அல்லாஹ், முஸ்லிம்களுக்கு மட்டும்தான் இறைவனா?

Friday, May 18, 2012 Anisha Yunus 8 Comments






நிறைய பேர் நினைத்துக் கொண்டிருப்பது போல அல்லாஹ் "முஸ்லிம்களுக்கு மட்டுமான‌" இறைவன் அல்ல.

'அல்லாஹ்' என்னும் அரபுச் சொல் வேறுபாடில்லாமல், உங்களையும் என்னையும் படைத்த 'ஓரிறைவனை' குறிக்கிறது. அரபு மொழி பேசும் யூதர்களும் கிறிஸ்தவர்களும் கூட 'அல்லாஹ்' எனும் சொல்லையே இறைவனைக் குறிக்க உபயோகிக்கின்றனர்.

'தண்ணீர்'(தமிழ்), 'நீரு'(கன்னடம்), 'வாட்டர்'(ஆங்கிலம்) என எப்படி அழைத்தாலும் அது ஒரே பொருளையே குறிக்கிறது. வேறு மொழியில் கூப்பிடுவதால் மட்டும் ஒரு குவளை தண்ணீர் வேறு பொருளாகி விடுமா? அதே போல்தான் ஈஷ்வர்(ஹிந்தி), தேவரு(கன்னடம்), அல்லாஹ்(அரபி) என்னும் எல்லா சொற்களும் இந்த மாபெரும் உலகை படைத்த இறைவனை மட்டுமே குறிக்கும்.


அல்லாஹ் தன் திருமறையில் கூறுகிறான்,
"அனைத்து புகழும், அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து வளர்த்துப் பரிபக்குவப்படுத்தும் (நாயனான) அல்லாஹ்வுக்கே ஆகும். (1:2)

இஸ்லாம் - என்னும் வார்த்தைக்கு பொருள் என்ன?

இஸ்லாம் என்பது ஒரு அரபுச் சொல். இஸ்லாம் என்னும் வார்த்தைக்கு 'ஸில்ம்' மற்றும் 'ஸலாம்' என்னும் இரு பொருட்கள் உள்ளது. ஸலாம் என்றால் 'அமைதி' என்றும் 'ஸில்ம்' என்றால் 'கீழ்ப்படிதல்' என்றும் அர்த்தம்.

அதன்படி 'இஸ்லாம்' என்றால் இந்தப் பிரபஞ்சத்தை படைத்த இறைவனுக்கு கீழ்ப்படிந்து அதன் மூலம் அமைதியடைதல் என்று அர்த்தம்.

இஸ்லாத்தை தோற்றுவித்தவர் யார்?

இஸ்லாம் ஒரு புதிய மார்க்கம் என இன்றும் பலர் நினைத்துக் கொண்டுள்ளனர். முஹம்மது நபி அவர்களால் இந்த மதம் தோற்றுவிக்கப்படவில்லை என்பதே உண்மை. உலகின் முதல் மனிதன் ஆதம்மிலிருந்து அதன் பின் தோன்றிய எல்லா மனிதர்களுக்கும் இஸ்லாம் எனும் ஒரு வாழ்க்கை முறையை, வாழும் மார்க்கத்தை நம் அனைவரையும் படைத்த இறைவன் தந்துள்ளான்.

இறைவன் இந்த மனிதக்குலத்திற்கு அனுப்பிய எல்லா இறைத் தூதர்களும், நூஹ்(Noah), இப்ராஹீம்(Abraham), மூஸா(Moses), சுலைமான்(Soloman), தாவூத்(David), ஈஸா(Jesus) மற்றும் அனைத்து இறைத் தூதர்களும் இஸ்லாத்தையே அதாவது ஓரிறைக் கொள்கையையே தத்தம் வாழ்க்கை முறையாக பின்பற்றினர்.

இறைவன் அனுப்பிய எல்லா இறைத் தூதர்களும் இறைவனுக்கு கீழ்ப்படியவும், இறைச்சொல்லை மதித்தும், இறைவனுக்கு நேர்மையாய் வாழவுமே மக்களுக்கு கற்றுத் தந்தனர்.


இனி, "முஸ்லிம் என்றால் யார்?"

.

8 comments:

  1. வேறு எந்த மொழியிலும் பன்மை உண்டு ஆனால்அல்லாஹ் என்ற சொல்லுக்கு
    அரபில் மட்டுமே ஒருமை ஒருவன்

    ReplyDelete
  2. வேறு எந்த மொழியிலும் பன்மை உண்டு ஆனால்அல்லாஹ் என்ற சொல்லுக்குஅரபில் மட்டுமே ஒருமைஅல்லதுஒருவன்

    ReplyDelete
  3. அல்லாஹ் என்ற சொல்லுக்கு ஆண் பெண் என்று பிரிக்க முடியாது . ஏனென்றால் எப்படி அந்த சொல்லை தனித்தனியாக எடுத்தாலும் இல்லை என்றே வரும் . ஆனால் மற்ற மொழி சொல்லில் அதுக்கூட ஆண் அல்லது பெண் என்று பிரித்து விடமுடியும் , அல்லாஹ் என்ற சொல்லுக்கு இதுவும் ஒரு சிறப்பு :-)

    ReplyDelete
  4. சலாம்! அழகிய ஆக்கம் சகோதரி! வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. நண்பரே வணக்கம். நான் பதிவுலகில் புதியவன். உங்கள் ஆதரவை வேண்டுகிறேன். நீங்கள் அளிக்கும் ஆதரவைப் பொறுத்து உங்களுக்கு அவார்டு, பட்டம் முதலியவை வழங்குவேன்.
    நன்றி
    "ஆறாம் அறிவு நிறைந்த"ராஜேஷ்

    ReplyDelete
  6. மிக்க நன்றிகள். மேலும்,மேலும் ஆக்கம்களை எழுத வேண்டுகிறேன்.


    அன்புடன்
    அசலம்

    ReplyDelete
  7. ஆமாம்..அல்லாக்கு என்றால் முசிலீம்களின் இறைவன் மட்டுமே.

    தமிழர்களுக்கு அய்யனார், கருப்பசாமி, முனியாண்டி, மாரியாத்தா, முருகன், சிவன் என்று பல இறைவனுகள் உள்ளார்கள். இதில் உங்களின் அல்லாக்கு இல்லை.

    உங்கள் அல்லாக்கை உங்களுடன் வைத்துக்கொள்ளுங்கள். எங்களுக்கு வேறு இறைவன் இருக்கின்றான்(ள்). உங்களின் அல்லாக்கு எங்களுக்கு எப்போதும் இறைவனாக முடியாது.

    ReplyDelete
  8. யூதர்களின் கடவுள் யாஹ்வேதான் முசல்மான்களால் அல்லா என அறியப்படுகிறார்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete

உங்கள் கருத்துக்கள்...