கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை...

Saturday, February 07, 2015 Anisha Yunus 13 Comments


பழைய பதிவுல நம்மளை கவிமணி தேசிக விநாயகம் பிள்ளைன்னு பட்டம் தந்ததா சொன்னதும் ஒரே மயிலு மேல மயிலு (சரி...சரி....மேல மேல...) சரி, நம்மளை பத்தி இன்னும் சரியாத் தெரியலே, சரியா புரிய வெக்கணும்னுதான் இந்த பதிவு. சின்னதுலர்ந்தே தமிழ்னா ரெம்ப இஷ்டம். எங்க தாத்தா உயிரோட இருந்தவரை தமிழ்ல பேசினா அடிதான் விழும், அதனாலேயே என்னமோ தமிழ் மேல ஒருதலைக் காதல் வளர்ந்துட்டே போயிடுச்சு. அது இன்னமும் தீரலை. ஆனா எங்க வூட்டுக்காரருக்கு தமிழ்னாலே அலர்ஜி. அவர் ஒரியாக்காரர். ஆனா அவருக்கு தமிழ் தெரியாதுன்னு நினச்சு எல்லாம் எதும் பேச முடியாது. சரியான சமயத்துல தமிழ்லயே பதில் தந்து நம்மளை கவுத்திடுவார். அதனால ஜாக்கிரதையா இருக்கோணும். சரி, நம்ம பட்டத்தை பற்றி பேசலாம். அதான் சொன்னேனே சின்னதுலர்ந்தே தமிழ்மேல ஒரு 'இது'ன்னு. அதுல எங்க படிஅம்மி, அதாவது எங்க பெரியம்மா, அப்பாவோட சின்ன அண்ணன் வீட்டுக்கு போனா என்னையும் என் தமிழையும் கலாய்ச்சுகிட்டே இருப்பாங்க.

அப்படி ஒரு நாள் நான் அவங்க வீட்ல வெளாண்டுட்டு இருக்கறப்ப எங்க பெரியப்பா பையனும், பெரியம்மாவும் சேர்ந்து, "உனக்குதான் தமிழ் நல்லா வருதே, ஒரு கவிதை சொல்லு"ன்னாங்க ஏற்கனவே எங்க தாத்தாவால வீட்ல தமிழ் பேச முடியாத சுனாமில வருந்தி இருந்த மனசுக்கு அவங்க கேட்டதும் தெம்பா போச்சு. அப்ப நான் 4வது படிக்கறேன். அவங்க வீடு அப்போ செட்டிநாட்டு ஸ்டைல்ல தொட்டிவீடும்பாங்களே அப்படி இருந்தது. அங்க இருந்த தூணையெல்லாம் படத்துல காட்டற பனைமரமா எண்ணி, ஒரு சோலோ ஹீரோயின் ரேஞ்சுக்கு பாடினேன். அந்த பாட்டைப் பார்த்து அசந்து போயிதான் எங்கண்ணன் (பெரிம்மா பையன்) எனக்கு 'கவிமணி தேசிக வினாயகம் பிள்ளை'ன்னு பட்டம் கொடுத்தார். சரி, சரி அப்படி அது என்ன பாட்டுன்னு கேக்கற சத்தம் கேக்குது. இதோ உங்களுக்காக மறுபடியும் (பாடலை... எழுதறேன்)

இருண்ட காட்டுக்குள்
அடர்ந்த மரங்கள் நடுவே
தனியாய் திரிபவனே
நீ யார் நீ யார் நீ யார்


ஆனா இவ்வளவு புதிர் வெச்சு பாடியும் அது பேனைப் பத்திய பாட்டுதான்னு எங்கண்ணனுக்கு தெரிஞ்சு போச்சுன்னா பாருங்களேன். என்ன எல்லாரும் அசந்து போயிருப்பீங்களே...ஜில்லுன்னு கொஞ்சம் எளனீ குடிங்க. நெஞ்சு நனையும். அப்புறமா ஓட்டு போடுங்க. ஆனால், என் கவிதை எழுதற ஆர்வம் நிக்கவே இல்லை. தஞ்சாவூர்ல வல்லத்துல டிப்ளமா படிக்கறப்ப ஒரு கவிதை எழுதி நான் அனுப்ப அதுக்கு பரிசும் வந்துச்சு (இப்ப என்ன சொல்றீங்க...இப்ப என்ன சொல்றீங்க...) ஆனா பரிசு எவ்வளவுன்னு தெரியாமலே ட்ரீட் வெச்சு 300 ரூபா காலி பண்ணிட்டேன். ஆனா பரிசுன்னு மணி‍ஆர்டர்ல வந்தது வெறும் 10ரூபாய். ஹ்ம்ம்....வளரும் கவிஞர்களை மனசாற வாழ்த்த தெரியாத கஞ்சாம்பெட்டின்னு நினச்சு விட்டுட்டேன். ரொம்ப நாள் எங்க வீட்ல குடும்ப மலர்ல வந்த அந்த பக்கத்தை லேமினேட் பண்ணி வெச்சிருந்தாங்கன்னா பாத்துக்குங்களேன். அந்த கவிதையும் வேணுமா? ஆனாலும் பாசக்கார பயலுவ. என்னமா வரி விடாம படிச்சுகிட்டே வராங்கன்னா பாரேன். இதான் அந்த கவிதை.

அன்று யார் வைத்த
முற்றுப் புள்ளியோ
இன்று இவள் நெற்றியில் பொட்டில்லை.


எப்புடி? நான் டிப்ளமா படிக்க தஞ்சாவூர் போனப்புறம், எங்க வூட்டு லகடபாண்டி ஒன்னு இருக்கே, என்ற தம்பி, அது நான் எழுதின கவிதையெல்லாம் தான் எழுதியதா ஸ்கூல்ல காட்டி தன்னோட கௌரவத்தை மேல ஏத்திகிடுச்சு. நானும் சரி நம்ம வூட்டுக்குதானே பெருமைன்னு மனசை கட்டுபடுத்திகிட்டேன். இப்ப இந்த கொசுவத்தி சுத்தினது எல்லாம் எதுக்காகன்னு கேக்கறீங்களா, எல்லாம் ஒரு ப்ளான்தான். அடுத்த பட்டம் தர்றதுக்கு இந்த வலையுலகத்தை ரெடி பண்ணனுமே அதுக்காகத்தான். எப்புடி?

13 comments:

  1. மிஸ் , அப்ப உங்களுக்கு ஒரியா பாஷை தெரியுமா !! அப்ப அதுல ஒரு கவித என் காதுல மட்டும் சொல்லுங்களேன்!!.பிளீஸ்...பிளீஸ்...

    ReplyDelete
  2. ஓட்டு பெட்டிய கானல , அதயும் ஜுஜ்ஜூ கிட்ட குடுத்து தொலச்சிட்டீங்களா ?? !!!

    ReplyDelete
  3. @ஜெய்லானி பாய்,
    ஆனாலும் எல்லாத்தையும் விட ஒங்களுக்கு பாசம் இன்னும் 2 லிட்டர் ஜாஸ்திங்ணா...தமிழ்ல கவித படிச்சது பத்தலைன்னு ஒரியால வேற கேக்கறீங்களா? நீங் வேற. அவர்ட்ட ஹிந்தில பேசிபேசியே வருசத்தை ஓட்டிகிட்டு வர்றேன். இதுல நான் ஒரியாவும் படிக்க ஆர‌ம்பிச்சுட்டா தேர்ற மாதிரிதான்.

    //ஓட்டு பெட்டிய கானல , அதயும் ஜுஜ்ஜூ கிட்ட குடுத்து தொலச்சிட்டீங்களா ?? !!!//
    என்னோட ப்ளாக்ல என்ன பிரச்சனைன்னு தெரியலை. சமயம் போல இருக்க மாட்டேங்குது. என்னன்னு பாக்கணும்.

    ReplyDelete
  4. @ஜெய்லானி பாய்,
    ஆனா ஜுஜ்ஜு ரெம்ப அருமையான பிள்ளைங் பாய். அவன் பொருளையும் சேர்த்து நான் தொலைச்சு இருக்கேனே ஒழிய, அவன் இதுவரை எதையும் தொலைச்சது கிடையாது. தங்கக் குட்டி.

    ReplyDelete
  5. நகைச்சுவை இழையோடிட, இடுகையின் தகவல்கள்
    சுவாரஸ்யமளிக்கின்றன்.

    "வலைக்கவிதாயினி" என்கிற பட்டத்தை, தயாராக
    வைத்துக்கொண்டு, காத்திருக்கிறேன்.
    தொடருங்கள்.

    (1) இடுகையில் இடுகை தேதி இல்லையே?

    (2) எனது வலைப்பூவிற்கும் வருகை தாருங்கள்.

    ReplyDelete
  6. வாங்க நிஜாம் பாய்.

    உங்கள் முதல் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி. அடடா வந்தவுடனே பட்டமா... இதைத்தான் நான் முதல்லயே சொன்னேன், பதிவுலகத்துல எல்லாருமே பாசக்கார பயலுவ அப்படின்னு. உங்க வலைப்பூவை தொடாமலா...இதோ வந்துட்டே இருக்கேன்.

    வருக.

    ReplyDelete
  7. @நிஜாம் பாய்
    இடுகை தேதி போட்டு விட்டேன். நன்றி.

    ReplyDelete
  8. உங்க போஸ்ட் எதுவும் என்ரீடரில் வரமாட்டேங்குது பேரே தெரிய மாட்டேங்குது ஃபாலோயரா இருந்தும் . புது போஸ்ட் பண்ணினா என் மெயிலுக்கு ஒரு மயில் அனுப்பவும்...

    ReplyDelete
  9. பாருங்க வரும் நியூஸ
    You have followed this URL, but we couldn't find a feed for it. Please check that the URL is correct:
    http://mydeartamilnadu.blogspot.com/

    ReplyDelete
  10. நாலாவது படிக்கறப்பவே கவிதையா.... பிறவி கவிஞை தான் போல... அப்ப என்ன பட்டம் வேணா தரலாம் தப்பில்ல... (நீங்க சொன்ன மாறியே கமெண்ட் போட்டுட்டேன்... நம்ம அக்ரீமென்ட் படி நம்ம பேரையும் recommend பண்ணனும் சரியா...ஹா ஹா ஹா )

    ReplyDelete
  11. @ஜெய்லானி பாய்,

    நானும் எல்லாத்தையும் செக் பண்னி பாத்திட்டேன். எங்க பிரச்சனைன்னே தெரிய மாட்டேங்குது. ஏதும் வழிமுறை இருந்தால் உங்க குண்டக்க மண்டக்க டீவில போடுங்க, தெரிஞ்சுக்கறேன்.

    @அப்பாவி,
    உங்க மறுமொழியெல்லாம் பாத்தப்புறம் இந்த அடைமொழி உங்க பேருக்கு முன்னாடி தேவையான்னு யோசிக்க வேண்டியிருக்கு.

    ReplyDelete
  12. // அவர் ஒரியாக்காரர். ஆனா அவருக்கு தமிழ் தெரியாதுன்னு நினச்சு எல்லாம் எதும் பேச முடியாது. சரியான சமயத்துல தமிழ்லயே பதில் தந்து நம்மளை கவுத்திடுவார். அதனால ஜாக்கிரதையா இருக்கோணும்//

    அவர ரொம்ப கேட்டதா சொல்லும்மா!! :-)

    ReplyDelete
  13. @ஷங்கர் ண்ணா,
    என்ன, விசாரிப்பு எல்லாம் பலமா இருக்கு??

    ReplyDelete

உங்கள் கருத்துக்கள்...