சுனு குண்டக்க மண்டக்க கேட்டா அப்புறம் அன்னுகிட்ட புடிச்சு குடுத்துடுவேன்...) எட்டிய வரை எழுதறேன்...:)))

  எல்.கே & அனாமிகா - படுபாவிங்களா.....grrrrrrrrrrrrr.....

  ReplyDelete
 17. உங்கள் அம்மா தமிழ் கற்று கொண்டு சொல்லி கொடுத்தது நான் ஹிந்தி கத்து கொண்டு என் பையனுக்கு சொல்லி கொடுத்த மாதிரி இருக்கு

  ReplyDelete
 18. @கீதாக்கா,
  ஸ்மார்ட்டெல்லாம் இல்லை. கம்ப்யூட்டர் 24 மணி நேரமும் ஓடிகிட்டே இருக்கும். வேலைக்கு நடுனடுவிலும், பிள்ளைகள் தூங்கியதும் வருவேன். ஹ்ம்ம்.. கம்மி செய்ய வேண்டும் இனியும்!!
  நன்றி :)

  @இராஜ ராஜேஸ்வரி அம்மா,
  நன்றி :)

  @அப்பாவி,
  சிற்றறிவா......ஆஆஆஆஆ..
  ஹெ ஹெ ஹெ... பாக்கத்தானே போறேன். சீக்கிரம் போடுங்க. தொடர்கதையாக்கிடாதீங்க!!
  நன்றி :)

  @ஜலீலாக்கா,
  வாவ்... நீங்களும் அதைப் பத்தி எழுதுங்களே... ஒரு பதிவுக்கு ஐடியா தந்தமைக்காக கமிஷன்???? ஹெ ஹெ ஹே
  நன்றி :)

  ReplyDelete
 19. பதிவு அமைப்பு அருமை.

  ReplyDelete
 20. எல்லாரும் எழுதிட்டாங்க இன்னும் நான் தான் அன்னு எழுதல,

  தாய் தரும் கல்விய கிள்க் செய்து இன்னும் உங்க பதிவு வரன்னு நினிச்சுட்டு இருகேன் பார்த்ஹ்ட 4 தொடர் போய் கொண்டு இருக்கு,

  பிரகு தான் சாயா குடிக்கும் நேரத்தில் சாவகாசமா படிக்கனும் ஹிஹி
  வாங்க வந்து அவார்டை பெற்று கொள்ளுங்க<

  ReplyDelete

உங்கள் கருத்துக்கள்...