அல்ப்ஸ் மலைக்காற்று வந்து என்னைச் சுற்றுதே.... (2)

Friday, September 28, 2012 Anisha Yunus 15 Comments


அல்பைன் துந்த்ரா (தந்த்ரா???) என்பது மலை உச்சி... கிட்டத்தட்ட 12,000 அடி உயரத்தில் இருக்கும். ஆனால் கொலராடோவின் இந்த மலையில் உள்ள மௌண்ட் இவான்ஸ் ரோடு (அது முடியும் இடமே அல்பைன் துந்த்ரா-- அல்ப்ஸ்) கடலிலிருந்து 14,260 அடி.

குளிரும்போது போலார் துருவத்தில் இருப்பது போல்தான் இருக்கும்.  இத்தனை உயரத்தில் இருப்பதால் இங்கே மரம், செடி, கொடி வகைகள் வளர்வது கடினம். எனினும் சில கோரைப் புற்களும், சின்ன சின்ன புதர்களும் அங்கங்கே இருக்கும். அதை உணவாக்கிக் கொள்ள அணில் போன்ற விலங்குகளும், காட்டு ஆடுகளும், முயலெலிகளும் வருமாம். நாங்கள் பார்க்கும்போது கலைமான்கள்தான் இருந்தன. (அந்த வகையை சேர்ந்தவை....ஆனால் அவையேதானா தெரியவில்லை.) கலைமான்களை சில தூரம் வரை துரத்திக் கொண்டும், பயந்து கொண்டும் இருந்த ஒமர், சிறிது நேரத்தில் அவை தூரப்போய்விட்டன என்றதும் எங்களிடம் புகாரிட்டான்...."I want that.... I want to eat that"....சிங்கம்லா!!!


குளிரில் நடுங்கிக் கொண்டே அந்த துந்த்ராவின் அழகை தரிசித்தோம். அங்கங்க காலம் காலமாக உறைந்திருந்த பனிக்கட்டிகளும் கொஞ்சம் நடுக்கத்தையே தந்தது. எனக்கும் உயரத்துக்கும் ரொம்ப தூரம்..... பாராபெட் உயரம் கூட ஆகவே செய்யாது. (அக்ரோஃபோபியா????) இருந்தாலும் நாமாச்சு, நம்ம மனசாச்சு... முயன்று பார்த்துரலாம்னு ஒரு பள்ளத்தாக்கு பக்கமா போயி ஃபோட்டோ எடுக்க நின்னா நிக்கவே முடியாம கால் சரியுது.

 

நம் மனதில் ஒன்று நிலை பெற்று விட்டால் அதை உடலால் வெல்வது கடினம்னு எங்கேயோ படித்த நினைவு. ரெண்டு தடவை முயற்சித்தும், ரெண்டு தடவையும் சரியுது.... சரி இதுக்கும் மேல முயற்சித்தா அப்புறம் ஒரு துண்டு சதை கூட யாருக்கும் கிடைக்காம நாம போயிடுவோம்னு விட்டுட்டு வந்துட்டேன்.... ஆனா ஃபோபியாவை என்ன செய்யறதுன்னுதான் தெரியல...!!! ம்ம்.....

அந்த மலையிலிருந்து திரும்பி வரும் முன் சில வாழ்நாள் சாதனைகள் நிகழ்ந்தன.

1. அவ்ளோஓஓஓஓஓஓ உயர மலையில் இதுதான் முதல் முறை சென்று தொழுதது.

2. திரும்பும்போது மணி 8 இரவு. இறங்கும்போது நான் ஓட்டுவேன் என்று சொல்லியிருந்ததால் 14,260 அடி உயரத்திலிருந்து முதல் தடவையாக வண்டி ஓட்டுகிறேன்.... அதுவும் எப்பவும்போல் என் கணவரும் குழந்தைகளும் பின் சீட்டில்... :)))))

3. ஆட்டோமேட்டிக் கியர் வண்டிதான் என்றாலும் பக்கத்து ஜன்னல் வழியாய் பள்ளத்தாக்கை பார்க்கும்போதெல்லாம் ஒரு செகண்டிற்கு இதயத்துடிப்பு மிஸ்ஸாகும் :(( இருந்தாலும் தைரியப்படுத்திகிட்டு வண்டி ஓட்டியாச்சு.

4. இரவில் வண்டி மேக்ஸிமம் ஓட்ட மாட்டேன். இரவில் அனுமானம் செய்வது கடினம் என்பதால்.... ஆனால் இந்த சுற்றுலாவில் இண்டர்ஸ்டேட்டிலும் (தேசிய நெடுஞ்சாலை), மலையிலும், இரண்டிலுமே இரவில் ஓட்டினேன்.

5. இதெல்லாம் விட பெரிய சாதனை, மூன்றாவது குழந்தை பிறந்து முப்பத்தி ஏழே நாளில் இந்த த்ரில் :))) என்பதே என் மிகப்பெரிய சாதனை... ஆம்... முஜாஹிதும் எங்களுடனேயே பயணம் செய்தார்.

அதன் பின் கிட்டத்தட்ட ரெண்டு மணி நேரத்திற்கு மேல் ஆகி விட்டது மலையிலிருந்து இறங்கி வீடு வந்து சேர. வீட்டிற்கு வந்ததும் ஒரியாக்காரரிடம் சொன்னேன்...  
தேன்க்ஸ் ஜீ...
ஏன்??
ஏன்னா தலைகீழா நின்னாலும் என் அப்பாவோ, அண்ணனோ, தம்பியோ என் கையில வண்டிய, இந்த இரவுல, இப்படி 40 நாட்களுக்குள்ள (இஸ்லாமிய ரீதியில் இல்லை.... ரெஸ்ட் எடுக்கும் பொருட்டு) இவ்ளோ உயர மலையிலிருந்து வண்டி ஓட்ட.... நோஓஓஓஓஓஓஓஓஓ சான்ஸ்.... நீங்கதான் என்னை நம்பி தந்தீங்க.....
குட்...:))

அங்கே அந்த உறவினர் வீட்டின் தோழர் ஒருத்தர் இந்தியா போயிருந்தாங்க. அவங்களுக்கு நாங்கள் வருவது தெரியும் என்பதால் எங்களுக்கு தங்கிக்க இடம் உபயோகப்படுத்திக்க சொன்னாங்க. பயங்கர அசதியால இரவு உணவை முடிச்சிட்டு அந்த வீட்டுல போயி தூங்கியாச்சு.

அடுத்த நாள் காலைல மறுபடியும் போணுமே... எல்லாரும் பயங்கர அசதி. அடுத்த நாள் நாங்க போனது கீஸ்டோன் (KeyStone, CO) எனும் ஊர். அங்கே அழகழகாய் இருந்த ரிசார்ட்ஸே போதும் மனதை கொள்ளை கொள்ள.

முதலில் திட்டமிட்டது Hanging Lake எனும் ஒரு இடத்திற்கு போக வேண்டிதான். ஆனால் நடுவில் எங்கள் ஜீப் சிறிது பழுதடைந்த காரணத்தால அந்த ப்ளான் டிராப் ஆகி கீஸ்டோன் ப்ளான் வந்துடுச்சு. ஒரு மணி நேரம் ஹைவேயில் நின்னு செக் செய்தபின்தான் தெரியன்வந்தது, ஜீப்பில் பழுதில்லை..... நாங்க சமதளமுன்னு நினைச்சிட்டிருந்த ரோடு கிட்டத்தட்ட 70% சாய்வா இருந்திருக்கு.... என்னதான் ஆக்ஸிலேட்டரை அழுத்தினாலும் 4500 rpmக்கு மேல டயர் போகவே மாட்டேங்குது...நாங்கதேன் கலவரப்பட்டு போயிருந்தோம்...அதன் பின் விவரம் புரிந்ததும் மீண்டும் ஸ்டார்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்..... :)

ஆனால் கீஸ்டோனும் அழகிய ஊர்தான். பனிக்காலத்தில் வந்திருந்தால் இன்னும் அழகாக இருந்திருக்கும்.... அங்கே கேபிள் காரில் இன்னுமோர் மலை உச்சிக்கு பயணித்தோம்...

ஒமருக்கு நீண்ட தொலைவு பயணம் செய்தாலே ஆகாது.... காலையில் கிளம்பியதிலிருந்து வாந்தி எடுத்துக் கொண்டிருந்தான். இது தெரிந்தே நான் ziploc கவர்கள் வாங்கி வைத்திருந்தேன். தேசிய நெடுஞ்சாலையிலோ மலையிலோ பயணிக்கும்போது காரை நிறுத்துவது, மற்றவர்களுக்கும் சேர்த்து அசவுகரியம் மட்டுமல்ல.... ஆபத்தானதும் கூட. அதனால் வாமிட் எடுக்கும்போதெல்லாம் ziploc உபயோகித்து அவனை அட்ஜஸ்ட் செய்தோம். அங்கே போயி சேர்ந்ததுமே இன்னும் அவன் சோர்ந்து விட்டான்... பின் சில நேரம் தூக்கிக் கொண்டும், சில நேரம் சமாதானப்படுத்தி கூடவே நடக்க வைத்தும் என கொஞ்சம் சிரமப்பட்டே பயணித்தோம்.

பின் கீஸ்டோனிலிருந்து திரும்பவே இரவாகி விட்டது. மீண்டும் நல்ல சாப்பாடு, நிம்மதியான தூக்கம். அல்ஹம்துலில்லாஹ்.

மறுநாள் ஒமரை அங்கே உறவினர் வீட்டிலேயே விட்டுவிட்டு இப்றாஹீம், முஜாஹிதுடன் கிளம்பினோம்... ராயல் கார்ஜ் பாலத்திற்கு :))


.

15 comments:

 1. சலாம்! திரில்லான அனுபவம்தான். வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 2. சலாம் சகோ.அன்னு.....
  ரொம்ப தைரியமானவரா இருக்கீங்க.
  ஹில்ஸ் இறக்கத்தில் வண்டி ஓட்டுவதற்கு பலமான ட்ரைவிங் எக்ஸ்பீரியன்ஸ் வேண்டும். அதுவும் இது போன்ற உங்கள் உடல்நிலையில்... எப்படியோ... அல்ஹம்துலில்லாஹ், நல்லபடியா வந்து சேர்ந்தீங்க.

  உண்மையிலேயே இந்த ட்ரிப் படிக்கவே த்ரில்லான மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறது. படங்கள் அருமை.

  ReplyDelete
 3. சகோ அன்னு....

  ஆல்ப்ஸ் மலை தென் அமெரிக்காவில் தானே இருக்கிறது??

  ReplyDelete
 4. //ஆல்ப்ஸ் மலை தென் அமெரிக்காவில் தானே இருக்கிறது??//---ஹா..ஹா..ஹா.. கிழிஞ்சது..!

  Original Alps mountain range - ஐரோப்பாவில் இருக்கு சகோ.சிராஜ்...!

  ஆனால், அமெரிக்கர்கள் தங்களின் நார்த் காஸ்காட்ஸ் மலைத்தொடரை ஆல்ப்ஸ் மலை என்று சொல்லிக்கொள்வார்கள்..!

  ஏதோ... 'காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு' மாதிரி...! பாவம்... சொல்லிட்டு போனாப்போகட்டும்..! விடுங்க..!

  ஆனாலும் உங்களுக்கு செமை காமடி சென்ஸ் சகோ.சிராஜ்...!

  ReplyDelete
 5. இனிய அனுபவத்தை, எழுத்து நடையை ரசித்தேன்...

  நன்றி...

  ReplyDelete
 6. //இருந்தாலும் தைரியப்படுத்திகிட்டு வண்டி ஓட்டியாச்சு//
  வண்டில உக்காந்துட்டு வந்தவங்க நிலமைய நெனச்சு பாருங்க... அநேகமா அண்ணா வழி பூரா தொழுகை செஞ்சுட்டு தான் வந்திருப்பார்...:)))


  //நீங்கதான் என்னை நம்பி தந்தீங்க./
  அண்ணாவோட மைண்ட் வாய்ஸ் : நிக்காவின் போதே உன்னை நம்பி வாழ்க்கையே குடுத்தாச்சு இதென்ன ஜுஜுபி...:)))


  பட், நெஜமாவே அட்வென்ச்சர் தான்...:))))

  ReplyDelete
 7. //ஆல்ப்ஸ் மலை தென் அமெரிக்காவில் தானே இருக்கிறது?? //

  நல்ல வேளை நான் கேட்கலாமுன்னு நினைச்சேன் , தலை தப்பிச்சது எங்க தாத்தா செஞ்ச புண்ணியம் ஹி..ஹி.. :-))

  ReplyDelete
 8. //இம்புட்டும் படிச்சுட்டு சும்மாவா போறீங்க... நம்மளப் பத்தி நாலு நல்ல வார்த்தை சொல்லிட்டு போறது..... :))//

  மேலே இருக்கும் படங்கள் நீங்களே சுட்டதா..? இல்ல கூகூல்ல சுட்டதா ஹா....ஹா...:-))

  ReplyDelete
 9. அருமையான அனுபவம். த்ரீலான கார் பயணம்.. எப்படி தான் இவ்வளவு சீக்கரம் போனிங்களோ தெரியலை. அழகான பதிவு.

  ReplyDelete
 10. அன்னு,உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் வாழ்த்துகள்...

  குட்டிஸ் அனைவரும் எப்படி இருக்காங்க...உடல் நலத்தினை பார்த்து கொள்ளுங்க...

  ReplyDelete
 11. @சுவனப்பிரியன் பாய்,
  வாழ்த்துக்களுக்கு நன்றி. :)

  @சிராஜ் பாய்,
  ஏன் இப்படி.... டைப் செய்யறதுக்கு முன்னே கூகிளில் தேடியிருக்கக்கூடாதா??? சரி... பரவால்ல... இனிமே இப்படி செய்யாதீங்க :))) (#எங்கேயோ கேட்ட ஞாபகம் :)) )

  @முஹம்மது ஆஷிக் பாய்,
  பயம் பயம்தான்... இல்லைன்னு சொல்லலை. ஆனால் முயற்சி செய்யாமலே விடக்கூடாதுன்னு உத்வேகமும் கூடவே இருப்பதால் கொஞ்சம் சறுக்கினாலும் செய்தே முடிப்பேன்... :) அல்ஹம்துலில்லாஹ் இது வரை ஒரு ஃபைன் கூட கட்டியதில்லை, ஒரு விபத்தில் கூட மாட்டியதில்லை.... (மாதத்திற்கொருமுறை ட்ராஃபிக் போலீஸை தட்டி எழுப்புவதே ’அவர்’ வாடிக்கையாக கொண்டிருப்பதால் நான் அந்த பக்கமே போவதில்லை... :)))) )

  அல்ப்ஸ் மலை பற்றி :: ஏன் பாய்.... அமெரிக்காவுல ஒரு விஷயம் இல்லைன்னு நியூஸ் வந்தால் அமெரிக்கா தாங்குமா.... அதான்....அதேதான்.... :)))

  @திண்டுக்கல் தனபாலன் சகோ,
  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.... (நீங்க முதல் தடவையா வர்றீங்களோ?? சரியா தெரியல... ஆனால் வாங்க வாங்க :)) )

  @புவனா....
  ஹ ஹ ஹா.... காலைல கமெண்ட் படிச்சதில இருந்து சிரிச்சுட்டே இருக்கேன்.... செம டைமிங்..... செம.... ஹ ஹ ஹா.... கோயம்புத்தூரச்சே.... சும்மாவா.... :))

  அவர் வண்டியில தொழுதாரா தெரியாது.... ஆனால் நல்லா தூங்கிடுவார் நான் ஓட்டினால்... “இடுக்கண் வருங்கால் நகுக” என்பதை “தூங்குக”ன்னு புரிஞ்சுகிட்டாரோ என்னமோ :)))
  After a lonnnnnnnnnnnnnnnnng time, you are back with the same spirit... good... keep it up :))

  @ஜெய்லானி பாய்...,
  நல்ல வேளை தப்பிச்சீங்க இல்லைன்னா விஜயகாந்த் ரேஞ்சுக்கு எங்கண்ணன் சகோ.முஹம்மது ஆஷிக் அல்ப்ஸ் மலை பற்றி டீட்டெயில் தந்திருப்பார் :))

  படங்களெல்லாம் நானே சுட்டது.... உங்க சகோ மேல உங்களுக்கு நம்பிக்கையில்லையா???? :))

  @ஃபாயிஜாக்கா,
  மூன்றாவது பையன் பிறந்த பின்னர்தான் என அம்மாவிடம் எனக்கு இஸ்லாத்தில் 40 நாள் என்பது ஒரு சடங்கில்லை... ரெஸ்ட் எடுக்க எல்லா சமூகத்திலும் தரப்படும் ஒரு காலம் என்பதை புரிய வைத்தேன்.... (இந்த ட்ரிப்புக்காகவேவா என்றெல்லாம் கேட்கப்படாது :)) ) அதன் பின் தான் போக அனுமதி கிடைத்தது. :))
  அதனால் வந்த தாக்கம் இப்போ....(ஆஹா ஹுஸைனம்மா அக்கா பின்னாடியே நிப்பாங்க.,... நான் தனியா மெயில்ல எழுதறேன் :)) )

  @கீதா..,
  ரொம்ப நாள் ஆச்சு... எப்படி இருக்கீங்க.... பொண்ணு நலமா... குட்டீஸ் அனைவரும் நலம்.... அல்ஹம்துலில்லாஹ். :))

  ReplyDelete
 12. சகோதரி நல்ல உங்கள் அனுபத்தை பகிர்ந்திர்கள், இந்தியப் பெண் மலைகளில் வண்டி ஓட்டுவது ஆச்சிரியமான செய்தி. முதலில் தலைப்பை பார்த்து இது ஏதோ பாட்டு போல் உள்ளது என்று உள்ளே வரவில்லை, இரண்டு நாட்களுக்கு பிறகு உள்ளே வந்தேன். அல்ப்ஸ் மலை எங்கே இருக்கிறாது என்று தெரிந்துகொண்டேன், உங்கள் எழுத்து நடை நேரில் பார்த்தை போன்று இருக்கிறாது, நன்றி சகோதரி

  ReplyDelete
 13. ஸலாம்

  உங்கள் வாழ்நாள் சாதனை எல்லாம் நல்லாத்தான் இருக்கு ...

  சாதனை எல்லாம் திரில்லா இருக்கு ...

  உங்க சாதனைலாம் நான் முறியடிக்க சான்சே இல்லை ...

  வேண்டுமானால் உங்க முதல் சாதனையே வேண்டா முறியடிக்கலாம் ...நீங்க தொழுத சாதனை ..

  12000 அடிக்கு மேல எங்க போறது ???

  எங்களுக்கு பக்கத்துல இருக்க மலைலாம் sea level ல இருந்து 1200 அடி தான் இருக்கு ...

  அப்ப அதவும் முடியாது ...  ReplyDelete
 14. இந்த பகுதி அன்றே படித்து விட்டேன்
  ஆனால் கமெண்ட் போடல

  பிள்ள பெற்று 37 நாளில் ரொம்ப தில்லு தெகிரியம் உங்களுக்கு

  ReplyDelete
 15. உங்களுடய எழுத்து நடை மிக சிறப்பாக உள்ளது

  ReplyDelete

உங்கள் கருத்துக்கள்...